Advertisement

 

முகிழ் – 16 

மஞ்சளும் சிவப்புமாக இருக்க வேண்டிய அந்த மாலைபொழுது அன்று ஏனோ மெல்லிய கருமை நிறம் படர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இப்பொழுதோ அப்பொழுதோ இறக்கிவிடுவேன் என் பாராத்தை என்பதை போல கனத்த மேகங்கள் மெல்ல ஊர்வலம் போக, அந்த மேகத்தை கலைக்காத வகையில் காற்றும் கூட லேசாக வருடி சென்றது. 

மேகங்கள் மட்டும் கனத்த மனதோடு இல்லை தானும் இருக்கின்றேன் என்பதை நிரூபிப்பது போல ஆதி ஒரு கையால் தலையை அழுந்த கோதிக்கொண்டு அவன் கையில் இருந்த அந்த டைரியின் எழுத்துகளை மறுகையால் வருடிகொண்டிருந்தான் அவனின் அலுவல் அறையில். 

மெல்ல மெல்ல அவனது வேதனைக்கான காரணம் அவன் கண்களில் விரிந்து சிறு சிறு தூறல்களாக உருவம் பெற இதுவரை இழுத்து பிடித்துக் கொண்டிருந்த மேகமும் தூறல்களை சிந்த ஆரம்பித்திருந்தது. 

சில வருடங்களாக வருடி கொண்டிருந்த நினைவுகள் இப்பொழுது புயலை போல அவனை அடித்துக் கொண்டிருந்தது. “யார் அவள், ஒரு பைத்தியம் போல அவளை நினைத்து தேடிக்கொண்டிருக்கிறேன்…. முகமும் அறியாமல் முகவரியும் அறியாமல் அவள் சுவாசம் மட்டும் என்னோட கலந்துவிட சுவாசிப்பது கூட எனக்கு சுமையாக தோன்றுகிறது” என்று மனதினுள் பேசிக்கொண்டவன் கண்களை மூட அடுக்கம் அவன் விழிகளில் விரிந்தது. 

‘அந்த அழகிய மலை சரிவில் அமைந்திருந்த இடத்தை தனது ரிசார்ட் கட்டும் பகுதிக்கு ஏற்றவாறு இருக்கின்றதா என கண்களால் துலாவிய படி அங்கும் இங்கும் சுழன்றுக் கொண்டிருந்த அவன் கூர் பார்வை, அளந்துக் கொண்டிருந்த சிவில் எஞ்சினியர்களின் மீது படிந்து அவர்களின் பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தது. 

அவன் எதிர்ப்பார்த்த சாதகமான பதில்களை தந்தவர்களிடம் மேலும் ஏதோ ஏதோ கட்டளைகளை பிறப்பித்தவன் அதை முடித்துவிட்டு திரும்ப அங்கு அவனின் நண்பன் 
அகில் என்ற அகிலன் உல்லாசமாக வந்துக்கொண்டிருந்தான். 

“டே அகில் என்னடா? அப்பா வை ஏமாத்திட்டு வந்துட்டியா? ஏன்டா, ஏன் இப்படி பண்ற பாவம் டா அங்கிள், ஒழுங்கா ப்ரிலிம்ஸ்க்கு தயார் பண்ணுன்னு விட்டுட்டு வந்தா, நீ ஏண்டா இங்க வந்து நிக்கிற” என்று மனத்தாங்கலுடன் கேட்டாலும் ஆதியின் குரலில் கடுமை இருந்தது.

 

அதற்கு எல்லாம் அசருவேனா என்கிற ரீதியில் அகிலன் சிரிப்புடன், “டே மச்சான்…. எனக்கு ஐபிஎஸ் ஆகுறதுல இஷ்டம் இல்லைடா, எங்க அப்பா தான் போலீஸ் போலீஸ்னு இருக்காருனா நானுமா டா?” என்று கேட்க ஆதியோ, “அப்போ என்ன தான் பண்ண போரடா” என்று கேட்க, “அத பத்தி யோசிச்சு டிசைட் பண்ண தான் டா இங்க நான் வந்ததே…. அதோட உன்ன விட்டுட்டு எப்படிடா இருப்பேன்” என்று அகிலன் கூற ஆதியோ “நினச்சேன்” என்று தலையில் கைவைத்தான். 

 

 

அவர்கள் இருவரும் கதை அளந்தபடி அங்கே சுற்ற, சற்று நேரத்தில் ஆதியின் கைபேசி சிணுங்க, அதை எடுத்துக்கொண்டு ஆதி சென்று விட, அகிலன் தனித்து நடக்க ஆரம்பித்தான். அந்த பக்கம் ஒரு சில தோழிகளுடன் வந்த ஒருபெண்ணின் சிரிப்பு அகிலனை கவர அவளை ஊன்றி கவனிக்க தொடங்கினான். 

 

 

சற்று நேரத்தில் அந்த பெண்ணின் தோழிகள் பின்னே வர, அவள் சற்று முன்னேறி அந்த ரிசார்ட் கட்டும் பகுதில் நடக்க ஆரம்பிக்க அந்த நேரம் பார்த்து அந்த சிவில் எஞ்சினியர், சார் என்ற அழைப்புடன் அகிலன் அருகில் வர பேச்சு குரல் கேட்டு திரும்பிய அந்த பெண் அகிலனை பார்த்தாள். அந்த எஞ்சினியர் ஆதி பற்றி கேட்டு விட்டு நகர, தற்ச்செயலாக திரும்பியவன் அந்த பெண் சற்று தொலைவில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க இவன் கண்களிலும் ஆர்வம் அதிகம் ஆனது.

 

அவளின் அருகில் வர, அவளின் படபடப்ப்பு அதிகம் ஆனது போல தோன்றியது அகிலனுக்கு. அவள் கண்கள் அவனிடம் ஏதோ கதை பேசியது… படபடவென இமைகளை தட்டி பிரித்தவள் அவனை பார்த்து ஒரு தடும்மாற்றத்தை உதிர்த்துவிட்டு பின்னே நகர்ந்து நகர்ந்து ஒரு மரத்தில் முட்டி நின்றாள். சட்டென சுய உணர்வு வந்தவள் போல் அவள் முகம் மாற கடை இதழில் ஒரு சிரிப்புடன் ஓடி சென்றாள். 

 

இவை அனைத்தையும் அகிலனுக்கு ஏதோ படத்தில் வருவது போல தோன்றினாலும் அவன் மனதிலும் ஆசை துளிர்விட்டது. ஓடி சென்ற அவளும், சொந்தம் கொண்டாடிய அவள் விழிகளும், அவன் மனதில் இருந்து மறையாமல் போனது. 

 

அவனை சுற்றி இலக்ஷம் பட்டாம் பூச்சிகள் பறப்பது போல, கோடி பூக்கள் மலர்வது போல, கால்கள் தரையில் படாமல் மிதப்பது போல தோன்ற அவன் மனதினுள், “என்னடா இது? இப்படி எல்லாம் நடக்குமா என்ன? …. ஆனா எனக்கு தோனுதே… ஒரு வேலை காதலோ… அப்ப லவ் அட் பர்ச்ட் சைட் இது தானோ? “என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டிருந்தான். 

 

அவன் புலம்பலை கேட்டுக்கொண்டே வந்த ஆதி, “என்னடா அகில் ஏன் இப்படி புலம்பிட்டு இருக்க” என்று கேட்க, மடை திறந்த வெள்ளம் போல் அவன் அனைத்தையும் கூறி முடித்தான். 

 

 

“டே அவ கண்கள்ல ஒரு உறவு தெருஞ்சதுடா, புதுசா பாக்குறது போல தெரியல… ஏதோ முன்னாடியே பழகியது போல ஒரு பீல் அவ கண்லடா…. ஹப்பா…….. ஏதோ என்ன புதுசா பீல் பண்ண வச்சுருச்சு அந்த பார்வை” என்று அவன் பாட்டுக்க பேசிக் கொண்டு போகவும் ஆதிக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆயினும் ஆதி அவன் நண்பனின் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை. 

 

 

இப்படி 2, 3 முறை அவள் இப்படி பார்த்தாள், அவள் கண் பேசியது, சிரித்தாள், ஆனால் அவள் பேசமாட்டிங்கிறா டா என்று ஒரே சமயத்தில் சந்தோசமாகவும் மறுநொடியே ஏக்கமாகவும் கலந்து பேசும் நண்பனை பார்க்க ஆதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

 

 

ஒரு நாள் வந்து அவனிடம் அவளுக்கு பூக்கள் பிடிக்குமென்று அழகிய வித்தியாசமான பூக்களை தேடவேண்டுமென கூறினான். அதன் படியே காலை பொழுதினிலே ஆதியை இழுத்துக்கொண்டு அவன் வந்துவிட்டு பூக்களை தேடிகொண்டிருந்தான் சற்று வித்தியாசமான பூக்களை. 

 

இந்த சில நாட்களில் ஆதியும் அந்த பெண்ணை பார்த்திருந்தான். ஆனால் சற்று தொலைவில் இருந்து, அதாவது அகிலன் பக்கத்தில் ஆதி நின்றது இல்லை அந்த பெண்ணை பார்க்கும் தருணங்களில். இவன் பூக்களை சேகரிக்க தொடங்க எண்ணி ஆதியிடம் அகிலன், “இந்த பூ…. இல்ல இல்ல… அந்த பூ…” என்று பார்த்துக்கொண்டே வர அப்போது ஆதி பூவை பறிக்கவிடாமல் குறிக்கிட்டான். உடனே அலுத்துக்கொண்ட அகில், “ஏன்டா ஒரே ஒரு பூ தானே பறிக்கிறேனு சொல்றேன், அந்த பொண்ணுக்கு பூக்கள்னா ரொம்ப இஷ்டம் போல, நான் இத பறிச்சு குடுத்தா அவ சந்தோசப்பட்டு என்கிட்ட பேசுவாதான……. ஏன் டா அத புரிந்துகொள்ளாமல், பூ பறிக்க கூடாது சொல்லி என் காதலுக்கு குழி வெட்டுற பாவி பாவி’ என்று புலம்பி கொண்டு இருந்தான்.

 

 

அவன் புலம்புவதை காதில் வாங்காமல் சிரித்தவன், “டே நான் நிஜமா உன் லவ்அ டெவெலப் பண்ண தான் ஹெல்ப் பண்றேன். நீ இப்ப என்ன சொன்ன, அந்த பொண்ணுக்கு பூக்கள் ரொம்ப பிடிக்கும் அப்படினு தான?, அது உண்மை என்றால் அவள் நிச்சயமா பூக்கள பறிக்க விரும்பமாட்டா, அத செடியில வச்சுத் தான் அழகுப் பார்ப்பா. நீ அவ பின்னாடி சுத்துரப்ப நான் கவனிச்சிருகேன், அவளை சந்தித்த இரண்டொரு நாட்கள்ல அவ ஒரு முறைக் கூட பூ வச்சது இல்ல மச்சி, இந்த ஊர் ல பூவுக்கா பஞ்சம்? அப்புறமும் அவ ஏன் வைக்கல? யோசி மச்சி” என்று கூறினான் ஆதித்யன். 

 

 

“சரி நீ போய் அவக்கிட்ட உன் லவ் எப்படி சொல்றதுன்னு பாரு, நான் கொஞ்சம் வாக் போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு ஆதித்யன் நடையை தொடர்ந்தான். 

 

 

அப்போது அவனை தடுத்த அகிலன் அவனிடம், “டே மச்சான் நான் உன் தங்கையை பாத்துட்டு குறுஞ்சி ஆண்டவர் கோவில் வந்திடறேன், நீயும் அங்க வந்திடு டா” என்று கூறிவிட்டு அங்கு இருந்து சென்றான்.

 

 

அகிலன் சொன்னது போலவே சில மணி நேரங்கள் கழித்து ஆதி அங்கு செல்லும் போது அங்கே ஒரு பெண்ணை 4 பேர்கள் சூழ்ந்துக் கொண்டு கேலி செய்வதைப் பார்த்து அவனுடைய நீண்ட கால்களினால் நான்கே எட்டில் அவர்களை அணுகியவன் ஒருத்தனின் சட்டையை கொத்தாக பிடித்து ஒரு அறை விட்டான். அந்த சப்தத்தில், அடி வாங்கியவனின் கூட்டாளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகினர்.

 

 

பிறகு அவன் கோவிலுக்குள் செல்ல அங்கே உற்சாக முகத்தோடு அகிலன் வரவேற்று அர்ச்சர்கரிடம், “இவன் தொழில்ல தொடங்கி இருக்க முதல் படி வெற்றிகரமா வரணும்னு அர்ச்சன செய்து தாங்க சுவாமி” என்று அர்ச்சனை தட்டை அவரிடம் குடுத்துவிட்டு கூறினான். 

 

 

தனக்காக வேண்டும் நண்பனை பார்த்து ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தவன், “வெற்றி பெறனும்னா நாம உழைக்கணும் டா அதவிட்டுட்டு சாமிகிட்ட வந்தா சாமி என்னடா பண்ணுவாரு” என்று நண்பனை பார்த்து புன்னைகை புரிந்த ஆதியை அவன் நண்பன் பார்வையில் எரித்தான். 

 

 

உடனே “ச……….ரி சரி கூ…….ல் கூல் அகில். இப்ப என்ன சொல்லிட்டேன், சரி நாம சாமி கும்பிடலாம்” என்று சமாளித்த க்ரிஷ்ணவ்ஐ பார்த்து அகில், “அப்பாடா, இப்படி எப்பயோ தான் நம்மள பார்த்து இவன் பயப்படறான். இதே பிக் அப் பண்ணிட்டு போய்டுடா அகில்” என்று வாய் விட்டே முனங்க அதுக்கும் ஆதி சிரிக்கத்தான் செய்தான். 

 

 

அர்ச்சனை முடிந்ததும் “என்னடா இத்தனை சந்தோசம்? அந்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டாயா என்ன?” என்று ஆதித்யன் கேட்க அவனோ, “இல்லைடா, அதுக்குள்ள எப்படி முடியும்? இன்னைக்கு நான் அவளோட பெயரை கண்டுபிடிச்சுட்டேன் டா அதான் என் சந்தோசத்திற்கு காரணம்” என்று கூறி நண்பனை சிறுபிள்ளை போல கட்டிக் கொண்டான் அகிலன். 

 

“என்ன பெயர்டா? அதாச்சும் சொல்லு” என்று சலித்துகொல்வது போல கேட்ட ஆதி நண்பனின் சந்தோசத்தில் அவனும் பங்கு கொண்டான் என்றே சொல்ல வேண்டும். “காவ்யா” என்று ரசித்து கூறிய அகில் மீண்டும் ஆதியிடம், “அவ பெயரு காவ்யா மச்சி” என்று கூற அவன் உதட்டில் புன்னகை மலர்ந்தது. 

 

 

இப்படியே நாட்கள் ஓட, ஒருநாள் அகிலன் தனது காதலை காவ்யாவிடம் சொல்லி வருவதாக புறப்பட்டு சென்றான். அவன் சென்ற சில நிமிடங்களிலே வெளியில் இருக்கும் சுவிட்ச்யை தொட்ட ஆதி வீசி எறியப்பட்டான். அவனின் ஒரு நிமிட அதிர்வு, பிறகு அவன் மயங்கி சரிய இருட்டுமட்டுமே அவன் கண்களை சூழ்ந்தது. 

 

 

அவனுக்கு மெதுவாக மிகவும் மெதுவாக ஏதோ ஒரு ஸ்பரிசம்… அவன் செவிகளில் அரைகுறையாக ஏதோ வார்த்தைகள் இப்படி மயங்கிய நிலையில் அவன் உணர… அவனுக்கு உதவி செய்த யாரோ ஒருவரின் தீண்டல் என மெல்ல அவன் சுய உணர்வை பெற்றான் ஆனால் அவனால் முழு உணர்வுக்கு திரும்ப இயலவில்லை. 

 

 

கருவிழிகள், மூடிய இமைகளுக்குள் அலைப்பாய, கண் திறக்க இயலாது சரிந்திருந்தவன் செவிகளில் கடைசியாக விழுந்த வார்த்தைகள் “க்ரிஷ்ணவ், இத்தனை நாட்கள் ல உங்கள பார்க்காத நாட்கள் எனக்கு முழுமை ஆகல, அது ஏன்னு எனக்கு தெரியாது, ஆனா இப்போ ஒரு வேலை இனி உங்கள பாக்கவே முடியாட்டி, என் வாழ்க்கையும் முழுமை ஆகாது னு தோனுது, எழுதுறீங்க” என்ற வார்த்தைகள் அந்த நிலையிலும் அவன் மூளையை எட்டியது. 

 

 

அதான் பிறகு “க்ரிஷ்ணவ் அய்யா, க்ரிஷ்ணவ் அய்யா க்கு என்ன ஆச்சு” என்ற வார்த்தைகளும் விழ அவன் மறுபடியும் மயக்கத்திற்கு சென்றான். 

 

 

அங்கிருந்த மலை வாழ் மக்கள் வைத்தியத்தை தொடங்க அந்த மருந்து வேலை செய்ய அவர்கள், தூக்கத்திற்கான மூலிகையை புகட்ட அவன் நினைவுக்கு எதுவும் தெரியவில்லை. 

 

 

அவன் எழுந்திரிக்க நல்லிருவு ஆனது. நல்லிருவு 3 மணி போல விழிப்பு தட்டியவனுக்கு சுய உணர்வும் தெளிவாக தெரிந்தது. அவன் கண்களை சுழலவிட்டு தன்னை சமன் படுத்திக்கொண்டவன் அவன் மயக்கத்தில் நடந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வர நெற்றிய அழுத்தி தேயித்துக்கொண்டான்.

 

அவன் நினைவுகளில் மங்கலாக ஒரு கோர்வை இல்லாமல் ஒரு சில வார்த்தைகள் வந்து வந்து போனது “க்ரிஷ்ணவ…., முழுமை ஆகல……,……., என் வாழ்க்கையும் முழுமை ஆகாது னு தோனுது, எழுதுறீங்க.” இந்த வார்த்தைகள் மட்டுமே அவனால் சேகரிக்க முடிந்த வார்த்தைகள். அந்த க்ரிஷ்ணவ் என்ற அழைப்பும் அந்த குரலில் இருந்த பரிதவிப்பும் மட்டும் அவனால் நன்கு நினைவு படுத்த முடிந்தது. 

 

அந்த பெண் குரல், அந்த பரிதவிப்பு அரை மயக்கத்திலும் அவன் மனதில் பதிந்தது.

 

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக அங்கே அப்பொழுது வந்த மருத்துவர் ஆதியிடம், “க்ரிஷ்ணவ் அய்யா… கண்ணு முழுசுட்டீங்களா? இனி உசுருக்கு ஆபத்து இல்லங்க அய்யா… சரியான நேரத்துல அந்த மவ உதவிடுச்சு உங்களுக்கு” என்று கூற ஆதி அதைக்கேட்டு மேலும் குழம்பி “என்ன சொல்றீங்க அய்யா நீங்க” என்று ஆதி அவரிடம் கேட்டான்.

 

“அய்யா, நம்ம பூதப்படைய இருக்காருல, அவரு இந்த பக்கமா வரும் போது ஒரு பொண்ணு உங்க பேர சொல்லி கத்திருக்கு, அதுனால அவரு திரும்பிபாத்து நிலமைய புருஞ்சிட்டு, எங்கக்கிட்ட தகவல் தார ஓடியாந்தாறு… நாங்க வரும்போது உங்க மூச்சு சமமா தான் இருந்துச்சுங்க… என்னோட அனுபவத்துல அந்த மகா உங்களுக்கு அவ மூச்சு காத்த கொடுத்திருக்குனு புருஞ்சுகிட்டேங்க…. நாங்க ஓடியாந்தப்ப உங்க கண்ணுல இருக்க கருவிழி பாப்பாக்கு அசைவு தெருஞ்சதுங்க, அந்த புண்ணியவதி பண்ண முதலுதவில நீங்க நல்ல மூச்சு விட்டீங்க.. அப்புறம் உங்களுக்கு மூலிகை சேத்து கசாயம் குடுத்து முழுசா குணப்படுத்திட்டோம்ங்க இனி ப்ரெச்சன வாராதுங்க” என்று கூறிய அந்த மலை வாழ் மருத்துவர் மறுபடியும் ஆதியிடம், “அந்த பொண்ணு உங்க உறவாங்கயா… வெளியில நிண்டு அழுதமயமா இருந்துச்சுங்க, நீங்க கண்ணு முழுச்சத சொன்னபிறவு தா போச்சு” என்று கூறிவிட்டு ஆதியின் உடலை மறுபடியும் ஒருமுறை பரிசீலித்து கொண்டிருந்தார்.

 

ஆதியின் மனமோ, “அவள் யார்?” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் தூண்டிக் கொண்டிருந்தது. அவனின் என்ன ஓட்டத்திற்கு கடிவாளம் இடும் விதமாக அங்கே அவன் நண்பன் நுழைந்தான்.

 

பேச்சுக்குரல் கேட்டு இரண்டு அடுக்குகள் தள்ளி இருந்த அறையிலிருந்து வந்த அகிலனை பார்த்த ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்தான். சிவப்பேறிய கண்கள் வேதனையை அளவுக்கதிகமாக பிரதிபலித்தது. கலைந்த கேசம், கசங்கிய உடை, சேறு படிந்த சட்டை இப்படி வந்த அகிலனை பார்த்த ஆதி அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றான்.

 

இந்நிலையில் மருத்துவர், மருந்தை புகட்டிவிட்டு அவர் கிளம்புவதாகவும் கூறினார். மேலும் 2 நாட்கள் மட்டும் சற்று அலைச்சலை கட்டுப்படுத்தினால் போதுமானது என்று கூறி சென்றார்.

 

அவர் சென்றதும் அகிலன் இருந்த நிலையை கண்டு ஆதி பதறினான் என்றால் அகிலனோ அவனை விட அதிகமாக, “மச்சா, டே, முழுச்சுட்டியா டா? உனக்கு ஒன்னு இல்லைல டா, நீ நல்லா இருக்கதான, ஏன்டா ஏன் இப்படி படுத்தட்ட? என்னால உன்ன இப்படி… இப்படி நினைவு இல்லாம படுத்து இருக்கிறத பாக்க முடியலடா, நீ எந்திரி மச்சா உனக்கு ஒன்னுஇல்ல” என்று ஆதியின் உடலை தொட்டு பார்த்தவன் சிரித்துக்கொண்டும் அழுதுக்கொண்டும் தன் நண்பனான ஆதியை கட்டிக்கொண்டான்.

 

மேலும் ஆதியிடம் தன்னிலை மறந்து புலம்ப ஆரம்பித்தான், “நான்தா காரணம், உன்ன விட்டு போயிருக்க கூடாது, இப்படி ஒருத்திக்காக உன்ன தனியா விட்டுட்டு போய்டேனேடா, நான் மட்டும் போகாட்டி உனக்கு இப்படிலாம் நடந்துருக்காதுல, நல்ல வேலை இவுங்க எல்லாரு உன்ன காப்பாத்திடாங்கடா” என்று மீண்டும் மீண்டும் என்னவோ நடந்த அனைத்துக்கும் இவன் சென்றது மட்டுமே காரணம் என்பது போல சொல்லி பினாற்றிக்கொண்டிருந்தான்.

 

அகிலனின் உளறலிருந்து ஆதிக்கு ஏதோ சரி இல்லை எனப்பட்டது. அவனை பற்றிய கவலையில்தான் அகிலன் இப்படி பேசுகிறான் என்பதில் அவனுக்கு ஐயம் இல்லை. ஆனாலும் அதற்காக அவனின் புற தோற்றம் ஏன் இப்படி இருக்கவேண்டுமென அவன் மனதில் கேள்வி எழுந்தது.

 

சேறு படிந்த சட்டையை கூட மாற்றாமல் ஒரு பையத்தியகாரனை போல இதுவரை அமர்ந்திருக்கும் அளவுக்கு வேறு எதுவோ ஒன்றும் நடந்திருக்கின்றது என்பதை ஆதி யூகித்தான்.

 

ஆதியை பற்றிய கலக்கத்தோடு சேர்ந்து வேறு எதுவோ ஒன்றும் அவன் மனதில் நெருஞ்சியாக இருகின்றது என புரிந்துக்கொண்டான். சிறு வயதிலிருந்தே பார்க்கும் அகிலனை அவன் அறியாமல் போவானா என்ன.

 

ஓரளவு ஆதி பழைய தெம்பை பெற்று இருந்ததால், மெல்ல எழுந்து அகிலனிடம், “டே அகில், மச்சா ஒரு நிமிஷம் நான் பேசுறத கேளுடா, எனக்கு ஒன்னும் ஆகல, நான் நல்ல இருக்கேன்… நீ என்ன பாரு, முதல்ல ரிலாக்ஸ் ஆகுடா… ஆமா ஏன் உன் ஷர்ட் இப்படி இருக்கு, நீ அந்த காவ்யா பார்க்க தான போன? என்னாச்சு டா? “என்று மெதுவாகவும் அதே சமையம் தெளிவாகவும் தன் நண்பனிடம் கேட்டான் ஆதி.

 

இந்த கேள்வியை எதிர்ப்பார்க்காத அகிலன் ஒருநிமிடம் அதிர்ந்தாலும் பிறகு சமாளித்துக்கொண்டு, “இல்லைட அதெல்லாம் ஒன்னும் இல்லை… நீ … நீ நல்ல ஓய்வு எடு மச்சி, மருந்து சாப்பிட்டதான, எதவாது வேணும்னா என்ன கூப்பிடுடா நான் வரேன்” என்று கூறி ஆதியின் கண்களை நேரே சந்திக்க துணிவில்லாதவன் போல கிளம்பினான்.

 

அவன் நடந்துக்கொண்ட விதம் ஆதியின் புருவமத்தியில் முடிச்சு விழ காரணமாக இருந்தது. மருந்து சாப்பிட்ட வீரியத்தில் தூக்கமும் கண்ணை இருட்ட, தனக்காக போராடியவள் யார் என்று யூகிக்க முடியாமல் தடுமாற, அவளின் குரலில் இருந்த பரிதவிப்பு அவன் காதுகளில் ஒலித்து அவனை புரட்டிப்போட, இப்போது நண்பனின் நடவடிக்கைக்கான காரணம் அறியாதது என எல்லாமுமாய் சேர்ந்து ஆதியின் நிலையை, நிலை இல்லாமல் தவிக்க வைத்தது.

 

இப்படியே யோசித்து யோசித்து களைத்தவன் மருந்தின் வீரியத்தில் உறங்க தொடங்கி இருந்தான். மறுநாள் கண்விழித்தவன் மெல்ல எழுந்து உடை மாற்றி கொண்டு அகிலனை பார்க்க சென்றான்.

 

ஆனால் அருகினில் அவன் காணாது போகவே, பார்வையில் சுற்றத்தை அளந்தவன் கண்களில் காவ்யா வருவது தென்ப்பட்டது. “இவள் எதற்கு இங்கு வருகிறாள்” என்று முதலில் எண்ணமிட்டவன் பிறகு மனதினுள், “ஒருவேளை அவள் நேற்று அகிலனிடம் சம்மதம் சொல்லாமல் இருந்திருப்பாளோ? அதனால் தான் அவன் சோர்ந்து தெரிந்தானா? இன்று அவன் காதலை ஏற்றுக்கொண்டு அதை சொல்ல வருகின்றாளா? இந்த நேரம் பார்த்து அகில் எங்கே சென்றான்?” என எண்ணமிட்டான்.

 

அருகில் வந்தவள் ஆதியை பார்த்து, “எக்ஸ்கியூஸ் மீ, நான் இந்த பக்கம் வழி மாறி வந்துட்டேன்… இங்க இருந்து எப்படி வெளில்ல போகணும்” என்று கேட்க ஆதியோ ஒரு நிமிடம் குழம்பித்தான் போனான்.

 

அவன் காவ்யாவிடம், “நீங்க காவ்யா?” என்று இழுக்க காவ்யாவின் முகத்தில் அப்பட்டமாக சந்தோசத்தின் சாயல் படர்ந்தது.

 

 

“ஹா என்ன உங்கள்ளுக்கு தெரியுமா?” என்று ஆவலுடன் கேட்டாள். அவனும் “ஆமாம் தெரியும் காவ்யா ரொம்ப நாட்களாகவே, நீங்க இங்க தான்… ஐ மீன் அட்ரெஸ் தெரிந்து தா வந்தீங்கனு நினைத்தேன், ஆனா நீங்க வேற எதுவோ சொல்றீங்க?” என்று யோசனையோடு பேசி முடித்தான் அகிலனை நினைவில் வைத்துக்கொண்டு.

 

உடனே கிளுக் என்று புன்னகையை உதிரவிட்டவள், “நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன்… ஆனால் எப்படி சொல்லுவது என தடுமாறி அப்படி சொன்னேன்” என்று வெக்கம் காட்டி பேசினாள். உடனே ஆதி புரியாமல் குழம்பி பிறகு அவளிடம் நேராக கேட்டுவிட வேண்டியது தான் என முடிவெடுத்து, “நீங்க காதலிக்கிறதா சொல்ல…,” என்று ஆதி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவனை இடைமறித்தவள் அவனிடம், “ஆமாம் க்ரிஷ்ணவ்… உங்களுக்கு எப்படி தெரிந்தது… ஏன்னு தெரில, முதல் பார்வையில் காதல் அப்படிங்கிறதுல நம்பிக்கை இல்லை எனக்கு உங்கள பார்க்கிற வர, என்ன உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? அப்படின்னு கூட தெருஞ்சுக்காம உங்கள லவ் பண்ணினேன்…அத உங்ககிட்ட எப்படி சொல்ல… எனக்கு சத்யம தெரியல” என்று அவனுக்கு முதுகுகாட்டி அவள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே “ஸ்டாப்…. இட் ” என்று கர்ஜித்தான்.

 

“இப்ப நீ என்ன சொன்னா? இப்ப நீ என்ன சொல்லிட்டு இருந்தனு கேட்டேன்? சொல்றியா? இல்லையா? “என்று அவன் கர்ஜித்த குரல் எட்டுத்திக்கிலும் பட்டு தெறித்து, திகிலை உண்டாகியது அவளுக்கு.

 

அவள் எச்சிலை முழுங்கிக் கொண்டு மெல்ல வார்த்தையே வராத அளவு மிக மெலிதாக, “க்ரிஷ்ணவ் அது … அது அது வந்து …” என்று மென்று முழுங்கினாள்.

 

“சொல்லு, அப்போ அகில்? நேத்து அகிலன் “என்று சிவந்த கண்களுடன் அவனது இடது புருவத்தை மட்டும் ஏற்றி அவன் கேட்ட தோரணையில் வேட்டைக்கு தயாராக இருக்கும் சிறுத்தையின் சாயல் தெரிந்தது.

 

அவன் இத்தனை தூரம் கோவப்படுவதற்கு காரணம், அவனே அவன் கண்கொண்டே பார்த்திருகின்றான், கண்களால் காவ்யா அகிலனிடம் காதல் கதை பேசியதை. அவனை பார்த்து இவள் சிரித்ததை. அவன் அவளின் பின்னே நடந்தால் திரும்பி திரும்பி சொக்கும் பார்வை பார்த்ததை. இப்படி அவளை, அவனே கண்டிருக்கும் பொழுது, “எப்படி இவள் தன்னிடம் காதல் சொல்கிறாள், மேலும் அவனிடம் காட்டின அதே வெக்கம் என்னிடமும் காட்டவேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்விகள் அவன் மனதில் பேரிரைச்சலை கிளப்பியது. 

 

இவன் அகிலனை பற்றி கேட்டவுடன் காவ்யா என்ன நினைத்தாளோ சட்டென ஆதியிடம், “அது வந்து அகிலன் … அவன் யாருனே எனக்கு தெரியாது நேத்து தான்….. என்னை…. என்னை… காதலிக்கிறதா சொல்லி அறிமுக படுத்திகிட்டான், அவனிடம் நான் வேற ஒருத்தரை விரும்புறேன்னு சொன்னேன், அதுக்கு அவன் என்ட்ட மோசமா ” என்று மென்று எச்சிலை முழுங்கிவிட்டு மீண்டும் தொடங்கினாள், “மோசமா நடந்துக்கிட்டான், அப்போ …. அப்போ… பக்கத்துல இருந்தவங்க அவன… அவன … அடிச்சு ” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே கண்களில் ரௌத்திரம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை நோக்கி ஒரு அடி முன்வந்து கையை ஓங்கி இருந்தான்.

 

ஓங்கிய கையை இறக்காமலே அவளிடம், “ஏ என்னடி நினைச்சிட்டு இருக்க, அவன்? அவன்? உங்கிட்ட மோசமா நடந்துக்கிட்டான்? உனக்கு அவன யாருனே தெரியாது? அப்படி தான? “என்று கோவத்தின் உச்சியில் அவன் குரல் ஒலிக்க, அவனது இடது புருவத்தை ஏற்றி கேட்டவனை பார்த்து காவ்யா நடுநடுங்கி போனாள்.

 

மேலும் அவன், “இதோ பாரு, இப்ப என்ன நடந்ததுன்னு நீ உண்மைய சொல்லல… அதுக்கு அப்புறம் உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது… என்னோட நண்பன பத்தி நீ எத்தன தயிரியம் இருந்தா என்கிட்டயே தப்பா சொல்லுவா? சொல்லு டி… இப்ப இந்த நிமிஷம் எனக்கு உண்மை தெருஞ்சு ஆகனும்…அப்படி இல்ல உண்மைய தவிர வேற எதுவும் என்கிட்டே பொய் சொன்னா நிச்சயம்….. நிச்சயம்…. நீ ஏன் இன்னு வாழரனு நினைக்கிற அளவு பண்ணிடுவேன்” என்று நிறுத்தி ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் குடுத்து கண்களில் ரத்தம் ஏறி பேசுபவனை பார்த்து திகைத்தாள் காவ்யா.

 

அவன் சொன்ன வார்த்தைகளை கேட்ட காவ்யா ஒரு நொடி பின் நகர அவளிடம் அருவுருப்பாக ஒரு பார்வையை செலுத்தி விட்டு, “அட ச்சீ என் கை, உன் மேல அடிக்கிறதுக்காக கூட பட விரும்பல, இப்ப சொல்ல போறியா? இல்ல “என்று மிரட்ட அவள் வேறு வழி தெரியாமல் சொல்ல தொடங்கினாள் உண்மையை மட்டும்.

 

“அது நாங்க இங்க ப்ராஜெக்ட் பண்ண வந்தோம், இங்க ஒருத்தர்… ஒருத்தர் ரிசார்ட் கட்ட வந்துருக்காருன்னு தெருஞ்சது… தோழிகள் சில பேரு ரிசார்ட் … ரிசார்ட் கட்டுராங்கான பெரிய பணம்…..பண…பணக்காரரா இருப்பாங்கனு சொன்னாங்க. நான் அன்னைக்கு தான் முதல் முதலா இந்த பக்கம் வந்தே… அப்போ வேலை பார்க்கிறவங்க, முதலாளி அங்க நிக்கிறதா பேசிக்கிட்டாங்க….அப்போ அந்த அகில் அவன் … இல்ல அவரு அங்க இருந்தாரு… அங்க வேலை பாத்தவங்க அவர சார்னு கூப்பிட்டத பாத்தே…. அவரு என்ன பார்த்தாரு… என்னால நம்பமுடில… அவரு கிட்ட வந்தாரு , அவரு ஆர்வமா வரத பாத்ததும் என் மனசுல   ஒரு திட்டம் வந்துச்சு, இவர கல்யாணம் பண்ணிக்கிட்டா நானு … நானு பணக்காரியா…. “என்று எச்சிலோடு சேர்த்து அழுகையையும் விழுங்கிக்கொண்டு மறுபடியும் தொடர்ந்தாள்.

 

“அவர பார்த்தது, அவரு மனசுல இடம் பிடிகிறமாதி நடந்துக்கிட்டேன், இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவரு கவனத்த முழுசா என் பக்கம் திருப்புனே… ஆனா நான் அவர்கூட பேசுனது இல்ல, பெயரு…. ரிசார்ட் ஓனர் பேரு தெரியும் க்ரிஷ்ணவ் னு … அகிலன, க்ரிஷ்ணவ்னு நினச்சுருந்தே… நேத்து ….. நேத்து தான் என்ட்ட பேச வந்தாரு… நா….. நினச்சது நடந்துருச்சுனு சந்தோசமா இருந்தே… அப்போ தான் அவரு பெயரு அகிலன் னு சொன்னாரு … எனக்கு ஒன்னும் புரியல… அப்போ ரிசார்ட் பத்தி கேட்டேன்… அவரு அதுக்கும் அவருக்கும் எந்த சமந்தம் இல்லன்னு சொன்னாரு….. சரி என்ன வேலை பண்றாரு னு கேட்டேன்… அதுவும் இல்லன்னு சொல்லிட்டாரு… என்னால இத…. இத ஏத்துக்க முடியல ….” என்று சொல்லிவிட்டு ஒரு அடி பின்னால் நகர்ந்து வெளிறிய முகத்தோடு, “அப்புறம் அவர நான் லவ் பன்னல சொன்னேன், அவரு காரணம் கேட்டாரு, உண்மையா என்ன லவ் பண்றதா சொன்னாரு ….. அந்த இடத்த விட்டு அவரு போகல … எனக்கு அப்போ … அப்போ கோவம் வந்துருச்சு…. அதுனால “என்று தயங்கி நிறுத்தினாள்.

 

அடுத்து ஆதித்யன் பார்த்த பார்வையில் அவளே சொல்ல தொடங்கினாள், “அவர கீழ் தரமா பேசி, சொத்து …. சொத்து இல்லாத உனக்குலாம் எதுக்குடா காதல்… வேலை வெட்டிகூட இல்ல, ஒன்னு பணம் இருக்கணும் இல்ல அதிகாரம் இருக்கணும் 2 இல்லாத நீ உயிரோட இருக்குறதே வேஸ்ட், உனக்கு காதல் ஒரு கேடா னு சொல்லி……” என்று சொல்ல வந்ததை முழுதாக சொல்ல இயலாது தடுமாறினாள்.

 

ஆதியின் கை முஷ்டி இறுகுவதை பார்த்து காவ்யா வாழ்க்கையில் இதுவரை காணாத பயத்தை தன் கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“மேல சொல்லு ” என்ற சொற்கள் மட்டும் அவன் தாடை இறுகி கூற காவ்யா மெதுவாக தொடர்ந்தாள், “இத கேட்டதும் அவரு என்ன அடிக்க கை ஓங்கினாரு, அத பார்த்த அக்கம் பக்கத்துல இருந்து வந்தவங்க என்கிட்டே கேட்க …. நான்….. நான்,… வந்து அவரு என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்றாரு னு சொல்லவும்… அங்க இருந்தவங்க அகிலன… அவர … எல்லாரு சேர்ந்து அடி… அடி…. அடிச்சுட்டாங்க” என்று ஒரு வழியாக வெளிறி போன முகத்தோடும், காய்ந்து போன தொண்டையோடும், ரத்தங்கள் உறைந்து போகும் அளவு பயத்தோடும் கூறி முடித்தாள்.

 

மேலும், “நேத்து அவரு அந்த ரிசார்ட் கு சம்மந்தம் இல்லன்னு சொன்னாரு…ஆனா நீங்க அவருக்கு தெருஞ்சவருனு சொல்லலலீங்க… ந…நா … நான் தெரியாம பண்ணிட்டேன் … தப்பு… பெரிய தப்புங்க இங்க வந்ததும் தயவு பண்ணி என்ன விட்ருங்க “என கூறிக்கொண்டு இருந்தவள் திடீர் என ஆதியிடம் , “அகிலன் , அகிலன் மட்டும் ரிசார்ட் ஓனர் மாதி என்ன ஏமாத்தலையா ? ” என்று கோவமாக கூறியவள் உடனே நிலைமையை சுதாரித்துக்கொண்டு ஆதியின் ரௌத்திரம் கண்ணில் பொங்குவதை பார்த்து அங்கு இருந்து தப்பி செல்ல அவன் எதிர்ப்பார்க்காத விதம் அவன் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தாள்.

 

விழுந்து மன்றாடுபவளை சற்றும் சட்டை செய்யாமல் அவளை எரித்துவிடும் கோவத்தில் இருந்தாலும் தன் நண்பனை முதலில் பார்க்க வேண்டுமென அவனுக்கு தோன்ற காலில் விழுந்து கிடந்தவளிடம், “உன்னலாம் ஒரு பொண்ணு சொல்றதே பெண்மைக்கே கேவலம், உன் முகத்த பார்க்க கூட அருவுருப்பா இருக்கு, இங்க இருந்து போ … போடி… இது தான் உனக்கு கடைசி.. என் கண்ணுல மறுபடியும் பட்டா, நான் முன்னாடி சொன்னது தான், நீ ஏன் இன்னு வாழரனு நினைக்கிற அளவு பண்ணிடுவேன்” என்று கூறியவன் சிறு இடைவேளை விட்டு மேலும் அவளிடம், “இங்க இருந்து கிளம்புறதுக்கு முடிவெடு இனி அகிலன பார்க்காம இருக்க தூரத்துக்கு போக, இன்னும் 24 மணி நேரம் உனக்கு தருகிறேன் தீர யோசித்து ஒரு முடிவு எடு” என்று கூறிவிட்டு விறு விறு என அவன் ரிசார்ட் கட்டும் பகுதிக்கு அகிலனை தேடி சென்றுவிட்டான்.’

 

அவன் நினைவலைகளை கலைக்கும் விதமாக அவன் கைப்பேசி அழைக்க, தற்காலிகமாக நினைவிலிருந்து மீண்டு அவன் தொலைப்பேசியை பார்க்க அது வாடிக்கையாளர் சேவை

அழைப்பு என்பதை அறிந்து அதை துண்டித்துவிட்டு அந்த டைரியில் எழுதி இருந்த “க்ரிஷ்ணவ்” என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தடவிக்கொண்டிருந்தான் ஒரு வேதனையோடு.

 

 

அதே நேரம் நிலாவோடு பேசி பேசியே கலைத்து போன மதி அவர்கள் அறைக்கு வர ஆதி அலுவல் அறையில் இருப்பதை கவனிக்காமல் சாளரத்தில் நின்று, கொட்டி தீர்த்து முடித்த மழை விட்டு சென்ற ரம்யமான சூழலை ரசித்துக் கொண்டிருந்தாள். 

 

மழைகாற்றோடு கடல் காற்றும் அவள் மேனியை சிலிர்க்க வைக்க, அந்த டெரஷ் கார்டனில் நிறைந்திருந்த மலர்கள் மழைத்துளியை ஏந்தி நிற்க அவள் மனது இந்த தருணத்தில் ஆதியை நாடியது. பலவருடங்கள் கழித்து ஆதியை நினைத்து அவளுக்கு கவிதைகளும் மலர்ந்தது. அதை எழுதுவதற்காக அவர்கள் அறையில் இருந்த சிறு குறிப்பு திண்டு (Note Pad) கொண்டு அதில் எழுத தொடங்கினாள்….

 

அன்று அடுக்கதில் எழுதிய அதே உர்ச்சாகத்தோடு, அதே காதலோடு, அதே ரசனையோடு…..

 

இலக்கியமாக நீ இருக்க,

செந்தமிழ் நானாக மாட்டேனோ?

ரவிவர்மராக நீ இருக்க,

ஓவியம் நானாக மாட்டேனோ?

சங்கீதமாக நீ இருக்க,

சுருதி  நானாக மாட்டேனோ?

பூவிதழாக நீ இருக்க,

புறஇதழ்  நானாக மாட்டேனோ?

மழையாக நீ இருக்க,

மழை துளி ஏந்தும் மலர்  நானாக மாட்டேனோ?

                                                

 

சாளரத்தில் மதி கவிதையை ரசனையோடு வருட, ஆதி சாளரத்தி மறு சுவற்றின் பக்கமாக இருந்த அலுவல் அறையில் மதி அடுக்கதில் எழுதிய கவிதையை வேதனையோடு வருட, நிலவும் (மதி) சூரியனும் (ஆதித்யன்) காலையில் இருந்தாலும் சூரியனின் அதீத ஒளியால், பகலில் கண்ணனுக்கு தெரியாத நிலவு போல, மதியும் ஆதியும் அருகினில் இருந்தும் விதியின் விஸ்வரூப விளையாட்டில் மதியை அறியமுடியாமல் ஆதி தவித்தான்.

 

அப்பொழுது சரியாக ஆதியின் தொலைப்பேசி மீண்டும் அலற சலிப்புடன் அதை பார்த்தவன் அவனை அழைப்பது காலையில் தான் மதியின் ப்ராஜெக்ட் பற்றி தகவல் விசாரிக்க சொன்னவர் என்பதை அறிந்தவன் மனதினுள், ” ப்ராஜெக்ட், மலையில இருக்குறவங்கள பத்தி, கோடை  னு நிறைவு பெறாத வார்த்தை இது எல்லாம் சேர்த்து ஏதோ வகையில் தொடர்பு இருக்குமோ?” என்றி எண்ணியவன் ஏதேனும், ஏதேனும் சிறு முன்னேற்றம் ஆவது வருமா? அவன் தேடலில் என்கின்ற ஏக்கத்தோடும் கேள்வியோடும் உயிர்பித்தான்.

Advertisement