Advertisement

 

முகிழ் – 22

 

ரயில் தண்டபாலமாய் இரு கம்பிகள் ஒரே நேரத்தில் ஆதியின் மனதில் ஓட, தடதடவென ஆதியின் மனம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.

 

ஒரு புறம் மதியின் வழக்கு மறுபுறம் இனியனின் மதி மீதான அக்கறை. இரண்டு யோசனைகளும் ஆதியின் மனதில் கரை புரள சினேகன் தற்போது சொன்ன தகவல்களை மறுபடியும் ஓட்டிப்   பார்த்தான். 

 

‘ஆதி சிநேகனிடம், “அந்த பொண்ணு ஏதோ மதிக்கு கால்ல அடின்னு சொல்லுச்சே சினேகன், இது எப்போ?” என்று கேட்க, சிநேகனோ, “சார் மறந்துடீங்களா?, அன்னைக்கு உங்க ஸ்டாப் சிவா மேரெஜ்க்கு போனோம்ல தம்பரம்ல, அப்ப கூட மதி ஈ.சி.ஆர். ல ஏதோ ப்ரச்சன்னல மாட்டிக்கிட்டா, ஆனா அத அவ எங்க கிட்ட சொல்லல, இது நானே கண்டுபிடிச்சது, நீங்கதான சார் காப்பாத்துனீங்க, மறந்துடீங்களா? ஒரு வேலை அப்ப அவளுக்கு அடிப்பட்டது உங்களுக்கு அவ சொல்லலியோ என்னவோ… ஹ்ம்ம் அப்படி தான் இருக்கனும், அப்ப தான் சார் கால்ல அடி” என்று கூறி முடித்துவிட்டு அவன் அமைதியாக ஜன்னலோரம் வேடிக்கை பார்க்க தொடங்கினான்’.

 

ஆதியின் மனதில் மெல்ல சினேகன் சொன்ன தினத்திற்கு அவன் மனம் பயணித்தது, “நான் இனியனுக்கு தொடர்பு செஞ்சப்ப ஒரு பொண்ணோட குரல், அப்புறம் இனியன் என்னோட அழைப்பை ஏற்கள, அதுக்கு அப்புறம் நான் வரும் போது அவன் யாரையோ அனுப்பி வச்சான் கார்ல, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம், அப்படினா நான்நினைக்கிறது சரினா இனியன் தான் மதிக்கு உதவி பண்ணி இருக்கானா?’’ என்று அவன் மனம் தீவரமாக யோசித்தது.

 

மதியின் வழக்கு ஒரு புறம் இருக்க, இப்பொழுது மதிக்கு உதவியது இனியன் தானா என கண்டுகொள்ள ஒரு திட்டம் வகுத்தான். மதியை காக்க வேண்டிய கடமை இருந்த போதும் ஏனோ ஆதியால் இனியன் மதி ஆராய்ச்சியை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை.

 

பிறகு அவன் மதியின் வழக்கில் தீவிர சிந்தனை வயப்பட்டவன், அது தொடர்பாக சில செயல்களையும் செய்ய திட்டமிட்டான்.

 

சினேகன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவனை இறக்கி விட்டவன் அகிலனுக்கு அழைத்து அவன் அன்று கேட்ட தகவல்களை பற்றி கேட்க அகிலனோ இன்னும் 1 மணி நேரத்தில் ஆதியின் மின் அஞ்சல்லுக்கு அனுப்புவதாக கூறினான்.

 

அலுவலகம் வந்த ஆதிக்கு ஏனோ அவனது அறை பிடிக்காமல் போனது. அவனது அறையை மாற்ற எண்ணி ஒரு சில நம்பகமான பணி யாட்களை அழைத்து அவனது அறையில் பதிக்கப்படிருந்த பொருள் ஒன்றை அப்புறபடுத்தினான். 

 

பிறகு அவன் வேலையில் லயித்துவிட, ஒரு சில கோப்புகளுடன் இனியன் ஆதியின் தனி அறையினுள் நுழைந்தான். அவனை பார்த்ததும் ஆதிக்கு காலையில் சினேகன் சொன்ன தகவல் நினைவு வர, அவன் யோசித்தபடி அவனது கைபேசியை சைலெண்டில் போட்டுவிட்டு இனியனது கோப்புகளை பார்வையிட்டபடியே வந்த அழைப்பினை ஏற்றது போல இனியன் முன்னே, “எஸ்… ஆமாம்… நீங்க சொல்லி தான் தெருஞ்சது, மதிக்கு 2 முறை யாரோ உதவி பண்ணி இருக்காங்க, ஆனா அவுங்க யாருன்னு தெரியல, தெருஞ்ச நான் கண்டிப்பா அவங்கள தேன்க் பண்ணனும், இன்னும் கொஞ்சம் நம்ம மதிபத்தி பேசனும், மதிக்கு கொஞ்சம் ஆபத்து இருக்கும்னு தோனுது, நம்ம அத பத்தி கொஞ்ச நேரத்துல பேசலாம், நான் இப்ப ஒரு முக்கியமான வேலையில இருக்கே, ஐ வில் கால் யு ஆப்டர் 10 மினிட்ஸ்” என்று கூறிக்கொண்டிருந்தான்.

 

கூறிகொண்டிருந்தான் என்று சொல்லவதை விட கூறுவது போல இனியனின் முகபாவத்தின் மாற்றங்களை கவனிக்க எண்ணினான்.

 

இவை அனைத்தையும் கூறி கொண்டு இருக்கும் பொழுதே இனியனது மனமோ, “இப்ப மதிக்கு நான் தான் உதவி பண்ணினே தெருஞ்சு, மேலும் எந்த குழப்பமும் வர வேண்டாம், இனி அத பத்தி சொல்லி… வேண்டாம்.. ” என்று எண்ணமிட்டது. வெளிக்கு சாதாரணம் போல் காட்டிக்கொண்டவன் மனதினுள் வெகு சிரமப்பட்டு அவன் ஏமாற்றத்தை மறைத்தான்.

அவனது முகபாவத்தை கவனித்த ஆதித்யன் அதில் எதுவும் அறிந்த கொள்ள முடியாது, இனியனின் சாதாரண முகத்தை பார்த்து சிந்தனை வயப்பட்டான்.

 

அனைத்து கோப்புகளிலும் கை எழுத்து இட்டவன் அதை இனியனிடம் கொடுத்துவிட்டு அவனிடம் தொழில் தொடர் பய் ஒரு சில விஷயங்கள் கேட்க அதற்கு தகுந்த பதிலை இனியன் கொடுத்து கொண்டு இருந்தான். ஆகினும் அவன் மனம் மதிக்கு ஆபத்து என்ற வார்த்தையை சுற்றிக்கொண்டு இருந்தது. அதிலே அவன் சிந்தனையை ஓட்டிகொண்டிருந்தவன் ஆதி அனைத்து கோப்புகளையும் கொடுக்கவும் இனியனது கையில் இருந்த கைபேசியை மேஜை மீது வைத்துவிட்டு அனைத்து கோப்புகளையும் ஒரு முறை சரிப்பார்த்தான் இனியன். அது தான் இனியன், எந்த ஒரு வேலையும் கட்ச்சிதமாக ஒருமுறையிலே செய்து முடிப்பான். மீண்டும் இதே கோப்புகளுடன் ஒரே வேலைக்காக மறுபடியும் வரமாட்டான். ஆனால் இன்று அவன் பார்வை கோப்புகள் மீது பதிந்து ஆராய்ந்துக் கொண்டு இருந்த போதும் அவனது இன்னோரு மனம் ஆபத்து என்ற வார்த்தையை சுற்றி வருவதை அவனால் தடுக்க முடியாமல் போனது.

 

அதே யோசனையோடு கோப்புகளை எடுத்தவன் அவனது கைபேசியை அங்கே விட்டபடி வெளியே சென்றுவிட்டான். ஆதி பேசிய அழைப்பின் மறுபுறம் யாருமே இல்லாததை உணராது இனியன் அதை பற்றிய யோசனையோடே இருந்தான்.

 

ஆனால் இனியனது முகம் பெரிதாக எதையும் பிரதிபளிக்காததால் மதிக்கு உதவி செய்தவன் இவன் இல்லையோ என்ற எண்ணம் தோன்ற அப்பொழுது இனியன் சற்று முன்பு மதிக்கு ஏதோ குறுந்தகவல் அனுப்பி இருக்க மதியின் கைபேசி உடைந்து போனதால், குறுந்தகவல் செல்லவில்லை என்ற அறிவிப்பு இனியனது கைபேசிக்கு மதியின் பெயரோடு வர கைபேசியில் திடீர் என்று ஏற்பட்ட வெளிச்சத்தால் ஆதியின் பார்வை அந்த அறிவிப்பு மீது நன்றாகவே பதிந்து மீண்டது.

 

இனியனது கைபேசி, அதில் மதியின் பெயருக்கு அனுப்பட்ட குறுந்தகவல் போய் சேராதது என அனைத்தும் ஆதியின் கண்களுக்கு தெளிவாகவே பட்டது.

 

 

இனியனது முகபாவத்தில் அறியாமுடியாத தகவலை அந்த கைபேசியின் வெளிச்சத்தில் அவன் காண, மதிக்கு குறுந்தகவல் இப்பொழுது அனுப்ப வேண்டிய காரணம் மட்டும் புரியவில்லை. ஆண் பெண் நட்பை ஏற்றுக்கொள்ளாதவன் ஆதித்யன் அல்ல. ஆனால் இனியன் பார்வையில் நட்பை தாண்டி வேறு ஏதோ ஆதித்யனுக்கு தெரிந்தது. ஒரு வேலை நண்பனாய் இருந்திருந்தால் ஒருமுறையேனும் ஆதியிடம் மதியை பற்றி விசாரித்திருப்பான். இப்பொழுது மதியின் நண்பனான சினேகனை இனியனோடு ஒப்பிட்டு பார்த்து சினேகன் மதியுடன் எதார்த்தமாக பழகும் விதம் ஆதியின் கருத்தில் பதிந்தது. ஆனால் இனியன் மனதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

 

 

இதன் இடையில் அவனது கணினியில் தனி மின் அஞ்சலுக்கு அகிலன் அனுப்புவதாகா சொன்ன மின் அஞ்சலை ஆராய்ந்தவன் அதில் வந்த தகவல்களை அலசி பார்க்க முனைந்துக் கொண்டிருந்தான். அவனது வீட்டில் நோட்டமிடும் ஒருவர் அடிதடிகளில் முடி சூடா மன்னனாக இருந்து பிறகு அடிதடிகளை இப்பொழுது விட்டுவிட்டு இருக்கும் பழனிவேல்யிடம் வலதுக்கையாக வேலை செய்தவன் தண்டாயுதபாணி. தண்டாயுதபாணி பழனிவேல்யின் விசுவாசி ஆனால் பழனி வேல் இந்த தொழிலை விட்டுவிட்ட பிறகு தண்டாயுதபாணி அந்த இடத்திற்கு வந்து விட்டதாகவும் அதில் தகவல்கள் குறிப்பிட பட்டு இருந்தது.

 

ஆதியின் மனதினுள், “இந்த ரிகார்ட்ஸ் படி தண்டாயுதபாணி இப்ப டாப்லெவல்ல இருக்கான் அவனோட ஏரியால, அவனே இங்க வந்து உளவு பாக்குறானா அப்போ இந்த கேஸ்ல சம்மந்தப்பட்டது அவனா இல்ல அவனுக்கு கட்டள போடுற அளவுக்கு அவனுக்கு மேல வேற யாராச்சுமா?” என்று யோசித்துக்கொண்டே அடுத்த நபரை பற்றி ஆராய ஆரம்பித்தான்.

 

அவனின் வீட்டின் பின்பக்கம் இருப்பவன் வீரமாறன். அவன் கூலிபடைகளில் முக்கிய தொடர்புடையவன். அவனுக்கு நிறைய அரசியல் பின்புலம் உண்டு என அந்த கோப்புகள் தகவல் கூறியது.

 

அவன் கணினியில் பார்த்த தகவல், சிநேகனிடம் காணமல் போனவரின் விவரங்கள், இந்த 2 உளவு நபர்கள் அவர்களின் பின்புலம் இதை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு பண்ணி பார்க்க முயன்றவன் எதனோடும் எதுவும் தொடர்பு இல்லாமல் போகவே கண்ணுக்கு தெரியாத பல முடுச்சுகள் இருப்பதை உணர்ந்துக்கொண்டான்.

 

காரணம் வீரமாறன் கூலிப்படை என்றாலும் காணமல் போனவர்கள் யாரும் ப்ருமுகர்களோ, தொழில் அதிபர்களோ இல்லை. பெண்கள், வயோதினர், குழந்தைகள், ஆண்கள் இப்படி அனைத்து சாராரும்.

 

அவர்களின் குடும்ப சூழ்நிலை கொண்டு பார்க்கும் போது, அவர்களின் பணி விவரம் அறியும் போது வீரமாறன் தொழில், இவர்கள் மறைவு இதற்கு சம்மந்தம் இல்லை. ஆயினும் அவன் ஏன் நோட்டமிட வேண்டும்.

 

ஆனால் மறைந்து போன அனைவருக்குமே ஏதேனும் ஒரு காரணம் இருந்தது. அவரின் சுற்றமோ, நண்பர்களோ இல்லை அவரது குடும்பமே கூட அவர்கள் மறைவுக்கு இது தான் காரணம் என கூறிக் கொண்டு இருந்தது.

 

தன்டாயுதபானியோ கட்டபஞ்சாயத்து, மார்க்கெட், பெரிய மென் பொருள் அல்லது கட்டிடங்கள் கட்டும் மனை தொடர்பான கமிசன் வேலைகளை ஈடுப்பட்டிருப்பவன். இவன் தொழிலோடு கூட மறைந்தவர்களை ஆதித்யனால் ஏனோ இணைத்து பார்க்க முடியவில்லை.

 

இவர்களுக்காக இவர்களே உளவு பார்க்க வந்திருக்க முடியாது என்றும் மேலும் இவர்களின் மரியாதைக்கு அல்லது இவர்களே பயப்படும் ஒருவன் அல்லது இருவர் அல்லது ஒரு கூட்டத்திற்கு, இவர்கள் கட்டுப்பட்டு இங்கே வந்து இந்த வேலை பார்க்கின்றனர் என்பதை ஆதி அவனது கூறிய அறிவு கொண்டு அறிந்துக் கொண்டான்.

 

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக அகிலனின் அழைப்பு வர அதை ஏற்று காதுக்கு கொடுத்தவன் அகிலனின் கேள்விக்கு தற்காலிகமாக பதில் உரைக்காமல் பிறகு அனைத்தையும் விவரமாக கூறுவதாக இரத்தின சுருக்குமாய் பதில் அளித்து அழைப்பை துண்டித்தான்.

 

சிலந்தி வலை போல நிறைய சிக்கலுடனும் ஏதேனும் ஒரு இடத்தில் அழுந்த கால் வைத்துவிட்டால் அந்த வலையே அறுந்துவிடும் அபாயமும் இருந்ததால் அதை எங்கு இருந்து ஆராம்பிப்பது என்று தீவிர யோசனையில் திளைத்தான்.

 

அவனது நெற்றியில் தோன்றிய அதிகபடியான கோடுகள் அவன் சிந்தனையின் தீவரத்தை உணர்த்த சில நிமிடங்களில் அவனது கண்களில் ஒரு அசாத்திய தெளிவும் சிக்கல்களுக்கு வழி வகுத்துவிட்ட சாந்தியும் சுடர்விட அவனது கடை இதழில் மிதமான புன்னைகை ஒன்று தவழ்ந்தது.

 

அவனது முகம் முன்னைவிட கம்பீரமாக காணப்பட்டது.

 

அடுத்து அவன் ஒரு நிமிடமும் தாமதிக்காமல், தனது கைபேசியை அழுத்தி சில கட்டளைகளை கூற ஆரம்பித்தான். அவனது உதடுகளோ அவனது திட்டத்தில் இருந்த தெளிவின் காரணமாய் மிக உறுதியுடன் ஒவ்வொரு சொற்களையும் உச்சரிக்க தொடங்கியது, “ஹெலோ, யா, நான் உங்க கிட்ட சொன்னபடி நீங்க நடந்துக்கங்க, எனக்கு இத யாரு பண்றாங்கன்னு லூப் கிடச்சுருக்கு, மதிய யாராச்சும் கடத்த முயற்சி பண்ணினா தடுக்காதீங்க, ஒரு வேலை அவ உயிருக்கு ஆபத்து வந்தா மட்டும் நீங்க என்டர் ஆகுங்க, மதிய பின் தொடர ஒரு சில நபர நான் ஏற்பாடு செய்திருக்கேன் அதனால கவலை இல்ல, இது எப்பவேணும்னாலும் நடக்கலாம், சோ பீ அலெர்ட்” என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

 

அதன் பின் ஆதித்யன் கைபேசிக்கு அவன் வீட்டிலிருந்து அழைப்பு வர என்னவோ ஏதோ வென்று ஆதி அதை எடுத்து காதுக்கு கொடுக்க மறுமுனையில் பேசியது அவள் மனையாள்.

 

“க்ரிஷ்ணவ், நீங்க சொன்னது போலவே மொபைல்…. ஒருவேள நீங்க பிஸியா இருந்தா, நான் நிலா கூட்டிட்டு போய் வாங்கிகட்டுமா?” என்று அவள் சற்று தயக்கத்துடன் கேட்க, ஆதியோ, “இல்ல நான் சொன்னேன்ல, கண்டிப்பா நான் பண்றேன்…. சோ நீ எதுவும் பண்ணவேணாம்” என்று கூற அதற்கு மேல் மதியால் ஒன்றும் கூற இயலாமல், “சரிங்க” என்ற ஒற்றை சொல்லோடு முடித்துக்கொண்டாள்.

 

அழைப்பை துண்டித்த இருவரும் அவர்களது முனையில் அதாவது, ஆதி அவனது கைபேசி பார்த்தும் மதி அவளது தொலைபேசியை பார்த்தும் சிரித்து கொண்டார்கள். இருவரும் தனி தனியே செய்தாலும் கூட இருவரும் எண்ணியது ஒன்றே. இதுவே முதல் முறை இருவரும் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு உள்ளது.

 

தான் வாங்கிவருவேன் என்று அறிந்தும் தன்னுடன் பேசுவதற்காகவே அழைத்திருக்கின்றாள் என்பதை உணர்ந்த ஆதி அவளது முதல் அழைப்பை பார்த்து புன்முறுவல் பூண்டான் என்றால் மதியோ, நேரில் பேச தயங்குவதால், தொலைபேசி வாயிலாகவேனும் அவனுடம் பேசலாம் என்று எண்ணி அவனிடம் பேசவும் செய்ததால் அவள் முயற்சியின் வெற்றியை அவளே அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.

 

அவள் கைபேசி உடைந்ததும் தனது திட்டத்தின் ஒரு பகுதி தான் என்பதை உணர்ந்தாலும் அவள் முதல் முறையாக அவனிடம் கேட்டதை வாங்க அவன் மற்ற வேலைகளை ஒதிக்கு விட்டு சென்றான்.

 

அவனுக்கு ஏற்றதுப்போல அவளுக்கு ஒரு கைபேசி தேர்வு செய்தவன் அதில் ஒரு சில பயன்பாடுகளையும் பதிவு செய்தான். பிறகு அவன் முகத்தில் திருப்த்தியும் மென்மையும் ஒரு சேர தனது அலுவலகத்துக்கு பயணித்தவன் இனியனின் வாயிலை கடக்கும் பொழுது அந்த அறையின் மர கதவில் பதிக்கப்பட்ட சிறு கண்ணாடி வழி இனியன் நிமிர்ந்தும் குனிந்தும் தேடும் காட்சி கண்ணில் பட அதை பார்த்தபடியே அவனது அறைக்கு சென்று தனது இண்டர்காமில் இனியனை அழைத்தான் ஆதித்யன்.

 

அடுத்த சில வினாடிகளில் வந்த இனியனிடம் ஆதி, “என்ன இனியன் உங்க கேபின் ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என்று கேட்க இனியனோ, “இல்ல சார், மொபைல் கொண்டு வந்தே, ஏதோ நாபகம் எங்கயோ வச்சுட்டேன் அதான் சார்” என்று சொல்ல, இனியன் சொல்லி முடித்தவுடன் அவன் பார்வையில் அவனது கைபேசி பட, ஆதியோ, “எஸ் இனியன் மறந்து வச்சுடீங்க போல, சரி நீங்க தேடுறத பார்த்தேன், அதன் ஜஸ்ட் டு இன்போர்ம் யு, டேக் இட் அண்ட் கேரி ஆன்” என்று ஆதி கூறிவிட்டு கணினியில் பார்வை பதித்தான்.

 

அன்று சற்று தாமதமாகவே ஆதித்யன் வீட்டிற்கு வர நேர்ந்தது. மதிக்காக காலையில் சிநேகனுடனும், பிறகு அகிலன் தந்த தகவலிலும் அதன் பின்னர் மதிக்கு கைபேசி வாங்க சென்றதிலும் என அவன் நேரங்கள் ஓட அவனது வேலையை முடித்துவிட்டு ஆதி வீடு திரும்ப மணி 8யை தொட்டு இருந்தது.

 

வரும் வழி எங்கும் ஆதிக்கு மதி சிக்கிக் கொண்டிருக்கும் ஆபத்தே அவனது எண்ண அலைகளில் தோன்றிக்கொண்டிருந்தது. கூலிப்படை, அரசியல் பின்புலம் இத்தனையும் அந்த வழக்கோடு தொடர்பு உடையதால் இன்னுமும் எதிரி யார் என்று திட்டமாக அறியாததால், அவனது திட்டப்படி செயல் பட்டால் நிச்சயம் ஆதி அந்த எதிரியை கண்டுபிடிக்க இயலும் என்பது திண்ணம் ஆகினும் மதிக்கு தீங்கு நேராமல் அதை செய்து அவனது மதியை அவன் மீட்க வேண்டுமென யோசித்துக்கொண்டே வந்தான்.

 

ஆதியை தவிர அனைவரும் அவன் வீட்டின் வரவேற்பறையில் இருக்க அங்கு இல்லாத மற்றொரு ஆல் மதி. அகிலன் ஆதியின் வரவுக்காக காத்திருக்க ஆதி தனது அறைக்கு சென்று புதுப்பிப்பு செய்துக்கொண்டு அறையின் சாளரத்தையும் நோட்டமிட அப்போது தான் கவனித்தான் மதி கீழேயும் தங்களது அறை மற்றும் சாளரத்திலும் கூட இல்லாததை.

 

வேகமாக இரண்டு இரண்டு படிகளாக இறங்கியவன் நேராக நிலாவிடம் மதியை பற்றி கேட்க அவளோ மதியை கடைசியாக மதியம் தான் பார்த்ததாக கூறினாள். சிவகாமி அம்மாளிடம் கேட்டதுக்கு பெரியவர்களோ, “இங்க தான் பா இருப்பா, வெளில போறதா இருந்தா சொல்லிட்டு போயிருப்பாளே” என்று அமைதியாகவே பதில் சொல்ல, ஆதி வரும் பொழுது நுழைவு வாயிலில் அந்த தண்டாயுதபாணி இல்லாதது வேறு ஆதிக்கு இப்பொழுது உறுத்தலாக பட்டது.

 

வேகமாக அங்கே இங்கே கண்களை சுழலவிட்டவன் வெளியில் வந்து தோட்டத்தில் அங்கும் இங்கும் அவளை தேடினான். பிறகு நுழைவு வாயிலில் இருக்கும் செக்யூரிட்டிக்கு அழைத்து மதி வெளியில் செல்லவில்லை என்பதை உறுதி படுத்தியவன் வீட்டினுள் தான் இருகின்றாள் என்றாலும் அவளை காணாது அவன் மனம் தடுமாறத்தான் செய்தது.

 

செயற்கை குளம், புத்தர் சந்நிதி, தென்னை கூட்டங்கள் என பார்வை பதித்தவன் இறுதியாக முல்லை பந்தல் அருகினில் வர பெரிய பெரிய துளிகளாக சட சடவென மழை பிடித்துக் கொண்டது.

 

4 எட்டு நடந்தாலே முழுதும் நனைந்துவிடும் படி பெரிய துளிகள் விழ வேகமாக அவன் பந்தலின் அடியினில் வந்து நின்றான். அவன் வந்தவேகத்தில் மறுதிசையில் வேகமாக ஓடி வந்த மதி முழுதும் நனைந்து விட்டிருந்தாள். சொட்ட சொட்ட நனைந்து வேகமாக பந்தலுக்குள் நுழைந்தவள் ஆதியை அங்கே பார்த்து அந்த மழை துளியை விட பெரிதாக அவள் விழிகளை விரித்தாள்.

 

இருவர் பார்வையும் ஓரிரு வினாடிகளே கலந்திருக்கும், சட்டென ஆதி மதியை வேகமாக இழுத்து அணைத்துக்கொண்டான். அவளை இத்தனை நேரம் தேடியது, இதுவே சாதாரண தருணமாக இருந்திருந்தால் ஆதி இப்படி நடந்திருக்க மாட்டான். ஆனால் அவளை ஆபத்து எந்த அளவு சூழ்ந்து உள்ளது என்பதை இன்று தெளிவாக உணர்ந்ததால், அவளை காணாத நிமிடங்களில் அவனுக்கு ஏற்பட்ட பரிதவிப்பு யாராலும் ஏன் அவனாலும் கூட மறுக்கப்பட முடியாத உண்மை ஆகிற்று.

 

அந்த பரிதவிப்பின் காரணமாய், உணர்சிகளை கட்டுக்குள் வைக்க தெரிந்த ஆதித்யனே ஒரு நிமிடம் தடுமாறி அவளை அனைத்துவிட்டான். எத்தனை கம்பீரமானவனையும் அசைத்து பார்க்கும் காதல், ஆதித்யனுக்கும் விதி விலக்கு அல்லவே.

 

முகமறியாமலே 4 வருடங்களாக யாரை காதலித்தானோ, யாரால் அவனது உயிர் இன்று இருக்கிறதோ அவளது உயிருக்கு ஆபத்து என்ற சிந்தனையே ஆதியின் இந்த பரிதவிப்புக்கு காரணம். முகம் தெரிந்த எதிரியை சமாளிப்பதை விட முகம் அறியா எதிரியை சமாளிப்பத்தில் ஆபத்து அதிகம் என்பதால் மதியை காணாத சில நிமிடங்களும் ஆதித்யனுக்கு யுகங்களாக தோன்றின.

 

காதலிப்பது ஒரு அழகிய வசந்தமென்றால், ஒருவரால் காதலிக்கபடுவது வரமல்லவோ. அந்த வரத்தை ஆதித்யனுக்கு தந்தவள் மதி அல்லவோ…

 

இங்கு ஆதியின் நிலைமை இப்படி இருக்க மதிக்கு அவனின் அருகாமையே போதுமானதாக இருக்கவும், அவனை, பார்த்து மட்டும் வாழ்வதே வசந்தமென நினைத்திருக்க, பகலிலும் கூட அவன் நினைவுகளால் துரத்தப்பட்டு கொண்டு இருந்தவள், இன்று ஆதித்ய க்ரிஷ்ணவ், அவளின் காதல் கணவன், யாருக்காக அவள் இத்தனை நாட்கள் ஏங்கி தவித்தாளோ அவனது கை அணைப்பினில் இன்று.

 

இந்த தருணத்தை, அவளுள் விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் போனது. அவள் உடல் குளிரினால் நடுங்கியதோ அல்லது அவனது அணைப்பினில் சிலிர்த்து நடுங்கியதோ தெரியவில்லை. ஆதித்யனின் திடீர் இந்த செய்கைக்கு ஏன் என்ற காரணம் கூட அவள் மனம் ஆராய விரும்பவில்லை, அந்த நொடியை அனுபவிக்க மட்டுமே விரும்பியது.

 

அவள் அவனின் கை வளைவினுள் இருந்தது மதிக்கு இன்பத்தையும் ஆதிக்கு சமாதானத்தையும் தந்தது.

 

அவனது அணைப்பு ஒரு சில நொடிகளே தொடர்ந்திருக்கும், அதற்குள் சுய உணர்வு பெற்றவன் மதியை விலக்கி, “இவ்ளோ நேரம் எங்க போயிருந்த, உன்ன வெளில போக கூடாதுன்னு சொல்லிட்டு தானே போனேன், இப்பவும் சொல்றேன் உண்ணலாம் ஜர்னலிஷ்டா எப்படி தான் செலக்ட் பண்ணினாங்களோ” என்று ஆரம்பித்தவன் வார்த்தைகளை அவளிடம் கடுமையாக பயன்படுத்திக்கொண்டிருந்தான். அவன் குரலிலும் கண்டனம் உயர்ந்தே தொனித்துக் கொண்டு இருந்தது.

 

இதே வார்த்தைகளை ஆதி முன்பு ஒரு முறை சொல்லி இருக்கான் தான். ஆனால் அப்போது அதில் ஏளனம் நிறைந்திருந்தது. ஆதலால் மதிக்கு கோவம் துளிர்விட்டது, ஆனால் அதே வார்த்தை தான் இன்றும் ஏன் இன்னும் அதிகமான பேச்சுக்கள் கூட ஆனால் மதிக்கு கோவம் என்றால் என்ன என்று கேட்கும் அளவு அவள் மன நிலை இருந்தது. காரணம் அன்று ஏளனம் தொனித்த ஆதியின் குரலில் இன்று கோவம், கண்டனம் என்ற போர்வைக்குள் மறைக்கப்பட்ட அக்கறை தெரிந்தது.

 

அவனது அணைப்பிற்கு பிறகு வந்த அந்த சுடு சொற்கள் இதமான சாரலில் நனைவது போல இருந்தது ஆதியின் மனதை ஆள்பவளுக்கு.

 

அதற்குள் அகிலன் இரு குடையுடன் அவர்களை தேடி அங்கே வர ஆதியின் கோவ முகத்தை பார்த்து அமைதியாகவே ஒரு எட்டு தளி நின்றான். அகிலனின் மனதிலோ, ஆதித்யன் ஏன் அந்த இருவர் பற்றிய தகவல் கேட்டான், மதி தோட்டத்தில் இருப்பது சாதரணமாக நிகழ்வதாக இருக்க இத்தனை பதட்டம் ஆதிக்கு ஏன் ஏற்பட்டது என அவன் எண்ணமிட அகிலன் வந்ததை உணர்ந்த மதியின் விழி அந்த இடத்தை நோக்க, அவள் பார்வை விழி வழியே பயணித்த ஆதித்யன் விழியும் அகிலனை பார்த்து, அவனது கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

 

“வா அகில், இங்க இருந்துருக்கா…” என்று ஆதி தன் நண்பனிடம் கூற அகிலனும் மனதினுள் பல கேள்விகள் படை எடுத்தாலும் வெளிக்கு காட்டிக் கொள்ளாமல் புன்னகை பூசிக் கொண்டு மதியிடம், “எங்கமா போயிருந்த? ” என்று கேட்க மதியோ, “இல்ல அண்ணா, நான் தோட்டத்தோட பின்பக்கம் இருந்தேன், பின் பக்கம் ஒரு கதவு இருக்கு போல, அத தான் பாத்துட்டு இருந்தேன்” என்று கூற இப்பொழுது ஆதி மதியை பார்த்து, “மதி பின்பக்கம் கதவு எந்த காரணம் கொண்டும் நீ பயன் படுத்தக் கூடாது, நாளைக்கு நீ ஆபிஸ் போறதான? முன் பக்கம் மட்டும் தான் யூஸ் பண்ணனும், புரியிதா?” என்று கேட்க மதி சம்மதமாய் தலை அசைத்தாள்.

 

ஒரு குடையை அகிலன் பிடித்துக்கொள்ள, மறு குடையை ஆதியிடம் குடுத்தான். ஆதி, குடையை விரித்துவிட்டு மதியை பார்க்க, மதி அவன் கண் அசைவில் ஆடும் பாவை போல் அவனை நெருங்கி குடைக்குள் வந்தாள். அவன் தோளோடு அவள் தோள் உரச அவன் அருகாமையில் நடந்தவள் மழை தண்ணியில் அவள் கால் வழுக்க தன்னிச்சையாக ஆதியின் கைகளை பிடித்தாள். அந்த நொடி இருவரது மனதிலும் ஒருவர் கையை மற்றவர் விடுவதில்லை என்பது மட்டுமே தோன்றியது. ஆதியும் அவள் ஸ்பரிசத்தை ரசித்தான் ஆனாலும் அதை சுற்றம் உணர்ந்து வெளிக்காட்டவில்லை.

 

அந்தி சாரலில்

நனையாமல் குடைபிடிக்க

குடைக்குள் நான்

என்னவனின் கைபிடிக்க

நனையாமல் நனைகிறது

எந்தன் உள்ளம்

என்னவனின் ஸ்பரிசத்தில்

 

மதியின் ஒரு மனமோ, “நிஜத்துல என் கிருஷ்ணவோட தோள்ல சாஞ்சுட்டேன்” என்று கூறி குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தது. மறு மனமோ, “ஆனா ஏன் அவரு கோவம் ஆனாரு? கோவத்துக்கு அக்கறைனு புரியிது… ஆனா வீட்ல நான் இருக்கும் போது பதறும்படி என்ன ஆகப்போகுது, ஏன் பின் பக்கம் பயன் படுத்தகூடாதுன்னு சொல்றாரு” என்று யோசிக்கவும் தவறவில்லை.

 

அதன் பிறகு மதிக்கு அந்த இரவு சுகமான இரவாக கழிய இங்கோ அகிலன் நண்பனின் நடவடிக்கை காரணத்தை ஆராய முற்பட்டான்.

 

“ஆதி, சொல்லு டா, அந்த ஆளுங்க பத்தி நீ ஏன் டீடைல்ஸ் கேட்டுருக்க, நீ மதியை காணோம் னு பதறுனத பார்த்து பெரியவங்க சந்தோசப்பட்டாங்க உங்க வாழ்க்க இனி நல்லா இருக்கும்னு, ஆனா இந்த சின்ன விஷயத்துக்கு நீ பதறுற ஆள் இல்ல, அது எனக்கு நல்லாவே தெரியும், என்ட்ரன்ஸ்ல லைட் மாத்திருக்க, 2 குற்றவாளிகளோட போட்டோ உங்கிட்ட இருக்கு, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்டா?” என்று விடாமல் அகிலன் கேள்வி மேல் கேள்வி கேட்க, ஆதியோ நிதானமாக, வெகு அமைதியாக அவனை பார்த்து புன் முறுவல் செய்தான்.

 

“மதி, ஒரு கேஸ் ஹான்டல் பண்றா, அந்த கேஸ் பத்தி டீடைல்ஸ் நான் நேரம் வரும் போது சொல்றேன். ஏன்னா அவுங்க பத்திரிக்க அத ரொம்ப சீக்ரெட்ட பண்றாங்க, இந்த கேஸ் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து அவ உயிருக்கு இதுவர 3 முறை ஆபத்து வந்துருக்கு, ஆனா கூட பாதிக்க பாட்டவகளுக்கு ஏதாவது பண்ணனும்னு இருக்கா, ஆனா அவ இதுல இறங்குறது யாருக்கோ பிடிக்கல, அதுனாலாதான் தண்டாயுதபாணியையும், வீரமாறனையும் யாரோ உளவாளியா இந்த வீட்ட சுத்தி உளவாட விட்ருக்காங்க. பழனி வேல் மேலையும், ஒரு குறிப்பிட அரசியல்வாதி மேலயும் எனக்கு சந்தேகமா இருக்கு. அதோட என்னோட யூகம் சரியானு, முடிவு பண்ண நான் ஒரு வழியும் வச்சுருக்கே, அத செயல் படுத்தக்கூட ஆரம்பிச்சிட்டே. எனக்கு இன்னும் ஒரு சில டீடைல்ஸ் வேணும் மச்சி, அத மட்டும் எனக்காக உன் டிபார்ட்மெண்ட் மூலமா கொடு, மத்தத நான் பார்த்துக்கிறேன், பட் மச்சி குற்றவாளிய கண்டுபிடிச்சதும் நிச்சயமா உன்கிட்ட தான் ஒப்படைப்பேன்… எனக்கு வேணும்ங்கறது எல்லாம் என்னோட மதி எந்த ஆபத்துலையும் சிக்க கூடாது.” என்று நிதானமாகவும் ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் மிக அழுத்தி ஒரு உறுதியுடனும் கூறினான்.

 

மேலும் ஆதியே தொடர்ந்து, “என் மேல நம்பிக்கை இருந்தா என்ன ஏதுன்னு கேட்காம சொல்லு அகில்” என்று அழுத்தமாக கூறினான் ஆதித்யன்.

 

அவனது இந்த வார்த்தைக்கு மறுப்பு சொல்லமுடியாத அகில், “என்ன பண்ணனும் டா” என்று மட்டும் கேட்க, ஆதியோ, “நான் சொன்ன அந்த 2 பேரும் இந்த வீட்ட சுத்தி தான் இருக்காங்க, அவுங்கள அரெஸ்ட் பண்றதுக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு விஷயத்த பிடி, 2 பேரும் ரொம்ப செல்வாக்கு உள்ளவங்க, அதுனால பார்த்து ஹாண்டில் பண்ணு, நான் சொல்லும் போது அரெஸ்ட் பண்ணு, அதுவரைக்கும் அவுங்களோட மொபைல் டிராக் பண்ணனும், அவுங்களோட மொபைல் மட்டும் இல்லாம அவுங்க யாருக்கு அடிக்கடி பேசுறாங்களோ அவுங்களோட மொபைல்யும் ட்ராக் பண்ணனும்டா, இத மட்டும் பண்ணு மச்சி எனக்காக, நான் நிச்சயமா இத என் மதிக்காக மட்டும் பன்னல, மதி செய்யணும்னு நினைக்கிற நல்லத முழுசா செஞ்சு இந்த பாதிக்கபட்டவங்களுக்கு ஒரு தகவல்ஆச்சும் கிடைக்கனும்னு தான், உனக்கு புரியும்னு நம்புறேன் அகில்” என்று விடு விடு வென கட்டளை போல அவன் செய்ய வேண்டிய செயல்களை கூறியவன் இறுதியில் ஒரு தீர்மானத்தோடு முடித்தான்.

 

வெகு நேரம் கழித்து அறைக்கு வந்த ஆதித்யன் மதி துயில் கொள்வதை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அவனும் சென்று அசதியில் படுத்து கண் அயர்ந்தான். காலையில் அவனுக்கு முன்னதகாவே எழுந்த மதி பர பரவென பம்பரம் போல் சுழன்று வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

 

கண் விழித்த ஆதித்யன் முன்பு ஏதோ கேட்க வந்து பிறகு கேட்காமல் போகும் மதியை கண்டு புரிந்துக்கொண்டான் ஆதித்யன் அவள் என்ன கேட்க வருகிறாள் என்று. நேற்று அவன் சற்று கடுமையாக பேசியதால் இன்று அவன் கைபேசி வாங்கிவந்தானா என்று கேட்க வந்து வந்து கேட்காமலே மௌனம் காத்துக்கொண்டு இருந்தாள்.

 

ஒவ்வொரு முறையும் கரையிடம் ஏதோ கதை சொல்ல வரும் அலை, கரையை தொட்டு தொட்டு செல்லுமே தவிர சொல்ல வந்ததே சொல்லாமலே செல்லும். அது போல மதியின் பார்வையும் ஆதியின் முகத்தை தொட்டு தொட்டு பார்த்து, சொல்ல வந்ததை சொல்லாமல் சென்று மௌனம் பூசிக் கொண்டது.

 

இந்த மௌனம் ஆட்டம் ஆதிக்கு பிடிக்காமல் போக, “மதி” என்று அவனது ஆழ்ந்த ஆண்மை நிறைந்த குரலில் அழைத்தான். அவள் இமைகளை மட்டும் உயர்த்தி அவன் முகத்தை பார்க்க ஆதித்யன் தொடர்ந்தான், “அந்த டேபிள்மேல ஒரு பாக்ஸ் இருக்கு, அத எடுத்துட்டு வா” என்று ஆதி கூற துள்ளி செல்லும் மான் போல சென்று அதை எடுத்துவந்து ஆதியிடம் குடுத்தாள். நிச்சயம் அதில் அவளுக்கு உண்டான கைபேசிதான் இருக்கும் என்று அவள் அறிந்து சந்தோஷ ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருந்தாள்.

 

 

அவள் எதிர்ப்பார்ப்பை பொய்க்காது அதில் அவளுக்கான கைபேசியே இருந்தது. அந்த கைபேசி மிகவும் விலை உயரந்தது, அதில் அவளுக்கு தேவையான அத்தனையும் இருந்தது. ஆனால் அதெல்லாம் அவளது கருத்தில் பதியவில்லை. அது அவளின் ஆதித்யன் தந்தது. அது மட்டுமே அவளுக்கு தோன்றியது. அதை ஆசையாக பார்த்துகொண்டிருக்க ஆதித்யனின் குரல் அவளை நினைவுலகத்துக்கு கொண்டு வர ஆதியை ஏற எடுத்துப் பார்த்தாள்.

 

“மதி, இந்த மொபைல் உனக்கு பிடிச்சிருக்கா? இது எப்பயும் உன்கூட இருக்கனும், எந்த சூழ் நிலையிலும்… நான் சொல்றது உனக்கு புரியிதா? அப்புறம் அந்த பாக்ஸ்க்கு கீழ பாரு இன்னொரு மொபைலும் இருக்கும், அந்த நம்பர் நீ யார்க்கும் ஷேர் பண்ணாத, அது எப்பயும் உன்கிட்ட மறைவா இருக்கட்டும். அப்படி ஒரு போன் இருக்குறது வேற யாருக்கும் தெரிய வேணாம், எப்பயும் சைலெண்ட்ல போட்டு வை” என்று ஆதித்யன் அவளுக்கு அடுக்கடுக்காக விஷயங்களை கூறி கொண்டு இருக்கும் பொழுதே நிலா கதவை தட்டி ஆதியை அழைக்கும் சத்தம் கேட்க ஆதி நிலாவிடம் என்னவென்று கேட்க, “யாரோ புது வாட்ச்மான் வந்து இருக்காங்க அத்தான், அதான், அம்மா உங்கள கூப்பிட்டு வர சொன்னாங்க ” என்று நிலா கூற மதியிடம் திரும்பி, “பீ சேப், எதுனாலும் எனக்கு காண்டக்ட் பண்ணு” என்று மட்டும் கூறிவிட்டு அவன் விடு விடுவென படிகளில் இறங்கி சென்றான்.

 

ஆதி அங்கு வரவும், அகிலன் வரவும் இருவரும் வந்திருந்தவனை பார்த்தவுடன் பார்வையிலையே பரிமாறிக்கொண்டனர் வந்திருப்பது வீட்டு காவல்காரன் அல்ல என்று.

 

Advertisement