Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
    அத்தியாயம்  –  19
 
துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து…. முதலில் ஒரு மாதிரி முழித்தவன்…… பின்…
 
அதே இடத்தில் அமர்ந்து….டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா…..??”
 
துரையும் அங்கிருந்த கல்லில்… கதிரோடு அமர்ந்தவன் தன் காலை ஆட்டியபடி…. என்னடா மாப்பிள்ள குட்நியூஸ்….??”
 
அது ஒன்னும் இல்லடா நாம ஊருக்கு போகவும் கனியையும் தங்கச்சிகளையும் எங்க வீட்ல ஒரு ஆறுமாசத்துக்காவது வைச்சுக்கனும்னு அப்பா சொன்னாங்க… இனிமே கனி எங்க வீட்டுலயே ஒரு ஆறு மாசம் இருக்கட்டும் …??”
 
இப்போது அதிர்ச்சியோடு முழிப்பது துரையின் முறையாயிற்று…..
 
 அப்புறம் யாரோ ஒரு மாப்புள்ள ரொம்பபபபப………. நல்லவன்னு சொன்னியே அவனோட அட்ரஸ குடு நான் போய் அவன பார்த்துட்டு வாறேன்….??”
 
துரைக்கு கதிர் இப்போது கேட்டது காதில் விழவே இல்லை…. கதிர் முதலில் சொன்னதே நியாபகத்தில் இருக்க… கதிர் இப்போது தன் காலை ஆட்டியபடி துரையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்…
 
துரை தன் சுயநினைவுக்கு வந்தவன்…கதிரை பார்க்க அவன் சிரித்துக் கொண்டிருக்கவும் காண்டானவன்… எழுந்து அவன் கழுத்தில் கைவைத்து நெறிக்க….
 
கதிர் அவன் கையை பிடித்தபடி….டேய் நல்லவனே…. இப்ப ஏன் இந்த கொலைவெறி….??”
 
ஏன்னு உனக்கே தெரியல…??”
அதுதான் நல்லா தெரியுதே… உனக்கு எதுவும் பிரச்சனை இல்லாம இருந்தாதான் நீ அடுத்தவனுக்கு பிரச்சனையை குடுக்கிறியே… அதான் நீ எப்பவும் பிரச்சனையோடவே இரு….கொஞ்ச நாளைக்கு தங்கச்சி இல்லாம இருந்து பாரு… அப்பதான் உனக்கு புரியும் என்னோட நிலைமை….??”
 
ஏண்டா என் தங்கச்சிக்கு ஒரு மாப்பிள்ள பார்த்தது குத்தமாடா….??”
அதெல்லாம் ஒன்னும் குத்தமில்ல… உன் சொந்தத்திலேயே நல்ல அழகா… பர்சனால்டியா…. சும்மா ஹீரோ மாதிரி எல்லா அம்சமும் உள்ள ஒருத்தனை வைச்சிக்கிட்டு வெளியில மாப்பிள்ள பார்க்கிற பாரு அதான் குத்தம்…??”
 
தன் தாடையில் கைவைத்து யோசித்த துரை அப்படி ஒருத்தன் இருந்தான்….. அவன்தான் இப்ப உன்னோட தங்கச்சி கனிய கட்டிக்கிட்டானே… வேற…யாரும் எனக்கு தெரிஞ்சு அப்படியே இல்லையே……??” தீவிரமாக யோசிக்க…
 
டேய்………??” காண்டானவன்… துரையோடு மல்லுக்கட்ட…
 
சிரித்தபடி…. டேய் விடுடா… விடு….. அதான் உன் பார்வையிலே தெரியுதே நீ என் தங்கச்சிய ஜொல்லு விடுறது… அந்த தண்ணியில நீஞ்சிக்கிட்டு இருக்கிற எனக்கு மட்டும் தெரியாதா என்ன…??”
 
தெரிஞ்சிருச்சா…. அது உனக்கும் தெரிஞ்சிருச்சா…??” காஞ்சனா பட ஸ்டைலில் சொல்லியபடி  ஒரு பெண் போல வெட்கப்பட்டபடி தன் பெருவிரலால் மண்ணில் கோடுபோட்டபடி மண்ணை தோண்ட
 
ச்சை…கருமம்… கருமம் ரியாக்சன மாத்துடா ….. எனக்கே பயமா இருக்கு…என்னடா தங்கச்சிக்கிட்ட சொல்லிட்டியா… நீ விரும்புறத…??”
 
இல்லடா மாப்பிள்ள நான் இப்ப காயத்ரிக்கிட்ட சொல்லுற மாதிரி இல்ல..??”.
அந்த ஆலமரவேரில் அமர்ந்தவன்… ஏண்டா…??” இவனும் நம்மள மாதிரிதான் போல….வெளியில நல்லாத்தான் பேசுறோம் ஒரு பொண்ண பார்த்தா அப்படியே ஆப் ஆயிருறோமே… தன் சிந்தனையில் இருந்தவனை…
 
 மாப்பிள்ள  தமிழ் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதுலயே அப்பாவும் அம்மாவும் ரொம்ப நொந்து போயிட்டாங்கடா…. அதுலயும்  நீதான் மாப்பிள்ளைன்னு ரொம்ப ஆசையா இருந்தாங்களா… அது நடக்கலைனு ரொம்ப வருத்தம் …  இப்ப கனியும் தன்னோட தம்பி மகன்னு தெரிஞ்ச உடனதான் கொஞ்சம் சந்தோசமா இருக்காங்க.. ஆனா அம்மாதான்  பொண்ண ஒழுங்கா வளர்க்கலையோன்னு ரொம்ப வருத்ததுல இருக்காங்க.. வெளியில சிரிச்சு பேசினாலும் வருத்தத்தை வெளியில காட்டிக்கலை… இந்த நிலைமையில நானும் காயத்ரிய விரும்புறேன்னு போய் நின்னா கண்டிப்பா அவங்களால தாங்க முடியாது…  ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்கடா.. .இப்பவே காயத்ரி மேல நல்ல அபிப்ராயம்  வைச்சிருக்காங்க.. கண்டிப்பா அந்த அபிப்ராயம் ஒரு நாள் இந்த பொண்ணு நமக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்க வைக்குமுன்னு எனக்கு தோனுதுடா… அவங்க காசு பணம் …. ஜாதி அந்தஸ்து எதுவும் பார்க்க மாட்டாங்க பொண்ணு நல்ல குணமா… நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணான்னு மட்டும்தான் பார்ப்பாங்க… அதான் நானும் கொஞ்சம் பொறுமையா இருக்கேன்… இந்த முறை நான் அவங்க மனச உடைக்கிறதா இல்லை… 
 
ஆனா ஒன்னுடா… நான்கூட நினைச்சேன் இந்த தமிழு கொரங்கு எப்படிடா அரவிந்த பார்த்து பழகி ஒரு மூனு நாளு நாள்கூட இல்லை… அதுக்குள்ள அவர விரும்பி.. வெளிநாட்டுல இருந்தவர எப்படியோ திருகுதாளம் செஞ்சு வரவழைச்சு அப்பாக்கிட்ட பெல்டாலயெல்லாம் அடிவாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா…. இந்த லவ்வு என்ன அவ்வளவு பெரிசான்னு… ஆனா உண்மையிலயே அது பெரிசுதாண்டா… இப்ப நீ காயத்ரிக்கு வேற மாப்பிள்ள பார்க்கிறேன்னு சொன்ன உடனயே எனக்கு பக்குன்னு ஆயிருச்சு… என்னால இவள யாருக்கிட்டயும் விட்டுக்குடுக்க முடியாது… நீ மட்டும் கொஞ்ச நாளைக்கு இந்த புரோக்கர் வேலையெல்லாம் விட்டுட்டு பிள்ளை குட்டிகளை பெத்துக்கிற வழிய பாரு…சும்மா என்னோட வழியில குறுக்க வராம.. ஆமா நீயும் தங்கச்சியும் சந்தோசமாத்தானே இருக்கிங்க…இந்த ஒரு வருசத்துல நடந்தத மறக்க பாருடா… ஏதோ கெட்ட நேரம் அதுவும் சின்ன பொண்ணு விபரம் பத்தலை… அது மேல கோபத்தை காட்டிராத. .இந்த மாதிரி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தா கனி வீட்ட விட்டு கண்டிப்பா போயிருக்க மாட்டா… என்னடா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாம ஏதோ யோசனையில இருக்க…சந்தோசமாத்தானே இருக்கிங்க…??”
 
கனியை பற்றி யோசித்தவன்….அதெல்லாம் சந்தோசமாத்தான் இருக்கோம்…  கதிரின் தோளில் கையை போட்டவன்.. அவனை பாவமாக பார்த்தபடி …டேய் இப்ப சொல்லு நீ சொன்னது பொய்தானே … உங்க வீட்டுக்கு கனியகூட்டிட்டு போறேன்… அங்கேயே ஆறு மாசம் தங்கனும்னு சொன்னது….. எல்லாம் சும்மா தானே …. உண்மையை சொல்லு….??”
 
முதல்ல நீ சொல்லு… அந்த மாப்பிள்ளைய பத்தி..??”.
 
டேய்… விளங்காதவனே… அப்படி ஒருத்தன் இருந்தாத்தானே சொல்ல முடியும் …சும்மா உன்கிட்ட போட்டு வாங்கத்தான் அப்படி சொன்னேன்…. நீ உண்மைய சொல்லி தொலை….??”
 
முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு… இல்ல மாப்பிள்ள நான் சொன்னது உண்மைதான்….??”
 
துரையின் முகம் தொங்கி போகவும்… என்ன ஹரிணியையும் ரம்யாவையும் மட்டும்தான் எங்க வீட்டுல தங்க வைக்கனும்னு பேசிக்கிட்டாங்க நான்தான் உன்னை வெறுப்பேத்த கனிய சேர்த்துக்கிட்டேன்…..??”
 
டேய்…….உனக்கு…… இருக்குடா இன்னைக்கு……??” கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு கதிரை அடிக்க விரட்ட… கதிர் அவனுக்கு போக்குகாட்டியபடி ஓட ஆரம்பித்தான்….
 
அன்று மதியம் தடபுடலாக சமைத்திருக்க…. பக்கத்தில் கண்மாய் இருந்ததால் மீனாட்சி கெழுத்தி….. அயிரை… விரால் என கண்மாய் மீன்களை வாங்கி வந்திருந்தார்…. அப்பத்தா தன் கையாலேயே அதை மண் சட்டியில் குழம்பு வைத்து  விரால் மீனை வறுத்திருந்தார்… அப்படி ஒரு கைமணம்… அனைவரும் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு படுத்துறங்கியவர்கள் சாயங்காலம் தங்கள் குத்தகைக்கு விட்டிருந்த நிலங்களையும் கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கும் நிலங்களையும் சென்று பார்வை இட்டு திரும்ப  இவ்வளவு நிலமா… இத்தனை சொத்த விட்டுட்டா அத்தை அங்க இருக்காங்க…  நிலம் ஏக்கர் ஏக்கராக இருந்தது… துரைக்கு எப்படியும் கேஸ் தன் பக்கம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.. ஜெயித்தபின் இதை நல்ல முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழ…. கனியும் இதில் என்ன என்ன பயிரிட்டு இருக்கிறார்கள் என்பதை ஆர்வத்துடன் பார்த்திருந்தாள்… துரை அப்பாவுடைய சித்தப்பா மகனிற்குதான் வயிறு எறிந்தது… இந்த பணம் கொழிக்கிற நிலத்தை இவன்  வந்து பார்த்தா நான் குடுத்திருவனா இத்தனை வருசம் நான்தான் பார்த்துக்கிட்டேன்… இனியும் இது எனக்குத்தான் கேஸ் மட்டும் தோற்கிற மாதிரி இருந்தா உன்னை கொல்லக்கூட தயங்க மாட்டேன்டா…. மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தான்….அன்று இரவும் இவர்களின் அரட்டையோடு செல்ல….
 
 மறுநாள் கல்யாணம் என்பதால் துரை குடும்பம் மட்டும் இருக்க மற்றவர்கள் கிளம்புவதாக சொல்லவும் மீனாட்சி அவர்களை இருக்க சொல்லியவர் மதியத்திற்கு மேல் எல்லாரும் சேர்ந்து போகலாம் காரில் இடம் பத்தாது என சொல்லி அவர்களையும் இருக்கச் சொல்ல இன்று காயத்ரியும் கனியின் தங்கைகளும் சேர்ந்து பிரியாணி செய்வதாக சொல்லவும்  முத்துராமன் அதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தார்….
 
கனி கல்யாணத்திற்கு கிளம்பி வர…… துரை கனியை பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்… பட்டு சேலை கட்டினாலே பெண்களுக்கு தனி அழகுதானோ… இந்த பட்டும் இவ எடுக்கலையே… பட்டையே பார்த்துக் கொண்டிருக்க… இந்த சேலையை இவ கட்டி பார்த்திருக்கமே எப்ப…. மண்டையை தட்டி யோசிக்க….
 
காயத்ரி சேலை ரொம்ப அழகா இருக்கு கனி…??”
 
இது என்னோட கல்யாணப்பட்டுக்கா… நான் வேற சேலைதான் கொண்டு வந்தேன்… அத்தைதான் அதில பார்டர் கம்மியா இருக்குன்னு இத கொண்டு வந்திருப்பாங்க போல இப்பதான் குடுத்தாங்க... தலையில் மல்லிகை பூ வைத்த படியே பதில் சொல்லிக் கொண்டிருக்க…
 
என்ன இருந்தாலும் நம்ம அம்மா அம்மாதான்…. தன் அம்மாவை மனதிற்குள் கொஞ்சியவன்…தன்னையே பார்த்தபடி வந்த தாயை கண்டவன் … என்னடா இது சாதாரண வேட்டி சட்டையை கட்டியிருக்க… போய் பட்டு வேட்டி சட்டையை போட்டுக்க…??”
 
ம்மா…. எனக்கா கல்யாணம்……நீங்க ரொம்ப பண்ணுறிங்கம்மா….. எனக்கு. இதுவே போதும்..??”.
 

Advertisement