Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  6
 
கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க ஆசை வந்திருந்தது.. ஆனால் அவளுக்கு நீச்சல் தெரியாது.. இது நல்ல அகலமான ஆழமான கிணறு உள்ளே இறங்க படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தவள் ஒரு நாளாவது இதில் இறங்கி குளிக்க வேண்டும் என நினைத்தாள்..
 
 இன்று தோப்பில் எந்த வேலையும் நடக்காததால் துரையும் இன்று வரமாட்டான் என நினைத்து ஜிம்மியை அவிழ்த்து விட்டவள் ஒரு தைரியத்தில் குளிக்க வந்துவிட்டாள்… ஆனால் எப்படி இதில் இறங்குவது என பயந்தவள் மெதுவாக  ஒரு ஒரு படியாக கால்வைத்து இறங்க இறங்க பயம்தான் அதிகமாகியது.. ஒரு குருட்டு தைரியத்தில் 5..6.. படி இறங்கியவள் தண்ணீரை பார்க்கவும் ரொம்ப பயமாக இருந்தது… வேண்டாம் மேலயே போயிருவோம் என நினைத்து மேலே பார்க்க அது இதைவிட பயமாக இருந்தது.. இது என்னடா கொடுமை என நினைத்தவள் சரி இவ்வளவு தூரம் இறங்கிட்டோம் இன்னும் நாலுபடிதானே என நினைத்து மீண்டும் ஒவ்வொரு படியாக மீண்டும் கீழே இறங்க கடைசி இரண்டு படி இருக்கும் போது டொம்மென்று யாரோ தண்ணீரில் குதிக்க திடுக்கிட்டவள் அம்மா என்று கத்தியபடி தண்ணீரில் தவறி விழுந்திருந்தாள்…
 
கிணற்றுக்குள் குதித்த துரை தண்ணீரில் முங்கி முங்கி எழுந்தவன் அம்மா என்ற கத்தலில் திரும்பி பார்க்க படிக்கு அருகில் கனி தவறி விழுந்தவள் கையிரண்டும்  மேலிருக்க தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்…
 
அச்சோ இவளா??” என பதறியவன் அவள் அருகில் வேகமாக நீந்தி போக.. அதற்குள் மூக்கு வாய் என தண்ணீர் புகுந்திருக்க கனிக்கு மயக்கம் வரத்துவங்கியிருந்தது.. எட்டி அவள் தலைமுடியை பிடித்தவன்அப்படியே படிக்கட்டு பக்கம் கொண்டு வந்தான்… படியில் அவளை அமர வைக்க முயல அவள் மயங்கி விழவும் அவளை தூக்கித் தன் தோளில் போட்டபடி படிக்கட்டில் ஏறி மேலே வந்தவன் அவளை கிணற்றில் இருந்து சற்று தள்ளி இருந்த புல்லில் படுக்க வைத்தான்… அவள் கன்னத்தை தட்டியவன் அவள் மயக்கத்தில் இருப்பதை உணர்ந்து அவள் வயிறை அமுக்க கையை கொண்டு போனவன் சேலை ஆங்காங்கே விலகி இளமை பளிச்சென தெரியவும்  ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டான்..ஈர உடை உடலோடு ஒட்டி இருக்க தலைமுடி ஈரத்தில் ஆங்காங்கே முகத்தில் கலைந்து அதுவே அவளுக்கு தனி அழகை கொடுத்ததுஆங்காங்கே ஒட்டியிருந்த நீர் துளிகள் ரோஜாவின் மீதிருக்கும் பனித்துளியை ஒத்திருக்க அதை பருகும் ஆசை அவனறியாமல் அவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது…
 
இத்தனை வயதில் ஒரு பெண்ணை இவ்வளவு நெருக்கத்தில் பார்ப்பது இப்போதுதான் முதல்முறை….. தமிழைக்கூட இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை… சிறுவயதில் இருந்தே அவளுக்கு இவன்தான் என்று சொல்லி சொல்லித்தான் வளர்த்தார்கள்.. ஆனால் இருவரும் ஒருமுறைக்கூட அத்துமீறி பேசியதில்லை…நடந்ததில்லை.. இவனுக்கு கதிர் எப்படியோ அப்படியே தமிழையும் நடத்தினான்.. 
 
இன்று இவ்வளவு நெருக்கத்தில் கனியை பார்க்கவும் ஒரு நிமிடம் தன்னிலை மறந்து அவளையே பார்க்க நொடிகளோ நிமிடமோ நேரம் கடந்ததே தெரியவில்லை… ஜிம்மி அவனிடம் வந்து அவன் மேல் காலைத்தூக்கி வைக்க சட்டென சுயநினைவுக்கு வந்து தன் தலையை உதறியவன் அவளை திருப்பி போட்டு அவள் முதுகை அமுக்கினான்… சற்று நேரம் கழித்து முன்புறம் திருப்பியவன் ஆங்காங்கே விலகி கிடந்த சேலையை சரிசெய்து.. அவளுடைய  ஒரு கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து அதன் மேல் தன்கையை வைத்து அமுக்க அவளுடைய சிறிய கையை மீறி அவள் வயிற்றில் பட்ட அவன் விரல்கள் அதன் மென்மையை உணர… இவன் தன் சுயநினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க அவள் தன் சுயநினைவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தாள்..
 
தண்ணீர் அனைத்தும் வெளியில்வர கனி இரும ஆரம்பித்தவள் மெதுவாக கண்விழிக்கவும் பார்த்தது தன்னையே பார்த்துக் கொண்டிருந்த துரையைத்தான்… கனி இரும ஆரம்பிக்கவுமே துரை தன்சுயநினைவுக்கு வந்து பார்வையை அவள் மேலிலிருந்து முகத்துக்கு திருப்பியிருந்தான்… மெதுவாக எழுந்து அமர்ந்தவள்..
 
நீங்கதான் என்னை கிணத்துக்குள்ள இருந்து காப்பாத்துனிங்களா…??” அங்கு ஜிம்மி விடாமல் குரைக்க ஆரம்பிக்க…  எட்டி பார்த்தவன் அங்கு கேட்டுக்கு வெளியில் யாரோ இருவர் நிற்பதை பார்த்துவிட்டு வீட்டுச் சாவி எங்கு என்று கேட்க இடத்தை சொல்லவும் சட்டென அவளை தூக்கியபடி வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்…
 
ஐயோ விடுங்க எனக்கு ஒன்னுமில்ல.. என்னால நடக்க முடியும்..??”
 
ச்சூ…கொஞ்ச நேரம் வாயமூடு …நீச்ச தெரியாம என்ன காரியம் செஞ்சு வச்சிருக்க… உன்னை வந்து பேசிக்கிறேன்…??” சாவியை எடுத்து கதவை திறந்து அவளை வீட்டிற்குள் விட்டுவிட்டு அவன் அறைக்குள் சென்றவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் உடை மாற்றிவர அதுவரை அவள் அப்படியே நிற்கவும்…  
 
என்ன அப்படியே நிக்குற போ…போய் டிரஸ மாத்து??” வேகமாக வெளியில் செல்லவும் கனிக்கு இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை… துரை வேகமாக கேட்டிற்கு அருகில் வர ஜிம்மி அங்கு நின்றவர்களை பார்த்து விடாமல் குரைத்தது..கேட்டின் மேல் காலை வைத்தபடி அவர்களை நோக்கி குரைத்துக் கொண்டிருக்க அங்கிருந்த இரு இளைஞர்களுக்கும் வயது 30 இருக்கும் பார்க்கவே தாடியும் மீசையும் அவர்கள் உடையும் நல்ல அபிப்பிராயத்தை தரவில்லை.. இவர்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததில்லை… கையில் ஒரு பை வைத்திருந்தார்கள்…
 
என்ன வேணும் யார் நீங்க…??” துரை அவர்களை பார்த்தபடியே கேட்க… அவர்கள் துரையை பார்க்கவும் சற்று திடுக்கிட்டவர்கள்…அவர்கள் பார்வையிலிருந்து இப்போது துரையை எதிர்பார்க்கவில்லை போல
 
இந்த தோப்புகாரம்மா இல்லையா.. அவங்கதான் எங்கள தென்னைமரம் சுத்தம் செய்ய வரச் சொன்னாங்க..கதவை திறங்க..??”
யோசனையாக பார்த்தபடி அப்படி நாங்க யாரையும் வரச் சொல்லலையே…??” அவர்களின் பேச்சில் இருந்த தெனாவட்டு அவர்கள் வேலைக்கு வந்தவர்களை போல தெரியவில்லை….  இன்னைக்கா வரச் சொன்னாங்க??”
 
ஆமாங்க… இன்னைக்குத்தான் இங்க வேலை நடக்காதுன்னு எங்கள வரச் சொன்னாங்க…??”
 
 இன்று வரவேண்டியவர்கள் திடிரென அவர்கள் ஊரில் ஒரு இறப்புக்கு செல்ல வேண்டி இருந்ததால் காலை ஒரு 9 மணிக்குத்தான் இவனிடம் கேட்டு சென்றிருந்தார்கள்… அப்ப இவங்க இங்க வேலைக்கு ஆள் வாராங்களா இல்லையான்னு நோட் பண்ணுறாங்க… இல்ல அவங்க ஏற்கனவே அவகிட்ட சொல்லியிருந்தாங்களா…
 
 அவர்கள் இருவருக்கும் வாய் இங்கு பேசிக் கொண்டிருந்தாலும் கண் உள்ளேயே அலைபாய்ந்து கொண்டிருந்தது… இல்ல நீங்க போங்க.. இப்ப நாங்க தென்னை சுத்தம் பண்ணுறதா இல்லை… அப்படி பண்ணுறதா இருந்தாலும் எப்பவும் ரெகுலரா ஆள் வருவாங்க அவங்களே செய்வாங்க நீங்க போகலாம்….??”
 
என்னங்க இப்படி சொல்லிட்டிங்க… அப்ப ஒரு உதவி செய்ங்க இந்த நாய மட்டும் கொஞ்சம் கட்டுங்க நாங்க ரெண்டு பேரும் வெயில்ல ரொம்பநேரமா அலையிருறோம்.. அந்த கிணத்துல குளிச்சிட்டு அந்த பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போயிருறோம்….??”
 
துரை கோபத்துடன் வேட்டியை மடித்து கட்டியவன்… இந்த தோப்பு என்னோடது நான்தான் சொல்லனும் இங்க வேலை இருக்கா இல்லையான்னு இப்ப மரியாதையா போங்க இல்ல நாய வெளியில விட்டா ஆளுக்கு ரெண்டுகிலோ சதையை எடுத்துக்கிட்டுத்தான் உங்கள விடும்..??”கோபமாக சொல்ல அடுத்த இரண்டு நிமிடத்தில் அவர்கள் இருவரும் இடத்தை காலிசெய்திருந்தனர்…
 
துரை கோபத்தில் பல்லை கடித்தான்… இங்கு பெரியகிணறு இருப்பது வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது…. அப்ப இவங்க ரொம்ப நாளா வேவு பார்த்திருக்கானுக.. இந்த பொண்ணு எப்ப ஒத்தயில இருக்குமுன்னு….. இன்னைக்கு வேலைக்கு ஆள்வரலைன்னு தெரியவும் தைரியமா உள்ள வரப்பார்க்கிறானுக.. இவ வேலைக்கு வரச் சொன்னானா நம்மகிட்ட ஒரு வார்த்தைகூட கேக்கலை… இவங்க உள்ள வந்திருந்தா நிலைமை என்னாயிருக்கும்.. கிணத்துல வேற நீச்சல் தெரியாம உள்ள இறங்கியிருக்கா கோபம் தலைக்கேற உள்ளே வந்தவன்…
 
அப்போதுதான் உடைமாற்றி தலையை காயவைத்துக் கொண்டிருந்தவளிடம் கோபத்தை கட்டுப்படுத்தியபடி நீ தென்னை சுத்தம் செய்ய ஆள்வரச் சொன்னியா..??”
 
இரண்டு நாளுக்கு முன்பு ஒரு  வயதானவர் வந்து தென்னை சுத்தம் செய்யவா எனக் கேட்டிருக்க மீனாட்சியிடம் கேட்டு அவரை வரச் சொல்லியிருந்தாள்.. அவரைத்தான் கேட்கிறானோ என நினைத்துஆமா சொல்லிருந்தேன்… ஆள் வந்திருக்கா…??”
 
இவனுக்கு வந்த கோபத்தில் உனக்கெல்லாம் அறிவே இல்லையா….. நீங்க மூனு பேரும் எங்க பாதுகாப்புலதான் இருக்கிங்க.. இந்த தோப்புல தங்கியிருந்தா இது உங்களுக்கு சொந்தமாகிருமா உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்க…இனிமே என்ன செய்யுறதாயிருந்தாலும் என்கிட்ட கேட்டுத்தான் முடிவெடுக்கனும்… முதல்ல இந்த அசட்டுத்துணிச்சல விடு இன்னைக்கு தவறி கிணத்துல விழுந்தியே நான் வராம வேற யாராச்சும் வந்திருந்தா நிலைமை என்னாயிருக்கும்… இல்லை ஆளே வரலைன்னா ….. கொஞ்சம்  நிலைமைய புரிஞ்சு நடந்துக்க …ச்சே இந்த அம்மா தேவையில்லாத இம்சையை எல்லாம் இங்க கூட்டிட்டு வந்து விட்டிருக்காங்க.. ஒரு பொண்ணு அடக்கமா இருக்கனும் தேவையில்லாம அங்கிட்டும் இங்கிட்டும் போனா அடுத்தவங்க பார்ப்பாங்கன்னு தெரிய வேணாம்…??”. கோபமாக பாதிதூரம் சென்றவன் திரும்பி வந்து ஜிம்மிய இனி கட்டிப்போட வேண்டாம்??” என்றபடி உள்ளே சென்றவன் தான் எடுக்கவந்த பொருட்களை எடுத்தபடி கிளம்பியிருந்தான்.
 
 துரைக்கு தன் மேல் எதற்கு இவ்வளவு கோபம் என்று கனிக்கு சத்தியமாக தெரியவில்லை… இந்த தோப்பை எப்ப நாம நம்மளோடதுன்னு நினைச்சோம்… அவங்களுக்கு செலவு ரொம்ப வைச்சதால இப்படி பேசிட்டு போறாங்களோ.. அத்தைய கேட்டுத்தானே ஆளவரச் சொன்னோம்..நாம என்ன அப்படி ஆள மயக்கிறமாதிரியா டிரஸ் பண்ணுறோம்.. எங்க போறோம் காலையிலயும் சாயங்காலமும் டெப்போவுக்கு மட்டும் தானே…வெள்ளி..செவ்வாய் கோவிலுக்கு போறோம்….கண்ணீர் கரகரவென ஊற்ற.. இதுவரை கனி யாரிடமும் திட்டு வாங்கும்படி நடந்து கொண்டதில்லை.. முதல்முறையாக துரை பேசவும் இவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை..
 
.தங்கள் நிலையை நினைத்து அழுதவள் தாயை நினைத்தும் அழ ஆரம்பித்தாள்… ஆள் பார்க்கத்தான் பொறுப்புள்ளவள் போல தெரிந்தாலும் அவளுக்கு சிறிய வயதாக இருந்ததால் அவளுக்கும் குழந்தை மனதுதான்… இதுவரை தைரியத்தை வளர்த்திருந்தவள் இன்று துரை திட்டியதும் அந்த தைரியம் போன இடம் தெரியவில்லை… துரை திட்டியது…..கிணற்றில் தவறி விழுந்து பயந்தது என பல்வேறு உணர்வுகளால் வெகு நேரம் அழுதவள் இனி துரையிடம் தேவையில்லாத பேச்சே வைத்துக் கொள்ளகூடாது என முடிவு செய்தாள்.. அவளுக்கு துரை தன்னை கிணற்றில் இருந்து தூக்கி வந்தது ..தன்னை காப்பாற்றியது என எல்லாம் மறந்து அவன் திட்டியது மட்டுமே நியாபகத்தில் இருந்தது… அப்ப நம்மள அவங்க சொத்துக்கு ஆசைபடுறவன்னு நினைச்சிட்டாங்களா..
 
வண்டியில் சென்று கொண்டிருந்த துரைக்கோ இன்னைக்கு மட்டும் நாம போகாம இருந்திருந்தா அவங்க ரெண்டு பேரும் உள்ள நுழைஞ்சு இந்த பொண்ண ஏதாச்சும் செஞ்சிருப்பாங்களோ…. வண்டியை சடன்பிரேக் போட்டு நிறுத்தியவன்..ச்சே.. அவனுக ரெண்டு பேரை பத்தி நல்லா விசாரிக்காம விட்டுட்டமே…ஏதாச்சும் அடையாள அட்டை இருந்திருந்தா அவங்கள பத்தி நமக்கு தெரிஞ்சிருக்கும்… எதுக்கும் கதிர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வைக்கனும்… அன்றைய பொழுது முழுவதும் நிம்மதி இல்லாமலே இருந்தான்..கதிரை பார்த்து விவரம் சொன்னவன் அவ்வப்போது  அங்கு சென்று வரச் சொன்னான்…
 
அன்று இரவு படுக்கும் போது துரைக்கு காலையில் இருந்து நடந்தது எல்லாம் நினைவுக்குவர கனியை கிணற்றில் இருந்து தூக்கியதும் நியாபகத்திற்கு வந்தது..இவ நீச்சல் தெரியாம எதுக்கு கிணத்துக்குள்ள இறங்குனான்னு தெரியலயே… இந்த கிணத்துக்குள்ள குதிச்சதுக்கே இப்படி மயங்கிட்டாளே…. ஏதேதோ யோசித்தபடி தூக்கம் வராமல் புரண்டவன் வெகு நேரம் கழித்தே உறங்கினான்…
 
மறுநாள் காலை அவன் தோப்பு வீட்டிற்கு வரும்போது கனி கோலம் போட்டு உள்ளே சென்றிருந்தாள்.. இவன் தோப்பை சுற்றிப்பார்த்துவிட்டு வர எப்போதும் கனிதான் காப்பி கொண்டுவந்து கொடுப்பாள்.. இன்று ஹரிணியிடம் கொடுத்துவிட்டு உள்ளேயே இருந்து கொண்டாள்…பேச்சியம்மாளும் மீனாட்சியும் உள்ளே கனியோடு பேசும் குரல் கேட்க சற்று நேரம் அமர்ந்தவன் …தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்… இதுவே ஒரு வாரமாக தொடர்ந்தது.. அவன் வருவதற்குள் கோலம் போட்டு முடித்திருப்பவள் அவன் வீட்டிற்கு போகும்வரை வெளியில் வரமாட்டாள்…மற்ற நேரங்களில் அவன் வந்தால் அவன் தென்னந்தோப்பிற்குள் வந்தால் அவள் மாந்தோப்பிற்குள் செல்வதும் இவன் அங்கு வந்தால் அவள் வாழை தோப்பிற்குள் நுழைந்து கொள்வாள்… அதுவும் இல்லையென்றால் அந்த தோட்டத்தில் நின்று களையெடுப்பது தண்ணீர் பாய்ச்சுவது என இருக்க.. இரண்டு மூன்று முறை பேச முயற்சித்தவன் அவள் பேசாமல் போகவும் இவனும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்…
 
அன்று தமிழுக்கு கல்லூரியில் ஒரு பங்சன் உள்ளதால் அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருக்க கதிரை கெஞ்சிக் கொண்டிருந்தாள்… அண்ணா ப்ளீஸ்ணா.. இன்னைக்கு மட்டும் என்னை காலேஜ்ல விட்டுறேன்…
 
ஏய் போடி மழைய பார்த்தியா எப்புடி பெய்யுதுன்னு நான் மட்டும் வெளியில வந்தா முளைச்சு போயிர மாட்டேன் நீயே போய்கோ….டி..??”
 
டேய் எங்கடா மழை பெய்யது லேசாத்தானே தூரலா இருக்கு ப்ளிஸ் இதுல சேலைக்கட்டிட்டு போனா எல்லா சகதியும் என் மேலதாண்ணா தெரிக்கும்…வாண்ணா ப்ளிஸ்…ப்ளிஸ்???”
 
நீயென்ன லூசாடி இந்த மழையில யாராச்சும் சேலைக்கட்டுவாங்களா சுடிதாரோட போ.. அங்க போய் சேலைய மாத்திக்க… இப்ப கொண்டு வந்து விட்டா திரும்ப கூப்பிடவும் வான்னு சொல்லுவ அதெல்லாம் நமக்கு சரிவராது நானும் மாப்பிள்ளையும் படத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம் நீயே போ…??”
 
யோசித்து பார்த்தவளுக்கு இது சரி போல தோன்றவும் சேலையை தன் வண்டி பெட்டியில் வைத்தவள் தன் ஸ்கூட்டியில் கிளம்பியிருந்தாள்… வேகமாக வந்தவள் காலேஜை நெருங்கி விட்டாள் ஒரே நேர் சந்துதான்… ஆங்காங்கே குழியில் மழைத்தண்ணீர் நிரம்பியிருக்க வண்டியை மெதுவாக ஓட்டி வந்தாள்… சரெலனெ சந்திற்குள் நுழைந்த அந்த கார் வேகமாக வரவும் இவள் வண்டியின் வேகத்தை குறைக்க அது வேகத்தை குறைக்காமல் இவள் உடம்பு முழுக்க அந்த மழைத்தண்ணீரை அடித்தபடி சென்றது… கார் வேகமாக வரவுமே போச்சு நம்ம மேல சகதி தண்ணீர் படப்போகுதுன்னு நினைத்து முடிப்பதற்குள் தண்ணீர் அபிசேகம் ஆயிற்று… பல்லை கடித்தவளுக்கு கோபம் தலைக்கேறியது… சிறிது தூரம் சென்ற கார் பின்னால் ரிவர்ஸில் வர… தமிழ் கோபமாக அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்தவள் அந்த காரின் பின கண்ணாடியை நோக்கி எறிந்திருந்தாள்…..
 
சலீர் என கண்ணாடித் தூளாகவும்தான் இவளுக்கு கொஞ்சம் கோபம் குறைந்தது… பின்னால் வந்த கார் நிறுத்தப்பட்டு காரில் இருந்து ஒரு இளைஞன் கோபமாக இறங்க… இவள் தன் ஸ்கூட்டியில்  ஏறி அமர்ந்தபடி தன் மேலிருந்த மழைத்தண்ணீரை துடைக்க ஆரம்பித்தாள்…
 
வேகமாக அவளை நோக்கி வந்த அந்த இளைஞன்… யூ….ஸ்டுப்பிட் உனக்கெல்லாம் அறிவில்ல…??”
 
ஏன் உனக்கு நிறைய இருந்தா அத கொஞ்சம் எடுத்து விக்கப்போறியா…. நான் மத்தவங்க அறிவயெல்லாம் வாங்குறதில்லை….??” படபட பட்டாசாய் பொறிய
 
ஆமா உன் மண்டையெல்லாம் களி மண்ணுதானே ரொம்பியிருக்கு அப்புறம் அறிவ வாங்கி எங்க வைப்ப….??” அவளை முறைத்து பார்க்க…
 
அவனை கண்டு கொள்ளாமல் தன் முகத்தை தன் ஸ்கூட்டி கண்ணாடியில் பார்த்தவள் பொட்டை சரி செய்தபடி ஓஓஓ …….. அறிவு நிறைய இருக்கிறவங்கதான் இப்படி கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுவாங்களா….. அறிவு கெட்ட முண்டம்…. உனக்கெல்லாம் கண்ணில்ல… இப்ப பாரு என் மேலெல்லாம் தண்ணீர்…..??”
 
தண்ணி தானே உன் மேல பட்டுச்சு என்னமோ ஆசிட்டு பட்ட மாதிரி இந்த குதி குதிக்கிற… பத்தாத்துக்கு என்னோட கண்ணாடிய வேற உடைச்சிருக்க மரியாதையா அந்த உடைஞ்ச கண்ணாடிக்குள்ள காசை எடுத்துக் குடுத்துட்டு போ…??”
 
தமிழ் இவனை பார்த்தால் நம்ம ஊரு மாதிரி தெரியலயே…. ஜீன்ஸ் பேண்ட்…டீ சர்ட் அணிந்து கண்ணில் கூலிங்கிளாஸ்…. நல்ல சிவந்த நிறம் பார்க்க ஒரு சினிமா ஹீரோ போல இருப்பவனை பார்த்தவள்….
 
அதெல்லாம் ஒன்னும் குடுக்க முடியாது… நீ என் மேல சகதிய தெளிச்ச நான் கண்ணாடிய உடைச்சேன் ரெண்டுக்கும் சரியாப்போச்சு..??”.
 
அது எப்படி சரியாப் போகும் ??”என்றபடி அவளை நோக்கி வர வண்டியில் சாவியை போட்டு ஸ்டார்ட் செய்ய ரெடியானவள் அவன்கிட்டே வரவும்……..
 
 அண்ணே…. மச்சான்…சீக்கிரம் வாங்க இவன்தான் எப்ப பார்த்தாலும் என்கிட்ட வம்பிழுத்தது??” என கத்த ஒரு நிமிடம் திகைத்தவன் யாரும்பின்னால் வருகிறார்களா என திரும்பி பார்க்க….. அதற்குள் வேகமாக வண்டியை கிளம்பியவள் தூரமாய் சென்றிருந்தாள்… காலை தரையில் ஓங்கி மிதித்தவன் பாவம்னு ஸாரி கேக்கலாம்னு ரிவர்ஸ்ல வந்தேன் பாரு அது என்னோட தப்பு பொண்ணா இது…. என வாய்க்கு வந்ததை திட்டியபடி தன் காரை நோக்கிச் சென்றான்…
 
சினிமாவுக்கு சென்றுவிட்டு  வந்த துரை தன் புல்லட்டில் தோப்பு வீட்டிற்கு வர கேட்டில் கைவைக்கும் போதே கனியின் சிரிப்பொலியும்  அவள் தங்கைகளின் சிரிப்பொலியும் வெளிகேட் வரை கேட்க வீட்டிற்குள் ஒரு வெளிநாட்டுக்காரை பார்க்கவும் யோசனையோடு உள்ளே வந்தவன் பார்த்தது… ஒரு இளைஞனோடு கனியும் அவள் தங்கைகளும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைத்தான்.. .நம்மகிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டு இவ யாருக்கிட்ட இப்படி சிரிச்சு பேசுறா கோபத்துடன் அவர்களை நோக்கி வந்தான்….
 
                                           இனி…………??????

Advertisement