முகிழ் – 24

 

“ராமு அண்ணா… இப்ப அம்மா எங்க? ” என்று கேட்ட படியே அவரது பதிலுக்கு கூட காத்திராமல் பாதி நடையும் பாதி ஓட்டமும்மாக அவனது தாய் இருந்த அறைக்கு சென்றவன் அங்கே இளமாறன் மற்றும் மதியழகி அவனின் அன்னைக்கு சில முதல்உதவி செய்வதை கவனித்து அவர்களிடம் நெருங்கி, “என்ன ஆச்சு மாமா? அம்மா…. அம்மா எப்படி இப்படி…” என்று கேட்டவன் குரலில் தடுமாற்றம் நிரம்பி இருந்தது.

 

இளமாறனோ, “மாப்பிளை, அது ஒன்னும் இல்ல…அக்கா இப்ப முழுச்சுடுவாங்க…. எனக்கு தெரியும்…அக்காக்கு ஒன்னும் இல்ல…” என்று கூறினாலும் அவரது குரலிலும் சிறு தடுமாற்றம் இருக்க, அதே நேரம் அகிலன், நிலா, மதி அனைவரும் அங்கே வர மதி வேகமாக ஆதித்யனிடம், “க்ரிஷ்ணவ்.. டாக்டர்… டாக்டர் கூப்பிடுங்க…” என்று கூற நிலாவும் அகிலனும் பதட்டத்துடன் நின்றனர். அகிலன் தனது கை பேசியில் எண்னை அழுத்த முயல இளமாறன், “இல்ல தம்பி, டாக்டர்க்கு சொல்லிட்டேன்… இப்ப வந்துருவாரு… முன்னாடியே சொல்லிட்டேன் பா” என்று கூற அவர் சொன்னது போலவே அடுத்த 10 நிமிடங்களில் மருத்துவர் அங்கே வந்து சேர்ந்தார்.

 

வந்தவர் சிவகாமி அம்மாளை பரிசோதித்துவிட்டு அவருக்கு லேசான இரத்த அழுத்தம் தான் இந்த திடீர் மயக்கத்துக்கு காரணம் என்று கூற மேலும் அவர் சில மருந்துகளும், அறிவுரையும் கூறிவிட்டு பயப்பட ஒன்னும் இல்லை என்று வீட்டிற் இருப்பவர்களிடமும் கூறிவிட்டு கிளம்ப ஆதி அவனின் தாயின் காலடியில் அமர்ந்து அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

“மாப்பிளை, இங்க பாருங்க அக்காக்கு ஒன்னும் இல்லை… பிரஷர் தான்… டாக்டரே சொன்னாரு தான?” என்று கூற மதியும் அவன் அருகில் வந்து, “கிருஷ்ணவ் இங்க பாருங்க… அத்தைக்கு ஒன்னும் இல்லை… கொஞ்ச நேரத்துல முழுச்சுடுவாங்க” என்று கூற, அடுத்து மதியழகி, அகிலன் நிலா என அனைவரும் கூற அமைதியாக தன் தாயை பார்த்துக் கொண்டு இருந்தவன் இளமாறனிடம் திரும்பி, “மாமா ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க சரியான நேரத்துக்கு டாக்டர கூப்பிட்டு அம்மா பக்கத்துலயே இருந்து பாத்துக்கிட்டு… ரொம்ப தேங்க்ஸ் மாமா…” என்று அவன் குரலில் உண்மையான பரிதவிப்போடு கூறினான்.

 

மேலும் அவன், “மாமா நீங்க சும்மா 20 நாள் தங்குறது போலதான் வந்தீங்க… ஆனா இப்ப நடந்தத பாத்ததுக்கப்புறம் எனக்கு நீங்க கூட இருந்தா அம்மாவ தையிரியமா விட்டுட்டு வெளில போவேன்… மாமா நீங்க இங்கயே இருக்கணும்னு ஆசைபடுறேன்…” என்று ஒருவாறு தன்மையாக எங்கே அவர் மறுத்துவிடுவாரோ என்ற யோசனையோடும் கேட்க அவரோ அவரின் அக்காவின் முகத்தை பார்த்து விட்டு தனது மனையாள் ஆனா மதியழகியை பார்க்க அவரும் சம்மதமாய் தலை அசைக்க ஆதியிடம் திரும்பியவர், “மாப்பிளை இத நீங்க இப்படி தயக்கத்தோடு சொல்ல  வேணாம் , நிரந்தரமா  தங்காட்டிக் கூட அக்காக்கு குணம் ஆகும்வரை, உங்களுக்கு  நம்பிக்கை வரும்வர இருக்கோம்… அக்காக்கு எதாது ஒன்னுனா என்னால தாங்க முடியாது… என்கிட்டயேனாலும் என் மாப்பிள்ளை தயக்கத்தோடு கேட்க கூடாது மாப்பிளை, இதுவர நீங்க தளர்ந்து நான் பாத்தது இல்லை, நாங்க இருக்கோம் அக்காவ பார்த்துக்கிறதுக்கு. நீங்க போய் படுங்க… நான் பார்த்துக்கிறே” என்று கூற அனைவரின் முகத்திலும் திருப்த்தி நிலவியது.

 

ஆனால் ஆதியும் இளமாறனும் மாறி மாறி சிவகாமி அம்மாவை பார்த்துப்பதாக கூற இடையில் வந்த மதி இருவரையும் அறைக்கு போக சொல்லி அவள் இருந்து பார்த்துபதாக கூற சிறிது நேரம் அவருடன் இருந்து விட்டு அனைவரும் சென்றனர். மருத்துவர் கொடுத்த மருந்தின் வீரியத்தில் சிவகாமி அம்மாள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றார். 

 

தனது அம்மா நன்றாக தான் உள்ளார் என்பதை அறிந்து அவனது அறைக்கு வந்த ஆதித்யன் மதி இல்லாத அறையை பார்த்து தனது அன்னைக்கு அவள் துணை இருப்பதை நினைத்து அவனது மனதில் நிம்மதி படர்ந்தது. தன்னோடு சேர்த்து தனது அன்னையையும் நேசிக்கிறாள் தன் மனைவி என்ற நிம்மதி அவன் மனதில் நிறைந்தது. அவனது சிந்தனையை கலைக்கும் விதமாய் அவன் காலடியில் ஒரு சுருள் உருள அதை எடுத்து பிரித்தவன் கண்களில் தீவிரம் படர்ந்து வெகுவேகமாக அவனது நீண்ட கால்கள் அழுவல் அறையில் இருந்த அவனது மடிகணினியை நோக்கி பயணித்தது.

 

அந்த சுருளில் இருந்த உருவத்தை தனது மடிகணினியில் இருந்த ஆதாரத்தோடு பொருத்திப்பார்த்தவனுக்கு ஒரு சில முடிச்சுகள் அவிழ்வது போல இருந்தது. அதே சிந்தனையில் திழைத்தவன் சிறிது நேர யோசனைக்கு பிறகு அவனின் அன்னையின் அறை நோக்கி நடக்க அங்கு மதியோ உறங்காமல் சிவகாமி அம்மாளின் பக்கத்தில் அமர்ந்து லேசாக விழிப்பு தட்டி இருந்த அவருக்கு இளம் சூட்டில் பாலை பருக குடுத்து அதற்கு ஏற்றவாறு அவரை அமர வைத்து அவருக்கு உதவி புரிந்துக் கொண்டு இருந்தாள்.

 

அந்த நேரத்தில் தனது அன்னையை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்ட மதி ஆதித்யனுக்கு புதிதாக தெரிந்தாள்…

 

தனது அறைக்கு நிறைவுடன் சென்றவன் முன்இரவில் அவன் பார்த்த ஆதாரத்தில் வந்த வண்டியின் எண்னை எங்கே பார்த்தான் என்பதை சிந்தித்துக் கொண்டே கட்டிலில் சரிய அப்படியே கண் அயர்ந்தான்.  ஆனால் அவன் உறங்குமுன் அதே நினைவுடன் உறங்கவும் நடு இரவில் அவனுக்கு விழிப்பு தட்டிவிட சிறிது யோசித்தவனின் கண்கள் இப்பொழுது பளிச்சிட்டது.

 

இத்தனை நேர யோசனையின் பலனாய் ஆதியின் அறிவு கண்டுக் கொண்டது. எப்போது எங்கே பார்த்தான் என்ற விவரங்கள் அவன் கண் முன்னே அடுக்கடுக்காய் தோன்ற வெகுவாக சிக்கலின் பாதையை அறிந்துக் கொண்டான் ஆதித்யன். கிட்ட தட்ட 40 சதவிதம் அவன் கடந்துவிட, மீதி இருக்கும் தூரத்தை கடந்து, ஆதர பூர்வமாக இதற்கு காரணமானவனை அறிய சில திட்டத்தை வகுத்தான்.

 

மறுநாள் விடியல்…..

 

பல விடுகதைகளுக்கு விடை சொல்ல, விதை தூவப்படும் நாளாக அமைந்தது.

 

பில்ட்டர் காபியின் மனம் நாசியை துளைக்க தனக்கு பின்னால் வந்த மதியின் முகத்தில் ஒரு பொழிவும், நிம்மதி நிறைந்த புன்னைகையும் தவழ்ந்தபடி வந்த மனையாளை, பார்த்தவன் சில மணி நேரங்களுக்கு முன் நடந்த நிகழ்வை அவன் மனதில் ஒட்டிப்பார்த்தான்.

 

‘அதிகாலை புலர்ந்தும் புலராமளும் இருள் கவிந்திருக்க, அப்பொழுதுதான் கண் அயர்ந்த ஆதித்யனை எழுப்பி சிவகாமி அம்மாள் அழைப்பதாகவும் அவர்கள் இப்போது தெளிவாக பேசுகிறார்கள் என்றும் கூறவும் அன்னையின் அறைக்கு விரைந்த ஆதித்யன் கண்டது தெளிந்த முகத்துடன் நிம்மதியும் ஒருகிணைந்த அன்னையின் முகத்தை.

 

மதி செய்ததது சிறு சிறு உதவி தான் என்றாலும் அதில் சிவகாமி அம்மாள் உணர்ந்த அன்பு மதியை அவருக்கு உயர்த்தி காட்டியது. தனக்காக துடிக்க இதுவரை மகன் மற்றும் மகள் போல வளர்ந்த நிலா மட்டுமே இருந்த அவருக்கு இப்போது மருமகளும், அளவு கடந்த அன்புவைத்திருந்த இளமாறனும் அவரது மனைவியும் கூட அவரது அருகில் இருந்து அவர்க்கு ஒரு துன்பம் என்ற போது துடித்த இந்த சொந்தங்களை பார்த்து மனதில் மிகவும் மகிழ்ந்து வந்தார்.

 

வேறு ஒரு பெண் ஆதிக்கு மனைவியாக வந்திருந்தாள் நிலாவோடு உண்டான உருவுமுறை மேலும் தன் மீதும் அக்கறை கொள்வாளோ என்ற எண்ணம் மேலோட்டமாக இருந்தது சிவகாமி அம்மாளுக்கு. ஆனால் மதி வந்த நாள் முதல் அந்த கவலை பறந்து போனது. நிலா ஆத்தியின் உறவு முறையை சரியாக் புரிந்து கொண்டது மட்டும் அல்லாது நிலாவுக்கு உற்ற தோழியாகவே மாறி போய் இருந்த மதியின் மீது தம்பி மகள், மருமகள் என்ற விஷயத்தை தாண்டி மதிப்பு ஏற்பட்டு இருந்தது என்றால், அவருக்காக இரவு முழுதும் கண் விழித்து, வேண்டிய பணிவிடை செய்த மருமகள் மீது பாசம் இன்னனும் கூடிற்று அவருக்கு. அதுவே அவரது முகத்தில் தவழ்ந்த நிம்மதிக்கும் தெளிவுக்கும் காரணம்.

 

இந்த கலக்கங்கள் தாய் மனதில் இருப்பதை அறிந்த ஆதித்யன்னுக்கு இப்போது தாயின் முகத்தில் தவழும் காரணம் புரியாமல் இல்லை. மதி யை நினைத்து தனது அன்னை நிறைவாக உணருகிறார் என்பதை புரிந்துக் கொண்ட ஆதித்யனுக்கு அவனது காதல் மனைவி மீது இன்னமும் காதல் கூடியது.

 

இரவு முழுதும் தூங்காத மதி 5 மணிக்கு பிறகே சற்று கண் அயர்ந்தாள், அதற்கு பிறகு தனது அன்னை யின் அருகில் அவனை கூட அனுமதிக்காமல் இளமாறன் பார்த்துக்கொளவும் ஆதி மனதில் சந்தோசம் குமிழியிட்டது.’

 

இந்த நிகழ்வுகளில் இருந்து நிஜத்திற்கு வந்தவன் அவளிடம் சிறு புன்னைகையுடன் காபியை பெற்றுக் கொண்டான். அதன் பின் மதிக்கு வேலை சக்கரம் கட்டி கொண்டது போல இருந்தது. அவளது வேலைகளை முடித்துக் கொண்டு மணியை பார்க்க அது காலை 8யை தொட்டிருக்க அவசரமாக நேற்று அவள் செய்துவைத்த வேலை நினைவு வரவும் அவளது அலுவலக தோழி ஒருத்தியை அழைத்தாள் மதி.

 

“ஹலோ, கீதா… ஹ்ம்ம் நான் கேட்டது நினைவு இருக்குதானே டா? உனக்கு அவுங்க குடும்பத்த நல்லா தெரியும்னு சொன்னதுனால தான் உன்கிட்ட இந்த உதவி கேட்டேன் டா… டிரஸ்ட் மீ… அந்த பொன்னுக்கு எந்த களங்கமும் வராது, அந்த பொண்ணோட பேரே வராது.. என்ன நம்பி அந்த பொண்ணோட அம்மாவையும் அன்னையும் கூட்டிட்டு வா பா….. ப்ளீஸ்…” என்று அவளது அலுவலகத்தில் வரவேற்பரையில் பணிபுரியும் அலுவலக தோழியான கீதாவிடம் பேசிவிட்டு கைபேசியை அணைத்தவள் இதுவரை திரட்டியை ஆதாரங்களை ஒரு கோப்பில் சரிப்பார்த்து அடுக்கி கொண்டு இருந்தாள்.

 

அவளது மனமோ சீக்கிரம் இந்த சிக்கலுக்கு விட காண வேணும் என்று உறுதி கொள்ள நினைத்தவள் இதுவரை பார்த்திருந்த கோப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்த முயன்று கொண்டு இருந்தாள். தற்செய்யலாக மணியை பார்த்தவள் அது நேரம் 9 என காட்டவும், 10 மணிக்கு கீத அவர்களை அழைத்து வந்துவிடுவாள் என்ற நினைப்பு வர வேகமாக தயார் ஆனவள் கிளம்ப எத்தனிக்க அதே நேரம் கிளம்பி அலுவலகம் செல்ல தயாராக வரும் தனது கணவனை பார்த்து ஒரு நிமிடம் அவனது கம்பீர தோன்றத்தில் நின்றுவிட்டாள்.

 

கருப்பு சட்டையும், பழுப்பு வெளிர் நிற கால் சட்டையும் அணிந்து, அவனது பாணியில் அந்த உயர் ரக கருப்பு கண் கண்ணாடியை வெகு நேர்த்தியாக அவன் அணிந்துக்கொண்டே படி இறங்கி வரும் அவனது ஆளுமை தோற்றத்தில் அவள் ஒரு நொடி அவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அவளின் அருகில் வந்து, அவனது பாணியில் அவனது இடது புருவத்தை ஏற்றி இறக்கி, “என்ன மதி? இன்னும் கிளம்பல?” என்று கேள்வியாக கேட்க, அவனை அவள் பார்த்த விதத்தை எண்ணி அவளே அவளுக்கு மனதினுள் ஒரு கொட்டு வைத்துவிட்டு, “இல்ல அதுவந்து… கிளம்பனும்…அல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு… இதோ கிளம்பிட்டேன்” என்று கூற ஆதியோ, “சரி எங்க போகணும்னு சொல்லு நான் ட்ராப் பண்றேன்…”என்று கூறிவிட்டு அவன் முன்னே செல்ல அவனோடு வாழ்க்கையில் பயணிக்க ஆசை கொண்ட மனது இப்போதைக்கு வண்டியிலாவது பயணம் செய்வோமே என்று எண்ணி அவனுக்கு ஈடுக்கொடுத்து வேகமாக நடைபோட்டாள்.

 

அவள் போகவேண்டிய இடத்தை கேட்டவன் அவள் ஒரு பிரபலாமான உணவகத்தின் பெயரை குறிப்பிடவும் கேள்வியாக அவளை பார்க்க, அதன் பொருள் உணர்ந்து “இல்ல, இங்க ஒருத்தர மீட் பண்ணனும்… வேலை விஷயமா…” என்று அவன் பார்வையின் கேள்விக்கு பதில் அளித்தாள்.

 

ஆதியின் மனமோ, “இது எல்லாம் நான் கேட்காமலே சொல்ற, ஆனா காதல மட்டும் இன்னும் ஏன் சொல்ல மாற்ற…” என்று எண்ணமிட அந்த நினைவை தற்போதைக்கு ஒதிக்கு வைத்தவன் அவள் சொன்ன வழியாக வண்டியை செலுத்தினான்.

 

அங்கே சென்றவன் அவளை இறக்கி விட்டுவிட்டு அவள் உள்ளே செல்வதை பார்த்தவன் வண்டியை வளைக்க அப்போது அவள் அமர்ந்திருந்த இருக்கையில் அவளது அடையாள அட்டை இருக்கவும் அதை கொடுப்பதற்காக அதை எடுத்துக்கொண்டு அவன் வண்டியை விட்டு இறங்கவும் அதே நேரம் அடையாள அட்டையை தவற விட்டதை உணர்ந்த மதி வேகமாக வாசலை நோக்கி விரைந்தாள்.

 

இருவரும் அடையாள அட்டையை தவறவிட்டதை ஒரு நிமிடம் முன்னதாக உணர்ந்திருந்தாள் மீண்டும் அந்த பெண் இருவர் நடுவிலும் வந்திருக்க மாட்டாள்.

 

அன்றும் இதே போல் தான், ஆதியை காண வந்த மதிக்கு முன்னால் காவ்யா அவனிடம் பேசுவதை காண நேர்ந்தது என்றால் இன்றும் அதே போல ஒரு சூழல். கணவனை நோக்கி வந்த மதியின் கண்களில் பட்டது காவ்யா ஆதியின் முன்னால் நின்று, “சா சாரி… தெரியாம…” என்று திக்கி திணறியபடி பேசிவிட்டு வேகமாக மதியை கவனிக்காமல் அவளை கடந்து உள்ளே சென்றுவிட்டாள்.

 

அவள் செல்லவும் மதி அந்த இடத்திற்கு வரவும், ஆதி காவ்யா மீது ஒரு அலட்சிய பார்வையை செலுத்திவிட்டு மதியை பார்த்து, “மதி, இந்தா உன் ஐ.டி கார்டு… நான் கிளம்புறேன்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, வேகமாக அந்த காவ்யாவை தேடி அந்த உணவகத்துக்குள் மதி விரைந்து சென்றாள்.

 

காவ்யா அமர்ந்திருந்த இடம் அடர் செடிகொடியினில் நடுவே அமைந்திருக்க அந்த செடிகளின் மறுப்பக்கம் அமைதியாக சென்று மதி அமர்ந்தாள்.

 

காவ்யா வின் பேச்சு அவளுக்கு தெளிவாக விழும்படி உட்கார்ந்துக் கொண்டவள் இன்று அவளிடம் இருந்து அன்று அடுக்கத்தில் நடந்ததை அறிந்துக் கொள்ள முடிவெடுத்தாள். ஆனால் அதற்கு அவசியம் இல்லாதது போல காவ்யாவே அவள் வாயால் நடந்ததை கூறுமாறு ஒரு சம்பவம் நேர்ந்தது.

 

சிறிது படபடப்புடன் காணப்பட்ட காவ்யாவிடம் அவள் உடன் வந்த தோழி, “என்னதான் ஆச்சு? கார் பார்க் பன்னிட்டு வரேன் முன்னாடி போனு சொன்ன இப்ப என்னடான பேயறஞ்ச போல உக்காந்துருக்க, என்ன டி நடந்தது?” என்று கேட்க காவ்யவோ ஒரு முறை வாசலை நோக்கி பார்த்துவிட்டு, “அது ஒன்னும் இல்ல டி, ஒரு முசுடு…. நான் முன்னாடி காலேஜ் படிகிறப்ப ஒருத்தன பணக்காரனு நினச்சு சுத்தவிட்டேன்.. அப்புறம் தான் தெருஞ்சது, சுத்துனது பணக்காரன் இல்ல அவனோட பிரின்ட் தான் பணக்காரனு… அவன் பேரு க்ரிஷ்ணவ்…. சரினு உண்மை தெரிந்ததும் ஆள மாத்தி அவன்கிட்ட காதல்னு சொல்லி போனேன்… ஆனா அவன் கண்டுபிடிச்சி கிட்டத்தட்ட என்ன அடிக்கிற அளவுக்கு வந்துட்டான் டி, ஒருவழியா அங்கு இருந்து தப்புச்சு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு… அடுத்து இவன பாக்கவே கூடாதுன்னு நினச்சேன்… எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருக்க டைம்ல போய் இவன பாத்துட்டேன் டி.. கார் பார்க் பண்ணிட்டு வரும் பொழுது தெரியாம அவன் மேல போய் இடுச்சுட்டேன் டி அதான் தப்புச்சா போதும்னு சாரி சொல்லிட்டு நிக்காம வந்துட்டேன்” என்று படபடவென மூச்சு வாங்கிகொண்டே கூறினாள் காவ்யா.

 

அவள் தோழியோ, “ஹே இதுல்லாம் சகஜம்தான டி? இதுக்கு எதுக்கு அவன் இவ்ளோ சீன் போடுறான்… சரி அன்னைக்கு அவன் அடிக்க வந்தான்னு சொன்னால அத யாரும் பார்க்கலியே… இதுவே வேற    டைம்ஆ இருந்துருந்த நீ நிச்சயம் ஏதாச்சும் சொல்லிருப்ப கல்யாணம்னால வம்பு வேணாம்னு வந்துட்டியா? இல்லனா இதுக்கு முன்ன உன்ன அட்வைஸ் பண்ணினவன ஓட ஓட விரட்டி அடிச்சியே … இப்ப என்னடான இப்படி வந்து உக்காந்துருக்க?” என்று கேள்வியாக முடித்தாள்.

 

“ஐயோ நீ வேற… இவன் சாதாரண ஆள் இல்ல, இவண்ட கொஞ்சம் தள்ளி இருக்குறது தான் எனக்கு நல்லது… இப்ப பாத்துருக்க இடத்துல என்ன பத்தி எந்த தப்பான தகவலும் போய்ட கூடாது டி… அவுங்க வீட்ல என்ன தப்பா புருஞ்சுக்க கூடாது, அப்புறம் நான் ஆசைப்பட்ட பணக்கார வாழ்க்க எப்படி கிடைக்கும்… இப்ப போய் இவண்ட வம்பு வச்சுக்கிட்டு நானே வம்ப விலைக்கு வாங்க விரும்பல…. ஹ்ம்ம் வேற என்னமோ கேட்டியே, அடிக்க வந்தப்ப யாரும் பார்க்கலியானு… என் காலேஜ் பொண்ணு ஒருத்தி பார்த்துட்டா…. ஆனா அவ முழுசா நாங்க பேசினத கேட்கல…அதுனால கதைய மாத்தி சொல்லிட்டேன்…அவளும் ஒரு லூசு அப்படியே நம்பிட்டா… ஹ ஹ… இல்ல இல்ல அவ நம்பல இந்த காவ்யோட ஆக்டிங் நம்ப வச்சது…” என்று படபடப்பு மறந்து அவளை பற்றி அவளே பெருமை கூறினாள்.

 

இதை தனது தோழியுடன் கூறி அவள் பெருமை அடித்துக் கொண்டு இருக்க இதை அனைத்தையும் மறைவாக கேட்டு கொண்டு இருந்த மதிக்கு உச்சந்தலை வரை கோவம் துளிர் விட ஆரம்பித்தது.

 

கோவம் தான் மதிக்கு ஆனால் காவ்யா மீது மட்டும் அல்லாது அவள் மீதே கோவம். எத்தனை முட்டாள் தனமாய் தனது காதலை கூட வெளிபடுத்தாமல் ஒரு நாடககாரியின் பேச்சை நம்பி பிரிந்து வந்துவிட்டாள். அன்று சொல்ல முடியாமல் போன காதல் இன்று வரை அவளால் சொல்லவே முடியவில்லையே. அது அவளது நெஞ்சில் நெருஞ்சியாய் உறுத்த தவியாய் தவித்தாள் மதி.

 

காவ்யா மீது சந்தேகம் வந்த போது காவ்யா தான் தவறு செய்தாள் என்ற முழுமையான ஆதாரம் இருந்த போது கூட க்ரிஷ்ணவிடம் தோழியாக பழகி மெதுவாக அவள் தரப்பை உணர்த்தி காதலை சொல்லவேண்டுமென நினைத்திருக்க, அதற்கான தையிரியமும் கூட அவளிடம் இருந்தது. ஆனால் இப்பொழுது காவ்யா வாயிலாய் வந்த தகவல் மதிக்கு குற்ற உணர்ச்சியை தூண்டியது. அவன் முன் அதாவது தவறு செய்யாத ஆதித்யன் முன் பேசுவதற்கு, குற்ற உணர்ச்சி தலை தூக்கியதோடு சேர்த்து தையிரமும் அடியோடு இழந்து விட்டிருந்தது மதிக்கு. அவளது மனமோ, “இப்ப நான் என்ன செய்வேன்… இவள பத்தி உண்மை தெரியாட்டி கூட, இவள் வாய் மொழி ஆதாரம் இல்லாமலே உங்க மேல நம்பிக்கை வச்சேன்னு ஆதித்யன் கிட்ட பேச ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கும், இனி போய் எப்படி காதல சொல்லுவேன்…? ஒரு வேலை என்னோட கிருஷ்னவ் உண்மை தெருஞ்ச பிறகு தான வந்துருக்க, கல்யாணம் ஆனா உடனே சொல்லி இருந்த கூட உன்ன மன்னிச்சுருப்பேன்… நம்பிக்கை இல்லாத உன் உறவு வேணாம்னு சொல்லிட்டா நான் என்ன செய்வே? நண்பனுக்காக இவள அவரு கண்டிக்க போய் அவரையே நான் தப்பா நினச்சுட்டேனே” என்று குற்ற உணர்ச்சியில் புலம்பி தவித்துக் கொண்டு இருந்தது.

 

ஆனால் அவளது மறு மனமோ, “உன்ன நீ தண்டிக்கிறது, க்ரிஷ்ணவ்ட உன் காதல சொல்றதுன்னு எல்லாமே அதுக்கு அப்புறம்… இத்தன வருசமா யாருனால இந்தன கஷ்டப்பட்டியோ அவ உன் கண் முன்னாடி இருக்கா. இப்ப விட்றாத” என்று கூற அவள் சரடென்று எழுந்து அவள் முன் நின்றாள்.

 

திடிரென தங்களது முன் ஒரு பெண் எழுந்து நிற்கவும் முதலில் இருவரும் புரியாமல் பார்த்து பிறகு சில நொடிகளில் ஒருவாறாக காவ்யா சுதாரிக்க முதலில், “மதி” என்று அழைத்து சிறு புன்னைகை உதிர்க்கவிருந்த அவள் உதடு சட்டென்று உறைந்தது. சற்று முன் அவளை (மதி) பற்றி பேசியதை மதி கேட்டிருப்பாளோ என்று.

 

அவள் கேட்டுவிட்டாள் என்ற உண்மையை பறைசாற்றும் விதமாக மதியின் கண்கள் கோவத்தில் கோவையாக சிவந்திருக்க ஒரு நிமிடம் தடுமாறிய காவ்யா எழுந்து நிற்க அவள் மனதிலோ, “அன்னைக்கு இவட்ட பொய் சொன்னேன்..ஆனா இவ எதுக்கு இவ்ளோ கோவ படனும்… ஒரு வேலை இது கோவம் இல்லையோ… பேசி பார்ப்போம்” என்று எண்ணமிட்டவள் வாய்திறந்து, “மதி… மதிதான? எப்படி இறுக்க?” என்று கேட்க, வார்த்தையை உதிர்த்த உதடுகள் ஒட்டும் முன் மதியின் கை, காவ்யாவின் கன்னத்தில் பதிந்திருந்தது.

 

அறைந்த சப்தம் கேட்டு அங்கிருந்த அனைவரும் அவர்களை திரும்பி பார்க்க காவ்யாவிற்கு மதி அறைந்ததனால் வந்த எரிச்சலை விட அவமானத்தில் பட்ட வேதனை மிக பெரிதாக தெரிந்தது.

 

அதே சமயம் மதியின் அலுவலக தோழி கீதவும் அங்கே வர, அவள் முதலாவதாக வர ,மதி பார்க்க வந்த நபர்கள் பின் வர, நடந்த இந்த நிகழ்வை கீதா மட்டுமே பார்த்திருந்தாள். அவள் வேகமாக மதியின் அருகில் வந்து, “மதி என்ன ஆச்சு?, எல்லாரும் பார்க்கிறாங்க டா” என்று அடிக்குரலில் கூறிக்கொண்டே மதியை இழுக்க, காவ்யாவை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்த மதி அவளை பார்த்து, “இப்போ நான் உன்ன எதுக்கு அடிச்சேன்னு தெரியாதுல?…” என்று கேட்க, கண் கலங்கிய நிலையில் நின்று இருந்த காவ்யா ஒன்றும் சொல்லாமல் ஆத்திரமுடன் மதியை பார்த்தாள்.

 

“என்ன தெரியலையா?” என்று மதி குரலை உயர்த்தி கோவத்துடன் கேட்க, காவ்யவோ, “ஹே…உனக்கு எவ்ளோ தைரியம்?’ என்று பதிலுக்கு குரல் உயர்த்த, மதி தனது கையை அசைத்து, “இரு… நீ என்கிட்டே அடுக்கத்துல பொய் சொன்னதுக்காக இல்ல… அப்புறம் வேற எதுக்காகனு யோசிக்கிறியா?” என்று கேட்டுவிட்டு மேலும் அவளே தொடர்ந்து, “இப்ப கொஞ்சம் முன்னாடி என் புருஷன.. அதாவது என்னோட கிருஷ்ணவ மரியாத இல்லாம பேசுன பாத்தியா? அதுக்கு தான்… இது போதுமா? இல்ல நான் அவர்கிட்ட….” என்று வாக்கியத்தை முடிக்காமல், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தத்துடன் கூறவும் மதி கூறிய அந்த வார்த்தைகளில் இருந்து யூகித்து கொண்டவள் இப்பொழுது சற்று கோவத்தை கட்டுபடுத்தி பின் வாங்க முயன்றாள்.

 

“க்ரிஷ்ணவ் உன்னோட ஹஷ்பண்டா?” என்று உள்ளே போன குரலில் காவ்யா கேட்க, தலை நிமிர்த்தி கர்வமாக காவ்யாவை பார்த்த மதி, அவள் அருகில் வந்து, “இந்த அடி உனக்கு எப்பயும் நினைவு இருக்கட்டும்.. அப்புறம் உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்” என்று நக்கல் கலந்த, கல்யாணத்தை நிருத்தகூட முடியும் உனது உண்மையான சுயரூபத்தை சொல்லி என்று சொல்லபடாத மிரட்டலுடன் மதி கூறிவிட்டு 2 எட்டு நடந்தவள் கீதாவுடன், மீண்டும் நின்று வெகு அலட்சியமாக ஒருமுறை திரும்பி பார்த்து…, “பாத்து இரு…” என்று சொல்லிவிட்டு சென்று விட, ஆதித்யனை பற்றி அறிந்ததால் மேலும் கிடைக்கவிருக்கும் பணக்கார வாழ்க்கை பறிப்போய்விடும் அபாயமும் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாத கையாள் ஆகா தனத்துடன் போகின்ற மதியை பார்த்த காவ்யா அவமானத்தில் கூனி குறுகி நின்று இருந்தாள்.

அத்தனை கோவமும் ஆவேசமும் ஏன் அவள் ஒரு பொது இடத்தில் இருகின்றாள் என்ற எண்ணம் கூட வராமல் காவ்யாவை விட்டு விலாசியவள் அவள் செய்த தவறுக்கு இந்த அவமானம் கூட போதாத ஒன்றே என்று எண்ணினாள். ஆனாலும் காவ்யா செய்ததுக்கு தண்டனை கொடுத்த மதியால், தன்னுடைய க்ரிஷ்ணவ் செய்யாத செயலுக்காக அவனை விட்டு தனது காதலை சொல்லாமல் வந்து, காவ்யாவின் பேச்சை நம்பியை முட்டாள் தனத்திற்கு தனக்கு என்ன தண்டனை என சிந்தித்து ஆதியிடம் பேசவும் சக்தி அற்றவளாகிப்போனாள் ஆதியின் சரி பாதி.

 

அவள் சிந்தனைய கலைக்கும் விதமாய், கீதாவின் குரல் இருந்தது.

 

சம்பவம் நடந்த இடத்திலிருந்து தள்ளி அமைக்கப்பட்டிருந்த ஒரு செயற்கை கூடாரத்தின் கீழ், அமர்ந்திருந்த பின் இருவதுகளில் இருந்த ஒரு இளைஞனும், முன் 40களில் இருந்த ஒரு பெண்ணும் அமர்ந்திருக்க மதியிடம் கீதா அவர்களை அறிமுகம் செய்துவைத்தாள்.

 

அதே போல அந்த கீதா அவர்கள் இருவரிடமும், “இது தான் மதி அம்மா, நம்ம சுகன்யா பத்தி விசாரிக்க, ஆனா நீங்க பயப்படாதீங்க…. இவள நீங்க முழுக்க நம்பலாம், கடைசியா சுகன்யாக்கு நடந்தத மட்டும் சொல்லுங்க.. நம்ம பொண்ணு பேரு வெளிலவராது, கண்டிப்பா நம்ம சுகு பத்தி ஏதாச்சும் தகவல் நமக்கு தெரியவரும்…. நீங்க என்மேல நம்பிக்கை வச்சு இங்க வந்துருக்கீங்க, அதே போல என் மேல நம்பிக்கை வச்சு சொல்லுங்க அம்மா, அண்ணா….” என்று கூறினாள்.

 

ஆம் பாதிக்கப்பட்ட 48 நபர்களுள் இந்த சுகன்யா குடும்பமும் ஒன்று…

கனத்த அமைதியின் பின் சிறு கரகரப்போடு காணமல் போனதாக சொல்லப்படும் சுகன்யாவின் அண்ணன் மதியிடம் பேச தொடங்கினான், “வணக்கம் மா, கண்டிப்பா என் தங்கைக்கும் உன் வயசுதான் இருக்கும்… அன்னைக்கு அவ சந்தோசமா தான் கிளம்பி போனா… அவளோட டூ வீலர்ல, கூடவே அவ தோழியும், நான் என்னோட ஆபிஸ் கிளம்ப அவுங்களுக்கு பின்னாடி என்னோட வண்டியில போனே..அப்பா தான் அது நடந்தது, ஒரு விபத்து அதுல என் சுகுக்கு கொஞ்சம் லேசான அடி, ஆனா அவளோட தோழிக்கு கொஞ்சம் அடி பலம்… கண் மூடி திறக்கும் நேரத்துக்குள்ள நடந்த விஷயத்துல சுதாரிச்சு போறத்துக்குல அந்த பெண்ணிற்கு நிறைய ரத்தம் மா… அடிச்சு போட்டு போய்ட்டானுங்க… ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணினாங்க அங்க இருந்தவங்க ஆனா அது வர தாமதம் ஆகவும், போக்குவரத்துல இருந்த வண்டி ஒன்னு, அதுல ஒரு வயசான அம்மா..அவுங்க லிப்ட் தர்றேன்னு சொல்லவும் ஆபத்துக்கு பாவம் இல்லன்னு அந்த பொண்ணையும் என் தங்கச்சிய அந்த பொண்ணுக்கு துணையா அனுப்பிட்டு ஆசிடெண்டாகி கிடந்த வண்டிய ஓரங்கட்டிட்டு அவுங்கள பின்தொடரலாம்னு நினச்சு நான் அவுங்கள முன்னாடி அனுப்பினே..காருல இருக்குறது ஒரு வயசான அம்மானு நம்பி, நான் வேகமா கிளம்பி பின்னாடியே கொஞ்சம் தூரம் போய் பார்த்தா, அந்த வண்டி போன சுவடே தெரியலமா…எங்க போச்சு என்ன ஆனாங்க ஒன்னுமே தெரியல மா.. ஒரு நாய் மாதி ஒவ்வொரு ஆஸ்பத்திரியா ஏறி இறங்குனே… போலீஸ்க்கு போய்டேன்…ஆனா இதுவர எந்த தகவலும் இல்ல… போலீஸ்ல என் தங்கச்சி யாராச்சும் லவ் பண்ணுச்ச? ஓடிருச்சா இப்படிலாம் கேட்டு எங்க கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்துட்டாங்க… இதுவர எந்த தகவலும் இல்ல 2மாசம் ஆச்சு… நீ பத்ரிக்க கார பொண்ணு… இருந்தாலும் உன்ன நம்பி இந்த தகவல் தரேன் மா… என் தங்கச்சி பேருக்கு எந்த களங்கமும் வந்துராம அவள பத்தி தகவல் தெருஞ்சா எங்களுக்கு சொல்லுமா” என்று கெஞ்சலுடன் முடிக்க அந்த பெண்ணின் அன்னையோ “உனக்கு புண்ணியமா போகும் மா.என் பொண்ண எப்படினாச்சும் கண்டுபிடிச்சு கொடு மா” என்று மதி பத்திரிக்கை நிருபர்மட்டுமே துப்பறியும் நிருபரோ காவலாளியோ இல்லை என்பதை கூட அறியும் மன நிலை இல்லாமல் அவளிடம் கண்ணீர் உதிர்த்து கேட்க மதி அவள் துயரம் மறந்து அவர்கள் துயரம் உணர்ந்து உடைந்து போனாள்.

 

இதற்கு மேல் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை புரிந்துக் கொண்ட மதி அவர்களிடம் ஆறுதலாகவும், நம்பிக்கை யாகவும் சிறிது பேசிவிட்டு கீதாவிடம் இது மிகவும் ரகசியமாக இருக்கவேண்டும் என்று சிறு நட்பு கலந்த வேடுதளுடனும் மதி அங்கிருந்து சென்றாள்.

 

அவள் இதுவரை சேகரித்த ஆதாரத்தில் இருந்து அவளுக்கு ஒரு யூகம் தோன்ற அவள் இந்த சிக்கலை அவிழ்க்கும் ஒரு நுனியை கண்டு கொண்டிருந்தாள்.

 

இதுவரை மறைந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆகா இருக்க, அதில் இவள் இதுவரை சந்தித்த நபர்கள் கூறுவது ஒருவரோடு சேர்த்து மற்றொருவரும் காணமல் போயிருப்பது…. அன்று சைதாபேட்டையில் சந்திதவரின் மகனும், மகனின் காதலியும், இன்று சுகன்யாவும் அவளது தோழியும்.. இதே போல வேறு சிலரது நினைவு வர அவள் மனதில், “ஒருவேள இது ஒருத்தர்க்கு குறிவச்ச நடவைக்கையோ, மற்றொருவர் தற்செயயல்ல இதுல மாட்டி இருப்பங்களோ, அப்படினா 48பேர் ல இது போல எத்தன பேரு இதுல அனாவசியம் மாட்டி இருப்பாங்க? …. அப்படி நான் நினைக்கிறது சரியாய் இருந்த அனாவசியமா மாட்டிகிட்டவங்களுக்கு ஆபத்து வருவதற்கு வாய்ப்பு குறைவு தானோ… சரி இந்த சுகன்யாயோட தோழி வீட்டுக்கும் போய் நம்ம விசாரிக்கலாம்” என்று எண்ணமிட்டபடியே அந்த வீட்டின் முகவரியை தேடி பயணித்தாள்.

 

அதே நேரம் அகிலன் அவனுக்கு நம்பகமான அவன் கீழ் இருக்கும் இரு காவலர்களிடம் வெகு தீவரமாக பேசிக் கொண்டு இருந்தான். அவர்களும் அவனுக்கு ஈடு குடுக்கும் விதம் அவர்களுக்கு தெரிந்த பதிலை கூறிக் கொண்டு இருந்தனர்.

 

“ஆமா சார், கொஞ்சம் மாசங்களா வந்த காணாம போன கேஸ் எல்லாம் அந்த அதிகாரிதான் பாத்துக்கிட்டு இருந்தாரு… ஆனா அதுல எந்த முன்னேற்றமும் இல்ல, அதுனால தான் ரகசியமா இந்து டீம் பார்ம் பண்ணி உங்ககிட்ட பொறுப்ப கொடுத்துருக்காங்க….” என்று ஒருவர் கூற மற்றொருவர், “அது மட்டும் இல்ல சார் மெஜாரிட்டி காணாம போனது பொண்ணுங்க.. இந்த ஏரியால பிரபலமான ஒரு பொம்பள இருக்கு அதுக்கு தொழிலே பொண்ணுங்க வச்சுதான், பயங்கர அடாவடி… ஆனா குடும்பத்து பொண்ணுங்கள தூக்குமானு….” என்று இழுக்கவும் அவர்கள் சொல்வதை நிதனாமாக உள்வாங்கி கொண்டு இருந்தான் அகிலன்.

 

மேலும் அவர்கள் சில விஷயங்கள் விவாதிக்கவும் அதன் பிறகு இருக்கையை விட்டு எழுந்த அகிலன் அங்கும் இங்கும் நடந்து விட்டு பிறகு கம்பீரமாக திரும்பி அவர்களை பார்த்து, “நீங்க சொல்ற அந்த லேடிய பாலோவ் பண்ணுங்க…. அவுங்க இத பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நம்ம உறுத்திய நம்பமுடியாது.. ஏன்னா நடந்த எல்லாமே அந்த ஏரியாவ சுத்தி நடந்துருக்கு, அதோட அந்த அதிகாரி ஏன் இந்த கேஸ்ல ஆர்வம் காட்டலன்னு நம்ம தெருஞ்சுக்கணும், அவருக்கே தெரியாம அவர கவனியுங்க… பாத்து நம்ம கவனிக்க போறது ஒரு போலீஸ்அ அதுனால எச்சரிக்கையா இருங்க… நம்ம இதுல இன்வால்வ் ஆகி இருக்கோம்னு வெளியில தெரியாம பாத்துக்கங்க… 48 பேரு என்ன ஆனங்கனு நம்ம கண்டுபிடிச்சே ஆகணும்” என்று கூறிவிட்டு அவர்களை அனுப்பியவன், இதுவரை சேமித்த தகவல்களை பார்வையிடலானான்.

 

அதே நேரம் ஆதித்யனும் இதுவரை அந்த 2 உளவாளிகளின் தொலைபேசி எண்ணை கண்காணித்ததில் கிடைத்த தகவல்களை பார்த்துக்கொண்டு இருந்தான். சற்று முன்பு அகிலன் அனுப்ப சொன்னதகா அந்த தகவல்களை அவனது மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்க வந்த தகவல்களை அவன் ஆராய்ந்துக் கொண்டு இருந்தான். அதிலிருந்து யார் யாருக்கு எப்போது அழைத்தார்கள், யார் யாரிடம் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது என்று பார்க்க அதில் கிட்ட தட்ட 50 பேர்களுக்கு மேல் இருக்க அந்த 50 பேர்களில் யார் இந்த உளவாளி வேலைக்கு கட்டளை இட்டது என்பதை அறிய சில நிமிடங்கள் யோசித்த ஆதித்யன் உடனடியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்ற வெகுவேகமாக அலுவலக பணியை முடித்து வீட்டிற்கு பயணித்தான்.

 

இப்படி அகிலன், மதி, ஆதித்யன் என்று ஒவ்வொரு கோணத்தில் அவர்களது வழியில் முன்னேற மதி மட்டும் அன்று ஒரே நாட்களில் பாதிக்கப்பட்ட மூவரை சந்திருக்க அதிலிருந்து அவளுக்கு உதவி புரிய வந்த வண்டியின் எண் திருவண்ணாமலையை சேர்ந்த எண் என்பதை ஒருவர் மூலம் அறிந்துக் கொண்டாள் ஆகினும் அந்த வண்டியின் முழு எண் அவளுக்கு கிடைக்க வில்லை. 

அகிலனோ, அந்த குறிப்பிட்ட பகுதியில் பெண்களை வைத்து தொழியில் செய்யும் அந்த அலமேலுவை பற்றி மேலும் விசாரணையில் இறங்கியதோடு மட்டும் அல்லாது, பெண்கள் தவிர காணமல் போனவர்களில் ஆண்களும் பெரியவர்களும் கூட இருப்பதனால் அவளுக்கு வேறு யாருடனாவது தொழில் தொடர்பு இருகின்றதா என்ற கண்ணோட்டத்தில் ஆராய்ந்துக் கொண்டு இருந்தான். 

வழக்கு சம்மந்தப்பட்ட தீவிர யோசனையில் இருந்த மதியின் எண்ணத்தை கலைக்கும் விதமாய் ஆதித்யன் மதியின் கை பேசிக்கு அழைக்க அதை எடுத்து காதுக்கு கொடுத்தவளின் தொண்டைக்குள் வார்த்தை சிக்கி கொண்டது. காலையில் நிகழ்ந்த நிகழ்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் வர, அவளது குற்ற உணர்ச்சி அவள் முன் ஒரு பெரிய பூதமாய் காட்சி அளித்தது. 

ஆதித்யனிடம் இப்பொழுது சகஜமாக பேசுவதற்கே அவள் கூனி குறுக, அவன் முகம் பார்த்து காதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தவிடுபுடியாகி, பணியில் புயலாய் வேலை பார்ப்பவளின் நெஞ்சம் அவனிடம் அவள் காதலையும் அவள் செய்த பிழையையும் சொல்ல துனிவில்லாததால் அவள் நெஞ்சம் புயலில் சிக்கிய மலராய் தலை கவிழிந்திருந்தது. 

அவள் எங்கே இருகின்றாள், எப்போது வருகின்றாள் என்ற தகவலை கேட்க அழைத்த ஆதித்யனுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் அந்த  ஒற்றை ரோஜா மலர்.

 

அவளிடம் விவரங்களை கேட்டவன், சினேகனை அழைத்து அவனது பணிகளையும் கேட்டு கொண்டவன் அவள் தகவல் சேகரிக்க போகும் போது அவனால் முடிந்த சமயங்களில் அவனையும் உடன் செல்ல பணிந்தான். அதற்கு சிநேகனோ அவனும் இதே வழக்கு தகவல் சேகரிப்பில் இருப்பதானால் அவனால் நிச்சயம் மதியை கண்காணிக்க இயலும் என்று கூற ஆதித்யன் தனது வீட்டில் அலுவல் அறையில் அகிலன் உதவி மூலம் கிடைத்த தகவல்களை மீண்டும் பார்வையிடலானான். 

அடிகடி தொடர்புகொண்டுள்ள எண்களை மட்டும் பிரித்த ஆதித்யன் சிவப்பு மை கொண்டு அதிலிருந்து 5 நபர்களை மட்டும் தனியாக எடுத்து குறித்துக் கொண்டான். பிறகு அந்த 5 எண்களுக்கும் எப்பொழுது எந்த நேரங்களில் தகவல் போய் இருகின்றது என்பதையும் குறித்துக் கொண்டவன், அவனது கண்காணிப்பு கமெராவில், அந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினாலும் அந்த 2 கண்கானிப்பவர்களும் உடனடியாக யாருக்கோ தகவல் தெரிவிக்கும் காட்சிகளை, அந்த கமெரா பதிவுகளில் பார்த்த ஆதித்யன் அந்த கைபேசி தகவல் காகிதத்தில் இருக்கும் குறிப்பிட்ட 5 எண்களுக்கும் அழைப்புகள் சென்ற நேரத்தை கணக்கிடலானான். 

அந்த 5 எண்களில் இருந்து வீரமாறனும், தன்டாயுதபானியும் உளவு சொல்ல கைபேசி பயன்படுத்திய நேரத்தை கணக்கிட்டு ஆதித்யன் 3 எண்களை மட்டும் பிரித்து எடுத்து வைத்தான். அவனது அறையில் தொங்க விட பட்டிருந்த வெள்ளை பலகையில் அந்த 3 எண்களையும் அதற்கு உரிய பெயர்களையும் எழுதலானான். 

கூலிபடையை சேர்ந்தவன் அழைத்திருந்த எண்  விஜய ராஜசேகரன் என்ற நபரோடு தொடர்பில் அடிகடி இருந்து இருக்க, தன்டாயுதபானியின் எண்னோ பழனிவேல் மற்றும் அலமேலுயுடன் அடிகடி பயன்பாட்டில் இருந்து வந்ததாக அந்த தகவல் கோப்பு கூறியது. 

பழனிவேலை மட்டும் அறிந்திருந்த ஆதித்யன், அலமேலுவும் விஜய ராஜசேகரன் என்று சொல்லபடுகின்ற இவனும் யார் என்ற யோசனையில் ஆழ, அப்போது சரியாக மதியின் அழைப்பு அவனுக்கு வந்தது. அழைப்பின் சப்தத்தில் சிந்தனையில் இருந்து கலைந்தவன் நேரத்தை பார்க்க அது இரவு 8 மணி என்று காட்ட மதி இன்னமும் வராமல் தொலைபேசியில் அழைக்க காரணம் என்ன என்று சிந்தித்துக் கொண்டே அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன், மதியின் “க்ரிஷ்ணவ்” என்ற அழைப்போடு கைபேசி அழைப்பு நின்று விட மீண்டு முயன்று இணைப்பு கிடைக்காமல் போகவே புயலென அவன் அறை விட்டு கிளம்பியபடியே, படிகளில் இறங்கி கொண்டே சினேகனுக்கு தொடர்பு கொள்ள கைபேசி எடுத்தான்.