Advertisement

முகிழ் –  32

 

 

“என்ன ஆதித்யன்?… இல்ல இல்ல க்ரிஷ்ணவ்… அப்படி தான உன் பொண்டாட்டி உன்ன கூப்பிடுவா…. உங்க இரண்டு பேருக்கும் என்னதாண்டா ப்ரச்சன ? நான் என் போக்குல கொஞ்சம் பணம் சேர்க்க இந்த வேலைய பார்த்தே… அதுல எதுக்கு டா உன் பொண்டாட்டி மூக்க நுழைச்சா ? அவள காதலிக்கிறனா நீ உன் வேலைய அதோட நிப்பாட்டி இருக்கணும், காதலு பொண்டாட்டின்னு அவளுக்காக அவ வேலைய பண்றேன்னு எதுக்கு என் பிரச்சனையில தல இட்ட? என்ன இவ்ளோ அமைதியா இருக்க ? நான் என்ன பேசுறேன்னு புரியலையா? இல்ல அதிர்ச்சில என்ன மொழி பேசுறேனே புரியாம போயிடுச்சா ?

 

 

ஒ, நான் சொல்றத உன்னால நம்ப முடியல, நம்ம தான் சிநேகனு ஒரு வால அவ பின்னாடி கட்டி விட்டோமே… அத மீறி இவன் எப்படிடா தூக்கிருப்பானு நினைக்கிறியோ ” என்று அசட்டையாகவும் தெனாவெட்டாகுவும், குரலில் திமிர் மிதம்மிஞ்சி இருக்க அவனது இடது காலை தூக்கி வல கால் மேல் போட்டபடி இனியன் பேச அகிலனின் கை முஷ்டி இறுகியது. ஆதித்யனோ அமைதியாக மௌனம் காக்க, அகிலனே இனியனிடம், “என்ன டா ? மாட்டிக்கிட்டோம், இனி தப்ப முடியாதுன்னு ஏது ஏதோ உளருரியா” என்று உறும இனியன் நக்கல் இழையோட சிரித்தான்.

 

 

“என்ன அகிலன் சார், இந்த டைம் ல போய்…. பொய் சொல்லி விளையாடா நான் என்ன ஆதித்யனா ? அவன் தான் ப்ரச்சன தலைக்கு மேல இருக்கும் போதும் செஸ் விளையாடுவான்.. நான், காரணம் இல்லாம ஒரு சுண்டு விரல் கூட நகர்த்த மாட்டே.. உங்களுக்கு இப்படி லாம் சொன்னா புரியாது….என்ன நடந்ததுன்னு டீடைல்டா சொன்னா தான் புரியும் போல” என்று கூறியவன் அந்த 5 மணி நேரத்தில் என்ன நிகழ்ந்தது என்று விவரிக்க தொடங்க இனியனது பார்வையில் காட்சி விவரிக்க பட்டது.

 

‘ ஆதித்யன் மதிக்கு காவாலக இருப்பதை அறிந்திருந்த இனியன், காரணம் இல்லாமல் மதியை கடத்தும் வரை ஆதி காத்திருக்க மாட்டன் என்றும் , அப்படி அவன் காத்திருப்பதே இனியனுக்கு சந்தேகத்தையும் விதைத்திருக்க, எங்கே கடத்தலுக்கு பயன்படுத்திய வண்டியை தொடர்ந்து விவரங்களை சேகரிக்க திட்டமிட்டு இருப்பானோ என்ற ஐயம் கொண்ட இனியன், தானே முந்திக்கொண்டு மதியை அந்த ஆம்புலன்ஸ் யில் ஏற்ற விடாமல் தடுத்தான்.

 

 

தடுத்துவிட்டு, மதியிடம் பேசி இருந்த நொடி அவள் எங்கே செல்கிறாள் என்ற விவரம் கேட்டறிந்திருந்தான் இனியன், சிநேகன் மதியை வந்து அழைத்து செல்லும் முன்.

 

 

மதியை கடத்தவிடாமல் தடுத்திருந்தாலும், இனியனது மனதில் ஏதோ ஒன்று நெருட, தொடர்ந்து ஆஷிக்கிற்கு அழைத்தும் பயனற்று போகவே, சிறிது நேர யோசனை பிறகு, இனியனுக்கு ஒரு திட்டம் உருவாக, அதை செய்யல் படுத்த எண்ணிய இனியன் அதற்கு ஆள் தேவை என்பதை மனதில் நிறுத்தி யோசித்தான். காரணம்  அனைத்து கட்ட அடியாலும், கூலிப்படையும் ஆஷிக்கின் தொடர்பிலும், கட்டு பாட்டிலும் இருக்க இப்போது புதிதாக ஒருவனை பிடிப்பது உசிதமில்லை என்றும்,  கிட்ட தட்ட ஆதித்யன் தன்னை நெருங்கிவிட்டான் என்பதை இந்த கடத்தல் நடக்கவிருக்கும் முன்னமே ஆதித்யனுக்கு அறிந்திருப்பதே அதற்கு சான்று என்ற எண்ணம் உதிக்கவே வேகமாக இதில் இருந்து தப்பிக்க வழி யோசித்தான்.

 

அவன் நினைவில் சட்டென்று பழனி வேல் நினைவு வர, அவருக்கு அழைத்து அவரது மகளின் புகை படம் பற்றி பேசி, அவருக்கு நெருக்கடி கொடுத்து, நம்பகமான 3 அடி ஆட்களை கொண்டு அவன் திட்டத்தை நிறைவேற்ற யுக்தி வகுத்தான். பழனிவேல் குடுத்த 3 நபர்களிடமும் தன்னை மறைக்காது, வெளிபடுத்திக்கொண்டான் இனியன். ஏனெனில் எப்படியும் நெருங்கிவிட்டார்கள், இனி ஒவ்வொரு தகவலும் பழனிவேலுக்கு சென்று, அவனுக்கு வர தாமதமாகும் என்றும், அதற்கு அவனே நேரடியாக களத்தில் இறங்கலாம் என்றும் முடிவு செய்து அவனது அழைபேசி எண்னை அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டான்.

 

மதி கிளம்பிய முப்பது நிமிடங்களில் இவை யாவும் செய்து முடித்திருந்தவன் மதி சொன்ன பகுதியில் அம்மூவரையும் மதியை தேடும் பணியில் ஆழ்த்தினான்.

 

மதிக்கு அழைத்து, அவள் கீழே விழுந்ததனால், அவள் உடல் நலம் பற்றி விசாரிப்பவன் போல அவள் தற்போது இருக்கும் இடம் கேட்க, மதியும் கூற அதை கொண்டு அம்மூவரையும் மதியின் நிழலாக தொடர சொல்லி குறிப்பிட்ட நேரத்தில் அவளை கடத்திவிடுமாறு கட்டளையிட்டான்.

 

அந்த நொடி முதல், மதி செய்த வேலைகள் சந்தித்த நபர்கள் யாவும் இனியனின் செவிக்கு செய்தியாக வந்துக்கொண்டே இருந்ததன.

 

“மதி, இந்த வீடுதானா ?” என்று சிநேகன் மதியை கேட்க, அவளும் சிந்தனையில் இருந்து வெளிவந்தவளாகா ஆமாம் என்பதற்கு அறிகுறியாய் தலை அசைத்தாள்.

 

அந்த வீட்டின் வெளிதாழ்வாராம் போன்ற அமைப்பு இருக்க, அங்கே அந்த வீட்டின் நபர்களிடம் சென்று பேச அவர்கள் சற்று முரட்டுத்தனமாகவே அவர்களிடம் நடந்துக் கொண்டனர்.

 

ஆயினும், மதியின் பேச்சு சாதூரியத்தால் அவர்களிடம் விஷயத்தை கறக்க, அவர்களின் மனதை கரைத்துக் கொண்டு இருந்தாள் மதி.

 

காணாமல் போன பெண்ணை அந்த வீட்டு நபர்கள் ஒருவனுடன் ஓடி போய் விட்டதாக எண்ணி, அவர்களின் மானம் பறிப்போய் விட்டதாக அப்பெண்ணிற்கு வசை பாடினர்.

 

அப்பெண் ராமலிங்கம் என்று சொல்ல படும் அதாவது, நிரல்யாவின் வீட்டின் சொந்தகாரனுடைய மகனை காதலித்து அவனையே திருமணம் செய்யும் நோக்கோடு ஓடி சென்று விட்டதாகவும் அதற்கு அந்த ராமலிங்கமும் உடந்தை என்றும் அவர்கள் கொந்தளித்தனர்.

 

ஆனால் அவரது (ராமலிங்கம்)  வீட்டில் முன்பே விசாரித்திருந்த மதிக்கு இந்த வீட்டினர் சொல்வதில் உடன்பாடு இல்லாமல் போனது. ஆயினும் அதை வெளிக்காட்டாது, அவர்களின் மகளின் புகை படம் கேட்க அதை அவர்கள் கொடுக்க மறுத்தனர்.

 

அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்மணி, “ஏ மா அந்த ஓடுகாலி, ஓடி போய் எங்க மானத்த வாங்குனா, நீ உன் சோளிக்கு, படத்த பத்திரிக்கையில போட்டு மிச்ச இருக்க கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்க பாக்குறியா?.. எந்துருச்சு போ மா ” என்று கூறிவிட்டு விருட்டென்று அவர்கள் உள்ளே சென்றுவிட மதி செய்வதறியாது அங்கே நின்றாள்.

 

நிகழ்ந்தவைகளை பார்த்த சிநேகன், மதிக்கு உதவ எண்ணி, வண்டியில் அவளை ஏற்றிக்கொண்டு, “மதி, அந்த பொண்ணு போட்டோ தான? அது ஆதி சார் ஏற்கனவே கைப்பத்திட்டாரு… இது மட்டும் இல்ல உனக்காக மறை முகமா அவரு நிறைய செஞ்சுருகாறு… ஆனா அது எல்லாம் அவரே சொல்றது தான் சரி… இத கூட நான் சொல்லி இருக்க மாட்டேன்… பட் அந்த போட்டோ காக தான்… அது உங்க வீட்ல தான் இருக்கு, அன்னைக்கு நான் கொடுத்தேன் ல ஒரு சார்ட்,அதுல இருக்கும்.. நீ போய் பாரு” என்று சிநேகன் கூற, சிநேகன் கூறிய யாவும் மதியின் மனதில் கேள்வி அம்புகளை தொடுத்துக்கொண்டு இருந்தது.

 

அவர்கள் முன்னே செல்ல சற்று ஆள் அரவம் அற்ற பகுதியில் சினேகனை தாக்கி, மதியை தூக்க எண்ணிய அம்மூவரும் அவர்களை பின் தொடர சிநேகனது வண்டி ஓட மறுத்து இடையில் நின்றுவிட அதை சரிப்பார்க்க அவன் ஓரமாக வண்டியை நிறுத்த, மதியும் இறங்கி காத்திருந்தாள்.

 

ஆனால் அந்த பகுதி சற்று ஜன நெருக்கடி இருக்கவே, அம்மூவரும் அவர்களை நெருங்கவில்லை.

 

அப்போது, மதியின் அருகில் ஒருவர் வந்து, “எப்படிமா இருக்க ?” என்ற குரலில், மதியுடன் சேர்ந்து சிநேகனும் திரும்பி பார்த்தான்.

 

அங்கே வெள்ளை நிற ஆடையில், சாந்தம் முகத்தில் தழுவ, மாறாத புண் சிரிப்போடு நின்று இருந்த பாதரை பார்த்த மதி முகத்தில் ஆச்சர்யம் கூட்டி, “ஹெலோ பாதர், நல்லா இருக்கீங்களா?, நான் நல்லா இருக்கேன்…” என்று உதட்டில் மெலிதாக புன்னகை ஓட பதில் கூறினாள் மதி.

 

 

“எஸ் மை சைல்ட், கர்த்தர் என் சுகத்த பார்த்துகிறார்… நீ என்ன மா இங்க ? ” என்று கேட்க, வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காத்திருப்பதாக மதி கூற அதற்கு அவரோ, “சரி மா… தம்பி பார்க்கட்டும், அதுவரை இங்க தான் எங்க டிரஸ்ட் இருக்கு… அங்க வந்து வெயிட் பண்ணுமா.. ஏன் ரோடு ல நிக்கிற? வா மா” என்று கூற அதை மறுக்க முடியாமல் சிநேகனிடம் சொல்லிவிட்டு பாதரோடு நடந்தாள்.

 

அவரோடு நடந்தவள் சிறு அடிகளிலே அவர் சொன்ன டிரஸ்ட் வரவும் அதற்குள் பிரவேசித்தாள். அவளை பின்தொடர்ந்தவர்கள் சினேகனை விட்டு மதியின் பின்னால் பதுங்கி பதுங்கி சிறு இடைவேளை விட்டு நடக்க தொடங்கினர்.

 

 

அந்த இல்லத்திற்குள் நுழைந்தவள் முன்னறையில் பாதரோடு ஏதோ பேசினாள். பாதர் ஏது ஏதோ புகைப்பட புத்தகம், சான்றிதல் என்று காட்ட அதை பார்த்த மதியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. ஓரிருமுறை இனியன் என்ற சொல்லும், ஆஷிக் என்ற பெயரும் பக்கவாட்டு ஜன்னல் வழி பதுங்கி இருந்த அம்மூவரும் கேட்க நேர்ந்தது.

 

 

அவள் வெளி வரும் போது, அவளை தூக்குவதற்கு சமயம் பார்க்க, அதை கெடுக்கும் விதமாகா சிநேகன் சரியாக தனது இரு சக்கர வாகனத்தோடு வந்து சேர்ந்தான்.

 

 

ஏனோ வரும் பொழுது மதி பரபரப்புடன் காணப்பட்டது போல அம்மூவருக்கும் தோன்றியது. சிநேகன் வரவும், பாதரிடம் சொல்லிக்கொண்டு ஒரு சில புகைப்படத்தை பெற்றுக்கொண்டு அவள் வெளியேறுவதை அவர்கள் மறைவிடத்தில் நின்று கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

 

 

சினேகனுடன் வண்டியில் பயணித்தவள், வண்டியின் வேகம் அதிகரிக்கப்பட்டது போல தோன்ற துரிதமாக ஏது ஏதோ சந்தில் வளைந்து வளைந்து சென்றவர்கள் இறுதியில் ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றனர். காவலாளி கதவை திறக்க, சிநேகன் அவளிடம் சொல்லிவிட்டு அவசரமாக அவ்விடம் விட்டு நகன்றான்.

 

 

இவை அனைத்தும் இனியனுக்கு வந்து சேர்ந்தது. அவனின் கட்டளை படி சிநேகன் அகன்றாலும், மதியின் வரவை நோக்கி அம்மூவரும் அங்கே காத்திருக்க தொடங்கினர். சரியாக அரை மணி நேரத்தில் மதி வெளி வரவும் இனியனுக்கு அது தெரிவிக்கப் பட்டது.

 

 

அவள் வீட்டை விட்டு வெளி வந்து சில தெருக்களை தாண்டி இருந்த நேரம், அவர்கள், அவளை வழிமறித்து மயக்க மருந்தை அவள் நாசியில் வைத்து அழுத்த, சில நொடிகளில் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றாள் மதி.

 

மயங்கியவளை இனியனது திட்டப்படி கடத்தினார்கள்……’

 

இவை அனைத்தையும் விவரித்த இனியன் வஞ்சக சிரிப்புடன், “இப்ப நம்புறீங்களா ஏ.சி.பி சார் ?… நீங்க நம்பினதும் இதோ உக்காந்து இருக்காரே மிஸ்டர். ஆதித்யன் அவருக்கும் புரியும் படி சொல்லுங்க…

 

உன் பொண்டாட்டிக்கு என்ன பெரிய பெண் புலின்னு நினைப்பா…மதி எப்ப பாதார பார்த்தாளோ, அப்பவே புருஞ்சுகிட்டேன்…நிச்சயம் ஆஷிக்க பத்தியும் என்ன பத்தியும் அங்க ஏதோ தெருஞ்சிருப்பானு, அதுக்கு மேல யும் இவள விட்டா என் மொத்த பிளானும் கொலாப்ஸ் ஆகிடும்….” என்று ஆழ்ந்த குரலில் இனியன் கூற அகிலன், “ஏன்டா… இத்தன தப்ப பண்ணிட்டு இப்ப இவ்ளோ தைரியமா ஏதோ தப்பே பன்னாததுப் போல பேசுற.. ஏதோ நீ நாட்டு நல திட்டம் போட்டதுப் போலவும், அத நாங்க கொலாப்ஸ் பண்றமாதியும், உன்னலாம்……….” என்று கூறி பற்களை நற நறவென கோவத்தில் கடிக்க, கை முஷ்டி இறுக பேசினான்.

 

 

அதற்கு வெகு வெகு அலட்சியமாக, “தப்பா? நான் என்ன சார் தப்பு செஞ்சே… உங்களுக்கு தெரியுமா? தம்மு, தண்ணி, ஏன் ஒரு பாக்கு கூட சாப்பிட மாட்டே சார், அவ்வளவு ஏன் இத்தன பொண்ணுங்கள தூக்கி இருக்கேனே , இதுவர ஒரு பொண்ண ஆச்சும் நான் தொட்டு இருப்பேன்னு சொல்லுங்க… நெவர்… ஐ அம் எ டீடோடளர் ஏ.சி.பி சார்…. என்னோட பிசினஸ் க்கு பணம் சேர்க்கணும்னு நினச்சே… அவ்வளவு தான்… இதுக்கு போய் இத்தன பேரு கிளம்பி வரீங்க.. ஒகே கூல்…

 

இப்பயும் எதுவும் கெட்டு போகல, என்னையும் என் நண்பன் ஆஷிகையும் விட்ருங்க… நாங்க போயிடுறோம், பெரிய பிசினஸ் மேனா வருவோம்…

 

உங்க மதிய நான் விட்டுறேன்.. இது தான் டீல் … என்ன சொல்றீங்க ஏ.சி.பி. சார், உங்க நண்பன் ட்ட கேட்டு சொல்லுங்க…

                                                                          

‘செக்’ க்கு  பதில் சொல்லுங்க, கேம் ளையும் ? உங்க மதிக்கும் செக் வச்சதுலையும்” என்று கூறி இடது கை கொண்டு அவனது தலை முடியை ஸ்டைலாக கோதிக்கொண்டான்.

 

அவர்களது பேச்சை தடைசெய்ய வந்தது போல் ஆதித்யனின் அழைபேசி அடிக்க அனைவரது கவனமும் அவனது அழைபேசியில் பதிந்தது. அழைத்தது சிநேகன் என்பதை அறிந்த இனியன், ஆதித்யனிடம், “ஹ்ம்ம் பரவா இல்லையே… இத்தன நேரம் நான் சொல்றது உண்மையா பொய்யான்னு நிர்ணயிக்க முடியாமா அமைதியா இருந்த, இப்ப உனக்கு நம்பிக்கையானா ஆளே கூப்பிடறான்… பேசு எடுத்து பேசு… உன் பொண்டாட்டிய காணோம்னு பதறுவான், அவன் ஒப்பாரிய கேட்டுட்டு என்கிட்டே டீல் பேச வா…. அட எடுத்து பேசுங்க க்ரிஷ்ணவ் சார்” என்று நக்கல், குரலில் இழையோட இனியன் கூற, ஆதித்யன் அவன் பேசிய எதையுமே காதில் வாங்காமல் சட்டை செய்யாது பொத்தானை அழுத்தி காதுக்கு குடுத்தான்.

 

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ ஆதித்யன் வாயில் இருந்து எந்த ஒரு வார்த்தையும் உதிரவில்லை. இறுதியாக, “சரி… நான் பார்த்துகிறேன்…” என்று மட்டும் கூறி கைப்பேசியை அணைத்தவன் கடை இதழில் ஒரு சிறு வெற்றி சிரிப்பை உதிரவிட்டவன் காய்களை நகர்த்தி ஒரு சில நிமிடங்கள் மௌனம் சாதிதான்.

 

அவனது செய்கைகளையும், முகபாவத்தையும் பார்த்த இனியன் முகத்தில் முதல் முறையாக குழப்பம் பரவ தொடர்ந்தது அந்த சம்பாசனையில்.

 

அந்த குழப்பம் அதிகநேரம் இனியனது முகத்தில் நீடிக்க விடாது ஆதித்யனின் செய்கை இருந்தது.

 

“நீ விளையாடுன ஆட்டத்தை வச்சு பார்க்கும் போது உனக்கு செஸ் தெரியும்னு நினச்சே… ஆனா அது தப்பு போல இனியன். செக் வச்சா, நம்ம அத பிரேக் பண்ணி மூவ் பண்ணலாம், ஆனா செக் மேட் வச்சா தான் ஆட்டம் க்ளோஸ். இப்ப நான் வைக்கிறது உனக்கு செக் இல்ல. செக் மேட்… ஆட்டம் க்ளோஸ் இனியன்” என்று கூறிக்கொண்டே காய்களை நகர்த்தினான் அரிமாவின் தோரணைக்கொண்ட ஆதித்யன்.

 

ஆதித்யன் பேசுவது இப்போது இனியனுக்கு புரியாமல் போக, “நீ என்ன லூசா டா ?, உன் பொண்டாட்டிய…” என்று தொடங்கி வார்த்தையை முடிக்கும் முன் ஆதித்யனது கை இனியனது கன்னத்தில் பதிந்திருந்தது.

 

ஆதித்யன் அறைந்த சப்த்தம் நான்கு பக்க சுவர்களிலும் பட்டு எதிரொலித்திருந்தது. இனியன் சுதாரிக்கும் முன் இருக்கையைவிட்டு புயலென எழுந்த ஆதித்யன் தனது கை சட்டையை முழங்கை வர மடக்கிவிட்டவன் கம்பீரமான தோரணையுடன் அவனது நீண்ட கைகளினால் பளார் பளார் என்று இடை விடாது இருமுறை அரைய இனியனோ இத்தனை நேரம் பிடித்து வைத்த பொறுமையை கை விட்டு, “ஆதித்யன்….” என்று கோவம் எல்லை மீற உறுமினான்.

 

“ஹ்ம்ம் யா.. ஆதித்யன் தான்… என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா? உன்ன ஆடவிட்டு வேடிக்க பார்த்தது, உன் ஆட்டத்த முடிக்க தான், உனக்கு அடங்கி போக இல்ல…” என்று கூறி கண்ணால் அகிலனிடம் சமிக்கை காட்ட, அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் கம்பீரத்தை உடையிலே தரும் காக்கி உடுப்பு போட்ட 4 அதிகாரிகள் பிரவேசித்தனர் அந்த அறைக்குள்.

 

“அரெஸ்ட் ஹிம்” என்று கம்பீரமாக அகிலன் கூற அவன் கட்டளைக்கென காத்திருந்த அந்த நால்வரும் இனியனை கைது செய்தனர்.

 

இனியனை அழைத்து போக முற்பட, அந்த நிமிடத்திலும் காவலாளிகள் கைது செய்த நேரத்திலும், கைது செய்யபட்டதுக்கான வருத்தம் துளியும் இல்லாது ஆதித்யன் அரைந்ததை எண்ணி, அடிப்பட்ட நாகமாய் சீறினான் ஆதித்யனிடம்.

 

கையில் விலங்கிடப்பட்டு  இருந்த நேரத்திலும் குரல் உயராமல், பயம் என்பது குரலில் லவலேசமும் இல்லாமல், ஆதித்யன் தனது திட்டத்தை முறியடித்துவிட்டானா? என்ற கேள்வியோடும் தன்னை ஒருவன் கை நீட்டி அரைந்ததனால் வந்த உக்கிரத்திலும் உஷ்ணத்துடன் இனியனது குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

 

“என்ன பண்ணின ஆதித்யன்… என்ன பண்ணின சொல்லு… ” என்று அவன் கூறிய வார்த்தைகளில் இருந்தே புதிதாய் வந்தவர் கூட உணர்ந்துகொள்ளும் அளவு உஷ்ணம் தொனிக்க கேட்க, ஆதித்யனிடம் இருந்து சிரிப்பு மட்டுமே பதிலாய் வந்தது.

 

ஆதித்யனது முக பாவத்தையும், சிரிப்பையும் கண்ட இனியன் ஒருமுறை அவனது கண்களை அழுந்த மூடி திறக்க அவனது கை அவனது கட்டுபாட்டில் இல்லாமல் ஒருமுறை கை விரல்கள் இறுக மூடி விரிந்தன. இனியனது தாடை இறுகுவதில் இருந்தே அவனது மனோபாவத்தை உணர்ந்துக்கொண்ட ஆதித்யன், இனியனிடம் பேச தொடங்கினான்.

 

“அது வந்து இனியன், நீ என்ன செய்தனு சொல்லிட்ட…அந்த அஞ்சு மணிநேரத்துல… ஆனா நான் என்ன செஞ்சேன்னு நீ தெரிந்துக்காம விட்டுட்டியே, ஆதாவது நீ என்ன இன்னும் சரியா புருஞ்சுக்கல….

 

நீதான்-னு கட்டம் கட்டி உன்ன தூக்கணும்னு நினைச்சு தான் ஆம்புலன்ஸ் பிளான் போட்டேன்… அதுல நீயே வந்து மாட்டிக்கிட்ட. நீதான்-னு தெருஞ்ச பிறகும் 5 மணி நேரம் சும்மா விட்டுட்டு கை கட்டி நின்னு வேடிக்க பாக்குறேன்னு நினைச்சியா?

 

இன்னைக்கு காலையில நடந்த விஷயத்துக்கு அப்புறம் நீ நிச்சயமா மதிக்கு ஆபத்து தருவனு நினைச்சேன்… வழக்கம் போல சிநேகன், எங்க மதி போற என்ன பண்றான்னு எல்லாமே எனக்கு அப்ட்டே செஞ்சான்.

 

உன்னோட ஆளுங்க மூணு பேரு பின் தொடர்ந்தத சிநேகன் நோட் பண்ணி அவுங்க பின்தொடர ஆரம்பிச்ச 10வாது நிமிசமே சொல்லிட்டான்… நீ சொன்னது போல சிநேகன் மதியோட வாலு இல்லடா, மதியோட நண்பன்.

 

அதுக்கு அப்புறம் உன்னோட 3 ஆளுங்க பின்னாடி, என்னோட பெர்சனல் பாடி கார்ட்ஸ் 4 பேர் பாலோவ் செஞ்சத உன் ஆளுங்க கவனிக்கல.

 

அது தான் லோக்கல் ரௌடிஸ் க்கும் , ப்ரோபிசனால் பாடி கார்ட்ஸ் க்கும் உள்ள வித்தியாசம்…. மதி வீட்டுக்கு போயிட்டு அவ மறுபடியும் வெளில வருவான்னு நானே எதிர்பார்க்கல. அவ ஷேபா ரீச் ஆகிட்டான்னு தான் நினச்சேன்… ஆனா என்னோட பாடி கார்ட்ஸ் அங்க தான் இருந்தாங்க… கொஞ்சம் தள்ளி. அவுங்க அலெர்ட் ஆகுறதுக்குள்ள உன் ஆளுங்க மதிய தூக்கிட்டாங்க… அவுங்கள அப்ப தடுக்க முடியல….

 

அவுங்க தூக்கினதும் உன்கிட்ட தகவல் வந்து இருக்கும்… நீயும் ரொம்ப திமிரா என் மதிய என் முன்னாடியே அவ இவ னு பேசிட்டு இருந்த ….  உன்கிட்ட உன் ஆளுங்க தகவல் சொல்லி அடுத்த 5வாது நிமிஷம் மதிய அங்க இருந்து காப்பாத்தியாச்சு…

 

இப்ப எதுக்கு சிநேகன் கால் பண்ணினானு பார்க்குறியா?… அது மதி கண் முழுசாச்சு, மயக்கமும் தெளுஞ்சிருச்சுனு சொல்ல… நீ அனுப்பின 3 பேரையும் செழியன், அகிலனோட டீம் கிட்ட ஹான்ட் ஓவர் பண்ணிட்டான்.

 

இப்ப புரியிதா ? என் அமைதிக்கு காரணம்… எதிரி அமைதியா இருந்த யோசிக்கணும் இனியன்… ஆட கூடாது…

 

இப்ப உன்னோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போய் இருக்கும்… ஆனா என் சதேகம்… என்னோட கணிப்பு சரியா இருந்தா, மதி நீ தான் கிரிமினல்-னு உன்ன ரீச் பண்ணி இருப்பா நினைகிறே.. அத நான் என் பொண்டாடிட்கிட்ட பேசிக்கிறே, இப்ப நீ உன் மாமியார் வீட்டுக்கு கிளம்பு” என்று கடினமான குரலில் ஆரம்பித்து, மதியை பற்றி பேசும் போது ஆதியின் குரல் மெண்மை காட்டி இறுதியில் உல்லாசமான குரலில் அவனது உரையாடலை முடித்தான்.

 

மேலும் ஆதித்யனே தொடர்ந்து, “எங்க என் நண்பன்னு வந்தது இருந்து புலம்புனியே…. நீ போற இடத்துல தான் அவனும் இருப்பான்… நம்ம டீல் படி நான் கேட்டதுக்கு நீ பதில் சொன்ன, அதே போல நீ கேட்டதுக்கு நானும் பதில் சொல்லிட்டேன்.. எப்பவும் நான் மாத்தி பேசமாட்டேன்..” என்று கூற அகிலன் அந்த காவலர்களிடம் இனியனை அழைத்து செல்லுமாறு கூற இனியன் பார்வை கூர் வாளாய் ஆதித்யன் மீது படிந்தது.

 

 

ஆதித்யன் பேச்சை கேட்ட பிறகு இனியன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்கு பதில் இனியனது பார்வை பேசியது. அவனது சிவந்த விழிகளில்  ஆதித்யன் மீது ரௌத்திரம் மித மிஞ்சி இருந்தது மட்டும் இல்லாமல், அச்சம் என்பது கடுகளவும் காணப்படாமலும் இருந்தது.

 

 

ஆதித்யனுக்கு இது தற்போதைய வெற்றி மட்டுமே என்ற அறைகூவலும், இனியனது வெற்றி தள்ளி மட்டுமே சென்று உள்ளது என்று பறை சாற்றலும் இனியனது பார்வை தாங்கி நின்றது. பழிவாங்கும் உணர்ச்சியையும், மீண்டு எழும் வைராக்கியத்தையும் ஒரு சேர காட்டியது அவனது பார்வை.

 

கண்கள் அவனது உள்ளத்தையும் எண்ணத்தையும் படம்பிடித்து காட்ட, இத்தனை நேரம் மௌனம் பூசி இருந்த அவனது உதடுகள் அளவாய் திறந்து ஒரு வஞ்சக சிரிப்பை தவழவிட்டபடி, “திரும்பவும் சந்திக்கலாம் ஆதித்யன்… வரேன்” என்று மட்டும் கூறி சென்றான்.

 

அகிலன், அவனது குழுவுடன் சென்று பாதிக்க பட்டவர்களை விசாரிக்கும் பணியில் இறங்க, ஆதித்யனோ அவனின் மனையாளை பார்க்கவென விரைந்தான்.

 

அவளிடம் பேச அவனுக்கு ஆயிரம் விஷயங்கள் போட்டி போட்டு கொண்டு இருந்தன.

 

அவளை காண வீட்டிற்கு விரைந்து வந்தவனை வரவேற்றது அவ்வீட்டின் பெரியவர்கள்….

 

சிவகாமி அம்மாளோ, “என்னப்பா… இந்த மதி பொண்ணு கீழ விழுந்துருச்சு போல..அதுனால மயக்கம்னு சிநேகன் தம்பி சொல்லுச்சு… ஆஸ்பத்திரி போய்ட்டு கூப்பிட்டு வந்துருக்கு… மொட்ட மாடில இருக்கா.. போய் பாத்துக்கப்பா… ” என்று கவலை தொனிக்க கூற மதியின் பெற்றோரோ, “மாப்பிள்ளை, நிஜமாதான் கீழ விழுந்தாளா ? இல்ல எதுவும் ஆபத்தா? நாங்க சொன்னாலும் கேட்க மாட்டிங்கிறா… வந்ததும் இன்னைக்கே ஏதோ முடிக்கணும்னு மாடிக்கு போய்ட்டா.. நீங்க கொஞ்சம் கண்டிங்க மாப்பிள்ளை… ” என்று பெரியவர்கள் அவர்களுக்கே உரிய கவலையில் பேச ஆதிதய்னோ, “ஹ்ம்ம் சரிங்க மாமா, கண்டிக்கிறேன்” என்று கூறி விட்டு அவளை காணும் ஆவலில் இரண்டு இரண்டு படியாக ஏறி செல்ல நிலாவோ மனதினுள், “இவரு போற தோரணய பார்த்தா கண்டிக்க போற மாதி தெரியலையே ” என்று எண்ணமிட்டாள்.

 

ஆவலோடு அவளை காண செல்ல, மதியோ காலையில் விழுந்ததனால் அங்கும் இங்கும் ஒரு சில மெல்லிய சிராய்ப்புகளுடன், மயக்க மருந்தை உட்க்கொண்டதால் முகத்தில் சோர்வு மிதமிஞ்சி, கூந்தல் களைந்து, ஆனால் இத்தனையிலும் அவளுக்கே உள்ள அழகுடன் அமர்ந்திருந்த மதியை பார்த்த ஆதித்யனுக்கு சுற்றத்தில் இருந்த யாரும் எதுவும் கருத்தில் பதியாமல் போக அவளையே பார்த்தபடி அவளருகில் வர, ஆதித்யனை அங்கு இருந்து பார்த்துவிட்ட சிநேகனோ, ஒரு சிறுமல் சப்த்தம் எழுப்பி தானும் அங்கு இருப்பதை ஆதித்யனுக்கு மறை முகமாக உணர்த்தினான்.

 

அந்த சப்தத்தில் சிநேகன் இருப்பதை கண்டுக்கொண்ட ஆதித்யன் தன்னை சமன் படுத்திக்கொண்டு இலகுவாக பேசுபவன் போல மதியின் மீது பார்வையை பதித்தபடி சிநேகனிடம், “ஏன் உன் ப்ரெண்ட் ரெஸ்ட் எடுக்காம இப்படி உக்காந்து இருக்கா ?” என்று கேட்க சிநேகனோ மனதினுள், “எல்லாம் தெருஞ்சுக்கிட்டு நம்மளையே நோண்டுவாங்க… எல்லாம் என் நேரம்… ” என்று மனதினுள் நினைத்தாலும் அதை வெளிக்காட்டாமல் ஆதித்யனிடம்,”மதி, இதுவர அனலைஸ் பண்ணின எல்லாத்தையும், நாளைக்கு காலையில நியூஸ்ல வரதுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கா.. ” என்று கூறியவன் மெல்ல குரலை தனித்து, “ஆதி சார்… நான் இன்னும் எதுவுமே சொல்லல… நீங்க பண்ணின எதுவும் மதிக்கு முழுசா தெரியாது..அந்த நிருமா கொடுத்த டிராயிங் அப்புறம் மெமரி கார்டு அது மட்டும் தான் பார்த்திருக்கா.. ” என்று கூற ஆதித்யன் சிநேகன் சொல்வதை உள்வாங்கி கொண்டான்.

 

“அது ஒகே…ஆனா யாரு அத நிருமா?” என்று ஆதித்யன் கேட்க சிநேகனோ மனதினுள், “ஐயோ உளறிட்டேனா… ஷ்ஹ்ப்பா முடியல.. இப்பவே கண்ண கட்டுதே” என்று சினிமாபாணியில் எண்ணமிட்டவன் வெளியே சாதுவாக முகத்தை வையித்துக் கொண்டு, “சார் மதி கூப்பிடுறா” என்று கூறி கூப்பிடாத மதியை பார்த்து, “மதி கூப்பிடியா” என்று பேச்சை மாற்ற முயன்றான்.

 

சிநேகனின் அழைப்பில் நிமிர்ந்த மதி, ஆதித்யன் மீது ஒரு அவசர பார்வை பதித்துவிட்டு வேகமாக சிநேகனிடம் ஒரு கோப்பை குடுத்தாள். அது என்ன வென்று சிநேகன் கேட்க மதியோ, “இதுல தான் யாரு இந்த 48 பேர் காணாமல் போனதுக்கு, அதாவது கடத்தபட்டதுக்கு காரணம்னு இருக்கு… இத நம்ம சதா சார் கிட்ட கொடுத்துரு… ” என்று கூற அதை கையில் வாங்கிய சிநேகன் வேகமாக புரட்டி பார்த்தான்.

 

புரட்டி பார்த்தவன், “என்னது? இவனா? … இவன் ஆதி சார் கம்பனில வேலை பார்க்குற ரொமாண்டிக் ஹீரோ ல… இவனா? எப்ப இவன் அக்ஷன் கிங் அர்ஜுனா மாருனான்? ” என்று அதிர்ச்சியில் வாயை  பிளக்க மதி ஆமாம் என்பதாய் தலை அசைத்தாள்.

 

“ஹே மந்தி..” என்று தொடங்கிய சிநேகன், ஆதித்யனை பார்த்துவிட்டு…வாயில் வந்த உமிழ்நீரை விழுங்கிவிட்டு, “ஹே மதி, மதி , மதி…” என்று ஆதித்யனை பார்த்தவாறு ஒரு அசட்டு சிரிப்புடன் பேச ஆதித்யனுக்கும் மதிக்கும் ஏன் இவ்வாறு சிநேகன் செய்கிறான் என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க, அப்படி பார்த்ததனால் அவ்விருவர் கண்களும் ஒரு சில நொடிகள் மற்றவரை காதல் கொண்டு கவ்வி நிற்க அதை கவனித்துவிட்ட சிநேகன் மனதினுள், “ஹப்ப்ப்ப… இவிங்க ரொமான்ஸ்க்கு போய்டாங்க… இனி ஆதி சார் மந்தினு கூப்பிட்டத மறந்துருவாரு” என்று எண்ணமிட்டான்.

 

ஆனால் சிநேகன் அறியாத ஒன்று இதுவரை ஆதித்யன் மந்தி என்று அவன் அழைத்ததை கவனித்ததோ, அப்படியே கவனித்திருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதோ இல்லை என்று.

 

சில நொடிகளில் சுதாரித்த ஆதித்யன் ஏதோ பேசு வேண்டும் என்பதற்காக சிநேகனிடம் திரும்பி, “என்ன சொன்ன சிநேகன்” என்று கேட்க அவனோ மனதினுள், “மறுபடியும் முதல்ல இருந்தா” என்று எண்ணமிட்டபடி வெளியே , “இல்ல இனியன் எப்படின்னு…” என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க இனியன் என்ற வார்த்தையில் சுய உணர்வு பெற்ற மதி அவளது வழக்கில் இறங்கினாள்.

 

“ஆமாம் சிநேகன், இனியன் தான் இது எல்லாத்துக்கும் பேக் போணா இருந்திருக்கான்… எப்படி நல்லவன் வேசம் போட்டு இருக்கான்” என்று கசப்பான குரலில் கோவம் இழையோட கூற, ஆதித்யன் அவள் சொல்லட்டும் என்று அமைதி காக்க, சிநேகனோ, “அது தான் எப்படி கண்டு பிடிச்சனு கேட்க்குறேன்” என்று அவனது ஐயத்தை கேட்டன்.

 

மதியின் பார்வையில் காட்சி மலர தொடங்கியது………..

 

‘ மதியும் சிநேகனும் கிளம்பிய பிறகு, அன்று ஆம்புலன்ஸ்-யில் அடிபட்டு ஏற்ற பட்ட பெண்ணே நினைவு வர, மதிக்கு அப்பெண்ணோடு சேர்ந்து இனியன் அவளை ஆம்புலன்ஸ்யில் ஏற்ற துரிதம் காட்டியதும் ஏனோ நினைவுக்கு வர, அதை அப்படியே விட்டு விட்டு இப்பொழுது எப்படி இனியன் இங்கே சரியாக வந்தான் என்று யோசிக்க தொடங்கினாள்.

 

என்றும் இல்லாமல் ஏன் இன்று இனியன் தன்னை தொடர்புக்கொண்டான்?

ஏன் அவளை காண வேண்டும் என்று கூறினான் ?

ஏன் அவள் இருக்கும் இடமும், செல்லும் இடமும் விசாரித்தான்?

எவ்வாறு சரியாக அந்த நேரம் இங்கே வந்தான் ?

இதே போல தானே இதற்கு முன்னும் இருமுறை. எப்படி இனியனே தன்னை வந்து பாதுக்காப்பது சாத்தியம் ஆகிற்று?

 

என்று மதியின் மனதில் அடுக்கடுக்காக கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தது.

 

அந்த சந்தேகத்தோடே அவள் விசாரிக்க சென்ற இடத்தை அணுகி இருக்க, அங்கேயும் இனியனது அழைப்பு வந்து சுற்றி வளைத்து அவளது இருப்பிடத்தை இனியன் கேட்க, இருப்பிடத்தை கூறினாலும் அவளுக்கு சந்தேகம் வழு பெற ஆரம்பித்தது.

 

பிறகு சிநேகன் கூறிய விஷயத்தினால் வீட்டிற்கு சென்று அவன் கொடுத்ததாக சொன்ன ஓவிய படத்தை காண வேண்டி அவள் பயணிக்க தற்செய்யலாக பாதரை சந்திக்க நேர்ந்ததும், அவருடன் சென்றதும்.

 

அங்கே பொதுவாக அந்த டிரஸ்டை பற்றி பேச தொடங்க, அந்த ஆசிரமத்திலே அதிக மதிப்பெண் பெற்றது இனியன் என்ற சான்றிதழ் அலங்கார கண்காட்சியில் இடபெற்று இருக்க, சற்று முன்பு அவள் சிந்தனை மொத்தமும் இனியனை சுற்றி வந்திருக்க, மேற்கொண்டு இனியனை பற்றி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை தூண்ட, இனியனை பற்றிய பேச்சை தொடங்கினாள்.

 

இனியனை பற்றி பேச பேச பாதரின் முகத்தில் அத்தனை சந்தோசம் பெரிமிதமும் போட்டி போட்டு உலாவந்தன. பாதரின் மனதில் அவன் அத்தனை நன்மதிப்பை பெற்று இருக்கிறான் என்பது மதிக்கு புரிந்தது.

 

ஒருவேளை இனியன் மீது தான் சந்தேகித்தது தவறோ என்ற எண்ணம் கூட மெதுவாக துளிர் விட்டது மதிக்கு.

 

பிறகு ஆர்வ மிகுதியில் பாதர் இனியனுடைய சம வயசு, சம காலத்தில் படித்தவர்கள் புகை படம் காட்டி அவர்களை பற்றி பேச, அக்கூட்டத்தில் ஆஷிகை பார்த்த மதியின் கண்கள் நிலை குத்தி நின்றன.

 

ஆஷிக்கை பற்றிய விவரம் கேட்க, அவனும் இனியனும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இறுதியாண்டு படித்துவிட்டு ஏதோ சுற்றுலா சென்ற பொழுது ஆஷிக் தவறிவிட்டான் என்றும், அவன் இறந்துவிட்டதுக்கு சாத்திய கூறு அதிகம் என்றும் இனியனிடம் இருந்து தகவல் வந்தது என்றும் கூறினார்.

 

இதை கேட்டு இனியன் நொறுங்கி விட்டதாக கூறினார் பாதர்.

 

இதை கேட்ட மதியின் மனம் வேகமாக சிந்திக்க தொடங்கியது. 

 

சிந்தனை ஓட, வீட்டிற்கு சென்றவள் வேக வேகமாக ஆதித்யனது அலுவலக அறையை அலச ஆரம்பித்தாள். அப்படி பதட்டத்துடன் தேடியதால் மேஜை மீதிருந்த மெமரி கார்டு கீழே விழ, சிறு பொருள் ஆகினும் அவள் கைப்பட்டு விழுந்ததனால் அதை கவனித்து விட்ட மதி, அதை கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

 

பிறகு அந்த சார்ட்டை தேடி பிடித்தவள் அப்பெண்ணின் உருவ படத்தை பார்த்து, விபத்து ஏற்பட்ட பெண்ணா என்று ஒப்பிட்டு பார்க்க முயன்று தோற்றாள். என்ன யோசித்தும் அன்று அடிபட்ட பெண்ணின் உருவம் மதிக்கு நினைவு வரவில்லை.

 

உள்ளுணர்வின் அடிப்படையில் அந்த மெமரி கார்டை பொருத்தி பார்க்க அது தன்னுடையது என்று புரிந்துக்கொண்டாள். அந்த நொடி ஆதித்யனிடம் கேட்க மதிக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆயினும் அவை அனைத்தையும் ஒதிக்கி வைத்து ஓவியத்தையும், அதில் இருக்கும் பெண்ணும் ஒருவரே என்று உணர்ந்துக் கொண்டாள்.

 

இனியன் ஏற்றுவதையும், அப்பெண்ணையும் பார்வையிட்டவள், ஒரு கட்டத்தில் இனியன் யாருக்கோ சமிக்கை செய்யவது போல ஒரு பிரம்மை தர கூடிய புகை படத்தை பார்த்தாள். அதை ஒரு சில நிமிடங்கள் ஊன்றி  பார்த்தவள், சமிக்கை காட்டப்பட்ட திசையில் சற்று தள்ளி நின்றது ஆஷிகின் (கவின்) வண்டி எண் என்று சிநேகன் தந்த எண்னை கொண்டு இருந்த வண்டி என்பதை புரிந்துக்கொண்டாள்.

 

 

மதிக்கு மெல்ல மெல்ல புலனாக ஆரம்பித்தது…. இந்த மெமரி கார்டு பற்றி ஆதியிடம் கேட்க வேண்டும் என்று எண்ணமிட்டவள், ஆதித்யனை காண, அவனது அலுவலகம் புறப்பட்டாள்.

 

அவள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு செல்ல காரணமாக இருந்தது, அந்த மெமரி கார்ட்.

 

வெளியில் வந்து சிறு தொலைவிலே, அவளை இருவர் பிடித்துக் கொள்ள, ஒருவன் கை குட்டையை அவள் நாசி நோக்கி, கொண்டு வந்தான். நடக்க போவதை யூகித்து, சுதாரித்து மூச்சை இழுக்காமல் இருந்த மதியின் நாசியில் கைக்குட்டை வைத்து அழுத்தப்பட, ஒரு சில நொடிகள் மூச்சை விடாமல் தாமதித்தவள் அவர்களுக்காக மயங்கியதுப் போல பாவலா காட்ட, மயங்கி விட்டதாக நினைத்த ஒருவன், “டே, இனியன் சாருக்கு ஒரு மெசேஜ போடுடா” என்று கூற அதை கேட்ட மதி இனியன் தான் என்று தெரிந்து கொண்டாள்.

 

அவர்களிடம் இருந்து தப்பி ஓட முனைய இம்முறை அவள் மூச்சை அடக்குவதற்கு முன்பே அவளது நாசியில் மயக்கமருந்து வைத்த கை குட்டை தீவிரமாக அழுத்தப்பட மதி உண்மையிலே ஆழ்மயக்கத்திற்கு சென்றாள்.’

 

இவை அனைத்தையும் மதி விவரித்து முடிக்க சிநேகனுக்கு இனியன் மீது கொலைவெறி வந்தது.

 

ஆனால் ஆதித்யனுக்கோ மாறாக, தனது மனைவியின் புத்தி சாதுரியமும்,  எடுத்த வேலையை எத்தனை தடங்கல் வந்தாலும் முடிக்கும் திறமையும் கண்டு அவள் மீது காதல் அதிகரித்தது….

 

மையலுடன் தனது மனையாளை பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதித்யன்….

 

அவனது பார்வையின் மாற்றத்தை உணர்ந்துக்கொண்ட சிநேகன், மதி தயாரித்த அறிக்கையை எடுத்துக் கொண்டு சதா சாரை பார்ப்பதாக கூறி விடை பெற, ஆதித்யனும் மதியும் தனித்து விடபட்டார்கள்…..

Advertisement