Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ – அத்தியாயம்  –   3

 

பால்கனியில் இருந்து போன் பேசி முடித்துவிட்டு சூர்யா தன் அறைக்குள் வர அங்கு ஸ்ரீநிதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்… அவளை அருகில் சென்று பார்க்க அவள் குழந்தை முகம் அவனை வசிகரீத்தது…. சித்து முகம்…தன் இரு கைகளையும் கழுத்துக்குள் வைத்தபடி தூங்கி கொண்டிருந்தாள்.. நேற்றிலிருந்து அவளிடம்தான் கோபப்பட்டதை எல்லாம் நினைத்து பார்த்தவன்  அதில் பாதிக்கு மேல் தவறு தன்னிடம் உள்ளதையும் உணர்ந்தான்… இவளாவது உலகம் தெரியாதவ … ஆனா நமக்குத்தான் எல்லாம் தெரியுமே…தான் செய்த முட்டாள் தனம்… அவளை போலவே அவசரபுத்தி….கட்டிலில் சென்று படுத்தவன் விடிவிளக்கில் அவளை பார்த்துக் கொண்டே நித்திரையில் ஆழ முயன்றாலும் அது வருவேனா என அடம் பிடித்தது..

 

அங்கு கிஷோருக்கு அதிர்ச்சி தாங்கவில்லை… அதிலும் ஸ்ரீ…சூர்யாவின் மனைவியா… அவனுக்கு மட்டும் எப்படி எல்லாமே நல்லதா கிடைக்குது… அவன் தேடிப்போகாமலே  என்னாலதான் ஏதோ பிரச்சனை வந்து ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி சிச்சுவேசன் வந்திருக்கு …ஸ்ரீயின் குழந்தை முகத்தையும் அவள் அழகையும் வெகுளித்தனமான பேச்சையும் நினைத்து பார்த்தவனுக்கு  சூர்யாமேல் வந்தது பொறாமையா… இல்லை தனக்கு கிடைக்காத எல்லாம் அவனுக்கு கிடைத்த கோபமா…. வஞ்சமா ஏதோ ஒன்று…. முகம் இறுக பால்கனி  கம்பியை இறுக பற்றியிருந்தவன்…. ஒன்றும் செய்யமுடியாமல் தளர்ந்து போய் தன் அறைக்கு வர…கட்டிலில் அவன் மனைவி படுத்திருந்தாள்.. ஆம்…. இன்று காலைதான் தான் தாலிக்கட்டிய மனைவி…தங்கள் குடும்பத்திற்கும் அந்தஸ்திற்கும் ஏற்றவள்.. இந்த பெங்களூர் மாநகரில் ஏழெட்டு நகைக்கடை வைத்திருப்பவர்களின் ஒரே வாரிசான ஷாலினி மகாராணியை போல் படுத்திருக்க..முதலிரவு அறைக்குள்  அவள் வந்ததிலிருந்து இவனுக்கு ஆணையிட்டது என்ன… எப்படி எப்படி தன்னிடம் நடக்க வேண்டும் என சொன்னதென்ன… அவள் சுட்டுவிரலை கூட தொடவிடாதவள் தன் உறக்கத்தை தழுவ…கிஷோர்தான் தன் உறக்கத்தை தொலைத்திருந்தான்…

 

தன் வாழ்க்கை தன் கைமீறி போனதை உணர்ந்தவன் இனி எதுவும் செய்ய முடியாது தான் இவள் கையில் ஆட்டுவிக்கப்படும் கைபாவையாக மாற போவது உறுதி… .எதற்கு பயந்தானோ அதுவே நடந்துவிட்டது… இந்த வாழ்க்கை வேண்டாம் என்றுதான் ஏதேதோ முடிவெடுத்திருந்தான்… அனைத்தும் பாழ்….. மீண்டும் செக்குமாடாய் இந்த வாழ்க்கைக்கே வந்துவிட்டான்.. ஸ்ரீயோடு பேசியதை நினைத்து பார்க்க தன்னை அறியாமல் அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது…

 

கிஷோர் பெங்களூரில் இருக்கும் மிகப்பெரிய கோடிஸ்வரர்களின் வாரிசு…. சூர்யாவும் கிஷோரும் தங்கள் MBA  படிப்பை ஒரே கல்லூரியில் படித்தார்கள் அப்போது சூர்யாதான் அந்த கல்லூரியின் ஹீரோ…. எல்லாவற்றிற்கும் முன்னால் நிற்பான் பாடமாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் அடிதடியாக இருந்தாலும் இவன் பெயர்தான் பேசப்படும் …. தன் கோபத்தால் அடிதடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் சூர்யாவுக்கு வாயைவிட கைதான் முதலில் பேசும்… கிஷோர் செல்வ செழிப்பில் வளர்ந்தாலும் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன்…அவன் குடும்பத்தில் அவன் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்ததால் ஒரு பெண் குழந்தையை பொத்தி பொத்தி வைப்பது போல அவனை வளர்க்க….அவனும் உலகம் தெரியாமல் ஒரு  கோழையாக வளர்ந்துவிட்டான்…

 

அவன் பெற்றோருக்கு வெளிநாட்டில் சேர்ந்து சுற்றவே நேரம் பத்தாது …தன் மகனைவிட… உலகத்தை சுற்றி பார்ப்பது அவர்களுக்கு பெரியதாகிவிட கிஷோர் தன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். தாயுடைய அரவணைப்பும் தந்தையுடைய அறிவுரையும் இல்லாமல் பாசத்திற்கு ஏங்கி தன் பாட்டியே எல்லாம் என அறிந்திருந்தான்… அவரும் தன்னுடைய பிசினசை தேவையான ஆட்களை போட்டு பார்த்துக் கொண்டவர் எங்கே கிஷோரை வெளியில் விட்டால் தன் மகனை போல தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிடுவானோ என நினைத்து எப்போதும் தன் கண்பார்வையிலேயே வைத்துக் கொண்டார்… இவர்கள் இருக்கும் வசதிக்கு அவனுடைய கல்லூரி படிப்பை வெளிநாட்டில் படிக்க வைத்திருக்கலாம் ஆனால் அவனது பாட்டியோ தன் பக்கதிலேயே வைத்துக் கொள்ள விரும்பி தங்கள் ஊரியேலே இருக்கும் பிரபல கல்லூரியில் சேர்க்க அங்குதான் சூர்யாவும் சேர்ந்திருந்தான்….ஆகமொத்தம் கிஷோர் தங்க கூண்டில் இருக்கும் கிளியை போல இருந்தான்… விரும்பிய உணவு , துணிமணிகள். ஆடம்பர பொருட்கள் என அவன் கேட்டது கேட்காதது எல்லாம் அவனுக்கு கிடைத்துவிடும்..ஆனால் சுதந்திரத்தை தவிர…   

 

 

கல்லூரியில் சேர்ந்த புதிதில்….ஒன்றிரண்டு முறை சீனியர் மாணவர்களின் ராகிங்கில் இருந்து கிஷோரை சூர்யா காப்பாற்ற அப்போதிருந்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.  சூர்யாவுக்கிருந்த ஏகப்பட்ட நண்பர்களில்  கிஷோரும் ஒருவன்..சூர்யாவுக்கு கிஷோரை கண்டால் சிரிப்பாக வரும்… அவன் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியர்கள் ஏதாவது சொன்னால்கூட திரும்ப அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டான். ஏதாவது பிரச்சனை என்றால் காததூரம் ஓடிவிடுவான். எல்லாவற்றிற்கும் சூர்யாவை முன்னிறுத்தி இவன் பின்னால் ஒளிந்து கொள்வான்…

 

அங்கு காலேஜின் ஹீரோ சூர்யாதான் நிறைய பெண்கள் சூர்யாவிடம் நட்பாக பழகுவார்கள்….பாதிபேர் வந்து ஐ லவ் யு சொல்ல..நட்பை ஏற்றுக்கொள்பவன் காதலை மட்டும் அது தனக்கு ஒத்துவராது என ஒதுக்கிவிடுவான்.. .கிஷோருக்கு பொறாமையாக இருக்கும் தன்னை கண்டுக்கொள்ளாமல் அவன் மேலேயே விழுபவர்களை பார்த்து… அவனை விட நாமதான் அழகு, பெரிய பணக்காரன்…என்ன குறைச்சல்… உள்ளுக்குள் எரிந்தாலும் எதையும் செய்ய முடியாமல் இருப்பான்…. கிஷோருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கவே இரண்டு பேரை நியமித்திருந்தார் அவனது பாட்டி… ஏதாவது ஒரு பெண் சும்மா பேசிக் கொண்டிருந்தால்கூட  அவர் காதிற்கு சென்றுவிடும்…சூர்யா இவனோடு நட்பாக பழக கிஷோரோ தாழ்வு மனப்பான்மையோடு சேர்ந்த ஒரு பொறாமையை வளர்த்திருந்தான்…

 

இரண்டு வருட கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சூர்யா தன் பிசினசை கவனிக்க கிஷோரை மறந்துவிட்டான்… சூர்யாவுக்கு தெரியும் கிஷோரை பற்றி அவன் வசதி… அவன் பாட்டி அந்தஸ்து வேற்றுமை பார்ப்பது ஒரே ஒரு முறை அவர்கள் பாட்டியை பார்த்துள்ளான்…பலமுறை சூர்யாவை வீட்டிற்கு அழைத்தும் இவன் சென்றதில்லை… ஏனோ அவன் பாட்டியை பார்த்தபின்… இவனும் கிஷோருடன் தன் நட்பை குறைத்திருந்தான்…. அதன் பிறகு கிஷோரை பார்த்தது ஆறு மாதங்களுக்கு முன்னால் ஸ்ரீயின் வீட்டை இடித்த அன்றுதான்…. ஏதோ ஒருவாரம் தான் இந்த பக்கம் சுற்றுலா வந்ததாக சொன்னவன் அன்றுமட்டும் சூர்யாவோடு இருந்துவிட்டு அன்று மாலையே கிளம்பிவிட்டான்…

 

அதுவரை படுத்திருந்த  சூர்யா படக்கென்று எழுந்து ஒருவேளை அன்னைக்குத்தான் கிஷோர் ஸ்ரீயை பார்த்திருப்பானோ….கண்டிப்பா அப்பத்தான் பார்த்திருப்பான். ஆனா இவ அங்க யாரையும் பார்க்கலையே அழுதுகிட்டுத்தானே இருந்தா… இவனுக்கு தலை முனுமுனுவென வலிக்க ஆரம்பித்தது….

 

அழகான காலை பொழுது விடிய பறவைகளின் சத்தம் ஸ்ரீயை எழுப்பியிருந்தது… பால்கனியிலிருந்து பறவைகளின் சத்தம் கேட்க கண்விழித்த ஸ்ரீ முதலில் சென்ற இடம் பால்கனிதான்… அங்கு பறவைகளின் கூடு அமைந்திருக்க… அதில் ஏகப்பட்ட லவ்பேர்ட்ஸ்  அவற்றின் சத்தத்தில் கவரப்பட்டு…. உற்சாகத்தோடு அதன் அருகில் சென்றவள்…..அங்கிருந்த சேரை அதன் அருகில் இழுத்து போட்டு அதை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்….

 

 தூங்கி எழுந்த சூர்யா தன் வழக்கப்படி பால்கனி வந்தவனுக்கு….. அங்கிருந்த ஸ்ரீயை பார்க்கவும் தன்னை அறியாமல் புன்னகை வந்தது… தன் கோலிக்குண்டு கண்ணை வைத்து அந்த பறவைகள் அங்கிட்டும் இங்கிட்டும் பறப்பதை  பார்வையிட்டுக் கொண்டிருக்க வாயும் அந்த பறவைகளை போல திறந்து வைத்திருந்தாள்… அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நேற்றிலிருந்த டென்சன் கொஞ்சம் குறைவது போல இருக்க…அவளை தொந்தரவு செய்யாமல் கதவை சாத்திவிட்டு கீழே வந்தான்…ஸ்ரீ சூர்யாவை கவனிக்கவேயில்லை.. அவள் பறவைகளோடு தன் உலகில் இருந்தாள்…

 

தங்கள் குடும்பமே ஹாலில் அமர்ந்திருக்க…. அனைவருக்கும் குட்மார்னிங் சொன்னவன்….அம்மா….காப்பி…??”.கிச்சனை நோக்கி சத்தமிட்டவனை…..குடும்பமே ஆச்சர்யமாக பார்த்தது… நேற்றுபோல இன்றும் கோபமாக வருவான்… அவளை வீட்டை விட்டு போக சொல்லுவான் என காமாட்சியும் அவர் மகள்களும் நினைத்திருக்க… அவனோ சாதாரணமாக அமர்ந்திருந்தான்…. காப்பி கொடுத்த தன் அம்மாவிடம் ...ம்மா… அவளுக்கு வேற டிரஸ் கொடுங்க குளிச்சிட்டா போட்டுக்கட்டும்…??”

 

சுபத்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..தன் மாமியார் தன் பேத்திகளில் ஒருத்தியை தன் மகனுக்கு மணம் முடிக்க நினைத்திருப்பது தெரிந்த போது மனதிற்குள் மிகுந்த வருத்தத்தில் இருந்தவர் ஸ்ரீயை பார்க்கவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்..  அவர்கள் தன்னையும் தன் பெண்ணையும் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை… மாமியார்கூட தன் மகனை கொண்டாடும் அளவுக்கு மகளிடம் பாசமாக இல்லையோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு… தன்னை  மருமகளாக இந்த வீட்டிற்கு கொண்டு வந்ததில் விரும்பவில்லை என்பதை தெரிந்து கொண்டவர் பெரும்பாலும் அவர்களிடம் இருந்து ஒதுங்கி போய்விடுவார்… ஆனால் அந்த குறையே தெரியாத அளவுக்கு அவர் கணவரும் மாமனாரும் அவளை அன்பாக பார்த்து கொண்டனர்…. சூர்யா பெரும்பாலும் தன் படிப்பை விடுதியிலேயே கழிக்க அவன் இருக்கும்போது ஒன்றையுமே அவன் கருத்துக்கு அவர் கொண்டு செல்வதில்லை.. காமாட்சியும் தன் பேரன் இருக்கும்போது அவனிடம் தங்கம்,ராஜா என உருகுபவர் சுபத்ராவை எதுவும் சொன்னதில்லை…

 

சூர்யா காப்பியை குடித்துவிட்டு அங்கு ஹாலில் இருந்த மீன் தொட்டியிலிருந்த மீனுக்கு இறையை எடுத்து போட்டவன்….. தன் தந்தையிடம் இன்று நடக்கவிருக்கும் வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தான்… அவன் தாத்தாதான் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்…. அவன் கோபப்பட்டிருந்தால்கூட அவர் கவலை பட்டிருக்க மாட்டார்… ஆனால் இவன் ஒன்றுமே நடக்காதது போல இருக்க பேரன் ஏதோ செய்ய காத்திருக்கிறான்… அதுவும் தங்களுக்கு தெரியாமல் செய்ய போகிறானோ என அவனை பற்றி சரியாக கணித்தவர் ….. இவன் ஏதாவது செய்யும் முன் அவன் வாழ்க்கையில் ஸ்ரீநிதியை இன்றியமைதாவளாக்க என்ன வழி என யோசிக்க ஆரம்பித்து விட்டார்….சூர்யாவுக்கு கோபம்தான் அடிக்கடி வருமே தவிர எதையும் எப்போதும் ஆராய்ந்துதான் முடிவு செய்வான்,… தன் பக்கம் தவறிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டான்.. தொழிலில் பொறுப்பேற்ற பின்னர் தாத்தாவையும் தந்தையையும் முன்னிறுத்தியவன் தனக்கு ஒன்று தோன்றினால் அதை செய்யாமலும் விடமாட்டான்…

 

சூர்யா தன் அறைக்கு சென்று குளித்து வர அவன் அறையில் ஸ்ரீயை காணவில்லை… இவன் குளித்து காலை டிபனுக்கு வரவும் ஸ்ரீயும் ப்ரியாவும் அரட்டை அடிக்கும் குரல் இவன் அறை வரை கேட்டது… தன்னை அறியாமல் இவன் கால் அங்கு ப்ரியாவின் அறைக்குள் நுழைய.. கட்டிலில் அமர்ந்து ஸ்ரீ ப்ரியாவுக்கு தலை வாறிக் கொண்டிருக்க… ப்ரியாவோ சிரித்தபடி இவளுடன் பேசிக் கொண்டிருந்தாள்… இப்போதுதான் முதல் முறையாக சூர்யாவுக்கு ஒன்று தோன்றியது…தன் வீட்டிற்கு கமலியும் சிந்தியாவும் அடிக்கடி வந்தாலும் ஒருநாள்கூட இப்படி அரட்டை அடித்து பார்க்கவில்லை…. எப்போதும் தன் தாயோடுதான் ப்ரியா இருந்து பார்த்திருக்கிறான்… இன்று இவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்தவனுக்கு இந்த காட்சி அவன் மனதிற்கு மிகவும் பிடித்ததாய் இருந்தது….

 

குட்டிம்மா…. தன்  அண்ணனின் குரல் கேட்க… அவன் புறம் திரும்பியவள்  அண்ணனிடம் ஓடிவரவும்…. அவளை வாஞ்சையாக அணைத்தவன் அவளை தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட சூர்யாவின் இந்த முகத்தை ஸ்ரீ … ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தாள்… இவங்களுக்கு கோபம் மட்டும்தானே படத்தெரியும்னு நினைச்சோம்… அவங்க தங்கச்சின்னா ரொம்ப பிடிக்கும் போல… இந்த பொண்ணை யாருக்குத்தான் பிடிக்காது… இவளுக்குமே ப்ரியாவை ரொம்ப பிடித்தது…

என்னடா காலேஜ்க்கு போகலை….??”

 

அண்ணா எனக்கு ஒருவாரம் லீவுண்ணா… அடுத்தவாரம் செமஸ்டர் வர்றதால ஸ்டடி ஹாலிடே விட்டுருக்காங்க??”

 

அப்ப சரிடா…டிபன் சாப்பிட்டிங்களா…??”

 

இல்லண்ணா நானும் அண்ணியும் இப்ப சாப்பிட போறோம்….??” ஸ்ரீ சூர்யா  அந்த அறைக்குள் வரவுமே பயந்து வாயை மூடிக் கொண்டிருந்தாள்… ப்ரியாவோடு பேசிக் கொண்டிருந்தபோது மறந்திருந்த தன் வீட்டு நியாபகம் இப்போது வர தன் தாயும் தாத்தாவும் இன்று இங்கு வந்தால் என்ன நடக்குமோ என யோசித்துக் கொண்டிருந்தாள்… சூர்யா ப்ரியாவிடம் சொல்லிக் கொண்டு ஸ்ரீவை ஒரு பார்வை பார்த்துவிட்டு  சாப்பிட வர…ப்ரியாவும் ஸ்ரீயையும் இழுத்துக் கொண்டு சாப்பிடவந்தாள்… உங்க அண்ணா சாப்பிட்ட உடன போகலாம் என்று சொன்னதை காதிலேயே வாங்கவில்லை…

 

அங்கு டைனிங் டேபிளில்  சூர்யா மட்டும் அமர்ந்திருக்க… வேகமாக வந்த சிந்தியாவும் கமலியும் அவன் இருபுறமும் அமர்ந்தார்கள்…ப்ரியாவையும் ஸ்ரீயையும் பார்த்துவிட்டுதான் இந்த வேகம்… சுபத்ரா அங்கு சாப்பாடு பறிமாற வர,,,ஸ்ரீயோ குடுங்க அத்தை நான் பரிமாறுறேன்…??”

 

காமாட்சியோ குடு சுபத்ரா உனக்கு மாதிரியே உன் மருமகளுக்கும் இனி இதுதான் வேலை…??”

 சாப்பாடு பறிமாறுவதை வேலைகாரர்களின் வேலை போல சொல்ல… தன் அப்பத்தாவின் குரலில் தன் தாயோடு பேசும்போது ஏதோ இகழ்ச்சி இருந்ததோ என்பதை உணர்ந்தவன்…சாப்பிட்டுக் கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்து அம்மா நீங்க பரிமாறினாத்தான் எனக்கு சாப்பாடே உள்ள இறங்குதும்மா… எத்தனை பேர் இருந்தாலும் அம்மா அம்மாதான்… ஆமா அப்பத்தா இவங்க ரெண்டுபேரும்தானே இந்த வீட்டு ஆளுங்க அவங்க வைக்கிறதுல என்ன தப்பு ப்ரியா நீயும் அண்ணாவுக்கு எடுத்து வைடா… மத்தவங்க எல்லாம் விருந்தாளிதானே…??” தன்தாய் தங்கை… மனைவியை தவிர மற்றவர்களை ஒரு நிமிடத்தில் விருந்தாளி ஆக்கியவனை அவன் அத்தைகளும் அவர் பெண்களும் காண்டாக பார்க்க

 

ஸ்ரீயை பார்த்தவன் நீயென்ன பார்க்கிற பரிமாறிட்டா நீயும் ப்ரியாவும் அம்மாவுக்கு வைச்சிட்டு சாப்பிட உட்காருங்க….??”

 

பக்கத்தில் அமர்ந்திருந்த கமலிக்கும் சிந்தியாவுக்கும்தான் சாப்பாடே உள்ளே இறங்கவில்லை… காலையிலிருந்து ஒரு மணிநேரம் மேக்கப் போட்டு சூர்யாவை தங்கள் பக்கம் இழுக்க பிளான் போட்டிருக்க சாப்பாட்டை கவனித்த அளவுக்குகூட அவன் தங்களை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவர்களுக்கு மனதில பெருத்த அடி விழுந்தது… தன் போக்கில் சாப்பிட்டுவிட்டு தன் தாயை சேரில் அமரவைத்தவன் சாப்பிடுங்கம்மா…. நான் போய் கிளம்புறேன்…??” 

 

சுபத்ராவுக்கு மனது நிறைந்தது… இத்தனை வருடங்களில் முதல்முறையாக தனக்காக தன் மகன் பேசியது ….. இதுவரை அவன்  வேலை வேலை என்றிருக்க காலையில் நேரத்துக்கு சாப்பிடமாட்டான்…காலை ஆறு மணிக்கே வெளியில் கிளம்பிவிடுபவன் பதினோரு மணிக்கு மேல்தான் காலை உணவிற்கே வருவான்… பிறகு கிளம்பி செல்பவன் இரவுதான் வருவான்…. பலவருடங்களுக்கு பிறகு இன்றுதான் வீட்டில் காலை வேளையில் சாப்பிடுகிறான்…. சூர்யா தன் அறைக்கு செல்ல இங்கு காமாட்சி தன் வேலையை ஆரம்பித்து விட்டார்…

 

ஒருநாள் ராத்திரி தான் முடிஞ்சிச்சு அதுக்குள்ள அவ அவ தன் புருசன கைக்குள்ள போட்டுக்கிட்டு என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு வளர்ந்திருச்சா …தன் மகள்களை பார்த்தவர் நீங்க என்னடி உட்கார்ந்திருக்கிங்க சாப்பிடலையா… போங்க முதல்ல சாப்பிடுங்க கண்டவங்க டைனிங் டேபிள்ள உட்கார்ந்து சாப்பிடுறாங்க… ச்சே தராதரம் தெரியவேணாம் ??” …அவ்வளவுதான் ஸ்ரீக்கு சாப்பாடே இறங்கவில்லை… மாமியார் பேச ஆரம்பிக்கவுமே சுபத்ரா கைகழுவியிருந்தார்…. இது இவர் திருமணம் செய்தநாளில் இருந்து கேட்பதுதான்… இவருக்கு ஒன்றுதான் புரியவில்லை… அந்தஸ்து என்றால் என்ன என்பதுதான்… பணமும் வசதியும்தான் அந்தஸ்தா….. ஸ்ரீயும் சாப்பிடாமல் கைகழுவ மாமியார் அவள் தலையை தடவி கொடுத்தவர் ….

 

“ இதெல்லாம் கொண்டு போய் கிச்சன்ல வைடா…??” அவளை கிச்சனுக்கு அனுப்பியவர் பின்னாலே சத்துமாவு கஞ்சி கொண்டு வர… இத குடிம்மா….??”

 

இல்லத்தே வேணாம்….. நான்தான் சாப்பிட்டனே….??”

 

எங்க சாப்பிட்ட ரெண்டு இட்லிதான் வைச்சேன்…அதையும் நீ சாப்பிடலை இத குடி..??”.

 

தனக்கு கொடுத்ததில் பாதியை வேறு கிண்ணத்தில் ஊற்றியவள்…. அப்ப இத நீங்க குடிங்கத்தை??”அவருக்கு கொடுத்தபடி இவளும் குடிக்க சுமத்ராவுக்கு   மனது நிறைந்தது…..

காப்பி கப்பை அவள் கையில் திணித்தவர் இத கொண்டு போய் சூர்யாக்கிட்ட கொடும்மா….??”

 

இவ்வளவு நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு…இப்ப ஏன் என்னை இப்படி மாட்டிவிடுறாங்க…தன் அருகில் நின்றிருந்த வேலைக்கார பெண்ணை பார்த்தவள் இவங்ககிட்ட கொடுத்துவிடவா அத்தை…??”

 

அவளை பார்த்து சிரித்தவர்…. எத்தனை நாளைக்கு இப்படி ஒளிவ…. நீதான் போகனும்… போ….??”

 

காப்பியை கொண்டு மாடிக்கு செல்ல… அவள் இதயம் முரசு கொட்ட ஆரம்பித்தது…. இன்னைக்கு என்ன ஏழரையாக போகுதோ… கதவை திறக்கும் போதே சூர்யா யாரிடமோ போனில் பேசும் குரல் கேட்டது… அவன் அருகில் சென்றவளுக்கு அவனை எப்படி கூப்பிடுவது என தெரியாமல் அவன் பின்னால் நிற்க அவன் கவனம் முழுதும் போனிலேயே இருந்தது… ஏதோ சற்று கடுமையாக பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று திரும்ப அவன் பின்னால் நின்றவளோடு மோதியிருந்தான்… காப்பி கப்போடு பின்னால் சாயப்போனவளை எட்டி அவள் இடுப்பில் கைகொடுத்து கீழே விழாமல் பிடித்தவன்…. அவள் இடுப்பில் கைகொடுத்தபடியே பேசிக் கொண்டிருந்தான்…

 

 ஸ்ரீயோ கீழே விழாமல் நேராக நின்றவள் அவனிடமிருந்து விலகப்பார்க்க ம்கூம் முடியவில்லை… இன்னும் அழுத்தமாய் பிடித்தது போல இருந்தது… அவன் போன் பேச்சையும் முடிக்கவில்லை… கடுமையாக பேசிக்கொண்டே ஸ்ரீயை பார்க்க அவள் முகம் அவன் பேச்சில் பயந்து பலவர்ண ஜாலத்தை காட்டிக் கொண்டிருந்தது.. …அழுகை …. பயம்… அதிர்ச்சி என…மேலும் முதல்முதலாக ஒருவன் தன்னை கட்டிப்பிடித்தபடி  இருக்க அவன் மேலிருந்து வந்த வாசம் அவளை ஏதோ ஒரு உலகிற்கு கொண்டு சென்றது..கண்கள் சொருகி மயக்கம் வரப்பார்த்தது….சூர்யா பேசிக் கொண்டே அவளை இன்னும் இன்னும் நெருங்க அவன் கை வைத்திருந்த இடத்தில் இருந்த மென்மை அந்த வழவழப்பு அதை இன்னும் சோதித்து பார்க்க தூண்ட…..

 

  அண்ணா….??” என்ற ப்ரியாவின் குரல் கேட்கவும் அவளை விட்டு சற்று விலகியவன் வாசல்புறம் திரும்ப ஸ்ரீயால்தான் இன்னும் நிலைக்கு வரமுடியவில்லை….

 

அறைக்குள் நுழைந்த ப்ரியா…. அண்ணா கீழ அண்ணியோட அம்மாவும் தாத்தாவும் வந்திருக்காங்க  அம்மா உங்க ரெண்டுபேரையும் கீழே வரச் சொன்னாங்க…??”.சொல்லிவிட்டு தன் அறைக்குச் செல்லவும்…

 

உற்சாகத்தில் தன்னை தாண்டி ஓடப்போனவளை எட்டி பிடித்தவன் அவள் தோளில் கைப்போட்டபடி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான்….

 

                       இனி……………………?????????

Advertisement