Advertisement

அத்தியாயம் 10 2

மறுநாள் காலை சசி சொன்ன நேரத்தில் நறுமுகை ஸ்கூல் வாசலில் காரில் காத்திருந்தாள், சசி ஆரவ்-வை விட்டுவிட்டு, நறுமுகையுடன் போனில் தொடர்பு கொண்டான்.

“ஹாய்..”

“ம்ம். சொல்லு”

“நான் உன்னோட வரட்டுமா? இல்ல நீ என் கார்ல வர்றியா?”

“ஏன் அவங்கவங்க கார்ல அவங்கவங்க போலாமே?”, எதிலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை, என்று மறைமுகமாக தெரிவித்தாள்.

“ஹ்ம்ம். அதுவும் சரிதான். இங்க பக்கத்துல ஏதாவது பார்க் இருக்குமா?”

“ப்ச்., பப்ளிக் ப்ளேஸ்-லால்லாம் பேச முடியாது”

“why?”

“என்ன why? நான் ஒரு ஸ்கூல் ரன் பண்ணிட்டு இருக்கேன், கண்ட இடத்துல நின்னெல்லாம் பேசமுடியாது”.

“ம்ப்ச், சரி அப்ப என்னை ஃபாலோ பண்ணிட்டு வா”

“ம்ம். ரொம்ப நேரம் ஆகுமா?”

“ஏன் வேற வேலையிருக்கா?”

“afternoon ஸ்கூலுக்கு வந்திடறேன்னு…”

“இவா, ப்ளீஸ் ஸ்டாப் அண்ட் ஃபாலோ மி, ஏற்கனவே இந்த லெஃப்ட் சைட் டிரைவிங் கன்ஃப்யூஸ் பண்ணது”.

“…”

அமைதியாக கால் மணி நேர பயணத்தின் பின் “Sekar’s” என்று பொறித்திருந்த ஒரு பெரிய வில்லா முன் காரை நிறுத்தினான். காவலாளி சல்யூட் அடித்து கேட் திறக்க, ஷெட்டில் நிறுத்தி இறங்கியவன் நறுமுகையைப் பார்த்து, “வா” என்றான்.

‘ஓ!, இவன் வீடா இது?’ என்ற எண்ணியவாறே உள்ளே நுழைந்தாள். வீடு பிரமிப்பாக இருந்தது. ‘வீடென்று எதைச் சொல்வீர்?*’ மாலனின் கவிதை நறுமுகையின் மனதில் தேவையில்லாமல் வந்தது.

நறுமுகையை உட்கார சொல்வதுபோல அங்கிருந்த சோஃபாவை கை காண்பித்தான். அமர்ந்து, “உங்கப்பா இல்ல?”

“இல்ல, அவர் ரைஸ் மில் போயிட்டு, ஜூட் பேக்டரி போயிட்டு வருவாரு, மே பி ஒன் ஹர் ஆகும். ஜூஸ்.. காஃபி? “, என்றான் வியர்வையில் முதுகு நனைந்திருந்த சட்டையை பட்டனை கழற்றியபடியே.

பார்வையை தழைத்த நறுமுகை, “நோ தேங்க்ஸ். என்ன விஷயம்? எதுக்கு கூப்பிட்ட?”

AC யை hi cool-ல் வைத்து, “ட்ரிச்சி வெரி ஹாட், சென்னைய விட “, இவளிடம் சொல்லிவிட்டு, “மணி அங்கிள், குடிக்க ஜூஸ் ஏதாவது கொண்டு வாங்க”, என்று சற்றே இரைந்து கூறினான்.

“வேணான்னு சொன்னேனில்ல?”

“நோ, எனக்கு வேணும், அன்ட் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு, வர்றேன்”, புயலாக நடந்து ஒரு அறைக்குள் சென்று மறைந்தான்.

சொன்னபடி இரண்டே நிமிடத்தில் டீ ஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து வந்து அமர்ந்ததும் , ஜூஸ் (இரண்டு க்ளாஸ்களில்) வர, டேபிளில் வைத்து மணி என்பவர் நகர, “ஓகே. லெட்ஸ் talk, விது ஏன் வந்தான்? ஏன் எனக்கு சொல்லல?” எப்போதும் போல நறுக்கென சுருக்கமான பேச்சு. சசி 100% சீரியஸ் mode.

கால் மேல் கால் போட்டு அமர்ந்து, “உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லன்னு தோணுச்சு, அன்ட் ஏன் வந்தான்னா புரியல?” இலகுவாக பின்னால் சாய்ந்தபடி கேட்டாள் நறுமுகை.

புருவமுடிச்சுடன்.. “ஆயிரத்தெட்டு வழி இருக்கும்போது, கல்யாணம் பண்ணிக்காம, உன் பேர் கெட்டுபோயிடும்னு தெரிஞ்சும்.. ஏன்?”

“மேரேஜ் பண்ணிக்காம, விது உருவாவான்னு தெரிஞ்சும் தப்பு பண்ணினேன் இல்லையா? அதுக்கு தண்டனை வேண்டாமா?”, நறுமுகையின் குரல் மட்டுமல்ல முகம் கூட எதையும் வெளிக்காட்டவில்லை.

இன்னமும் குழப்பத்தில் இருந்தான் சசி, “எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாமே?”

“எதுக்கு..? DNA டெஸ்ட் எடுத்துட்டு வா அப்பத்தான் நான் நம்புவேன்னு நீ சொல்றதுக்கா?”, புருவம் உயர்த்தி பதில் கேள்வி.

“ரப்பிஷ், நீ எப்பவுமே இடக்காத்தான் பேசுவியா?”

 “நான் உன்கூட பேசணும்னு ஆசைப்படல, நீதான் கூப்ட”, ஆரவ்-வை பற்றி எதுவும் சொல்லாமல் இவள் கீழே இறங்குவதாக இல்லை.

“இவா, I might be wrong then, I feel sorry for that”

“காலம் கடந்த ஞானோதயம்”

“அப்போ சரின்னு தோணினது இப்போ சரியில்லையோன்னு தோணுது”, யோசனையுடன் சொன்னவன்..”என்ன இருந்தாலும் குழந்தைங்கிறது நம்ம ரெண்டு பேரோட ரெஸ்பான்சிபிலிட்டி இல்லையா? நீ எனக்கு சொல்லியிருக்கணும்தான?”

“சசி, லிசன், விது உன்ன மாதிரி இருக்கான், உன் மேனரிசம் அவங்கிட்ட இருக்கு, அதனாலதான் நீ அவனை தெரிஞ்சிகிட்ட, கரெட்டா? சப்போஸ் அவன் என் மாதிரி இருந்திருந்தான்னா, நீ என்னை யோசிச்சுக் கூட இருக்க மாட்ட, சரிதான?”

“யெஸ், ஒரு விதத்துல நீ சொல்றது சரிதான், ஆனா நீ சிங்கிளாதான் இருக்கன்னு தெரிஞ்சிருந்தா, விது என்னை மாதிரி இல்லேன்னாலும் இதே டவுட் வந்திருக்கும், அப்பவும் நா உன்னை அப்ரோச் பண்ணி இருப்பேன்”.

“No ifs and buts, just tell me what do you want?”

“I want you to marry me”, விசைப்பந்து போல பதில் பட்டென வந்தது. கேட்டவன் கண்களில் உண்மை இருந்தது.

“pardon…”, எத்தனை இலகுவாக கேட்கிறான்?. இந்த கேள்வியை பல வருடங்களுக்கு முன் எத்தனையோ முறை இவன் சொல்ல கேட்டிருக்கிறாள்தான். இப்போது விசித்திரமாக இருந்தது, சற்றே அதிர்ச்சியாகவும்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ-ன்னு கேட்டேன்”

“ஏன்? இப்போ நான் யாரோடையும் ரிலேஷன்ஷிப்-ல இல்லன்னு confirm ஆ தெரிஞ்சிகிட்டதாலயா ?”

“இவா ப்ளீஸ், I said that I’m sorry, I was wrong. அப்போ இருந்த சூழ்நிலை என்னை அப்படி பேச வச்சுது, நான் கேட்ட கேள்விக்கு நீயும் சரியா பதில் சொல்லல, அதையும் ஞாபகம் வச்சுக்கோ”

“நீ அப்போ என்ன கேட்ட? நா என்ன பதில் சொல்லல? சொல்லு”

“நான் இல்லாதப்போ, நம்ம வீட்டுக்கு யார் வந்தாங்கன்னு கேட்டேன், நீ என்ன பண்ணின? பதில் சொல்லாம கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்த”

நறுமுகைக்கு முகம் ரத்த நிறம் கொண்டது. “வெளிய போயிட்டு வந்தா, நீயோ நானோ அப்படித்தான் பிஹேவ் பண்ணுவோம்”, மிகுதியான உஷ்ணம் இருந்தது பேச்சில்.

“யெஸ், அதுக்கப்பறமாவது பதில் சொன்னியா? யூ எங்கேஜ்ட் வித் யுவர் கால்”, சசிக்கு அன்றைய கோபம் இன்னமும் மிச்சம் இருந்தது.

“ஆமா, நா போன்ல பேசினேன்தான், ஆபிஸ்லேர்ந்து கால் வந்தா பேசாம என்ன பண்ணுவாங்க? உனக்கு கால் வந்தா நீ என்ன பண்ணுவ? மூடி வச்சிட்டு எனக்கு ஆற அமர பதில் சொல்லிட்டுதான் கால் அட்டென்ட் பண்ணுவியா?”

“….”, சிறிது நேரம் அமைதியாக இருந்த சசி, “நா உள்ள வரும்போதே நீ பேசிட்டு தான் இருந்த, அதுவும் என்ன சொல்லிட்டு இருந்த தெரியுமா? “நவி, என் வீட்டுக்கு வந்தியா, நல்லா என்ஜாய் பண்ணினியா? அதோட விடு, அத விட்டுட்டு மேரேஜ் பண்ணிக்கன்னெல்லாம் பேசாத, I am not for that”, ன்னு சொன்ன”, உணற்சியற்று சொன்னான்.

“சொன்னா?… அப்படி பேசினா என்ன? நா கெட்டவளாயிடுவேனா? என்னை உனக்கு தெரியாது? உன்னை எவ்வளவு தூரம் நம்பி இருந்தா…?”, கோபத்தில் வார்த்தைகள் தடுமாறின, தொண்டை அடைக்கும் போல் இருந்தது. ‘அழக்கூடாது, அழுத கொன்னுடுவேன்’, அவளுக்குள்.

சில நொடிகள் கனமான மௌனம், பின்னர் சசி, “நான் வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்சநேரம் முன்னாடிதான், அந்த உங்க கேட்டட் கம்யூனிட்டி அசோசியஷன் செக்ரெட்டரி எனக்கு complaint பண்ணினார்”, என்றான்.

“என்னன்னு? இந்த மாதிரி உங்க girl friend கண்டவனோட குடும்பம் நடத்தறான்னா?”

“எஸ், அது மாதிரி சொன்னார், வீட்டை லாட்ஜ் மாதிரி நடத்தறீங்க, லேடீஸ் ஜென்ட்ஸ் எல்லாம் வந்து போறீங்க, நாங்க பப்ளிக் நியூசென்ஸ் ன்னு போலீஸ்-ல கேஸ் குடுக்கப்போறோம்னு ..”

“ஓ!”, இது அவளுக்கு புதிய செய்தி, போனில் பேசியதை பற்றி அன்றே சொல்லி திட்டினான். இவளும் பதிலுக்கு பதில் பேச.. இருவரும் சண்டையை பெரிதாக்கினார்கள்.

“ஆனா, அப்பறம் நடந்த அசோஸியேஷன் மீட்டிங் ல யாரும் இதைபத்தி சொல்லலையே?”

“நான் அவர் கிட்ட, ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன். அதனால இருக்கலாம்”, எதோ மென்று விழுங்குவது போல இருந்தது.

அவனைக் கூர்மையாக பார்த்து, “என்ன கேட்டாங்க? அதுக்கு நீ என்ன பேசின?”

“நீங்க அவங்களுக்கு யாரு? ன்னு கேட்டார், நான் பார்ட்னர் ன்னு சொன்னா,  அவங்கப்பா நம்பர் குடுங்க நாங்க அவர் கிட்ட பேசறோம்னு அந்தாள் ஒரே தகராறு. உனக்கு நான்தான் ரெஸ்பான்சிபிலிட்டி-ன்னு சொன்னா அவர் கேட்கவேயில்லை, ‘ஒருவேளை இப்போ திடீர்னு நறுமுகை செத்தா போலீஸ் யார்கிட்ட பாடிய ஹாண்ட் ஓவர் பண்ணுவாங்கன்னு கேட்டார். இத கேட்டதும், I was totally out of control. ரொம்ப கன்னாபின்னான்னு திட்டிட்டேன்”

“ம்ம். வீட்ல அப்படி ஒரு கேள்வி? அதனாலதானா?”

“…”, சசியின் கண்கள் டேபிளின் நுனியை வெறித்தது, “அது மட்டுமே காரணமில்ல, ஆரவ்”.. “அவனும் ஒரு காரணம்”

“அப்போ ஆரவ் பிறக்கவே இல்ல”, பளிச்சென மருதலித்தவள், “ஓ! ஆரவ் எனக்கு முன்னால இருந்த உங்க affair-ரோட Son, ஆர் உங்க மனைவி மூலமா..?”

“ஷட் அப், எனக்கு மேரேஜே ஆகல, அதுக்குள்ள wife? No, ஆரவ் சந்த்ருவோட  பையன்”.

“ஓஹ்!”, முதலில் யார் சந்துரு என்று மனதில் கொண்டு வந்தாள். சந்திரசேகரன் சசியின் அண்ணன்.. டென்வர், கொலராடோவில் இருப்பவன். அவன் மகன் இங்கே ஏன்? குழப்பமாக சசியைப் பார்த்தாள்.

“உனக்கு சொல்லியிருக்கேனா தெரில, சந்த்ரு இந்தோ-அமெரிக்கன் பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டான். ரெண்டு வருஷம் நல்லாத்தான் இருந்தாங்க. சந்த்ருக்கு இந்தியா வந்து செட்டில் ஆகணும்னு ஆசை, இவனோட ஐடியா அவங்களுக்கு பிடிக்கல, ஷீத்தல் அப்போதான் கன்சீவ் ஆனாங்க, அப்போலேர்ந்தே ப்ராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சி எங்க குழந்தை பிறக்கணும்னு. இதை காரணம் காட்டி டெய்லி ஏதாவது ஒரு சண்டை”

“அந்த டைம்-ல ஷீத்தல் அவங்க எக்ஸ் Boy Friend கூட  பேசி பழக ஆரம்பிச்சிருக்காங்க போலிருக்கு. அது சந்துருக்கு தெரிய வர சண்டை இன்னும் aggravate ஆச்சு, பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கான், கேக்கலை. ஒரு எக்ஸ்ட்ரீம்-ல ஷீத்தலை அடிக்கவும் செஞ்சிருக்கான், அதுல இன்னும் அவங்க gap அதிகமாச்சு”

“ஒரு நாள் இவன் இல்லாதபோது அந்த Boy Friend வீட்டுக்கு வந்திருக்கான்”, என்று சொல்லி நிறுத்தி, நறுமுகையை ஏறிட்டு பார்த்து, “திடீர்னு வீட்டுக்கு வந்த சந்த்ரு பாக்ககூடாததை பாத்துட்டான். she was seven months pregnant then”

“சந்துருக்கு பயங்கர ஷாக். இவனை பார்த்ததும் அந்த எக்ஸ் ஒண்ணும் சொல்லாம போயிட்டான், அப்பவும் பொறுமையா ஷீத்தல் கிட்ட கேட்ருக்கான் ஏன்னு, ‘எனக்கு உன்மேல இஷ்டமில்ல, அவனைத்தான் பிடிச்சிருக்கு-ன்னு சந்துரு முகத்துக்கு நேராவே சொல்லிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க”

“அப்பறம் அவகிட்ட இருந்து டைவோர்ஸ் பேப்பர்ஸ் வந்தது, டெலிவரிக்கு முன்னாடியே இந்த பேபி எனக்கு வேண்டாம்-ன்னு ஷீத்தல் சொல்லிட்டா, எழுதியும் கொடுத்துட்டா”

“பட் ஆரவ் ஏன் அவங்கப்பாவோட இல்ல?”, நறுமுகை.

சசி, கண்களை மூடிக்கொண்டான், எதோ பெரியதாக வரப்போகிறது என்பது நறுமுகைக்கு புரிந்தது.

Advertisement