Advertisement

முகிழ் –  29

 

லேசாக இருள் கவ்விக் கொண்டிருந்த வேலையில் குடும்பம் ஆசி வழங்க ஆதித்யனும் மதியும் அடுக்கம் செல்ல வீட்டை விட்டு புறப்பட்ட அடுத்த வினாடி அந்த இரு உளவாளிகளும் அவர்களை பின் தொடர அவரகளது ஒற்றர் பணி அடுத்து 500 மீ வரை மட்டுமே நீடித்தது. அவர்களது பணியை மட்டும் அல்லாது அவர்களையும் தனது பிடியில் முடக்கி இருந்தான் ஏ.சி.பி அகிலன்.

 

அதன் பிறகு மதியும் ஆதித்யனும் அழகர் கோவில் நோக்கி பயணிக்க, இந்த விஷயத்தை குருஞ்ச்செய்தி மூலமாக ஆதித்யனுக்கு தகவல் சொன்ன அகிலன் அவ்விருவரையும் தனது குழுக் கொண்டு மடக்கி பிடித்து, ரகசிய இடத்தில் காவல் இருத்தினான்.

 

அந்த விஷயமும் வெளியில் வராதவாறு மிக எச்சரிக்கையுடன் அவன் நடவடிக்கைகள் இருந்தன. 

 

அன்று இரவு முதல் சல்லடை போட்டு, அவர்களின் முதல் துருப்பு சீட்டான விஜய ராஜசேகரன் இருப்பிடமும் ஆதித்யன் குடுத்த தகவல் படி குறிபிட்ட பகுதியின் சுற்று வட்டாரத்தில் கண்காணிப்பு போட்டு அதே சனிகிழமை காலை அவனை கையும் களவுமாய் பிடித்திருந்தான் அகிலன். 

 

இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட மூவரையும் ஏ.சி.பி அகிலன் கைதி செய்ததை அவனின் குழுவை சார்ந்தவர்களை தவிர வேறு யவருக்கும் தெரியா வண்ணம் வைத்திருந்தான். எக்காரணம் கொண்டும் எதிராளியின் திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டதை எதிரி உணரும் படி செயல் இருக்ககூடாது என்ற எண்ணம் கொண்ட அகிலன் அதனாலையே மிக ரகசியமாகவும் கனகச்சிதமாகவும் மிக துரிதமாகவும் செய்து முடித்திருந்தான்.

 

அம்மூவரையும் தனி தனியே வைத்திருந்தவன் அவர்களது கைபேசியை மட்டும் கைப்பற்றிக்கொண்டு கிளம்பினான்.  குரல் மாற்றி பேசும் திறன் கொண்ட ஒருவரை அழைத்தவன் அவர்கள் மூவரின் குரலிலும் பேசுவதற்கு ஏதுவாய் அவர்களின் குரலை பதிவு செய்து போட்டுக்காட்ட வந்தவரும் சுலபாமாக அவர்களின் குரலில் பேசினார்.

 

பிறகு அவனின் குழுவை சேர்ந்த இருவர், அகிலன், மற்றும் மாற்று குரல் பேசும் திறன் கொண்ட ஒருவர் என வாடகைக்கு ஒரு ஹோண்டா சிட்டியை தேர்வு செய்தவன் ஆஷிகை தேடும் பணியில் ஈடுப்பட்டான்.

 

அந்த வார இறுதியின் முதல் நாளான அந்த சனிக்கிழமை மதியின் வாழ்விலும் ஆதியின் வாழ்விலும் ஒரே நாளில் இன்பத்தையும் துன்பத்தையும் கொடுத்திருக்க, அதே சனிகிழமை அகிலனும், சிநேகனும் வெவ்வேறு வழிகளில் ஆஷிக்கை தேடும் பணியில் இறங்கி இருந்தனர்.

 

ஆதித்யன் குடுத்த அந்த கை பேசி இயங்கும், குறிப்பிட்ட பகுதியில் தனது ஆட்களை கொண்டு சுற்றி வளைத்து ரகசியமாக தேட, அந்த பகுதியில் ஆஷிக் என்ற பெயர் கொண்ட எவருமே இல்லாமல் இருந்ததனால், அவர்கள் இடைப்போட்டதைவிட எதிரி வலியவன் என்ற முடிவிற்கு வந்த அகிலன் சில நவீன சாதனங்கள் கொண்டு அந்த பகுதியில் துள்ளியமாக எந்த கட்டடத்தில் இந்த கை பேசி எண் இயங்குகிறது என்று அறிய முயன்றுக் கொண்டு இருந்தான்.

 

ஜி.பி.எஸ் மூலமாக எந்த கட்டடத்தில் எந்த தளத்தில் எந்த திசையில் என்று அவன் கண்டறிந்த அதே நேரம் அங்கே அதே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் குழுமி இருப்பதாக தெரியவர, அவர்களில் எவர்? என்று எப்படி கண்டறிவது என அகிலன் ஆழ்ந்த யோசனைக்கு சென்றான்.

 

அவன் விசாரித்த பொழுது அங்கே ஒரு தொழில் சார்ந்த கருத்தரங்கம் இருப்பதாகவும் அங்கே ஒரு சந்திப்பு நடந்துக்கொண்டு இருப்பதாகவும் தெரியவர, அது முடியும் வரை பொறுத்திருக்க அகிலன் முடிவு செய்தான். அந்த குழு கலைவதற்கு கிட்ட தட்ட மாலை ஆகி இருந்தது.

 

அதே சனிகிழமை காலை முதல் மாலை வரை சிநேகன் காணாமற் போனவர்களில் மிச்சம் இருந்த வீடுகளையும், ஆஷிக் பற்றி தகவல்களையும் சேகரிக்க முயன்றுக்கொண்டு இருந்தான்.

 

சிநேகன் இவ்வாறாக அழைந்துக் கொண்டு இருக்க, கடந்த 3 நாட்களாக சிநேகனிடம் இருந்து அழைப்பை எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிரல்யா அவனை மனதினுள் திட்டிக்கொண்டே மாலை 6 மணி அடித்தவுடன் அலுவலகம் விட்டு கிளம்பிய படியே அவனுக்கு அவளது கைபேசியில் அழைத்தாள்.

 

அந்த எண்ணிற்கு உரிய டவர் இருந்த பகுதியில் சுற்றி கொண்டு இருந்த சிநேகன் எப்படி ஆஷிக்கை கண்டறிவது என அலசிக்கொண்டு இருக்க அந்த நேரம் வந்த கைபேசி அழைப்பில் கவனம் பதித்தவனாக அதை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.

 

“ஹெலோ… சொல்லு நிரு…” என்று சிநேகன் கூற நிரல்யவோ, “என்ன சொல்ல, 3 நாளா ஒரு மெசேஜ் இல்ல, கால் இல்ல…. என்னனு கூட கேட்கல, உங்களுக்கு எல்லாம் எதுக்கு லவ்… நான் சொன்ன 1 வார டைம் முடியபோகுது…. நான் உங்க லவ் அ ரிஜக்ட் பண்றே..அத சொல்ல தான் கூப்பிட்டேன்…பய்” என்று கூறி அழைப்பை துண்டிக்க போனவளை அவசரமாக தடுத்தது சிநேகனின் குரல்.

 

“பேபி மா…ஒன் செக் ப்ளீஸ்… வச்சுடாத… நான் இப்ப உங்க ஆபிஸ் இருக்க ஏரியாலதான் இருக்கேன்…. இப்ப உனக்கு ஆபிஸ் முடியிற டைம் தானடா… நீ வா, நான் கீழ வெயிட் பண்றேன்…. மார்னிங் இருந்து எதுவும் சாப்டல…. முதல்ல ஒரு ஹோட்டல் போவோம்.. சாப்பிட்ட பிறகு நீ சொல்லு, அப்புறம் நான் தெளிவா கேட்டுக்கிறேன்… ப்ளீஸ் டா….” என்று கூற நிரல்யா மனமோ, “இவரு காலையில இருந்து சாப்பிடலையா? ஒரு வேலை என் பதில்காக தானோ….? இப்ப கூட என்ன பார்க்க தான் வந்துருக்காறோ… சரி எது எப்படினாலும் சிநேகன நல்லா கெஞ்ச விட்டு தான் ஒகே சொல்லணும்…உடனே சரின்னு மட்டும் சொல்லிட கூடாது நிரல்… கோ கோ நிரல்…, சிநேகன் நல்லா உன்கிட்ட கெஞ்சனும்” என்று எண்ணமிட்டது.

 

கீழே சென்றவளை எதிர்க்கொண்ட சினேகனை பார்த்து ஒரு கோவ பார்வை பார்த்தாலும், உணவு உண்ணாமல் அலைந்து கலைத்த அவனது வாடின முகம் நிரல்யாவையும் சேர்த்து வாட்டியது. ஆனால் அவன் 3 நாட்களாக அவளை அழைக்க கூட இல்லாததால் அவனிடம் பொய் கோபம் காட்டி அவள் காதலை நிராகரித்து விட்டதாக சிறு நாடகமாட முடிவெடுத்தாள்.

 

சமாதானமோ, அவளிடம் வேறு எதுவும் பேசவோ சிநேகன் முயற்சி செய்வான் என்று நிரல்யா எதிர்ப்பார்த்திருந்தால் அவளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். ஏனெனில், சிநேகன் அதற்கெல்லாம் முயன்றாதாக கூட தெரியவில்லை.

 

அவளை பார்த்ததும், “வா நிரல்யா… எதுனாலும் நான் ஒரு டிபன் சாப்பிட்ட அப்புறம் சொல்லு…. பசில என்னால யோசிக்க கூட முடியல…” என்று அவளின் கை பிடித்து அருகில் இருக்கும் உணவகத்திற்கு அழைத்து சென்றான் சிநேகன்.

 

எதிர் எதிர் இருக்கையில் இருவரும் அமர்ந்திருக்க, நிரல்யவோ, “நம்ம லவ் சொல்றத விட, இவருக்கு டிபன் முக்கியமா போச்சா? ” என்று ஒரு மனம் நினைக்க, மறு மனமோ, “ஒரு வேலை இந்தமாதி எதாச்சும் பண்ணி அப்படியே நம்மள சமாதன படுத்துவாரோ?” என்று மறு மனமும் நினைத்தது.

 

அந்த உணவகத்தின் பணியாளர் வந்து உணவுவகைகளின் பட்டியல் அடங்கிய புத்தகத்தை தர, அதை ஒருமுறை பார்த்த சிநேகன் அவரிடம், “முந்திரி போட்ட ரவ தோச 1, அப்புறம் சூட ஒரு கப் கும்பகோணம் டிகிரி காபி….. அப்புறம் ஒரு பெரிய கப் வெண்ணில்லா ஐஸ் கிரீம்…” என்று கூறிவிட்டு நிரல்யாவை பார்க்க, அவளோ முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் தோசை வரவும் அதை ரசித்து சாப்பிட, இங்கு நிரல்யாவிற்கோ பொறுமை பட்டமாக பறந்துக்கொண்டு இருந்தது. ஆனால் அவள் கோவத்திற்கு காரணமனா சிநேகனோ அதை எள்ளளவும் மதியாது, கருமமே கண்ணாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

 

அவள் பொறுமை பறந்து காற்றோடு கலக்க இருந்த நொடி அவன் சொல்லி இருந்தபடி காபியும், பனிக்கூழும் வர காபியை தன் பக்கமாகவும், பனிக்கூழை நிரல்யாவின் பக்கமாகவும் நகர்த்திய சிநேகன் அவளிடம், “மொதல்ல இத சாப்பிடு….” என்று கூற அவளோ, “ஒ இப்ப தான் சார்க்கு என் நாபகம் வருதா? ” என்று நக்கல் கலந்த குரலில் கூற சிநேகனோ, “நிருமா… இது மொதல்ல சாப்பிடு.. நான் சந்தோசமா இருக்கேன்… அதுக்கு தான் இந்த ட்ரீட்… பாரு இந்த பாமிலி பாக் பெரிய கப் வெண்ணிலா உனக்கு தான்… நான் ஷேர் கூட கேட்கமாட்டே … ப்ராமிஸ்… ஹ்ம்ம் சாப்பிடு நிரு” என்று கூற நிரல்யவோ, “நான் என்ன சொல்றேன்.. நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… நான் உங்கள ரிஜெக்ட் பண்ணிட்டே… நான் சொல்றது புரியிதா இல்லையா?” என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் நிரல்யா கேட்டாள்.

 

“பேபிமா… லவ் வைடிங் பீரியட்ல, பொண்ணுங்கனா கோவ படுறதும், ஆம்பலைங்கனா அடங்கி போறதும் சகஜம் தான….நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க, நான் இந்த நிமிசத்த கொண்டாடுற மூடுக்கு வந்துட்டேன்…. ஏன்னா… நான் இப்ப ஹாப்பிய இருக்கேன்…” என்று சிநேகன் கூற நிரல்யா எரிச்சல் பட்ட குரலில், “அப்படி என்ன தான் சந்தோசம் உங்களுக்கு…. சொல்லி தொலைங்க… இந்த காதல பத்தி கூட அப்புறம் பேசிக்கலாம்… வந்தது இருந்து பசி பசி…அப்புறம் ஹாப்பி ஹாப்பி… எல்லா என் நேரம்” என்று சலிப்புடன் கூற சிநேகனோ அவளிடம், “மழைல நனைஞ்சா ஜலதோஷமும். லவ் பிக்கப் ஆனா சந்தோசமும் சகஜம்தான” என்று கூறிவிட்டு ஒரு பேனாவை தனது சட்டையில் இருந்து எடுத்து அருகிலிருந்த ‘மெனு கார்டை’ திருப்பி ஒரு கையை மறைத்துவைத்து எதையோ எழுதிவிட்டு ஒரு சில நிமிடங்களில் அதை நிரல்யாவிடம் குடுத்தான்.

 

ஐஸ் க்ரீமே!!!

இந்த வெண்ணிலா ஐஸ் க்ரீம்

தந்தது ஏன் தெரியுமா பெண்ணே?

அழகான உருண்டை டி கடை பண்ணே;

 

நீ சொல்லாமல் சொல்லிய காதலை

நீ சொல்லாமல் சொல்லிய காதலை

கண்டுகொண்டேனடி உன் கோவத்திலே

 

 

என்று அவன் எழுதி குடுத்திருந்ததை படித்து அவள் முடிக்க, சிநேகன் சரியாக “ஞா…” என்ற சப்தத்துடன் ஏப்பம் விட்டான்.

 

ஏப்பம் விட்ட அடுத்தநொடி, “பேபிமா, இரு கவிதைய உனக்கு நானே எக்ஸ்ப்ளைன் பண்றேன்….” என்று கூற நிரல்யவோ, “ஐயோ சிநேகன் வேணம் விடுங்க, எனக்கே புருஞ்சுசிருச்சு…. உங்க கால் வராததுக்கு நான் கோவபடுறே, உங்க மேல உரிமை எடுத்து கோவிச்சேன்… இத வச்சு நீங்க கண்டுபிடிச்சுடீங்க…. நீங்க பிரிலியன்ட் தான்… பட் எக்ஸ்ப்ளநேஷன் வேணாமே சிநேகன்” என்று அவள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி அவனை கெஞ்ச வைக்கவேண்டும் என்ற கோவ பொய் பூட்டு இப்படி அனைத்தையும் மறந்து வேகமாக அவனிடம் அவள் புரிந்துக்கொண்டதை சொன்னாள்.

 

ஆனால் உண்மையில் அவள் வீம்பாக போட்டுக்கொண்ட கோவ முகமூடி, அவன் கவிதையை வாசித்ததிலிருந்து காணமல் போய் இருந்தது.

 

நிரல்யாவை பொருத்தவரை அந்த கவிதை கொஞ்சம் சிரிப்பும் நிறைய நம்பிக்கையும் கொடுத்திருந்தது.

 

அவள் தொலைபேசியில் பேசிய ஓரிரு வார்த்தைகளில் இருந்தே அவளின் காதலன் இன்னமும் சொல்லபடாத அவளது காதலை சொல்லாமலே புரிந்துக்கொண்டதால் வந்த நம்பிக்கை அது.

 

அவள் மனமோ, “இந்த மாதி மொக்க கவிதை எழுதுறாருன்னு தான் 1 வாரம் சொல்லாம இழுதடிச்சே… கடைசில அதை விட இன்னும் ஒரு மொக்கை கவிதை மூலமா என் மனச நான் சொல்றதுக்கு முன்னாடி அவரு சொல்றாரு….. போற போக்க பாத்தா…இவரு கவிதை எழுதுறத என்னால நிறுத்தமுடியுமா? … அய்யோ குடிக்கிறவன் புருஷனா வந்த கூட மாற்றிரலாம் போல… ஆனா இவரு… நிறுத்துவாரா? திருந்துவாரா… ஹ்ம்ம்ம்ம் ” என்ற பெருமூச்சுடன் சினேகனை நிமிர்ந்து பார்க்க அவனோ, “வாட் பேபி, ஐ க்னோ…. உனக்கு அந்த அளவு கவிதைல அதோட கருத்த பிரிச்சு பார்க்க தெரில.. பட் நோ பேபி… நீ எப்பயும் இன்பிரியரா யோசிக்க கூடாது… மாமா நான் இருக்கேன்ல…” என்று கூறினான்.

 

அப்புறம், “பேபி மா… மாமாக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா… அது தான் காலையில இருந்து சாப்டாம கொள்ளாம அலைஞ்சு திரியிரேன்…. நல்ல வேலை நீ போன் பண்ணின….இது ரொம்ப இம்பார்டன்ட் நிரு….அதுனால இப்ப என்ன சொல்ல வரேன்னா… நான் வேகமா இந்த கவிதைக்கு விளக்கம் சொல்லிட்டு கிளம்புறேன்… இன்னும் ஒரு 1 வாரத்துல நாங்க பப்ளிஷ் பண்றதுக்கு எல்லா ஆதாரமும் கிடைச்சுரும்… அப்புறம் மாமா நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவே… ஓகேயா…” என்று கேட்க நிரல்யாவோ, “அது எல்லாம் ஒகே..பட் அந்த விளக்கம் தான் ” என்று இழுக்க சிநேகனோ அவள் அதை கேட்க ஆவலாக இருகின்றாள் என்று தவறாக புரிந்துக் கொண்டு, “வாவ் பேபி மா…. உனக்கு இவ்ளோ ஆசையா, இரு சொல்றேன்” என்று தொடங்கி சொல்ல ஆரம்பித்தான்.

 

“நான் உன்ன, என் வாழ்கையில ஐஸ் கிரீம் னு சொன்னே… ஆனா வெண்ணிலா ஐஸ் கிரீம் வந்த போது உன்ன நிலா கூட கம்பார் பன்னல கவிதைல…அதை நீ கவனிச்சியா? … உண்மைய சொல்லனும்ன… நீ அந்த நிலாவவிட அழகு நிரல்… வாவ் நிரு மா கவனிச்சியா? நீ நிலா, நிரல்…எல்லாமே நி ல வருதுல…சிநேகன் டைமிங்க்ள ர்ய்மிங்கா அசத்துரடா…ஹா எங்க விட்டே…நிலா… கரெக்ட், நான் உன்ன நிலவு கூட ஒப்பிட்டு எழுதிருப்பேன்… பட் உனக்கு தெரியும்ல என் பிரின்ட் மதி, மதியும் அப்புறம் அவுங்க வீட்ல இருக்க அவளோட கசின் சிஸ்டர் நிலா வும் 2 பேரோட பேரும் நிலவு அப்படின்னு தான் மீனிங் … நான் எழுதுன கவிதை எப்படியோ அவுங்களுக்கு தெரிய வந்துச்சுன்னுவையி அந்த 2 பேரோட புருஷங்களும் இத அவுங்க மனைவிட்ட காதல் சொல்ல யூஸ் பண்ணிக்கிட்டா…? அதுக்கு தான்…இனி எல்லா கவிதையும் என் நிரு செல்லத்துகுத்தான்…” என்று கூற நிரல்யா தலையில் கை வைத்து அமர்ந்தாள்.

 

மேற்கொண்டு அவன் கவிதை விளக்கத்தை தடை செய்ய எண்ணிய நிரல்யா, “சரி சிநேகன், அப்படி என்ன முக்கியமான வேலை? காலையில் இருந்து சாபிடாமக் கூட…?” என்று கேட்க, சிநேகனோ ஒரு நபரை தேடி அலைவதாகவும் அவன் இந்த பகுதியில் தான் வசிப்பதாகவும் கூற நிரல்யாவோ அந்த நபரை பற்றி விவரம் கேட்டாள் பொதுவாக.

 

” பேரு ஆஷிக், அவனோட போன் நம்பர் இது… அவ்ளோ தான் தெரியும்… வேற எதுவும் தெரியாது, அது தான் கண்டு பிடிக்க முயற்சி பண்றேன்…” என்று சிநேகன் கூற நிரல்யா அந்த தொலைபேசி எண்னை வாங்கி பார்வையை அதில் ஓடவிட்டாள்.

 

அதை பார்த்தவள் சிநேகனிடம், “இந்த நம்பரோட கடைசி 3 டிஜிட் மட்டும் எப்பயோ பார்த்தா மாதி இருக்கு… ஹ்ம்ம் ஆனா எப்பனுதான்…” என்று யோசித்தவள், “ஹா சிநேகன்… நாபகம் வந்துருச்சு, பட் இந்த நம்பர், அந்த நம்பரா இருக்காது…” என்று அவளே யோசித்து அவளே கூறி முடித்தாள்.

 

சிநேகனோ, “மொதல எங்க பார்த்தனு சொல்லு, அப்புறம் மத்தத யோசிபோம்…” என்று கூற நிரல்யா அவளுக்கு தெரிந்ததை கூறினாள்.

 

நிரல்யாவின் அலுவலக தோழி ஒருத்தி அவளது கம்பெனி முதலாளியான கவின் மீது நாட்டம் கொண்டு அவனை பற்றி தகவல் சேகரித்த போது அவனுக்கே தெரியாமல் கவினது தனி தொலைபேசி எண்னை எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் நிரல்யாவின் முதலாளி அப்பெண்ணை கண்டு கொள்ளவில்லை என்றும் மேலும் அவர் எல்லா பெண்களையும் மதிப்பாரே தவிர, தவறாக பார்த்ததில்லை இந்த பெண்ணோ கொஞ்சம் தம்பட்ட பேர்வழி என்று தொடங்கியவள் பிறகு அப்பெண் அந்த எண்ணை நிரல்யாவிடம் காட்டி அவனை பற்றி அனைத்துவிவரங்களும் அவனது தனி எண் உட்பட அவளுக்கு தெரியும் என்று தம்பட்டம் அடித்ததாகவும் கூற அப்போது அவள் அந்த எண் காட்ட, எப்பொழுதும் தொலைபேசி எண்ணில் கடைசி 3 எழுத்து நிரல்யாவிர்க்கு முதலில் பதிந்துவிடும் என்பதால் இதுவும் அவளது நாபகத்தில் இருப்பதாக கூறினாள்.

 

மேலும் அவளே தொடர்ந்து, “சிநேகன் நான் சொன்னது ஜஸ்ட் 3 டிஜிட் தான்…. நீங்க தேடுற ஆளு பேரோ ஆஷிக், இவரு பேரு கவின்…. அதோட அவர் எவ்ளோ நல்லவரு தெரியுமா? ” என்று கூற சிநேகனோ ஒன்றும் பேசாமல் அமைதியாக அவள் சொல்வதை உள்வாங்கிவிட்டு அவளிடம், “சரி நிரு… நான் பாத்துகிறேன் டா… நீ கிளம்பு… இன்னும் 2 நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… என்னால சரியாய் பேச முடியாது உன்கிட்ட…” என்று கூறி அவன் விடைபெற, அவளும் அவனுடன் கிளம்பி வீட்டை நோக்கி பயணித்தாள்.

 

ஆதித்யனது லாவகமானா வண்டி ஓட்டும் திறனில் அவர்கள் சென்னையை சேரவேடிய தூரத்தில் முக்கால் சதவீதம் அடைந்திருந்தார்கள். மலை மருத்துவர் குடுத்த மருந்து வீரியத்தில் கண் அயர்ந்திருந்த மதி, அப்போதும் லேசாக ஒட்டிக்கொண்டிருந்த உடல் சூட்டால் சோர்வடைந்து படுத்திருந்தாள்.

 

சாலை மீதும் அவள் மீதும் பார்வையை மாற்றி மாற்றி பதித்தவாரே ஆதித்யன் வேகமாக சென்றுக்கொண்டிருந்தான்.

 

மதியினது தொலைபேசி அழைக்க, மதி கண்விழிக்காததால் ஆதித்யன் அதே ஏற்று காதுக்கு கொடுக்க, நிரல்யா சொன்ன தகவல்களை மறுமுனையில் சிநேகன் சொல்லி கொண்டு இருந்தான். அந்த தகவலை மதியிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோளோடு சிநேகன் அழைப்பை துண்டிக்க அடுத்த நொடி ஆதித்யனது அழைப்பேசி அலறியது.

 

“க்ரிஷ்ணவ்… நீ குடுத்த நம்பர்… இங்க ஒரு பிரைவேட் கம்பெனி வச்சிருக்கவர இண்டிகேட் பண்ணுதுடா… ஜி.பி.எஸ் மூலம் ட்ராக் பண்ணினப்ப…அந்த கம்பெனி ஓனர் கவின் போற டிரெக்ஷன் காட்டுதுடா…., இப்ப நான் அந்த வண்டிய பாலோவ் பண்றேன்… உனக்கு அப்ட்டே பண்றே…” என்று அகிலன் ஆதியிடம் கூற ஆதியும் சரி என்றும் அவன் இன்னும் சில மணி நேரங்களில் சென்னை வந்துவிடுவதாகவும் கூறி அழைப்பை துண்டித்தான்.

 

நிரல்யா மூலமாக அறிந்துக் கொண்டதை வைத்து பத்திரிக்கைகாரனான சிநேகன் வேகமாக செயல்பட்டு ஆதித்யனுக்கு தகவல் கூறிய பின்பு கவின் பற்றிய சிறு தகவலும் அவனுடயை காரையும் கண்டறிந்தான்.

 

அகிலன், நிரல்யாவின் கம்பெனி முதலாளியான கவினை தொடர்ந்துக்கொண்டு சென்ற அதே வேலை சிநேகனும் தொடர்ந்துக் கொண்டு இருந்தான்.

 

சிறுது தூரத்திலே அகிலன் வருவதை சிநேகனும், சிநேகன் வருவதை அகிலனும் இனம் கண்டுக்கொண்டு ஏதோ வகையில் கவினை இருவருமே நெருங்கிவிட்டததை உணர்ந்தனர்.

 

சிநேகன் அவனது இரு சகர  வாகனத்தில்  தொடர்ந்ததால்  சற்று  பின்  தங்கியே  வர  அதோடு  அகிலனது  4 சக்கர  வாகனம் அவனுக்கு  மறைவாக இருக்க ஆகாஷ் என்று அவர்கள் கருதும் கவின் சினேகனை கண்டறியவில்லை. ஆனால் வெகுநேரமாக தன்னை தொடர்ந்து வரும் வெள்ளை ஹோண்டா சிட்டி யை கண்டுக்கொண்ட கவின், அதில் இருப்பவர் யார்? ஏன் தன்னை பின்பற்ற வேண்டும் என்று யோசிக்க தொடங்கி இருந்தான். ஒருவேளை அது அவனின் பிரம்மையோ என்ற எண்ணம் தோன்ற வேகத்தை கட்டுப்படுத்தி அவனது வண்டியை சாலை ஓரத்தில் ஒதுக்கு புறமாக நிறுத்த எத்தனிக்க   அவன் வண்டியின் வேகத்தை கட்டு படுத்தியத்தில் இருந்தே அவனின் அடுத்த செயலை யூகித்த அகிலன் அந்த வண்டியை தாண்டி செல்லுமாறு ஓட்டுனரை பணிந்தான். பகிரங்கமாக செய்யாது, பதுங்கி இருந்து பிடிக்கவேண்டிய கட்டாயத்தால் அவன் அன்று அலுவலக வண்டியை தவிர்த்து இரவலுக்கு வண்டியை கொண்டு வந்திருந்தான், ஆதாலால் அந்த ஹோண்ட சிட்டியை கவினால் இனம் காண முடியவில்லை. 

 

அகிலனின் பின் வந்த சிநேகனோ, கவினது வண்டி ஓரங்கட்டிவிட்டத்தையும், அகிலனோ அதை தாண்டி செல்வதையும் பார்த்து, பின்தொடர்வதை கவினும் அதே சமயம், கவின் சுதாரித்துவிட்டத்தை அகிலனும் அறிந்துக் கொண்டு விட்டத்தை சிநேகன் கண்டுக்கொண்டான். 

 

அகிலன் இப்பொழுது கவின்யுடைய வண்டியை தாண்டி சென்று அதற்கு அடுத்து வந்த வளைவினில் திரும்பி சென்றுவிட்டதாக போக்கு காட்டிவிட்டு மறுபடியும் தொடர்வதற்கு ஏதுவாக வண்டியை யு வடிவில் வளைத்து நிறுத்திவிட்டு, சிநேகனுக்கு ஏ.சி.பி அகிலன் அழைக்க அதே சமயம் கவின் அவனது வண்டியில் அமர்ந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான்.

 

கவினுடைய வண்டி நின்றுவிட்டதால் அதன் அருகில் வந்துவிட்ட சிநேகனோ இனி எப்படி இங்கே நேரத்தை தாமத்திப்பது என சிந்திக்கும் பொழுதே அகிலனது அழைப்பு வர, அழைப்பை ஏற்பவன் போல அவனும் கவினது வண்டிக்கு கொஞ்சம் இடைவேளை விட்டு அவனது வண்டியை நிறுத்தி அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்ததான்.

 

“சிநேகன், நான் சொல்றத கவனமா கேளுங்க” என்று அகிலன் கூற சிநேகனும், “சொல்லுங்க சார்….” என்று கேட்டுக்கொண்டான்.

 

“நீங்க இப்ப எதாச்சும், அந்த கார் ல இருக்குற கவின் கிட்ட பேசுங்க… அப்ப அந்த கவின் க்கு ஒரு போன் வரும்… அதுல அவரு என்ன பேசுறாருன்னு எனக்கு தெரியனும்… நீங்க இந்த போன டிஷ்கனெக்ட் பண்ணாதீங்க… ஒகே…” என்று கூறிவிட்டு அருகில் இருந்த மாற்று குரலில் பேசும் கலைங்கனிடம் ஆஷிக் என்று அவர்களுக்கு கிடைத்த எண்னை, விஜய ராஜசேகிரனுடைய கைபேசியில் இருந்து அழுத்தி பேசும் மாறு அகிலன் கூறினான்.

 

இந்த இடைப்பட்ட நேரத்தில் கவின் அவனது வண்டியை இயக்க எத்தனிக்க, வேகமாக வந்த சிநேகன் காரின் பக்கவாட்டு கான்னாடியின் அருகில் நின்று, “சார்… ஒரு அட்ரெஸ் தெரியனும்… ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..” என்று கூறிவிட்டு கவின் முன்னிலையிலே, “அண்ணா… இதோ ஒருத்தர்ட்ட அட்ரெஸ் கேக்க போரேண்ணா, நான் வந்துடுறேன்… ஒரு நிமிஷம் லைன் ல இரு அண்ணா…” என்று கூறிவிட்டு ஏதோ வாய்க்கு வந்த விலாசத்தை கேட்க அந்த நேரம் சரியாக கவின் அருகில் இருந்த தொலைபேசி அடிக்க சினேகனை ஒருமுறை பார்க்க, ஹெல்மெட் அணிந்திருந்த சிநேகனோ மறுபடியும் கைபேசியில், “ஒரு ஒரே நிமிஷம் அண்ணா… அவருக்கு ஏதோ போன் வருது, ஒரு நிமிஷம்.. நான் வழி கேட்டு வந்துறேன்” என்று கூற, அழைக்கும் எண்னை பார்த்த கவின் பொத்தானை அழுத்தி “சொல்லு” என்று மட்டும் கூற மறுமுனையில் அந்த மாற்று குரலில் பேசுபவர் அகிலன் குடுத்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, “ஹெலோ..நா” என்று கூறி அணைப்பை துண்டித்தார்.

 

மறுபடியும் அதே போல அந்த மாற்று குரலில் பேசுவோர் செய்ய மூன்றாவது முறை கவினே அழைத்து, “விஜய்… என்ன னு சொல்லு…தேவ இல்லாம உன்ன கால் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல….சரி நானே கூப்டறேன் உன்ன” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடிந்து துப்ப, மறுமுனையில் அழைப்பு துண்டிக்க பட்டு இருந்தது.

 

யோசனை படிந்த முகத்துடன் ஒரு நிமிடம் கைபேசியை பார்த்தவன் ஒரு சில வினாடிகளில் சுதாரித்தவனாக சிநேகனிடம் சிரித்த முகமாக அவன் கூறிய விலாசத்திற்கு ஏதோ பதில் சொல்லி விட்டு அவன் கிளம்ப அவன் பின்னோடே சிநேகனும் தொடர்ந்தான். 

 

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த அகிலன், சிநேகனுடனான அழைப்பை துண்டிக்காமலே வண்டியை தயாராக வைக்கும் படி பணிந்து, அந்த மாற்று குரலில் பேசுபவரிடம் தொலைபேசியில் பேசியவன் கூறிய வார்த்தைகளை கேட்க, அகிலனுக்கு சட்டென புரிந்தது, சிநேகன் தற்சமயம் பேசியது கவின் என்ற ஆஷிகிடம் என்று.

 

அவன் வாயால் இன்னும் தெளிவாக அதாவது கவினது வாக்குமூலமாகவே கேட்க நினைத்த அகிலன் தொடர்பில் இருந்த சிநேகனிடம் மீண்டும் ஆஷிக் (எ) கவினை பின் தொடருமாறும், ஒருவேளை அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டால், தயங்காது அவனது ரகசிய பெயரான ஆஷிக் என்று அவனை அழைத்தே பேசுமாறும் கூறிய அகிலன் சினேகனை பின் தொடர சொல்லி விட்டு அருகில் ஏதேனும் ‘கால் டாக்ஸி’ கிடைகிறதா என்று முயற்சி கொள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் அமைப்பை சார்ந்த கால் டாக்ஸி அவனுக்கு 50 மீ தொலைவிலே இருக்கிறது என்ற செய்திக்கிட்ட, அவன் வந்த காரை விட்டுவிட்டு அனைவரும் புதிய கால் டாக்ஷியில் ஏரி சிநேகனிடம் வழி கேட்டு சிறிது இடைவேளை விட்டு பின் தொடர்ந்தனர்.

 

வேகமாக செயல்பட்ட அகிலன், சிநேகனிடம் போகும் திசையை கேட்டு தெரிந்துக்கொண்டு ஒரு யூகத்தின் அடிப்படையில் ஒரு வுயூகம் அமைத்தான்.

 

எதிர் திசையில் சில கி.மீ தொலைவில் உள்ள அகிலனின் நம்பிக்கைக்குரிய நண்பனின் காவல்நிலையம் இருப்பதை அந்த வியூகத்துக்கு சாதகமாக்கி கொண்டு கவின் வருகிற வண்டியின் எண், நிறம், கவினுடைய அங்க அடையாளங்கள் என்று யாவையும் பகிர்ந்தவன் அகிலனின் நண்பனான காவல் அதிகாரியை இவர்கள் வரும் எதிர் திசையில் வரும் மாறு கூறி அழைப்பை துண்டித்தான்.

 

 

இந்த நேரத்தில் கவினோ தனக்கு பின்னால் இப்போது தொடர்ந்துவரும் விலாசம் விசரித்தவனை கண்டுக்கொண்டுவிட்டு, யோசனை படிந்த முகத்துடன் மீண்டும் மீண்டும் சிநேகன் பின் தொடருவதை உறுதி செய்துக்கொண்டு வண்டியை சரட்டென்று நிறுத்த சிநேகனும் நிறுத்தினான்.

 

 

“ஹெலோ, யாரு நீ, நீ கேட்ட அட்ரெஸ் 10 நிமிஷம் முன்னாடி வந்த லெப்ட் கட் ல போய்டுச்சு… ஆனா நீ அட்ரஸ் கேட்க வந்தவன் மாதி தெரியலையே… யாரு நீ ” என்று கவின் (எ) ஆஷிக் கேட்க, சிநேகனோ அவனது தலை கவசத்தை கழட்டிவிட்டு ஒரு மென் முறுவலுடன், “நான் … ” என்று தொடங்கும் முன் கவினே அதை சொல்லி முடித்திருந்தான், “ஹ்ம்ம் .. சிநேகன் இல்ல? ….சத்யம் நியூஸ் பேப்பர் ரிபோர்ட்டர்?” என்று கூறி முடித்திருந்தான்.

 

சிநேகனோ மனதினுள், “பரவா இல்லையே பயபுள்ள நம்மள கூட தெரிந்துவச்சிருக்கான்… நம்ம அம்புட்டு பாமெஸ் ஆகிட்டோம் போல…” என்று எண்ணம் மிட்டபடியே… கவினிடம், “என்ன சார்… ரிபோர்டர் எதுக்கு ஒருத்தர பின் தொடர போறாங்க…? எல்லாம் பேட்டிக்காக தான்… வளர்ந்து வரும் தொழில் அதிபர் ஆஷிக் சார் கிட்ட பேடிக்காணவே வந்தேன்” என்று நக்கல் கலந்த குரலில் கூற கவினோ ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து அதை உடனே சரி செய்தபடி, “ஆஷிக்கா? அது யாரு… ஐ அம் கவின்… நீங்க வேற யாரோ னு என்கிட்டே பேசுறீங்க சிநேகன்” என்று கூறிவிட்டு அவனது கார் நோக்கி முன்னேற முயன்ற கவினை தடுத்த சிநேகன், “ஒஹ், நீங்க ஆஷிக் இல்லையா? … அப்போ விஜய ராஜசேகரனோ, அதுவும் இல்லாட்டி வீரமாறனோ” என்று கேட்க அவன் சொன்ன பெயர் பட்டியலில் இருந்து உணர்ந்துக் கொண்ட கவின் சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டான். 

 

இதை அனைத்தும் கேட்டுக்கொண்டே வந்த அகிலன் சற்று தொலைவில் இருக்க, ஒரு சில வண்டிகள் மட்டுமே கடந்து போவதை கண்டுக்கொண்ட கவின், சிநேகன் தனியாக இருப்பதை உறுதி செய்தபடி அவனிடம் பேச எண்ணிய வேலை தொலைவில் ஒரு வண்டி வரவும் அதை ஊன்றி கவனிக்க அது ஒரு கால் டாக்ஸி என்பதனால் பெரிதுபடுத்தாது சிநேகனிடம்,” ஒஹ் உனக்கு இவ்ளோ தெருஞ்சுருக்கா?… அப்ப நீ இன்னும் கொஞ்சம் சேத்து தெருஞ்சுக்கோ… என்று கூறிவிட்டு சிநேகனது ஒரு கையை வளைத்து முறுக்கியவாறு ஒரு அறைவிட சிநேகன் திமிறிக்கொண்டு இருந்தான்.

 

சிநேகனின் திமிரலை விட அதிகம் பலம் காட்டி அவனது வண்டிக்குள் அடித்து போட, கவின் முயற்சி செய்ய சற்று முன் அவன் பார்த்த அந்த கால் டாக்ஸி அவர்களை ஒட்டினர் போல் சரட்டென்று வந்து நிற்க ஏதோ சரி இல்லை என்று புரிந்துக்கொண்ட கவின் சினேகனை தள்ளிவிட்டு அவனது வண்டியில் ஏறி வண்டியை இயக்க, எதிர்திசையில் வந்த காவல் வண்டிகள் அவனை மடக்கி பிடித்தன.

 

வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி இருந்த அகிலன் எதிர் திசையில் அவனது நண்பன் வருவதை உறுதி செய்துக்கொண்டு சிநேகனிடம் சென்று அவனுக்கு முதல் உதவி செய்யுமாறு உடன் வந்தவர்களை பணிந்தவன், அந்த இடத்திற்கு செல்ல அதற்குள் அகிலன் நண்பனிடம் அகப்பட்டு இருந்தான் ஆஷிக்.

 

திமிறிக்கொண்டு இருந்த ஆஷிகை பார்க்க ஏனோ அகிலனுக்கு கோவம் உச்சத்தை தொட அவனிடம் ஒருவார்த்தை விசாரிக்கும் முன்னமே கை முஷ்டியை மடித்து ஓங்கி ஒரு குத்து விட ஆஷிகின் உதடு கிழிந்து ரதம் கசிந்தது.

 

வந்த காவலாளிகளிடம் ஆஷிகை பற்றி எந்த தகவலும் பகிராமலே அவனது குழுக்கொண்டு ஆஷிகை அவனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான் அகிலன்.

 

அகப்பட்டு இருந்த நால்வரையும் மாற்றி மாற்றி விசாரித்தவன், தண்டாயுதபாணி பழனிவேல் கூறியதால் மட்டுமே வந்திருப்பது தெரியவர பழனிவேல் இதில் எப்படி சம்பத்தபட்டு உள்ளார் என்று தெரியமால் சிந்தனை வயப்பட்டான். தண்டாயுதபானிக்கோ, வீரமாறனுக்கோ, ஏன் விஜய ராஜசேகரனுக்கோ கூட எதற்காக இதை செய்கிறார்கள், ஆஷிக் (எ) கவின் என்ன தொழில் செய்கிறான் என்பது தெரியவில்லை. ஏன் அவர்களில் தண்டாயுதபானியோ, வீரமாறனோ ஆஷிக்கை பார்த்ததாக கூட, அவனது பெயர் கேள்விப்பட்டதாக கூட தெரியவில்லை.

 

ஆனால் விஜய் மட்டும் ஆஷிக்குடன் பரிச்சயமும், பழக்கமும் இருந்திருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டான் அகிலன் விசாரனையின் மூலம். ஆனால் விஜய ராஜசேகரனுக்கு கூட ஆஷிகின் முழு நடவடிக்கை தெரியாமல், ஆஷிக் ஆட்டிவைக்கும் பதுமையாய் விஜய் இருந்திருப்பது புரியவந்தது.

 

 

அகிலனது விசாரணையின் முடிவில் சம்மந்தப் பட்டவரை கைது செய்தாயிற்று, ஆனால் அம்மூவருக்கும் காணமல் போன 48 நபர்களை பற்றி தெரியவில்லை. மதியை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தபட்டு இருக்கிறார்கள் இவர்கள் என்பதை புரிந்துக்கொண்ட அகிலன், விஜய் க்கு மட்டும் ஒரு படி மேலாக தகவல் தெரிந்திருகிறது என்றும், ஆஷிக்கின் மூலமாகா வரும் கட்டளையில் விஜய் கடந்த 6 மாத காலமாக இயங்கி வந்து இருக்கிறான் என்பதையும் அறிந்துக்கொண்ட அகிலன் ஆஷிகிடம் இருந்து மட்டும் ஒரு வார்த்தை கூட வரவைக்கமுடியாமல் யோசனை வயப்பட்டான்.

 

அவனது போலீஸ் புத்தி ஏனோ ஆஷிக் தான் இதற்கெல்லாம் தலைவன் என்பதை ஏற்க மறுத்தது. அவனுக்கு கடத்தலில் முக்கிய பங்கு இருகின்றது என்பதை அறிய முடிந்தவனால் கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று அறியமுடியவில்லை. என்ன நடந்தாலும் வாய் திறக்காமல் இருக்கும் ஆஷிக்கை அன்று இரவு காவலில் வைத்துவிட்டு, வீடு வர நள்ளிரவு 12 மணியை தொட்டு இருந்தது.

 

சிநேகனுக்கு லேசான காயம் தான் என்பதனால் ஒரு காவலாளியின் உதவி உடன் மருத்துவமனை அனுப்பி விட்டு பிறகு அவனை அவனுடைய வீட்ற்கு அனுப்பி வைத்திருந்தான் அகிலன்.

 

வீட்டிற்கு வந்த அகிலன் தலையை அழுந்த பிடித்தபடி அமர்ந்திருக்க, வாசலில் வண்டி வரும் சப்த்தம் கேட்டு வெளியில் வந்தவன் ஆதித்யனது கார் என்பதனால் நிலாவை அழைக்க, அந்த சப்தத்தில் அனைவருமே விழித்துக் கொண்டனர்.

திங்கள் கிழமை வருவார்கள் என்று பெரியவர்கள் மற்றும் நிலா எண்ணி இருந்ததால் ஆதி மதி வரவு அவர்களுக்கு திடீர் வரவாகி போனது. பெரியவர்கள் முகத்தில் குழப்பமும் கவலையும் ஒரு சேர படர, அதற்குள் மதியும் தூக்கம் களைந்து எழுந்தவள் உடல் அசதியால் மெல்ல தடுமாற ஆதி அவளை கைத்தாங்கலாக பிடித்து நிலாவிடம், “நிலா… மதிக்கு உடம்பு முடியல, அதுனாலா தான் உடனே வந்துடோம்…. காயிச்சல்… கொஞ்சம் பார்த்துக்கிறியா…? எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…” என்று வரவழைக்க பட்ட இயல்பானா குரலில் கூற நிலாவிடம் கூறியது பெரியவர்கள் முகத்தில் இருந்த குழப்பத்தை அகற்றியது.

 

மதியழகியும், நிலாவும் மதியை கவனித்துக்கொள்ள, மதிக்கு காயிச்சலால் வந்த உடல் அசதியை விட மன உலைச்சளால், ஆதித்யனது வெறுப்பு நிரந்தரமோ என்ற பயத்தினால் அவள் சோர்வடைந்துக் காணப்பட்டாள். 

 

அகிலனை அழைத்துக்கொண்டு சென்ற ஆதித்யன் நிகழ்ந்தயாவையும் அகிலனின் மூலம் அறிந்துக்கொண்டு எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடை பழகினான்.

 

அதன் பின், “நீ சொல்றது சரி தான் அகில், அந்த ஆஷிக் மட்டும் இத பண்ணி இருப்பான்னு தோனல, மதி இதுவர கலெக்ட் பண்ணின டீடைல்ஸ் படி ஒரே ஏரியா சுத்தி நிறைய விஷயங்கள் நடந்துருக்கு…. அந்த ஏரியா எதுன்னு சிநேகன் மூலம் எனக்கு தெரிய வந்தது… அத வச்சுதான் இத ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்” என்று கூறியவன் நெற்றியை அழுந்த தேத்தபடி சிறு யோசனை பிறகு ஒரு முடிவு எடுத்தவனாக அகிலனிடம் திரும்பி அவனது திட்டத்தை விவரிக்க, அகிலன் வாய் விட்டு, “டே இது… சரியா நடந்தா ஒகே…பட் இல்லாட்டி இது கண்டிப்பா ரிஸ்க் ஆகிடும்டா…” என்று கூற ஆதித்யனோ நிதானமாக, “நிச்சயம் அப்படி ஆகாது டா…” என்று உறுதியுடன் கூறிவிட்டு அவனது அறை நோக்கி சென்றான்.

 

மறுநாள் காலை பொழுதில் இளம் மஞ்சள் கலந்த சிவப்பு நிற பழமொன்று அடிவானில் உதயமாக, உலகமெங்கும் ஒளியும் உதயமாக தொடங்கியது. கிளிங் கிளிங் என்று மெதுவாக 4 முறை ஒலி எழுப்பிவிட்டு அமைதியாகிவிட்ட அலாரத்தின் சப்தத்தில் கண்விழித்த மதி, முதலில் ஆதியை தேட மெல்ல மெல்ல அவளுக்கு நேற்று நடந்தது இப்பொழுது அவள் கண்முன் நிழலாடியது.

 

அதேசமயம் சிநேகனின் அழைப்பு வர அவள் கை பேசி சிணுங்கியது. அழைப்பை ஏற்று காதுக்கு குடுத்தவள், மற்றதை மறந்து ஆஷிகை பற்றிய தகவல் கேட்க, சிநேகன் நடந்த யாவையும் சுருங்க சொன்னவன் மற்றதை நேரில் பேசிக்கொள்ளலாம் என சிநேகன் கூற மதியும் அந்த அழைப்பை துண்டித்து விட்டு, இந்த வழக்குக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு ஆதித்யனிடம் தெளிவாக பேசவேண்டும் என்று முடிவெடுத்து, சினேகனை நோக்கி பயணித்தாள்.

 

அதே சமயம் ஆதித்யன் செழியனுக்கு அழைத்து ஒரு சில கட்டளைகளை இட அது படியே செய்வதாக செழியன் கூறிவிட்டு ஆதித்யன் இட்ட பணியை செய்ய முனைந்தான்.  .

 

 

வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, அன்று ஆதித்யன் மெமரி கார்டில் பார்த்த ஆதாரத்தில் இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த அந்த வண்டியின் எண்னை மீண்டும் பார்ப்பதற்காக அவனது அறையில் இருந்த கணினியில் பொருத்திபார்த்தவன் அந்த எண்னை குறித்துக்கொண்டு அகிலனை நோக்கி சென்றான்.

 

ஆதித்யனின் வருகையில் இருந்தே நேற்று இரவு தன்னிடம் ஆதித்யன் கூறிய திட்டத்தில் உறுதியாக இருப்பதை உணர்ந்துக்கொண்ட அகிலன் மனதில் இத்தனை பெரிய ஆபத்தை ஏற்படுத்த வேண்டுமா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

 

“அகில், இந்த நம்பர் ப்ளேட் வச்சு ஒரு வண்டி ரெடி பண்ணு… நான் சொல்ற ஏரியல, மதி அங்க வரும் போது நான் சொன்னபடி செய்தா போதும்… உன்னோட டிபார்ட்மெண்ட் ஆளுங்கள ரெடி பண்ணிட்டல? ” என்று கேட்க அகிலனோ, “இது எல்லா சரிடா…. ஆனா இதுனாலா அந்த கடத்தலுக்கு சம்பத்தப்பட்ட இன்னும் ஒருத்தன் எப்படி அங்க வருவான்னு நினைக்கிற..? மதிய கிட்னாப் பண்ற பிளான் சொல்ற, ஆனா இதுல சம்மந்தப்பட்டவங்களுக்கு, அங்க தான் நடக்க போகுதுன்னு எப்படி தெரியும்? அதோட இதுல இன்னும் கொஞ்சம் பிளாஸ் இருக்குடா மச்சான், நீ சொன்னது போல மதிய நம்ம கடத்த முயற்சி பண்ற நாடகத்துல அவளுக்கு உன்மேல வெறுப்பு வந்துட்டா என்னடா செய்வ, அதோட அக்ஷிடன்ட் மாதி செட் பண்ணி மதிய வண்டில ஏத்துறதுக்கு முன் உண்மையான ஆம்புலன்ஸ் வந்துட்டா, இதுனாலா உண்மையாகவே மதிக்கு அடிப்பட்டுடா, ஒருவேள, நமக்கு தெரியாம நம்மள தொடர்ந்து, இத பயன்படுத்தி மதிய வேறு யாரும் எதுவும் செய்துட்டா?” என்று கேள்விகளை அடிக்கிக்கொண்டே போனான் அகிலன். 

 

“இல்ல அதுபோல எதுவுமே நடக்காது… நிச்சயமா மதிக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்…. இப்ப இத நான் செய்யலனா, நிச்சயமா மதிக்கு இது நிஜமா நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு… அப்படி அவ நிஜ கடத்தல்ல மாட்டிக்க கூடாதுன்னு தான், இந்த பொய்யான கடத்தல் அகில்” என்று வெளியில் கூறியவன் மனதினுள், “இனிமேல் புதுசா என்ன இருக்கு என்ன புருஞ்சுக்காம போறதுக்கு….. என்ன வெறுக்கிறதுக்கும்…. எவளோ ஒருத்தி சொன்னத நம்பிட்டாளே என் மதி…” என்று ஒரு மனம் கூற, மறு மனமோ, “ஆனா அவ மேல கோவம் இருந்தாலும், என்ன நம்பலன்னு ஆதங்கம் இருந்தாலும் அவள என் மதின்னு தாண்டி வேற யோசிக்க முடியல, யோசனையில கூட விட்டுகொடுக்க முடியல.. ஏண்டி ஏன் என் மேல உனக்கு நம்பிக்க இல்ல…” என்று மறு மனம் நினைத்தது.

 

மீண்டும் அகிலனிடம், “அகில் நிச்சயமா இந்த பிளான் ப்லாப் ஆகாது… உன்கிட்ட முழுசா நான் சொல்லலா….ஆனா என்னோட கணிப்பு சரியா இருந்த, நிச்சயம் இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு வரும்… மதி இப்ப சிநேகன் வீட்டுக்கு போய் இருக்கா…. அவ அங்க இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் தான் நம்ம இத செய்ய போறோம்… என்னோட பாடி கார்ட்ஸ் 2 பேரு, சிநேகன், செழியன், உன் ஆளுங்க 2 பேரு, அதுக்கு அப்புறம் நீ, நான் … இப்படி இத்தன பேரு அவள சுத்தி இருக்கும் போது நிச்சயமா அவளுக்கு இதுனால எந்த பிரச்னையும் வராது… அவ உடம்புல ஒரு சின்ன கீறல் கூட விழாது அகில்… என்ன தாண்டி தான் எது நடக்கிறதுனாலும் நடக்கணும் அவளுக்கு… அதோட ரொம்ப முக்கியம் மதி கிட்ட தட்ட இன்னைக்கு அவளோட கேஸ் ல முக்கியமான விசயத்த கண்டு பிடிச்சிருவா, அப்படி பண்ணிட்டா அவ உயிருக்கு ஆபத்து, அதுக்கு முன்னாடி நாம இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்” என்று நீளமாக அவனோட கருத்தை தெளிவாகவும், திடமாகவும் திட்டமாகவும் தெரியபடுத்தினான்.

 

“சரி அப்ப மதி கிட்ட இத சொல்லிட்டு பண்ணலாம்ல டா? ” என்று அகிலன் கேட்க, “இல்ல அது இப்ப வேணாம், அதுக்கான காரணம் உனக்கே தெரியவரும்… இந்த நாளோட முடிவுலு” என்று கூறினான் ஆதித்யன்.

 

அகிலனிடம் பேசிவிட்டு அறைக்கு வந்த ஆதித்யன் மதியின் உடமைகளை பார்த்தும் அவர்கள் அடுக்கம் கொண்டு சென்ற பெட்டிகளை பார்த்தும் அவன் மனதில், “போறப்ப இருந்த சந்தோசம் இப்ப எங்க…? ஏன் மதி… இதுனாலா தான் 4 வருஷம் முன்னாடி என்கிட்ட உன் காதல சொல்லாமலே போய்டியா? … அப்ப நீ அப்படி செஞ்சதுக்கூட ஏதோ ஒரு வகையில என் மனசு ஏற்க முடியிது… ஏன்னா அப்ப நீ என்கூட பழகினது இல்ல… ஆனா கல்யாணம் ஆகி இத்தன நாட்கள் என்கூட இருந்தும் கூட என் மேல உனக்கு நம்பிக்கை வரலியா டி…? அதுனாலா தான இத்தன நாள் என்கிட்டே உன்ன நீ வெளி படுத்தல, நம்பிக்கை இருந்திருந்தா நிச்சயம் நீ வெளி படுத்திருப்ப… நம்பிக்கை இல்லாத ஒரு உறவ நான் பெருசா மதிக்கமாட்டே… ஆனா உன்ன அப்படி விடமுடியல… நீ என்னோடவ மதி.. ஆனா நீயே என்ன புருஞ்சுக்கலன்னு நினைக்கிறப்பதா என்னோட மனச, கசக்கி பிழியிது மதி…” என்று எண்ணி எண்ணி மருகினான் யாருக்கும் அஞ்சாத அந்த ஆண்மகன். 

 

அந்த எண்ணங்களின் ஊடே அடுக்கம் கொண்டு சென்ற பெட்டியை பிரிக்க அதில் இருந்து தவறி விழுந்த ஒரு கடிதத்தை கையில் எடுத்தபடி என்னவாக இருக்குமென அவன் எண்ணமிட அவன் எண்ண ஓட்டம் தடைபடவெனவே வந்தது போல சிநேகனது அழைப்பு வர அதை எடுத்து காதுக்கு குடுத்த ஆதித்யனிடம், “ஆதி சார், மதி கிளம்புறேன்னு சொன்னா… ஆனா இன்னும் வரல… அவ போன்கும் கால் போகமாட்டிது… அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்… மதிய காணோம்னு ” என்று கூற ஆதித்யன் செவிகளில், “மதியை காணவில்லை” என்பது மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்க ஆதித்யன் அசையாத மாமலை போல அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

 

 

Advertisement