Advertisement

ச்சே… ஆத்தா கனி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்…. உனக்கு போய் நான் இந்த கருவா பயல கட்டி வைச்சிட்டேன்தா… நீ இருக்குற அழகுக்கு இவன் கொஞ்சம் மட்டம்தான் நீவேணா பாரு கல்யாணத்துல எல்லாரும் இந்த பொண்ணுக்கு போய் இந்த பையனான்னு கேட்கப்போறாங்க..??”.நகைப் பெட்டியில் இருந்த காசு மாலையை எடுத்து அவள் கழுத்தில் அணிவிக்க…
 
நான் கருவா பயலா…… அந்த பக்கம் வந்த கனியை நிறுத்தி தன் கையை எடுத்து கனியின் கையோடு சேர்த்து வைத்து பார்க்க.. அவளின் பளிர் நிறத்திற்கு அவன் மாநிறம் கொஞ்சம் குறைவாக தெரியவும்…கனியின் பட்டுச் சேலைக்கும் நகைக்கும் நாம கொஞ்சம் மட்டமாத்தான் இருக்கோமோ… சத்தம் இல்லாமல் பட்டுவேட்டி .சட்டையை போடச் சென்றான்… இந்த அம்மா ஒருத்தரே போதும் நம்மள டேமேஜ் பண்ண….
என்னத்தை அவங்கள போய் கருவா பயன்னு சொல்லிட்டிங்க… அவங்க ஒன்னும் கருப்பு இல்லை..??”.கனி தன் கணவனுக்கு வக்காலத்து வாங்க…..
 
அதுதான் எனக்கு தெரியுமேத்தா… அவன் சிங்கம்னு… அப்படியே உங்க மாமா மாதிரி…  அதோட ஆம்பளைக்கு எதுக்கு கலரெல்லாம் பொண்டாட்டிய கண்கலங்காம வைச்சு காப்பாத்துனா பத்தாதா… அதெல்லாம் என் மகன் கெட்டித்தா… ஆனா நாம போறோம்பாரு கல்யாணம் அவங்க கொஞ்சம் ஒரு மாதிரி…. ரொம்ப காலத்துக்கு  அப்புறமா போறமா… என் மகன சிங்கம் மாதிரி கொண்டு போய் அவங்க முன்னாடி ஜம்முன்னு நிறுத்தனும்னு எனக்கு ஆசை…. பாருங்கடா என் மகன… உங்க எல்லாரையும் விட நான் நல்லாத்தான் வளர்த்திருக்கேன்னு நான் காட்டனும்தா…அவன் ஒன்னும் குடிகாரனோ…பொம்பள பொறுக்கியோ… பொண்டாட்டிய வைச்சு குடும்பம் நடத்த தெரியாதவனோ இல்லைன்னு….??” பேசும் போதே அவர் கண்கள் கலங்க… கனிக்கு புரிந்தது அவர் மனதின் காயம்…… இவளுக்கும் கண் கலங்கியது…..
 
தன் அத்தையின் கையை பிடித்தவள்…. என்னை மன்னிச்சிருங்க அத்தை…. எல்லாம் என்னாலதான்…நான் மட்டும் வீட்டவிட்டு போகாம இருந்திருந்தா அவங்களெல்லாம் இப்படி பேசியிருப்பாங்களா…??”
 
விடுத்தா நீ என்ன தெரிஞ்சா பண்ணுன….  தன் தம்பி மகளை தட்டிக் கொடுக்க… துரை பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக இறங்கி வந்தான்….
 
மூவரும் திருமணமண்டபத்திற்குள் நுழைய பலபேர் ஆச்சர்யமாக மீனாட்சியையும் துரையையும் பார்த்தனர்…. கூடவே வந்த கனியையும் பார்க்க… மீனாட்சி அங்கிருந்த தெரிந்தவர்கள அனைவரிடமும் துரையையும் கனியையும் அறிமுகப்படுத்த துரைக்கும் சிலபேரை அடையாளம் தெரிந்தது… பேங்கில் மேனேஜராக இருக்கிறான் என்று தெரிந்ததும் பல பேர் அவனை மரியாதையாக பார்க்க அவனிடம் வலிய வந்து பேச்சுக் கொடுத்தனர்… நேற்று கோவிலில் பார்த்த பஞ்சாயத்துகாரர்கள் சிலபேரை பார்க்கவும் அவர்களோடு துரை பேசிக் கொண்டிருக்க கனி மீனாட்சியோடு அமர்ந்திருந்தாள்…... மருமகள் வீட்ட விட்டு ஓடிபோச்சுன்னு சொன்னாங்க… இல்லையா…இப்ப திரும்பி வந்துருச்சு போல…??”சில வம்பர்கள் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருக்க… பல வயதான பெரியவர்கள் பாசமாகவே வந்து பேசினர்….
 
சிறிது நேரம் கழித்து யாரோ மீனாட்சியை கூப்பிடவும் கனியிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றவர் அவர்களோடு அங்கேயே சேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கவும் கனிக்குத்தான் பொழுதே போகவில்லை… சுற்றிலும் பார்வையை ஓட்டியவள்….எங்கு பார்த்தாலும் பணத்தை தண்ணீராக செலவழித்திருப்பதை கண்டாள்…. இந்த காசை வைத்து பத்து கல்யாணத்தை முடிச்சிரலாம் போல என நினைத்துக் கொண்டிருக்க ஒரு புறம் சில இளம் வயது ஆண் பெண்கள்  அங்கிருந்த மேடையில் ஆடிக் கொண்டிருக்க… அதற்கு எதிர்புறம் சில பேர் மைக் வைத்து பாடிக் கொண்டிருக்க ஒருவரும் அதை பார்க்கவில்லை… அனைவரும் சேரை சுற்றிலும் போட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் ஒருவரும் மேடையில் ஆடுபவர்களையோ…. மறுபுறம் பாடுபவர்களையோ கண்டு கொள்ளவே இல்லை… கனிக்கு என்னவோ ஒரு நல்ல கலையை அவமானப்படுத்துவது போல இருக்க இவள் அங்கு பாடிக்கொண்டிருந்தவர்களின் பாடலை ரசிக்க ஆரம்பித்தாள்….சற்று நேரம் கழித்து  அதை நிறுத்திவிட்டு அனைவரும் சாப்பிட செல்ல தன் பின்னால் யாரோ இரண்டு பெண்கள் பேசுவது இப்போது கனியின் காதுகளில் விழுந்தது…
 
ஏய் சூப்பர்டி ஆளப்பாரு அப்படியே சூப்பரா இருக்காருல…??”
 
இந்த பொண்ணுக யாரப்பத்தி பேசிக்கிட்டு இருக்குக…
 
லேசாக அந்த பெண்களை திரும்பி பார்க்க நல்ல அழகான வயது பெண்கள் யாரையோ பாராட்டி பேசிக் கொண்டிருக்க…
பட்டு வேட்டி சட்டையில மாப்பிள்ள மாதிரி இருக்காரு…. எங்க பாட்டி பேசிக்கிட்டு இருந்தாங்க அவங்களும் நமக்கு பங்காளி வீடுதானாம்டி… ரொம்ப நாளா வேற ஊர்ல இருந்துட்டு இப்ப இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காராம்…??”
 
மறுபெண்ணோ... ப்பா என்ன உயரம்…… என்ன அழகு.. அப்படியே சினிமா ஸ்டார் மாதிரி இருக்காரு….??”
 
கனிக்கு  அம்மாடி….. இந்த பொண்ணுக என்ன ஒரு ஆம்பளய போய் இப்படி பாராட்டி பேசிக்கிட்டு இருக்குதுக… லேசாக பார்வையை சுழற்ற நிறைய ஆண்கள் பட்டுவேட்டி சட்டை அணிந்திருந்தனர்… இதுல யாரா இருக்கும்….
 
ஏய் இவருக்கு கல்யாணம் ஆயிருச்சா முதல்ல அத கேட்டியா… அதுதான்டி முக்கியம்… என்ன வேலை பார்க்கிறாராம்…??”
 
ம்ம்ம்ம் எல்லாம் விசாரிச்சிட்டேன்… அவர் பேங்க்ல மேனேஜரா இருக்காராம்….??”
 
கனிக்கு இப்போதுதான் சந்தேகம் வந்து காதை கூர்மையாக்க….
 
 என்ன கல்யாணம் ஆயிருச்சாம்… ஆனா பாரு அந்த பொண்ணு ஒரு லூசு போல…. கல்யாணத்தன்னைக்கே இந்த மாப்பிள்ளைய போய் வேண்டாம்னு விட்டுட்டு போயிருச்சாம்…??”
 
ஏய் சூப்பர் நியூஸ்டி…. கண்டிப்பா அந்த பொண்ணுக்கு கிறுக்குத்தான் பிடிச்சிருக்கும் போல….
 
இவர்கள் பேச பேச கனிக்கு கண் கலங்கியது…..
ஆனா அந்த லூசு மறுபடியும் திரும்பி வந்திருச்சாம்டி….?”
என்னடி மறுபடியும் குண்டைத்துக்கி போடுற..??”.
 
ஏய் அத பத்தி நீ கவலைப்படாத… ஒருதரம் வீட்டவிட்டு போனவள மறுபடியும் எப்படிடி வீட்ல சேர்த்துக்குவாங்க.. அதுவும் இந்த மாதிரி சூப்பர் ஹீரோ அவங்கள அடிச்சே விரட்டியிருக்க மாட்டாரு…ஒரு வருசம் வெளியில இருந்துட்டு வந்திருக்கா எவன் எவனோட எப்படி இருந்தாலோ… அவனுக எல்லாம் இவள விரட்டி விட்டுருப்பாங்க… மறுபடியும் இவங்கள பார்க்கவும் அவ கால்ல விழுந்து கெஞ்சியிருப்பா அதுனால போனா போகுதுன்னு கொஞ்ச நாளைக்கு வைச்சிருந்திட்டு வெளிய அனுப்பினாலும் அனுப்பிருவாங்க…. இவர் மட்டும் நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு மாப்பிள்ளையானா போதும்டி சொத்துக்கு சொத்தும் ஆச்சு சூப்பர் ஹீரோவ கட்டுன மாதிரியும் ஆச்சுடி… வா நாம போய் அடிக்கடி அவர் கண்ணுல படுற மாதிரி நடப்போம்… முடிஞ்சா நம்மள பத்தி ரெண்டுவார்த்தை சொல்லி வைப்போம்…??” இருவரும் எழுந்து செல்ல….
 
கனிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… நாம லூசா… இந்த பொண்ணுக அவங்கள மயக்கிருவாங்களா… துரையை தேடிப்பார்க்க… அவன் அங்கிருந்தவர்களோடு பேசிக்கொண்டே கனியை பார்க்க… இப்போதுதான் அவளுக்கு புரிந்தது…அவன் வாழ்க்கையின் உயரம்….தரம்..தான் செய்த மிகப்பெரிய தவறு… ஒரு பெண் வீட்டை விட்டு சொல்லாமல் போனால் என்னன்ன கெட்ட பேர் கிடைக்கும் என… அந்த பெண்ணின் ஒழுக்கமே ஒரு கேள்விக்குறியாகும் என. இவள் நினைத்தே பார்க்கவில்லை.. தான் அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா…. ..இல்ல நான் அப்படி ஒழுக்கம் தவறுனவ இல்ல…. தன் கணவனை பார்க்கவும் தன்னை அறியாமல் நாமதான் இவங்க பொண்டாட்டி… யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டேன்…. என்ன கோபம் இருந்தாலும் என்ன பொண்டாட்டியா ஏத்துக்க வைப்பேன்… அவனையே பார்க்க துரைக்கு யோசனையாக இருந்தது…  என்னாச்சு இவளுக்கு… அதற்குள் அந்த இரு பெண்களும் அவனை நோக்கிச் செல்ல…
 
தன்னை அறியாமல் எழுந்த கனி துரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…
தன்னை நோக்கி கனி வருவதை கண்டவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வர…..  அந்த பெண்கள் அவனிடம் செல்லும் முன் வேகமாக இவள் துரையிடம் சென்றிருந்தாள்…
 
ஏய் எதுக்கு இப்ப இவ்வளவு வேகமா வர்ற… ??”அவளை நெருங்க… அந்த பெண்களை பார்த்தவள்….
அவன் கையை பிடித்தபடி… ஒன்னுமில்லங்க ரொம்ப நேரமா தனியா இருக்க என்னமோ மாதிரி இருந்துச்சு…??” அந்த பெண்களையே பார்த்தபடி சொல்ல…
 
என்னடா ஆச்சு நம்ம பொண்டாட்டிக்கு…தன்னால நம்மகிட்ட வந்திருக்கா…நம்ம கையை வேற பிடிக்கிறா… கனியோ பிடித்த கையை விடாமல் வாங்க நாம போய் அந்த சேர்ல உட்காருவோம்…??”அவனை இழுத்துபடி நடக்க ஆரம்பிக்க…. இவளுக்கு எங்க கொஞ்சம் விட்டா இந்த பொண்ணுக இவங்ககிட்ட பேசிருவாங்களோ… துரையும் அந்த நிமிடத்தை அனுபவித்தே அவளோடு சென்றான்… அவன் பக்கத்தில் சேரில அமர… அந்த பெண்கள் சற்று தள்ளி நின்று கனியையே முறைத்து பார்ப்பது தெரிந்தது…
 
ஏய் போங்கடி என்னோட புருசன சைட் அடிக்காம வேற எவனாச்சும் இளிச்சவாயன் மாட்டுவான் அவன போய் பாருங்க… மனதிற்குள்  அவர்கள் இருவரையும் தாளித்தபடி இருந்தவள் அங்கிருந்தவரை துரையை விட்டு விலகாமல் பசை போலவே ஒட்டி அமர்ந்திருந்தாள்… முதலில் எதுவும் புரியாமல் அமர்ந்திருந்த துரைக்கு நொடிக்கொரு தரம் கனியின் பார்வை அங்கிருந்த  இருபெண்களின் மேல் மீண்டு வர… அதை பார்த்தவன்.. அந்த பெண்களும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவனுக்கு புரிந்தது…
 
அட நம்ம பொண்டாட்டிக்கு பொறாமையா… ஆஹா… இந்த பொண்ணுக நம்மள சைட் அடிக்கிறது நம்ம ராட்சசிக்கு புடிக்கலையோ….. வேண்டும் என்றே அந்த பெண்கள் இருக்கும் பக்கம் திரும்பி அமர… கனி சேரை எடுத்து அந்த பக்கம் போட்டு அமர்ந்தவள் அவர்களை மறைத்தபடி அமர்ந்தாள்…
 
அவளையே பார்த்தவன்… என்னாச்சு ஏன் இந்த பக்கம் மாறி உட்கார்ந்த..??”.
 
அது ஒன்னும் இல்லங்க… அந்த பக்கம் ரொம்ப வேர்க்குது அதான்??”
 
ஆமா… ஆமா… இந்த ஏசியில கொஞ்சம் வேர்க்கத்தான் செய்யுது….?” அவளையே பார்த்தபடி சொல்ல அவளோ பார்வையை வேறுபுறம் திரும்பியிருந்தாள்…சாப்பிட சென்றிருந்த பாட்டு கச்சேரி செய்பவர்கள் மீண்டும் வந்து பாட ஆரம்பிக்க…..
 
          கண்ண காட்டு போதும்
               நிழலாக கூட வாரேன்
          என்ன வேணும் கேளு
               குறையாம நானும் தாரேன்
         நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
               ஒட்டுறியே உசுர நீ நீ ..
        நிச்சயமாகலா சம்பந்தம் போடல
               அப்பவுமே என் உசுரு நீ நீ
         அன்புல வேத வேதச்சி
            என்ன நீ பறிச்சாயே ..
         கண்ண காட்டு போதும்
            நிழலாக கூட வாரேன்
        என்ன வேணும் கேளு
            குறையாம நானும் தாரேன் 
 
இந்த பாடலை பாடவும் துரை கனியைத்தான் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்… உனக்கு ஏண்டி மத்த பொண்ணுகளை பார்த்து பொறாமை… நீ என்னோட ஏஞ்சல்… மகாராணிடி… நீயும் என்னை விரும்புறேன்னு கண்ண மட்டும் காட்டுடி… நான் உன்னே வேற உலகத்துக்கு கூட்டிட்டு போறேன்…
 
கனிக்குமே ஒன்று புரிந்தது நாம அன்னைக்கு இவங்கள விட்டு போயிரக்கவே கூடாது…… கல்யாணம் பண்ணுனதுக்கு  அப்புறம் இவங்கதான் நமக்கு எல்லாமே… நாம அன்னைக்கு இவங்களுக்கு நல்லது பண்ணுறதா நினைச்சு விட்டுட்டு போனது பெரிய தப்பு…எதுவுமே தெரியாத இந்த ரெண்டு பொண்ணுகளே இப்படி பேசுறாங்களே… அப்ப இவங்கள அங்க இருக்கவங்க என்னன்ன பேசியிருப்பாங்க.. இவங்க மனசு நம்மளால எவ்வளவு வேதனை பட்டிருக்கும் … ஆனா நம்மள பார்க்கவும் ஒரு வார்த்தை கேட்காம நம்மள கூட்டிட்டு வந்துட்டாங்க… ஒரு வேளை நாம இவங்களோட மாமா பொண்ணுன்னு தெரியவும் கோவிச்சுக்காம ஏத்துக்கிட்டாங்களோ  .. ஆனா நாம இவங்க மனசுல இடம் பிடிக்கனும்… அவங்க மனசுல இருக்கிற வெறுப்பு மறைஞ்சு நம்ம மேல விருப்பம் வர்ற மாதிரி செய்யனும் மனதிற்குள் உறுதி எடுத்தவள்… தன் பக்கத்தில் அமர்ந்திருந்த துரையின் கைகளை தன் கைகளால் சிறைசெய்தாள்…. அவளுக்கு நம்பிக்கை இருந்தது…. தன்னால் அவன் மனதையும் தன் காதலால் சிறைபிடிக்க முடியுமென்று…
 
                           இனி…………… ?????

Advertisement