Advertisement

 

முகிழ் – 19

ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை ஆட்கள் இருந்தார்கள். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று தனது கைபேசி எடுத்து அவன் நேற்று இரவு பேசியவனை அழைக்க மறுமுனையில் கூறிய பதிலை கேட்டு தொலைப்பேசி அணைத்துவிட்டு எதையோ செய்துவிட்ட திருப்த்தியை அவன் கண்கள் காட்டியது. 

சிறிது நேரத்தில் மேலிருந்த மற்றொரு அறையில் அவனை பார்க்க வந்திருந்தான் ஆதித்யனின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆதித்யனின் வலதுக்கையான செழியன். 

செழியன், ஆதித்யனின் நம்பிக்கைக்கு அனைத்துவகையிலும் தகுந்தவன். ஆதித்யனின் ஒரு கிளையில் மேலாளராக பணி புரிபவன். பார்வைக்கு அப்படி இருப்பினும் அவன் மறைமுகமாக ஆதித்யனின் பாதுகாவலன் என்றே கூறவேண்டும். அதாவது ஆதித்யனுக்கு தொழில் தொடர்பாக வரும் பல சிக்கல்களை, ஆதித்யனிற்கு எதிராக செயல்படுபவர்களை, அவனின் பின் பேசுபவர்களை எல்லாவற்றையும் தள்ளி இருப்பவன் போல போக்கு காட்டி கூர்ந்து கவனிக்கும் வல்லமை கொண்டவன். இத்தனை வருடத்தில், ஆதித்யனின் வீடு வரை வரும் ஒரே தொழில் தொடர்புள்ளவன் செழியன் மட்டுமே ஆவான். 

தன்னையும் மீறி, தனது பார்வைக்கு மறைக்கப்பட்டோ, வராமலோ எந்த ஒரு தவறும் தனது தொழிகளில் வரவிடாமல் காக்கவே ஆதி இப்படி ஒருவனை அமர்த்தி இருந்தான். செழியன், ஆதித்யனிற்கு இத்தனை நெருக்கம் என்று தொழில்வட்டாரத்தில், தொழில்வகையாரில் அவனை முன்னேற நினைப்பவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

ஆதாலாலே தொழில் ரகசியங்கள் திருட நினைப்பவர்களின் கற்பனைக்கு எட்டாத தொலைவில், வளர்ச்சியில் ஆதித்யன் இருந்தான். எத்தனை பெரிய நபராக, பண பலம் கொண்டவன் ஆனாலும் முதுகு பின்னால் நடப்பதை கவனிக்க அவனிற்கு கண் வேண்டும். அப்படி இல்லாமல் போனால் பலம் கொண்டவின் படையும் சிதறடிக்கப்படும். ஆதித்யன் இந்த விஷயத்தில் எப்பொழுதும் விழிப்போடு இருந்தான். செழியன் வீட்டிற்கு வருவதும் சொற்பமே. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வருவான் இல்லை என்றால் தொலைபேசி தொடர்பு மட்டுமே. 

இப்படி ஒரு விசுவாசமுள்ள தொழிலான் கிடைப்பது அரிது என்றால், அவனை அந்த அளவு பிசங்காமல் என் நிலையிலும் ஆதித்யனின் பக்கம் இருப்பவனாக இருக்க ஆதித்யனின் நடவடிக்கைகளே காரணம்.

 

இப்பொழுது செழியன் வந்திருப்பது ஆதித்யனின் வீட்டு சுற்று சுவற்றில் பழைய விளக்குகளை அகற்றி, அந்த இடத்தில் புது வகையான விளக்கை மாற்றவே. 

இரவு ஆதித்யன் பேசிய பிறகு, ஆதித்யன் சொன்ன படி காலையில் அவன் வீட்டிற்கு வந்தவன், நுழைவாயிலில் இருக்கும் காவலாளியிடம் வெளியில் இருந்தே அலங்கார விளக்குகள் மாற்ற வந்திருப்பதற்காகவும் அதை மேற்பார்வையிட அவன் வந்திருப்பதாகவும் 4, 5 நபர்களுடன் வந்தான்.

 

அலங்கார விளக்கு வேலையாக வந்திருப்பதாக கூறியதை குரலை உயர்த்தி கூறியவன் மேலும் காவலாளியிடம் சற்று குரலை தனித்து தனது பெயரை செழியன் என்று கூறி சிவகாமி அம்மளிடமோ, ஆதித்யனிடமோ கூறுமாறு கூறினான். 
செழியன் எதிர்ப்பார்த்தது போலவே சில நொடிகளில் அவனும் அவனுடன் வந்தவர்களும் அனுமதிக்க பட்டனர். சிவகாமி அம்மாளுக்கு செழியனை பரிச்சயம் இருந்ததால் அவன் தங்கு தடையின்றி உள்நுழைந்தான். 

ஆதி கூறியபடி விளக்குகள் மாற்றும் பணி வெகு துரிதமாக நடந்தது.

 

நடந்த அனைத்தையும் செழியன் அவன் வாய் மொழியாக கூற அதை ஆதித்யன் தலையை மட்டும் அசைத்து உள்வாங்கி கொண்டான். அதன் பின் மேலும் ஒரு சில பணிகளை செழியனுக்கு ஆதித்யன் பிறப்பிக்க, எதற்காக ஏன் என்ற எதுவும் செழியனிடம் கூறாமல் அவன் செய்யவேண்டியவற்றை மற்றும் கூறி அனுப்பினான். 

செழியனுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பு அற்றது போல இருந்தாலும், ஆதித்யன் சொல் செழியனை மந்திரம் போல் ஆட்டிவைக்க ஆதியிடம், “சரி சார்… நான் பார்த்துட்டு உங்களுக்கு தகவல் தரேன்” என்று செழியன் கூறி விட்டு கிளம்ப எத்தனிக்க அவனை தடுத்தது ஆதியின் குரல், “செழியா, உனக்கு எதுவேணும்னாலும் நீ என் பர்சனல் நம்பர்க்கு கால் பண்ணு” என்று முடிக்க செழியன் வந்த பணியாட்களின் வேலை அனைத்தையும் கவனித்துவிட்டு பணி முடிந்ததும் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தது போலவே கிளம்பி சென்றான்.

 

அதிகாலையில் நடந்த இந்த வேலைகள் வீட்டிலிருந்த அகிலன் மற்றும் மதிக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அவர்கள் ஆதி செய்யும் எதுக்கும் மறுப்பு தெரிவிக்க போவது இல்லையே. 
மதி அடுக்களையில் சென்று காபி கலக்க செல்ல அவளை தடுத்த ராமு அண்ணாவே அவளுக்கு கொடுத்து விட்டு ஆதிக்கும் கலக்கி கொடுக்க செல்ல எத்தனித்தார். 

ஆதியிடம் பேசும் தருணம் அதுவாகா அமையாது என்று இத்தனை நாட்களில் உணர்ந்திருந்த மதியின் மூளை வேகமாக வேலை செய்து அவரிடம் இருந்த காபி குவளையை அவள் பெற்றுக்கொண்டு நடந்தாள். ஒவ்வொரு படியாக குவளையுடன் ஏறியவள் மின்னலை விட வேகமாக அவனுடன் பேசுவதற்கு ஒத்திகை பார்கலானாள். 

அவளாக சென்று அவளின் மணாளனான, அவளின் மனதை ஆள்பவனான ஆதியிடம், திருமணம் முடிந்து பேசவில்லை.

 

அவள் இத்தனை நாள் முயற்சி பண்ணாதது தான் தவறோ என்று அவள் மனமே இப்பொழுது எடுத்துரைக்க இன்று எப்படியும் அவள் க்ரிஷ்ணவுடன் பேசியே தீர வேண்டிய நிற்பந்தத்தை அவளுக்கு அவளே செய்துக்கொண்டு என்ன பேசலாம் என்று யோசித்தவள் மனத்திரையில் எழுத்துக்களை தேடி தேடி வார்த்தைகளை உருவாக்கி கொண்டு இருந்தாள்.

 

அவனிடம் பேசும்போதே நிச்சயம் அவள் இப்போது சந்தோசமாக இருப்பதை இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று மருத்துவமனையில் அவள் கூறியதை அவளே மாற்ற வேண்டும், அந்த எண்ணத்தை அவன் மனதிருந்து மாற்ற வேண்டும் இதை இன்று பேசும்பொழுது குறிப்பால் உணர்த்தவேண்டுமென குறித்துக் கொண்டாள்.

 

 “க்ரிஷ்ணவ்… எனக்கு கொஞ்சம் கோவில் வர போகணும்… என்னமோ தெரியல மனசுக்கு சந்தோசமா இருக்கு… ஈஞ்சம்பாக்கம் சாய் பாபா கோவில்கு போகணும்னு தோனுது… நீங்க கூட வந்தா நல்லா இருக்கும்னு தோனுது… ஒரு நண்பனா நினச்சு என் கூட வரலாமே” என்று மனதினுள் சொல்லிக்கொண்டு மேலும் “ஹா சூப்பர் மதி, இப்படி பேசினா, நீ இப்ப சந்தோசமா இருக்குறத க்ரிஷ்ணவ் கிட்ட சொல்லிடலாம்… அதோட நண்பன்னு சொன்ன அவரு கொஞ்சம் உங்கிட்ட முகம் குடுத்து பேச கூட செய்யலாம்… இப்போதைக்கு அவர்கூட சகஜமா பேசுறதே பெரியவிஷயம். சபாஷ் மதி, சொதப்பிடாம, என் செல்லம்ல அவர்கிட்ட போய் அப்படியே பேசிடு பார்ப்போம்… போ போ” என்று அவளுக்கு அவளே தைரியம் சொல்லி, ஆறுதல் சொல்லி, பாராட்டுக்களையும் சொல்லி தேத்திகொண்டு அவர்களின் அறைநோக்கி நடந்தாள்.

 

அவள் யோசித்து யோசித்து கோர்த்த வார்த்தைகள் அவள் மனதில் சூழ்ந்திருக்க, கையில் காபி குவளையுடன் நுழைந்து அவனிடம் காபியை கொடுப்பதற்காக அறையை கண்களால் துலாவினாள்.

 

 

அவன் சாளரத்தில் இருப்பதை கவனிக்காமல் அவன் அலுவல் அறை நோக்கி அந்த அறையின் வாசலில் இருந்து அலுவல் அறையை அவள் பார்க்க, அதே நேரம் சரியாக அவன் கைபேசியை பார்த்துகொண்டே அவன் அழுவல் அறை நோக்கி வர, அறையில் அவன் இல்லாததால் அவள் திரும்ப, அதே நேரம் ஆதித்யனின் வருகை அனைத்தும் சேர்த்து அவன் அவளின் வெகு அருகில் நின்று இருந்தான். 

 

அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்த ஆதித்யனும் இத்தனை நெருக்கத்தில் அவளை கண்டதால் ஒரு நொடி அவன் சிந்தை அவளின்பால் தடுமாறி அவள் கண்களோடு இவன் கண்களை உறவாடவிட்டான்.

 

காற்று மட்டுமே புகக்கூடிய இடைவெளியில் நின்ற ஆதித்யனின் நெருக்கம் அவள் மனதில் தடுமாற்றத்தை தந்தது. அவள் முகம் சரியாக அவனின் மார்பளவில் இருக்க, அவனின் ஆண்மை நிறைந்த மார்பில் சாய்ந்து கொள்ள துடித்த தன் மனதை கட்டுப்படுத்த முடியமால் தவித்த மதிக்கு மூச்சு முட்டியது.

 

யாரை மனதால் மணந்து அவனிற்காக வாழ்ந்தாளோ, அவனிடம் அடுக்கதில் காதலையும் சொல்ல முடியவில்லை, இப்பொழுது கணவனான பின்பு அவனின் மனைவியாக தோள் சாயவும் இயலவில்லை என்பதை அவள் நினைத்து வேதனை கொண்டாள்.

 

அவள் மனதில்

 

  ஒரு மலராக பிறந்திருப்பினும்

  என்றேனும் மாலையாக மாறி

  என்னவனின் தோள் சேர்ந்திருப்பேனோ ?

 

  இப்படி மனைவியாக வாழ்ந்தும்

  என் மணாளனின்

  தோள் சேர முடியாமல் போனது ஏனோ ?

 

                                                        

 

என்று தோன்றியது. அதை தொடர்ந்து அவளிடம் ஒரு சிறு அசைவு தென்ப்பட்டு நடப்புக்கு திரும்பினாள்.

 

ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்த இந்த நிலையை இருவரும் உணர்ந்து சற்று தள்ளி நிற்க மதி அவள் கையில் இருந்த காபி குவளையை ஆதியிடம் குடுத்தாள்.

 

அவனின் மனநிலமையும் மதிக்கு நிகராக இருந்தாலும், அவள் காதலை மறைப்பதற்கு காரணம் என்ன என்பதை அறியமாலும், அவளின் ஆபத்தை நீக்காமலும், அவள் அவனிடம் அவளை வெளிப்படுத்தாததிற்கு காரணம் அறியாமலும் ஆதியால் அவளிடம் நெருங்க முடியவில்லை.

 

 

காபியை பெற்றுக் கொண்டு அவளிற்கு முதுகு காட்டி நின்று மெல்ல நடந்துக் கொண்டே அவன் காபியை பருக ஆரம்பிக்க, இங்கு மனதினுள் சேகரித்த வார்த்தைகளை வெளி கொண்டு வர திண்டாடிக்கொண்டு இருந்தாள்.

 

 

அவனின் சிறு நேர எதிர்பாராத அருகாமை தந்த படபடப்பும், தன் காதலை சொல்ல முடியாத பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து அவள் சேகரித்த வார்த்தைகளை தொண்டை குழியில் சிக்க வைத்தது.

 

புதைமண்ணில் வைத்த கால் உள் இழுக்க படுவதுபோல, அவனிடம் சொல்லவேண்டிய வார்த்தைகளும் அவள் தொண்டைக்குழியில் புதைந்துக் கொண்டிருந்தது.

 

“ஹ்ம்ம் ஆ… அது …. க்ரிஷ்….” என்று அவள் தொடங்க தடுமாறிய நொடி க்ரிஷ்ணவ் அவளை நோக்கி திரும்பி மதியிடம், “என்னமோ தெரியல மனசுக்கு சந்தோசமா இருக்கு… ஈஞ்சம்பாக்கம் சாய் பாபா கோவில்க்கு போகணும்னு தோனுது… நான் ஈவினிங் போறேன்… நீ வரணும்னு நினச்சா சாயங்காலம் ரெடியா இரு.. நான் ஆபிஸ் விட்டு வந்து பிக் அப் பண்ணிக்கிறே” என்று கூற மதியின் இமைகள் அளவுக்கு அதிகமாக விரிந்து ப்ரம்மிப்பை காட்டியது. அவள் கண்ணின் இமைகள் ஒரு முறை மெல்ல மூடி விரிந்து ஆச்சரியத்தை காட்டியதில் ஆதித்யன் அந்த விழி பேசும் மொழியில் விருப்பத்துடன் விழுந்தான்.

 

அவளின் விழியில் ஆதித்யன் மெல்ல கரைந்துக் கொண்டிருந்த வேலை, ஆதி அவளிடம் பேசியதை எண்ணி எண்ணி பூரித்து அவனின் நட்பை பெறுவது சுலபமே இனி என்று மனதில் எண்ணியவள் அவளை மறந்து அவனிடமும் “நான் வரேங்க… ஈவினிங் வெயிட் பண்றேன்.. இனி மேல், நம்ம இதுபோல சாதாரனமாவது பேசிக்கலாம் இல்லையா? பிரண்ட்ஸ்?” என்று தலை சாய்த்து கேட்க, வேறு சமயமாக இருந்திருந்தால் அவனும் அதை இலகுவாகவே எடுத்திருப்பான். ஆனால் அவன் காதல் கொண்ட மனது பட்டம் போல விண்ணில் சிறகடிக்க படாரென்று நட்பு என்று கூறி பட்டத்தின் கயிரை மதி அறுக்க அவன் கண்களில் ஒரு நொடி கோவம் துளிர் விட்டு மறைந்தது.

 

அவனது உணர்வுகளை அவனுக்குள்ளே மற்றவர்கள் அறியாமல் கட்டுபடுத்தும் திறன் கொண்டவன் இப்பொழுது நடந்த சிறு ஏமாற்றத்தால் ஏற்பட்ட கோவத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

 

ஆனால் அவன் மனதிலோ, “ஏண்டி … ஏ இப்படி பண்ற… என்ன இவ்ளோ தூரம் காதலிச்சிட்டு எப்படி உன்னால விட்டு போக முடுஞ்சது, அப்படியே போயிருந்தாலும், இவ்ளோ நெருக்கத்துல நான் இருந்தும் நீ என்கிட்ட இப்ப மறைக்க காரணம் என்ன, காதலனா இருக்க வேண்டிய நான் உனக்கு நண்பனா?, உன் வாயால நீயே உன் காதல சொல்ற நாள் ரொம்ப தூரம் இல்ல, உன்ன சொல்ல வைக்காம, உன்னோட காதல நீ  வெளிபடுத்தாம, நான் என்னோட முயற்சிய நிருத்தபோறதும் இல்ல” என்று மனதிற்குள் நினைத்தவன் மதி கேட்டதற்கு பதில் கூறாமலே சென்று இருந்தான்

 

அவன் சென்ற திசையை பார்த்திருந்த மதிக்கு தான் என்னவோ போல் ஆனது, “இப்ப நான் என்ன கேட்டுட்டேன்…எதுக்காக கோவ பட்டு போனாரு, அவரே கோவில் கூப்பிட்டு போறேன்னு சொன்னாரு, இப்ப பதில் பேசாம போய்டாரு ஒருவேள அவர்க்கு என்ன பிடிக்கவில்லையோ, சிவகாமி அம்மா எதுவும் சொல்லி இருப்பாங்களோ? அம்மா காக கூப்பிட்டு போறேன்னு சொல்லி இருப்பாரோ, இனிமேல் எப்பயும் பேசலாம் அப்படின்னு சொன்னதுனால என்கிட்ட பேச பிடிக்காம, நான் ரொம்ப அட்வாண்டேஜ் எடுக்குறேன்னு நினைச்சுடாரோ… கடவுளே, ஆதி நோக்கி ஒரு அடி முன் வச்சா ஏன் ரெண்டு அடி என்ன சறுக்க வைக்கிற….” என்று மனதினுள் புலம்பியவள் அவன் பதில் சொல்லாமல் சென்றதுக்கு அவளே காரணத்தை யோசித்து யோசித்து சோர்ந்து போனாள்.

 

அவன் அருகாமையை அனுபவித்த நொடி ஒரு முறையேனும் அவன் பார்வையை கவனித்திருந்தால் மதி புரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும் இப்படி யோசிக்க வழி அற்று போயிருக்கும். அவன் அருகாமையில் வெட்கத்தால் அவள் இமை தாழ்ந்திருக்க அவனிற்கே தெரியாமல் அவன் பார்வை சொன்ன கதைகள் அவளுக்கு புரியாமல் போனது.

 

அடுத்து மள மளவென   வீட்டில் இருபோர் அனைவரும் அவரவர் பணிக்கு ஆயுத்தமாக ஆதி, அகிலன் நிலா மதி பெரியவர்கள் என்று அனைவரும் உணவு மேஜையில் கூட நிலாவும், மதியும் பரிமாற அனைவரும் பொதுவாக பேசியபடி உண்டு முடித்தனர்.

பிறகு ஆதி அகிலனை தனியே அழைத்து, “அகில் நீ கொஞ்சம் ப்ரீஆ இருக்கும் போது நிலாவ உன்கூட பக்கதுல இருக்க எதாச்சும் கோவிலிற்கு கூப்பிட்டு போய் வா டா… முடுஞ்சா இன்னைக்கு… சரியா? ” என்று கேட்க, அகிலனிற்கு தனது நண்பன் சொல்வதில் ஏதோ உள் அர்த்தம் இருப்பது போல தோன்ற அதை கேட்க முற்பட்டான். அதே நேரம் சரியாக அகிலனிற்கு அழைப்பு வர அதை எடுத்து பேசியவன் உடனே கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட ஆதியிடம் கேட்க வந்ததை அப்படியே விட்டுட்டு விட்டு நிலாவை அழைத்து 5 மணிக்கு தயாராக இருக்குமாறு கூறிவிட்டு மதியையும் அழைக்க முற்பட ஆதித்யன் முந்திக் கொண்டு “நீங்க 2 பேரு மட்டும் போயிட்டுவாங்க… நான் மதியை கூப்பிட்டு போறேன்” என்று கூறி சென்றான்.

 

ஆதி, மதியை தனியே அழைத்து செல்ல விரும்புகிறான் என்று எண்ணி கொண்ட நிலா, மதியை சீண்டி கொண்டிருக்க அகிலனிற்கு தன் நண்பன் காரணம் இல்லாமல் கூறவில்லை என்று புரிய அவர் அவர் பணி பார்க்க விரைந்தனர்.

 

அலுவலகத்தில் நுழைந்த ஆதித்யன் வேலையில் லயித்து விட சிறுது நேரத்தில் அவனிற்கு முக்கியமான கோப்பு தேவை பட அதை பற்றி விவரம் கேட்க இனியனை அழைத்தான்.

 

இனியன் எப்பொழுதும் இருக்கும் கலை இல்லாமல், கண்களில் மிக மெலிதாக சிவப்பு ஏறி வேதனையை பிரதிப்பளித்தது. அவன் வசீகர சிரிப்பும் இல்லாமல் 2 3 நாட்கள் மலிக்கப்படாத தாடியுடன் ஆதித்யன் அறையில் நுழைய ஆதித்யன் கண்களுக்கும் இவை எதுவும் தப்பவில்லை.

 

ஆதித்யன் கேட்டவை அனைத்துக்கும் பதில் தந்தவன் கிளம்ப எத்தனிக்க இதுவரை அவன் நடவடிக்கைகளை கவனித்த ஆதித்யன் அவனிடம், “இனியன், உங்களுக்கு என்ன ஆச்சு… எனி ப்ரொப்லெம்?” என்று கேட்க, இனியனோ மறுப்பாக தலை அசைத்துவிட்டு, “இல்ல சார்… ஐ ம் ஒகே…”  என்று கூறினான்.

 

அதற்கு மேல் அவனிடம் கேட்பது சரி இல்லை என்று தோன்ற, “ஒகே இனியன் யு கேரி ஆன் … ” என்று கூறிவிட்டு இனியனிடம், “ஒன் செக், வில் யு ஆஸ்க் ஹர்ஷினி டு மீட் மீ ” என்று கூற இனியன் ஆதித்யனிடம், “அவுங்க 3 நாளா வரல சார், லீவ் இன்டிமேட் கூட செய்யல, உங்களுக்கு எதுவும் தகவல் வேணும்னா என்கிட்டே கேளுங்க சார்” என்று கூற ஆதித்யன் ” 3 நாளா வரலையா, நம்ம பாலிசி தெரியும்தானே அவுங்களுக்கு… இப்படி இன்போர்ம் பண்ணாம லீவ் எடுத்தா அவுங்கள வார்ன் பண்ணுங்க இனியன், இப்போ நீங்க போகலாம்” என்று கூறிவிட்டு மறுபடியும் பணியில் ஆழ்ந்தான்.

 

ஆதியிடம் பேசிவிட்டு வந்த இனியனோ தலையை அழுந்த பிடித்தபடி அமர்ந்திருந்தான் அவன் அறையில். சிறுது நேரம் யோசித்துவிட்டு மறுபடியும் தலையின் பாரத்தை கூட அந்த உடல் தாங்கதது போல கைகளில் அவன் தலையை ஏந்தி அமர்ந்திருந்தான்.

 

இனியன் மனதினுள், ” நான் மனசுல நினச்சத அப்பொழுதே செய்யாதனால இப்ப எனக்கு இந்த வேதன… நான் எப்படி எல்லாம் இந்த வாழ்கைய வாழணும்னு ஆசைப்பட்டேன்… ஆனா இப்ப?… மதி… மதி … இல்ல நான் இத ஏத்துகிட்டு தான் ஆகணும், மதிக்கு ஆதிகூட திருமணம் நடந்துருச்சு இன்னும் எத்தன நாளைக்கு இத நான் ஏத்துக்காம இருக்க முடியும்… அப்படி இருக்குறது நிச்சயம் என்னோட முட்டாள் தனம் தான். மதி ஆதியோட மனைவி” என்று மீண்டும் மீண்டும் அவனே அவனிடம் சொல்லி அவன் மனதை நடந்த நிகழ்வை ஏற்றுகொள்ள வைத்துக் கொண்டிருந்தான்.

 

இங்கு ஆதித்யனோ, அன்று மருத்துவமனையில் இனியன் கண்கள் பிரதிபலித்த ஏமாற்றம் இன்று அவனின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு ஏதேனும் சம்மந்தம் இருக்குமா என்பதை அறிய வேண்டுமென தீர்மானித்துக் கொண்டான்.

 

அதன் பிறகு சில கோப்புகளை பார்வை இடுவது, தொழில் வட்டார சந்திப்பு, இப்படி இறங்கிவிட ஒருவழியாக அவன் முக்கிய பணிகளை முடித்து தலை நிமிர்ந்த போது மதி மதியம் மூன்று ஆகி இருந்தது.

 

உணவு உண்ண முடிவெடுத்து சாப்பிட சென்றவன் காலையில் மதி அருகில் இருந்து பரிமாறியது நினைவு வர மெல்ல சிரித்துக் கொண்டு மதியின் நினைவு வர அவளின் வேலையில் உள்ள ஆபத்தும் அவன் மூலையில் மணியடித்தது. உடனே சினேகன்க்கு அழைத்து சினேகனை வந்து தன்னை நாளை பார்க்கு மாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

அவனது மூளையோ வெகு துரிதமாக திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தது.

 

காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்ற அகிலனிடம் புது கேஸ் ஒப்படைக்கப்பட்டது. அதை பற்றிய விவரங்களும் அதில் அடங்கி இருக்க, அதை மிகவும் ரகசியமாக தனி பிரிவு அமைத்து கண்காணிக்கும் படி உத்தரவிட்டார்.

 

சென்னையில் தற்போது ஏ.எஸ்.பி ஆக பொறுப்பு ஏற்றிருக்கும் அகிலனின் திறமையை நிரூபிக்க இது ஒரு முக்கிய வழக்காக அமையும் என்று கூறி அவனிற்கு வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார்.

 

கோப்பை வாங்கி கொண்டு கிளம்பியவன் அந்த கோப்பில் லயிக்க எந்த ஒரு ஆரம்பமும், எந்த ஒரு துருப்பும் இல்லாதா அந்த வழக்கை எங்கிருந்து ஆரம்பிப்பது என ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.

 

பாதிக்க பட்டவரின் அனைத்து விவரங்களையும் அவனின் கீழுள்ள ஆய்வாளரிடம் அடுத்த 2 நாட்களில் தயார் செய்து கொடுக்குமாறு கூறியவன் மேற்கொண்டு சில பணிகளில் ஆழ்ந்தான்.

 

மாலை நெருங்கிவிட, நிலாவை கோவிலிற்கு அழைத்து செல்ல எண்ணி கிளம்பிய அகிலன் ஆதித்யன் சொன்னபடியே சென்றுவந்தான். அவன் போகும் போது சுற்று சுவற்றில் இருந்த புதுவிதமான விளக்குகளை பார்வையால் அளவெடுக்கவும் தவறவில்லை. அதை மனதில் குறித்துக் கொண்டது அவனது போலீஸ் மூளை.

 

கிட்டத்தட்ட 6 மணி அளவில் வீட்டிற்கு வந்த ஆதித்யன் மதியை தேட, மதியழகியோ, “மாப்பிள்ளை நீங்க கோவில் போகலாம்னு சொன்னீங்களாமே, அவ நிலா ரூம்ல ரெடி ஆகுறா… நீங்க அங்க உங்க ரூம் ல ரெப்ரெஷ் ஆகனும்னு…நீங்க போயிட்டு வாங்க மாப்பிளை நான் உங்களுக்கு காபி எடுத்துவைக்கிறே” என்று கூற ஆதித்யனோ, ” நான் பார்த்துக்கிறே அத்தை, நீங்க ஏன் சிரமப்படுறீங்க… ராமு அண்ணா கொடுப்பாரு… நீங்க ஓய்வு எடுங்க… அதுவே போதும்..இப்ப நீங்க போங்க…” என்று வாஞ்சையுடன் சொல்லிவிட்டு செல்லும் மருமகனை பார்க்க அவர்க்கு நெஞ்சு விம்மியது சந்தோசத்தால்.

 

இதை பார்த்துக் கொண்டே வந்த இளமாறனும் சிவகாமி அம்மாளும் கேலியாக மதியழகியிடம் “என்ன மா… எப்பவும் என்னையும் எங்க அக்காவையும் பாசமலர்னு கிண்டல் பண்ணுவியே… இப்ப என்ன மாமியார் மருமகன் பாசமலரா இது” என்று கேட்க மதியழகியோ, “சும்மா இருங்க … இந்த மாதி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வச்சுருக்கனும்…. இதுக்கெல்லாம் சிவகாமி அண்ணிக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேனே தெரியல…” என்று கூறி கண்ணோரம் சந்தோசத்தால் கசிந்த ஒரு துளி நீரை துடைத்துக்கொண்டார்.

 

முதல் தளத்தில் இருந்த நிலாவின் அறையும், ஆதியின் அறையும் எதிர் எதிர் புறமிருக்க ஒரே நேரத்தில் கதவை திறந்துக் கொண்டு நிலா அறையில் தயார் ஆகி மதி வெளியில் வர, ஆதித்யனும் அதே சமயம் வெளியில் வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அப்படியே நின்றுவிட்டனர்.

 

வெண் அல்லி மலர் போல வெள்ளை டிசைனர் சேலையில் அரக்கு சிவப்பு நுண்ணிய வேலைப்பாடு ஆங்காங்கு மட்டும் அமைந்த புடவையை தழைய தழைய கட்டி கூந்தலை ஒரு கிளட்ச் கொண்டு அடிக்கி கூந்தலின் கீழ் பகுதியை தளர்வாய் விட்டிருந்தவள் அவளின் பெரிய விழிகளுக்கு மை தீட்டியிருக்க அவளின் காந்த பார்வையில் ஆதித்யன் கட்டுண்டு நின்றான்.

 

புருவ மத்தியில் சிறு கருப்பு போட்டு வைத்திருந்தவள், பொட்டின் கீழ் சிறு கீற்றாக குங்குமமிட்டு, கோணல் வகுடு எடுத்திருந்த போதிலும் புருவமத்தியில் நேர்கோட்டில் வகுடு குங்குமமிட்டு அந்த எழிய அழங்காரத்திலும் எழில் தேவதையென மிளிர்ந்தாள் ஆதித்யன் மனமுழுதிலும் குடிக்கொண்டிருந்த மதி.

 

மறுப்பக்கம் ஆதித்யனோ வெள்ளை கேசுவல் முழு கை ஷர்ட்டும், அதற்கு ஏற்ப கரு ஊதா நிற ஜீன்சும் சட்டையின் கை பகுதியை முழங்கை வரை மடித்துவிட்டபடி வெளியில் வந்தவன் பார்வையில் மதி விழ, அந்த மன்மதனே வந்துவிட்டானோ என்று எண்ணும் அளவு ஆறடி உயரத்தில் ஆதி நிற்க ஒருவரை ஒருவர் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

மதி மனதில் காலையில் அவள் மனதில் தேக்கி வைத்த வார்த்தைகள் ஆதியின் கம்பீரமான உதடுகளில் இருந்து வெளிப்பட்டதால் அவள் அடைந்த சந்தோசத்தில் இருந்து மீளாமல் இருந்தவள் இப்பொழுது இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிதிருந்தத்தையும் கவனித்து இருவரின் எண்ண அலைகள் ஒரே திக்கில் பயணிப்பதை புரிந்துகொண்டாள்.

 

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற பாடல் வரி கேட்கும் பொழுது எல்லாம் அவள் உணர்ந்தது இப்படியெல்லாம் பேச இயலாது யாராலும் என்று தான். அதை அவள் நம்பவும் மறுத்து வந்தாள் இன்று காலை ஆதித்யன் பேசும் வரை.

 

அவள் பேச சேகரித்த வார்த்தைகள் ஆதியின் வாய் மொழியாக கேட்கும் வரை.

 

மதியின் காதல் கொண்ட மனது காலையில் அவன் காட்டிய கோவத்தை புறக்கணித்து அவளுக்கு தேவையான சந்தோசம் தரக்கூடிய விஷயங்களை மற்றும் தேடி எடுத்து சந்தோசம் அடைந்துக் கொண்டிருந்தது.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே படி இறங்க அவர்களை பார்த்த பெரியவர்களின் மனமும் நிறைந்தது. அவர்களை மறந்து அவர்கள் மற்றவரை பார்த்திருந்ததால் சுற்றம் மறந்தனர்.  சிவகாமி அம்மாளின் அழைப்பில் சுற்றம் உணர்ந்தவர்கள், முகத்தை நிர்மலமான சிறு புன்னைகையால் மூடிக் கொண்டு வர சிவகாமி அம்மாள் அவர்களுக்கு திரிஷ்டி சுத்த வேண்டும் என வெளிப்படையாக கூறினார். அதை மதியின் பெற்றோரும் சந்தோசத்துடன் ஆமோதிக்க பெரியவர்களிடம் சொல்லி கொண்டு அவர்கள் கோவிலிற்கு சென்றனர்.

 

சுற்று சுவரை தாண்டும் பொழுது ஆதியின் மோன நிலை அறுப்பட்டு வெளியில் கண்காணிப்பவனை ஆதியின் கண்கள் அளவெடுத்தது.

 

சிறிது நேரத்தில் கோவிலை அடைந்தவர்களை மௌனம் ஆட்சி புரிய இருவரும் ஒரே விஷயத்தை தனி தனியே சிந்தித்து கொண்டு இருந்தார்கள்.

 

கடைசியாக இந்த கோவில் வந்து செல்லும் வழியில் ஆதி மதியை காப்ற்றியது பிறகு அவளின் கரம் பிடித்தது என ஆதிக்கு அந்த கோவில் மனதினுள் ஒரு நெருக்கமான உணர்வு தர மதிக்கோ, ஆதிக்கு நிலாவோடு திருமணம் ஆகாதது தெரியவந்தது, அவளது மன பாரம் குறைந்தது இந்த கோவிலில் தான் என்று அவள் மனம் அந்த கோவிலோடு உறவு கொண்டாடியது.

 

கோவிலை விட்டு கிளம்பும்போது காரின் ரியர் வியூ கண்ணாடி வழி அந்த நபர் தங்களை பின் தொடர்வதை பார்த்துகொண்டவன் அவன் சந்தேகபடுவது சரியான வழியில் என்பதை உணர்ந்து அவன் கடை இதழில் சிறு புன்னைகையை தவழவிட்டான்.

 

அடுத்த 20 நிமிடத்தில் வீட்டை அடைந்தவர்கள், முன் அறையில் அமர்ந்திருந்த அகிலனை பார்த்து புன்னகை புரிந்தபடி அவன் அருகில் அமர்ந்தான். சில பல விஷயங்களை பேசியவர்கள் இறுதியில் அகிலன் ஆதியிடம் அலங்கார விளக்கு மாற்றப்பட்டதின் காரணம் கேட்க ஆதியோ சிரித்துவிட்டு சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக்கொண்டு தனது இடை கை கொண்டு தலை முடியை கோதியவன் கண்களில் குறும்பு மின்ன, “அந்த டிசைன் எனக்கு பிடிக்கல மச்சான்…அதான் மாத்திட்டேன், அதோட லைட் எதுக்கு? இருட்டுல நடக்குறத வெளிச்சமா காட்றதுக்கு… பழைய லைட் அத செய்யல…பட் இப்ப மாட்டி இருக்க லைட் நமக்கு எல்லா இடத்துலும் வெளிச்சமா காட்டும்” என்று கூறி சிரித்தான்.

 

ஆனால் ஆதி எதிர்ப்பார்ததும், எதிர்ப்பார்த்ததோடு சேர்த்து எதிர்பாராத மற்றொரு விஷயமும் ஆதிக்கு அந்த விளக்கின் வெளிச்சத்தில் தெரிய போகிறது என அப்போது ஆதிக்கு தெரியவில்லை.

Advertisement