Advertisement

முகிழ் – 7

 

அவன் மண்ணில் சரியவும், க்ரிஷ்ணவ்என்ற அழைப்புடன் மதி சர்ர்ர்ர்ர்ர் என்று தனது வண்டியை பிரேக் போடவும் சரியாக இருந்தது.

 

சரட்டென்று வண்டி நிற்கவும் நிகழ் காலத்திற்கு வந்தவள், மெல்ல மெல்ல உணர்வு பெற்று கண்களை சுழல விட்டாள். முழுதும் உணர்வு பெற இயலாமல் தவித்த மதியை வேற்று கிரகவாசி போல பார்த்தான் சினேகன். ஆம் இப்பொழுது மதி சுய உணர்வு பெற்றது சினேகன் போட்ட சடன் பிரேக்ஆல் தான்.

 

சினேகன் மதியிடம், “மதி நீ சொல்லிய இடத்திற்கு வந்தாச்சு, வண்டி இவ்ளோ பெரிய கல்லுல மோத போய், என் திறமையால நான் சடன் பிரேக் போட்டு ஒரு பெரிய ஆக்சிடண்ட தடுத்திருகேன், நீ என்னடான ஏதோ பிளாஷ் பேக் போனாமாதி லுக்கு விடுறஎன்று கூறி மதியை முறைத்தான்.  

 

தற்காலிகமாக மதியின் நினைவலைகள் முடக்கப்பட்டது. ஆதி, அடுக்கம் காடு, கொடைக்கானல் அனைத்தையும் ஒதிக்கி வைத்துவிட்டு தான் வந்திறங்கிய இடத்தை பார்வையால் அலசினாள்.

 

மதியை கவனிக்காமல் மேலும் சினேகன் தொடர்ந்தான், “இந்த இடத்துல நின்னு நீ அப்படி என்னதான் பாக்குறியோ தெரிலடே சினேகன் கண்ணா இவள இத்தன நாலா புத்திசாலின்னு தப்புக் கணக்கு போட்டுட்டியேஎன்று சத்தமாக வாய்விட்டு புலம்புவனை பார்வையால் அடக்கினாள் மதி.

 

பிறகு அவனது கையில் இருக்கும் கேமராவை பிடுங்கி அவளே சில பல கோணங்களில் அந்த இடத்தை பதிவு செய்தாள். உடனே சிநேகன், “சரியான குரங்கா இருப்பா போல, குரங்கு வாழப்பழத்த பிடுங்கிர மாதி வெடுக்குன்னு பிடுங்கிரா, இவள கட்டிக்கபோறவன் என்ன பாடுபட போறானோஎன்று இந்த முறை உஷாராக மனதினுள் முனங்கினான்.

 

அதையும் கண்டுக்கொண்ட மதி, அவன் முகத்திலிருந்தே என்ன நினைத்திருப்பான் என்று யூகித்து, “என்ன சிநேகன் இதுக்கு முன்னாடி ஏதும் குரங்குகிட்ட மாட்டின முன் அனுபவமாஎன்று கேட்க வாயடைத்து போனான்.

 

மதியும் சிநேகனும் பழகிய கொஞ்ச நாட்களிலே அவளுள் அவன் மீது ஒரு தோழமை உணர்வு. அதே போல தான் சிநேகனுக்கும். ஆதலால் தான் கொஞ்சம் உரிமை எடுத்து இருவரும் பேசிக் கொள்வதும் உண்டு அடுத்தவர் கால்களை வாருவதுமுண்டு.

 

ஒருவர் மற்றொருவரின் நலம்விரும்பி என்றும் கூறலாம்.

 

இன்னும் ஒரு சில இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்தவள், சிநேகனிடம் தன்னை ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனியில் இறக்கி விடுமாறு கூறினாள்.

 

வழிமுழுவதும் எதற்காக படம் எடுத்தாய், என்ன கேஸ் என்று தூன்டி துலாவிய சிநேகனிடம் ஒரு வார்த்தை கூறினாள் இல்லை மதி.

 

அவர்கள் கிளம்பிய இடத்தில் இருந்து ஆதித்யனின் அலுவலகம் வர சுமார் 2.5 மணி நேரம் பிடித்தது அவர்களுக்கு. சென்னை டிராபிக் பற்றி அறிந்தவர்கள் ஆதலால் அதை பற்றி கவலைப் படாது வந்து சேர்ந்தவுடன் மணியை பார்க்க அது இரவு 11 என்று காட்டியது.

 

தானும் உடன் வருவதாக சினேகன் கூற, மதி பிடிவாதமாக அவனை அனுப்பி விட்டு பார்கிங் ஏரியா நோக்கி நடந்தாள்.

 

ஆதி அத்தான்….. நான் இவ்ளோ சொல்லியும் நீங்க இன்னைக்கும் லேட்என்று சினுங்கியவளின் குரல் வந்த திசையில் மதி பார்க்க ஆதியும் அந்த பெண் கோவிலில் பார்த்த அதே பெண்ணும் நடந்து வருவது மதியின் விழிகளில் பட்டது.  

 

அதற்கு ஆதித்யன், “ஒகே நிலா, அதான் இப்ப கிளம்பிடேன்ல. நீ ஆசைப்பட்டது போலவே இன்று கலக்கிடுவோம்என்றுக் கூறிக்கொண்டே அவனுடைய ப்ளாக் பி.எம்.டபுல்யூ (BMW) யில் அவளுக்கு முன் கதவை திறந்து விட்டு, அசாத்திய கம்பீரத்துடன் அவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஓர் அரைவட்டம் அடித்து காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.

 

கார் சென்ற பின்பும் மதி அவர்கள் சென்ற திசையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த பெண் பெயர் நிலா, அவள் ஆதியை அத்தான் என்று அழைக்கிறாள், அவனின் மனைவியோ என்று அவள் மன ஓட்டம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. “என்னைக் கடந்து தானே சென்றான். நான் அவன் கண்ணில் படவில்லையோ?” என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுது லிப்ட் சத்தம் கேட்க பார்வையை திருப்பியவள் அங்கே இனியன் வந்துக் கொண்டிருந்தான். இனியன் அருகில் வந்தவுடன் ஒரு அழகான சிரிப்புடன், “என்ன மதி இந்த டைம்ல இங்க என்ன பண்றீங்கஎன்று கேட்க, மதியோ காலையில் நடந்ததை சுருக்கி தேவையானதை மட்டும் கூறினாள்.

 

உடனே இனியன், “அது ஒகே மதி, ஆனா கிளம்பாமல், பாதையை வேடிக்கை பார்க்குறீங்க டைம் ஆல்ரெடி ரொம்ப லேட், சோ நீங்க சீக்கரம் கிளம்புங்க….நான் வேனும்ன கூட வரட்டுமாஎன்று கேள்வியோடு முடித்தான்.

 

மதியோ, “இல்லை இனியன் இப்ப ஒரு பொண்ணு போனாங்க க்ரிஷ்….”என்று தொடங்கி உடனே அதை சரி செய்துஆதித்யன் சார் கூட எனக்கு அவுங்கள எங்கயோ பார்த்தமாதி ஒரு பீல் அதான் யோசித்தேன், நத்திங் மச்என்று குழப்பம் தீராமல் இருப்பவளை பார்த்து, “மதி நீங்க அவுங்கள ஆதி சார் கூட தான் இதுக்கு முன்னாடி கூட பார்த்திருப்பீர்கள்னு நினைகிறேன், பிகாஸ் அவுங்க ஆதியோட கசின் ரிசெண்டாதான் அவுங்களுக்கு கல்யாணம் கூட ஆச்சுஎன்று இனியன் இயல்பாக கூற, மதியின் மனதில் துயரம் சிறு தூறலாக சிந்த ஆரம்பித்து புயலாக மாறி இருந்தது.

 

மெல்ல மெல்ல துளிர்விட்டதடா

தரிசான என் மனதில்  

உன் உருவம்;

 

உருவம் உயிர்பெறுமுன்னே

உண்மைகள் அறிந்தேனடா

உன்னை பற்றி;

 

துளிர் விட்ட காதல்தளிர்

இன்றுவரை மாறா

நிரந்தர வடுவானதோ?

 

துயரத்தின் தூறல் நெஞ்சில் தூறுதடா

அமிலமாக, வடுவோடு சேர்ந்து  

என் மனமும் கருகுதடா!!!

                                         

அவளின் முகமாறுதல்களை கவனித்த இனியன் மதியிடம், “நீங்க ரொம்ப கலக்கம்மா இருப்பது போல தெரியுது நான் வந்து டிராப் பண்றேங்கஎன்று கூறினான்.

 

ஆனால் மதி, பிடிவாதமாக இனியனிடம் மறுத்து தனது ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சிறு தலை அசைப்புடன் சென்றாள்.

 

ஆனால் இனியனோ, மதியை கவனித்து விட்டு அவள் சேர வேண்டிய இடத்திற்கு பத்திரமாக சேர வேண்டுமே, உடன் வரவும் அனுமதி மறுகின்றாள் என்று பலவாறாக யோசித்து விட்டு அவனும் தனது வண்டியில் பயணமானான்.  

 

இப்படி எண்ணமிட்டு கொண்டே மதி சென்ற எதிர் திசையில் பயணிக்க தொடங்கியவன் ஒரு 10 நிமிட பயணத்திலே வண்டியை மதி சென்ற திசைக்கு திருப்பி இருந்தான். மதி சென்ற திசையில் பயணிக்க தொடங்கிருந்தான்.

 

அவளது கவனம் முழுவதும் அவள் வசமில்லை. “அவனுக்கு திருமணமானால் என்ன? எனக்கு தான் அவன் சுயரூபம் தெரியுமே. தெரிந்து தானே விலகினேன். ஆனால் இப்போது மனம் ஏன் இப்படி நிம்மதி இல்லாமல் தவிக்கின்றது. அவன் மேல் கோவம் மட்டும் தானா? அவனை நான் வெறுக்கவே இல்லையோ? இல்லை அவனை போன்ற ஆண்களை நான் அடியோடு வெறுகின்றேன்என்று பலவாறாக எண்ணி கொண்டு பயணித்தவள் முன், ஒரு வண்டி வந்து நின்றது, தன் இச்சை செய்யலாக பிரேக் போட்டவள் சுதாரிக்கும் முன்னமே 2 ரௌடி களின் கையில் அகப்படிருந்தாள் மதி.

 

மதி அவர்கள் பிடியில் இருந்து திமிறிய நிலையில் அவர்கள் அவளை தங்கள் வண்டி நோக்கி இழுத்துச் செல்ல முனைந்தனர். அவளின் பலம் மொத்தம் திரட்டி ஒருவனின் உயிர்நாடியில் மதி உதைக்க, ஒருவனது பிடி மட்டும் லேசாக தளர்ந்தது. அதுவே மதிக்கு போதுமானதாக இருக்க, அவனின் கையை உதறிவிட்டு மற்றொருவனுடன் போராட ஆரம்பித்தாள்.

 

கிட்ட தட்ட மதி அவனுடன் முழுதாக 10 நிமிடங்கள் தன் சக்தி மொத்தமும் கொண்டு போராடி அயரதொடங்கிய தருணம் அடிப்பட்ட மற்றொருவன் சுதாரித்து அவளை மீண்டும் பிடித்திருந்தான்.

 

மதி சென்ற திசையில் வந்துக் கொண்டிருந்த இனியன், இதை தூரத்திலிருந்தே கவனித்து ஏதோ ஆபத்து என்று உணர்ந்தவன் தனது வண்டியின் வேகத்தை அதிகபடுத்தினான். மதியை அவன் வண்டி நெருங்கவும் அவர்கள் மதியை அவர்களின் வண்டியில் தள்ளவும் சரியாக இருந்தது.

 

மின்னெலென காரிலிருந்து வெளிவந்தவன், ஒரு நொடியும் தாமதிக்காது அவர்களை அடிக்க தொடங்கினான்.

 

இந்த சிறு இடைவெளியில் மதி அவர்கள் வண்டியில் இருந்து இறங்கி இனியனின் கார்அருகில் நின்று பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை சமன் செய்துக் கொண்டிருந்தாள். இனியனின் அடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கிய ஒருவன், இனியனின் தோள்பட்டையில் சிறு கத்திக் கொண்டு கீறிவிட்டான்.

 

ஒரு சில வாகனங்கள் தூரத்தில் வந்துக் கொண்டிருப்பதை கவனித்த மற்றொருவன் இனியன் அசந்த நேரம் அவர்கள் வண்டியில் ஏறி மாயமென மறைந்தார்கள்.

 

அவர்கள் சென்றவுடன், மதியிடம்அவர்கள் யார் மதி, ஏன் உன்னை கடத்த முயன்றார்கள், நான் அவ்ளோ சொல்லியும் நீ இந்த டைம் தனியா போகணும்னு அடம்பிடிக்கிறஎன்று அவளை ஒருமையில் அழைத்து பட படவென பேசி முடித்தான்.  

 

இல்லை தனக்கு தெரியாது என்பது போல தலை அசைத்தவள், அவன் ஒருமையில் பேசியதை மதி கவனித்தாள். அவள் கவனிப்பதை கொஞ்சம் தாமதமாக உணர்ந்துக் கொண்ட இனியன் அவளிடம்சாரிங்க பதட்டத்துல அப்படி பேசிட்டேன்எனவும் மதி அவன் பேசியது தவறில்லை என்றும் இனி அவளை ஒருமையில் அழைக்கலாம் என்று கூறினாள்.

 

ஆனால் இனியனோ மறுப்பாகஎப்படி வருகிறதோ அப்படி அழைக்கிறேன்இப்போதைக்கு வாங்க போங்க என்றே அழைக்கிறேன்என்று இலகுவாக கூறி முடித்தான்.

 

அப்பொழுதுதான், அவன் தோள் காயத்தை கவனித்தவள் அவன் தோளில் வழிந்த குருதிக் கண்டு பதறிய மதி இனியனிடம், “அய்யோ இனியன் நீங்க ஏன் வந்தீங்க……எனக்கு உதவி செய்ய வந்து உங்களுக்கு அடிப் பட்டுவிட்டதுஎன்று ஆற்றமையோடு கேட்பவளுக்கு இனியன் ஒரு சிறு புன்னகை மட்டுமே பதிலளித்தான்.

 

பிறகு இனியன், “மதி இங்க பாருங்க இது சின்ன காயம் தான், வில் டேக் கேர் ஆப் திஸ், நீங்க உங்க வண்டி எடுங்க….. நான் உங்க பின்னாடியே வரேன், நீங்க உங்க வீட்டுக்கு ரீச் ஆனதும் நான் அப்படியே கிளம்பிடறேன். . . உங்க வீட்ல தெரிந்தால் ரொம்பவே கவலை படுவாங்கஎன்று கூறி அவளுடன் புறப்பட்டான்.

 

இவர்கள் இருந்த இடத்தை சற்று தொலைவிலிருந்து வந்துக் கொண்டிருந்த வண்டியில் இருந்த ஒருவனின் இரு விழிகளும் கவனிக்க தவறவில்லை.

 

Advertisement