முகிழ்  – 31

 

“செக்” என்று கூறி இனியனிடம், “இனி நீ தப்பிக்க முடியாது” என்ற ரீதியில் ஆதித்யனுடைய பார்வை இருக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் இனியனது பார்வை ஆதித்யனது பார்வையை தாங்கி நின்றது.

 

 

அந்த பார்வையின் போதே ஆதித்யனது கேள்விக்கான பதிலை வெகு நிதனாமாக சிறுதும் பயம் குரலிலோ முகத்திலோ தொனிகாதவாறும் தெரியாதவாரும் இனியனது குரல் ஒலித்தது.

 

 

“ஹ்ம்ம் சரிதான் ஆதி சார்… வேற ஒரு வேலையில மூழ்கி இருந்துடேன்… அதுனால இதுல அதவாது உங்க பக்கம் இந்த சில மணி நேரங்கள் கவனிக்க தவறிட்டேன்… ஹ்ம்ம் பரவா இல்ல… பாத்துக்கலாம்… கொஞ்சம் யோசிச்சிருக்கணும் நா, இந்த நேரத்துல அகிலன் சார் வந்ததும், வந்து இரண்டு பேரும் நிதானமா விளையாண்டதும்… யோசிக்க விட்டுடேனோ? … தப்பு பண்ணிட்டேன்… பரவா இல்ல…” என்று சாதரணாமாக பேசுபவன் போல ஒரு மென் முருவலோடே இனியன், ஆதியிடமும் அகிலனிடமும் பேசிக் கொண்டு இருந்தான்.

 

 

“ரொம்ப துணிச்சல் தான் டா உனக்கு, என் முன்னாடியே எவ்ளோ தெனாவெட்ட பேசுற நீ?” என்று அகிலன் குரல் உயர்த்த, ஆதித்யனோ, “இரு மச்சி… பேசட்டும்…” என்று கூறி இனியனுக்கு மேல் ஆதித்யன் நிதானம் காட்டினான்.

 

 

ஆதித்யன் சொல்லுக்கு அமைதியானா அகிலன் சற்று குரலை தனித்து கோவத்தை உள் அடக்கி, “எந்த தயிரத்துல டா நீ இத்தன துணிச்சலா இத்தன வேலையும் பண்ணின… எப்படி இத்தன நாள் போலிஸ் கண்ணுலயும், மத்தவங்க முன்னாடியும் இந்த நல்லவன் வேசம் போட்ட? ” என்று இறுகிய குரலில் கேட்க இனியனோ அதே சிரிப்புடன், “ஹ்ம்ம் என் வாயால வாக்குமூலம் வாங்கனும்னு பாக்குறீங்க… குட் அதுல ஒன்னும் தப்பு இல்ல… எனக்கும் சில விஷயம் இந்த ஆதித்யன் கிட்ட பேசனும்… சோ நம்ம இப்ப ஒரு கேம் விளையாடலாமா பேசிக்கிட்டே? ” என்று ஆதித்யனை சார் என்ற மரியாதையை கை விட்டு திமிருடன் மேஜை மீதிருந்த சதுரங்க பலகையை காட்டி கேட்டுவிட்டு ஒரு வஞ்சக சிரிப்பை உதட்டில் தவழவிட்டான் இனியன்.

 

 

இனியனது பேச்சின் தோரணயை கண்ட அகிலன் ஆத்திரப்பட்டாலும், ஆதித்யனது அமைதியை கண்ட அகிலன் நண்பனின் நிதானத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தனைவையப்பட்டான். இனியனது கேள்விக்கு, இனியனை விட அதிக நிதானத்துடன் மாறாத சிரிப்புடன் ஆதித்யன், “வெள்… நிச்சயமா… ஆடினா தான தெரியும்… யாரு ஜெய்கிறது, யார் தோற்க போறதுன்னு” என்று அந்த நேரத்திலும் கம்பீரமான குரலில் அவனுக்கே உரிய பாணியில் அவனது இடது புருவத்தை ஏற்றி இறக்கி கூறினான்.

 

அவர்களது ஆட்டம் தொடங்கியது, சதுரங்கத்திலும் பேச்சிலும்…….

 

 

அகிலன் ஒரு காவல் அதிகாரியாய் இனியன் பேசுவதை இனியன் அறியாமல் பதிவு செய்ய தொடங்கி இருந்தான். சதுரங்க கட்டையில் ஒவ்வொரு காயாக அடுக்கியபடியே அவர்களின் பேச்சை தொடர்ந்தனர். ஆனால் பார்வையாளர்களுக்கு தான் அவர்கள் நண்பர்களோ என்று பிரம்மை கொள்ளும் அளவு அவர்களது முகம் நிதானத்தை பிரதிபலித்துக் கொண்டு இருந்தது. 

 

 

“அப்புறம், எல்லாத்தையும் தெளிவா பிளான் பண்ணி செஞ்சே… இந்த 3 வருசத்துல எங்கயும், என்னோட பெயர் வெளி வரல… ஆனா உன்கிட்ட மிஸ் ஆகிட்டே… சோ எப்படி கண்டு பிடிச்சீங்க…” என்று இனியன் ஒரு வன்மத்துடன் கேட்க, ஆதித்யனோ அதற்கு சளைக்காமால், “ஹ்ம்ம் சொல்றே… ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சில சந்தேகங்கள்… அத நான் கேட்குறே” என்று கூறிய படியே ஆட்டத்தை தொடங்கினான் ஆதித்யன்.  

 

 

“என்னோட கணிப்பு சரினா… நீ தான் மதியை 2 முறை காப்பாத்தி இருக்க… ஆனா ஏன்… கடத்த முயற்சி பண்ண சொன்னது நீ தான்… அப்புறம் ஏன் நீயே போய் காப்பாத்தவும் செய்யணும்… இல்ல காப்பத்துற மாதி நடிக்கணும்… அதற்கான காரணம் உன் மேல மதிக்கு நல்ல அபிப்ராயம் வரணும்னா?” என்று ஆதித்யன் கேட்க இனியன் நிதானத்தை கைவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை உணர்ந்தவன் போல வாய் விட்டு சிரித்தான்.

 

 

“நல்ல அபிப்ராயமா? அது எதுக்கு எனக்கு…. அது தேவையே இல்ல… எனக்கு வேணும்கிறது எல்லாம் பணம் மட்டும் தான்… நான் சொந்தமா பெரிய தொழில் தொடங்கணும்… யார்கிட்டையும் அடிபணிந்து அடிமையா வேலை செய்ய விரும்பல… எனக்கு அந்த திறமையும் தகுதியும் நிறையவே இருக்கு… ஆனா பணம்? அது மட்டும் இல்ல, அதுனால என்ன? அத சம்பாதிக்க என்கிட்ட 1000 வழி இருக்கு….. ஆனா அந்த வழி ல உன்னோட மதி வந்து குறுகிட்டுடா…. அப்படி பட்ட அவ கிட்ட நான் ஏன் நல்ல பெயர் வாங்க காப்பாத்துற மாதி நடிக்கணும்? தேவையே இல்ல…” என்று அசைட்டையாக பதில் சொன்னான்.

 

மேலும் அவனே தொடர்ந்து, “ஹ்ம்ம் கேட்டல… ஏன் காப்பாத்துனேனு… அதுக்கு நீ… நீ தான் காரணம்…. அந்த மதி எங்க எனக்கு இடைஞ்சலா வந்துருவாளோனு அவள தூக்க நினச்ச போது எல்லாம் நீ வந்துட்ட நந்தி மாதி….” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் குடுத்து கூறினான் இனியன்.

 

 

அவன் பதில் சொல்லிய போது காய்களை நகர்த்தி அவன் பங்கு ஆட்டத்தை ஆதித்யன் முடித்தவுடன், இனியன் காய்களை நகர்த்த தொடகினான். காய்களை நகர்த்திக்கொண்டே அவனது பேச்சிலும் முன்னேறினான்.

 

 

“புரியல ல ஆதித்யன்… சொல்றேன்… எங்க பிளான் படி அன்னைக்கு ஒரு பொண்ண தூக்கணும்… அட எதுக்கு தூக்குறோம்னு உன்கிட்ட சொல்லல, ஹ்ம்ம் நீயே யுகிச்சிரூப்ப, பொண்ணுங்கள கடத்துறது தான் என் தொழில், அதுல இடைல இடைஞ்சல வரவங்களையும் சேர்த்து தூக்கிருவோம்…

 

 

ஏன்னா எனக்கு மிச்சம் வைக்கிறது பிடிக்காது. பட் ஏன் கடத்துறேனு பின்னாடி தெருஞ்சுப்ப நீ.

அப்போ நான்போட்ட திட்ட படி நாங்க தூக்கனும்னு நினச்ச பொண்ணு அடிச்சோம், என் ஆளுங்க வச்சு… ஆம்புலன்ஸ்  ல தான் எங்க கடத்தல் நடக்கும்… ஒரு சில சமயம் வேற வண்டி வச்சு கூட

 

 

அன்னைக்கு அதே போல.. என்ன… அவள ஆம்புலன்ஸ் ல ஏத்த டிலே பண்ணிட்டாங்க… சோ நான் ஸ்பாட் ல இறங்க வேண்டியதா ஆகிடுச்சு… எப்பவும் நான் ஸ்பாட் ல இறங்குறது கிடையாது. அங்க, அங்க தான் நான் தப்பு பண்ணிட்டேன்… உன் பொண்டாட்டி… மதி, அப்ப தான் முதல் முறையா சந்திச்சே, ஒரு நிமிஷம் அவ முகத்த பார்த்து நின்னே, நான் அவ அழகுல ஸ்டன் ஆனது ஒரு நிமிஷம் தான், அடுத்த செகண்டே அவ ஒரு ஜர்னலிஸ்ட்னு ப்ருஞ்சுக்கிட்டே, என்னோட லட்சியத்துக்காக எத வேணாலும், ஏன் கொலை கூட பண்றவன் நா… அழகா இருக்கானு ஒரு நிமிஷம் பார்த்த பொண்ணு மேலையா பரிதாப பட போறே… மதியை கண்காணிக்கணும் னு முடிவு பண்ணே.. அதுக்கு காரணம்… நான் ஆம்புலன்ஸ் ல அந்த பொண்ண ஏத்துறத உன் பொண்டாட்டி படம் எடுத்துட்டா… பத்திரிக்கை காரில… அதான்… அப்ப முடிவு செஞ்சே அந்த கேமரா முதல தூக்கணும், அப்புறம் அவள கண்காணிக்கணும், அந்த இடத்தைவிட்டு உடனடியா கிளம்பினே… கார் ல வந்த அந்த பயணம் முழுக்க மதிய சுத்தி தான் என் நினைப்பு இருந்தது… அவள எப்படி ட்ராக் பண்றது, அந்த ஆதரத்த எப்படி தூக்குறதுன்னு… ஆனா என்னோட நல்ல நேரம் அவள இதே ஆபிஸ்ல அன்னைகே சந்திச்சே” என்று கூறினான் இனியன்.

 

உடனே ஆதித்யன் மனதில், “அப்போ அத்தை மாமா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல மதி கேமரா தொலஞ்சு போனதும், அத இனியன் கொண்டு வந்து குடுத்ததா சொன்னதும் இவனோட சதி… நான் யுகிச்சது சரிதான்” என்று எண்ணமிட்டவன் இனியனிடம், “ஹ்ம்ம் அப்போ நீயே தூக்கிட்டு, அப்புறம் நீயே அத மதிகிட்ட குடுத்துருக்க… அப்படிதானே..? ” என்ற ஆதித்யனும் இனியனுக்கு குறையாதவன் போல அசட்டையாக கேள்வி கேட்க அதற்கான பதிலை கூற இனியன் முயன்றான்.

 

 

“ஹ்ம்ம் பெர்பெக்ட், இது கூட உனக்கு தெருஞ்சிடிச்சா? … அன்னைக்கு இதே ஆபிஸ் கு மதி உன்ன இண்டர்வியு பண்ண வந்தபோது அவ அவளோட ஆபிஸ் ல அந்த ஆசிடென்ட் நியூஸ் பப்ளிஷ் பண்ண பேசிட்டு இருந்தா… அத தெருஞ்சிகிட்டேன்…. அதுனால அவகிட்ட இருக்க ஆதரத்த எடுக்க முடிவு பண்ணி, மதிய பக்கத்துல இருக்க காபி ஷாப் கூப்பிட்டு போய் என் ஆள வச்சு அவ காமெரா தூக்க பிளான் பண்ணே… அப்ப என் ஆளு வர கொஞ்சம் டைம் ஆச்சு… அதுவரைக்கும் மதிய அங்க பிடிச்சு வைக்கணுமே மதிகிட்ட பேசணும்ணு தோனுச்சு, அதாவது பேசுறது போல நேரத்த கடத்துனே, அதுக்குள்ள என் ஆளுங்க வந்தாங்க. நான் நினைச்சமாதி மதியோட கேமரா திருட்டு போச்சு, அப்புறம் அவ போலிஸ் போய்ட கூடாதுன்னு அதே கேமராவை நானே வந்து கண்டு பிடிச்சதா அவ கிட்ட கொடுத்தேன்… ஆதரத்த தூகிட்டேன்னு நினச்சேன், ஆனா அவளே பெரிய தொல்லையா இந்த கடத்தல பத்தி தகவல் சேகரிக்க வரபோரானு அப்ப எனக்கு தெரியல… அப்படி இருந்த போதும் கூட மதி வீட்ல கேமரா குடுத்துட்டு வந்த பிறகு, என் மனசு அன்னைகே சொல்லுச்சு.. மதி மூலமா நிச்சயம் ப்ரச்சனை வரும்ணு … என்னோட சிந்தனை முழுக்க மதிய சுத்தியே இருந்தது… அதுனாலா மதிய கண்காணிக்க மதியுடைய ஆபிஸ்லயே ஒரு ஆள் ஏற்பாடு பண்ணினேன்.

 

 

மதியோட ஆபீஸ் ல உள்ள எடிடர் மலைச்சாமி, கொஞ்சம் பணம் குடுத்தா நமக்காக நிறைய செய்வாரு… அவரு மூலமா என் ஆள வச்சு பேசவச்சேன்… மதிய பொதுவா தான் கண்காணிக்க சொன்னேன்… ஆனா அவரு சொன்ன தகவல் அப்புறம் தான் தெருஞ்சது என்னோட லிஸ்ட் ல சேரவேண்டியவ மதின்னு… அதுல இருந்து மதிய தூக்குறதுக்கு பிளான் பண்ண ஆரம்பிச்சேன்… என்ன இந்த மலைச்சாமிக்கு பதிலா சதா சிவம் அதுதான் சத்யம் நியூஸ் பேபரோட சீப் எடிட்டர் வளைஞ்சு குடுத்திருந்தா, இந்த கேஸ் ஸ்டார்டே பண்ணி இருக்கமாட்டாங்க.. பட் அந்த சதா சிவம் தப்பு பண்ணிட்டாரு… கொஞ்சம் வளைஞ்சு குடுத்திருந்தா நிறைய பணம் பாத்துருப்பாறு… ஹி மிஸ்ட் இட்… நேர்மை நீதின்னு… அதுனாலா தான் இந்த தேவ இல்லாத டென்சன்… எல்லாம் ஸ்மூத்தா போயிட்டு இருந்தது, உன் பொண்டாட்டி தலை இடுற வர…” என்று கோவத்தை உள் அடக்கி இறுகிய தாடையுடன் இனியன் கூறினான்.

 

இனியனது குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த ஆதித்யனின் கை முஷ்டி இறுக ஆரம்பித்தது…..

 

ஆனால் அவன் கோவத்தை அவனின் ஆழ் மனதில் நிறைந்திருந்த காதல் தடுத்தது. யாருக்காக இத்தனையும் செய்துக் கொண்டு இருக்கிறானோ, அதை அவனது கோவத்தினால் கெடுத்துவிட கூடாதென்று கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் இனியனது வாக்கு மூலத்தை பெரும் வகையில் அவனை பேச தூண்டினான்.

 

ஆனால் எத்தனை முயன்றும் கோவத்தினால் சிவந்திருந்த ஆதித்யனது கண்கள் வேட்டைக்கு செல்லும் வேங்கையின் கண்களை ஒத்திருந்ததை ஆதித்யனால் தடுக்கவும் இயலவில்லை இனியன் அதை கவனிக்கவும் தவறவில்லை.

 

ஆதித்யனது முகத்தில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த இனியன் உல்லாசமாக சிரித்தான், “என்ன ஆதித்யன், கோவம் வருது போல…. இப்படி கோவப்பட்ட நான் கேட்க நினச்சத எப்படி கேக்குறது… கோவம் உடம்புக்கு நல்லது இல்ல” என்று வெளிபடையாக நக்கல் இழையோட, ஆனால் குரலில் சாதுவை காட்டி பேசினான்.

 

அவனின் ஆட்டம் இந்த சதுரங்க ஆட்டத்தின் நேரம் முடிவு வரை தான் என்பதை மனதில் நிறுத்தி, அதற்குள் அவனிடம் அவன் செய்ததை அவன் வாயால் ஒப்புக்கொள்ளும் படி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆதித்யன் பேச்சை வளர்த்தான்.

 

“உன்னுடைய அறிவுரை போதும்,…. நான் கேட்டதுக்கு இன்னமும் பதில் வரல” என்று இறுகிய குரலில் கூற, இனியனோ, “சொல்றேன்… அவசரம் என்ன?” என்று கேட்டுவிட்டு அவனது பேச்சை தொடர்ந்தான்.

 

“இப்ப என்ன இரண்டு முறை நானே ஏன் உன் பொண்டாட்டிய காப்பாத்துனே அப்படின்னு தான தெருஞ்சுக்க ஆசைபடுற… சொல்றேன்.

 

அன்னைக்கு நீ உன் சொந்தகார பொண்ணு பேரு என்னவோ.. ஹ்ம்ம் நிலா, அந்த பொண்ணு கூட போனல, அட அகிலன் சார் உங்க பொண்டாட்டி நிலாவே தான், அன்னைக்கு நம்ம ஆதித்யன் சார், அப்புறம் உங்க மனைவி நிலா 2 பேரும் ஆபிஸ் ல இருந்து கிளம்பினாங்க… அப்ப அங்க வந்த மதி ஆதித்யன், இதோ இந்த க்ரிஷ்ணவ் ஆதித்யன பார்த்தத நான் பார்த்துட்டே… ஏன் மதி உங்கள அப்படி பாக்கனும்னு எனக்கு டவுட் வந்துருச்சு… என்ன பண்ண நான் கொஞ்சம் அறிவாளியா பொறந்துட்டே.

 

சரி மேல மதியோட ரியாக்ஷன் தெருஞ்சுக்க, கொஞ்சம் ஒழுஞ்சு பார்த்தேன்… ஏதோ இருக்குனு புருஞ்சது, அதோட அன்னைக்கு மதிய தூக்குறதுக்கு சரியானா நேரம்னு தோன என் ஆளு ட்ட சொல்லி ஒரு ரெண்டு பேர ஏற்பாடுபன்னேன்.

 

என்னோட வேலை ஈசியா முடிக்கணும், அதுக்கு டார்கெட் அதான் மதி ஒரு குழப்பமான மன நிலையில இருந்தா நல்லது.. இது என் பாலிசி… சோ மதிகிட்ட போனேன்.. பேச்சு குடுத்தே… மதி என்கிட்ட பேசினாலும் பார்வை முழுக்க நீ போன திசையில இருந்தது, அதுனால அவ நிலாவ யாருன்னு   கேட்ட போது மதிக்கு குழப்பம் வரது மாதி ஒரு பதில  சொன்னேன்… உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுனு, மதி குழம்பி இருக்கணும்.. ஏன்னா அவ கண்ல காதலும் ஏமாற்றம் போட்டி போட்டு வந்தது.

 

அந்த குழப்பத்த எனக்கு சாதகமாக்கி, அவ மன நிலை, நிலை இல்லாமா இருக்குற போது தூக்கிடலாம்னு எல்லா பிளானும் செஞ்சுட்டே, பட் லாஸ்ட் மினிட் நீ உள்ள வந்து ஆட்டத்த கலைச்சிட்ட…..

 

 

புரியலலா, அன்னைக்கு நிலாவ கூட்டிட்டு போனியே, அதே டைரெக்சன் ல போக வேண்டித்தான அத விட்டு ஏன்? ஏன்டா நீ வண்டிய, மதி போன திசையில திருப்புன…

 

 

உன் வண்டி மதி போன பாதையில போக தொடங்கவும், வேற வழி இல்லாம நானும் அதே பாதையில போனேன்….

 

 

நீ இடையில போன் பேச வண்டிய ஸ்லொவ் பண்ண, நான் உன்ன கிராஸ் பண்ணி போய் நீ வரதுக்குள்ள காப்பாத்தனும்னு நினச்சே….ஏன்னா, அப்ப அத, நான் பண்ணாம்மல் இருந்திருந்தா, அன்னைக்கு நீ அத பண்ணிருப்ப , நீ இந்த கேம் ல வரது சுத்தமா எனக்கு பிடிக்கல, நீ முறை உள்ள வந்துட்டா அது எனக்கு பெரிய பிரச்சன ஆகும், அதோட அந்த மதியும் நீயும் என்ன உறவுன்னு எனக்கு தெரியல, ஏதோ பேசாம இருக்கீங்க தெருஞ்சது, ஆனா இந்த சம்பவம் மூல நான் உங்க உறவை புதுபிக்க விரும்பல, அப்புறம் அந்த மதியோட சேர்த்து உன்ன.. உன்னையும் சமாளிக்க வேண்டி வரும்.

 

 

இது எல்லாம் யோசிச்சு தான், அவள தூக்க பிளான் பண்ணின நானே காப்பாத்தவும் செஞ்சேன் …..

 

 

நீ வரதுக்குள்ள கிளம்பிடனும்னு நினச்சே… பட் அங்க நடந்ததுல லாஸ்ட் ஒரு சில விசயங்கள நீ பாத்துட்ட, நீ பாத்தத நானும் பார்த்துட்டே, அதுனால தான் மதிய நானே வீடு வர கொண்டு போய் விட்டு வந்தே….

 

 

3 வருசமா நான் பண்ணுற விஷயம், இந்த சின்ன விசயத்துல உடஞ்சிட கூடாது, என் இமேஜ் அதுக்காக தான் அவ எனக்கு தல வலின்னு தெருஞ்சும் அவள பாதுகாப்பா வீட்டுல சேர்த்தே. . ” என்று கூறிய இனியன் ஒரு சில நிமிடங்கள் அமைதி காத்தான். 

 

அந்த அமைதியில், இனியன் அன்று அவன் திட்டம் தவிடு பொடி ஆனதுக்கு இன்றும் அதை எண்ணி கோவம் வந்தாலும் அதை உள் அடக்குகிறான் என்பது அகிலன் மற்றும் ஆதித்யன் இருவருக்கும் புரியவந்தது.

 

இனியனுக்கு கோவம் வருகிறது என்றால், தனது மனைவியை அவள் இவள் என்று இனியன் பேசுவதற்கே ஆதித்யனது நெஞ்சம் நெருப்பு துண்டுகளை அடக்கி வைத்திருக்கும் எரிமலையாய் குமுறிக் கொண்டு இருந்தது. மதியை தூக்க திட்டமிட்டதாக இனியன் சொல்லிய சொல்லுக்கோ ஆதித்யன் வெறிகொண்ட சிங்கமாக சினந்து அதை தற்காலியமாக வெளி காட்டாது இருந்தான்.

 

இருவரும் இவ்வாறு நினைத்துக் கொண்டு இருக்க ஆதித்யன் உள்ளமோ அன்று நடந்த நிகழ்வை நோக்கி சென்றது…

 

 

‘அன்று நிலாவின் பிறந்தநாள் என்பதால், பெங்களூர் சென்று இருந்த அகிலன், ஆதித்யனது வார்த்தைக்கு இணங்கி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க அழகிய இரவு உணவு விடுத்தியில் அவளுக்காக காத்திருக்க, நிலாவை அங்கு அழைத்து வரும் பொறுப்பு ஆதித்யனை சேர்ந்தது.

 

 

ஆதலால் முன்பே நிலாவை அவனது அலுவலகம் வரவழைத்து அகிலன் சொன்ன நேரத்தில் நிலாவை அங்கே அழைத்து செல்ல ஏற்பாடு செய்தான். அந்த இரவு உணவு விடுதி ஆதித்யனின் அலுவலம் அருகில் என்பதால் நிலாவை அகிலனிடம் சேர்ப்பித்து அவர்களுக்கு தனிமை குடுத்து நிலாவிற்கு வாழ்த்தை தெரிவித்துவிட்டு ஆதித்யன் அவன் வீடு நோக்கி பயணமானான்.

 

 

அப்படி சென்ற திசையில் இனியன் யாரையோ அடிப்பதும், மதியை அழைத்து செல்வதும், இனியனது தோளில் பட்ட ரத்த காயமும் ஆதித்யனது கண்களுக்கு தப்பவில்லை.

 

இவை அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நிகழ்ந்துவிட இனியன் மதியுடன் கிளம்பி இருந்தான்.’

                                                                          

இந்த காட்சிகள் யாவும் மின்னல் கொடியின் வேகத்தில் ஆதித்யனது மனதில் பரவி படர்ந்து, பிறகு மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தான் ஆதித்யன்…

 

இரு சில நிமிடங்கள் கடந்திருக்க, ஆதித்யன் பேச்சை தொடர்ந்தான்…

 

“எல்லாம் சரி தான்.. ஆனா உன்னோட ஆளுங்களே உன்ன எப்படி கத்தியாளா கீரினாங்க… அது லாஜிக் இடிக்குதே… ” என்று கேள்வியாக ஆதித்யன் புருவம் உயர்த்த இனியன் ஒரு பலமான சிரிப்புடன், “ஆதி, நீ இன்னுமா என்ன புரிந்துக் கொள்ளாம இருக்க…. உன்ன தவிர, வேற யாருக்கும் நான் இதுல இவால்வ் ஆகி இருக்கேன்னு தெரியாது….

 

 

அவ்வளவு ஏன், எனக்காக வேலைபாக்குற, கூலிப்படை, அடியாளுங்க, கடத்தல் காரங்க… யாருக்கும் எவனுக்கும் தெரியாது… அத பண்ண அவுங்க கூட காண்டக்ட் ல இருக்க எனக்கு நம்பிக்கையா ஒருத்தன் இருக்கான்… அதுனால இவுங்கள யாரு முன்னாடி போய் நானே நிண்டாலும் அவுங்க யாருக்கும் என்ன தெரியாது….

 

 

இத்தன சாதுரியம, தெளிவா எல்லாமே திட்டம் போட்டு பண்ணியும் உனக்கு என் மேல எப்படி சந்தேகம் வந்துச்சு…. அது அதுக்கு தான் உங்கிட்ட பேச ஒத்துக்கிட்டேன்….

 

 

இப்ப உன் முன்னாடி நான் பேசுறதுக்கு காரணமும் அது தான்.. எந்த வழில நான் மிஸ் பண்ணினேன்னு எனக்கு தெரியனும்ல… ” என்று இலகுவாக இனியான், ஆதித்யனிடம் பழைய நிதானத்தோடு கூறினான்.

 

“ஒஹ் அத்தனை துணிச்சலா டா ? , இத தெருஞ்சுக்கிட்டு அடுத்த முறை நீ இந்த தவறும் விடாம தப்பு செய்வ.. இல்ல குற்றம் செய்வ… தெரியாம செய்றதுக்கு பேரு தான் தவறு, தெருஞ்சு உன்ன மாதி ராஸ்கல் பண்றதுக்கு பேரு குற்றம். அதுக்கு நீ எவ்ளோ திமிரா உக்காந்து கேக்குற… என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது… இங்க இருந்து நீ வெளில போனா தான டா… எப்படி போறன்னு அதையும் பார்கிறே… ” என்று அதிகாரமாக, கோவத்துடன் அகிலன் பேச, ஆதித்யனோ அமைதியாக இருந்தான்.

 

 

அகிலனின் பேச்சை கேட்ட இனியன், ஒரு முறை ஒரு குறுஞ் சிரிப்பை உத்திரவிட அதில முடிந்தால் பிடித்து பார் என்ற சவால் தொக்கி நின்றதை ஆதித்யன் அகிலன் இருவருமே கவனிக்க தான் செய்தனர்.

 

அத்தனை நேரம் கோவப்பட்ட அகிலன் கூட இனியனது தையிரியத்தை பார்த்து, அந்த நேரத்திலும் அவன் உதிரவிட்ட புன்னகையை பார்த்து சற்றே பிரமிப்பு அடையத்தான் செய்தான், என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அந்த நொடி, இனியன் காட்டிய அதீத நிதானம், அகிலனையும் நிதானிக்க செய்தது. அவன் தையிரியத்துக்கு நிச்சயம் காரணம் காரியம் இருக்கும் என்று யூகித்துவிட்ட அகிலன், ஆதித்யனிடம் பேச்சை வளர்க்குமாறு சமிங்கை செய்தான் அதை இனியனது வாக்குமூலமாக தொடர்ந்து பதிவு பண்ணும் நோக்கோடு.

 

இனியன் கேட்ட கேள்விக்கு பதிலாக ஆதித்யன், “ஹ்ம்ம் வெள்… நல்ல பிளான்… ரொம்ப யோசிச்சு பண்ணி இருக்க, ஒகே நான் எப்படி உன்ன ரீச் பண்ணினேன்னு கண்டிப்பா சொல்றே…. நீ அத தெருஞ்சுகாம நிச்சயம் அர்ரெஸ்ட் ஆகமாட்ட….ஆனா அதுக்கு முன்னாடி இரண்டாவது முறை கிட்னாப் பத்தி நீ இன்னும் சொல்லலியே ” என்று ஆதித்யன் இனியனை விட உறுதியாக உனது தவறுக்கு தண்டனை உண்டு என்ற ரீதியிலும் அதோடு அவனது கேள்விக்கான பதிலை அறிந்து விடும் நோக்கோடு கேட்டான்.

 

“பரவா இல்லையே… உன் கான்பிடெண்ட், எனக்கு பிடிச்சுருக்கு… இப்படி உன்கிட்ட உக்காந்து தில்லா நான் பண்ணினதா ஆமாம் டா நாதான் பண்ணினேன்னு அப்படின்னு சொல்றதும் எனக்கு பிடிச்சிருக்கு… இது, ஹ்ம்ம் இதுல ஒரு கிக் இருக்கு… சோ சொல்றேன்… ” என்று இனியன் கூறி பேச தொடங்கினான்.

 

“அதுக்கு அப்புறம், மதியுடைய போன் நம்பர் வாங்கி அப்ப அப்ப அவளுக்கு மெசேஜ் பண்ணி, என்ன பண்றா, எங்க போறா அந்த மாதி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணினே…. ஓரளவு அவள பத்தி தெருஞ்ச பிறகு, அந்த சிவா ஓட கல்யாணம் அன்னைக்கு தூக்கலாம்னு டேட் பிக்ஸ் பண்ணினேன்….

 

 

என் மேல சந்தேகம் வர கூடாதுன்னு கல்யாணம் வர தேதிக்கு கொஞ்சநாட்கள் முன்னிருந்து மதிக்கு மெசேஜ் பண்றத நிறுத்தினேன்….

 

 

எனக்கு வலதுக்கையா இருக்கிறவன்கிட்ட சொல்லி ஒரு ஆள் ஏற்பாடு பண்ணினேன்… அவன் வேற ஒரு ஆள் யூஸ் பண்ணி ஒரு ஆட்டோ ரெண்ட்க்கு எடுத்து, அதுல மதி ஏறுரமாதி செட் பண்ணினேன்…. ஆட்டோ டிரைவரா, அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை பாக்குற ஒரு லோக்கல் ரௌடிய பிடிக்க சொன்னேன்… என்னோட பிசினஸ் கு யாரையும் நான் நிரந்தரமா ஈடுபடுத்தமாட்டே… அதுனால தான் என் தொழில் பத்தியும், என்ன பத்தியும் இந்த உலகத்துக்கு தெரியல… நான் பிளான் பண்றத, என் நண்பன் செய்வான்.. நான் நேரடிய இறங்க மாட்டேன்… இதுக்கு வேலை பார்க்குற எவனுக்கும் எதுக்காக இத பண்றாங்கன்னு அவுங்களுகே தெரியாது… அவுங்க தேவைக்கு பணம், எனக்கு தேவ என் வேலை… அந்த ஆட்டோவ நான் ஒ.எம்.ஆர் ல போக சொன்னேன், கொஞ்ச தூரத்துல என்னோட ஆளுங்க இருந்தாங்க, அவுங்ககிட்ட மதியை கை மாத்தி விட பிளான் செஞ்சே. பட் அந்த பூள், இவள பார்த்ததும், ஈ.சி.ஆர் ல கொண்டு போய்ட்டான்… நீ வேற அன்னைக்கு ஒரு பைல் கொண்டு போக சொன்ன அடையார்க்கு.

 

கடத்தல் நடக்கும்னு எதிர் பார்த்த நான், ஒ.எம்.ஆர் ல போகாம, ஈ.சி.ஆர் எடுத்தே… அந்த டைம் நீ எனக்கு கால் பண்ணி இருந்த, முன்னாடி மதி… என்னோட திட்டத்த நான் தற்காலிகமா ஏற்படுத்துன ரவுடி சொதப்பிட்டான்னு புருஞ்சது.

 

அத பத்தி யோசிக்கும் பொழுதே, மதி என் பெயர சொல்லி கத்திட்டா… அது லைன் ல இருக்குற உனக்கும் நிச்சயமா கேட்டு இருக்கும்னு யூகிச்சேன். 

 

அப்படியே விட்டா அந்த ரௌடி கிட்ட மதி மாட்டிப்பா, எனக்கு யூஸ் இல்லாம போய்டும், அதோட அவ என்ன கூபிட்டத நீ கேட்டுட… இவ சாதாரண பொண்ணு இல்ல, பத்திரிக்க காரி.. நிச்சயம் இது பெருசாகும்… இந்த விஷயம் வெளியில் வந்தா, கண்டிப்பா இந்த சம்பவத்தோட நீ போன்ல கேட்ட குரல சம்பந்த படுத்தி பார்ப்ப.

 

இது எல்லாமே என்னோட திட்டத்த அடியோட அழிச்சிரும். மறுபடியும் வேற வழி இல்லாம மதிய காப்பாத்த போனேன்….

 

அப்ப என் மனசு, இப்படியே இவள தூக்கிட்டா என்ன அப்படின்னு யோசிச்ச போது தான் நீ என்ன வெயிட் பண்ண சொன்னதும், நீ வரும் போது எப்படி அவள மறைகிரதுனும் யோசிச்சே…..

 

ஆனா அந்த யோசனைக்கும் தடை வர மாதி எனக்கு தெருஞ்ச பாதர் வந்து காரியத்த கெடுத்துடாரு…..

 

சூழ் நிலை சரி இல்லன்னு புருஞ்சு, அவர்கூடவே மதிய வீட்டுக்கு அனுப்பி வச்சேன், சரியா அந்த நேரம் நீ வந்து கேள்விமேல கேள்வி கேட்டு என்ன தொலைச்ச…

 

அத அப்போ சமாளிச்சிட்டு அடுத்து ஒரு சரியான சந்தர்ப்பம்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன், ஆனா அதுக்குள்ள மதி அவளோட வேலையில முன்னேற ஆரம்பிச்சிட்டா…

 

இனி விட்டா இது சரிப்படாதுன்னு நான் ஸ்பாட் கு போகாம அடியாளுங்கள மட்டும் அனுப்பினேன்,அந்த நேரம் நீயும் அந்த சிநேகனும் வந்து மூணாவது முறையா காரியத்த கெடுத்துடீங்க…” என்று கூறி முடித்து விட்டு ஏதோ இவை அனைத்தும் சாதாரண நிகழ்வு போல அவன் அவனுடைய ஆட்டத்தில் மும்புரமாய் காய்களை நகர்த்த தொடங்கினான்.

 

அதன் பிறகு சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது……

 

பிறகு வெறிகொண்டவன் போல இனியன், “ஏன்டா… ஏன்… நான் எனக்கு னு ஒரு லட்சியம் வச்சு முன்னேற நினைகிரே, அதுக்கு எனக்கு பணம் தேவ…அந்த பணத்த சம்பாதிச்சதும் நானும் உன்ன போல.. இல்ல உன்னவிட 10 மடங்கு மேல ஒரு பெரிய தொழில் அதிபனா ஆகிடுவே டா…

 

அதுக்கு அப்புறம் எனக்கு இந்த கடத்தல் தொழில், ஆக்சிடென்ட் டிராமா எதுவும் தேவ இல்ல, அதுக்குள்ள ஏன்டா நீயும் உன் பொண்டாட்டியும் தல இட்டீங்க?…

 

 

மதியின் கடத்தல் வெற்றினு செய்தி வரும்னு பார்த்தா வரல, நீங்க காப்பாற்றி இருக்கீங்கனு தெருஞ்சது, ஆனா அடுத்த இரண்டு நாளும் அவள பத்தி தகவல் தெரியல.. அந்த இரவு முழுக்க மறுபடியும் மதிய எப்படி போடறதுன்னு யோசிச்சே… இனி ஒரு நாள் கூட வீண் செய்ய கூடாதுன்னு முடிவு செஞ்சே, அவளோட போன் கு கால் பண்ணினே, அவ அப்பா எடுத்தாரு… சரின்னு விவரம் தெருஞ்சு ஹாஸ்பிட்டல் சூழல்  பாத்து, ஆள் வச்சு அவள அங்கயே போற்றலாம்னு முடிவு செஞ்சப்ப தான் ஹாச்பிட்டால்ல உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனது தெரியவந்தது.

 

 

சும்மேவே ஆடறவன் நீ, இனி உன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் மதிய தூக்குறது சுலபம் இல்லன்னு தோணிடுச்சு….

 

 

முதல் முறைய ஒரு பொண்ண தூக்கணும்னு பிளான் பண்ணி அதுல தோல்வி அடஞ்சேன்னு நினைகிரப்ப எனக்கு ஏமாற்றமாவும், அவமானமாவும் இருந்தது.

 

 

இனி ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்கனும்னு முடிவு செஞ்சே….

 

உங்களுக்கே தெரியாம உங்க வீட்ட கண்காணிக்க ஆள் போட்டே, உங்கள நிழலா தொடர செஞ்சேன், ஆனா நான் நினச்ச மாதி எதுவும் நடக்கல, பட் நீ என்ன ட்ராக் பண்ணிட்ட.

 

 

அது தான் புரியல…. உன்கிட்ட இத்தனையும் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல… ஆனா எனக்கு தெரியும், இத்தன நேரம் எனக்கு நம்பிக்கை ஆனவன்னு நான் சொன்னது என்னோட உயிர் நண்பன் ஆஷிக்க தான்.அவன நிச்சயம் நீ எதோ பண்ணி இருக்க.

 

இவ்ளோ நேரம் ஆஷிகோடா பெயர சொல்லாம, இப்ப உன்கிட்ட சொல்றேனா, அதுக்கு காரணம், நீ நிச்சயம் அவன கண்டு பிடிச்சிட்ட, அவன என்ன செஞ்ச?… இந்த ஊரு உலகத்த பொருத்தவர நாங்க ரெண்டு பேரும் அறிமுகம் இல்லாதவங்க… அப்படி தான் வெளியில நடத்துகுரோம்… ஆனா அத எப்படியோ நீ தெருஞ்சுகிட்ட, அது எப்படி..? இப்ப அவன் எங்க?

 

இதே தெருஞ்சுக்க தான் இவ்ளோ நேரமும் பொறுமையா பேசுனேன்…. ஆனா உன்ன மாதி ஆளுகிட்ட இப்படி பேசுறதும் செம கிக்கா தான் இருக்கு…

 

அத புருஞ்சுக்கிட்டனால தான், இவ்ளோ நேரம் நான் உன்கிட்ட உங்காந்து பேசிட்டு இருக்கே…. உன்கிட்ட இருந்து எனக்கு தெரியவேண்டியது தெரியனும்… எனக்கு பயம் இல்ல, தையிரியமான ஆம்பலடா நா… அதே அளவு, ச ச இல்ல என் தையிரியத்துல பாதி உங்களுக்கு இருந்தா கூட எனக்கு பின்னாடி என்ன வேலை பண்ணுன இப்ப சொல்றியா?” என்று கடினமான குரலில் இனியன் கூற, இத்தனை நேரம் அமைதியாக இருந்த ஆதித்யன் வாய் விட்டு சிரிக்க தொடங்கினான். 

 

 “ஹ்ம்ம் பரவா இல்லையே… நான் நினச்சதவிட நீ ப்ரில்லியன்ட் தான், ஆஷிக்க தூக்கியாச்சுனு சரியாதான் நீ யூகிசிருக்க… ஹ்ம்ம் பெர்பெக்ட், என்கிட்டே இருந்து தெருஞ்சனுக்கனும்னு ஆசை பட்டல, சொல்றே….

 

நீ மதியை முதல் முறை காப்பாற்றின, ஆனா நான் அத பத்தி அப்ப ரொம்ப யோசிக்கல, ஆனா இரண்டாவது முறை போன்ல கேட்ட பெண்ணோட குரல் உன்னோட மழுப்பலான பேச்சு என்ன யோசிக்க வச்சுச்சு ஆனாலும் நான் அத தொடரால…

 

மதிய கல்யாணம் செஞ்ச பிறகு, மதி க்கு மூனு முறை உயிர் க்கு ஆபத்து வந்துருக்குனு சிநேகன் மூலம் தெருஞ்சுகிட்டே… முதல் முறையும், மூனாவது முறையும் நான் ஸ்பாட் ல இருந்தேன்… ஆனா இரண்டாவது முறை எப்ப னு தகவலும் சிநேகன் மூலம் தெருஞ்சது, அன்னைக்கு நான் போன் ல கேட்ட குரல் மதியோடது தானா அப்படின்னு கண்டு பிடிக்க தான் அன்னைக்கு உன்முன்னாடி, போன் ல பேசுறது போல பேசினேன் நினைவு இருக்கா?” என்று கேட்டு நிறுத்திய ஆதித்யன் இனியனின் பதிலுக்கு காத்திருந்தான்.