Advertisement

முகிழ் – 2

 

இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த யுவதியை உரசி கொண்டு ஒரு மோட்டார் பைக் சென்றது. அதனால், அந்த பெண் (கண்டிப்பாக 20 வயதிற்கு மிகாமல் தான் இருப்பாள் போலும்) நிலைதடுமாறி, சாலையில் சரிந்தாள். அந்த இருச்சகர வாகனத்தை ஓட்டி சென்றவர்களுக்கு நிதானம் இருந்ததாக தெரியவில்லை, அதாவது குடிபோதையில் அவர்கள்.

 

அப்பொழுது கூட்டம் கூட, இனியன் தான் கூட்டத்தை ஒதிக்கி அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்தான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த மதி உடனே தனது கேமராவில் அனைத்தையும் பதிவுசெய்ய தொடங்கினாள். அப்பொழுது ஒரு ஆம்புலன்ஸ் வரவும் அதில் இருக்கும் வார்டு பாய்கள் அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்ற முனைந்தார்கள். இத்தனை துரிதமாக அந்த ஆம்புலன்ஸ் வந்தது மதிக்கு அதிசயமே. இத்தனை நெரிசலில் இத்தனை துரிதமாக வந்த வண்டி ஓட்டுனரை நினைத்து பாராட்டமல் இருக்கமுடியவில்லை. உடனடியாக இவள் அனைத்தையும் புகைப்படங்களாக பதிவுசெய்து கொண்டு இருந்தாள். அடர்ந்த கூந்தலை கிளிப்பில் அடக்கி, ஆலிவ் பச்சை சுடிதாரில், மை தீட்ட பட்ட பெரிய விழிகளுடன் நின்றவளை இனியன் கண்டான். அவளை ஆராய்ந்து கொண்டு இருக்கும் பொழுதே அவள் தீவிரமாக புகைப்படம் எடுப்பதையும் கவனித்தான்.

 

ஆனால் இத்தனை தெளிவாக இனியனை அவள் கவனிக்கவில்லை, அவன் உருவம் மட்டும் அவளுக்கு தெளிவாக பதிந்தது அதை விடவும் அவன் செய்துகொண்டு இருக்கும் நற்செயல்.

 

பிறகு என்ன நினைத்தானோ அவன் ஆம்புலன்ஸ் அருகில் சென்று உதவி புரிந்தான், மறுகணமே அவன் வண்டியில், அலுவலகம் நோக்கி புரபடலானான். ஆனால், இனியன் மனகண்ணில் இருந்து மதி மறையவில்லை.

 

ஆம்புலன்ஸ் புறப்பட்டதும் மதியும் அவள் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு ஆதித்தியன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனி நோக்கி பயணித்தாள்.

 

அந்த 7 மாடிக் கட்டிடம் கம்பீரமாக எழுந்து நின்றது. மதி தனது வண்டியை பார்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, கிரௌண்ட் ப்ளோர் நோக்கி சென்றாள். அங்கு உள்ள வரவேற்பாளரிடம் தனது ஐடி

கார்டுயை குடுத்து விட்டு காத்திருந்தவள் மனக்கண்ணில் அந்த விபத்தும் அந்த பெண்ணின் நிலைமையுமே ஒரு நிமிடம் வந்து சென்றது. மேலும் அவள் யோசிக்கும் முன்பு அதை கலைக்கும் விதமாக அவள் கைபேசி அழைத்தது.

 

கைபேசி பொத்தானை அழுத்திவிட்டு அதை காதுக்கு குடுத்தவள், தனது மேலதிகாரி அன்றைய நேர்காணல் பற்றி சில குறிப்புகள் குடுத்ததை கவனமாக உள்வாங்கி கொண்டாள். பிறகு, அன்றைய விபத்து பற்றியும், புகைபடங்கள் பற்றியும் அவள் கூறியபோது அதை அவர் அனாவசியம் என்று ஒதிக்கியதோடு மட்டும் அல்லாது, “இதுபோல நிறைய இருக்கு மதி, அதுவும் அந்த பெண்ணிற்கு தான் பெரிய அடி ஒன்று இல்லை என்று நீயே சொல்லுகிறாயே, அதற்கு மேல் இதை பத்திரிக்கையில் போட ஒன்றும் இல்லை, அதோடு ஒரு பெண்ணின் புகைபடங்களை அவள் பெற்றோர் அனுமதி இன்றி போடவும் முடியாதுஎன்று கூறி முடித்தார்.

 

அவர் கூறிய பதிலில் உண்மை இருந்தாலும், அவள் மனம் ஒரு நிமிட யோசனைக்கு பின்பு அந்த பெண்ணிற்கு அடிபட்ட இடங்களை நினைவு கூர்ந்தது. கையில் சிறு சிராய்ப்புகளும், லேசான மயக்கம் மட்டுமே. அதை பார்க்கும்பொழுது இதற்கு ஆம்புலன்ஸ் சற்று அதிகப்படியாகவே தோன்றிட்டு அவளுக்கு. அப்போது, “அய்யோ மதி இந்த ஜர்னலிசிம் படித்துவிட்டு இப்படி எல்லாத்தையும் சந்தேகப்படாதேஎன்று அவள் மனமே அவளுக்கு ஒரு கொட்டு வைக்க அதற்கு மேலும் அதை யோசிக்க அவளுக்கு பைத்தியமா என்ன.

 

சரியாக அப்பொழுது ஒரு நவநாகரீக ஒடிசலான பெண், பார்க்க மிகவும் சாந்தமாகவும் அதே சமயம் அலட்டாத அழகுடனும் வந்து மதியை அழைத்தாள். அவள் பெயர் ஹர்சினி என்றும், அவள் அந்த கம்பனியோட மேனஜரியின் பி.. என்றும் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள். ஹர்ஷினி, மதியை மேனேஜர் காபினுக்குள் செல்லும் மாறு கூறி அவளது வரவைபற்றியும் மேனஜரிடம் இண்டர்காம் மூலமாக தகவல் தெரிவித்தாள்.

 

பேட்டிக்கான கேள்விகளை மனதினுள் சரிப்பார்த்தபடி சென்றவள், அங்கே இனியனை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை. இனியனை கண்ட விநாடி அவன் முன் சென்று, அவன் அந்த பெண்ணிற்கு உதவியதை குறித்து அவனுக்கு வாழ்த்து கூறினாள். ஆனால், அதை அவன் அலட்டாமல் அதே நேரம் தன்மையாகவும் அந்த வாழ்த்தை ஏற்றுக் கொண்டதோடு, அதுக்கு முற்று புள்ளி வைத்து அவள் வந்த விவரத்தை கேட்கலானான். ஒரு நிமிடம் அவனின் செய்கை நினைத்து மனதினுள் அவனுக்கு ஒரு சபாஷ் போட்டாள்.

 

அவளிடம் விவரங்கள் சேகரித்த இனியன், தங்களது எம்டி முக்கியமான மீடிங்கில் இருப்பதாகவும் இன்னும் 15 நிமிடங்களில் அவர் தனது கேபின்க்கு வருவார் என்றும் இனியன் மூலமாக அறிந்துக் கொண்டாள். மற்றவர் பேசும்போது எப்பொழுதுமே மதிக்கு அவர்களது கண்களை நேராக சந்தித்துதான் பழக்கம். அதை தான் அவள் இப்பொழுதும் இனியனிடம் செய்தாள். ஒருவர் உதடுகள் பொய் உரைத்தாலும் அவர்கள் கண்கள் மெய் சொல்லும் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. இனியன் பார்வை ஏதோ, ஏதோ ஒன்று அவளுக்கு நிச்சயமாக உணர்த்தியது ஆனால் அது என்ன என்று அவளுக்கு புரியவில்லை. அதே நேரம் அது நிச்சயமாக தவறான பார்வை இல்லை என்பது அவளுக்கு திண்ணம்.

 

அவனிடம் அனுமதி பெற்று அறைக்கு வெளியில் வந்தவள், அங்கு இருந்த உயர் ரக குஷனில் அமர்ந்து அங்கு நடக்கும் காரியங்களில் கவனம் செலுத்தலானாள். ஆதித்யன் அவன், அவன் இல்லா நேரங்களில் கூட இத்தனை துரிதமாக வேலை நடக்க வேண்டும் என்றால் அவனின் ஆளுமை திறனை எண்ணி அவளால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

 

அங்கு இருந்தவர்களின் பரபரப்பு மேலும் தொற்றிக்கொள்வதை பார்த்தவள், நிச்சயமாக அவன் வருகிறான் என்று புரிந்துக்கொண்டாள். ப்ளாக் கலர் கோட் சூட்  யில் மிக, மிகவும் கம்பீரமாக, 6 அடிக்கு குறையாமல் நிமிர்ந்த, அதே சமயம் அவனை ஈடுகுடுத்து யாரும் நடக்க முடியாதபடி வேக நடையுடன், எதிரில் இருபவரை அக்குவேறு ஆணிவேராக கூறுபோடும் கூர் பார்வையுடனும் அவன் வந்த வேகம் அவளை அறியாமல் அவள் எழுந்து நின்றாள். அவன் அறைக்குள் நுழையும் முன் அவளை அவன் ஒருதரம் கூர்ந்து நோக்கி அவனது இடது புருவத்தை மட்டும் ஏற்றி கேள்வியாக அவன் நோக்கவும், இனியன் அவளைசத்யம்தினசரி நாளிதழின் நிருபர்இளமதிஎன்று கூறியது காற்றில் மிதந்ததோ என்று என்னும் அளவுக்கு அவன் புயலென அவன் அறைக்குள் நுழைந்து இருந்தான்.

 

எழுந்து நின்ற இளமதி வியப்பின் உச்சத்தை தொட்டிருந்தாள். அவள் உதடுகள் அவளே அறியாமல் மீண்டும் மீண்டும் ஒரே பெயரையே உச்சரித்து கொண்டு இருந்தது, ‘க்ரிஷ்ணவ்‘, க்ரிஷ்ணவ்… “அப்படி என்றால் க்ரிஷ்ணவ் தான் ஆதித்யனா?” என்ற கேள்விக்கு பதில் தெரியமால் க்ரிஷ்ணவ் என்று ஒருமுறை வெளியில் கேட்கும்படி உச்சரித்துவிட்டாள். அவளை மீறி வந்த வார்த்தைகள் தெளிவாக இல்லாததால், அவளை அழைக்க வந்த ஹர்ஷினி அவளிடம், “டிட் யு ஆஸ்க் சம்திங்என்று கேட்டாள். அப்பொழுது தான் உணர்வு வந்தவளாக சுற்றம் உணர்ந்தாள். ஹர்ஷினியிடம்நத்திங்என்று சிறு புன்னைகையோடு கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

 

உள்ளே சென்றவளின் பார்வை நிலைகுத்தி நின்ற இடம் டேபிள் மேல் இருந்த ஆதித்யனின் பெயர் தாங்கி நின்ற சிறு பலகை, ‘ஆதித்ய க்ரிஷ்ணவ்‘.

 

என்னவனே!

உன்னை வெறுக்கவும் முடியவில்லை

விரும்பவும் முடியவில்லை

உன் நினைவிலிருந்து வெளிவர

நித்தம் துடித்தாலும்

இறுதியில் உன் நினைவை

வெளியேற்ற நினைக்க,  

என் மனமோ, அறிவுப்பின்றி

வெளிநடப்பு செய்கிறது

உன் நினைவுக்கு ஆதரவாக.

 

                        

 

Advertisement