Advertisement

 அத்தியாயம்  –  16(1)

 கோவிலுக்கு சென்று வந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது.. சுபா காலையில் காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருக்க தருண் பள்ளிக்கு சென்றிருந்தான்.. தன் கழுத்தில் இருந்த நோம்பு கயிறை கழட்டியவர்கள் மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு புழக்கமில்லாத கிணற்றில் போடலாம் என முடிவு செய்து சுபாவிடமும் வாங்கியவள் அந்த கிணற்றை நோக்கி நடந்தாள்..

 

ஸ்ரீ அக்கா இரு நானும் வரேன்..” கத்தியபடி பின்னால் வந்த சுபாவின் குரலை காதில் வாங்காமல்,

 

 நீ காலேஜ்க்கு கிளம்பு நேரமாச்சு.. இன்னைக்கு உங்க வீட்டுக்காரவங்க வேற வரலைன்னு சொன்ன அப்ப நீ நடந்துதானே போகனும் நீ கிளம்பு..”

 

சுபா மணியை பார்த்தவள் மணி எட்டரை ஆகவும்,” ஆஹா நேரம் ஆச்சா..!” தன் காலேஜ் பேக்கை எடுத்தவள் ஸ்ரீக்கு எதிர்பக்கமாக நடக்க ஆரம்பித்தாள்..

 

கிணற்றுக்குள் கயிறை போட்டுவிட்டு வந்தவள் வெறிச்சோடியிருந்த தெருவை பார்க்க எங்காவது தன் கணவன் வருகிறானா என்ற பார்வையும் தெரு முக்கு வரை சென்று வந்தது.. தூரத்தில் நின்ற ஒரு காரை தவிர ஒரு ஆளையும் காணவில்லை

 

தாலிபெருக்கி போட்ட அன்று சூர்யாவை பார்த்தது அதன் பிறகு சூர்யா தன் வேலையில் கவனத்தை செலுத்த பத்துநிமிடங்கள் போனில் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்… இன்று காலையில் எழுந்ததில் இருந்தே ஸ்ரீக்கு  தன் கணவன் நியாபகம்தான் ஒருமுறை பார்த்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியிருந்தது.. சூர்யாவின் நினைவில்,

 

         “ பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே..”

 

 பாடலை முனுமுனுத்தபடி  வீட்டுப்பக்கம் நடந்து வர அவளை உரசினாற் போல வந்து நின்றது அந்த தெரு முக்கத்தில் நின்ற கார்..!! அதை பார்த்த ஸ்ரீ யாரும் அட்ரஸ் தெரியாம அலையிறாங்களோ என்று யோசித்தபடி,

 

 சற்று ஒதுங்குவதற்குள் அதிலிருந்து இறங்கிய கிஷோர் அவள் முகத்தில் மயக்கமருந்து கொடுத்த கர்சிப்பை வைத்து வாயையும் மூட கத்த முடியாமல் அவனிடமிருந்து திமிறியவள் சற்று நேரத்தில் மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.. அவளை காரில் பின் சீட்டில் தூக்கி போட்டவன் தன் காரை வேகமாக கிளப்பியிருந்தான்..

 

இது எதுவும் தெரியாமல் தன் வீட்டு வேலைகளை முடித்த ஸ்ரீயின் தாய் ஒரு அரைமணி நேரம் கழித்து தன் மகளை தேட அப்போதுதான் கோவிலில் இருந்து திரும்பியிருந்த அவள் தாத்தாவிடம்,” மாமா ஸ்ரீ வெளியில நிற்கிறாளா..??”

இல்லையேம்மா எங்க போனா..??”

 

எங்கயும போகலை மாமா.. இங்கதான் இருந்தா இருங்க பார்க்கிறேன் வீடு முழுவதும் பார்த்தவர் காணாமல் அவள் போனிற்கு தொடர்பு கொள்ள அது வீட்டிற்குள்ளேயே அடித்தது…பலமுறை வீட்டிலேயே தேடியவர்களுக்கு நேரம் ஆக ஆக பயம் வரவும் என்ன செய்வது என்று தெரியாமல் சூர்யாவுக்கு தொடர்பு கொண்டு விசயத்தை சொல்ல,

 

நீங்க கவலை படாதிங்க தாத்தா.. நான் அங்கதான் வந்திட்டு இருக்கேன்.. அங்கதான் பக்கத்தில எங்கயாச்சும் போயிருப்பா நான் பார்த்து கூட்டிட்டு வர்றேன்..!!”

 

ஸ்ரீ கண்முழித்த போது ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருந்தாள்.. நன்றாக கண்விழித்து சுயநினைவுக்கு வர முயன்றவளுக்கு கடைசியில் கிஷோரை பார்த்த நினைவு…. அவனா… அந்த வெளங்காதவன்.. நம்மள கடத்திட்டு வந்திட்டானா..!!

 

 நன்றாக எழுந்து அமர்ந்தவள் தன்னைச் சுற்றிப்பார்க்க எதிரில் கிஷோர் இவளை பார்த்தபடி நின்றிருந்தான்..

 

எப்போதும் போல இப்போதும் அவள் அழகை பார்வையிட்டபடிதான் நின்றிருந்தான்.. ஸ்ரீ இன்று விரதம் முடிந்ததால் தலைக்கு குளித்து தலையை விரித்து விட்டிருந்தாள்..ஒரு லாங்ஸ்கர்ட்டும் டாப்பும் போட்டிருந்தவள்.. வீட்டை விட்டு வெளியில் வருவதால் ஒரு ஷாலை எடுத்து போட்டு வந்திருந்தாள்.

 

அவனை பார்த்து முறைத்தபடி எழுந்தவள்,” நீதான் என்னை கடத்திட்டு வந்தியா..? இது எந்த இடம் மரியாதையா என்னை கொண்டுபோய் அங்க விட்டுருடா பாவி..??” அவனை பார்த்து படபடவென கத்தியவளின் அருகில் சென்றவன் அவள் கையை பிடிக்கவர,

 

அவனை விட்டு இரண்டெட்டு பின்னால் வைத்தவள்,” தொடுற வேலையெல்லாம் வைச்சுக்காத கிஷோர் மரியாதையா என்னை விட்டுரு..??”

 

என்ன பேபி விடுறதுக்கா உன்னை இத்தனை நாள் காத்திருந்து தூக்கிட்டு வந்திருக்கேன்… நாம இப்படியே வேற இடத்துக்கு போறோம் அங்க உன் குடும்பமும் இல்ல என்னோட குடும்பமும் இல்ல.. நாம மட்டும் தனியா ஜாலியா இருக்கப் போறோம்.. இந்த நாளுக்காகத்தான் இத்தனை மாசமா காத்திருந்தேன்..”

 

பல்லை கடித்தவள்,” நீயென்ன லூசா கிஷோர் எனக்கு கல்யாணம் ஆயிருச்சு.. இந்த மாதிரி பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சிக்காத, அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சிச்சு உன்னை கொன்னுருவாங்க … மரியாதையா விடுடா லூசே.. கடவுளே அவங்கள எப்படியாச்சும் வரச் சொல்லு தன் கணவன் நினைவில் ஒரு நிமிடம் கண் கலங்கிளாள்..

 

லூசுதான் ஸ்ரீ உன்மேல லூசாத்தான் சுத்துறேன்… நீ என்ன வேணும்னாலும் திட்டு எனக்கு கோபமே வராது… ஆனா இன்னைக்கு நைட் நாம டிரையின்ல கோவா போறோம்.. யாருமே இல்லாம நமக்கே நமக்கு மட்டும் ஏசி கோச் புக் பண்ணியிருக்கேன்.. அதுவரைக்கும் மட்டும் இங்க இருப்போம் சாயங்காலமா கிளம்பலாம்…””

 

ஸ்ரீக்கு வந்த கோபத்தில் அவனை பளார் என அறைய கோபம் வந்தாலும் பல்லை கடித்த கிஷோர்,” நீ எவ்வளவு வேணும்னாலும் அடிச்சுக்கோ திட்டிக்கோ பேபி..!! அதுக்கு உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு.. எப்ப உன்னை பார்த்தனோ அப்பத்தில இருந்து உன்மேல ஆசையா இருக்கேன்…ஒவ்வொரு நாளும் உன்கிட்ட ஒவ்வொரு அழகு தெரிஞ்சிச்சு பேபி..!!”

 

நீ என்னை எப்படா பார்த்த..!! உன்னோட கல்யாணத்தன்னைக்குத்தானே பார்த்த…??” தன் முட்டை கண்ணால் அவனை முறைக்க,

 

ஹா..ஹா..ஹா..இந்த குழந்தைதனம்தான் எனக்கு உன்கிட்ட பிடிச்சிருக்கு.. நீ மட்டும்தான் என்னை அன்னைக்கு பார்த்த. ஆனா நான் உன்னை ஆறுமாசத்துக்கு முன்னாடியே பார்த்துட்டேன்.. அன்னையில இருந்து நீ மட்டும்தான் என்னோட மனசுல… நான் வேணும்னேதான் அந்த போன கீழ போட்டேன் நீ எடுத்து பேசுவன்னு நினைச்சேன் அதுமாதிரி நடந்திருச்சு..

 

முதல் முறையாக ஸ்ரீக்கு இவன் லூசு இல்லையோ சரியான சைக்கோவா இருப்பானோ தன்னை சுற்றி பார்க்க எதுவும் தெரியவில்லை நாம இப்ப எங்க இருக்கோம்னு தெரியலையே  இப்ப என்ன பண்றது யோசித்தவளுக்கு என்ன பண்ணுவதென்று தெரியாமல்,

 

 மெதுவான குரலில், உனக்கும் கல்யாணம் ஆயிருச்சு தானே கிஷோர் உன் மனைவியை இப்படி யாராச்சும் கடத்திட்டு வந்தா நீ சும்மா இருக்கியா..??”

 

ஹா..ஹா…ஹா.. என சிரித்தவன் நீ அவள பார்த்திருக்க தானே அவளை யாராச்சும் கடத்த முடியுமா அவ யாரையாச்சும் கடத்தினாத்தான் உண்டு… ஆனா அதபத்தி எனக்கு என்ன கவலை..”

 

புருசனுக்கு ஏத்த பொண்டாட்டி போல

நீ கவலை படாத பேபி நான் உன்னை தங்கமா தாங்குவேன்..!! உன்மேல ஒரு தூசிகூட படாம குழந்தை மாதிரி பார்த்துக்குவேன்..”

 

ம்ம் என்ன தேவைக்கு என் புருசன் இருக்காரு என்னை தங்கமா தாங்குறதுக்கு நீ போய் உன்னோட பொண்டாட்டிய தாங்கு. மரியாதையா என்னை விட்டுரு..”

 

அவளை நோக்கி வேகமாக வந்தவன்,” புருசனா அவன் அவன்.. உனக்கு ஏத்தவனா அவனும் அவன் மொகரையும் அவன பாக்க பாக்க எனக்கு கொல்லனும் போல இருக்கு..”

 

தன் இருகையால் அவனை பின்னால் தள்ளியவள்,” அவரை பத்தி நீ பேசாதடா, அவரை பத்தி பேசுர தகுதிகூட உனக்கில்லை..??” அவனை விட்டு வெளியே ஓடி போக போனவளை எட்டி  பிடித்தவன்,

 

ப்ளிஸ் பேபி கோவிச்சுக்காத..!! நான் எதுவும் பேசலை நமக்கு யாரும் வேணாம் நாம ரெண்டுபேரு மட்டும் ஒண்ணா இருப்போம் யாரப்பத்தியும் கவலை படாத உன்னை நான் ரொம்ப ரொம்ப விரும்புறேன் நீயும் என்னை ஏத்துக்கோ ..??”அவள் காலில் விழுந்து கெஞ்ச,

 

ஐயோ கடவுளே நாம எப்படி தப்பிச்சு போறது அவன் தன் காலடியில் விழுந்து கிடப்பதை கண்டு கொள்ளாமல் இவள் ஓட்டத்தை துவங்க அடுத்த பத்து நிமிடத்தில் அவனிடம் மாட்டியிருந்தாள்…

 

அவளை மீண்டும் அந்த இடத்திற்கு கூட்டிவந்தவன்,” என்னை மிருகமாக்காத பேபி நான் கோவாவுல போய் நம்ம வாழ்க்கையை துவங்கலாம்னு நினைச்சேன். நீ இதுமாதிரி பண்ணா இங்கேயே உன்னை தொடவேண்டியிருக்கும் பார்த்துக்க.. ஒரு இடத்துல பேசாம இரு.. கட்டிப்போட வேண்டாம்னு நினைச்சேன் என்னை வில்லனாக்காத..!!” அவளை ஒரு மூலையில் கொண்டு வந்து தள்ளிவிட்டவன் வெளியில் செல்ல,

 யாராச்சும் இருக்கிங்களா ப்ளிஸ் வாங்க வாங்க..??” சத்தமாக கத்தவும்

 

அவளை நோக்கி வந்தவன்,” இது காட்டுக்குள்ள இருக்கு நீ நல்லா கத்து, பத்து கிலோமீட்டர் சுத்தி ஒரு ஈ காக்கா கூட வராது இரு இன்னும் கத்துறதுக்கு உனக்கு சாப்பாடு தர்றேன் சாப்பிட்டு கத்து..??”

ப்ளிஸ் கிஷோர் என்னை விட்ரு..??” அவனை கையெடுத்து கும்பிட,

அவளருகில் நெருங்கி வந்தவன்,” ஏன் விடனும் ….?? அவன் முகத்தை பார்க்கும்போதே இவளுக்கு பயமாக இருந்தது … அவன் பார்க்க ஆள் டிப்டாப்பாக இருந்தாலும் மனம் முழுதும் அழுக்காக இருந்தது..

 நீ என்னை தேடி பெங்களுர்வரைக்கும் வந்த ஸ்ரீ நியாபகம் இருக்கா..?? பாட்டி மட்டும் இடையில வராம இருந்தா அன்னைக்கே நாம பறந்து போயிருக்கலாம்.. இல்ல அந்த சூர்யாவோட நீ வராம இருந்திருந்த அங்கதான் சுத்திட்டு இருந்திருக்கனும் அப்பவும் நீ என்கைக்கு வந்திருப்ப?? நான் பண்ணின ஒரே தப்பு அந்த சூர்யாவ கூட்டிட்டு வரச் சொன்னதுதான்..!!”

 

ச்சி வாய மூடு அவரப்பத்தி மட்டும் நீ பேசாத அவங்க எப்படிபட்டவங்க தெரியுமா ..?? உன்னை மாதிரி ஒரு பொறுக்கி இல்லை, நான் ஒன்னும் உன்னோட ஓடிப்போக வரலை நீ செத்துரக் கூடாதுன்னுதான் வந்தேன்… அன்னைக்கே நீ சாகனும்னு விட்டுருக்கனும்டா..

 

இப்பவும் நீ வரலைன்னா நான் செத்துருவேன் ஸ்ரீ …??”தன் பையில் இருந்த விசப்பாட்டிலை எடுத்து அவளிடம் காட்ட,

 

செத்து தொலைடா நான் நிம்மதியா இருப்பேன்.. அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படுறவன் எல்லாம் உயிரோடவே இருக்கக்கூடாது செத்து தொலை..!!”

Advertisement