Advertisement

 

முகிழ்  – 23

 

“அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா

பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா”

 

என்ற பாடல் சத்தத்தில் தூக்கம் கலைந்த சினேகன் ஒரு புலம்பலுடன் கண்விழித்தான். “என்னடா இது, நிரல்யா, என் நம்பர் வாங்கினா, அவ நம்பர் கொடுக்கவே இல்லையே, அவளும் படம் வரஞ்சு முடுச்சதும் கூப்பிடுவான்னு, அவள பார்த்த நிமிசத்துல இருந்து கஷ்டப்பட்டு ப்ரௌஸ் பண்ணி ஒரு சிச்சுவேஷன் பாட்டுலாம் ரெடி பண்ணி வச்சா இவள தவிர ஊருல இருக்க அத்தன பேரும் கால் பண்றேங்க, இப்ப எவன் பண்றானோ… இது மட்டும் கஸ்டமர் கேரா இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவுங்களுக்கு” என்று புலம்பியபடியே பொத்தானை அழுத்தி காதுக்கு குடுத்து, “ஹெலோ” என்று சினேகன் கூற மறு பக்கம் மௌனமே நிலவியது.

 

பொறுமை இழந்த சினேகன் மறுபடியும், “யாருங்க பேசுறது, போன் பண்ணினா பேசுங்க இல்லாட்டி பேசாதீங்க..” என்று கூற சில நொடி இடைவேளைக்கு பிறகு மறு முனையில், “நா, நிரல்யா பேசுறேன்” என்று சிறு தடுமாற்றத்துடன் குரல் வர காலில் சுடுதண்ணி பட்டது போல விருட்டென்று எழுந்து அமர்ந்தான் சினேகன்.

 

“ஏங்க என்ன சொன்னீங்க, நிரல்யாவா? ” என்று மறுமுறை கேட்க மறுபக்கமோ, “ஹ்ம்ம் ஆமாம், படம் கம்ப்ளிட் பண்ணிட்டே, நீங்க ஈவினிங் ப்ரீஆ இருந்தா வந்து வாங்க்கிறீங்கள?? ” என்று கேட்க, சிநேகனோ, “ஐயோ நிரல்யா, நீங்க எப்ப சொல்றீங்களோ வந்து வாங்கிக்கிறேங்க, சரி சாயங்காலம் 6 மணி ஒகேயாங்க? ” என்று வினவ நிரல்யாவும் ” சரி” என்று கூறி போனை அணைத்தாள்.

 

வேகமாக சினேகன் தனது கைபேசியில் அந்த எண்ணை பதிவு செய்து விட்டு நிரல்யாவை பற்றி சிந்திகலானான்.

 

“என்னமோ தெரியல, நிரல்யாவ விளையாட்டா பார்க்கமுடில, அவ தான் எனக்குன்னு தோனுது, அவளும் என்ன பார்க்குறா தான். ஆனா பார்க்குறத மட்டும் வச்சு எப்படி டிசைட் பண்ண?” என்று குழம்பியவன் பிறகு அவனே கொஞ்சம் தெளிந்து, “சரி அவக்கிட்ட மெசேஜ் பண்ணி பார்போம்”. என்று முடிவெடுத்தான். 

 

“நிரல்யா?  சினேகன்” என்று குறுந்தகவல் அனுப்பியவன் கைபேசியின் திரையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் அனுப்பின 2 நிமிடங்களிலே அவளிடம் இருந்து “சொல்லுங்க” என்ற பதில் வரவும் அதை பார்த்து புன்னைகித்தவன் “சும்மா தான், அன்னைக்கு மதிக்கூட வந்த பொழுது என்ன பார்த்தேன்னு சொன்னீங்களே?, எங்க இருந்து பார்த்தீங்க, நான் உங்கள பார்த்தது இல்லையே” என்று அனுப்பினான்.

 

அவளோ, ஒரு புன்னைகை வடிவத்தை மட்டும் அனுப்பி வைத்தாள் பதில் சொல்லாமல். இப்படியே இருவரும் ஏது ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். இருவருக்கும் சந்தோசமாகவே இருந்தது.

 

முதல் பார்வையில் சலனம், அதன் பின் மதிப்பு, அதன் பின் அவனை பார்க்கும் ஆவல், பார்த்த பிறகு இமை விலக்க முடியாமல் போனது, அவனிடம் பேசுவதற்காகவே ஓவியத்தை விரைந்து முடித்தது. அவனிடம் பேசலாமா வேணாமா என பட்டி மன்றம் நடத்தியது, அவனின் குறுந்தகவல் பார்த்து அவள் இதழில் அழகிய வளைவு மேல் நோக்கி வளைந்தது என அத்தனையும் நினைத்து பார்த்தவள் காதல் இப்படி தான் இருக்குமோ என எண்ண தொடங்கினாள்.

 

கண்டதும் காதல் இல்லை தான், ஆனால் ஏதோ ஒரு வகையில் சினேகன் நிரல்யாவை பாதிதிருந்தான். ஒருவேளை கண்டதுமே பாதிப்பு தானோ? அவள் அறியாள்.

 

அவனோடு பேசும் நேரம் அவளுக்கு சுகமாக கழிந்தது. சிநேகனுக்கும் அதே நிலை தான். மேலும் நிரல்யா ஒரே நாளில் இத்தனை முறை அவள் வாழ்விலே சிரித்தது இல்லை. சினேகன் கூறிய அனைத்தம் ஏதோ ஒரு வகையில் அவளை சிரிக்க வைத்தது. இப்படியே சிரிக்க வைக்கும் இவர் காலம் முழுதும் கூடவே வந்தால் எத்தனை சுகமாய் இருக்கும் என்று நிரல்யாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

இருவருமே கண்டதும் காதல் என்ற தாற்பரிய கருத்தை தவிர்த்தே வந்தார்கள் ஒருவர் மற்றொருவரை பார்க்கும் வரை.

 

இருவரும் அவர் அவர்க்கு பிடித்ததை சொல்லும் போது நிரல்யாவின் விருப்பம் ஓவியமாக இருக்க சிநேகனோ அவனது விருப்பம் கவிதை என கூறினான். அதை கேட்டு சந்தோசம் அடைந்த நிரல்யா, அவனிடம் முடிந்தால் ஒரு கவிதை எழுதி தருமாறு கேட்க சிநேகனோ அதை அவனது முதல் கடமையாக எடுத்துக் கொண்டான். 

 

அவளுக்காக, சினேகன் ஒரு கவிதை வடித்தான். அதை எடுத்துக்கொண்டு அன்று மாலையே அவளை சந்திக்கவும் சென்றான்.

 

கருப்பு ஜீன்சும், வெளிர் ஊதா நிற டாப்பும் அணிந்து தனது தோள் பையுடன் அலுவலகம் விட்டு வந்துக் கொண்டு இருந்தாள். அவளுக்காக சினேகன் காத்துக் கொண்டு இருந்தான் அவளது வீட்டின் அருகே. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் மூலம் அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவேளை குறைவதை, அவர்கள் வாழ்வில் சங்கமிக்க இருக்கும் தூரம் குறைவதாக சினேகனுக்கு தோன்றியது.

 

அருகில் வந்ததும், இத்தனை நேரம் குறுந்தகவலில் பேசினாலும் முகம் பார்த்து பேச இருவரும் ஓரிரு நிமிடங்கள் தயங்க, பேச்சை இலகுவாக்கும் பொருட்டு முதலில் ஓவியத்தை நிரல்யா கொடுக்க அதை பற்றி சிறிது நேரம் பேச்சு ஓடிற்று. இப்படியே பேசியவர்கள் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருந்த த பண்மை அழைப்பை விடுத்து ஒருமைக்கு மாறியிருந்தார்கள்.

 

இறுதியாக அவன் கிளம்ப எத்தனித்து சிறிது தயங்கி நிரல்யாவிடம், “நிரு” என்று அழைக்க அவளோ, “எண்ண நிரு ஆ? ” என்று ஆச்சர்யமாக கேட்க, சிநேகனோ, “ஹ்ம்ம் எனக்கு அப்படி தான் கூப்பிடனும்னு தோனுது… கூடாதா? பிடிக்கலனா சொல்லிடு” என்று கூற, அவளோ, ” பிடிக்கல ” என்று ஒற்றை வார்த்தை கூற சிநேகனோ இலகுவாக சிரித்துக்கொண்டு, “அப்போ இனிமேலே அப்படிதான் கூப்பிடுவேன்” என்று சிரித்துக்கொண்டே கூற நிரல்யாவோ, “ஐயோ நீங்க எதுக்குமே சீரியஸ் ஆகமாட்டீங்களா? எப்பயும் எது சொன்னாலும் நீங்களும் சிரிச்சு எல்லாரையும் சிரிக்க வைக்குறீங்க” என்று கூறினாள்.

 

அவள் மனதினுல்லோ, “இப்படி எதையுமே சாதரணமா எடுக்குறது கூட எனக்கு பிடிச்சிருக்கு” என்று சொல்லிக் கொண்டாள். மேலும் அவள் மனமோ, “இதுவே மற்ற நபர் என்றால் கண்டிப்பாக சாரி நிரல்யா இனி அப்படி கூப்பிடல, அது இதுன்னு எதாச்சும் சொல்லி இருப்பாங்க… ஆனா சினேகன் அப்படி இல்ல” என்று எண்ண மிட்டது.

 

“சரி எதுக்கு கூப்பிடீங்க அத சொல்லுங்க” என்று நிரல்யா கேட்க, சிநேகனோ, “நீ கேட்டத நான் கொண்டு வந்துருக்கேன்” என்று மட்டும்கூற உடனே நிரல்யாவின் கண்கள் பளிச்சிட்டது.

 

“அப்படியா? சூப்பர் சினேகன், எங்க குடுங்க” என்று ஆவலுடன் கேட்க சிநேகனோ ஒரு அழகிய வாழ்த்து அட்டையில் அவனது கவிதையை அவளுக்காக எழுதி இருந்தான்.

 

அதை குடுத்தவுடன் அவள் வாங்கி வாய் விட்டு வாசிக்க தொடங்குமுன் சினேகன் அவளிடம், “நிரல்யா உனக்கு கவிதை வாசிக்க தெரியும்தானே? இல்ல… நான் ஏன் கேட்குறேனா, ஒருவேள நீ எதுக மோன, கவிதை ஏற்றம் இறக்கம் தப்பா வசிச்சிட்டா எனக்கு கோவம் வந்துரு, அதான் நம்ம இன்னைக்கு தான் நல்ல பழகுறோம் அதுக்குள்ள என் கோவ முகத்த பார்க்கவேனாமே அதுக்காக தான் நிரு” என்று கூற நிரல்யாவோ அவன் சொன்னதை கேட்டு, “அப்போ இவருக்கு கோவம்ல வருமா?, சரி எதுக்கு வம்பு அவரே வாசிக்கட்டும்” என்று எண்ணி அவனிடமே அந்த அட்டையை குடுத்தாள்.

 

நீ ஒரு

மொசு மொசுவென

தலை முடிகொண்ட முயல் குட்டி

முயலுகிறேன் உன் இதயத்தில்

இடபிடிக்க வண்டி கட்டி

 

நீ ஒரு

தத்தி தத்தி

நடக்கும் வெள்ளை வாத்து

நீ வந்ததால் அதுவே

இனி எனக்கு ஆபத்து

 

என்னை புரிந்துகொண்டால்

உன் புத்தி

ஓர் கூர் கத்தி

இலையேல் நீ ஒரு தத்தி

 

இப்படி ஏற்ற இறங்கங்களோடும் எதுகை மோனை வரும்பொழுது அதை குறிப்பிட்டும் மேலும் அதற்கு விளக்கம் அளித்தபடியே படித்துக்கொண்டிருந்தான்.

 

“நிரல்யா, நான் இதுல மறைமுகமா நிறைய விஷயம் சொல்லி இருக்கேன், அதோட என்னோட எழுத்து நடை கொஞ்சம் உனக்கு புருஞ்சிக்க கஷ்டமா இருக்கலாம், அதுனால நானே சொல்றேன்” என்று கூறிவிட்டு நிரல்யாவின் முகத்தை பார்க்காமல் வெகு தீவரமாக அந்த கவிதை உருவானவிதத்தை மறுபுறம் திரும்பி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“இதுல முதல்ல வர முயல் குட்டி நான் மதி வீட்டு தோட்டத்துல பார்த்தே, அதுக்கு நல்ல முடி புசு புசு னு இருந்துச்சு, உன் கூந்தல் கூட அப்படித்தான இருக்கு, நான் ஏன் முடி னு கவிதை ல போட்டு இருக்கேன் தெரியுமா? முயல் முடி னு ரய்மிங்க்காக, இது உனக்கு நல்லவே புரியும்னு நினைக்கிறேன்… ஏன்னா கவிதைக்கு அது தான முக்கியம்” என்று கூறியவன் மேலும் தொடர்ந்து நிரல்யாவை ஒருமுறை பார்த்து ஒரு பெரிய பீடிகையுடன், “நிரு இதுல வர 2வது பகுதி பாத்து நீ பயப்பட கூடாது” என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் நிரல்யாவின் முகத்தை பார்க்க அது மிக பரிதபாமாக இருந்தது.

 

“என்ன நிருமா? இப்ப தான சொன்னே, பயப்பட கூடாதுன்னு, எனக்கு தெரியும் … உன் முகம் ஏன் இப்படி இருக்குனு… அதுல உன்ன ஒரு வாத்துனும் அப்புறம் ஆபத்தும்னு சொல்லி இருக்கேன் அது தானே…? “என்று கேட்க, இதுவரை அவன் கூறிய விளக்கத்தை கேட்டு மனதினுள், “ஏண்டா இவன்ட கவிதை எழுத சொன்னோம்” என்று புலம்பிக்கொண்டு இருந்தவளின் முகம் பரிதாபமாய் தோன்ற சினேகன் அவளை பார்த்து வாத்து, ஆபத்துன்னு சொல்வதை கேட்டு இப்பொழுது ரௌதிரத்திற்கு மாறி இருந்தது. அவள் மனமோ, “அடப்பாவி 5.2 தா இருக்கேன்னு குள்ளம் னு சொல்லாம சொல்றதுக்கு என்ன வாத்துனு சொல்றியா? அதுவும் நான் உனக்கு ஆபத்தா?” என்று பொரிந்து தள்ள அதை நேரடியாகவும் கேட்க எண்ணி அவள் வாய் திருக்கும் முன் சினேகனே ஆரம்பித்திருந்தான்.

 

“ஆமாம் நிரல்யா, நான் ஆதி சார் வீட்ல பார்த்த வாத்து கூட உன்ன போலவே வெளிர் நிறத்துல உன்ன போலவே அழகா இருந்தது, அப்புறம்… நீ பயப்படதா, நான் ஜனலிஸ்ட், எனக்கு நிறைய ஆபத்துகள் இருக்கும், என்கூட நீ பழகுனா உனக்கும் சில நேரங்கள் ஆபத்து வரலாம், உனக்கு வந்தா அது எனக்கே வந்தது போல… பட் டிரஸ்ட் மீ… உன்ன நான் பத்திரமா பாத்துபேன் நிரு” என்று கூறியவனை பார்த்து, அவன் விளக்கங்களையும், அவன் பேசிய தீவிரத்தையும் பார்த்து நிரல்யா சிரிக்க தொடங்கினாள்.

 

அவள் சிரிப்பிற்கு காரணம் புரியாமல் அவன் மனதினுள், “இவ ஏன் இப்படி சிரிக்கிறா, காதல் பித்து புடுச்சுருச்சோ? மாமா மேல அம்புட்டு ஆச, அதான் நான் காட்டுற அக்கறையில இப்படி சந்தோஷ படுறா, ஆனா சினேகன் அவ இன்னும் லவ் க்கு ஒகே சொல்லல, நீ தான் மறைமுகமா இந்த கவிதையில காதல சொல்லி இருக்க, அவ பதில் அவ தான் சொல்லணும் அவசரபடாதடா” என்று அவனுக்கு அவனே கூறிக் கொண்டான்.

 

இவன் யோசனையை கலைக்கும் அளவு அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க சிநேகனோ, “நிரு என்ன ஆச்சு? ஏன் இப்படி சிரிக்கிற” என்று அப்பாவியாக கேட்க அவனிடம், “ஒன்னும் இல்ல சினேகன், சும்மா தான்… உங்க கவிதைய நான் ரசித்தேனோ இல்லையோ ஆனா கண்டிப்பா நல்லா சிரிச்சேன்… உங்க கூட இருந்தா கண்டிப்பா லைப் ஃபுல்லா சிரிச்சுட்டே இருக்கலாம்” என்று நிரல்யா கூற உடனே சிநேகனோ, “அப்போ லைப் முழுக்க இருக்கியா? நிரு?” என்று பட்டென்று கேட்டு விட்டான்.

 

அவளது மனதிலும் அந்த எண்ணம் இருந்த போதிலும் நிரல்யாவால் உடனே ஒப்புக்கொள்ள இயலவில்லை. குறைந்தபட்சம் அவன் குடுத்த கவிதகாகவேனும் அவனை அவளது பதிலுக்காக இழுத்தடிக்க முடிவு செய்தாள். மிகவும் சிரமப்பட்டு முகத்தை சமன் படுத்தி முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனிடம், “எனக்கு கொஞ்சம் டைம் வேணும் சினேகன்” என்று கூற சிநேகனோ அவளிடம், “என்ன நிரு லூச இருக்க? எல்லாரும் வாட்ச் வேணும்னு தான் கேட்பாங்க, நீ என்ன டைம் வேணும்னு கேட்குற? அப்புறமா கடைக்கு கூப்பிட்டு போய் வாங்கி தரேன்… இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? அத சொல்லு முதல்ல” என்று கூற நிரல்யாவோ சிரம பட்டு சமன் படுத்திய முகத்தை தக்கவைத்துக் கொள்ளாமல் அவன் முன் சிரித்துவிட்டாள்.

 

அவள் சிரித்ததை பார்த்தவன், “ஒகே நிரு தாங்க்ஸ் … குட் நைட் மாமா ட்ரீம்ஸ்” என்று கூறிவிட்டு நடக்க, நிரல்யவோ, “என்னடா இவன் கெஞ்சி சம்மந்தம் வாங்குவானு பாத்தா நான் எதுவுமே சொல்லாமலே அவன் பாட்டுக்க போறான், இதுல மாமா வேற” என்று முணுமுணுத்தவள், “சினேகன் ஒரு நிமிஷம், நான் இன்னும் ஒகே சொல்லல ” என்று கூற ஒரு நொடி நின்று வெகு நிதனாமாக திரும்பி பார்த்தவன், “தேவ இல்ல பேபி, உன் சம்மதத்த உன் சிரிப்பு சொல்லிடுச்சு..சிரிப்பு சம்மதத்திற்கு அறிகுறி” என்று கூற உடனே நிரல்யாவோ, “அது மௌனம் தான சம்மதத்திற்கு அறிகுறி?” என்று கேட்க சிநேகனோ அவனது முழியை மேலும் கீழும் ஒருமுறை உருட்டிவிட்டு, “இல்ல நிருமா இப்ப மாத்திட்டாங்க… இதோ பாரு.. நீ எண்ட இப்படிலாம் கேள்வி கேட்காட்டி உன்ன பாசமா நிருமானு கூப்பிடுவேன்… ரொம்ப இப்படி கேள்விக் கேட்ட அப்புறம் நான் கோவப்பட்டு..” என்று சொல்லாமல் இழுக்க நிரல்யா அவனிடம், “சொல்லுங்க .. கோவப்பட்டு?” என்று கேட்க சிநேகனோ, “நிருமாக்கு பதிலா, குருமா…னு கூப்பிடுவேன் பாத்துக்கோ” என்று கூறி விட்டு நிற்க அதற்கும் நிரல்யா சிரித்தாள்.

 

சிரித்துவிட்டு, “சினேகன் எல்லாம் ஒகே பட் நான் இன்னும் சம்மதம் சொல்லல, நான் ஒரு வாரம் பிறகு என் முடிவ சொல்லுறேன்…சரியா?” என்று கேட்டுவிட்டு அவன் பதில் தரும் முன் அவள் அங்கிருந்து சென்று விட்டாள் புன்னைகையுடனே.

 

சிநேகனோ அவள் செல்வதையே சிறிது நேரம் பார்த்துவிட்டு பிறகு அவனே அவனை சமன் செய்துக்கொண்டு ஒரு வார காலம் காத்திருக்க முடிவு செய்து, நிரல்யா குடுத்த படத்தை ஆதியிடம் சேர்ப்பிக்க பயணித்தான்.

 

அவன் செல்வதை முதல் முறை போலவே மேல் தளத்தில் நின்று மறைந்து பார்த்துக் கொண்டு இருந்த நிரல்யாவை பின்னிருந்து அவள் தோழி அழைக்க, அவள் புறம் திரும்பிய நிரல்யாவின் முகம் சந்தோசத்தில் மிதந்திருந்தது. அவள் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருக்க, தோழியோ குழம்பி போய் அவளிடம் காரணம் கேட்க, நிரல்யா சிரித்தபடியே சினேகன் தந்த வாழ்த்து அட்டைய கொடுக்க அதை வாசித்த நிரல்யவின் தோழி, “என்ன டி இது? ” என்று கேட்க, நிரல்யவோ, “சினேகன் இந்த கவிதை மூலமா என்ன ப்ரொபோஸ் பண்ணி இருகாரு டி” என்று சிரித்துக் கொண்டே கூற அவள் தோழியோ தலையில் அடித்துக் கொண்டு, “இங்க பாரு ப்ரொபோஸ் பண்ணி இருகாருனு மட்டும் சொல்லு, இத கவிதைன்னு லாம் சொன்ன உன்ன கொன்னுடுவே.. ஆமா தெரியமா தான் கேட்குறேன்… அவரு உன்ன பார்த்து ஒரு 3 நாள் இருக்குமா? நீயும் அவரும் பேச ஆரம்பிச்சு இன்னும் ஒரு நாள் கூட முடியல, அதுக்குள்ள லவ்?” என்று கேட்க இத்தனை நேரம் அவளையே அறியாமல் சினேகனை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தவள் இப்பொழுது நிதானத்திற்கு வந்து மென்மையாக சிரித்தாள் நிரல்யா.

 

“இல்ல டி, இது வெளில இருந்து பார்க்க தான் பார்த்தயுடன் காதல் அப்படி இப்படின்னு சினிமாடிக்கா தோனும், அத அனுபவிகிறவங்களுக்கு இது பொயட்டிக்கா தான் நிச்சயம்மா தோனும் டி… ஒரு பொண்ண கண் கலங்காம பாத்துகறவன விட ஒரு பொண்ண சிரிக்க வைக்கிறவன் வாழ்க்கையில் கிடைக்கிறது தான் ரொம்ப முக்கியம், சினேகன் கண்டிப்பா வாழ்கை முழுக்க கண் கலங்காம மட்டும் இல்ல, என் உதட்டுல புன்னைகை குறையாமையும் பாத்துப்பாரு… என்ன சொன்ன? கவிதை இல்லன்னா…? ஆமாம் நீ சொல்றது போல அது காதல சொல்ற கவிதை இல்லை தான்… ஆனாலும் நான் அதுல காதல உணர்ந்தேன்… என் மேல இருக்க அக்கறையும்,… பொண்ணு பார்க்க வந்து காபி சாப்பிடுற 5 நிமிசத்துல வாழ்க்கைய நிர்னையக்க முடியும்னா அவர எனக்கு 1 மாசமா தெரியும், 3 முறை நேர்ல பார்த்துருக்கே… ஒரு பொண்ணு அவரோட தோழியா இருக்குறத பெரும நிரஞ்ச குரல்ல சொல்றா, அவரு பெண் தோழியோட கணவன் ஆதி சார் கூடவே சினேகன் வரது, அவரோட கண்ணியத்த காமிக்கிது, பசங்களுக்கு பெண் தோழிகள் இருக்கலாம், ஆனா அந்த பெண் தோழியோட கணவன் கிட்டயும் சகஜமா பேசுராங்கனா அவுங்க கிட்ட நிச்சயமா ஒரு கண்ணியம் இருக்கு டி” என்று மென்மை மாறாமலும், சிறு புன்னைகையுடனும் அதே நேரம் உறுதியுடனும் கூறினாள் நிரல்யா.

 

அவளது தோழியோ, “சரி டா, நீ தான் ஒருத்தர பார்த்ததும் இட போற்றுவியே…. உனக்கு பிடிச்சிருந்தா ஒகே தான்… இருந்தாலும் அந்த கவிதை……” என்று முடிக்காமல் இழுக்க நிரல்யாவோ புன்னைகையுடன், “ஆமாம், அந்த கவிதை மட்டும் அவரு கொடுக்காட்டி ஒரு வேலை இன்னைக்கே ஒகே சொல்லி இருப்பேன்… அத கொடுத்ததுக்கு தண்டனை தான் 1 வார டைம் சொல்லி இருக்கேன்…. கல்யாணம் முடியிறதுக்குள்ள, இவர கவிதைனு வார்த்த சொல்றத கூட மறக்க வைக்கணும், அது தான் என் முதல் வேலை….” என்று கூறி சிரித்தாள்.

 

வண்டியில் பயணித்துக் கொண்டே சினேகன், “நான் பொண்ணுங்ககிட்ட பேசுவேன்… ஆனால் அது எல்லாம் காதல்னு யோசிக்க கூட முடியல, ஆனா இந்த நிரல்யா இல்ல இல்ல என்னோட நிரு நிச்சயமா ஸ்பெஷல் தான்…. இல்லனா 2 முறை பார்த்து, இன்னைக்கு தான் முதல் முதல பேசின ஒரு பொண்ண என் வாழ்க்கை துணைனு நினைக்க முடியாது… நிச்சயம் அவன் அன்னைக்கு என்ன பார்த்த பார்வையில, இல்ல இன்னைக்கு அவ பேசுன விதத்துல ஏதோ ஒரு வகையில் அவ எனக்கு அவக்கிட்ட காதல சொல்ற அளவு தையிரியம் கொடுத்துருக்கா…. நிரல்யா நிச்சயம் என்ன காதலிக்கிறா” என்று எண்ணமிட்டபடியே, வண்டியில் தன்னந்தனியே சிரித்துக் கொண்டு சென்றான்.

 

நிரல்யாவை நினைத்து தனது வலது கை கொண்டு அவனது தலை முடியை கோதியவன் வண்டியின் கண்ணாடியை பார்த்து புன்னைகைத்துக் கொண்டே உல்லாசமாக விசில் அடித்தபடி அவ்வபோது சிரித்தபடியும் சென்று ஆதியின் வீட்டை அடைந்திருந்தான்.

 

நிரந்தரமாக நிறைந்த புன்னைகையுடன் உள்ளே வந்த சினேகனை பார்த்த மதி, “என்ன டா இது இந்த நேரத்துல அதுவும் வாய மூடாம வரான்…” என்று நினைத்தபடியே, “வா சினேகன், ஏன்டா… கிட்டத்தட்ட 2 வாரம் கழுச்சு நான் ஆபிஸ் வரேனே, இன்னைக்குனு பார்த்தா லீவ் போடுவ, எந்த விவரமும் என்கிட்ட சொல்லல … அப்படி என்ன வேலை உனக்கு, இப்ப என்ன எண்ட சாரி கேட்க வந்தியா?”

 

என்று கேட்க, சிநேகனோ அவளிடம் ஒரு வார்த்தைகூட அவள் கேட்டதுக்கு பதில் அளிக்காமல், “மதி, ஆதி சார் எங்க? ” என்று கேட்க மதியோ, “நான் உங்கிட்ட பேசினா, அதுக்கு பதில் சொல்லாம, நீ எதுக்கு அவர தேடுற, அவர் என்னடான திடுதிப்புன்னு பின்னாடி கேட்க்கு வாட்ச்மன் போடறாரு, அத்தை கேட்டதுக்கு கூட பதில் சொல்லல, சினேகன்ட்ட அடிகடி பேசுறாரு, இந்த சிநேகனோ எண்ட பேசுறானோ இல்லையோ அவருக்கிட்ட எப்ப பாரு பேசுறான்… என்ன தான் நடக்குது இங்க” என்று முன்பகுதியை சிநேகனிடம் சத்தமாகவும் பின் பகுதியை வாய் விட்டு தனக்குல்லையே முணுமுணுத்து கொண்டாள் மதி.

 

இவர்களின் உரையாடலை கேட்டு அனைவரும் அங்கே ஒன்று கூடினர் ஆதியை தவிர. ஆதி அதே நேரத்தில் அவனது அலுவலக அறையில் அன்று செழியன் மூலம் கைக்கு வந்திருந்த மெமரி கார்டை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அனைவரும் சினேகனை வரவேற்க அப்போது தான் உள்ளே நுழைந்த அகிலனையும் சினேகனுக்கு அறிமுகபடுத்திக்கொண்டு இருந்தனர். சிவகாமி அம்மாள் சிநேகனிடம், “என்னப்பா சினேகா, இன்னைக்கு நீ ஆபிஸ் வரல போல, வந்தது இருந்து மதி உன்னதான் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தா.. ” என்று கூற அவன் மனதிலோ, “நான் லவ் பார்ட்ஸ் ஆகிட்டேன்.. இனிமேல் எல்லாம் என்ன அவ்ளோ ஈசியா பாக்க முடியாது…” என்று நினைத்துக் கொண்டு வெளியில், “அம்மா மதி என்ன எதுவும் சொல்லாட்டி தான் நம்ம ஆச்சர்ய படனும்… இதெலாம் எனக்கு பழகிடுச்சு… ஆமாம் மா ஆதி சார் எங்க?” என்று கேட்க இளமாரனோ, “சினேகா, நீ மதி கூட தான வேலை பார்க்குற? இப்பலாம் வந்ததும் மாப்பிள்ளைய தேடுற” என்று கூறி சிரிக்க அவன் மனதினுள், “ஆமாம் உலக மஹா ஜோக்கு, இவரே சொல்லிட்டு இவரே சிரிச்சுகிறாரு… எல்லாம் நேரம், இதுல குடும்பமே சினேகா சினேகா னு என் பெயர கொலப்பன்னுவாங்க…” என்று நினைத்துக் கொண்டு, “இல்ல ஆதி சார் வர சொன்னாரு… பா” என்று கூறினான்.

 

சினேகன் வீட்டில் இருபோரின் கேள்விகளுக்கு பதில் சொல்லியவாரே இருக்க அங்கு ஆதியோ அவன் பார்த்துக் கொண்டிருந்த ஆதாரத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டு இருந்தான். த.நா 25 (TN25) என்ற வண்டியின் எண் பலகை ஆதியின் கண் முன் ஓடியது. அவன் மனமோ, “இது எப்படி சாத்தியம்? த.நா 25 திருவண்ணாமலை… ஆனா சம்மந்தப்பட்ட இடமோ த.நா 11 அல்லது த.நா 14…. தாம்பரம் அல்லது சோழிங்கநல்லூர்… அப்படியே இல்லனா கூட சென்னையின் எண் தான இருக்கணும்… ஏன் திருவண்ணாமலை?” என்று அவன் மனம் பலவாறாக யோசித்தது.

 

ஏனோ ஆதித்யனுக்கு, அந்த எண் தட்டை முன்பே பார்த்திருப்பது போல தோன்ற அவன் யோசனை பலவாறாக சென்று, இதற்கு முன் அதே எண்னை எங்கே பார்த்திருக்கிறான் என்று சிந்திக்க தொடங்கினான்.

 

ஆனாலும் அவனுக்கு சட்டென்ன பிடிபடாமல் போக அதே நேரம் மதி அவனை அழைக்க வர, அவளிடம் கேள்வியாக தனது புருவம் உயர்த்தினான் ஆதித்யன். கீழே சினேகன் வந்த தகவலை கூறிய மதியிடம் சிறு கேள்வி புனைந்திருப்பதையும் அறிந்த ஆதித்யன் அதை அறியாதவன் போல அவளிடம் வருகிறேன் என்ற தலை அசைப்போடு அவள் கேட்காத கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி கீழ் தளத்திற்கு விரைந்தான்.

 

சினேகனின் பேட்சில் அவர்கள் மாட்டி கொண்டார்களா? அல்லது அவர்களது பிடியில் சினேகன் மாட்டிக்கொண்டானா என்று அறிய முடியாது அளவு அனைவரும் பேச்சில் லயித்துருக்க ஆதித்யன் வரவும் சினேகன் புன் முகத்தோடு எழுந்து, “ஆதி சார், தயவு பண்ணி உங்க பொண்டாட்டிக்கிட்ட, என்ன சினேகா னு கூப்பிட வேனாம்னு சொல்லுங்க, மதி தான் காரணம், இங்க பாருங்க இந்த போலீஸ் ஆபிசர் கூட என்ன சினேகானு கூப்பிடுறாரு…” என்று கூறியவன் கையில் நிரல்யா கொடுத்த காகிதச் சுருளை அங்கும் இங்கும் ஆட்டியவாறு கூறிக் கொண்டு இருந்தான்.

 

அவன் சொல்வதை கேட்டு சிரித்தவன் மதியை பார்க்க அவளோ திரு திரு என்று முழித்துவிட்டு, “இல்ல, அம்மா தான் அப்படி சொல்லி சொல்லி எனக்கும் பழகிடுச்சு….” என்று கூறிவிட்டு அவளுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல அவள் தாயை கை காட்டிவிட்டு அமர்ந்துக் கொண்டாள். 

 

இப்பொழுது ஆதித்யனோ அவள் அம்மாவிடம் பார்வை திருப்புவானோ என்று எதிர் பார்க்க ஆனால் ஆதித்யன் சிநேகனிடம் ஒரு புன்னைகை உடன், “விடுங்க சினேகா… இது எல்லாம் சகஜம்” என்று கூற சினேகன் தலையில் கை வைத்து அமர அங்கே அனைவரின் சிரிப்பலையும் தோன்றி மறைந்தது.

 

மதி சிநேகனிடம், “நீ கைல என்ன வச்சுருக்க, அது என்ன சார்ட்? ” என்று கேட்க சினேகனின் விழி ஆதித்யனை ஒரு பொருள் பொதிந்த பார்வையுடன் தீண்டி மீண்டும் மதியிடம் நிலைத்து, “அது எங்களுக்குள்ள… என் நேம்ம டேமேஜ் பண்ணின உன்கிட்ட சொல்லவே மாட்டேன்” என்று கூறி கொண்டு ஆதியிடம், “சார்… இது நீங்க பாத்துட்டு சொல்லுங்க…” என்று மதியை தாண்டி ஆதியிடம் கொடுக்க மதிக்கு அந்த சுருள் காகிதத்தை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென ஆவல் பெருகியது.

 

அதன் பின் சிநேகனையும் அங்கயே இரவு உணவு உண்ணுமாறு சிவகாமி அம்மாள் வற்புறுத்த சிரிப்பின் ஒலியோடு உணவை முடிக்க ஆதிக்கு மட்டும் அவன் அந்த எண்னை எங்கே பார்த்திருப்பான் என்ற சிந்தனையும், அந்த காகித சுருளில் இருக்கும் பெண் உருவத்தையும் பார்ப்பதிலும், ஆதியின் சிந்தனையோ கூர் வேல் போல இலக்கை குறிப்பார்த்துக் கொண்டு இருந்தது.  

 

 

அதன் பின் அனைவரும் களைய, சினேகன் கிளம்ப ஆதி அந்த காகித சுருளோடு அவன் அறைக்கு விரைந்தான். அவன் பின்னோடு சென்ற மதியும் அதை எப்படி பார்ப்பது என சிந்தித்துக் கொண்டே நடந்தவள் வாய் விட்டே, “எப்படி அந்த சார்ட்ட பாக்குறது னே தெரியலையே” என்று அவளை மீறி முணுமுணுக்க ஆதியின் காதில் தெளிவாக விழுந்து அவன் கடை இதழில் புன்னகை அரும்ப செய்தது.

 

அவர்கள் அறைக்குள் வந்தவுடன், “என்ன மதி? இதுல என்ன இருக்குனு தெரியனுமா?” என்று எதார்த்தமாக கேட்க அவள் தலை ஆமாம் என்பதன் அறிகுறியாய் மேலும் கீழும் அசைய அதை உயர்த்தி பிடித்தபடி, ஆதித்யன் கள்ள சிரிப்புடன் அவளை சீண்டி பார்க்க எண்ணி, “ஹ்ம்ம் முடுஞ்சா என் கையில இருந்து எடுத்து பார்த்துக்க மதி.. கமான் கோ அஹெட்….” என்று புன்னைகையுடன் கூற அதை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அதோடு தனது நண்பனான சினேகன் எதற்காக ஆதியிடம் ஏதோ தகவலும், சந்திப்பும், பார்வை பரிமாற்றமும் செய்கிறான் என்று அறிய எண்ணி அவன் பார்வையில் இருந்த கள்ள தனம் அறியாது அந்த காகிதச் சுருளை எடுக்க எத்தனித்தாள்.

 

ஆழ்ந்த நல்லிருவு, மிதமான கடற் காற்று, சாளர வழி வரும், ஆரஞ்சு நிற காம்பும் வெள்ளை பூவிதழ்களை கொண்ட பவள மல்லியின் வாடை, தனது காதல் மனைவியின் அருகாமை என ஆதித்யன் நிலை சற்று தடுமாறி போனது. அவனது கையில் இருக்கும் காகிதச் சுருளை எடுக்க துடித்த அவளை, சீண்ட நினைத்திருந்தவனின் நிலை இப்போது அவளது அருகாமையில் மாறியிருந்தது.

 

அவனது உயரத்திற்கு எட்ட எண்ணி குதிங்கால் தூக்கி அவனின் கம்பீரமான உடலோடு இவள் பூ உடல் உரச நின்று இருந்தவளின் கவனம் அவன் கையில் இருக்கும் காகிதத்தை பற்றுவதிலே இருக்க அவளது இடக்கையை தூக்கி அவன் உயர்த்தி பிடித்திருந்த காகிதச் சுருளை பற்ற முயல அவளது வலக்கையோ அவனது தோளை ஆதரவாக பற்றி இருந்தது.

 

அவளது முயற்சி ஒரு மலை மீது மோதும் பூங்காற்று போல இருக்க ஆதித்யன் அசையாமல் அவள் அருகாமைய அனுபவிக்க மதி அங்கும் இங்கும் அசைந்து வெகு சிரமப்பட்டு அதை கைப்பற்ற முயன்று கொண்டு இருந்தாள்.

 

அவள் எம்பி எழுந்து அதை கைப்பற்ற முயற்சித்த போது அவன் முகத்துக்கு வெகு அருகினில் மதியின் இதழ் வந்து வந்து போய் கொண்டு இருந்தது. ஆதியின் கண்களில் மெல்ல மெல்ல அவளை ஆளும் எண்ணம் துளிர் விட அவள் தீண்டல் அவனுக்கு போதையை தந்தது.

 

சற்று குதித்து அந்த காகிதத்தை அவள் பிடிக்க எண்ணி குதிக்க, கால் இடறி அவள் கீழ் விழ ஆதியின் ஆண்மை நிறைந்த கரம் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது. அவனுள் மோக தீ பற்றி கொள்ள, இத்தனை நேரம் அந்த சுருளை கைப்பற்ற எண்ணிய மதி, இப்பொழுது ஆதியின் கை பட்டதால் அவளுள் ஒருவித நாணம் ஒட்டிக்கொள்ள, அவள் பாதம் முதல் தலை வரை புது ரத்தம் பாய்வது போன்ற உணர்வு தோன்ற அவள் கன்ன கதுப்புகள் அளவுக்கு மீறி சென்மை கொண்டது.

 

அன்று போல் இன்றும் இது கனவா என்று எண்ணம் எழ அவள் கை அவளது இடையில் பின்னி அழுந்த கிடப்பதை பார்த்தவள் அவளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

 

அவன் கை ஆதரவில் சாய்ந்த நிலையில் நின்ற மதிக்கு ஆதியின் கைகள் அவள் வெற்று இடையில் எல்லை மீற அவளது கால்கள் நிற்க முடியாமல் துவழ தொடங்கியது. அதை அறிந்தவன் போல் அவளை அவன் மீது சாய்த்துக்கொண்டவன் அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தான்.

 

அவன் மீசை குறுகுறுக்க அவள் கன்னத்தோடு ட்ரிம் செய்யப்பட்ட அவன் கன்னம் இழையோட மதி இன்ப அவசத்தில் சிக்கினாள். அவளை ஒரு கையில் அனைத்திருந்தவன், அவன் உதடு அவள் கழுத்து கன்னம் என ஊர்வலம் செல்ல அணைத்திருந்த கை கொண்டு வெற்றி இடையில் அவன் தடம் பதிக்க, அவனது மறு கையோ இன்னமும் அந்த காகிதச் சுருளை பற்றி இருந்தது.

 

அவன் இதழ் அவள் கன்னம் வழி மெல்ல மெல்ல நகர்ந்து அவள் இதழ் அருகினில் வந்து, அவனது அழுத்தமான உதடுகள் அவளின் செவ்விய அதரங்களின் அருகே முணுமுணுப்பாய், “மதி, இந்த சார்ட்  ல என்ன இருக்குனு பார்க்க வேணாமா? ” என்று போதை ஏறப்பட குரலில் கேட்க மதி சட்டென நினைவுக்கு வந்தாள்.

 

அவளது பார்வை சட்டென்று மாறி அதில் இருப்பதை பார்க்க துடிக்க அதை உணர்ந்துக் கொண்ட ஆதி உல்லாச சிரிப்புடன் அவனது பாணியில் அவனது இடது புருவத்தை மட்டும் ஏற்றி கேட்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன, சிவந்த அவள் முகத்தை மறைக்க தலை குனிந்துகொண்டாள்.

 

“என்ன மதி பார்க்க வேணாமா? ” என்று மீண்டும் அவள் முகத்தை ஒற்றை விரல் கொண்டு ஆதி நிமிர்த்தி கேட்க அதே நேரம் அவனது கையில் இருந்த சுருளை மீண்டும் உயர்த்தி பிடிக்க, வேகமாக அவள் கருவிழியை சுழலவிட்டு அருகில் இருந்த அலங்கார கண்ணாடியின் மோடாவை இழுத்துபோட்டு அதன் மீது ஏறி அவனது கையை பற்ற, அதற்காகவே காத்திருந்தவன் போல அவன் முகத்துக்கு நேரை காற்றில் படபடத்த அவளது சேலை விலகி அவளது இடை தெரிய அவன் இதழும் முகமும் அவளின் வயிற்றில் பதிந்தது.

 

இந்த தாக்குதலையும் அந்த இடத்தில் அவன் இதழ் ஒற்றளையும் எதிர்பாராதவள் அடியோடு ஆதியின் காதல் சங்கமத்தில் மூழ்கினாள். அவனது முகம் எங்கும் அசையாமல் அவள் வயிற்ரோடே பதிந்திருக்க, அவன் மீசை தந்த குறுகுறுப்பை அனுபவித்தபடி அவனை வயிற்ரோடு சேர்த்தணைத்துக் கொண்டாள் அவனின் காதல் மனைவி.

 

அவர்கள் இருந்த நிலை ஒரு சில நிமிடங்கள் நீடித்திருக்க, ஆதியின் மனதிலும், மதியின் மனதிலும் ஒரே எண்ண அலைகள் அவர்களின் காதல் கொண்ட மனதில் புரண்டுக் கொண்டு இருந்தது. அது காதலை அவள் வாய் மொழி கேட்டப்பின்னே அவளை முழுமையாக ஆள வேண்டுமென ஆதியும், அவரிடம் தன் காதலை சொன்ன பின்பே அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும், காதோலடு இணைய வேண்டும் என்று மதியும் மனதில் நினைத்துக்கொள்ள அதே நேரம் அவர்களது அறை கதவு பட படவென தட்ட பட்டது.

 

தங்களை நிதானித்துக்கொண்டு அறை கதவை திறந்தவர்கள் கேட்ட செய்தியில் எதற்கும் அசையாத ஆதித்யனே ஒரு நிமிடம், “என்ன சொல்றீங்க ராமு அண்ணா? ” என்று அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டான்.

Advertisement