மனதால் உன்னை சிறையெடுப்பேன்

   அத்தியாயம்   –    26

 

துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில் சிவந்தாலும் தன் கணவனையே ரசித்தபடி அமர்ந்திருந்தாள்… கண்ணால் பார்த்தது பத்தாதென்று அவன் விரலால் அவளை வருடியவன் அப்படியே அவள் வயிற்றில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்…. அதில் காமம் இல்லாமல் காதலும் பாசமுமே இருக்க …கனி அவனை தன்னோடு இறுக அணைத்து அவன் தலையை கோதியபடி இருந்தாள்.. தன் பழைய கனி முழுமையாக வந்துவிட்டாள் என்பதை உணர்ந்தவன்… அப்படியே அவள் மடியில் தலைவைத்து படுத்துவிட்டான்…..

 

அவன் முகத்தில் தன் கைவிரலால் கோலமிட்டவள்… ஏங்க பொங்கல் பானை வைக்க இன்னும் 20 நிமிசம்தான் இருக்கு சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க….??”

 

அவளையே பார்த்தவன் அந்த நெற்றியில் இருந்த வடுவை வருடியபடி…. ம்ம்ம் போறேன்டி….

 தலைநிறைய பூவைத்து ஆரஞ்சுநிற பட்டுப்புடவை கட்டியிருந்தாள்..முன்பைவிட இப்போது நன்றாக தேறியிருந்தாள்….  அவள் மேலிருந்து வந்த வாசம் அவனை இன்னும் அவள் புறம் இழுக்க… அவள் இதழை தன் விரலால் வருடியவன் அதற்குமேல் முடியாமல் அவள் மேல் படர்ந்திருந்தான். கனியும் அவன் கைகளில் உருகியபடி அவனை தன்னுள் இன்னும் இறுக்கியிருந்தாள்…. பத்துநிமிடம் போனதே தெரியாமல்.. ஒருவருள் ஒருவர் மூழ்கியிருக்க துரையின் கைபேசி ஒலித்து அவர்கள் மோனநிலையை கலைத்தது… தன் தாய் அழைக்கவும் இதோ வந்துட்டோம்மா..??”.

 

அவள் தன் கலைந்திருந்த புடவையை சரி செய்ய துரை குளிக்க கிளம்பியிருந்தான்… அவனுக்கு பட்டுவேட்டி சட்டையை எடுத்து வைத்தவள்..தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. கன்னத்தில் இருந்த காயத்தை பார்க்கவும் முகம் சிவந்து

போச்சு யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…. ப்பா…. சரியான முரடு…. அதை அழுந்த தேய்த்து லேசாக பவுடர் போட்டுக் கொண்டிருக்க குளித்துவிட்டு துண்டோடு வந்தவன் அவள் பின்னால் நின்று கண்ணாடியில் அவள் முகத்தில் இருந்த மாற்றத்தை காணவும் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது… அவளை பார்த்து சிரித்தபடி அவள் பின்னால் இருந்து அணைக்க…. அவன் சிரிக்கவும் அவளுக்கு வெட்கம் வந்து அவன் வெற்று மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்….

 

அனைவரும் பொங்கல்வைத்து சூரியபகவானை வழிபட்டவர்கள் அடுத்து குலதெய்வ கோவிலுக்கு வந்து மீனாட்சி தன் மருமளுக்காக நேர்ந்திருந்த நேர்த்திகடன்களை செலுத்திவிட்டு  ஊருக்கு கிளம்பியிருந்தனர்… மாட்டுபொங்கலை தங்கள் தோப்புவீட்டில்தான் வைப்பார்கள் அதற்காக மதியம் சாப்பிடவும் கிளம்பியிருந்தார்கள்…ஊருக்கு வரவே மாலையானதால் மறுநாள் மீனாட்சி பொங்கல் வைப்பதற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க..

 

.துரை அம்மா நைட்டு நானும் கனியும் நம்ம தோப்புவீட்டுக்கு போறோம்…காலையில நீங்களெல்லாம் அங்க வந்துருங்க… அப்புறம் கோவில்ல கேட்டேன்மா காலையில எட்டுலயிருந்து ஒன்பதுக்குள்ள பானை வைக்க சொல்லியிருக்காங்க… ??”

 

சரி தம்பி ….”கனியை அழைத்தவர் இரவு சாப்பாட்டிற்கு வேண்டியதையும் நாளை உடுத்த வேண்டிய துணியை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொல்லியிருந்தார்…

 

துரை தன் மனைவியோடு தோப்புவீட்டிற்கு தன் புல்லட்டில் கிளப்ப அவன் இடுப்பில் கைகொடுத்து அவனை அணைத்திருந்தாள்… இருவரும் அங்குவரும் போது மணி ஏழு இருக்கும்… வீட்டை திறந்தவன் தன்னை நோக்கிவந்த நாய்களை கொஞ்சியபடி அவற்றிற்கு சாப்பாடு வைக்க இவன் இல்லாவிட்டால் மீதி நேரங்களில் கதிர் வைத்துவிடுவான்.. நாய்கள் மூன்று மாதங்கள் கதிரை பார்க்காமல் இருக்கவும் சாப்பாட்டைகூட விட்டுவிட்டு அவனுடனேயே விளையாடிக் கொண்டிருந்தது… அவற்றோடு ஆசைதீர விளையாடிவிட்டு உள்ளே வர கனி சமையல் அறையில் இருந்தாள்…

ஹாய் பொண்டாட்டி என்னடி பண்ணுற…??”

 

ஒன்னுமில்லத்தான் நேத்தே இங்கவந்து எல்லா இடத்துலயும் மாக்கோலம் போட்டோம்… இங்கமட்டும் போடலை அதான்??” என்றபடி கோலத்தை போட்டுமுடிக்க…

 

அடியேய் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா நானே அம்மாக்கிட்ட கேட்டு இங்க தள்ளிக்கிட்டு வந்தா இது இப்ப முக்கியமா.. இங்கவாடி ….??”கனியை தூக்கியபடி தன் அறைக்குள் செல்ல….

 

அவன் கழுத்தில் கையை போட்டவள் என்னங்க பொண்டாட்டியை தள்ளிக்கிட்டு வந்தேன்னு சொல்லுறிங்க….??”

 

ஆமாடி… நான் தள்ளிக்கிட்டுத்தான் வந்தேன்… உனக்காக அத்தான் டெல்லியில ஒன்னு வாங்கிட்டு வந்தேன்…??” ஏதோ துணி போல தெரியவும்…..

 

குடுங்கத்தான் பார்க்கிறேன்…

 

அதுக்கெல்லாம் வேலையில்லை ….. போ போய் போட்டுட்டு வா... அதை கையிலெடுத்து பார்க்க நைட்டி…

 

நைட்டியா… இதுக்கா இவ்வளவு பில்டப்… நான்தான் வீட்ல நைட்டி போடுறேனே…??”

 

அதான் போட்டுட்டு வான்னு சொல்லுறேன்… அவளை உள்ளேவிட்டு இவன் வெளியில் வர வெளிக்கதவை சாத்திவிட்டு கதிருக்கு போன் செய்து பத்திரிக்கை கொடுக்கும் விசயமாக ஏதோ பேசிவிட்டு ஒரு ஐந்து நிமிடம் சேரில் அமர்ந்திருந்தவன்… ஏய் ஒரு நைட்டி மாத்த இவ்வளவு நேரமா…??”

 

ஐய்யய்யோ என்னத்தான் இது கையும் இல்ல கழுத்தும் இவ்வளவு இறக்கமா இருக்கு….. நான் சேலையே கட்டிக்கிறேன்….??”

 

வேகமாக கதவை தட்டியவன்… மரியாதையா கதவை திற நான் வாங்கிவந்த டிரஸ்  எப்படியிருக்குன்னு நான் பார்க்கனும்??” கதவை விடாமல் தட்டவும் … கதவை திறந்தவள் நைட்டி மேல் அவன் போட்டிருந்த சட்டையோடு வர அவளுக்கு அந்த சட்டை லூசாக தோள்பட்டை வழியே பாதி கைக்கு வந்திருந்தது…. அவளை பார்க்கவும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தவன்…… ஏய் அப்படியே சோளகாட்டு பொம்மை மாதிரி இருக்கடி… ஆனா நான் வாங்கிட்டு வந்தது இது இல்லையே…  மரியாதையா என் சட்டையை என்கிட்ட குடுடி??” அவளிடம் வம்பு பண்ணியவன் அவள் மாட்டேன் என சொல்லவும் கோபமாக திரும்ப அவனை எட்டி பின்புறம் இருந்து அணைத்தவள்… அவன் சட்டையை கழட்டி அவனிடம் கொடுக்க… விசில் அடித்தபடி அவளை சுற்றிவந்தவன் பரவாயில்ல அத்தான் நல்லா செலக்ட் பண்ணியிருக்கேன்…. அங்க அந்த பொம்மைக்கு போட்டிருந்ததை விட உனக்கு செமையா இருக்குடி…??” அவளை பின்புறம் இருந்து அணைத்தவன் அவள் கழுத்தில் தன் முகத்தை புதைக்க …. அவள் நிறத்திற்கும் அந்த கருப்பு வண்ண உடைக்கு அப்படி பொருத்தமாக  வெளியில் தெரிந்த அவள் கைகள் கழுத்து என ஒரு இடம்விடாமல் தன் முத்த ஊர்வலத்தை நடத்தியவன் கடைசியில் அவள் இதழில் வந்து நிற்க… இவளும் அவனோடு ஒன்றி அந்த முத்தத்திற்கு வழிவகுக்க… அவளை தன் கைகளில் அள்ளியிருந்தான்….

 

 இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும் கனிக்கு ஐந்து மணிக்கே விழிப்பு வந்தது…. மனம் முழுவதும் அப்படி ஒரு சந்தோசத்தில் இருக்க தன்னை அணைத்தபடி தூங்கியவனின் தலையை மெதுவாக கலைத்துவிட்டு அவன் மீசையை பிடித்து இழுத்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட…. அவன் தூக்க கலக்கத்தில் அவளை இன்னும் இறுக்கினான்… அப்படியே இருந்தவள் அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவும் வெளியே வந்து குளித்துவிட்டு வாசலில் பெரிய கலர்கோலம் போட்டு நடுவில் பூசணிபூவை வைத்தவள் அடுப்படிக்கு வர இரவு இருவரும் சாப்பிடாததால் கொண்டு வந்த சாப்பாடு அப்படியே கெட்டுப் போயிருக்க அதை வெளியில் கொட்டிவிட்டு இருந்த பாலை வைத்து காப்பியோடு தன் கணவனை எழுப்ப வர குடும்பமே பொங்கல் வைக்க கிளம்பி வந்திருந்தது

 

 

வேகமாக சென்று துரையை எழுப்பிவிட்டவள் காப்பியை கொடுத்து வெளியில் வந்திருக்க… துரையும் வெளியில் வந்திருந்தான்… துரையும் கதிரும் மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து புது வேட்டி துண்டு கட்டி மாலை அணிவித்து அலங்காரம் செய்து கொண்டிருக்க  அனைவரும் நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைக்க ஆரம்பித்தனர்…  கரும்புகளை முன்னால் கட்டிவைத்து பொங்கல் வைக்கவும் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டவர்கள் மாடுகளுக்கு பச்சரிசியில் வெல்லம் கலந்து கொடுத்து வாழைப்பழங்களை கொடுத்து அதை அவிழ்த்து விட்டார்கள்

 

மதிய சாப்பாட்டை அப்பத்தா வெளி விறகடுப்பில் தான் சமைப்பதாக சொல்லவும் இவர்கள் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்… ஹரிணியும் ரம்யாவும் பாவாடை தாவணியில் வலம்வர காயத்ரியும் கனியும் டிசைனர் சேலையில் ஜொலித்தார்கள் … அரவிந்தும் தமிழும் தங்கள் ஊரில் பொங்கல் வைத்துவிட்டு மதியம் வருவதாக சொல்லியிருந்தார்கள்… இவர்கள் பொங்கல்வைக்கவும் டிவியில் மூழ்க… மதியம் ஒரு மணி போல….. கதிர் அத்தை திருஷ்டி சுத்திக்கிட்டு வர்றாங்க….??”

 

மீனாட்சி கனி எல்லா கதவையும் நல்லா திறந்து வைத்தா…

 

அனைத்து கதவையும் நன்றாக திறந்து வைக்க…. பத்து பதினைந்து பெரியவர்கள் … நிறைய இளைஞர்கள் …. சிறு பையன்கள் என ஒரு 50 பேர்  அதில் பூசாரி போல இருந்தவர் ஒரு பெரிய செம்பில் தீர்த்தம் கொண்டு வர சிறுவர்கள் ஒரு பித்தளை பாத்திரத்தில் வாழைப்பழம்  பூ போட்டு அதை ஒரு கம்பால் தட்டிக் கொண்டு வர…. அந்த பூசாரியோ வீட்டிற்குள் வந்தவர் அந்த தீர்த்தத்தை மாவிலையால் வீடெல்லாம் தெளித்தபடி….சத்தமாக…..

 

பொங்கலோ பொங்கல் ….”என கத்த மற்றவர்கள் கோவிந்தா…” என கத்தினார்கள்…

 

பொங்கலோ பொங்கல்         –      கோவிந்தா

சங்கரான் பொங்கல்            –        கோவிந்தா

பட்டிப் பெருக.                   –       கோவிந்தா

பால்பானை பொங்க            –        கோவிந்தா

மூதேவி முறிந்தோட            –       கோவிந்தா

சீதேவி நின்றடங்க              –        கோவிந்தா ….”

என திரும்ப திரும்ப சொன்னபடி ஒவ்வொரு அறையாக அந்த தீர்த்தத்தை தெளித்தபடி அனைவரும் உள்ளே சென்று வெளியே வர வீட்டினரின் மேலும் தீர்த்தத்தை தெளித்தபடி அடுத்த வீட்டிற்கு கிளம்ப… இளைஞர்களோ…

 

டேய் மாப்பிள்ளைகளா கரெக்டா மூனு மணிக்கு விளையாட்டு போட்டி எல்லாரையும் கூட்டிட்டு வந்துருங்கடா..??”.கனியை நலம் விசாரித்தவர்கள் காயத்ரிக்கு வாழ்த்து சொன்னபடி எங்க ஊருக்கு மருமகளா வரப்போறிங்க நீங்க எல்லாரும் வந்து விளையாட்டு போட்டியில கலந்துக்கனும்…ஹரிணியையும் ரம்யாவையும் சைட் அடித்தபடி நீங்களும் வந்துருங்க….??”

 

அவர்கள் செல்லவும் தமிழ் வரவும் கரெக்டாக இருக்க ஹரிணியும் ரம்யாவும் விளையாட்டு போட்டிகளை பற்றி கேட்டு அவளை படுத்தி எடுத்துவிட்டார்கள்…  தமிழுக்குமே விளையாட்டு போட்டிகளை பார்க்க வேண்டும் போல இருக்க மதியம் சாப்பிடவும் அவர்கள் ஒரு கூட்டணி அமைத்து யார்யார் என்னன்ன போட்டியில் பங்கு பெறலாம் என முடிவு செய்து கொண்டார்கள்…. மைக்கில் அங்கு விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வரும்படி சொல்லிக் கொண்டிருக்க இவர்கள் கிளம்பி சென்றவர்கள் ..  பெண்களுக்கான ரங்கோலி போட்டி ஆரம்பிக்க கனியும் காயத்ரியும் அதில் கலந்து கொண்டார்கள்… அவர்கள் கோலம் போட்டுக் கொண்டிருக்க… இங்கு மற்றவர்களுக்கு வேறு போட்டிகள்  ஸ்லோ சைக்கிள் ரேசில் ஹரிணி முதல் பரிசை தட்டியிருந்தாள்…. அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்த அங்கு ஒரே ஆட்டமும் பாட்டுமாகத்தான் இருந்தது … அடுத்து பாட்டிலில் கலர்தண்ணிர் நிரப்புவது போட்டியில் ரம்யா பரிசை தட்டி சென்றாள்… அரவிந்த் தமிழை எந்த போட்டியிலும் பங்கு கொள்ளக்கூடாது என கண்டிப்பாக சொன்னதால் அவள் மற்றவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்…..

 

அடுத்து ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற துரையும் கதிரும் களம் இறங்கியிருந்தார்கள்…  அரவிந்தையும் தங்கள் அணியோடு இழுத்து கொண்டவர்கள் …. ஒரணியில் நின்று விளையாட கதிரைதான் அந்த ஊரில் கேலி முறையில் உள்ள பெண்கள்  வேண்டும் என்றே வம்பிழுக்க எப்போதும் அவன்தான் இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெரும் பெண்களை சைட் அடித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டும் அவர்களை விளையாட விடாமல் செய்து கொண்டிருப்பான்… அவனுக்கு இந்த மாதம் திருமணம் என்பதை அறிந்த பெண்கள் காயத்ரியை பார்த்தபடி அவனை சைட்அடித்து அவனோடு வம்பிழுக்க காயத்ரிக்கு காதில் புகை ஒன்றுதான் வரவில்லை.. கோலம் போடுவதை விட்டுவிட்டு கதிரை முறைக்க ஆரம்பிக்க…

 

ஐயோ மாப்பிள்ளைகளா என்ன உங்க தங்கச்சி என்னை கண்ணாலயே பொசுக்கிருவா போல இன்னைக்கு செமயா மாட்டினேன்னு நினைக்கிறேன்…??” இவன் கவனம் சிதறவும் அவுட் ஆக்கி வெளியில் அனுப்பியிருந்தார்கள்…. பெண்கள் அனைவரும் ஓவென கத்தி கதிரை ஓட்ட… இது கிராமங்களில்  திருவிழா நேரங்களில் நடக்கும் ஒரு சாதாரண கலாட்டா…பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்… வயது பெண்களில் இருந்து கிழவிகள் வரை எந்த பெண்களையும் விடாமல் வம்பிழுத்து ஓட்டுவார்கள்… டேய் மாப்பிள்ள நான்தான் அவுட்டாகிட்டேன் நீங்களாச்சும் அவுட்டாகாம வாங்க…..ஹரிணியும் ரம்யாவும் தங்கள் மச்சான்களை கைதட்டி உற்சாகப்படுத்த கனியும் காயத்ரியும் பார்வையாளராக மாறியிருந்தார்கள்…

 

துரையும் அரவிந்தும் அவர்கள் உயரத்திற்கும் உடற்கட்டிற்கும் மற்றவர்களை ஈஸியாக அவுட்டாக்க இவர்கள் அணி ஜெயித்தது…. அங்கு மைக்கில் கோலப்போட்டிக்கான முடிவை அறிவிக்க போவதாக சொல்ல…. இவர்கள் அனைவரும் அங்கு சென்றிருந்தனர்…. கனியின் கைவண்ணத்தில் ஜொலித்த ரங்கோலி முதல் பரிசையும் காயத்ரிக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது… காயத்ரி கவனத்தை சிதறவிட்டதால் …… மூன்றாம் பரிசே கிடைத்தது… பரிசாக சிறிய சிறிய பொருட்கள்தான் ஆனால் அதில் கலந்து கொண்ட மனநிறைவு அதிகம்…. இவ்வளவிற்கும் பரிசுகளை வாங்க கதிரும் துரையும் ஆளுக்கு 5000 கொடுத்திருந்தார்கள்….

 

தமிழுக்கு ஏழாவது மாதம் நடைபெறுவதால் கொஞ்ச நேரத்திலேயே அரவிந்த் அவளை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்… அங்கிருந்த இளைஞர்களின் பார்வை அடிக்கடி ஹரிணியையும் ரம்யாவையும் சுற்றுவதை கண்ட துரையும் கதிரும் அவர்களுக்கு பாதுகாப்பு அரண்போல எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் அவர்கள் அருகிலேயே  நின்று கொண்டார்கள்… போதும் வேண்டாம் என்றாலும் அவர்கள் கேட்காமல் சாக்கு போட்டி …கயிறு இழுத்தல போட்டி… ஸ்கிப்பிங் என எல்லா போட்டியிலும் கலந்து கொள்ள பேர் கொடுத்தவர்கள் அதிலேயே மூழ்கி போனார்கள்… மற்ற இளைஞர்களுக்கு பார்வை அங்கு சென்றாலும் துரைக்கும் கதிருக்கும் பயந்து அருகில் செல்லாமல் பார்வையை மட்டும்தான் வைத்திருந்தார்கள் அவர்களுக்கும் தெரியும் தங்கள் ஊரைபற்றி இங்கு கேலி கிண்டல்தான் அதிகம் இருக்குமே தவிர தவறான பார்வையோ இரட்டை அர்த்தமுள்ள பேச்சோ இருக்காது… அதனால் தங்கள் துணையை தேடி போக…… அவர்கள் வயதான ஆண்கள் சுருட்டு இழுத்தல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்… அனைவருக்கும் வயது 60 க்கு மேல் இருக்கும் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு பற்றவைத்த சுருட்டை வேகமாக இழுத்துக் கொண்டிருக்க அவர்கள் வயதை ஒட்டிய பெண்கள் உற்சாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்   கதிர் காயத்ரியை  உரசுவது போல போய் நிற்க… கதிரின் கையை பிடித்து இழுத்த பெண்கள் வாங்க மச்சான் வாங்க …. என்று பாட்டுபாடி வம்பிழுக்க ஆரம்பித்தார்கள்.

 

கதிரோ காயத்ரியை பாவமாக பார்த்தபடி இத்தனை வருசம் விளையாட்டா பண்ணினது எல்லாம் இன்னைக்கு ஒன்னு சேர்ந்து நம்மள வைச்சு செய்யுதுகளே....ஹிஹிஹி ….”என சிரித்து வைக்க…..

 

காயத்ரி கடுப்புடன் ஒன்றும் சொல்லாமல் மறுபக்கம திரும்பி கொண்டாள் … கனிக்கு பரவாயில்ல இந்த விசயத்துல நம்ம வீட்டுக்காரர் ராமர்தான் நம்மள தவிர யாரையும் பார்க்கலை போல எல்லாரும் அண்ணா அண்ணான்னுதான் கூப்பிடுறாங்க…. நிம்மதி பெருமூச்சுவிட்டவள் தன் அருகில் நின்றிருந்த கணவனின் கையை தன் கையோடு சேர்க்க……..

 

அவள் பின்னால் இருந்து ஹாய் மச்சான்ஸ் …”என நமிதா குரலில் ஒருவர் அழைக்கவும்…. துரையும் கதிரும் அப்படியே அதிர்ச்சியாகி நின்றார்கள்….  என்ன மச்சான்ஸ் இப்பல்லாம் நீங்க என்னோட கரகாட்டம் பார்க்க வர்றதே இல்லை..நீங்க வந்தாத்தான் 10000…. 15000 ம்னு குடுப்பிங்க… இந்த வாரம் நம்ம பக்கதூருல ஒரு ஆட்டம் இருக்கு மறக்காம வந்துருங்க….. அவர்கள் இருவரின் கன்னத்தை தொடப்போக… அப்படியே பின்னால் இரண்டடி எடுத்து வைத்திருந்தார்கள்….இவர்கள் குடித்துவிட்டு தங்கள் பணத்தை இந்த பெண்ணிடம்தான் கொடுத்திருந்தார்கள்…பக்கத்தூரில் வசிப்பவர் இவரின் கரகாட்டம் எங்கு நடந்தாலும் இருவரும் முதலில் நிற்பார்கள்….

 

கதிர் மாப்பிள்ளை இன்னைக்கு நம்ம நேரமே சரியில்ல போல…. போற பக்கிக எல்லாம் தேரை இழுத்து தெருவுல விட்டுருச்சுகளே… இப்ப என்ன பண்ணபோறோம்னு தெரியலையே….??”

 

துரை மெதுவாக தன் மனைவியின் முகத்தை பார்க்க அவன் கையை எப்போதோ விட்டிருந்தவள்…பல்லை கடித்தபடி காயத்ரியோடு வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.. இங்கு ஹரிணியும் ரம்யாவும் இன்னும் விளையாட்டு போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்… கோலப்போட்டிக்கான பரிசையும் வாங்கவில்லை…கதிரும் துரையும் என்ன செய்வது என்று யோசித்தவர்கள்… இப்போது இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு இவர்களை சமாதானப்படுத்த முடியாது… ஹரிணியும் ரம்யாவும்தான் முக்கியம் என அவர்களை வீட்டிற்கு கிளப்ப அவர்கள் விளையாடும் இடம்நோக்கி சென்றிருந்தனர்…

 

ஒருமணி நேரம் கழித்து வீட்டிற்கு வர வீடே அமைதியாக இருந்தது..கதவு திறந்துகிடக்க யாரையும் காணாமல் கனிக்கு போன்செய்தவன் அவள் போனை எடுக்காமல் இருக்கவும் மீனாட்சிக்கு போன்செய்ய… கனியை மட்டும் அங்குவிட்டுவிட்டு மற்றவர்கள் வீட்டிற்கு வந்திருப்பதாக சொன்னவர் கனியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்படி சொல்லியிருந்தார் துரை மட்டும் இங்கு இருக்க கதிர் தங்கைகளோடு வீட்டிற்கு கிளம்பியிருந்தான்…எங்கு தேடியும் காணாமல் அவள் எப்போதும் அமரும் மாமரத்தின் அருகில் வர எப்போதும் போல அந்த மரத்தில்தான் அமர்ந்திருந்தாள்…. ஹாய் பொண்டாட்டி என்ன ரொம்ப சிந்தனையில இருக்க…??”

 

ம்ம்ம்… நீங்க இன்னும் எத்தனை கரகாட்ட பொண்ணுகளோட பிரண்டா இருக்கிங்கன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்….??”

 

ஆஹா நம்ம பொண்டாட்டி கோபமா இருக்காளே… அவளை இழுத்தவன் ஏய் லூசு அதெல்லாம் கமுக்கு முன்னாடிடி….??”

 

அப்ப கல்யாணத்து முன்னாடி இப்படித்தான் அவங்க பின்னாடியே திருஞ்சிங்களா.??”.. தன் இடுப்பில் கையைவைத்து அவனை முறைக்க…

 

ம்ம்ம் கமுன்னா கனிமொழிய பார்க்கிறதுக்கு முன்னாடி எப்ப உன்னை பார்த்தனோ… அப்பதில இருந்து என்பார்வை வேற யாரையாச்சும் பார்த்துச்சாடி…. எப்பவும் நீ என்னை பார்க்க மாட்டியான்னு உன்னைத்தான் பார்த்துக்கிட்டு திரிஞ்சேன்….??”

 

அவள் மரத்தில் உட்கார்ந்திருக்க இவன் அவளை அணைத்தபடி அந்த மரத்தை ஒட்டினாற்போல நின்றிருந்தான்… அவன் கழுத்தில் மாலையாய் தன் கையை கோர்த்தவள்….. அவன் கண்ணோடு தன் கண்ணை கலக்கவிட்டு…. என்னை மன்னிச்சிருங்க… இந்த ஊர்ல எவ்வளவுபேர் உங்கமேல நல்ல மரியாதை வைச்சிருக்காங்க .. ஆனா நான் கல்யாணம் பண்ணின அன்னைக்கே உங்கள விட்டு போய் உங்களுக்கு எவ்வளவு  அவமானத்தை தேடிக்குடுத்திட்டேன்.. .ஸாரிங்க அப்பல்லாம் என் மரமண்டைக்கு நீங்க என்னை விரும்புனதை புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்… என்னதான் மன்னிப்பு கேட்டாலும் எனக்கு மனசு ஆறவே இல்லை….??”

 

கனியையே பார்த்தவன்… உன்மேலயும் எனக்கு கோபம்தான் நம்மகிட்ட ஒருவார்த்தைக்கூட கேக்காம போயிட்டியேன்னு…. ஆனா ஒரு உண்மையை சொல்லு நான் விரும்புறது முதல்லயே தெரிஞ்சிருந்தா நீ போயிருப்பியா…??”

 

இல்லை என தலையை ஆட்டவும்

 

அப்புறம் என்னடி தெரியாமத்தானே செஞ்ச… விடு நீ போனது எனக்கு அதிர்ச்சிதான் .. அப்ப உன்னை உடனே கண்டுபிடிச்சிருந்தாக் கூட எனக்கிருந்த கோபத்துல இன்னும் பிரச்சனைதான் பெரிசாயிருக்கும் இத ஒரு பிரச்சனையா கொண்டுவந்து எங்கபங்காளிக எங்கம்மாவ பேசின பேச்சு அதுக்கும் நீ போனதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை சொத்த எப்படி அடையலாம்னு இருந்தவங்களுக்கு நீ போனது ஒரு சாக்குதான்… ஆனா அதனாலதான் நானும் எங்க அப்பாவோட சொத்துகளை இப்ப  மீட்டுருக்கேன்… அம்மாவோட ஆசைப்படி பேங்கல வேலைக்கு போறேன்… அதுனால ரொம்ப கஷ்டப்படாத…நீயும் ஒன்னும் சந்தோசமா இருக்கலையே… ஆளே பாதியாத்தானே வந்த….உன்னை பார்த்த அன்னைக்கே என் கோபம் எல்லாம் போயிருச்சுடி ஆனா எனக்கு ஒன்னுதான் புரியவே இல்லை… அப்பல்லாம் கொஞ்சம்கூடவா நான் உன்னை விரும்புறேன்னு புரியல…. நீ எங்க போனாலும் நான்தானடி முன்னாடி வந்தேன்….??”

 

அவன் மீசையை பிடித்து இழுத்தவள்… லவ் பண்ணினா சொல்லனும் அத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் கோபமா முகத்தை வைச்சிக்கிட்டு உர்ருன்னு இருந்தா…நீங்க கோபமா பார்க்கிறிங்களா இல்லை லவ்வா பார்க்கிறிங்களான்னு எனக்கு எப்புடி தெரியுமாம்…. முரடு முரடு….??”

 

நான் முரடனா… இப்ப உன்னை இந்த முரடன் என்ன பண்ணுறேன் பாரு….??” அவளை தூக்கிச்சுற்ற…

 

கலகலவென சிரித்தபடி அவனிடமிருந்து திமிறி விலகி தங்கள் வீட்டை நோக்கி ஓடியவளை… எட்டிப்பிடித்தவன்  தன் கைகளுக்குள் இழுக்க கதிர் போன் செய்திருந்தான்…..

 

என்னடா அடி ரொம்ப பலமா என் தங்கச்சி நல்லா வெளுத்துச்சா??”

 

கதிர் நாங்கெல்லாம் யாரு..அதெல்லாம் நான் சமாதானப்படுத்திட்டேன்… இதுவரைக்கும் நாங்க ரெண்டுபேரும் தனியா வெளியில போகவே இல்லையா… அதான் நானும் காயத்ரியும் இப்ப வெளியில போறோம்..ஆனா வீட்டுல. உங்களோடத்தான் போறோம்னு சொல்லிட்டேன்…??”

 

கனியை இறுக்கி அணைத்தவன் டேய் நான் இப்ப வெளியே போற மூட்ல இல்லையே??”

 

 நீ எங்கயும் வரவேண்டாம் நாங்க சினிமாவுக்கு போயிட்டு அங்க வந்துருறோம் அப்புறம் எல்லாரும் சேர்ந்து வந்துக்கலாம் … அதை சொல்லத்தான் போன் பண்ணினேன்… நீ அவசரப்பட்டு இங்க வந்துறாத… பைடா மாப்பிள்ள…

 

ரொம்ப நல்லதுடா… போனை வைத்தவன் உங்க அண்ணன் ரொம்ப புத்திசாலிடி அதுக்குள்ள என் தங்கச்சிய சமாதானப்படுத்திட்டானே…??”

 

அவன் நெற்றியில் முட்டியவள் அப்புறம் எல்லாரும் உங்கள மாதிரி லவ்வ சொல்லவே நாலுவருசம் எடுத்துக்குவாங்களா..

ஏய் என்ன என்னை ரொம்ப ஓட்டுற.. உன்னை பேசவிடுறதே தப்பு…அவளை பேசவிடாமல் செய்தவன்… அவளை தூக்கியபடி தங்கள் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தான்….

 

 

 

                                                          இனி………?????.