முகிழ் – 10

 

அருகில் வந்து நின்ற கார்யை கண்டவுடன் இனியன் கண்டுகொண்டான் யார் வந்திருப்பது என்று. அவன் வேகமாக சென்று கதவின் அருகே நிற்கவும், உள்ளிருந்து 65 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் இறங்கவும் அவரிடம் இனியன், ” நீங்க இங்க எப்படி, நீங்க நல்லா இருக்கீங்களா? ” என்று புன்முகம் மாறாமல் கேட்பவனை பார்த்து ஒரு சாந்தமான புன்சிரிப்பை உதிர்த்தவர் இனியனிடம், “அத நான் கேட்கணும் இனியா, நீ இந்த டைம்ல ஏன் இங்க நிக்கிறஎன்றார்.

 

இனியன் மதியை பார்க்க, மதியோ அவர்கள் அருகில் வந்து இனியனை முந்திக் கொண்டு, “நான் இனியனுக்கு பழக்கம், இந்த வழியில ஆட்டோ/பஸ்க்கு ரொம்ப நேரமா வெயிட் பண்றேன்…. பட் ஏதும் கிடைக்கவில்ல, அப்போ இந்த வழியா வந்த இனியனது வண்டியை பார்க்கவும் உதவி கேட்கலாம்னு…………….. பாதர்என்று அவரின் உடையை பார்த்தே அவர் யார் என்பதை புரிந்துக்கொண்டவளாக கூறி முடித்தாள்.

 

பாதரியரோ மேலும் அவளை கேள்வி கேட்காமல், அவளின் முகம் பார்த்தே எதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவர் இனியனின் முகம் பார்க்க, இனியனோ பார்தரியரிடம், “பாதர் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?…நீங்க தப்பா எடுத்துக்காம ப்ளீஸ் எனக்காக பாதர், இவுங்க அடையாறு தான் இருகாங்க, நீங்க பெசன்ட் நகர் போகிற வழியில கொஞ்சம் ட்ராப் செய்றீங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.

 

பாதாரியரோ, “அதுனால என்ன இனியன், கண்டிப்பா இந்த பொண்ண பாதுகாப்பா விட்டுடறேன்என்று கூறியவரின் கண்கள் படிந்து மீண்டது மதியின் கைகளில் ஏற்பட்டிருந்த சிராய்ப்பின் மீது.

 

அவரின் பார்வையை கண்டுகொண்ட மதி வேறு எதுவும் கூறாமல் தலை குனிந்துக் கொண்டாள். அவளுக்கே அந்த ஆட்டோ ஓட்டுனர் என்ன செய்யவந்தார் என்பது சரி வர புரியவில்லை. ஆனால் அவள் சொல்வதை கேட்காமல் அவர் சென்றதிலிருந்தும், அவள் குதித்ததும் வண்டியை திருப்பிய அவர், இனியனை பார்த்ததும் வேகமாக மறைந்ததும் அவர் ஏதோ உள்நோக்கில் செயல்பட்டது போல தோன்றியது. மேலும் அன்று வந்த ரௌடிகளுக்கும் இதற்கும் இந்த கேஸ்க்கும் சம்மந்தம் இருகின்றதா? இல்லை இது வேறு நோக்கத்தோடு நடந்ததா என்று அவளே யோசிக்க பல விஷயங்கள் இருக்கும் போது அவரிடம் அதும் சற்று முன்பு அறிமுகமானவரிடம் என்ன சொல்லுவது என்று யோசித்தே மதி அதை தவிர்த்தாள்.

 

அவளின் யோசனை தடைபடும் விதமாக, மதியிடம் இனியன், “மதி இவரு என்னோட வெல் விஷர், பெசன்ட் நகர் சர்ச்ல பாதர், என்னோட படிப்புக்கு இவரு தான் டிரஸ்ட் மூலமா நிறைய ஹெல்ப் பண்ணினார், நான் என் லைப்ல ரொம்ப மதிக்கிற ஒருவர்என்று சுருக்கமாக கூறினான்.

 

பாதரிடம் திரும்பிய இனியன், “என்னோட தோழி இளமதி இவுங்க, நான் என்னோட எம்.டி கு வெயிட் பண்றேன் பாதர், அவரு இப்ப வந்துருவாரு அதுனால தான் என்னால இவுங்கள டிராப் செய்ய முடியவில்லைஎன்று மதியின் அறிமுகத்தில் ஆரம்பித்து சங்கடமாக பேசி முடித்தான்.  

 

எனக்கு புரியிது இனியா, நான் இந்த பொண்ண விட்டுட்டு உனக்கு கால் பண்றேன்என்று பாதரியார் இனியிடம் கூறிவிட்டு மதியை அழைத்தார்.

 

எம்.டி என்ற பெயரை கேட்டதும் மதியின் மனதில் ஆதி என்ற பெயர் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. மன வலியோடு அவள் இடது காலும் வலிப்பது போல தோன்றிட்டு. அவள் எண்ணங்களுக்கு தடையிட்டு நடக்க எத்தனித்தவள் கால் வலி அவளுக்கு உரைக்க, ஒரு நிமிடம் தடுமாறினாள்.

 

அவள் தடுமாற்றத்தை பார்த்த இனியன் பதறி மதி என்று அருகில் வர அதற்குள் சுதாரித்தவள், பாதரை சங்கடமாக பார்த்தவள் இனியனிடம், “கிழ விழுந்ததுல அடி பற்றுக்கு நினைகிறேன் இனியன், முதல்ல இந்த இடம் விட்டு போகணும்னு தீவிரமா இருந்ததுனால இந்த வலி உணரலன்னு நினைக்கிறேன், இப்போ கொஞ்சம் வலிக்கிறதுஎன்று சுணங்கி கொண்டே கூறினாள்.

 

பாதரிடம் தயங்கி மதி மெல்ல, ” சாரி பாதர் ஒரு சின்ன ப்ரச்சன்னை, ஆட்டோ டிரைவர் வேற ரூட் எடுத்தாரு, எனக்கு ஏதோ சரி இல்லன்னு தோணிச்சு, அவரு ஓட்டிட்டு இருக்கும் பொழுதே அவர்க்கு கால் வரவும் கொஞ்சம் வேகம் கம்மி பண்ணின நேரத்துல நான் கிழ குதுச்சுட்டேன் அதுல அடிபற்றுக்கும், யார்கிட்டயும் சொல்லவேணாம் தான் முதல்ல உங்ககிட்ட சொல்லலதப்ப எடுத்துக்காதீங்க, அப்புறம் பாதர், இனியன் இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும் ப்ளீஸ்என்று மெதுவாக அதே சமயம் கோர்வையாகவும் கூறினாள்.

 

பாதரியார் அதே புன்சிரிப்போடு, “நோ சைல்ட், நீ இதுக்கு என்கிட்டே வருத்தம் சொல்ல தேவை இல்லை, இப்பலாம் பொண்ணுங்க பாதுகாப்பா போயிட்டு வர முடியல. பட் நீ கரெக்ட் டைம் வெளில வந்துட்ட, காட் ப்ள்ஸ் யுவாமா உன்ன நான் வீட்ல விட்டுட்டு போறேன்என்றுக் கனிவாக கூறினார்.

 

அவர் கூறியதும் அப்படியே மெல்ல நடந்து கார்க்குள் சென்று அமர்ந்தவள் இனியனிடம் நன்றி தெரிவித்துவிட்டு அவருடன் சென்றாள்…..

 

அவர்கள் போவதை பார்த்துக்கொண்டிருந்தவனை தாண்டி ஒரு கார் சென்று நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆதியை கண்ட இனியன் ஆதியிடம், “சார் நீங்க வந்துடீங்கள? குடுங்க சார் நான் குடுத்திடறேன்என்று கேட்கவும், ஆதியின் புருவம் ஒருமுறை மேல் எழும்பி இறங்கியது. இனியனிடம், “இனியன் ஆர் யு ஒகே?, நான் பேசிட்டு இருக்கும் பொழுதே ஒரு பொண்ணு குரல் கேட்டுது, அதுக்கு அப்புறம் நீங்க கட் பணிடீங்க, அதுக்கு அப்புறம் நீங்க என்ன கூப்பிடல, நான் கால் பண்ணியும் நீங்க எடுக்கல, எனி ப்ரொப்லெம்?” என்று கேட்டுவிட்டு இனியனது முகத்தை ஆராய்ந்தான்.

 

இனியன் ஒரு நொடி யோசனைக்கு பிறகு, “நத்திங் சார், எனக்கு தெருஞ்ச பொண்ணு, என்ன பாத்துட்டு கூப்பிட்டாங்க, பேசிட்டு இருந்தாங்க, இப்போதான் கிளம்பினாங்க சார்என்று கூறினான்.

 

அவன் தடுமாற்றம், அவன் ஒரு நொடி யோசனை இதையெல்லாம் கண்டுகொண்ட ஆதி மேலும் கேட்பது சரி இல்லை என அதை அப்படியே நம்பியதாக காண்பித்துவிட்டு அவன் தொழில் தொடர்பானவையை குடுத்துவிட்டு மேலும் சிலவற்றை கூறிவிட்டு சென்றான்.

 

மதியின் வீட்டருகில் வண்டி செல்லவும் மதி பாதரியரிடம் வீட்டிற்கு வருமாறு அழைக்க, அவர் மணி ஆகிவிட்டதை கருத்தில் கொண்டு நாகரீகமாக மறுத்து மதியை அனுப்பிவிட்டு அவரும் கிளம்பினார்.

 

வீட்டிற்கு சென்ற மதிக்கு அவள் அன்னை, தந்தையின் கேள்விகனைகளை சமாளிப்பது மகாபாரதத்தின் யுத்தகளத்தில் வந்த ஏவுகணைகளை சமாளிப்பது போல தோன்றிட்டு. ஏதோ சமாளித்துவிட்டு தவறி விழுந்ததாக அவர்களை அரைமனதாய் நம்பவைத்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பியவள், வலி வேதைனையால் ஏற்பட்ட காச்சலில் அகப்பட்டாள்.

 

நடந்த எதைபற்றியும் யோசிக்க திராணி அற்று, உடல் அசதியாலும், மன குழப்பதினாலும் அவளை அறியாமல் கண் அயர்ந்தாள்.

 

காலையில் காபியுடன் வந்த அன்னை, மதியின் காய்ச்சலை கண்டு வீட்டிற்கு மருத்துவரை வரவழைத்தனர் அவள் பெற்றோர். மருத்துவர், காயங்களுக்கும் காய்ச்சலுக்கும் மறுத்து குடுத்துவிட்டு 2 நாட்கள் கட்டாயமாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி சென்றார்.

 

அதே கேட்ட மதி இன்று கண்டிப்பாக ஒரு 2 மணி நேரமட்டும் போக வேண்டும், மிகவும் முக்கியமான செய்தி என அவள் பெற்றோரிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் மசிந்தபாடில்லை. தனியாக எங்கும் 2 நாட்களுக்கு அனுப்ப இயலாது என தெளிவாக கூறவும் அடுத்து என்ன செய்வது என சிந்திக்கலானாள்.

 

என்ன சொல்லி அம்மாவை சமாதானம் செய்வது என்று எண்ணி குழம்பிக் கொண்டு நின்ற மதியின் அழைபேசி அழைக்க, திரையில் மிளிர்ந்த எண்னை கவனித்த அன்னை அவள் கையிலிருந்த தொலைப்பேசியை பிடுங்கி அவர் பொத்தானை அழுத்தி பேச ஆரம்பித்தார்.

 

தொலைபேசியில், மதியின் அன்னை என்னப்பா சினேகா எப்படி இருக்க,… நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம், மதியா…?, சினேகா மதி ஒரு 2 நாள் வரமாட்டாநேத்து எங்கயோ போய் விழுந்துட்டு வந்திருக்காஇல்ல இல்ல….. இப்ப அவ நல்லாத்தான் இருக்குறாஎன்ன நீ இப்ப வரியா…? சரி வா பா, நீ எப்ப வேணும்னாலும் வரலாம்சரிப்பா வச்சிடறேன்என்று கூறி முடித்தார்.

 

சினேகன் வருவதை அறிந்துக் கொண்ட மதி அவனின் உதவியோடு அவள் வெளியில் செல்ல திட்டமிட்டாள். ஏனெனில் அவள் பார்க்கும் கேஸ் சம்மந்தப்பட்ட ஒருத்தரை சந்திக்க பலநாள் போராடி இன்று சந்திக்க தான் சம்மதம் பெற்றிருந்தாள். அதை கை நழுவவிட அவளுக்கு மனமில்லை.

 

யோசனையில் உலன்றவள், நேத்து நடந்த சம்பவத்தை ஆராய்வதை சற்று தள்ளி வைத்தாள். சிறுது நேரத்தில் அங்கு வந்த சினேகன் அவளிடம் மறுபடியும் ஒரு விசாரணை தொடங்க அவனுக்கு ஏதோ மழுப்பலாக கூறினாள். இதற்கு மேல் அவள் தொடர போவது இல்லை என உணர்ந்துக்கொண்ட சினேகன், “நம்மள பார்த்த மட்டும் இவளுக்கு என்ன தோனுமோ , வாய்யே துறக்கமாட்டா எதாச்சும் கேட்டா, வாயில கோந்து வச்சுருக்காளோ என்னவோஎன்று மனதினுள் நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே மதியின் அன்னை, “வா பா சினேகா” , என்று புன்னைகயோடு அழைக்க, சிநேகனோ, “அம்மா உங்கள கெஞ்சி கேட்குறேன், பொண்ணு மாதி என்ன சினேகா சினேகா னு கூப்டாதீங்க மா, சினேகன் அப்படி முழுசா கூபிடுங்க மா ப்ளீஸ்”  என்று அழும்குரலில் கூறுபவனை பார்த்து எப்பொழுதும் போல் சிரித்துவிட்டு, “எனக்கு இப்படி தான் கூப்பிட வருதுடா என்று பாவாம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்.

 

சிநேகனோ, “மனதினுள் எல்லாம் உன் நேரம் டா சினேகா, ஐயோ இல்ல இல்ல சினேகன், இவைங்க கூட சேந்து நம்மளையும் இப்படி சொல்ல வச்சுட்டாங்களேஎன்று மனதில் பொலம்பிக்கொண்டு இருந்தவனை மதியின் அன்னை, ” ஏப்பா சினேகா, ஒரு நிமிடம் இரு உனக்கு டிபன் கொண்டு வரேன்என்று உள்ளே நுழையவும் மதி வேகமாக, ” சினேகன் எனக்கு ஒரு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு, நான் ஒரு 2 மணி நேரம் வெளில போகணும், என்ன எப்படி ஆச்சும் கூட்டிட்டு போ ப்ளீஸ் என் அம்மா கிட்ட பேசுஎன்று கெஞ்சி கேட்டாள்.

 

அடிப்பாவி இப்பதான் உங்க அம்மா எனக்கு டிபன் எடுத்து வர போயிருக்காங்க, அதுக்கு வேட்டு வச்சுட்டியா? நீ எல்லாம் நல்லா வருவா மதிஎன்று சினேகன்  கூறி கொண்டு இருக்கும் பொழுதே அங்கு வந்த மதியின் அன்னை என்னப்பா சினேகா என்ன சொல்லிக்கிட்டு இருக்கஎன்று கேட்க சினகனோ  மனதினுள், “ஒரு டிபின்காக இவுங்க பண்ற கொடுமையெல்லாம் பொறுத்துகிறேன் என்று மனதில் சொல்லிக்கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்மா சும்மா தான், ஒரு முக்கியமான   வேலை அதுக்கு மதி வரணும் ஜஸ்ட் 2 ஹௌர்ஸ் தான், நானே கூட்டிட்டு போயிட்டு கொண்டு வந்தும் விட்டுறேன், மதிக்கு நான் கேரன்டீஎன்று கூறி இறுதியாக விளம்பரத்தில் வரும் பாணியில் அவன் கூறவும் சிரித்த மதியின் அன்னை முதலில் மறுத்தாலும் அதன் பின் அவளை அனுப்ப சம்மதித்தார்.

 

அப்பாடா இப்போ டிபன் சாப்பிடலாம் என்று மனதினுள் சந்தோஷ பட்டுக்கொண்டே அமர்ந்தவன் முன்னால் மதியின் அன்னை சுட சுட ஆவி பறக்க வைத்த கிச்சடியும், தேங்க சட்ட்னியும் கண்டு பதறி எழுந்தே விட்டான்.

 

இந்த கிச்சடிக்கா இப்படி அரும்பாடு பட்டேன்என்று அவன் எண்ணிக்கொண்டே முழிக்க மதி அன்னையின் பாசபினைப்பில் சிக்கி கிச்சடியை உன்ன முயன்றவனின் தொண்டையில் முழுங்க இயலாமல் கிச்சடியும் சிக்க, தவித்து போனான் சினேகன்.

 

அவனின் நிலைமையை புரிந்துக்கொண்ட மதி மெளனமாக சிரித்துக்கொண்டு இருந்தாள். ஒருவழியாக அங்கு இருந்து வெளியில் வந்த சினேகன் மதியுடன், மதியின் தந்தை கார்யில் பயணமாக அந்த பயணம் சினேகனின் ஓயாது பேச்சில் தொடர்ந்தது.

 

அந்த பேச்சை கேட்டுக்கொண்டே வந்தவள் கண்களில் சாலையோரம் இருந்த பெட்டி கடைகளில் ஒட்டபட்டிருந்த சுவரொட்டியில் மின்சாரம் தாக்கி 15 பேர் பலி என்ற வாசகம் கண்ணில் பட, அன்று அடுக்கம் பகுதியில் தூக்கி வீசப்பட்ட ஆதி நிழலாக உருவாக ஆரம்பித்தான்.

 

சிநேகனிடம் கொஞ்சம் உறங்குவதாக கூறிவிட்டு கண்களை மூடியவளின் விழி முன்னால் ஆதியின் நினைவுகள் உயிர் பெற ஆரம்பித்தது.

 

ஆதி மின்சாரம் தாக்கி, தூக்கி எறியப்பட்டதை பார்த்த மதி, க்ரிஷ்ணவ்…. என்ற அழைப்புடன் அவள் அவனிடம் விரைய அவளின் கூக்குரல் கேட்டு சற்று தொலைவில் இருந்த அந்த மலை வாழ் பெரியவர்  அவளை பார்க்க, மதி ஆதியை நோக்கி ஓடி அவனை எடுத்து அவள் மடி மீது வைத்தாள்.

 

ஆதிக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த அப்பெரியவர் மதியிடம் செய்கை காட்டிவிட்டு மலை வாழ் மக்களை அழைக்க சென்றார்.

 

என்ன செய்வது என ஒரு முறை திகைத்தவள், எங்கோ எப்போதோ படித்தது அவள் மூலையில் மின்னலடிக்க அவனுக்கு சுவாசம் கொடுக்க அவன் உதட்டருகே குனிந்தவள் ஒரு நொடி ஒரே ஒரு நொடி தாமதித்தவள், ஆதி கண் முன் சரிந்திருக்க, அவள் யோசனை அனைத்தும் பல காத தூரம் கடந்து சென்றது.

 

தன் மூச்சுக் காற்றை அவனுக்கு உயிர் காற்றாக குடுத்தவள், அவனுக்கு இதயம் துடிக்க வேண்டுமே என அவள் இதயம் வழக்கத்திற்கு மாறாக வெகு வேகமாக துடித்தது.

 

அவனது மார்பில் அவள் குத்திக்கொண்டே அவன் இதழோடு இவள் இதழ் சேர்த்து அவனுக்கு உயிர் காற்று கொடுக்க, உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடினாள்.

 

அவள் தொடர்ந்து செய்த முயற்சியில், அவன் கண்களின் கருவிழிகள் அசைவு தெரிய, மதிக்கு இதுவரை சுழலாமல் நின்ற உலகம் சுழல தொடங்கியது.

 

க்ரிஷ்ணவ்க்ரிஷ்ணவ்எழுந்துறீங்க….. உங்களுக்கு ஒன்னும் ஆகாது, எழுந்துறீங்க…..”என்று அவள் மொத்த உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு என்ன பேசுகிறோம் என்பதை அவளே அறியாமல் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

க்ரிஷ்ணவ், இத்தன நாட்கள் ல உங்கள பாக்காத நாட்கள் எனக்கு முழுமை ஆகல, அது ஏன்னு எனக்கு தெரியாது, ஆனா இப்போ ஒரு வேலை இனி உங்கள பாக்கவே முடியாட்டி, என் வாழ்க்கையும் முழுமை ஆகாது னு தோனுது, எழுதுறீங்கஎன்று அவன் உள்ள கையை பிடித்து கதறிக் கொண்டிருந்தாள்.

 

அப்போது அங்கு வந்த மழை வாழ் மக்கள், “க்ரிஷ்ணவ் அய்யா, க்ரிஷ்ணவ் அய்யா க்கு என்ன ஆச்சு என்று அருகில் வந்து கேட்டவர்களிடம் தடுமாறி விவரத்தை கூற அவர்கள் விரைந்து செயல்பட ஆரம்பித்தார்கள்.

 

அதில் உள்ள மழை வாழ் மருத்துவர் ஒருவர் நாடியை பரிசோதித்தவர், இதய துடிப்பை அறிந்து சில பல மூலிகைகளை கொண்டு மேற்கொண்டு தேவைப்பட்ட மூலிகைகளை சிலரை பறித்துவர கட்டளையிட்டார்.

 

மிக துரிதமாக செயல்பட்டு, அவனை அவன் கூடராத்திற்குள் தூக்கி சென்றவர்கள் அவனுக்கு நாட்டு வைத்திய முறையில் சிகிச்சை அளித்தனர். அத்தனை நேரமும் கூடாரத்திற்கு வெளியில் நின்ற மதி குறிஞ்சி ஆண்டவரை மனமுருகி வேண்டினாள்.

 

அவள் வேண்டுதல் கேட்கபட்டதோ அதனால் தான் ஆதி உயிர் பிழைத்தானோ என்று என்னும் அளவிற்கு அவள் வேண்டுதல் முடிந்த தருணம் உள்ளிருந்து வந்த நாட்டு வையித்தியர் அனைவரிடமும், “க்ரிஷ்ணவ் அய்யா பிழைச்சுட்டாறு, கண்ணு முழுச்சு பார்த்தாரு, மருந்து வீரியத்துல மறுபடியும் கண்ணு அசந்துருச்சு..ஆனா இனி பயமில்லைஎன்று முடிக்க மதியின் கண்களில் அவளை சுற்றி இருந்த இடம் வண்ணமயமாக தோன்றியது.

 

இப்போது அவன் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தனை நேரம் அவள் என்ன செய்தாள், என்ன பேசினாள் என்று அவள் மூளைக்கு எட்ட அவள் ஒரு நிமிடம் ஷதம்பித்தாள்.

 

இத்தனை நேரங்கள் மனதின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருந்தவள், உணர்ச்சி வேகத்தில் பேசிகொண்டிருந்தவளின் வார்த்தைகள் அனைத்தும் இதய ஆழத்தில் இருந்து வர இப்போது மூளையின் கட்டுபாட்டுக்குள் வந்தவளுக்கு யோசிக்க நிறைய இருந்தது.

 

மூளை ஒரு திசையிலும், மனது ஒரு திசையிலும் பயணிக்க நடுவில் மாட்டிக்கொண்ட மதி தனிமையை நாடினாள். அங்கிருந்து அப்படியே கிளம்பியவள் நேராக அருகிலிருக்கும் சிறு நீர்வீழ்ச்சிக்கு சென்றமர்ந்தாள். அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியாது. நீர்வீழ்ச்சியை இமைக்காது பார்த்தவள் உதட்டில் சிறு புன்னைகை அவள் கண்களின் ஓரத்தில் ஒரு துளி நீர்.

 

கண்ணீரும், சிரிப்பும் ஒரு சேர வரும் தருணம் இதுவரை இப்படி ஒரு நிலையை அனுபவிக்காத மதிக்கு அவள் நிலை மெல்ல மெல்ல தெளிந்த நீரோடையாக தெரிய ஆரம்பித்தது.அப்பொழுது நீர்வீழ்ச்சியிலிருந்து சிறு நீர் துவாளை அவள் உதட்டில் பட்டு தெறிக்க அவனின் இதழ் தீண்டிய தருணம் அவளுக்கு நினைவு வர அவள் கன்னங்கள் செவ்வானமாய் சிகப்பை பூசிக்கொண்டது.

 

அங்கே அந்த சிறு சிறு கூலாங்கற்கள் இடையே முளைத்திருந்த அந்திமல்லி செடியில் பார்வை பதித்தவள் அதிலிருக்கும் அரும்புகளோடு தன் கை விரல்களை உறவாடவிட்டாள்.

 

ஆதியை சந்தித்தது முதல் இன்றுவரை நடந்ததை அழகிய படமாக அவள் நெஞ்சில் ஓட்டி பார்த்தவள், எங்கு எப்போது அவன் மீது காதல் வந்தது என்று கண்டறிய முடியாமல் தடுமாறினாள். விடைகாண முயன்றும் தோல்வியை தழுவிய மதி இருட்டும் வேலை நெருங்க அங்கிருந்து கிளம்ப நினைத்தாள். அவள் நாசியை ஒரு சுகந்தமான வாசம் வருட தன் கை விரல்களிடையே சிக்கி கிடந்த செடியை பார்த்தவளின் கண்கள் அகல விரிந்தது.

 

இத்தனை நேரம் அரும்பாய் இருந்த மொட்டுக்கள் யாவும் இப்போது மலராக. அந்தியில் பூக்கும் பூ என்பதை அறிந்தவள் மனதினுள், “இந்த மொட்டு இதை நான் பார்த்துக்கொண்டே தானே இருந்தேன், எந்த நொடியில் இது மலர்ந்ததுஎன்ற கேள்வி அவளுள் எழ அவளது முந்தையக் கேள்விக்கு பதில் கிடைத்தது. க்ரிஷ்ணவின் மீதான நேசம் எப்போதோ அரும்பி மொட்டாக இருந்திருகின்றது, இப்போது இன்று நடந்த அந்த விபத்தால், அவனுக்கு நான் அளித்த முத்தத்தால் அது முகிழ்ந்து விட்டது என்று கண்டுகொண்டாள் மதி.

 

அரும்பாக என் மனதில்

என்று நீ முளைத்தாயோ

நான் அறியேன்

 

ஆனால் இன்று

ஒரு முத்தத்தால் மொட்டவிழ்த்து

என் பெண்மையை முகிழ்த்ததென்னடா

 

உன்னால் மலர்ந்தது

என் காதல் மட்டுமல்ல

என் பெண்மையும் மலர்ந்ததடா

 

மலரும் சுகமே தனிதானோ

மீண்டும் மீண்டும் கேட்குது

என் நெஞ்சம் உனை தானே

 

என்னை முகிழ்த்த வருவாயா?

 

தன்னையே தெளிவாக புரிந்துக்கொண்ட மதிக்கு உற்சாகம் கரைபிரண்டு ஓடியது. தெரிந்துவிட்டது, அவளுக்கு வாழ்கையின் துணை யார் என்பதும், வாழ்வில் இனி வேறு ஒருவரை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது என்றும் அவள் வாழ்வின் சரி பாதி க்ரிஷ்ணவ் மட்டுமே என்றும் தெளிவாக உணர்ந்துக் கொண்டவள் அதை யாராலும் அழிக்க முடியாதப் படி தன் மனதில் பொரித்துக் கொண்டாள்.

 

நீர்வீழ்ச்சியிலிருந்துக் கிளம்பி நேராக தன் இருப்பிடம் சென்றவள் தனது தோழிகள் ஊருக்கு கிளம்ப ஆயுத்தமாவதை கண்டு திகைத்தாள். அவளது மனமோ, “இன்னும் 2 நாட்களில் கிளம்பத்தானே வேண்டும் அது நீ அறிந்த ஒன்று தானே?” என்று கேள்வி கேட்க, அதுவும் சரி தான் என்பது போல அவள் தோழியின் அருகில் அமர்ந்தாள்.

 

அவளது தோழி ஒருத்தி, “மதி நாம நாளைக்கே கிளம்புறோம் டி, நம்ம ப்ரின்சி இல்ல, அவுங்க நம்மள நாளை மறுநாள் ரிவீவ் அட்டென் பண்ண சொல்லிருக்காங்க. நாளை 11 மணிக்கு காலையில கிளம்புறோம்என்றதும் மதி அதிர்ச்சி அடைந்தாள். அவர்களிடம் எதுவும் பேசாமல் எழுந்து சென்று சாளரத்தின் வழி வெற்று பார்வை பார்க்க தொடங்கினாள்.

 

பதில் பேசாமல் கிளம்பிய மதியை பார்த்து அவள் தோழிகள் தங்களுக்குள் இவளுக்கு என்னவாயிற்றுஎன்று கேட்டு கொண்டனர்.

 

மதியின் மனதோ, “க்ரிஷ்ணவின் மீதுள்ள காதலை உணர்ந்த சில மணி நேரங்களில் அவனை விட்டு பிரிய வேண்டுமா?, அவனுக்கு என்னை யார் என்று கூட தெரியாத நிலையில் நான் அவனை விட்டு சென்றால் அவன் வாழ்வை விட்டு செல்வதற்கு சமம்ஆனால் நாளை நிச்சயம் கிளம்ப வேண்டும், என்ன செய்வதுஎன்று யோசித்தவள் அவனிடம் நேரே சென்று தன் உணர்வுகளை வெளிபடுத்த எண்ணினாள்.

 

அப்படி ஒரு பெண் போய் கூறினால் என்ன ஆகும் அவன் தன்னை என்ன நினைப்பான் என்று பலவாறாக யோசித்து யோசித்து இறுதியில் அப்படி கூறாமல் போனால், “என் காதலை நான் மறக்க வேண்டி வரும்என்று மனதினுள் நினைத்தாள்.

 

காதலை மறப்பதா?, க்ரிஷ்ணவ் இல்லாத வாழ்கையா?,” அதை நினைத்தவுடன் அவள் மனதில் சொல்லமுடியாத வேதனை ஏற்பட்டது.இதற்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்தவள் அவனை நாளை காலை சந்தித்து அவனிடம் அனைத்தையும் கூற முடிவெடுத்தாள்.

 

ஆனால் மனிதர்கள் நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் விதியின் வேலை என்ன ஆவது. நாளை பொழுது எப்படி இருக்கும் என்பதை அறியாமல் அவனிடம் காதலை சொல்ல போகும் ஆவலில் கண்ணயர்ந்தாள் மதி………..’