Advertisement

முகிழ் – 8

 

இனியன் அவளை, அவளின் வீட்டு தெரு முனையில் விட்டு விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் இனியன் அகன்றான்.

 

மதி தாமதமாக வருவது வழக்கமென்றாலும் இன்றும் மணி இரவு 12.30 தொட்டது மதியின் அன்னைக்கு மட்டும் அல்லாமல், மதியின் தந்தைக்கும் கவலை அளித்தது. ஆயினும் மதியின் களைத்த முகம் கண்டு அவளிடம் ஏதும் கேட்காமல், உணவளித்து உறங்குமாறு சொன்னார்கள்.

 

மதியும் விட்டால் போதுமென அகன்றாள். அறையினுள் நுழைந்தது முதல் அந்த ரௌடிகள் பற்றியே யோசித்து விட்டு அப்படியே கண் அயர்ந்தும் போனாள்.

 

காலையில் கண் விழித்தது, இனியனின் குருஞ்செய்தியில்தான். அதில் இருந்த செய்தி இது தான்குட் மார்னிங், & டேக் கேர்

 

அதை பார்த்துவிட்டு, பதிலனுபியவள் அந்த எண்னை “AGC” என்று பதிவு செய்து வைத்தாள். ஏனோ இனியனை நல்ல மனிதன், தக்க நேரத்தில் உதவிபுரிந்தவன் என எண்ணியவள், அவனுடன் தொழில் தொடர்பான பழக்கம் மட்டுமே என்று எண்ணினாள். ஆதலாலே “AGC“என்று அதாவது “Adhithiyan Group of Company” என்று பதிவு செய்திருந்தாள்.

 

ஆனால் மதி இனியன் செய்த உதவியை மறக்கவில்லை, இனியிடம் அவன் தோள் காயம் பற்றியும் கேட்க வும் மறக்கவில்லை. அது மிக லேசான கீறல் என்பதால், சம்பவம் நடந்த 4 நாட்களிலே காயம் முழுதாக குணமடைந்தது என்பதை அறிந்துக் கொண்டே பிறகே மதி சற்று நிம்மதியாக உணர்ந்தாள். அதன் பிறகு மதி இனியனிடம் அவளாக பேசமுற்படவில்லை.

 

அதன் பின் வந்த நாட்களில் மதி ஆதித்யனை சந்திக்கவில்லை. ஆனாலும் அவனை சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை. அவளால் மட்டும் அல்ல அவள் நிறுவனத்தில் வேலைப் பார்கின்ற அத்தனை பேருக்கும். காரணம் சினேகன்.

 

ஆதித்யன் சார் இப்படி செய்தார், அப்படி செய்தார், இந்த கட்டுரை (Article) எழுதி உள்ளார், அவரது வலைதளத்தில் (Website) இப்படி பதிவிட்டுள்ளார் என இரண்டொரு நாட்களுக்கு ஒரு முறையேனும் சினேகன் பேசி விடுவான்.

 

பெண்களுள் பலர் அவனின் விசிறியாகி போனார், ஆண்கள் கண்களில் பொறாமை துளிர்விட்டது ஆதித்யனின் பெயரில்.

 

மதி அவளது அந்த வழக்கு பற்றி யாரிடமும் கூறாமல் மெளனமாக பணியில் ஈடுப்பட்டு இருந்தாள். இதுவரை, அதாவது கடந்த 40 நாட்களாக அவள் அயராது உழைத்தும் அவளால் 8 குடும்பத்தினரிடம் மட்டுமே நெருங்க முடிந்தது.

 

இந்த 40 நாட்களில் அவளுக்கு இனியனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துக் கொண்டே தான் இருந்தது. பெரிதாக ஒன்றுமில்லை காலை வணக்கம், இரவு வணக்கம், வீட்டிற்கு போய்விட்டா யா, பணி முடிந்ததா, எங்கே இருக்கிறாய் அவ்வளவே. மதி அத்தனைக்கும் சற்று தாமதமாகவே பதிலளிபாள். சில நேரம் அதை மறந்தே போனதும் கூட உண்டு.

 

ஆனால் ஏனோ இந்த ஒருவார காலமாக இனியனிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. மதியும் அதை பெரிது படுத்தவுமில்லை.  நாம் சரியாக பதில் அனுப்பாததால், இனியனும் அனுப்பாமல் இருதிருக்க கூடும் என்று எண்ணியதோடு சரி, மதி அதை மனதிற்கு எடுத்துச்செல்லவில்லை.   

 

இனியனின் விஷயங்களை மனதில் போடாதவள், ஆதித்யனின் அசைவுகளைக் கூட மனதில் சேமித்திருந்தாள். அது தான் அவளது மன வேதனைக்கு காரணம்.

 

இரண்டுநாள் கழித்து மதியின் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் தோழியின் திருமணம். அது தாம்பரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்கவிருக்கின்றது. மறுநாள் மாலையில் வரவேற்பு. மதியின் சக அலுவலர்கள் அனைவரும் அதற்கு செல்ல திட்டமிடலானர்.

 

மதி அந்த கேஸ் விஷயமாக மூழ்கி இருந்ததால், அவர்களின் பேச்சில் கவனம் செலுத்தவில்லை. அவள் முன் நின்றுக் கொண்டு அவளையும் திருமணதிற்கு வரும்படி அழைத்த சினேகன் ஏதோ புரியாத மொழி பேசுபவன் போல தோன்றிட்டு மதிக்கு.

 

ஒருவழியாக, சினேகனின் பேச்சு அவளுக்கு புரிய ஆரம்பிக்க அவளுக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவளும் அவர்களுடன் கிளம்ப மனதளவில் தயாராகிவிட்டாள்.

 

திருமண வரவேற்பு நிகழுமிடம்:

 

அன்று மதி புடவை அணிந்திருந்தாள். அவளது வண்டியில் வராமல் தன் தந்தையுடன் காரில் வந்தவள், மண்டபத்தின் அருகில் இறங்கிக் கொண்டு வரும் பொழுது கால் டாக்ஸியில் வந்துவிடுவதாக கூறி அவரை அனுப்பிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

 

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நடைபாதையில் ஒரு மலர் கால்முளைத்து வந்தது போல வந்துக் கொண்டிருந்தாள். அங்கே இருக்கும் பலரது கண்களும் மதியின் மதி முகத்தில் நிலைத்தது.

 

காஷ்மீர் ரோஜா இதழ் நிறத்தில் சில்க் காட்டன் புடவையும், அதன் முந்தானை பகுதியில் சிறு சிறு கட்டங்களாக பன்னீர் ரோஜா இதழ் நிறமும் கலந்திருக்க, அதற்கு ஏற்ப அதே பன்னீர் ரோஜா இதழ் நிறத்தில் இரவிக்கையும் (Saree Blouse) அணிந்து, அவளின் மணி கழுத்தை ஒட்டினாற்போன்று இலை இலையாக கோர்த்து இருப்பது போல ரூபி கற்களினாலான சிறு அட்டிகையும் (Necklace) காதில் ஒரு சிறு வலயம், வலயத்தின் அடியில் ஒரு அழகிய சிறிய குடைபோல் விரிந்த ஜிமிக்கியும் அணிந்து காது தொங்கட்டான்கள் ஆட உயிருள்ள ஓவியமாய் நடந்து வந்தாள் மதி.  

 

அவள் அடர் கூந்தலை அள்ளி முடியாது, வலப்பக்கமாக வகுடெடுத்து ஒரு சில முடி முள் (Hair Pin) கொண்டு காதோர கூந்தலை அடகியவள் மீதி கூந்தலை தளர்வாக விட்டிருந்தாள்.

 

அவள் நடக்கும் பொழுது அவள் குடை ஜிமிக்கியோடு, அவள் கூந்தல் போட்டிபோட, அவள் இடையும் அழகாக அசைந்தாடியது.

 

முகத்திற்கு லேசான ஒப்பனையிட்டவள், இயற்கையிலே அழகிய பெரிய விழிகளுக்கு சொந்தக்காரியான அவள், அளவான வகையில் மையிட்டு அவள் கண்களுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தாள்.

 

சேலை அணிந்த போதும் அவள் இடை தெரியாவண்ணம் பின் (Pin) செய்திருந்தாள், அது மற்ற பெண்கள்ளுக்குமே அவளிடம் மரியாதை வர காரணமாய் இருந்தது.

 

தன் அலுவலக நண்பர்கள் கண்ணில் தென்படுகிறார்களா என்று எண்ணிக் கொண்டே முன்னேறியவள், எதிரில் வந்து வசீகரிக்கும் புன்னைகயுடன் நின்ற இனியனை கண்டு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி கலந்த புன்னைகயுடன், “மிஸ்டர்.இனியன் நீங்க எப்படி இங்க, இது உங்களோட ரிலேடிவுஸ் மேரேஜாஎன்று கேட்டாள்.

 

இனியனோ மறுப்பாக, “கல்யாண மாப்பிள்ளை எங்க கம்பெனில தான் வேலை பார்கின்றார். என் கூட வொர்க் பண்றவங்க நிறைய பேர் வந்துருக்காங்க மதி, பட் நீங்க என்கிட்ட கேட்ட கேள்விய நான் உங்க கிட்ட கேட்கமாட்டே பிகாஷ் கல்யாண பொண்ணு உங்க ஆபீஸ் அம் ரைட்?” என்று கூறி புன்னைகைத்தான்.

 

மதிக்கு இது புதிய செய்தி, மாப்பிள்ளை ஆதித்யன் குரூப் ஆப் கம்பனில் வேலை பார்ப்பது. அதை அவள் யோசிக்கும் போதே அவளது மனம் சம்மன் இல்லாமல் ஆஜரானது, “நீ எங்க மதி இதெல்லாம் கவனிச்ச, அந்த கேஸ்லயே முழ்கிட்டு இப்ப வந்து முழிக்கிற?” என்றது.

 

மேலும் அவள், ஒருவேளை ஆதித்யன் வருவானோ என்று எண்ணமிட அவளது மனது, “அவன் இங்கு எல்லாம் எதற்கு வரபோகிறான், நிச்சயம் வரமாட்டான்என்றது.

 

என்ன மதி நான் பேசிகிட்டே இருக்கேன், நீங்க அப்படி என்ன யோசிகிறீங்க?” என்று இனியன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த சினேகன், மதியிடம், “என்ன மதி எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?… எல்லாரும் சேர்ந்து தான் கிபிட் கொடுக்கணும்னு காத்திட்டு இருக்கோம்…… நீ என்னடானா என்ட்ரன்ஷ்ல எதோ வித்த நடக்குரமாதி பராக் பாத்துட்டு இருக்க? வா வா சீக்கிரம் வா என்று அவளை இழுக்காத குறையாய் அழைத்துச் சென்றான்.

 

அவள் இனியனை திரும்பி பார்த்து வருகிறேன் என்பதின் பொருள் பட ஒரு தலை அசைப்புடன் சினேகனை பின் தொடர்ந்தாள். அப்படி செல்லும் போதும் சினேகனை கண்டிக்கவும் மறக்கவில்லை. இனியனிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே ஏன் இப்படி செய்தாய் என கேட்கவும் செய்தாள்.

 

ஆனால் சிநேகனோ இதெற்கெல்லாம் அசராமல், “விடு மதி நான் என்ன அமெரிக்க அதிபரா, நான் அவர்கிட்ட பேசாம வந்துட்டேன்னு அவரு பீல் பண்ண போறாரு?…. ஒரு வேலை பீல் பண்ணினா சொல்லு மதி நான் ப்ரீஆ இருக்கும் போது போய் ஒரு ஹாய் சொல்லிடறேன் எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல என்று கூறி கொண்டே சென்றவனை பார்த்து மதி தலையில் அடித்துக் கொண்டாள்.

 

உடனே மதி சிநேகனிடம், “எரும எரும அவர் என்கிட்ட பேசிட்டு இருந்தாரு அப்ப நடுவுல வந்து இழுத்திட்டு வந்துட்டேன்னு சொல்ல வந்தே அதுக்குள்ளே ஓவரா சீன் போடாத என்றாள்.

 

சினேகன் உடனே மதியிடம், “மதி திஸ் இஸ் டூ மச்…… என்ன எருமைன்னு இப்படி எல்லார் முன்னாடியும் சொல்ற வேலை வச்சுக்காத….” என்று வேகமாகவும் ரோசமாகவும் கூறியவன், அவள் அருகில் வந்து, “வேணும்னா ஒரு ரூம் ல வச்சு இத விட கேவலமா கூட திட்டு நான் வாங்கிக்கிறேன்…… ஹியர் லாட் ஆப் பிகர்ஸ்…. டோன்ட் பிரேக் மை இமேஜ்…. ப்ளீஸ் மதி என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மன்றாடிக் கொண்டிருந்தான்.

 

மேலும் சினேகன் மதியிடம், “மதி ஒன்னு நல்லா தெருஞ்சிக்கோ, நான் ஒன்னும் வேணும்னு கூப்பிட்டு வரல. இதோ நம்ம அலுவலக வானரங்கள் சோறுக் காக வெயிட் பண்ணுதுங்க பாரு….எப்ப கிபிட் குடுபோம் எப்போ பிரியாணி சாபிடுவோம்னே இருக்காங்கஅதா உன்ன கூப்பிட்டு வந்தே என்று சினேகன் கூற மதி பார்த்த பார்வையில், “சரி…… கூப்பிட்டு வரல இழுத்திட்டு வந்தேபோதுமா என்று உள்ளே போன குரலில் கூறினான்.

 

அவர்கள் உரையாடலின் போதே அருகில் நெருங்கிவிட்ட அவர்களின் அலுவலக நபர்கள் சிநேகனிடம் என்ன சொல்லிட்டு இருந்த சினேகன் என்றதும், சினேகன் உடனே, “அதுவா நம்ம பிரிண்ட்ஸ் எல்லாம் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க அவுங்க பிஸி டைம் ஏன் வேஸ்ட் பண்ற மதி இவ்ளோ தாமதமாகவ வருவா அப்படின்னு கேட்டுகிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்ல என ஒரு செயற்கை சிரிப்போடு முடித்தவனே மதி அடப்பாவி என்பது போல் பார்த்து வைத்தாள்.

 

சரி வாங்க எல்லாரும் மேடைக்கு போகலாம் என்று கூறிய சிநேகனிடம், கூட்டத்தில் இருந்த ஒருத்தர் யாருக்கிட்ட கிபிட் இருக்கு நான் ஏன் கேட்கிறேனா அதுல்ல நம்ம கம்பெனி பேரு எழுதனும்ல அப்புறம் நம்ம என்ன கொடுத்தோம்னு தெரியாம போய்டும் என்றதும், இனியன், “ஆமாம் இவனுங்க 25 பேரு சேந்து தலைக்கு 100 ரூப போட்டுட்டு வாங்கினது என்னமோ டைனிங் செட் தான்ஆனா ஏதோ அந்த பிள்ளைக்கு டையமெண்ட் செட்யே குடுக்குறமாதி என்னமா சீன் போடறாங்கே…. ஓ மை காட்…”
என்று மனதினுள் நினைப்பதாக வெளியில் கூறிவிட்டு அவர்களிடம் முறைப்பை பெற்றுக் கொண்டான்.

 

அவனிடம் இருந்த கிபிட்ஐ பிடிங்கிக் கொண்டு அவர்கள் முன்னே நடக்க, சினேகன் திருட்டு முழி முழித்துக் கொண்டு மதியின் பின்னே நடந்தான்…..

 

அவர்கள் அனைவரும் மேடை ஏற…. மொத்தம் 25 பேர் இருந்ததால், புகைப் படம் எடுப்பவர் 3 குழுவாக அவர்களை மணமக்கள் முன் நிக்குமாறு கூறினார்…..மதியும் சிநேகனும் கடைசியில் வந்ததால் அவர்கள் கடைசி வரிசையில் காத்திருக்க, முதல் வரிசையில் நின்றவர்கள் மணமக்களோடு புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பரப் பரப்பு ஏற்பட்டது அங்கே.

 

சத்தம் வந்த திசையில் மதியின் கண்கள் சுழல, அங்கே அடர் கரு ஊதா நிற சட்டையும், மங்கிய வெளிர் நிற கால் சட்டையும் அணிந்து அவனுக்கே உரிய பாணியில் கம்பீரமாகவும் அவனது சிகையை தன் இடக் கைக் கொண்டு கோதிக் கொண்டு வந்தவனை பார்த்து கண் விலக்க முடியாமல் தடுமாறினாள் மதி.

 

இது நீடித்தது ஒரு சில நொடிகளே, அதற்குள் அவள் மனம்மதி அவன் மணமானவன் என்று எடுத்துறைக்க, மறு மனமோ அது மட்டுமா அவன் எப்படி பட்டவன் தெறிந்து தானே நீ விலக நினைத்தாய் என்று எடுத்துக் கொடுத்தது…..

 

அவனை பார்ப்பதை தவிர்ப்பதற்கு, தன் கரு விழியை மறுதிசைக்கு திருபியவள், அவள் மனதை அவனிடமிருந்து திருப்ப முடியாமல் தத்தளித்தாள்.

 

மதியோ மனதினுள், “அவனை நான் வெறுகின்றேன், ஆனால் அவன் மணம் ஆனவன் என்று கேட்டால் துடிக்கின்றது, அவன் அருகில் வந்தால் மனது ஓயாது அலை அடிக்கும் கடலாய் மாறுகிறது, அவன் பார்வை என் மீது படர்ந்தாள் என் மேனி சிலிர்கின்றது….என் மனது என்ன தான் நினைக்கின்றது?….. வேறு ஒரு பெண்ணோடு பார்த்தபின்பு என் எண்ணம் மாறி இருக்க வேண்டுமேஆனாலும் ஏன் என் மனம் மாறவில்லை, ஆனால் அதே சமயம் இப்படி பட்டவனை நான் ஏற்கவும் மாட்டேன் அது என் கொள்கைக்கு நேர்மாறானதுஎன்று பலவாறாக யோசித்து குழம்பிக் கொண்டிருந்தாள்.

 

மனம் விரும்பவில்லை

உன்னையும்

உனக்கு திருமணமான செய்தியையும்

 

கண்கள் பார்க்க மறுக்கின்றது

உன்னையும்

உன் அருகில் மற்ற பெண்களையும்

 

இதயம் தவிற்கிறது தேடலின் விடையான

உன்னையும்

நான் உன்மீது கொண்ட காதலையும்

                                                     

 

அவன் நடந்து வந்து 3வது வரிசையில் முதல் இருக்கையில் ஒரு ராஜ தோரணையுடன் அமர, அங்கிருந்த பெண்கள் கூட்டம் பார்வையால் வருட ஆரம்பித்தது.

 

ஆதித்யன் வருவதைப் பார்த்து விட்டு மணமகனே இறங்கி வந்து ஆதித்யனிடம், “சார் நீங்க இங்க வருவீங்கன்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல நீங்க வந்தது மேடைக்கு வராம ஏன் வெயிட் பண்றீங்க சார்?” என்று கூற, ஆதித்யனோ மணமகனிடம், “நீங்க ஏன் இறங்குநீங்க சிவா போங்க மேடைக்கு போங்க நான் பின்னாடியே வருகிறேன்என்று அனுப்பி வைத்தான்.  

 

மேடையில் காத்திருப்பவர்கள் முதலில் செல்லட்டும் என்று அமர்ந்திருந்தவனின் விழிகளில் மதி தென்பட்டாள். ஒரு சில வினாடிகள் அவளை கூர்ந்து பார்த்தவன் எழுந்து மேடை நோக்கி நடந்தான்.

 

தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் வெகுவாக சிரம்மபட்டு தன் உணர்வுகளை அடக்கினாள்.

 

மதியை நோக்கி அவன் முன்னேற மதியின் மனது சிறகடிக்கும் புறாவாக படபடத்தது.

 

Advertisement