Advertisement

“அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை!

என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”

 

‘நிலவே முகம் காட்டு..

எனை பார்த்து…

ஒளி வீசு… தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும் நிலாவை பாடிக்கொண்டே பின்தொடர்ந்தான் கோகுல். நிற்காத அவள் கால்கள் அலுவகத்தின் உச்சத்தில் சுடும் வெயிலில் போய் நின்றது.

 

மொட்டை மாடிக்கு சென்ற கோகுல், தனக்கு முதுகு காட்டி நின்ற நிலாவை எதுவுமே பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“இப்போ ஹேப்பி தானே உனக்கு?” எரிச்சலாய் நிலா கேட்க, அதற்க்கும் பதில் சொல்லாமல் சின்ன சிரிப்போடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“இந்த கேஸ்ல எந்த தொல்லையும் இல்லாம ப்ரீயா வொர்க் பண்ணனும்ன்னு நினச்சு தான் யார்ட்டையும் சொல்லாம நேரா எடிட்டர் கிட்டேயே பேசுனேன்.. ஆனா என் நேரம்! எவன்கிட்ட மாட்டவே கூடாதுன்னு நினசேன்னோ அவன்கிட்டயே மாட்டி தொலசுருக்கேன்.. ச்சை” சிடுசிடுத்தாள் இன்பநிலா.

 

“நான் உன்னை என்ன செய்யபோறேன் நிலா?” அப்பாவியாய் கேட்டான்.

 

அதுவரை அவனுக்கு முதுகு காட்டி நின்றவள், அவன் நேரிடையாய் பேசவும் வேகமாய் அவன் புறம் திரும்பினாள். “என்ன செய்வியா? என்னடா செய்யமாட்ட நீ? எங்க போற?எதுக்கு போற? யார பாக்கணும்? இந்த நேரத்துல போகாத! தனியா உனக்கென்ன வேல? இவ்ளோ நேரம் என்ன செஞ்ச? நைட் வீட்டுக்கு போய்டியா? இந்த கேஸ்ல இத நீ பண்ணாத! ப்ளா ப்ளா ப்ளா…” மூச்சுவிட்டவள், “இன்னும் சொல்லிட்டே போகலாம்.. என் அம்மாக்கு மேல கேள்வி கேப்ப நீ… இம்சை.. நினைச்ச நேரத்துக்கு ஒரு வேலை பாக்க முடியாது உன்ன வச்சுக்கிட்டு…” வெளிப்படையாய் தலையிலேயே அடித்துக்கொண்டாள்.

 

“என்னமா பண்றது! உனக்கு எந்த அளவுக்கு மூளை இருக்கோ, அதவிட கொஞ்சம் அதிகமாவே திமிரும் ஆர்வகோளாரும் இருக்கே!! எங்க போனாலும் ஏதாது ஒரு பிரச்சனைய இழுத்துட்டு வந்துடுவ…” சிறிது நக்கலாய் சொன்னான் கோகுல்.

 

“ஹோ!! சார் என்கூட இருந்தா, வர பிரச்சனை கூட வராம ஓடிருமா?” அவளும் நக்கலாகவே கேட்டாள்.

 

“அப்படி இல்ல, அட்லீஸ்ட் பிரச்சனை வரப்போ உன்ன இழுத்துட்டு ஓடவாது செய்வேன்ல!?”

 

“எது?” நிலா முறைக்க, “ஹிஹி சும்மா சும்மா…” என இளித்து வைத்தான் கோகுல்.

 

“ஹும்ம், பல்ல காட்டாத சகிக்கல..!” முகத்தை சுளித்தாள் நிலா.

 

“சரி விடு விடு…! அம்மாவ பார்த்து பத்து நாள் ஆச்சு.. இன்னைக்கு வீட்டுக்கு வரேன்..”

 

“அம்மா வீட்ல இருக்காங்களான்னு கேட்டுட்டு போ..”

 

“ஏன் அம்மா எங்க?”

 

“நேத்து நாலு ஸ்லீபிங் பில்ஸ் சாப்ட்டுடாங்க.. அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்ருந்தேன்.. டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களான்னு கேட்டுக்கோ..”

 

“ஏய் எரும, என்ன ஒளருற? அம்மாக்கு என்ன ஆச்சு?” பதறினான் கோகுல்.

 

அவளோ அசராமல், “என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க என் மம்மி போட்ட மட்டமான ப்ளான்… பட் பாவம், அவங்க பிளான்ல அவங்களே மாட்டிகிட்டாங்க…” என்றாள்.

 

“நீ எல்லாம் பொண்ணே இல்ல..” போனை எடுத்து நிலா அம்மாவிற்கு அவன் அழைக்க, “இதை என் அம்மாகிட்ட நீயே சொல்லிடு, ஒரு பையனை எனக்கு கட்டிவச்சு அவன் வாழ்க்கையை சீரழிக்க பாக்குறாங்க” என சிரித்தாள்.

 

அடுத்த அரைமணிநேரத்தில் கோகுல் நிலாவின் வீட்டு அழைப்புமணியை அழுத்தியிருந்தான். கதவை திறந்த தேவியிடம், “என்ட சொல்லிருக்க்கலாமே அம்மா, எதுக்காக இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? எதாச்சும் ஆகிருந்தா என்ன செஞ்சுருக்க முடியும்?” அவரை பேசவே விடாமல் இவனே பேச, அவன் கன்னத்தை வாஞ்சையாய் வருடியவர், “எப்போ கண்ணு ஊருல இருந்து வந்த?” என்றார்.

 

“நேத்து நைட்டே வந்துடேன்.. நீங்க பேச்சை மாத்தாதீங்கம்மா! அவதான் ஒரு ராட்சஸின்னு தெரியும்ல,, எந்த நம்பிக்கைல மாத்திரையை முழுங்குனீங்க?” தொடர்ந்து அவன் கேக்க, “என் புள்ளையாச்சே! மனசு எறங்குவான்னு நினச்சேன்..” என்றார் விரக்தியாய்.

 

“மனசா? அது எங்க இருக்கு அவகிட்ட? நானும் கூட படிச்ச காலத்துல இருந்து அவள பார்த்துட்டு இருக்கேன்.. இத்தனை வருஷம் மாறாத அவ குணம் ஒரு நிமிஷத்துல மாறிடுமா? எல்லாமே நேரம் எடுக்கும்மா…”   

 

“காலமும் கடலலையும் யாருக்காகவும் நிக்காது கோகுல். இன்னும் ரெண்டு வாரத்துல நிலாக்கு ராகு திசை தொடங்கபோகுது.. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் செய்யலன்னா, அதுக்கு பிறகு அவ வாழ்க்கைல கல்யாண யோகமே இல்லன்னு சொல்லிட்டாங்க…”

 

“எவனாது ஏதாது சொல்லிட்டா அத அப்டியே நம்பிடுவீங்களா அம்மா?”

 

“என்ன பண்றது கோகுல், வயசாக வயசாக பயம் கூடுது.. அப்பா இல்லாத பொண்ணுன்னு ரொம்பவே செல்லமா வளர்த்துட்டேன்.. எனக்கு பிறகு இவளை பார்த்துக்க ஒருத்தன் இருந்தா நிம்மதியா என் மிச்ச காலத்தை ஓட்டுவேன்..” தேவி சொல்ல, “அதுக்காக இன்னும் ரெண்டு வாரத்துல நிலாக்கு கல்யாணம் பண்ண போறீங்களா?” என்றான் கோகுல்.

 

“அவ சம்மதிச்சா நாளைக்கே கூட நடத்தி வச்சுடுவேன்..” திடமாய் சொன்னார் தேவி.

 

“மாப்பிளை எல்லாம் பாக்க வேணாமா? அப்டியே கிடைச்சாலும் நம்ம அவசரத்துக்கு எப்படிம்மா ஒத்துவருவாங்க?”

 

“மாப்பிளை பத்தி பிரச்சனையே இல்ல, ரெடியா இருக்காங்க..”

 

“யாருமா அது? நல்லா விசாரிச்சீங்களா? நல்ல பையனா? என்ன வேல? எந்த ஊரு?” கோகுல் கேள்விகளை அடுக்க, “சொல்றேன் இரு..!! இதோ இந்த போட்டோல இருக்காங்க பாரு..  இவங்களும் நாங்களும் ரொம்ப நெருக்கம்..” மேசை டிராயரில் இருந்த ஒரு பழைய குடும்ப புகைப்படத்தை எடுத்து காட்டி சொன்னார் தேவி.

 

“நிலா அப்பாவும் நானும் கல்யாணம் ஆகி குடி போனதே இவங்க ஊருல தான்.. அவங்களுக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க.. பக்கத்து பக்கத்து வீடுங்குறதால நல்லா பழகுனோம்.. வேணி அக்காக்கு என்மேல ரொம்ப பாசம்.. அதே போல வேணி வீட்டுகாரரும் நிலா அப்பா கூட ரொம்ப நல்லா பழகுவாரு.. நிலா பொறந்து ஆறு வருஷம் வரைக்கும் அங்க தான் இருந்தோம்.. அப்புறம் நிலா அப்பாக்கு சென்னைல ஒரு நல்ல வேல கிடைச்சுதுன்னு அங்கிருந்து கிளம்பி வந்துட்டோம்.. ஆனாலும் இப்போ வரைக்கும் நானும் வேணியும் அதேமாறி தான் பழகிட்டு இருக்கோம்.. அந்த பழகத்துல தான் அவ பையன என் பொண்ணுக்காக கேட்டேன்.. சந்தோசமா சரின்னு சொல்லிட்டா… ஆனா நிலா தான் முரண்டு புடிக்குறா”

 

“ஹோ!! அப்போ குடும்பம் பத்தி கவலை இல்ல… ஹும்ம்!! ஆமா ரெண்டு பையன்ல எந்த பையனுக்கு கேட்ற்றுகீங்க?”

 

“மூத்தவனுக்கு தான்… ரெண்டு புள்ளையுமே சொக்க தங்கம்… பெரியவன் பரம சாது… ஏதோ யூபிஎஸ்இ பரிச்சைக்கு தீவிரமா படிக்குதாம்.. ரெண்டு வருஷமா குஜராத்ல படிச்சுட்டு இருந்துருக்கு.. அடுத்த வருஷம் வேலை கிடைச்சுருமாம்…”

 

“ஐயைய? வேலை இல்லாதவனுக்கா பொண்ணு குடுக்க போறீங்க?” கோகுல் சற்றே எரிச்சலாக, “வேலை இல்லனா என்ன? வீட்டோட மாப்பிளையா இருக்க வேற யாரும் வர மாட்டங்க… நிலாவ அனுசரிச்சு நடந்துக்க அந்த புள்ளையை விட்டா வேற யாரும் கிடைக்காது… வேலை இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போய்டும்.. வாழ்க்கைக்கு நல்ல குணம் தான் முக்கியம்…” என்றார் தேவி.

 

“என்னமோ சொல்றீங்க? இப்டி ஒருத்தனுக்கு அவ எப்படி சரின்னு சொல்லுவா? நிலாகிட்ட பையன் யாருன்னு சொல்லிட்டீங்களா?”

 

“இன்னும் சொல்லல.. கல்யாணம்ன்னு சொன்னாலே காத அடைச்சுக்குறா!!” தேவி குறைபடிக்க சரியாய் அந்த நேரம் வீட்டுற்குள் வந்தாள் இன்பநிலா.

 

அவர்கள் பேச்சு அதோடு நிற்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்.. செருப்பை அதனிடத்தில் வைத்துவிட்டு, வந்தவள் தன் கைபையை ஒரு வீசு வீச, சொல்லிகொடுத்ததை போல அது அவளது ஆபிஸ் டேபிளில் சென்று படுத்தது.   கையில் துவாலையுடன் குளியறைக்குள் அவள் நுழைந்துவிட்ட பின்பே இருவரும் கவனம் கலைந்தனர்.

 

“அவ சம்மதிப்பான்னு நினைக்குறீங்களா அம்மா?” என்றான் கோகுல்.

 

“அவ நல்லா இருக்கணும்ன்னு தானே சொல்றேன்.. சம்மதிச்சா சரி, இல்லனா ஏதோ நடக்கட்டும்…” சோபாவில் தளர சாய்ந்து கண்மூடிக்கொண்டார் தேவி.

 

குளியலறையில் இருந்து வெளியே வந்த நிலா துவாலையில் முகம் துடைத்தபடியே, “இன்னும் கொஞ்ச நாள்க்கு நான் ரொம்ப பிசி, முக்கியமான ப்ராஜெக்ட் எடுத்துருக்கேன்.. நிறைய நேரம் ஸ்பென்ட் பண்ண முடியாது.. சோ, வர சட்டர்டே மார்னிங் இலவன்-குள்ள  க்ரோம்பேட் ரெஜிஸ்டர்ஆபிஸ்க்கு எல்லாரும் வந்துடுங்க… நான் எல்லாம் பேசிடுறேன்.. பார்மாலிடீஸ் பெருசா இருக்காது.. ஜஸ்ட் சைன் மட்டும் போட்டுட்டு போறதுதான்..” நிலா சொல்ல வருவதை க்ரகிக்கவே இருவருக்கும் பல நொடிகள் ஆனது.

 

புரிந்த பின்பு தேவிக்கு நம்ப முடியாத சந்தோஷத்தில் நடுக்கமே எடுக்க தொடங்கியது. கோகுலோ, “நீயே ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பேச போறியா?” என்றான் வியப்பாய்.

 

“ஆமா, ரெஜிஸ்டரர் நம்ம முரளி சர் தானே?” என்றாள் இலகுவாய்

 

கோகுல் பதில் சொல்லும் முன், அலைப்பேசியில் ரெஜிஸ்டரரை அழைத்தவள், பேச வேண்டியதையெல்லாம் பேசிமுடித்தாள்.

அவள் பேசும்வரை அமைதிகாத்தவன், போனை வைத்ததும், “உன் கல்யாணத்துக்கு நீயே பேசி முடிச்சுடுவியா? கொடுமை…” தலையில் அடித்துக்கொள்ள, மெலிதாய் சிரித்தாள் நிலா.

 

வேணியிடம் இந்த நல்ல செய்தியை பகிர்ந்துக்கொள்ள தேவி மொபைளுடன் சென்றுவிட,  “இவ்ளோ நாள் ஒத்துக்காம இப்போ மட்டும் என்ன, திடீர்ன்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்ற? அதும் இந்த வீகென்டே வச்சுகுரமாறி ப்ளான் வேற… சம்திங் ராங்..”    

 

“நத்திங் ராங்.. என்னை சம்மதிக்க வைக்க இன்னும் ஏதாது மட்டமான டிவி சீரியல் பிளான்ன என் மம்மி எக்ஸீக்யூட் பண்றதுக்குள்ள நம்மளே வந்து கம்மிட் ஆகிடலம்ன்னு டிசைட் பண்ணேன்.. அவ்ளோதான்..”

 

“ஹும்ம்…. உன்னை கட்டிக்க போற அந்த புண்ணியவான் தான் என்ன கஷ்டபடபோரானோ தெரியல.. அவருக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்…” உண்மையான வருத்ததுடன் கோகுல் சொல்ல, “எஸ்.. பாவம் அவன்…” என்றாள் நிலா.

 

“ஹே உனக்கு பார்த்துருக்க மாப்ளை யாருன்னு தெரியுமா? அவர் உன்னோட இதே வீட்ட ஷேர் பண்ணிக்க ஓகே சொல்லிருக்காரு.. கவர்ன்மென்ட் ஜாப்க்கு சின்சியரா ட்ரை பண்றாரு…” கோகுல் சொல்ல தொடங்கவே, “அவன் எங்க வேணி ஆன்ட்டி பையன்.. அண்ணா யூனிவர்சிட்டில எம்.பி.ஏ கோல்ட் மெடலிஸ்ட்.. ரொம்ப பொறுமை, சாது… கடஞ்சு எடுத்த நல்லவன்… எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்…” சொல்லிமுடித்தாள் நிலா.

 

“ம்ம்ம்… அம்மா உனக்கு எதும் தெரியாதுன்னு சொன்னாங்க..?!! நீ என்னன்னா இவ்ளோ டீடைல்ஸ் சொல்ற!!! ம்ம்ம்… ஆமா, அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு பேரு என்ன?” கோகுல் கேட்க,

 

குளிர்சாதனபெட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து அருந்தியவள், கண்களை மூடி அனுபவித்தபடி, “இனியன் இளஞ்செழியன்” என்றாள்.

-தொடரும்…

Advertisement