Advertisement

 

 

முகிழ் – 33

 

 

மாலை மங்கி, முன் இரவு மெல்ல மெல்ல பரவிக் கொண்டு இருந்த வேலை. தனது தங்க கதிர்களால் பூமிக்கு உஷ்ணத்தை அளித்துக்கொண்டு இருந்த ஆதித்யன் மறைந்ததனால் வெட்பம் சற்று மட்டுப்பட்டு, வெளிச்சமும் குறைந்துக்கொண்டு இருந்தது. வெட்பம் குறைந்ததனால், லேசான குளிர் காற்று மெல்ல தலையை நீட்டி எட்டி பார்க்க தொடங்கி இருந்த வேலை……

 

எட்டி பார்க்கின்ற குளிர் காற்றோடு, மெல்ல கை கோர்த்துக்கொண்டு கடல் காற்றும் வரவே, அந்த மங்கிய வெளிச்சமும், புது மண பெண் போல மெதுவாக வெளிவர தொடங்கிய நிலவும், இதமான ஈரப்தத்தோடு உலா வந்த காற்றும், அனைத்துமாக சேர்ந்து மனதை வருட, ஆயினும் மனதினுள் ஒரு இனம் புரியா கலக்கம் எழ, மனதிற்கு பிடித்த மணாளன் முன் மௌனம் காத்து நின்றாள் மதி.

 

அவள் மனதில் எதற்காக ஆதித்யன் தனது வேலையில் உதவ வேண்டும் என்ற கேள்வியும், இப்பொழுது அவரிடம் பேசலாமா அல்லது அவர் கோவம் கொள்வாரோ என்ற எண்ணமும் அவள் மனதில் எழுந்து எழுந்து அதற்கு விடைகாணமல் போகவே, ஏற்பட்டுள்ள குழப்பத்தின் வாயிலாக அவள் மனம் துயரப்பட்டு ஒரு முறை நீண்ட பெருமூச்சு விட்டாள்.

 

அப்படி பெரு மூச்சு விட்டதனால், அவளுடைய அழகிய செழுமை ஒருமுறை உயர்ந்து தாழ்ந்தது. அவள் இப்படி சிந்தையில் பீடிக்கப்பட்டு இருக்க, அவளை அனுஅனுவாய் ரசித்துக்கொண்டு இருந்த ஆதித்யனின் கண்களுக்கு அந்த சிறு அசைவும் தப்பவில்லை.

 

காதலோடு அவளை கண்களால் பருகிக் கொண்டு இருந்த அவளின் காதலனான கணவன் அவள் அருகில் மெல்ல முன்னேறினான். அவனின் அருகாமை உணர்ந்திருந்தாலும், அவளால் ஆதித்யனை நிமிர்ந்து பார்க்க இயலவில்லை. அவன் கண்களில் காதலை சில நிமிடங்கள் முன் உணர்ந்திருந்தாலும், அவன் தன் மீது கொண்ட கோவம் குறைந்துவிட்டதா? என்ற கேள்விக்கு விடை தெரியாததால், மாலை நேரத்து தாமரையாய் கூம்பிய முகத்துடன் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் ஒரு ஓவியம் போல.

 

அவள் அருகில் நெருங்கி அமர்ந்த ஆதித்யன் அவள் தோள் தொட்டு அவள் மலர் முகம் கையில் ஏந்த, காலை மலர் கொண்டிருக்கும் பனி துளியாய் அவள் கண்ணில் நீர் கோர்த்திருக்க, பதறிய ஆதித்யன் சட்டென்று எழுந்து நின்றான்.

 

“மதி, என்னாச்சு… சொல்லு மதி…” என்று கேட்டு விட்டு நினைவு வந்தவனாக, “மதி, அடிப்பட்டதுல காயம் அதிகமா? வலி இன்னும் இருக்கா? நம்ம, நம்ம உடனே ஹாஸ்பிட்டல் போகலாம்… எங்க வலிக்கிறது மதி? சொல்லு” என்று கூறிய படியே அவள் முழங்கைகளை ஆராயிந்தான்.

 

“மதி கேட்டுட்டே இருக்கேன்ல, சொல்லு மா” என்று பரிவுடன் கேட்க மதியோ அழுகையின் ஊடே, “உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா?  நான் உங்கள சந்தேக படல க்ரிஷ்ணவ்… என்ன நடந்துச்சுனா…” என்று கூறியவள் அழுகையை அடைக்கியபடி சிறு விசும்பலுடன், “ரொம்ப வழிக்கிறது க்ரிஷ்ணவ் என் மனசு… என்னால நீங்க இல்லாம இருக்கவே முடியாது, ரொம்ப பாரமா இருக்கு” என்று கூறியபடியே எழுந்து நின்றாள்.

 

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்திருந்த ஆதித்யன், அந்த விளக்கம் அப்போது தேவை இல்லை என்றாலும் கூட அவள் கூறுவதனால் அவளின் மன அழுத்தம் குறையும் என்று எண்ணி அமைதியாக அவள் சொல்லவதற்கு தடை சொல்லாது நின்றான்.

 

“க்ரிஷ்ணவ், அன்னைக்கு நான் அடுக்கம்ல காவ்யா சொன்னத நம்பி போனது உண்மை தான்… ஆனா அப்ப நான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கூட பேசி இருக்கல. என் மனசு வாதடுச்சு, ஆனா கண்ணால பாத்ததும், கேட்டதும் வச்சு என் புத்தி தடுமாறிடுச்சு…. அங்க இருந்து போயட்டேந்தான்… ஆனா உங்கள நினைக்காத நொடினு ஒரு நிமிசங்கூட இத்தன வருசத்துல இல்ல. ஒரு வேலை உங்கள சந்திக்காம போயிருந்தா, இந்த திருமணம் நடக்காம போயிருந்தா, நிச்சயம் என் காதலோட மட்டுமே முழு வாழ்கையும் வாழ்ந்துருப்பேன்… அதுனாலா தான் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல, எனக்கு யார்கூட கல்யாணம் ஆச்சுனு தெரியாதனால, இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிட்டே.

 

நீங்க தான் என் கணவன்னு தெரிந்ததும், நான் அடைஞ்ச சந்தோசத்துக்கு அளவே இல்ல… கல்யாணாம் ஆனா பிறகு உங்கள முழுசா நம்ப தொடங்கினேன்… ஏனா அதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட நடந்துக்கிட்ட முறை. உங்க பார்வையில கூட தப்பு இருந்தது இல்ல.

 

அதுக்கு அப்புறம், உங்க அன்ப பெறமுடியுமானு ஏங்க ஆரம்பிச்சே, அதே சமயம் வாழ்கையில நம்பிகைய பெருசா நினைக்கிற உங்ககிட்ட, நம்பிக்கை இல்லாம விட்டு போயிட்டேன்னு சொல்ல தைரியம் வரல. அது தான் இத்தன நாட்களா நான் சொல்லாம இருந்ததுக்கு காரணம்…..

 

 

இப்ப நம்ம அடுக்கம் போனப்ப, நான் என் மனசுல இருக்க எல்லாத்தையும் ஒரு லெட்டர் ல எழுதி உங்க கண் படுறது போல வச்சே… ஆனா அதுவும் போச்சு….

 

ப்ளீஸ் க்ரிஷ்ணவ்… என்ன என்ன….” என்று சிறுபிள்ளைபோல் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே, சொல்ல முடியாமல் சொல்லி முடித்தவள் இறுதி வாக்கியத்தை கூட முடிக்காமல் உதடு துடிக்க, கண்களில் இருந்து நீர் பெருக நின்று இருக்க, அவள் அருகில் நின்று இருந்த ஆதித்யன் ஒரு அடி பின் நோக்கி நகர, அவன் பின் அடைவதை பார்த்ததும் ஒரு திகைத்த பார்வையை மதி ஆதித்யன் மீது செலுத்தினாள்.

 

அவன் பின் அடைவதை பார்த்து, “கிருஷ்…” என்று தொடங்க அந்த வார்த்தையை முடிக்கும் முன்பே ஆதித்யனின் வேகமான அணைப்பில் இருந்தாள் மதி.

 

நடப்பது ஏதும் அறியாமல், அவன் மார்பில் சாய்ந்தபடி தலை நிமிர்த்தி ஆதியின் முகம் காண, ஆதி அவள் முகத்தை கைகளில் ஏந்தி மென்மையாக அவள் பிறை நெற்றியில் முத்தமிட்டான்.

 

அந்த முத்தத்தின் ஈரத்தை அவள் பிறை நெற்றி, நெத்தி சுட்டி போல் சூடி இருக்க, அவள் கண்களில் இருந்து சந்தோஷ சாரலாக இப்போது கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை, அவனின் வலிமையான கரம் கொண்டு துடைத்தவன், நனைந்து இருந்த ஈர இமைகள் மீது பூங்காற்று வருடுவது போல முந்தங்களை முத்திரையாக பத்திதான் அவளின் கணவன்.

 

“இனி இந்த கண்கள், எப்பயுமே கண்ணீர் உகிர்க்க கூடாது மதி….” என்று கூறியவன், அதற்குமேல் எதுவும் பேசாது, அவளை கைகளில் ஏந்தி, அவர்களது மொட்டைமாடியில் இருந்த கல்லினால் வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து அவளை அவனது மடி மீது அமரவைத்து அவள் கழுத்தினில் முகம் புதைத்தான்.

 

ஒரு சில நிமிடங்கள் இறுகிய அணைப்பும், அமைதியுமே அங்கு நிலைத்து இருக்க தற்போது தான் வெளி வந்த வெண்ணிலவு, இவர்களது காதலை கண்டு, மீண்டும் மேகத்துக்குள் முகத்தை புதைத்துக் கொண்டது வெக்கம் தாளாமல்.

 

சிறு மௌனம், நிறைய காதல், மனம் கவர்ந்தவரின் அருகாமை என்று அந்த இடம் ரம்யமாக தோன்ற, மதிக்கு, தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று ஐயம் எழ, அவள் மனதில் எழுந்த குழப்பம் கூட உணர்ந்தவனாக ஆதித்யன் பேச்சை தொடர்ந்தான்.

 

“மதி, நான் உன்ன 4 வருசமா காதலிக்கிறேன், உன் முகம், நீ யாரு எதுவுமே எனக்கு தெரியாது…. எனக்கு தெருஞ்சது எல்லாம்… நீ என் மேல உள்ள கோவத்துல நீ தூங்கி போட்டு போன டைரி… நீ சொல்லாம போன காதல, அந்த டைரி எனக்கு சொல்லிடுச்சு….

 

அது என் கைக்கு கிடைச்ச நாள் இருந்து, இப்பவர அத ஒரு பொக்கிஷம் போல பாத்துக்கிறேன்…..

 

 

உன் கழுத்துல தாலி கட்டும் போது, நீ தான் என் காதலின்னு எனக்கு தெரியாது… அதுனாலா தான் நம்ம முதலிரவுல எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னே….

 

ஆனா நீ தான், நான் இத்தன வருசமா தேடிக்கிட்டு இருக்க என்னோட காதல்னு நீ நம்ம ரூம் ஊஞ்சல்ல விட்டு போன கவிதையும், உன் கை எழுத்தும் சொல்லிடுச்சு….

 

அதுக்கு பிறகு உன்ன பத்தி முழுசா தெருஞ்சுகிட்டே… ஆனா நீ ஏன் என்ன விட்டு போன, ஏன் உன்ன நீ வெளிகாட்டல அத மட்டும் தெருஞ்சுக முடியல… அதோட உன்ன சுத்தி நிறைய ஆபத்து இருந்தது….

 

உன் வாய்மொழியா உன் காதல கேக்கணும், உனக்கு இருக்க ஆபத்த தடுக்கணும்… இது இரண்டு தான் இத்தன நாளா உன்கிட்ட என்னோட காதல சொல்லாததற்கு காரணம்…..

 

உன்னோட ஆபத்து எதுனாலானு பார்த்தப்ப தான் அந்த பெயிண்டிங், மெமரிக் கார்டு…அப்புறம் இன்னும் சில விஷயங்கள் பண்ணினது…

 

உன் மேல நான் கோவப்பட்டேன்… அன்பு இருந்தாதான உரிமையும், கோவமும் வரும்… அன்னைக்கு நம்ம ஒன்னு சேர்ந்ததுக்கு பிறகு உன் கண்ணுல்ல தண்ணிய பார்த்ததும் என் மனசுல உனக்கு பிடிக்காம நான் அவசரபட்டுடேனோனு தோணிடுச்சு….

 

என் மேல தப்போன்னு தோணிச்சு, அதுவே அதுக்கு அப்புறம் உன் மேல கோவமா மாறிடுச்சு. அந்த கோவத்துக்கு அடிப்படை காதல்….

 

இப்ப சொல்லு என் செல்ல பொண்டாட்டி… நான் உன்மேல கோவப்படக்கூடாத?” என்று கேட்டு அவளை மேலும் இறுக அணைத்தான்.

 

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மதியின் நெஞ்சில் பூக்களை சொறிந்தன. அவன் தன்னை தேடி அழைந்தான் என்று அறிந்த மதி, அந்த நிமிடம் தன்னை இந்த உலகத்தின் இளவரசி போல் உணர்ந்தாள்.

 

ஆதித்யன் நெஞ்சில் அவளுக்கு இடம் இருக்கிறது என்பதை அறிந்த அந்த தருணம், அவள் நெஞ்சில் ஏற்பட்ட சந்தோசம் எத்தனை பெரியது என்றால் இந்த பூலோகம் முழுவதும் சேர்த்தாலும் அவள் சந்தோசத்தில் அது ஒரு புள்ளியாகவே அமையும் என்றளவுக்கு சந்தோசம் கொண்டாள்.

 

அவன் கூறியதை கேட்டு அவன் புறமாக திரும்பி, அவனது அருகில் அமர்ந்த மதி, ஆதித்யனது விழிகளில் அவளது விழிகளை உறவாட விட்டபடி அமர்ந்திருக்க, அவள் உதடுகள் வார்த்தைகளை உதிர்க்கவில்லை ஆனால் அவள் உதடிற்கும் சேர்த்து அவள் கண்கள் பேசிக் கொண்டு இருந்தது அவனிடம் மௌன பாஷையை.

 

அவள் கண்களை பார்த்தபடியே ஆதித்யன், “ஐ லவ் யூ மதி….” என்று முதல் முறையாக அந்த மூன்று வார்த்தையுடன் அவள் பெயரையும் கூற, மதி இத்தனை நேரம் சந்தோசத்தில் சிலையாய் இருந்தவள், உணர்வுகள் கரை புரள, மடை திறந்த நீராய் அவன் மார்பினில் தஞ்சம் கொண்டாள்.

 

அவன் மார்பை கட்டிகொண்டே, அழுதாள்… சிரித்துக் கொண்டே அழுதாள்… அழுதுக் கொண்டே சிரிக்கவும் செய்தாள். சிறு குழந்தை போல் அவனை தழுவிக்கொண்டே அழுதாள் எம்பி அவனது முகத்தை பற்றி, அவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள். இதுவரை சொல்லாமல் அவர்களிடையே முகிழ்ந்திருந்த காதல், அந்த நொடி சொல்லப்பட்டு முகிழ தொடங்கி இருந்தது……

 

மறுநாள் விடியல்… நிலாவின் குதுகலமான குரலில் விடிந்தது…..

 

“சிவா மா, அம்மா, அப்பா… எல்லாரும் எங்க இருக்கீங்க….” என்று வீடே அலறும்படி அவள் அழைக்க அனைவரும் முன் வரவேற்பறை வந்தனர்.

 

“என்ன நிலா மா?” என்று சிவகாமி அம்மாள் கேட்க, “இருங்க, இருங்க சொல்றேன்… நான் எவ்ளோ பெரிய குட் நியூஸ் சொல்லபோறேன்னு தெரியுமா? இளா அப்பா… நான் இத சொன்ன எனக்கு என்ன தருவீங்க” என்று சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் பீடிகை போட்டுக் கொண்டு இருக்க, இவள் ஆர்ப்பாட்டத்தில் மதியும், ஆதியுமே துயில் களைந்து வந்துவிட்டனர்.

 

வந்தவர்களை பார்த்த பெரியவர்கள், மதியின் முகத்தில் தெரிந்த வெக்கம் கலந்த தெளிர்ச்சி, அவர்களுக்கு, சிறியவர்களின் சந்தோசத்தை பறைசாற்ற மூவரும் ஒருவரை மாற்றி மற்றொருவர் புன்னகைத்துக் கொண்டனர்.

 

“என்ன நிலா… காலையிலே ராமு அண்ணா மிளகா பச்சி செஞ்சுடாரோ… அதான் ரொம்ப கொண்டாட்டமா திரியிறியோ…” என்று நக்கல் இழையோட ஆதித்யன் சிரித்துகொண்டே படி இரங்கியவாறு கேட்க நிலா ஆதித்யனை முறைக்க, மற்றவர்கள் சிரிக்க தொடங்கினர்.

 

“சரி விடு கூல் பேபி… எப்பயும் நீ மிளகா பச்சினா இப்படி தான பண்ணுவ..” என்று கூறியப் படி மதியிடம் திரும்பி, “என்ன மதி நான் சொல்றது சரி தான?” என்று கேட்க மதியும் சிரித்துக்கொண்டே ஆமாம் என்பதை தலை அசைக்க இப்போது நிலாவின் முறைப்பு மதியின் மீது ஆனது.

 

“சரி நிலா குட்டி, என்ன விஷயம்னு சொல்லுடா… அவுங்க இரண்டு பேர் கிடக்காங்க…” என்று சிறு பிள்ளைக்கு சமாதானம் சொல்வது போல் சிவகாமி அம்மாள் கூற நிலா சென்று வாஞ்சையாக சிவகாமி அம்மாள் அருகில் அமர்ந்துக்கொண்டு கூற தொடங்கினாள்.

 

“என் கையில என்ன இருக்கு பாத்தீங்களா?, சத்யம் நியூஸ் பேப்பர்” என்று கூற சமையல் கட்டில் இருந்து எட்டி பார்த்த ராமு அண்ணா, “பாப்பா, இத சொல்லவா எல்லாரையும் கூப்பிட்டீங்க…” என்று கேட்க மீண்டும் சிரிபொலி கிளம்பியது.

 

முகத்தை தூக்கி வைத்துகொண்ட நிலாவை இப்போது சமாதானம் செய்வது இளமாறன், மதி அழகியின் முறையானது. ஒருவழியாக நிலாவை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய அவள் கூற தொடங்கினாள்.

 

“இதுல என்ன வந்துருக்கு தெரியுமா?… 48 பெற கடத்தினது யாருன்னு, அதுல யார் எல்லாம் சம்மந்த பட்டு இருக்காங்கனு மறை முகமான தகவல் கூட. ஒரு சில பாதுகாப்பு கருதி முழு விவரம் அதாவது இப்படி செஞ்சவங்களோட போட்டோ போடல.. ஆனா முழு விவரமும் சேகரிச்சது யாரு தெரியுமா நம்ம மதி…அப்புறம் மதியுடைய பிரின்ட் சிநேகன்… இதுதான் அந்த குட் நியூஸ் இத சொல்ல தான் கூப்பிட்டேன்….” என்று கூற குடும்பத்தினர் அனைவரும் சந்தோசத்தில் திழைக்க, ஆதித்யன் அந்த தினசரியை வாங்கி விவரங்களை படித்தான்.

 

முதல் வாழ்த்தாக, மதிக்கு கை குடுத்தவன்… அவள் அருகினில் அவள் காதில் ஏதோ முணுமுணுக்க, வெக்கதினால் அவள் காது மடல் சிவந்தது….

 

அடுத்து அனைவருமே அவளை வாழ்த்த, ராமு அண்ணா, அதை கொண்டாடும் விதமாக கேசரி செய்ய முனைய, அவரை தடுத்த நிலா, “ராமு அண்ணா கூடவே மிளகா பச்சியும்” என்று கூற அனைவரும் சிரித்தனர்.

 

அந்த நேரம் சரியாக சிநேகன் வர, அவனுக்கும் வீட்டில் இருபோர் அனைவரும் வாழ்த்தை தெரிவிக்க ஆனால் சிநேகனது கண்களோ ஆதித்யனை தாங்கி நின்றது. இதில் முக்கிய பங்கு ஆதித்யனுக்கே என்பதின் பொருளாய். ஆனால் ஆதித்யன் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை என்பதை முன்பே கூறி இருந்ததால் சிநேகனும் அதை யாரிடமும் கூறவில்லை.

 

“என்னபா இவ்ளோ சீக்கிரம் மதிய ஆபிஸ் கூப்ட வந்துட்டியா பேப்பர் ல பேர் வந்ததும், அடுத்தநாள் நேரமே ஆபிஸ் போறீங்க போல?” என்று இளமாறன் விளையாட்டாக கேட்க, “இல்லப்பா, நான் அதுக்கு வரல… பேப்பர் பாத்துர்பீங்கள? அதுக்கூடவே இன்னும் ஒரு விஷயமும் சொல்ல வந்தேன், இது பப்ளிஷ் ஆனதுனாலா, இத பாத்தி காவல் துறை கருத்து என்ன? அவுங்க என்ன செஞ்சுருக்காங்க இந்த வழக்குலன்னு மத்த மீடியா கமிசனர்க்கிட்ட போக, அவரு இத விசாரிக்கிற ஆபிசர் கூட லைவ் மீட்டிங் மீடியா க்கு வச்சுருக்காங்க… அத பாக்குறது நம்ம அகிலன் சார்.. லைவ் 8.30 க்கு அதான் வந்தேன்… என் ரூம்ல தனியா உக்காந்து பார்கிறத விட இங்க எல்லார் கூடையும் இருக்கலாம்னு…” என்று அவன் கூற அனைவரும் ஒரு சேர, “என்ன இத டீல் பண்றது அகிலனா?” என்று ஒரே குரலில் கேட்க, ஆதித்யன் மட்டும் ஒரு சிறு புன்னகையை தவழ விட்டபடி இருந்தான்.

 

நேரம் சரியாக 8.30 காட்ட, அந்த தனியார் தொலைக்காட்சி நேரடியாக காவல் துறையினரின் பேட்டியை ஒளிபரப்ப தொடங்கி இருந்தது. அதில் அகிலன் தோன்ற, அப்போது தான் அனைவரும் நிலாவிடம் அவன் எப்பொழுது கிளம்பி சென்றான் என்று கேட்க நிலாவோ, “அவரு நைட் முழுக்க வரல சிவா மா… வேலை இருக்குனு சொல்லிட்டாரு..” என்று கூறிவிட்டு தொலைகாட்சியில் கண்களை பதித்தாள்.

 

காக்கி உடுப்பில் கம்பீரமாக தோன்றிய அகிலன், பேட்டி காண வந்தோர் கேக்கும் கேளிவிகளுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும் பதில் அளித்தவன், எப்போது அவர்களை பிடிப்பீர்கள் என்ற கேள்விக்கு ஒரு மென் முறுவலுடன், “வி அல்ரெடி அரெஸ்டட் தம்….எஸ்டர்டே இட்செல்ப்” என்று கூற அங்கு இருப்போர்களுக்கும், பேட்டி நேரலையில் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், ஏன் மதிக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டந்து.

 

“அந்த கூட்டத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற கவின், விஜய ராஜசேகிரன் இந்த 2 பேரையும் நாங்க இரண்டு நாள் முன்னே கைது செய்துட்டோம்… இதோட தலைவன் இனியன நேத்து மாலை கைது செய்தோம்….” என்று கூறி மேற்கொண்டு மேலோட்டமாக அவர்களை கைது செய்த முறைய கூறிய அகிலன், அவர்களிடம் விசாரணை நடந்துக்கொண்டு இருப்பதாக தெரியபடுத்தி அவர்களது புகை படங்களையும் வெளியிட்டான்.

 

கடத்தப்பட்டவர்களை பற்றிய தகவல் கேட்டு கேள்வி எழ, “எஸ்… அவுங்கள பத்தி அல்மோஸ்ட் டீடைல் கிடைச்சாச்சு… இதுல பாதி நபர்கள் தான் உண்மையில் கடத்தபட்டவங்க, மத்தவங்க, கடத்தல பார்த்தவங்க, இல்ல அத தடுப்பாங்கனு நினைச்சவங்க… பொண்ணுங்கள் மட்டும் தான் இந்த கூட்டம் குறி வச்சுருக்கு… அவுங்கள தவறான தொழில்ல ஈடுபடுத்திருக்காங்க…

 

அதற்கு ஒத்துழைக்காத பெண்கள, அவுங்கள கடத்தும் பொழுது ஒருவேள அந்த பெண்ணிற்கு தெருஞ்ச நபரும் கடத்தபட்டிருந்தா, அவுங்கள காட்டி ப்ளாக் மெயில் பண்ணி அந்த பொண்ணுங்கள இதுல ஈடு படுத்தி இருக்காங்க…

 

அவுங்களோட இருப்பிடங்கள் நாங்க ஆஷிக் கிட்ட இருந்து தெருஞ்சுகிட்டோம்… பேட்டி இங்க போயிட்டு இருக்க இதே நேரம், என்னோட டீம் அவுங்கள ரெஸ்குயு பண்ணி இருப்பாங்க…

 

பட் அவுங்கள பத்தி எந்த டீடைல்ஸ்யும் நாங்க இங்க வெளியிட மாட்டோம்… இது பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயம்… இது அந்த பெண்களுக்கு ஏற்பட்ட விபத்து. அத அந்த பெண்ணோட குடும்பமும், இந்த சமுதாயமும் புருஞ்சுக்கணும். அவுங்கள ஒதுக்கவோ, வேறு படுத்தி பார்க்கவோ செய்யாதீங்க… இது என்னோட வேண்டுகோள்… ஏ.சி.பி யா இல்ல, ஒரு சக மனிதனா…பாதிக்க பட்ட பெண்களோட அண்ணனா. எங்ககிட்ட அவுங்க எல்லாரோட முகவரியும் இருக்குது… அந்த பெண்களையும், அவர்களின் உறவினர்களையும் நாங்க அங்க சேர்ப்பிபோம்.

 

இதுக்கு மேல மத்த விவரங்கள் கோர்ட்ல ப்ரோடியுஸ் பண்றோம்…. தொடர்ந்து விசாரணை நடக்கும்…

 

அப்புறம் நான் பெர்சனலா ஒருத்தருக்கு தேங்க்ஸ் சொல்லணும். அவரு பொது மக்கள்ல ஒருத்தர். இந்த வழக்குக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாரு…

 

ஆனா அவரு பெயர் வெளியிடறத விரும்பல. அவரோட வார்த்தைக்காக இன்னும் 2 பேர் கூட இதுல மறைமுகமா உதவி இருக்காங்க. இத கண்டுபிடிக்க முக்கிய ஆதரமா இருந்தது அந்த இரண்டு நபர்ல ஒருவரான ஒரு பெண் வரஞ்ச ஓவியம். அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி, வரஞ்சு தந்த பெண் யாருன்னு சொல்லாம நன்றி மட்டும் சொல்றேன்….

 

நெக்ஸ்ட் ஐ சுட் தான்க் அண்ட் ரெஸ்பெக்ட் சத்யம் டெய்லி நியூஸ் பேப்பர், சதா சிவம் சார். ரிபோர்டர் இளமதி அண்ட் சிநேகன்…

 

குட் ஜாப் கய்ஸ்” என்று கூறிய அகிலன் கம்பீரமாக விடைபெற அப்பேட்டி முடிவடைந்தது.

 

அன்று முழுவதும் சூடான பேச்சு மதி மற்றும் அகிலனை சுற்றியே இருந்தது சென்னை முழுவதும். இவ்விருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தன.

 

ஆதித்யன் தனது நண்பன் மற்றும் அவனது மனைவியின் வெற்றியை எண்ணி சந்தோசத்தில் திழைத்துக் இருந்தான். நிலாவோ அகிலனின் மீது மீண்டும் ஒருமுறை காதல் கொண்டாள் அவனின் பேட்டி கண்ட பின்னர்.

 

மதியோ பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் சந்தோசம் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப போகிறார்கள் என்று எண்ணி மன நிம்மதிக் கொண்டாள்.

 

இப்படி அனைவரும் ஒவ்வொரு கோணத்தில் சந்தோஷ களிப்பில் இருக்க சிநேகன் மட்டும் எதையோ சொல்ல வருவதும், பிறகு வார்த்தைகளை எச்சிலாக மாற்றி விழுங்குவதும் என்று இருக்க மதியழகி அதை சரியாக கண்டுக்கொண்டு அவனிடம் கேட்க சிநேகனோ, “அம்மா…எனக்குனு ஒரு சில தூர உறவுகள் இருக்கு… ஆனா நான் இந்த 3 வருசத்துல பாதிநாட்கள் உங்க வீட்ல தான் இருந்து இருக்கேன்… அப்பா அம்மா தவறி 5 வருஷம் ஆகுது… என்னமோ மதி என் தோழி ஆனா பிறகு உங்க 2 பேர தான் அப்பா அம்மா’அ பார்க்குறேன்.. எனக்கு ஒரு பொண்ண பிடுச்சுருக்கு, அத சொல்ல தான்…” என்று தயங்க அனைவரும் அவன் சொல்ல வருவதை யூகித்து நெகிழ்ந்து விட்டனர்.

 

“என்ன பா சிநேக… இத நீ சொல்லனுமா… உனக்கு நானே பொண்ணு பார்க்கனும்னு நினசுருந்தே, நம்ம வீட்டுக்கு போன பிறகு… இப்ப உனக்கே பிடிச்சுருக்குனா, யாருன்னு மட்டும் சொல்லு.. அம்மா உனக்கு கட்டிவைகிறேன் சிநேகா …உனக்காக என்னவேனாலும் செய்வோமடா நாங்க” என்று கூற இளமாறனும் ஆமாம் என்பதாய் தலை அசைத்தார்.

 

அதை கேட்டு அந்த நேரத்தில் அவனது ஒரு மனம் நிறைந்திருந்தாலும், மறு மனம் வாலாட்ட தொடங்கி, “எப்படி உருகி பேசினாலும், இந்த சிநேகானு கூப்பிடுறத மட்டும் நிருத்தமாற்றாங்களே… இப்படியே போய் நிரு வீட்ல சொல்லி, அவுங்க பொண்ண தர மாட்டேன்னு சொல்லிட போறாங்க சிநேகானு பொண்ணு பேரு வச்சவனுக்கலாம் பெண் கிடையாதுன்னு” என்று எண்ணமிட்டு நொந்துக் கொண்டு இருந்தது.

 

“ஹே சிநேகா … யாரு பொண்ணு” என்று மதி கேட்க, சிநேகனோ, “இவளுமா… குடும்பமே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு வார்த்தைக்கு தான் சொல்றாங்களோ… சிநேகானு கூப்பிட்டா எவன் எனக்கு பொண்ணு குடுப்பான்” என்று எண்ணமிட்டபடி, “அது வந்து…” என்று தொடங்கும் முன் ஆதித்யன் “நிரு.. சரி தான சிநேகன்… அதாவது ‘பெர்பெக்ட்’” என்று கூறி முடித்திருந்தான்.

 

“ஆதி சார்…உங்களுக்கு எப்படி…” என்று சிநேகன் கேட்க, இப்போது அனைவரது பார்வையும் ஆதித்யன் மீது படர, ஆதித்யன் கூற தொடங்கி இருந்தான்.

 

“நிரல்யா… இப்ப அகிலன் சொன்னான்ல ஒரு படம் வரஞ்சு தந்த பொண்ணு… சிநேகன் அன்னைக்கு அந்த ராமலிங்கம் வீட்ல நீ விட்ட ஜொள்ளுல அந்த பகுதியில வற்றாத ஜீவா நதி உருவாகிட்டதா நியூஸ்ல படிச்சேன்..அப்படி தான் தெரியும்” என்று கூறி புன்னகைத்தான்.

 

மேலும் அவனே தொடர்ந்து, “நேத்து நீ நிரு-னு செல்லமா சொல்லும்போதே மிச்சத்த புருஞ்சுகிட்டே… சரி பொண்ண எப்ப காட்டப்போற இவுங்களுக்கு… இனிமே தான் வர சொல்லனுமா? இல்ல அல்ரெடி வெளியில் நிற்க வச்சுட்டு வந்துருக்கியா?” என்று ஆதித்யன் கேட்க சிநேகன் விழி விரித்து பார்த்தான் ஆச்சர்யத்தால்.

 

“சரி தான் சார்… வெளில தான் நிப்பாட்டி வச்சுட்டு வந்தேன்…” என்று கூறி முழியை உருட்ட, அந்த நேரம் சரியாக இரவு முழுதும் வராததால் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்த அகிலன் நிரல்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

வந்தவன் நேராக, “மச்சா… இது நீ சொன்ன அந்த பொண்ணுதானா டா? எதுக்கு வெளியில நிக்கிது? என்று ஆதித்யனை பார்த்து கேட்க, அனைவரும் ஒரு சேர சினேகனை பார்த்தனர்.

 

ஆதித்யன் சிரித்துக் கொண்டே, “ஆமாம் மச்சா, அந்த பொண்ணு தான்… பட் என்ன பார்க்க வரல, வந்தது நம்ம எல்லாரையும் பார்க்க” என்று சிரிப்புடன் நடந்ததை சுருக்கமாக கூறினான் அகிலனிடம்.

 

“ஓஹோ, கத அப்படி போகுதா…?” என்று அகிலன் கேட்டுவிட்டு நிலாவின் அருகில் சென்று அமர, நிலா தனக்கு மறுப்பக்கத்தில் நிரல்யாவை அழைத்து அமர வைத்துக்கொண்டாள்.

 

அன்று நிரல்யா, அவளது தோள்வரையிலான கூந்தலை ஒரு பாண்டில் அடக்கி குதிரை வால் போட்டு இருந்தாள். நீண்ட புருவங்களும், பால் போன்ற சர்மமும், கிரீன் குர்தாவில் வந்திருந்தவள் அலட்டாத அழகுடன் கண்ணுக்கு நிறைவாகவும் இருந்தாள்.

 

பெரியவர்களுக்கும் அவளை பிடித்துவிட, நிலாவும், மதியும் அவளிடம் குடும்பம், ஊர், உறவு, படிப்பு, பணி என்று விசாரிக்க தொடங்கினர்.

 

அந்த நேரம் சரியாக ராமு அண்ணா நெய் மணக்கும் கேசரியும், ஆவி பறக்கும் மிளகா பஜ்ஜியும் சதுரமாக வெட்டப்பட்ட வாழை இலையில் எடுத்து சிறு சிறு தட்டுகளில் வைத்து கொண்டு வர அதை பார்த்த நிலாவுக்கு சட்டென்று ஒரு யோசனை உதயம் ஆனது.

 

“மதி, நீ இப்ப சிநேகன் சைடு, நான் நிரல்யா பக்கம்… நிரல் வீட்டுக்கு நம்ம பொண்ணு பார்க்க போறப்ப, நிரல் என்னலாம் செய்வாளோ அத பார் சேஞ் இங்க இப்ப சிநேகன் செய்யட்டும்… இப்ப இந்த கேசரியும் பஜ்ஜியும், நிரல் க்கு சிநேகன் கொடுக்கட்டும்.. பொண்ணு பார்க்க வர முறைய நம்ம உல்டாவா செஞ்சு பார்க்கலாம்…” என்று கூறி உற்சாகத்தோடு நிலா புருவம் உயர்த்த சினேகனை தவிர அனைவரும் ஆமோதித்தனர்.

 

சிநேகனோ மனதினுள், “பயபுள்ளைங்க நம்மல்ல வச்சு ஏதோ என்டர்டைமுக்கு பிளான் செஞ்சுட்டாங்க…” என்று எண்ணமிட்டபடி வெளியே சிரித்த முகமாக இருந்தான்.

 

நிரல்யாவை பார்த்து, இது எல்லாம் வேண்டாம் என்று சொல்லுமாறு சைகை செய்துவிட்டு நிரல்யா மறுத்துக் கூறுவாள், தான் எதுவும் செய்யவேண்டாம் என்று எண்ணிய சிநேகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

ஏனெனில் சினேகனை கெஞ்ச வைப்பது நிரல்யாவிற்கு பிடித்து போகவே அவனின் வேண்டுகோளுக்கு இனங்கவில்லை.

 

இதை அறியாத சிநேகனோ, “மதி…இங்க பாரு இது என்ன விளையாட்டு, நிரல்யா க்கு இதெல்லாம் பிடிக்காது…” என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே சட்டென்று நிரல் உள்புகுந்து, “எனக்கு இது போல விளையாடுறது ரொம்ப பிடிக்கும்… சீக்கிரம் சிநேகன் செய்ய வேண்டிய டாஸ்க் சொல்லுங்க” என்று உற்சாக குரலில் கூற “ங்கே” என்று விழித்துக்கொண்டு மனதினுள், “மச்சா..சாச்சுபுட்டா டா…சாச்சுபுட்டா…ஐயோ எங்குட்டு ஓடுவே…எல்லா பக்கட்டும் ரௌட் அப் பண்ணிட்டாங்களே ” என்று பேசிக்கொண்டு இருந்தான்.

 

அவனது மன புலம்பலுக்கு தடை இடும் விதமாய், “ஒகே சிநேகன், டாஸ்க் ரெடி… இப்ப நீங்க சாதாரணமா கேசரி, பஜ்ஜி னு கொடுக்காம, நம்ம நிரல இம்ப்ரஸ் பண்ற மாதி, ஹார்ட் டச்சிங்கா எதாச்சும் பேசி.. அவுங்கள ப்ரொபோஸ் பண்ணி கொடுக்கணும்…. இது தான் டாஸ்க் ஒகே?” என்று கேட்க அனைவரும் கரகோசித்த குரலில் சரி என்று கூற நிரல்யாவும் வெக்கம் கலந்த எதிர்பார்ப்போடு சினேகனை பார்த்திருந்தாள்.

 

நிலா கூறியதை கேட்ட சிநேகன் வெளிப்படையாக, “ஹப்பா… இவ்ளோ தானா… நான் கூட எனக்கு தெரியாத எதாச்சும் சொல்லிடுவீங்கன்னு நினச்சேங்கே… நல்ல வேலை எனக்கு கவிதை நல்லா வரும், அல்ரெடி நிருமா க்கு என் கவிதைனா ரொம்ப பிடிக்கும்…. ஒகே லெட் மீ டேக் 2 மினிட்ஸ்…” என்று கூறி விட்டத்தையும், நிரலையும் மாற்றி மாற்றி பார்த்தவன் பலத்த யோசனையுடன் இருமுறை அப்புறமும், இப்புறமும் நடந்தான்.

 

மதி மனதினுள், “ச்ச சிநேகன் இந்த அளவு யோசிச்சு பீல் பண்ணி கவிதை எழுதுவானா? நமக்கு இத்தன நாள் தெரியாம போச்சே….” என்று எண்ணமிட்டு கொண்டு இருக்க, ஆதித்யன் ஒரு நம்மட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.

 

 

அவனது சிரிப்பை கண்டு கொண்ட நிலா, மதி, அகில் அவனை என்னவென்பது போல பார்வையால் கேள்வி கேட்க ஆதித்யன் ஒன்னும் இல்லை என்பதாய் தலை அசைத்தான்.

 

 

இப்படி அனைவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்க, நிரல் மட்டும் பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருந்தாள். மெல்ல நிலாவை அழைத்து, “அக்கா, கவிதைலாம் வேணமே…. இந்த டாஸ்க கான்செல் பண்ணிடுவோம் ப்ளீஸ் கா…” என்று கெஞ்சுவது போல கேட்க, நிலவோ அனைவரிடமும், “இங்க பாருங்கப்பா, இந்த நிரல் பொண்ணு, சிநேகன் கஷ்டபடறது பிடிக்காம கவிதை வேணாம்னு சொல்லுது” என்று கூறி சிரிக்க, மதியோ, “அது எல்லாம் முடியாது, நாங்க கவிதை கேக்குற மூட் கு வந்துட்டோம்” என்று கூற நிரல் மனதினுள், “அட லூசுங்களா.. நான் கவிதை வேணாம்னு சொன்னது சிநேகன் கஷ்டப்பட கூடாதுன்னு இல்ல, உங்க காதுல இருந்து இரத்தம் வர கூடாதுன்னு தான்..” என்று எண்ணமிட்டபடி வெளியே மதியிடம், “மதி அக்கா, ப்ளீஸ் நீங்களாச்சும் நான் சொல்றத கேளுங்க…” என்று கூற அவள் சொல்வதை யாருமே கேட்க தயாராக இல்லை என்பதை புரிந்துக்கொண்டு நிரல் மனதினுள், “சரி உங்க விதி…” என்று எண்ணிவிட்டு ஒரு பெரு மூச்சை விட்டாள்.

 

இந்த நேரத்தில், இதை எதையுமே காதில் வாங்காத சிநேகன் எண்ணமிட்டது இவை தான்…..

 

 

“நிருமா பச்சை ட்ரெஸ் போட்டு இருக்கா…சோ அவள கிளின்னு சொல்லலாம்… கோவ கார கிளின்னு சொல்லலாமா…அடடா அப்படி அல்ரெடி பாட்டு வந்துருச்சே…. கிளியே னு சொன்ன அதுக்கு ர்ய்மிங்கான வார்த்த னு பார்த்தா கிளியே, மயிலே, வெயிலே, செயுள்ளே… இல்ல வெளியே.. ஹா இது தான் சரியா இருக்கும்” என்ற எண்ணமிட்டு கொண்டு இருந்தவன், இறுதியாக மேஜை மீதிருந்த கேசரியை பார்த்து முகத்தில் பல்ப் எரிய வேகமாக அனைவரிடமும் “ஐ அம் ரெடி” என்று கூறினான்.

 

அனைவரும் அவனது கவிதைக்கு காத்து இருக்க, நிரல்யாவின் முகம் அஷ்டகோணல் ஆனது…..

 

அவன் நின்ற இடத்தில் இருந்து மேஜை அருகில் வந்தவன், கையில் ஒரு மிளகா பஜ்ஜியை எடுத்துக் கொண்டு முழங்காலில் நிரல் முன் மண்டியிட்டு ஆங்கில பட பாணியில், ரோஜாவிற்கு பதில் மிளகா பஜ்ஜி கையில் ஏந்தி கவிதையை கூற தொடங்கினான்.

 

 

 

குதிரைவால் போட்ட

கொண்டை கிளியே

என் கொண்டை கிளியே

 

உன் கூந்தல் அசைவினில்

என் நெஞ்சம் எம்பது வெளியே

சத்தியமாய் எம்புகிறது என் நெஞ்சம் வெளியே

 

சுட சுட வந்துவிட்டது இனிப்பான கேசரி

சூட்டோடே என் காதலுக்கு சொல்லிவிடு நீ சரி

 

 

 

என்று கூறி முடிக்க, இவனை பற்றி அறிந்த நிரல்யா அனைவரது முகத்தையும் பார்க்க அனைவரும் அந்த கவிதையின் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாது அப்படியே இருக்க நிரலோ மனதினுள், “இதுக்கு தான் அப்பவே சொன்னேன்..” என்று எண்ணமிட்டாள்.

 

சிநேகனின் புலமையை அறிந்திருந்த ஆதித்யன் மட்டும் எழுந்து கை தட்ட, அனைவரும் ஆதித்யன் கை தட்டியதால் பார்த்து, அவர்களும் கை தட்டிக் கொண்டே அடக்கமுடியாமல் சிரித்தனர்.

 

அனைவரும் சிரிப்பதை பார்த்த சிநேகன், “எப்ப நான் கவிதை சொன்னாலும், ஏன் எல்லாரும் சிரிக்கிறாங்க…” என்று தீவிரமாக யோசிக்க, நிரல் இந்த கவிதை க்கு முற்று புள்ளி வைக்க எண்ணி அவன் கையில் இருந்த மிளகா பஜ்ஜியை வாங்கிக்கொள்ள, அவள் அருகில் வந்த நிலாவும், மதியும் நிரலின் காதோரம், “நீ ஏன் வேண்டாம்னு கதறுனணு.. இப்ப புருஞ்சுக்கிட்டோம்” என்று கூற நிரலோ சிறுத்துக் கொண்டே, “பட் இட்ஸ் டூ லேட்” என்று கூறினாள்.

 

அதன் பின் அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டே இனிப்பையும் சந்தோசத்தையும் பகிர்ந்துக்கொள்ள சிநேகன் மற்றும் அகிலன் மட்டும் ஆதித்யனை பார்த்து மனதினுள் உவகை கொண்டனர்.

 

அகிலனோ, தனது நண்பன் அனைத்தையும் செய்துவிட்டு இவை அனைத்துக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லாதது போல அமைதியாக இருக்கும் இவனை நண்பனாக அடைந்தது அவனது பெருமை என்று நினைக்க, சிநேகனோ மனதினுள், “எல்லாத்தையும் செஞ்சுட்டு, அத பத்தி ஒருவாரத்த கூட பேசமாற்றாறு… நல்லத செய்யணும் ஆனா சொல்லி காட்ட கூடாதுன்னு ஆதி சார் ட்ட இருந்து இப்ப நானும் கத்துக்கிட்டே… என்னோட மதி, ஆதி சார் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும்….” என்று எண்ணமிட்டான்.

 

ஆனால் சினேகனே அறியாத ஒன்று, மதியின் தந்தையிடம் கூறியது போல மதியை இருமுறை காத்ததும் ஆதி தான் மறைமுகமாக என்று. அவன் கூறிய கூற்று உண்மை ஆனது.

 

இதற்கிடையில் ஆதியின் அருகே வந்த அகிலன், ஹர்ஷினியை காப்பாற்றிவிட்டதாக கூறி, எல்லாம் சுகமாய் முடிந்தது எனக் கூறினான்.

 

அதன் பின் அனைவரும் அவர் அவர் பணிக்கு கிளம்ப ஆயுத்தமாக, சிநேகனிடம், தான் சென்று அந்த பாதரை பார்த்து விட்டு அலுவலகம் வருவதாக மதி கூற, அதற்கான காரணத்தை ஆதித்யன் கேட்க மதியோ ஆதியிடமும், அனைவரிடமும், “அந்த பாதர், அன்னைக்கு இனியனையும் ஆஷிக்கையும் பத்தி ரொம்ப பெருமையா பேசினாரு…. அவரும் இத பார்த்திருந்தா நிச்சயமா அவரு வருத்த படுவாரு… இந்த இரண்டு பேரு பண்ணின காரியத்தால, மத்த பசங்க மேலயும் நம்பிக்கை இல்லாம போயிடுமோனு பயமா இருக்கு க்ரிஷ்ணவ்… அதான், அவர ஒரு முறை பார்க்கனும்னு தோனுது…” என்று கூறினாள்.

 

அவள் விருப்பத்தை மதித்த ஆதித்யன், அவளை அங்கு அழைத்து தானே செல்வதாக கூற, நிரல்யாவையும் வீட்டில் இறங்கி கொள்ளுமாறு கூற நிரல் செல்வதால் சிநேகனும் அவர்களுடையே கிளம்ப ஆயுத்தமானான்.

 

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு நால்வரும் ஆதியின் வண்டியில் பயணமானார்.

 

அன்று மதி சென்ற அதே ட்ரஸ்டில், அந்த பாதர் எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டு இருக்க அதே நேரம் சரியாக இந்த நால்வரும் உள்ளே நுழைந்தனர்….

 

 

மதி அவரை பார்க்க வந்த காரணத்தை தயங்கி தயங்கி கூற, அதற்கு பாதரோ, “இல்ல மா… நீ என்ன நினைச்சு வருத்தப்படாத…. நான் இதுக்கெல்லாம் நிச்சயம் உடைஞ்சு போகமாட்டேன்… இப்ப நான் எங்க கிளம்புறேன்னு தெரியுமா?  இனியனையும், ஆஷிக்கையும் பார்க்கத்தான்… அவுங்க தவறான பாதையில போய்ட்டாங்க… ஆனா எனக்கு அந்த கர்த்தர் மேல நம்பிக்கை இருக்கு… அவுங்கள பார்த்து பேச போறேன்… நிச்சயம் மனம் வருந்தி கர்தர்ட்ட மன்னிப்பு கேட்டு திருந்துவாங்க… அதோட இந்த 2 பேர வச்சு நான் என் நம்பிக்கைய கை விடமாட்டேன் மதி… பாவிகளை ரச்சிக்க பிறந்தவர் ஏசு… அவர் வழியில நடக்குற நா, அவரோட குழந்தைங்க பண்ற தப்ப திருத்தத்தான் பார்ப்பேன்… நானே அவுங்கள வெறுக்க மாட்டேன்… அப்புறம் நீ செய்த வேலை ரொம்ப நல்ல விஷயமா… காட் ப்ளஸ் யூ சைல்ட்” என்று அப்போதும் புன்னைகை மாறாமல் அவர் கூறிவிட்டு மேலும் ஒரு சில வார்த்தைகள் கூறியவர், மெல்ல, இனியனை சந்திக்க முதுமையின் காரணமான சிறு தள்ளாட்டத்துடன் நடந்து சென்றார்.

 

அவரது பேச்சை கேட்டு நெகிழ்ந்து நின்றனர் நால்வரும்….

 

ஆதித்யன், மதியின் கைகளை ஆதரவாக பிடிக்க, சிநேகனோ, “ச்ச இவரு என்ன டச் பண்றமாதி பேசிட்டாரு… இவரு எவ்ளோ நல்லவரு… இவருக்கு நான் எதாச்சும் பண்ணியே ஆகணும்” என்று கூறியவன் மேலும் அவனே தொடர்ந்து, “ஹா .. அவருக்காக நான் ஒரு கவிதைய பரிசா எழுதுறேன்னு” என்று கூறவும் அனைவரும் ஒரு சேர, “வேண்டாம் சிநேகன்” என்று கூறி தங்கள் தங்கள் காதுகளை மூடினர்.

 

அந்த சந்தோசத்தோடே அவர்கள் மீண்டும் பயணமாக, அப்போது மதிக்கு, அடுத்த வழக்கு பற்றி பேச, சதா சிவம் அழைத்தார்…. அதை பேசி முடித்தவள்,  அப்பொழுது தான் நினைவு வந்தவளாக ஆதித்யனிடம், “ஏங்க…நீங்க என்கிட்ட இன்னும் ஒரு மொபைல் கொடுத்தீங்களே… அது எதுக்குன்னு அப்ப கேட்கலதான்… ஆனா இப்ப என்னமோ தெருஞ்சுக்கனும்னு தோணுது, ஏன் எப்பயும் அதை என்கூடவே வைத்திருக்க சொன்னீங்க…” என்று கேட்க, ஆதியோ ஒரு சிறு சிரிப்புடன், “உனக்கு இருந்த ஆபத்து நான் எதிர்பார்த்ததுதான்… அப்படி உனக்கு ஆபத்துனா நீ கையில் வைத்திருக்கும் மொபைல தான் எடுப்பாங்க… இப்படி ஒன்னு இருக்குறது கண்டிப்பா தெரியாது. உன்ன சுத்தி இருக்கிற எல்லாருக்கும் நல்லாவே தெரியும், உன்கிட்ட ஒரு மொபைல் தான்-னு… சோ உனக்கு பிரச்சன வந்தாக்கூட நீ எங்க இருக்குறன எனக்கு ஈசியா ட்ராக் பண்றதுக்காக அதுல ஒரு ஆப் போட்டு அதை என் மொபைல் கூட கன்னெக்ட் பண்ணி இருந்தேன்… ஆனா அது இப்ப தேவையே இல்லாம நீ  சேப் ஆகிட்ட… ஆனா உன்னோட வேலைக்கு இது எப்பவும் தேவை மதி…” என்று கூறி சிரித்தான்.

தனக்காக யோசித்து செயல்பட்ட கணவனை எண்ணி மதி மனம் கொள்ளா சந்தோசம் அடைந்தாள். அந்த மனநிறைவோடு மதி, ஆதித்யனை காதலாக பார்க்க, மற்ற இருவர் அறியாமல் ஆதித்யன், இளமதியின் கைகளை எடுத்து அவன் கைகளுக்குள் வைத்திருந்தான்……. அவளும் வாகாக, அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்து இன்பமான சிறைக்குள் சிக்கவைத்தாள்.

 

இனிதான பயணம் தொடங்கியது அவர்கள் வாழ்விலும்…………… 

 

முகிழ்ந்தது

 

 

Advertisement