Advertisement

 

முகிழ் –  20 

 

ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த திரையில் படிந்து அவன் எதிர்ப்பார்த்தது போலவே அந்த திரையில் தெரியவும் அதை பார்த்துகொண்டே மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை சிந்திக்கலானான். 

 

 

அவன் சொன்ன படியே நிலாவை அழைத்துகொண்ட அகிலன் அந்த பங்களாவை கடக்க வெளியில் இருந்து வீட்டை நோட்டமிடுபவன் தனது முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான் அகிலனின் காக்கி உடையை பார்க்கவும். 

 

 

அதன் பிறகு ஆதித்யன் மதி அழைத்து செல்ல மதியை உற்று நோக்கியவன் ஆதியை பின்தொடர ஆரம்பித்தான். அந்த வீட்டிலிருந்து சிறு தூரம் வரை பதிவு செய்திருந்த அந்த காட்சிகள் அவன் கணினி திரையில் பதிவு ஆகி இருக்க அதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். 

 

 

சுற்று சுவர் மேலிருந்த அலங்கார விளக்குகளை மாற்றி புது விளக்கோடு ரகசிய கமேரக்களை இளஞ்செழியன் மூலமாக பொருத்தியவன் அந்த புது விளக்கு காட்டிய உண்மைகளை பார்வையால் உள்வாங்கி மனதில் அதை அலசி பார்த்துகொண்டிருக்க அவன் புத்தி ஒரு புதிய திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது. 

 

 

அவன் அதை பார்த்துகொண்டே திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்க திடிரென அவன் திரையில் பார்த்த விஷயம் அவன் புருவமத்தியில் முடிச்சை ஏற்படுத்தியது. 

 

கோவிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது பதிவு ஆகி இருந்த காட்சிகளில் அந்த நோட்டமிடுபவனை தவிர மற்றும் ஒருவனும் இருந்தது தான் அவன் ஆச்சர்யத்துக்கு காரணம். அவர்கள் இருவரையும் கண்டவன் அந்த இருவருக்கும் சம்மந்தம் இருக்குமென்று தோணவில்லை ஆனால் அவர்கள் இருவருமே தங்களைத்தான் தொடர்கிறார்கள் அதுவும் ஒருவர் தொடர்வது மற்றொருவருக்கு தெரியவில்லை என்பதை புரிந்துக்கொண்ட ஆதித்யன் பின்புறமாக சென்றவன் எங்கே செல்கிறான் என்று பார்க்க எண்ணி பின்புற சுவற்றில் இருந்த காமெராவின் பதிவை உயிர்பிக்க அது பின்புற வாசலொட்டி அவன் நிற்க ஆதித்யனுக்கு தெளிவாக புரிந்துவிட்டது. அவனும் மதியை கண்காணிக்க வந்தவேனே என்று. ஆனால் இருவர் எதற்கு, இருவருக்கும் தெரியவில்லை என்ற போது மதி தற்போது பார்க்கும் வழக்கு ஒருவேளை இரு குற்றவாளிகள் சம்மந்தபட்டதோ.

 

 

வழக்கு ஒன்றாக இருக்கும் போது இருவர் எப்படி சம்மந்தப்பட்டிருக்க முடியும் என்பன போன்ற கேள்விகள் ஆதியின் உள்ளத்தே தோன்றி பெரிய பெரிய அலைகளை அடித்துகொண்டிருந்த கடல் போல அவன் மனமும் இருந்தது தற்சமயம், ஆயினும் அவன் முகம் அந்த அளவு குழப்பத்தை பிரதிபலிக்காமல் நிர்மலமாகவே பார்ப்பதற்கு இருந்தது.  

 

அவன் மனதிலோ, “அகிலன், மதி இவுங்க 2 பேரும் வந்த பிறகு தான் இந்த புது மனிதனோட நடமாட்டம் இருக்கு, இவன் வந்ததுக்கு காரணம் ஒன்னு ஏ.எஸ்.பி தேடி இருக்கணும் இல்ல ஜர்னலிஸ்ட்அ தேடி வந்துருக்கணும்.

 

 

அகிலன பாத்து அவன் முகத்த மறச்சான், அவன பின் தொடரால, சோ கண்டிப்பா இவன் மதியை நோட்டமிடதான் வந்திருக்கணும், அதுனால தான் இவன் மதிகூட கோவில் போகும்போது வந்தான்… மதிகூட நான் இருக்க தான் செய்தே..ஆனா கூட அவன் நிச்சயமா என்ன தொடரால, அதுவும் உறுதி…. இப்ப மதிய 2 பேரு தொடருவதற்கு என்ன காரணம்” என்று எண்ணமிட்டு கொண்டிருந்தான். 

 

இப்படியே யோசித்து யோசித்து யோசனையில் திழைத்தவன், பிறகு ஒரு தீர்கமான முடிவோடு அந்த காட்சிகளில் பதிவு ஆகி இருந்த இருவர் புகைப்படத்தையும் தனது தனி மின்னஞ்சல்க்கு அனுப்பிவிட்டு இளஞ்செழியனை அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்தவன் அகிலனின் அறை நோக்கி சென்றான். 

 

 

அகிலனிடம் தனிமையில் ஒரு சில விஷயங்களை பேசியவன் அகிலனிடம் எதையும் முழுதாக விளக்காமல் ஒரு சில விஷயங்களின் தகவல்களை பெற்று தருமாறு கூறி சென்றான். 

 

அன்று இரவு ஆதியின் நினைவுகள் யோசனையில் கழிய அடுத்தநாள் மிக அழகாக விடிந்தது. 

கண்விழிதவன் முன்னாள் மதி பேபி பிங்க் டாப்பும், கருப்பு வண்ண பாட்டியாலா பாண்ட்டும் அணிந்து அவள் முன் உச்சியில் சரிந்த முடிகளை காதோரம் ஒதிக்கிவிட்டிருந்த படி கூந்தலை அள்ளி முடியாமல் விட்டிருந்தவள் கையில் காபியுடன் நின்று இருந்தாள். புன்னைகயுடன் அவள் காபியை தரவும் இன்று புதுசாக அதுவும் முதல்முதலாக அவனை காபியுடன் எழுப்பிய மனையாளை பார்த்து ஆச்சர்யத்தில் விழி விரித்தான். 

என்ன இது புது பழக்கம் என்பது போல அவனது இடப் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கி அவனுக்கே உரிய பாணியில் அவன் இதழ் பிரிக்காமல் கண்களாலே கேட்க மதி அவனின் மௌனபறிபாசையில் சொக்கித்தான் போனாள். 

அவளிடம் இருந்து பதிலற்று போகவே அவளின் கண்கள் அவனை விழுங்கிவிடுவது போல அவளின் பார்வை இருக்க ஆதியின் மனதிலோ, “உன்னையே மறந்து நீ என்ன பாக்குற பார்வையில புரியிது, அந்த பார்வையை காதலையும் சொல்லுது.. ஆனா உன் மௌனம் தான் வார்த்தைய சொல்லாம என்ன காரணம்னு தெரியாம என்ன தினமும் கொல்லுது டி… ஹ்ம்ம் இப்ப உன்ன என்கிட்ட சொல்லவைக்கிற முதல் முயற்சிய எடுத்துவைக்கிறேன்…….” என்று மனதினுள் பேசிக்கொண்டவன், படுக்கையை விட்டு எழுந்து, அவளிடம் காபியை கட்டிலின் அருகிலிருந்த இரவு விளக்கு இருந்த மேஜையில் வைக்குமாறு கூறியவன் அவளிடம் சாதரணாமாக பேச்சை வளர்க்க எண்ணி அவனது மொபைலை எடுத்து தருமாறு கூறினான். அதை கேட்ட மதி, ஆதி முதல் முதலாக அவளிடம் ஒன்றை செய்ய சொல்கிறான் என்ற சந்தோசத்தில் அவனது கைபேசியை எடுத்தவள் அவனிடம் கொடுக்கும் அவசரத்தில் கட்டிலின் அருகே இருந்த மேஜையில் கால் இடற, காபி கொட்டி இருக்குமோ என்று அந்த பரப்பரபிலும் அவள் பார்க்க காபி தவறி விழ வில்லை ஆனால் மதி தான் கால் தவறியதால் நிதானம் இழந்து அவளின் முன்புறமாக சரிய அவள் கையில் வைத்திருந்த அவனது கை பேசி கட்டிலில் விழ, மதி ஆதியின் மீது சரிந்தாள்.  

அவள் நிலை தடுமாறி அவன் நெஞ்சத்தில் சாயவும் அவளையும் தாங்கி கொண்டு அவன் தடுமாறி மஞ்சத்தில் சாய்ந்தான். அவன் கைகள் இரும்பென அவளை வளைத்திருக்க, அவள் தான் அவனின் காதலி என்பதை அறிந்த ஆதித்யன் அன்று முதல் பார்வையால் அவளை தீண்டிகொண்டிருந்தவன், இன்று அவன் இரும்பு கைகள் கொண்டு தீண்ட தொடங்கி இருந்தான் அந்த மலர்கொடியின் இடையை அவன் கைகள் கொண்டு அழுத்தி இருந்தான். 

அவளை தடுமாற செய்து விழ வைத்தவன் மேல் அவள் சாய்ந்ததால், அவள் அணிருந்த மேல் சட்டை பாதி அறுகோண வடிவமுள்ள கழுத்து பகுதி கொண்டிருக்க அந்து நன்றாக முன்னிருங்கி லேசாக தெரிந்தும் தெரியாதது போல அவள் உள் அழகு வெளிப்பட, அந்த நிலையில் அவன் மீது அவள் படுத்திருக்க இப்பொழுது தடுமாறியது ஆதித்யன் ஆனான். 

இத்தனை வருட காலம் எழுப்பபடாமல் இருந்த உணர்ச்சி இப்பொழுது அவனின் இதய மதியான மதியின் ஸ்பரிசத்தில் மின்னல் வேகத்தில் உயிர்தெழுந்தது. 

அவள் இவன் மீது சாய்ந்திருக்க, ஆதியின் முகம் சற்று கீழிறங்கி இருக்க, ஆதியின் முகத்திற்கு நேரே அவள் கழுத்துபகுதி இருந்தது. அவள் அப்போது தான் குளித்திருக்க அவளின் மணத்தோடு அவள் குளிக்க பயன்படுத்திய வாசனை கட்டியும் சேர்த்து ஆதிக்கு வேட்கைய ஏற்படுத்தியது.

அவன் மீது சரிந்த மதியோ, அவனின் அருகாமைக்கு ஏங்கி இருந்தவள் அவனது ஸ்ரிபரிசத்தில் ஆண்மையில் கண்டுண்டு கிடந்தாள். அவளின் இடைய சுற்றி வளைத்த ஆதியின் கைகளில் விருப்பத்தோடு சிறைப்பட்டாள்.

அவனின் சூடனா மூச்சுகாற்று அவள் மீது பட, அதை முழுதாக அனுபவித்தவள் அந்த ஆதித்யனின் கதிர்களை விட இந்த ஆதித்யனின் மூச்சு காற்றுக்கு அனல் கக்கும் சக்தி அதிகமே என்று அந்த மோன நிலையிலும் ஆதியின் ஆண்மையை கதிரவனோடு ஒப்பிட்டு ரசித்தாள். 

அந்த நெருக்கம் தந்த இதத்தில் இருவரும் எடுத்திருந்த முடிவுகள் தூள் தூள் ஆகின. 
அவனின் மனதை கொள்ளைகொண்ட மதி அவனின் மனையாள் ஆனா மதி ஆதிக்கு வேண்டும் என்ற சிந்தனையே ஓட, மதிக்கு அவனின் அருகாமைக்கு ஏங்கிய மனதிற்கு அவனது அரவணைப்புக்குள் உறவாட கிடைத்த நொடியில் அவள் மற்றதை மறந்தாள். அடுக்கத்தை பற்றி அதில் நடந்தவைகளை அவனிடம் கூற அவள் எடுத்த முடிவை இப்படி சகலத்தையும் மறந்தாள்.

அவள் கண்முன்னால் அடுக்கம், அவள் பணி, அந்த காவ்யா, ஏன் இந்த உலகமே மறைந்தது. அவள் கண்களுக்கு தெரிந்தவன் ஆதி ஆதி ஆதி மட்டுமே ஆனான். அவளின் மனதில் நிறைந்த ஆதியிடம் தன் பெண்மையை ஒப்படைப்பதை பாக்கியமாக நினைத்தவள் அவளின் மீது அவன் படர விருப்பத்தோடு கண்களை மூடிகொண்டாள். 

இதுவரை அவனது வேகமூச்சுக்களும் அந்த மூச்சு காற்றின் வெப்பம் மட்டுமே மதியின் மனதில் கிளர்ச்சியை கிளப்பி இருக்க இப்பொழுதோ அவன் இதழ் கொண்டு அவளை தீண்ட நெருங்கி இருந்தான். அவனது முதல் முத்தத்தை மதியின் பிறை நெற்றியில் ஆதி பதிக்க அடுத்து அவனது இதழ்கள் அவளின் கன்னம் கழுத்து என்று ஊர்வலம் சென்றது.

இந்த மோன நிலை நீடித்திருந்தால், அடுத்து என்ன நிகழ்ந்திருக்குமோ ஆனால் அதை கலைக்கும் விதமாக கட்டிலில் விழுந்திருந்த சைலெண்டில் போடபட்டிருந்த அவனது மொபைலில் பளிச் பளிச்சென்று வெளிச்சம் வர அதை தற்செயலாக பார்த்த ஆதித்யன் மோன நிலை துண்டிக்கப்பட்டு திரையில் மிளிர்ந்த பெயரை பார்த்து மெல்ல அவளிடமிருந்து விலகியவன் அதை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு விரைந்தான். 

அதில் தெரிந்தது எப்பொழுதும் பூதபடையன் அழைக்கும் அவனின் ரிசார்ட்யின் எண். ஏதாவது தேவைக்கு அவனை தொடர்பு கொள்ளவும் அதே சமையம் மதியை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும் படி சொல்லியும் அவனின் ரிசார்ட் எண்னை ஆதியை அழைக்க பயன்படுத்துமாறு கூறி இருந்தான் ஆதித்யன். 

அந்த பெயரை பார்த்ததும், அடுக்கம், அவள் காதலை சொல்லாமல் மறைந்தது என அவனுக்கு நினைவு வர அவன் இத்தனை நேரம் ஆட்கொள்ளப்பட்டிருந்த மோன நிலை அறுபட்டு சுயஉணர்வு பெற்றான். அதன் விளைவாய் அந்த அழைப்பை ஏற்கவும் அதே சமயம் மதியுடன் விளையாடி பார்க்கவும் ஆசைப்பட்டு குளியறைக்குள் நுழைந்தான். 

இது எதுவும் அறியாமல் கண் மூடி படுத்திருந்த மதி அவனின் இதழ் தீண்டலை எதிர்ப்பார்த்திருக்க குழியல் அறையில் அழைப்பை ஏற்றவன் அவர் கேட்டதுக்கிணங்க ஒரு சில உதவிகளை அந்த மக்களுக்கு செய்யமாறு ரிசார்ட்டில் பணி புரியவர்களிடம் கூறினான். 

அந்த உரையாடலின் போதே அவனுக்கு ஒரு யோசனை உதயமாக அதை செயல்படுத்த எண்ணி பூதபடையனை தன்னை வந்து சந்திக்கு மாறு உரிமையும் பெரியவர் என்ற மரியாதையும் அவன் குரலில் தொனிக்க, கூறி அழைப்பை துண்டித்தவன் இதழில் ஒரு கள்ள சிரிப்பை உதிறவிட்டான்.

 

குளியல் அறை உள்ளே முகம் கை கால் கழுவி ஒரு துண்டுடன் எதார்த்தமாக வெளிவர, சிறிது நேரத்தில் ஆதித்யன் இல்லாததை உணர்ந்து மதி தன் கரு விழி சுழல விட்டு அவனை தேடிக்கொண்டிருந்தாள். 

மிகவும் எதார்த்தம் போல் காட்டிகொண்டவன் மதியின் அருகில் வந்து அவளிடம், “குட் மார்னிங்” என்று கூற மதி பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டிருக்க மேலும் அவனே தொடர்ந்தான்.  “என்ன? ஏன் என்னையே பார்த்துட்டு இருக்க? ஒ காபியா? காப்பி எனக்கா? ரொம்ப நேரம் ஆச்சா மதி… நான் ரெப்ரெஷ் பண்ண போயிருந்தே… ராமு அண்ணா கொண்டு வந்து வச்சுட்டு போனாரா? ஆமாம் நான் எழும் போது நீ இங்க இல்லையே எங்க போயிருந்த?” என்று கேட்டு கொண்டே அவன் காபியை பருக தொடங்கி இருந்தான். 

அவனை காணாமல் ஏமாந்தவள், அவனை கண்டவுடன் வெக்கத்தில் தலை குனிய போக அந்த நேரத்தில் ஆதித்யனின் பேச்சு அவளுக்கு பெரும் மாயமாக விளங்கியது. அவள் காப்பி கொடுத்தது தவறி அவன் மேல் இவள் சரிந்தது அவன் அணைப்பிற்குள் அடங்கியது, அவனின் இதழ் ஊர்வலம், அத்தனையும் கனவா என்று அவள் மனம் எண்ண, குழம்பிபோனாள் மதி. 

ஆதியிடம், “அது  …அது வந்து நான் தான் காப்பி உங்களுக்கு கொடுத்தேன்…நீங்க கூட வாங்குநீங்களே, அதுக்கப்புறம் … அதுக்கப்பறம் …. நா…. இல்ல, உங்க மேல … நீங்க” என்று நடந்த நிகழ்வை சொல்லமுடியாமல் கன்னம் சிவக்க தடுமாறியவளை பார்த்து ஆதி, “என்ன மதி சொல்ற? நீ எப்ப எனக்கு காப்பி குடுத்த…? நான் இப்ப தான் எழுந்ததும் உன்ன முதல் முறையா பார்க்கிறே… ராமு அண்ணா க்கு பதிலா நீ கொண்டு வந்தேன்னு சொல்லவறியா? அதுக்கு தான் இந்த தடுமாற்றமா? என்ன ஆச்சு மதி ஏது ஏதோ சொல்லற?” என்று கேட்டுக்கொண்டே கடைசி சொட்டு வரை ருசித்து குடித்து முடித்தான் அவள் கையால் கொடுத்த காபியை ஆதித்யன். 

இந்த உரையாடலின் போது அவன் கைமறைவில் இருந்த கைபேசியை அவன் ஆராய்ந்துக்கொண்டு அவளிடம், “தேங்க்ஸ் பார் காபி” என்று கூறிவிட்டு நடக்க அவனின் எண்ணிற்கு செழியனிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவன், “சொல்லு, செழியா, ஹ்ம்ம் சரி… போன காரியம்? பெர்பெக்ட்… ஒகே எனக்கு அந்த டீடைல்ஸ் அனுப்பு… ஹ்ம்ம் அவனே தானா? ஹ்ம்ம் வெள்…. ஒகே 1 ஹௌர் ல எனக்கு அந்த டீடைல்ஸ் வேணும்….” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

 

அடுத்து மதியிடம் திரும்பியவன், “மதி என்ன அப்படியே நின்னுட்டு இருக்க… ஆர் யு ஆல்ரைட்?” என்று கேட்க மதிக்கோ விழிப்பதை தவிர வேறு வழியற்று போனது. அவளே நடந்தவை யாவும் கனவோ அல்லது அவளது கற்பனையோ என்று எண்ணும் அளவு ஆதித்யனின் பேச்சும் செய்கையும் இருந்தது. இப்பொழுதே இப்படி கூறுபவன், நடந்ததாக அவளுக்கு தோன்றுவதை அவனிடம் கூறினால் அவன் என்ன சொல்வானோ என்று அஞ்சி மலங்க மலங்க விழித்து அவளது தலையை இடது வல பக்கமாக ஒருமுறை ஆட்டிவிட்டு “ஐ யம் ஒகே…” என்று மட்டும் கூறிவிட்டு அவ்விடம் விட்டு தெளியாத முகத்தோடு நகர்ந்தாள். 

அவள் செல்வதை ஆதித்யனின் வார்த்தை நிறுத்தியது, “மதி நாளைக்கு நம்ம ஆபிஸ்க்கு வா… ஒரு முக்கியமான வேலை இருக்கு…ஒகே?” என்று அவனது இடது புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க அவளுக்கோ அவள் காப்பி கொடுத்தபோது நிகழ்ந்தது போலவே தோன்றவும் ஒரு முறை குழம்பி மறுநொடியே அவள் மனதினுள், “ஐயோ மறுபடியுமா? எனக்கு தான் என்ன ஆச்சு? எனக்கு ஒன்னுமே புரியல்லையே” என்று புலம்பியவள் “சரி கிரிஷ்…ங்க, நான் கீழே இருக்கேன்” என்று கூறிவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.

போகும் தன் மனையாளையே மாய கிறிஷ்ணனின் புன்னகையுடம் மதியின் க்ரிஷ்ணவ் பார்த்துகொண்டிருந்தான்  . . .

 

கீழே இறங்கி சென்றவள் குழப்பத்தின் உச்சில் அவளது கைகளை ஆட்டி ஆட்டி தனக்குள் பேசிக்கொண்டு நடந்தது கனவா இல்லை நிஜமா என்று உணர முடியாத நிலையில் இருக்க அவள் மனமோ, “க்ரிஷ்ணவ் கிட்ட நீ கனவுல பேசமட்டும் தான் செஞ்சன்னு நினச்சே, இப்ப என்னடானா, அவன் அருகாமை கூட உனக்கு கனவுல வருதுபோலா…” என்று அவளிடம் கேலி பேச இப்படி கூட நிஜம் போல பகல் கனவுகள் வருமா என்று குழம்பி போனாள் ஆதித்யனின் மனைவி.

 

தன்னந்தனியே பேசிக்கொண்டு வந்தவளை பார்த்த நிலா, “என்ன மதி, இப்படி தனியா பேசுற அளவு ஆதி அத்தான் மேல காதல் முத்தி போச்சா?” என்று கேட்க, மதியோ வெளியில். “இல்ல நிலா, சும்மா தான்” என்று கூறிவிட்டு மனதினுள், “அட நானே அப்படி தானோன்னு குழம்பிட்டு இருக்கே, இதுல இவ வேற… ஒரு வேலை நிலா சொல்றமாதி தானா?” என்று எண்ணமிட்டு கொண்டிருந்தாள்.

 

 

ஆதியின் அழைப்பிற்கேற்ப அன்று காலையிலே ஆதியை சந்திக்க வந்த சினேகனை குழம்பிய முகத்துடன் எதிர்கொண்டாள் மதி. அவனை கண்டதும் மற்றதை ஒதிக்கி வைத்துவிட்டு, “வா சினேகன், எதுவும் தகல் வேணுமா? … நான் இன்னும் 2 யே நாட்கள் ல பழயபடி வந்துருவே…என் லீவும் முடியுது இல்லையா? …. சரி இப்ப உனக்கு என்ன டீடைல்ஸ் வேணும்? அத சொல்லு முதல்ல, ஹ்ம்ம் இல்ல இல்ல… ஒரு நிமிஷம் இரு, முதல்ல உனக்கு காபி அப்புறம் வேலை… ராமு அண்ணா ஒரு காபி கொண்டு வரீங்களா….” என்று பட படவென மதி பேசிக்கொண்டு போக, சிநேகனோ அவளை விநோதமாக பார்த்து வைத்தான்.

 

“ஹே இரு இரு, இப்ப எதுக்கு இப்படி அவசர அவசரமா பேசுற… நான் முதல்ல உன்ன பார்க்கவே வரல, கேஸ்பத்தி லாம் நாங்க கலெக்ட் பண்ணிப்போம்… நீ வீட்ல லீவ் ல இருக்குறது, கல்யாணமான புதுசுல சந்தோசமா என்ஜாய் பண்றதுக்கு, அத விட்டுட்டு இப்பயும் உனக்கு வேலையா? எல்லா நாங்க பார்த்துபோம்… இப்ப நான் உன்ன பார்க்க வரல…ஆதி சார தேடி தான் வந்தேன்” என்று கூற மதியோ அவன் பேச பேச கோவத்திற்கு சென்று கொண்டிருந்தவள் இப்போது கல்யாணம், சந்தோசம் என்று பேச்சு தொடங்கவும் அவளுக்கு சரட்டென்று கோவம் வர மனதினுள், “அவர்கிட்ட சகஜமா பேச கூட வழிய காணோம், இவன் என்னடான இன்னும் என்ன கடுப்பேத்துறான்” என்று மனதினுள் நினைத்துக் கொண்டு சிநேகனிடம், “அடப்பாவி… நான் 2 மாசமா நாயா உழச்சு எல்லா தகவல்களும் சேர்த்து வச்சா நீ இன்னும் பேசுவ, இதுக்கு மேலயும் பேசுவ” என்று கூற சிநேகனோ அவள் கோவத்துக்கெல்லாம் அசருபவன் நான் இல்லை என்ற ரீதியில் அவளிடம், “மிசெஸ். இளமதி, நாய் குலைக்கத்தான் செய்யும் உழைக்காது…. புருஞ்சுதா? எதுனாலும் கரெக்டா தெருஞ்சுகிட்டு பேசுங்க… அப்புறம் நான் சார பார்க்கணும் கொஞ்சம் கூப்பிடுறியா…” என்று கூற மதி இரண்டாம் முறை சிநேகனிடம் கோவமாக பேசும்போதே வந்தவன் மதி கூறியதற்கு சினேகன் கூறிய பதிலை கேட்டு சிரிப்புடன் அங்கே வந்தான் ஆதித்யன்.

 

பிறகு சினேகனுடன் பூங்காவிற்கு சென்றவன் மதியின் வழக்கு பற்றி சில தகவல்களை கேட்க முனைய சிநேகனோ முதலில் தயங்கினாலும், மதியின் மீதுள்ள அன்பால் தான் ஈடுபடுகிறார் என்பதை உணர்ந்து அதோடு ஆதியின் மீது நம்பிக்கையும் ஆதியையே தன் முன் உதாரணமாக கொண்ட சினேகன் அவனிடம் அவனுக்கு தெரிந்த அனைத்தையும் கூற முடிவெடுத்து அப்படியே செய்தான்…

 

பாதிகப்படவரின் வீட்டிற்கு மதி எதுவும் சம்பீத்தில் சென்று வந்தாளா என்று கேட்டறிந்தவன் சிநேகனிடம் அவனையும் அழைத்து செல்லுமாறு கூறினான். பிறகு மதி அன்று சாய் பாபா கோவில் அருகினில் தாக்கப்பட்ட அன்று எங்கு எங்கு சென்று வந்தாள் என விவரம் கேட்க சிநேகனுக்கோ அது சரியாக தெரியாதனால் ஆதி சற்று யோசித்துவிட்டு சிநேகனிடம், “சினேகன்… நம்ம இப்ப உள்ள போகலாம், மதி கிட்ட நீங்க இந்த டீடைல்ஸ் கேளுங்க அப்ப தற்செயலா இருக்குறது போல நானும் கூட இருக்கேன்…” என்று கூறினான்.

 

இவ்வாறு பேசிவிட்டு அவர்கள் நடந்துவரும் பாதையின் பக்கவாட்டில் இருந்த தாழை மர கூட்டங்களின் அருகே இருந்த செயற்கை குளத்தை கண்ட சினேகன் அதில் தத்தி தத்தி சென்று நீந்த தொடங்கிய வாத்து கூட்டத்தை பார்த்துக்கொண்டே நடந்தான். அங்கும் இங்கும் ஓடி விளையாடிய முயல் குட்டிகளும் அவன் கண்களுக்கு தப்பவில்லை.

 

இப்படி பார்த்துகொண்டு வந்தவன் மனதினுள், “எவ்ளோ சூப்பரா இருக்கு… என்னபோல கவிதை ரசனை உள்ளவங்க வந்தா நிச்சயம் இத பாத்து கவிதையே எழுதிடுவாங்க… ஹ்ம்ம் … நம்மளும் இத வச்சு ஒரு கவிதை எழுதணும்… ஏற்கனவே எழுதினததான் ஆதி சார் காதலுக்கு கொடுத்துடோமே… அதுனால புதுசா ஒன்னு எழுதணும்” என்று அவனுக்குள் எண்ணமிட்டு கொண்டு சென்றான்.

 

உள்ளே சென்று மதியிடம் சினேகன், “மதி எனக்கு கொஞ்சம் டீடைல்ஸ் இப்ப வேணும்… சொல்றியா? ” என்று கேட்க மதியோ, “என்னமோ தேவ இல்ல, குலைக்கும் உழைக்கும் னு டையலாக் விட்ட ? இப்ப எதுக்கு என்கிட்ட கேட்குற…” என்று கூற சிநேகனோ அவளிடம், ” நீ கண்டிப்பா சொல்லி தான் ஆகனும்… வேனும்ன உனக்கு கோவம் போற வர நான் இங்கயே வெயிட் பண்றேன்… வெளியில வேற அழகான சீனரிஸ் பார்த்தே,…அத வச்சு நீ சொல்றவர நான் கவிதை யோசிக்கிறேன்…. அங்க நிறைய வாத்து பார்த்தேன் மதி..வாத்து வச்சு ரைமிங்கா….” என்று அவளிடம் கூறிவிட்டு ஒரு சில நொடிகளில் யோசித்தவன்… மீண்டும் அவளிடம் “வாத்து கு ரைமிங்…. ஆத்து… ஆத்துனா ரிவர்…இல்லனா காபி ஆத்து…டி ஆத்து… இப்படி எது போடலாம் மதி” என்று அவளிடமே வெகு மும்மரமாக கேட்க மதியோ அவசரமாக அவனிடம் அவன் கேட்கும் தகவலை கொடுக்க முனைந்தாள்.

 

அவள் மனதிலோ, “ஐயோ சாமி, இவன் ரைமிங் வேர்ட் கேட்டலே முடியல, விட்டா இவன் முழு கவிதையும் எண்ட சொல்லி இம்ச பண்ணுவன்…அதுக்கு நம்ம அவன் கேட்க்கிற டீடைல்ஸ் கொடுத்துடலாம்” என்று எண்ணிக் கொண்டாள்.

 

சிநேகனிடம் மதி, “இல்ல சினேகன், உனக்கு கண்டிப்பா நிறைய வேலை இருக்கும் இல்லையா? … அதுனால இப்பவே சொல்லிடறேன்…எனக்கு கோவம்லா ஒன்னும் இல்ல” என்று கூறி சிறிய புன்னைகயோடு அவனிடம் மேலும், “என்ன தகவல் வேணும்? ” என்று கேட்க அவனோ அவளிடம் ஆதி கேட்க சொன்னவற்றை கேட்டான்.

 

“இது எதுக்கு சினேகன்? சரி சொல்லறேன், அன்னைக்கு சைதாபேட் போனேன்… அங்க நம்ம லிஸ்ட்ல இருக்குற வரதரஜனோட அப்பாவ பார்த்தேன், எனக்கு அங்க எந்த க்ளுவும்வும் கிடைக்காம தல ரொம்ப வலிக்கிதேன்னு அடையார்ல ஒரு காபி ஷாப் போனே ….அங்க ஹர்ஷினி இனியன பார்த்தே, அப்புறம் ஈஞ்சம்பாக்கம் பீச் வந்தே…அதுக்கு அப்புறம் சாய் பாபா கோவில்…அப்புறம் தான் உனக்கு தெரியுமே…” என்று கூறி முடிக்க சிநேகனோ மதியிடம், “என்ன மதி நீ? உன் பிளாஷ் பாக் ல ஒன்னுமே விருவிருப்பா இல்ல…சரி பரவா இல்ல எனக்கு அந்த இனியன தெரியும். பட் யாரு அந்த பிகுர் ஹர்ஷினி… ஆள் எப்படி? அய்யா க்கு ஏத்த மயிலா அது” என்று கேட்க மதியோ அவனிடம், “பிச்சிடுவே… ஹர்ஷினி இனியன லவ் பண்றா…உனக்கு செட் ஆகாது” என்று கூற இதை கேட்டுகொண்டிருந்த ஆதித்யன் ஒருமுறை நிமிர்ந்து மதியை பார்த்தான். 

 

“அப்ப இனியனும் ஹர்ஷினியும் லவர்ஸ்ஆ ” என்று சினேகன் கேட்க மதியோ இல்லை என்பதாக தலை அசைத்துவிட்டு, “அன்னைக்கு தான் அந்த பொன்னு ப்ரொபோஸ் பண்ணுச்சு…ஆனா இனியன் அவர் மனசுல வேற இருக்குனு நாகரீகமா ரிஜக்ட் பண்ணிட்டாரு…அவ்ளோ தான் தெரியும்…அவுங்க பிரச்சனையில நம்ம ஏன் நுழையனும்னு நான் விட்டுடேன்” என்று சாதாரணமாக கூறினாள்.

 

“ஒஹ் அப்படியா? சரி சரி வேணாம்னு சொல்றவனதான் இந்த பொண்ணுகளுக்கு பிடிக்கிது… என்கிட்டலாம் யாரு வந்து ப்ரொபோஸ் பண்ண மாற்றாங்க…எல்லாம் என் நேரம், சரி மதி நான் அப்ப கிளம்புறேன்” என்று கூறிவிட்டு ஆதித்யனிடம் விடைபெற்று சென்றான். 

 

மதி கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஆதியின் காதுகளில் ஒலிக்க அவன் மனமோ இனியனின் மௌனம், அவன் ஏமாற்றத்தை பிரதிபலித்த கண்கள் , ஹர்ஷினியின்  காதல் , இனியனின் நிராகரிப்பு, மதியின்  திருமணம் , ஹர்ஷினி யின்  விடுமுறை  இவை  அனைத்தையும்  சுற்றி  வந்தது. இவை அனைத்துமே ஒரு மெல்லிய கையிற்றால் பினைக்கப்பட்டிருப்பதை போல தோன்றியது ஆதித்யனிற்கு. 

இனியனின் வேதனை வழிந்த கண்கள் அப்பொழுதும் ஆதியின் முன் நிழலாட, ஏனோ அவனுக்கு அதை அறிய தோன்றியது. ஒரு வேலை மதியின் திருமண செய்தி அறிந்து, இனியன் சிந்திய ஏமாற்றமடைந்த பார்வையை பார்க்காது இருந்தால், ஆதிக்கு இந்த எண்ணம் தோன்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது… அதற்கான காரணம் அறிய அவன் உள் மனம் கட்டளையிட, அதே சமயம் அவன் எண்ணங்களில் பல சிந்தனைகள் ஓடி கொண்டிருக்க அவற்றுக்கு வழி தேடி இறுதியில் ஒரு தீர்கமான முடிவெடுத்தான்.

 

எடுத்த செய்யலை முடிக்கும் எண்ணத்தோடு இனியனின் வேதனைய அறிய வழி கண்டுவிட்ட தெளிவோடு அலுவலகம் பயணித்தான்.

 

அங்கே சென்றவன் ஹர்ஷினியை தன்னை வந்து சந்திக்குமாறு கூற இன்றும் அவள் விடுமுறை என்ற தகவல் கிடைக்க ஆதி, ஹரிஷினியின் அருகில் இருக்கும் பெண்ணை அழைத்து அவளிடம் ஹர்ஷினி பற்றிய தகவலை அறிய முற்பட்டான். மேலும் தனது வீட்டில் அவனுக்கு உதயமான திட்டத்தை செயல்படுத்த எண்ணி அவனது அலுவலக பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொழிலானை அழைத்து சிறிது நேரத்தில் தனது அறையில் இருக்கும் கணினியில் தினம் தோறும் கண்காணிப்பு கேமரா மூலம் எடுக்கப்படும் பதிவுகளை பார்க்கும்படி அமைக்க சொன்னான்.

 

ஹர்ஷினியின் அருகில் இருக்கும் நபருக்கு அவளை பற்றி அறியாமல் போகவே மேலும் ஹர்ஷினி அவள் கடைசியாக வந்த நாள் அன்று கொஞ்சம் சீக்கிரமே கிளம்பியதை மட்டும் கூறினாள்.

 

ஆதித்யன் கட்டளைப்படியே அந்த பதிவுகளை இயக்கும் வசதி அவன் கணினியில் வந்ததும், ஹர்ஷினியின் கடைசிநாள் செய்கைகளை கவனிக்கலானான்.

 

அதில் தெரிந்த காட்சிகள் இதுதான், பொது வேலை இடத்தில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு காமெராக்கள் ஒளி மட்டுமே பதிவு படுத்துமாறு அமைத்திருக்க, சற்று உயர் அதிகாரிகள் இருந்த அறைகளில் மட்டும் ஒளியை பதிவு படுத்த காமெராக்களும், ஒலியையும் சேர்த்து பதிவு பண்ணும் கருவிகளும் பொருத்தபட்டிருந்தது. அதன் படி ஹர்ஷினி இருக்கும் பகுதியில் காட்சிகளை பார்க்கவே முடியுமென்பதால், அவள் நடவடிக்கைகளில் பெரிதாக ஆதித்யனால் எதையும் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் அன்று அந்த கடைசிநாள் நாள் அன்று அவள் அவளது கணினி முன்னால் தலை சாயித்து படுத்திருப்பதும் உணவு இடைவேளையில் கண்களை துடைத்துக் கொண்டு இனியன் அறை நோக்கி செல்வது பதிவு ஆகி இருந்தது.

 

உடனடியாக அந்த தேதி, நேரம் ஆகியவற்றை குறித்து அதற்குரிய பதிவை ஆதித்யன் பார்த்த பொழுது அவனது முகத்தில் தீவிர சிந்தனை ரேகை படிந்து மீண்டது. பதிவு படுத்தப்பட்ட அந்த காட்சியில் இருந்தது புயலான உள்ளே நுழைந்த ஹர்ஷினியும், வேலையில் மூழ்கி இருந்த இனியனின் சம்பாஷனையும்.

 

‘  “இனியன், நீங்க ஏன் இப்படி நடத்துகுறீங்க? உங்ககிட்ட நான் இத எதிர்பார்க்கல, உங்கள காதலிச்ச மனசால உங்கள விட்டுகொடுக்க முடியல… அப்படி என்ன தான் உங்க மனசுல இருக்கு… இப்ப உங்க முடிவு தெரியாம நான் போக முடியாது இனியன்” என்று ஹர்ஷினி சிவந்த விழிகளுடன் கூறவும் தலை நிமிர்ந்து பார்த்த இனியன், “மிஸ். ஹர்ஷினி… இது ஆபிஸ், இங்க நம்மள வொர்க் பண்ண தான் அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க, காதல பத்தி பேசுறதுக்கு இல்ல…கொஞ்சம் புருஞ்சுக்கோங்க…அப்படி எதாச்சும் பேசுறதா இருந்த நம்ம வெளியில போய் பேசுவோம். ஆனா எனக்கு உங்க கூட பேச எதுவும் இல்ல. என் மனசுல வேற இருக்கு, அந்த நினைப்புல இருந்து என்னால வெளியில வர முடியல ஹர்ஷினி…அதோட உங்க மேல காதல்னு உணர்வும் எனக்கு வரல…ஏன் நீங்க அத புருஞ்சுக்க மாட்றீங்க….” என்று இனியன் பதிலுரைத்தான்.

 

இதை கேட்ட ஹர்ஷினி, “ப்ளீஸ் இனியன் அப்படி சொல்லாதீங்க… என்னால கண்டிப்பா உங்கள தவிர வேற யாரையும் ஏத்துக்க முடியாது… எனக்கு நீங்க தான் வேணும்” என்று கதறி அழ ஆரம்பித்தாள். இப்படியே இருவருக்கும் சம்பாசனை ஓட இனியன் அவனது முடிவில் தெளிவாக இருக்க, அவனின் ஒரே பதிலை கேட்டு கேட்டு வெறுத்துபோன ஹர்ஷினி அந்த சமயத்தில் சொல்ல கூடாத வார்த்தையை அவனிடம் கூறினாள்.

 

“உங்களுக்குனு ஒரு குடும்பம், பாசம், பந்தம், அன்புன்னு எதுனாச்சும் ஒன்னு இருந்துருந்தா கூட என் வேதன உங்களுக்கு புருஞ்சுருக்கும் இனியன்… யாருமே இல்லாத அனாதையா வளர்ந்த உங்களுக்கு என் வேதன புரிய ஞாயமில்ல… நான் ஒரு பைத்தியக்காரி…என்ன சொன்னாலும் புருஞ்சுக்காம என்ன நோகடிக்கிற உங்ககிட்ட பேசி என்ன ஆகபோகுது” என்று முடிக்க இனியனது கை ஓங்கி இருந்தது. ஆனால் அவன் சுற்றம் உணர்ந்து ஓங்கிய அவனது கையை கீழ் இறக்கி, “என்ன பார்த்தா இப்படி சொல்ற, சீ…உன் மேல இருந்த மரியாத போச்சு ஹர்ஷினி…. இனி உன்கிட்ட ஒரு வார்த்த பேச கூட விருப்பம் இல்ல…என் மனசுல எவ்ளோ வேதன இருக்குனு உனக்கு என்ன தெரியும்..சொல்லு… நான் நினைச்சது கிடைக்காம அதில இருந்து வெளில வர முடியாம நினச்சு நினச்சு மருகிட்டு இருக்குறே… இனி ஒரு வார்த்த…ஒரு வார்த்த கூட பேசாத” என்று அவன் வெளியில் போகும் படி செய்கை செய்ய, அப்போது தான் அவள் பேசிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்த ஹர்ஷினி நிலைக்குலைந்து போனாள்.

 

அவசரமாக அவள் தவறை உணர்ந்து, “இனியன் ப்ளீஸ், எதோ வாய் தவறி…என்ன புருஞ்சுகோங்க இனியன்…என்னால நீங்க இல்லாத வாழ்க்கைய கற்பனக் கூட செய்யமுடியாது” என்று மன்றாட, இனியனோ அவளை வெளியே போகும் படி சைகை செய்ய ஹர்ஷினி கண்களை துடைத்துக்கொண்டு ஒரு நிமிர்வோடு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

 

“இனியன், இப்ப நான் போறே நீங்க சொன்னது போலவே…ஆனா இந்த ரூம் விட்டு மட்டும் இல்ல, உங்களுக்கு கண் எட்டாத தூரத்துக்கு…. நான் நானே வந்து என் காதல சொன்னதுனால உங்களுக்கு அந்த காதலோட ஆழம் புரியல நினைக்கிறேன்…உங்க கூடவே நான் இருக்குறதுனால உங்களுக்கு நான் உங்கமேல வச்சுருக்கு அன்பு புரியல… ஒரு பொருள் இருக்கும் போது விட அது இல்லாத போது தான் அதோட இடத்த நம்ம புருஞ்சுபோம்… நான் இப்ப இங்க இருந்து போறே…ஆனா நிச்சயம் என்ன தேடி வருவீங்க…என் காதல் மாறது இனியன்” என்று கூறிவிட்டு விடு விடு என சென்று விட்டாள்.

 

இனியனது அறையை விட்டு வெளியில் வந்தவள் சில நொடிகளில் அலுவலகம் விட்டும் புறப்படிருந்தாள். இனியனோ தலையை அழுந்த பிடித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான். ‘

 

இதுவே ஹர்ஷினி கடைசியாக வந்து சென்ற போது பதிவு ஆகி இருந்த காட்சிகள்…

 

காட்சிகள் முடிந்து விட்ட போதிலும் இதை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனின் எண்ண அலைகள் மட்டும் முடிவில்லாது புரண்டுக்கொண்டிருந்தது. இனியன் மனதில் நினைத்தது, இனியனது பார்வை மதியிடம் இப்படி ஏதோ ஒன்று இனியனுக்கும் மதிக்கும் இடையில். அது என்னவென்று ஆதித்யன் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

அவன் சிந்தனை வழி, கிடைக்கவிருக்கும் செய்தியின் தன்மை எப்படி யார் வாழ்வை மாற்ற போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

 

Advertisement