Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  8
 
கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்…. அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது… அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது… முகத்தில் மஞ்சள் லேசாக பூசியிருப்பாள் போல… தகதகவென மின்னியது… காலைவெயில் லேசாக அவள் முகத்தில் அடிக்க பொன்னிறமாக ஜொலித்தாள்.. விழப்போகிறோமே என நினைத்த கனி தன்னை விழாமல் துரை தாங்கவும் அவன் முகத்தை பார்த்தவள் அவன் பார்வை ஏதோ தன்னிடம் கூறியதோ…. என நினைத்தவள் ஒரு வேளை தவறி விழுந்ததை நாம வேணும்னே விழுந்திட்டோம்னு நினைக்கிறாங்களோ… சும்மாவே நாம அங்கிட்டும் இங்கிட்டும் போறதா நினைச்சாங்களே என நினைத்து வேகமாக அவனை விட்டு விலகியவள் அடுப்படியை நோக்கி ஓடினாள்….
 
அவளிடம் இந்த சேலையை பத்தி கேட்கலையே என நினைத்தவன் அவள் பின்னால் வர இரண்டெட்டு எடுத்து வைக்க கதிரும் … அரவிந்த் இவனை நோக்கி வர அப்படியே நின்று விட்டான்….. மூவரும் அரட்டை அடித்தபடி கிணற்றை நோக்கி சென்றவர்கள் துரையும் கதிரும் மேலிருந்தபடி கிணற்றில் குதிக்க அரவிந்த் படி வழியாக இறங்கி வந்து கிணற்றில் குதித்திருந்தான்… அவனுக்கும் நீச்சல் தெரியும் ஆனால் முதல்முறையாக கிணற்றில் குளிப்பதால் மேலிருந்து குதிக்காமல் படிவழியாக இறங்கி வந்திருந்தான்… மூவரும் வெகுநேரம் குளித்துவிட்டு மேலே வர அங்கு காலை டிபன் தயாராக இருந்தது…
 
 மீனாட்சிதான் அரவிந்த் இங்கிருந்து போகும் வரை எல்லா  சமையலும் தான் சொன்னபடிதான் என சொல்லி மளிகை சாமான்களை இறக்கி இருக்க… அசைவ சமையலுக்கு தேவையான மீன்…மட்டன்..சிக்கன்…நண்டு…இறால் என என்னன்ன இருக்கிறதோ அனைத்தையும் கதிர் வாங்கி வந்து கொடுக்க உத்தரவிட்டிருந்தார்… அவருக்கு தெரியும் ஒரு கிராமத்தில் பெண் பிள்ளைகள் மட்டும் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் வந்து தங்கினால் என்னன்ன பேசுவார்கள் என்று இருந்தாலும் அரவிந்த் மனசு சங்கடப்படாமல்… மற்றவர்கள் அனைவரும் தினம் ஒன்றுகூடி ஒரே குடும்பமாக இருப்பது போல தன் தம்பியை கலந்து பேசி அவர் குடும்பத்தையும் இதில் சேர்த்திருந்தார்…
 
முத்துராமனுக்கு என்னவோ கனியையும் அவள் தங்கைகளையும் பார்க்கும் போது தன்னை மீறி பாசம் பொங்கியது… மீனாட்சி சொல்லாவிட்டாலும் அவர் தினம் இங்கு வந்து இவர்களை பார்த்து செல்ல பழகியிருந்தார்..தன் வீட்டிற்கு பழங்கள் திண்பண்டங்கள் வாங்கினால் இவர்களுக்கும் கொண்டு வந்து கொடுத்து செல்வார்….மீனாட்சி அரவிந்த் இங்கிருந்து போகும்வரை இங்கேயே சாப்பிடலாம் என சொல்லியிருக்க அவரும் சந்தோசமாக தலையாட்டியிருந்தார். .. மூவரும் குளித்து வர இந்த சூழல் அரவிந்துக்கு ரொம்பவே பிடித்தது… தான் ஒரு ஆளாக வளர்ந்ததால் இங்கு அனைவரும் கூட்டமாக சேர்ந்து அரட்டை அடித்தபடி இருப்பது சாப்பிடுவது என  சந்தோசமாக இருப்பதை பார்த்தவனுக்கு தானும் இந்த கூட்டத்தில் ஒருவனாக ஆக வேண்டும் போல இருந்தது…..துரை தன் அறையில் இருந்த துணியை மாற்றிவர கதிருக்கும் எடுத்து கொடுத்திருந்தான்…
 
மூவரும் சாப்பிட வர அந்த இடமே கலகலப்பாக மாற துவங்க… அன்று விடுமுறை தினமாக இருந்ததால் சாவகாசமாக எழுந்த தங்கைளுக்கு கனி வேலை சொல்லியபடி இருக்க அவர்களும் அவள் சொன்னபடி அனைத்தையும் வெளித்திண்ணையில் வைத்தபடி சிறிய கிண்ணங்களில் கேசரியை எடுத்து வைத்து கொண்டிருந்தார்கள்… கனி சாப்பாட்டை பரிமாறவர ஹரிணியும் ரம்யாவும் தங்கள் கையால் கட்டிய அந்த முல்லைப்பூவை கொண்டுவந்து தன் அக்காவிடம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்கள்… அரவிந்த ஒரு கிப்ட் பேக்கை கொடுக்க அதில் அவளுக்கு தையலுக்கு தேவையான நிறைய கலர்கலரான நூல்கண்டுகள்… ஜமிக்கிகள்…ரன்னிங்ஸ்டோன் போன்ற இந்த காலத்து பிளவுஸ் தைக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் நிறைய இருக்க கதிர் ஒரு அழகான லேடிஸ் வாட்சை கொடுக்க மீனாட்சி அழகான காட்டன் சேலையை பரிசாக கொடுத்தார்..துரைக்கு அப்போதுதான் தெரியும் இன்று கனிக்கு பிறந்தநாள் என்று அனைவரும் பரிசு கொடுக்க தான் மட்டும் ஒன்றும் கொடுக்க முடியாமல் இருப்பதை பார்த்தவன் அப்ப இவளுக்கு இன்னைக்கு பிறந்தநாளுன்னு என்னைத்தவிர எல்லாருக்கும் தெரியும் போல…பல்லை கடித்தவன் சாப்பிடாமல் எழுந்து வெளியே செல்லப்போக…
 
முத்துராமன் உள்ளே நுழைந்தார்..என்ன மாப்புள்ள சாப்பிட்டிங்களா…??”
 
சற்று தயங்கியவன்… இல்ல மாமா கொஞ்சம் வேலையிருக்கு அதான் அப்புறமா சாப்பிடலாம்னு…??”
 
மீனாட்சி…  தம்பி சாப்பிட்டு போயிருடா.. வேலைய கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்துக்கலாம்…??”அதற்குள் அரவிந்தும் கதிரும் சாப்பிட அமர்ந்திருக்க கேசரியை சாப்பிட்டவர்கள்…
சூப்பர்மா தங்கச்சி என கதிரும்
 
சூப்பர் கனி என அரவிந்தும் பாராட்ட சந்தோசமாக சிரித்தவள் முத்துராமனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தபடி…
எங்கப்பா அம்மாவும் அக்காவும் ??”என வசந்தாவையும் தமிழையும் கேட்க…
 
எனக்கு கொஞ்சம் வசூல் இருக்குத்தா அதான் வெள்ளன கிளம்பி வந்தேன்… அவுக ரெண்டு பேரும் தமிழோட ஸ்கூட்டியில் வருவாங்க… நீங்க எல்லாரும் திருவிழாவுக்கு போறிங்களாம்ல…கதிரு நீதான் கூட்டிட்டு போறியாடா…??”
கேசரியை வாயிற்குள் அமுக்கியபடி ஆமாப்பா…??”
 
மாப்பிள்ள நீங்களும் கூட போயிட்டு வந்துருங்க… பொம்பள புள்ளைங்க எல்லாரும் போறாங்க இவன நம்பி அனுப்புனா இவன் வேற பொம்பள புள்ளைகள வேடிக்கை பார்த்துட்டு நம்ம புள்ளைகள கவனிக்காம விட்டுருவான்… நீங்க போயிட்டு வந்துருங்க மாப்புள்ள??” என்றபடி தன் சட்டையில் இருந்து 2000 ரூபாய் எடுத்தவர் கனியிடம் பிறந்தநாள் காசாக கொடுக்க வாங்க மறுத்தவளை பிடிவாதமாக அவள் கையில் திணித்துவிட்டு அவளை வாழ்த்தி திருநீறுபூசிவிட்டு…. ரம்யாவுக்கும் ஹரிணிக்கும் ஆளுக்கு 500 ரூபாயை கொடுத்து திருவிழாவுக்கு செலவு செய்ய சொல்லி கொடுத்துவிட்டு வசூலுக்கு கிளம்பிவிட்டார்…
 
ஹரிணிக்கும் ரம்யாவுக்கும் சந்தோசம் தாங்கவில்லை… நம்மகிட்ட 500…. ரூபாயா . அந்த தாளையே ஆசையாக தடவி பார்த்து சந்தோசப்பட..கனிக்குமே இந்த தருணம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது..தன் அப்பா இருந்திருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார் என நினைத்தவளுக்கு தங்கைகளின் சந்தோசத்தை பார்த்து கண்கலங்கியது… இதுவரை இப்படி ஒருநாள் பிறந்தநாள்விழா தன் வாழ்நாளில் வரும் என்று என்றுமே நினைத்ததில்லை…தன் தாய் இருந்தவரை பிறந்தநாள் அன்று பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்… அவ்வளவுதான் புத்தாடையோ இனிப்போ இருக்காது …. இவர்களும் அதை கேட்க மாட்டார்கள்….. இன்று புத்தாடை…இனிப்பு பெரியவர்கள் வாழ்த்து என கனிக்கு இது கனவா நினைவா என்பதுகூட தெரியவில்லை… காலையிலேயே அப்பத்தா வாழ்த்தி திருநீறு பூசுவிட்டிருந்தார்…100 ரூபாய் கொடுத்திருக்க அதை தன்தாயே கொடுத்ததாக நினைத்து பத்திரப்படுத்தினாள்…
 
இங்கே நடப்பதை பார்க்க பார்க்க துரைக்குத்தான் வெறியே வந்திருந்தது… என்னவோ தான்மட்டும் தனித்தீவில் இருப்பது போல இருக்க கேசரியை வாயில்கூட வைக்கவில்லை… இந்த அம்மா தேவையில்லாதது எல்லாம் சொல்வாங்க கோழி அடை வைச்சது… ஆடு குட்டி போட்டதுன்னு இதை மட்டும் சொல்லல… ச்சே அதான் அவ புதுச்சேலை கட்டியிருந்தா போல.. சட்டென எழுந்தவன் தன் தாயிடம் சொல்லிவிட்டு திருவிழாவுக்கு போகும்போது போன் பண்ணச் சொல்லிவிட்டு வெளியில் கிளம்ப கேட் வரை வந்துவிட்டான்…
 
பின்னால் யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு மெதுவாக திரும்பி பார்க்க… இவன் நிற்கவும் கனி மூச்சுவாங்க இவன் அருகில் வந்திருந்தாள்… ஒன்றும் பேசாமல் அவளை பார்க்க…
 
உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்…??”
ம்ம்ம்…
 
அப்பா……. இவங்க பேசவே மாட்டாங்களா…அப்படியே பேசினாலும் நம்மள திட்டத்தான் வாய்திறப்பாங்களோ…. நமக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்துகூட சொல்லல என நினைத்தவள் வந்த விசயம் நியாபகம் வரவும்… அதுவந்து …… அரவிந்த் வீட்டில தைச்சு கொடுக்கிறவிட ஒரு கடை மாதிரி பிடிச்சா இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகலாம்னு சொல்றாங்க… அவங்களே பிடிச்சு தாறேன்னு சொல்றாங்க.. எனக்குத்தான் இங்க எல்லா இடமும் உங்களுக்கு நல்லாத்தெரியும் அதனால உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறிங்களா ப்ளிஸ்….??”
 
துரைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை….
 
ம்ம்ம்…பார்க்கிறேன்…??” என்றபடி முன்னேறியவனை மீண்டும் நிறுத்தியவள்
இந்தாங்க என்றபடி கையில் இருந்த சிறு டப்பாவை கொடுக்க…
 
என்ன…??”
இல்ல கேசரி உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னதாலத்தான் நான் அத செஞ்சேன்… நீங்க ஒருவாய்கூட அத சாப்பிடல அதான் டப்பாவுல வைச்சிருக்கேன்… அப்புறமா எடுத்துக்குறிங்களா…??”
 
அவன் அவளை நிமிர்ந்து பார்க்க...ப்ளிஸ்..??”.கண்ணைச்சுருக்கி கெஞ்ச
 
அவள் தங்கைகள் கொடுத்த பூவை தலைநிறைய வைத்தபடி நெற்றியில் திருநீறு வைத்து பார்க்கவே சட்டென வளர்ந்த பெரிய பெண்போல இருந்தவளை கட்டி அணைக்க இவனுக்கு ஆவல் தோன்றியது…தன் புறம் நீட்டியபடி இருந்த அந்த பாக்ஸை அவள் விரல்தீண்டியபடி வாங்கியவன் இரண்டெட்டு எடுத்து வைத்துவிட்டு பின் திரும்பி வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல….
 
கனியின் மனதிற்குள் குப்பென ஒரு சந்தோசம் எழுந்தது… காலையில் இருந்து எல்லாரும் சொன்னாலும் துரை சொன்னவுடன் ஒரு தனி சந்தோசம் ஏற்படுவதை உணர்ந்தவள் அவனை பார்த்து சந்தோசமாக சிரித்து….ரொம்ப தேங்க்ஸ்ங்க...என்றபடி வீட்டிற்குள் ஓடினாள்…
 
சற்று நேரம் கழித்து வசந்தாவும் தமிழும் வர பெண்கள் அனைவரும் சேர்ந்து மதிய சமையலில் ஈடுபட கதிரும் அரவிந்தும் அந்த ஊரைச் சுற்றிப்பார்க்க கிளம்பியிருந்தனர்…மதியம் வீட்டிற்கு வந்த அரவிந்த் தமிழ் தாவணி அணியாமல் சுடிதாரோடு நின்றவளை பார்த்தவன்… மெதுவாக அவளிடம் சென்று…என்ன இந்த டிரெஸ்ல வந்திருக்க… நான் உன்னை நேத்து போட்டிருந்த மாதிரிதான டிரஸ் போடச் சொன்னேன்…??”
 
ஆமா நீங்க என்ன எனக்கு மாமனா இல்ல மச்சானா… நீங்க சொல்றபடி செய்ய… அதுக்கெல்லாம் வேற ஆளப்பாருங்க…??”
 
ஓஓஓ….. உங்க ஊருல மாமா மச்சானா இருந்தாத்தான் அவங்க சொல்லுற நீங்க கேட்பிங்களா… அப்ப மாமனா ஆயிரவேண்டியதுதான்..??”
 
என்ன சொல்லுறிங்க??” கண்ணை சாசர் போல விரித்தவளை…பார்த்து ரசித்தவன்….சற்று யோசித்து…கனி உன்னை அக்கான்னுதான சொல்லுறா… அப்ப நான் அவள கட்டுனா நீ என்னை மாமான்னு தான சொல்லனும்…??” அவ்வளவுதான் தமிழின் முகம் பீஸ்போன பல்பு போல ஆனது சட்டென அந்த இடத்தை விட்டு நகர அரவிந்த் விசமமாக அவளை பார்த்து சிரித்தான்…
 
ரம்யாவும் ஹரிணியும் படுத்திய பாட்டில் மாலை 4 மணிக்கே திருவிழாவுக்கு கிளம்பியிருந்தனர்…துரைக்கும் போன் செய்துவரச் சொல்ல அவனுடைய ஜீப்பிலேயே கிளம்பினர்…துரை வண்டியை ஓட்ட அரவிந்த் அவன் அருகில் அமர்ந்திருந்தான் கதிர் தன் தங்கைகளோடு பின்னால் அரட்டை அடித்தபடி வர…துரை கண்ணாடி வழியாக கனியை பின்னால் பார்த்தான் இப்போது வேறு உடை உடுத்தியிருந்தாள்… பெண்கள் அனைவரும் பாவாடை தாவணி அணிந்திருந்தனர்…ரம்யாவும் ஹரிணியும் துரை அன்று எடுத்து கொடுத்திருந்ததை அணிந்திருக்க கனியும் தமிழும் தமிழின் உடையை அணிந்திருந்தனர்… கனி நல்ல ஆரஞ்சில் பாவாடை தாவணி போட்டு பிஸ்கட்நிற தாவணி போட்டிருக்க…தமிழோ நல்ல ரோஜா நிற பாவாடை சட்டை போட்டு வெள்ளை நிற தாவணி அணிந்திருந்தாள்..
 
நால்வரும் ஆளுக்கு ஒரு வண்ண ரோஜாவை போல இருந்தனர்..அரவிந்த் ஜீப்பில் ஏறும் போதுதான் தமிழை பார்த்தான் பார்த்தவன் அவள் அழகில் சொக்கி போய் இருக்க பேச்சே வரவில்லை… திருவிழாவிற்கு வந்தவர்கள் வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக வந்த அம்மனை தரிசனம் செய்துவிட்டு திருவிழா கடைக்குள் நுழைய ஹரிணிக்கும் ரம்யாவுக்கும் அவ்வளவு சந்தோசம் இதுவரை எந்த திருவிழாவையும் இவர்கள் இவ்வளவு ரசித்து பார்த்ததில்லை… மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா நடக்கும் போது இவர்கள் தாய்க்கு நிறைய துணி தைக்கும் வேலை இருக்கும் அக்கா தங்கைகள் மூவருமே தன் தாய்க்கு தையலில் உதவி செய்வார்கள்… மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது..தன் தாய் வெட்டிதருவதை கனி தைக்க ஹரிணியும் ரம்யாவும் கொக்கி வைத்து அதை கொண்டு போய் கொடுத்து வருவார்கள்… கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் திருவிழாவை பார்ப்பார்கள்..
 
 இன்று எதை பார்ப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை…வளையல் …. தோடு…. பாசி… என அவ்வளவு இருக்க கனி தங்கைகளுக்கு கொடுத்த நூறு ரூபாயில் இருந்து அதற்கு தகுந்தாற்போல பொருட்களை விலை பேசிவாங்க ஒவ்வொரு கடையிலும் அவ்வளவு நேரம் பிடித்தது கதிர் அவர்களுக்கு துணையாக நிற்க அனைவரும் கூட்டத்தில் பிரிய வாய்ப்புள்ளதால் அப்படி பிரிந்தால் எல்லாரும் ராட்டிணம் சுற்றும் இடத்திற்கு வரும்படி இங்கு வரும்போதே துரை சொல்லியிருந்ததால் அவர்கள் பொறுமையாக பொருட்களை பார்க்கத் துவங்கினர்…
 
தமிழுக்கு எப்போதும் கண்ணாடி வளையல் என்றால் அவ்வளவு விருப்பம்.. அவள் அந்த கடையை பார்க்கவும் தன் உடைகளுக்கு மேட்சாக இருக்கும் வளையல்களை பார்க்க துவங்க கனி மெதுவாக நடக்கத்துவங்கினாள். ..கூட்டம் என்றால் அவ்வளவுகூட்டம் மைக்கில் போலிஸ் குழந்தைகளையும் தாங்கள் கொண்டுவரும் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்ல…. தங்களுக்கு பக்கத்தில் சந்தேகப்படும்படி யாராவது இருந்தால் வந்து சொல்லுமாறும் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு இடைவிடாமல் சொல்லிக கொண்டிருந்தார்கள்… அரவிந்த் தமிழோடு நின்று அவளுக்கு தேவையான வளையல்களையும் தனக்கு பிடித்த கலரையும் சொல்ல அவனிடம் பேசாமல் இருந்தவள் நேரம் ஆக ஆக அவனை நக்கலடித்தாலும் கடைசியில் அவன் சொன்னதையே வாங்கியிருந்தாள்..
 
துரை கனியை பார்க்க அவள் அரவிந்தோடு இருக்காமல் தனியாக இருப்பதை பார்க்கவும் அவளிடம் சென்றவன் கூட்டத்தில் சில இளைஞர்கள் வேண்டும் என்றே பெண்களை இடிப்பதை பார்த்து கனியை நோக்கி சிலர் வருவதை அறிந்து அவளை அணைத்தாற் போல நின்றிருந்தான்… இடிக்க வந்தவர்கள் வந்த வேகத்தில் துரையை இடிக்க அவன் தடுமாறி கனியை பிடித்திருந்தான்… அப்போதுதான் கடைகளிலிருந்து பார்வையை தன்னை பிடித்தவரை பார்க்க துரையை பார்க்கவும்… என்ன என்றபடி அவனை பார்த்தவள் இவர்கள் இருவரும் கூட்டத்தின் நடுவில் நின்றிருந்தனர்… கனிக்கு கூட்டம் அதிகமாகவும் வியர்த்து மயக்கம் வருவது போல இருந்தது… சிறு குழந்தைகள் எல்லாம் கூட்டத்தில் இருக்கபிடிக்காமல் அழ ஆரம்பிக்க அந்த இடமே சலசலவென சத்தத்துடன் இருந்தது
 
தன்னை பிடித்திருந்த கையோடு தன் கையை வைத்தவள் எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு??”என்றபடி தன் கண்ணை மூட போக அவள் கன்னத்தை தட்டியவன்…
 
. இதோ பாரு??” என்றபடி அவள் தோளில் கைப்போட்டு அணைத்தபடி அழைத்து செல்ல கனி பாதி மயக்கத்திற்கு சென்றிருந்தாள்… துரையை பிடித்தது மட்டுமே அவளுக்கு நியாபகத்தில் இருக்க மற்ற அனைத்தும் தெரியவில்லை…தன் சட்டை பையிலிருந்த கர்சிப்பை எடுத்தவன் அவள் வியர்வை வழிந்த முகத்தை துடைத்து விட்டவன் இவ மயங்கி விழுந்துட்டா தூக்ககூட முடியாதே ஆளுக மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்களே என்று நினைத்தவன் அவள் தோளில் இருந்த கையை அவளின் இடுப்பில் வைத்து இறுக அணைத்தபடி தோளில் அவள் தலையை சாய்த்துக் கொண்டான்… இவர்கள் நடக்கவே தேவையில்லை..கூட்டமே அவர்களை தள்ளிக் கொண்டுச் சென்றது..கடைகளில் பொருள் வாங்கி கொண்டிருந்ததால் தமிழை கூட்டம் வரவுமே அரவிந்த் வேறு பக்கம் இழுத்திருந்தான்…கதிர் ஹரிணியோடும் ரம்யாவோடும் கடைக்குள்ளே புகுந்து தப்பித்திருந்தார்கள்…
 
 
ஒருவாறு கனியை பிடித்தபடி துரை வெளியே வர இப்போதுதான் அவனுக்கு மூச்சே வந்தது… மெதுவாக அவளை கூட்டமில்லாத ஓரிடத்தில் அமரவைத்தவன்  பக்கத்து கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து அவள் முகத்தில் தெளிக்க லேசாக மயக்கம் தெளியவும் அந்த தண்ணீரை அவளுக்கு கொடுத்தவன் அவள் கண்விழித்து பார்க்கவும்..
 
என்ன இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லையே…??” மெதுவாக எழுந்தவள்…
 
இல்லை …. இப்ப நல்லாயிருக்கேன்…. அவங்கயெல்லாம் எங்க இருக்காங்க..??”
 
தெரியல போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்… வா நாமளும் அங்க போவோம்….??” மெதுவாக ராட்டிணம் சுற்றும் இடத்திற்கு செல்ல… அங்கு கனியை ஒரு இடத்தில் உட்காரச் சொன்னவன் மற்றவர்களை  தேட காணாமல். மீண்டும் கனி இருக்கும் இடத்திற்கே வந்தான்… கதிருக்கு போன் செய்து கேட்க வந்து கொண்டிருப்பதாக சொல்லவும் அவனும் கனியோடு சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தவன்…
 
உனக்கு கடை பார்த்துட்டேன்… நீ டெப்போவுக்கு பால் கொண்டு போற வழியில ஒரு கடையை பிடிச்சிருக்கேன்… வீட்ல இருந்து கொஞ்சம் கிட்டத்தான் இருக்கு…..??”
 
அட்வான்ஸ் எவ்வளவு…வாடகை..??”. இழுக்க
 
சட்டென கோபமுற்றவன் மத்தவங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிற… நான் ஒன்னுகொடுத்தா மட்டும்தான் இவ்வளவு யோசிக்கிற பணக்கணக்க கொண்டு வர்ற??” கோபத்தில்… உரும..துரை அன்று அரவிந்த் கொடுத்த பொருட்களை வாங்கியதை நினைத்து சொல்ல..கனியோ இன்று தன் பிறந்தநாளுக்கு அனைவரும் கொடுத்த பரிசை நினைத்தவள்…
 
 இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் அதான் எல்லாரும் கொடுத்தையும் வாங்கினேன்… ஆனா இது என் வேலை சம்பந்தப்பட்டது….??”
 
அவளை முறைத்தபடி… அப்படியா என்றவன் அப்ப இந்த கடைக்கு நான் அட்வான்ஸ் கொடுத்ததும் உன் பிறந்த நாள் பரிசுதான் அத்தோட இதையும் வச்சிக்க??” என்றபடி எழுந்தவன் தன் சட்டை பையிலிருந்த ஒரு கவரை கொடுத்தான்…. அதை பிரித்து பார்க்க அழகான வெள்ளிக் கொலுசு…… அதற்குள் கதிர் ரம்யா ஹரிணியோடு வர அதை அவசரமாக கவருக்குள் வைத்தவள் அவர்கள் வருவதற்குள் தன் கைப்பையில் மறைத்து வைத்தாள்……
 
 தமிழ் வராததை அறிந்த துரை கதிரை கேட்க அவனோ அந்த குரங்கு உன்கூட இருக்குணுன்னு நினைச்சேன் மச்சான்.. போச்சு இன்னைக்கு எங்க அப்பா என்ன அடி பிரிக்க போறாரு??” என்றவன் மறுபடி அவளை தேடக்கிளம்ப…. அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் தமிழ் அரவிந்தோடு பேசியபடி வந்தாள்…தமிழ் அரவிந்தோடு வருவதை பார்த்த துரைக்கு கோபம்  தலைக்கு ஏற… அவளிடம் வேகமாக சென்றவன் பல்லை கடித்தபடி…
 
இது என்ன புதுப்பழக்கம் தமிழ்… வெளியில வந்தா ஒன்னு என்னோட வரணும் இல்ல கதிரோட வரணும் இது என்ன புதுசா??” வார்த்தைகளை கடித்து துப்ப…தமிழ் உள்ளுக்குள் நடுங்கத் துவங்கினாள்….
 
                                            இனி……………….?????

Advertisement