Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
            அத்தியாயம் – 7
 
சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது… தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும் தோப்பு வீட்டில் இருப்பதாக சொல்லவும்…
 
 அம்மா சாவியாச்சும் இங்க வச்சிட்டு போயிருக்கலாம் தானே…??” கடுப்படித்தவன் வண்டியை கிளம்ப…கதிர் தன் வீட்டுத்திண்ணையில் படுக்கப் போனான்..
 
டேய் வா அங்க போய் சாவிய வாங்கிட்டு வருவோம்…??”
 
இல்ல மாப்புள்ள எனக்கு தூக்கம் கண்ணக்கட்டுது வரும்போது எங்க வீட்டு சாவியவும் வாங்கிட்டு வந்துருடா… வரவர என் பேச்ச கேட்கக்கூட இந்த வீட்ல ஆளில்லாம போச்சுடா… எங்க அம்மா மட்டும்தான் நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவாங்க…. இப்ப என்னன்னா பொம்பளபுள்ளைக கூட்டணி அதிகமாகவும் நான் என்ன சொன்னாலும் எதிர் கேள்விக்கேக்கிறாங்க…. ம்ம்ம்…..இருக்கட்டும் இருக்கட்டும் …????”கால் மேல் கால் போட்டபடி திண்ணையில் படுத்து இன்று பார்த்த அந்த படத்தின் பாடலை பாடிக் கொண்டிருந்தான்…
 
தன் புல்லட்டை தோப்பை நோக்கிவிட்டவன்  கனியை பற்றித்தான் நினைத்துக் கொண்டு வந்தான்… அவள் முகம் பார்த்து பேசியே ஒரு மாதமாக போகிறது… அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு அவள் அவனிடத்தில் பேசுவதையே குறைத்து விட்டாள்… ஏதாவது முக்கியமாதாக இருந்தால் மட்டும்தான் பேசுவாள்… அது தோப்பை பற்றித்தான் இருக்கும்… அதுவும் முகத்தை பார்க்காமல் வேறுபக்கம் பார்த்துதான் பேசுவாள்…
 
இவன் வண்டியை வெளியில் நிறுத்திவிட்டு கேட்டில் கைவைக்கும் போதே கலகலவென சிரிப்பொலி கேட்டது.. இதுவரை கனி இப்படி சிரித்து கேட்டதில்லை.. உள்ளே வர அங்கிருந்த திண்ணையில் அவர்கள் மூவரோடும் அமர்ந்து ஒரு இளைஞன் பேசிக் கொண்டிருக்க… அவர்களுக்கு எதிரில் கயிற்றுக்கட்டிலைப் போட்டு தன் அம்மா … அத்தை… அம்மாச்சி மூவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்…சுறுசுறுவென கோபம் வந்து வேகமாக உள்ளே வர தன் மகனை பார்க்கவும் எழுந்த மீனாட்சி…
 
தம்பி நான் சொன்னேன்ல என் மகன் துரை….. இவதான்ப்பா..??”துரையை அறிமுகப்படுத்த…
 
துரையிடம் ..தம்பி நாம அன்னைக்கு மதுரைக்கு போனோம்ல அந்த வீட்டுக்கார அண்ணனோட பையன்பா….. பேர் அரவிந்தாம்பா??”
 
துரையை பார்க்கவும் எழுந்த  அரவிந்த் ஹாய் ப்ரோ….??”.கையை குலுக்க நீட்ட.. வேறு வழியில்லாமல் தன் கையை நீட்டினான்….
 
அவனை பார்க்கவும் வீட்டிற்குள் சென்றிருந்த கனி தண்ணீர் கொண்டு வந்தவள் ரம்யாவிடம் கொடுத்து கொடுக்க சொல்லிவிட்டு மீண்டும் அவர்களோடு உட்கார தண்ணீரை வாங்கியபடி துரை அரவிந்தை நோட்டமிட்டான்…. ஜீன்ஸ் டீசர்ட்… கண்ணில் கூலர்ஸ் ஜெல் வைத்து வாரிய தலை..அளவான மீசை… தாடி வைத்து  இன்றைய நாகரிக இளைஞர்களை போல இருந்தவனை பொறாமையோடு பார்த்தான்..நல்ல சிவந்த நிறம்… இவன் நிறத்தை பார்க்கும் போது தன்னுடைய மாநிறம் கருப்பாக இவனுக்கு தோன்றியது.. .ப்ரெஷ்ஷாக பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளபளப்பாக இருந்தான்….தான் இன்று பார்த்த படத்தில் வரும் வெளிநாட்டுக்கார மாப்பிள்ளை எப்படி இருந்தானோ அதே மாதிரி இருந்தான்.. .மற்றவர்களோடு அரட்டை அடித்தபடி சாதாரணமாக அமர்ந்திருந்த அரவிந்தை பார்க்க பார்க்க மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு தோன்றியது..தான் ஒருநாள்கூட இப்படியெல்லாம் இவர்களோடு அமர்ந்து அரட்டை அடித்ததில்லை….. பால் கறப்பவர் வரவும் பாத்திரத்தோடு கனி பசுமாட்டிடம் செல்ல அரவிந்தும் அதை வேடிக்கை பார்க்க கிளம்பினான்…. அவர்கள் தலை மறையவும் ரம்யாவும் ஹரிணியும் உள்ளே செல்ல தன் தாய்….. அத்தையை பார்த்தவன்…
 
ஏம்மா யார் வீட்டுக்குள்ள வந்தாலும் பொம்பள பிள்ளைக இருக்கிற வீட்டுக்குள்ள நீங்க விட்டுருவிங்களா….முதல்ல இந்த வீடு இவனுக்கு எப்புடி தெரியும்… நீங்களும் அவனோட சேர்ந்து இப்படி அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கிங்க…என்னை மட்டும் பொம்பள புள்ளைகளை மதிக்கனும் அவங்ககிட்ட அநாவசியமா பேசக்கூடாது… அப்புறம் அவுக பேரு கெட்டுரும்னு சொல்லுவிங்க… இப்ப இவன்கூட சேர்ந்துகிட்டு நீங்களும் வெட்டி அரட்டை அடிக்கிறிங்க… வரவர வயசாகுதே தவிர உங்களுக்கு மூள வேலைபார்க்க மாட்டேங்குது…??” அவன் மேல் உள்ள பொறாமை பொங்க ஆரம்பிக்க…
 
துரையை வித்தியாசமாக பார்த்த மீனாட்சி ஏன் தம்பி என்னாச்சு நான் அப்படி விசாரிக்காம விட்டுருவனா… காலையில நீயும் கதிரும் சினிமாவுக்கும் போகவும் அந்த கோபாலன் அண்ணே போன் பண்ணினாருப்பா… இந்த தம்பி வர்றதா…. அன்னைக்கே சொன்னாங்க தானே இந்த தம்பிக்குத்தான் நம்ம கனிய கல்யாணம் செய்ய போறதா…??”
 
அதிர்ச்சியானவன்… எப்பம்மா சொன்னாங்க…??”
 
அன்னைக்கு நாம மதுரைக்கு போன அன்னைக்கே சொன்னாங்கப்பா…நான்கூட அதை நம்பல… அவுக இருக்குற வசதிக்கு இந்த பொண்ணை ஏத்துக்குவாங்களான்னு நினைச்சுத்தான் உன்கிட்டக்கூட சொல்லல… ஆனா பாரு இப்பத்தான் இந்த தம்பி  ஊர்லயிருந்து வந்திருக்கு போல அதான் ஒரு பத்து நாள் இங்க தங்கி நம்ம கனியபத்தி நல்லா தெரிஞ்சுக்கட்டும்னு அவுக போன் பண்ணினாங்க… அதான்பா நானும் அத்தையும் இங்க கூட்டிட்டு வந்தோம்…??”
 
பல்லைக் கடித்தவன் இது கனிக்கு தெரியுமாம்மா…??”
 
இல்ல தம்பி அந்த புள்ள இப்ப சொல்லவேண்டாம்…புடிச்சிருந்தா அப்புறமா அதுவே சொல்லிக்குதாம்… பத்து நாள் இங்கன தங்க தானே போகுது… நம்ம கனிய புடிக்காத ஆளுமா இருக்கும்… இப்பவாச்சும் கடவுள் இந்த புள்ளைகளுக்கு ஒரு நல்ல வழி காட்டினாரே… இங்க பார்த்தியாப்பா இந்த புள்ள கொண்டு வந்த பொருளை… ஒரு பெரிய சூட்கேஸ் நிறைய துணிமணிகள்…சோப்பு…பவுடர்…சென்ட் என பொருட்கள் நிரம்பி வழிந்தது… ஒரு பெரிய போன் கொண்டுவந்து நம்ம கனிக்கு குடுத்திருக்குப்பா..பார்க்கவும் ஆள் நல்ல வாட்ட சாட்டமா நல்ல கலரா நம்ம கனிக்கு நல்ல பொருத்தம்…. ஜோடிப் பொருத்தம் அம்புட்டு அம்சமா இருக்குப்பா… வெளிநாட்டுல எம்புட்டோ சம்பளம் வாங்குதாம் …. அங்கனயே வீடு….. காரு எல்லாம் குடுத்திருக்காங்களாம்…. ஆனா பாத்தா அப்படி தெரியலப்பா… எந்த பகட்டுமே இல்லாத புள்ளையா இருக்கு..??” எரியிற கொள்ளியில் எண்ணெய் எடுத்து ஊற்றுவது போல மீனாட்சி சொல்லிக் கொண்டே செல்ல…. நம்மகிட்ட ஒரு பொருள வாங்க அவ்வளவு யோசிப்பா… இப்ப இவன்கிட்ட எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாளா…அவர் பாட்டுக்கு அரவிந்த் புகழை பேசியபடியே இருக்க துரை சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினான்…
 
அங்கு முன்னால் இருந்த கூடத்தில் பால்கறந்து கொண்டிருக்க..அரவிந்த் அதை ரசித்து கனியிடம் ஏதோ சொல்ல இவள் அதை பற்றி அவனுக்கு ஏதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள்…. பல்லை கடித்தவன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றிருந்தான்வண்டியில் வேகமென்றால் அவ்வளவு வேகம்.. அவனுக்கு தோன்றிய அந்த உணர்வை என்னவென்று அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை… கோபம்…வெறுப்பு… ஆத்திரம் என என்னன்னவோ தோன்றியது… வீட்டிற்கு வந்தவன் உடையை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்து விட்டான்…. அவன் மனதிற்கு புரிந்தது தமிழ்தான் தன் மனைவியாக போகிறவள் என்று இருந்தாலும் மீனாட்சி எப்போது பார்த்தாலும் அந்த பொண்ணுகளை நீதான்பா பார்த்துக்கனும் …. அது உன்னோட பொறுப்பு என்று ஒரு நாளைக்கு மூன்று தரமாவது சொல்லாமல் இருக்க மாட்டார்… ஆனால் இன்று அரவிந்தை பார்க்கும் போது… இவனுக்குள் ஒரு பொறாமை தோன்றியது என்னவோ உண்மைதான்… நல்ல மாப்பிள்ளை என்று சந்தோசம்தான் பட்டிருக்க வேண்டும் ..தன்னைவிட படித்த பணக்கார மாப்பிள்ளை… என்று ஆனால் இது எதுவுமே தோன்றவில்லை… இவன் எப்ப ஊருக்கு போவான் என்றுதான் தோன்றியது….
 
மாலை ஒரு ஆறு ஆறரை இருக்கும் கொஞ்சம் இருட்ட ஆரம்பித்திருந்தது… தமிழ் எப்போதும் உள்ள வழக்கம் போல தோப்பு வீட்டிற்கு வர வாசலில் வரும்போதே காரை பார்த்துவிட்டாள்… அப்படியே டக்கென நின்றவள்….இந்த காரு…….. மெதுவாக காரின் பின்னால் வந்தவள் அதன் கண்ணாடியை பார்க்க அது உடையாமல் புதிதாக இருந்தது… இந்த கார் மேலத்தான் நாம காலையில கல்ல விட்டு எறிஞ்சமா… அப்ப புதுக்கண்ணாடி மாத்தியிருக்கா… போச்சு போச்சு அந்த செவத்தவன்……நம்ம மச்சானுக்கும் அண்ணனுக்கும் தெரிஞ்சவனா ….. நாமதான் கண்ணாடிய ஒடச்சோம்னு தெரிஞ்சா…. நம்மள பின்னி எடுத்திருங்களே….. போச்சு இப்ப என்ன பண்ணுறது…. பேசாம வந்த வழியிலயே போயிற வேண்டியதுதான் யாரு கண்ணுலயும் மாட்டக்கூடாது…. ச்சே…ச்சே இப்படி தெரிஞ்சிருந்தா  நம்ம ஸ்கூட்டியில வந்திருக்கலாம் ??”என யோசித்தவள் …குனிந்த படியே வீட்டை பார்த்துக் கொண்டே பின்னால் இரண்டடிதான் எடுத்து வைத்திருப்பாள்…
 
அவள் பின்னாலிருந்து ஒரு வலிய ஆண்கரம் அவள் வாயை ஒரு கையினாலும் இடுப்பை ஒரு கையினாலும் அழுத்தி பிடித்திருந்தது… இவளால் அசையக்கூட முடியவில்லை…
 
ஏய் பொம்பள ரௌடி..காலையில என் கார் கண்ணாடிய ஒடச்சது பத்தாததுன்னு இப்ப என்ன பண்ண என் கார்கிட்ட வந்த…??” அவன் தன் சத்தத்தை குறைத்து அவள் காதருகில் கேட்க….. கேட்ட முத்தமிழுக்குத்தான் மூச்சடைத்தது… முதல் முறையாக தன்னை அணைத்தபடி ஒரு ஆணின் உடல் அவன் மேலிருந்து வந்த அந்த வாசனை அவள் நாசிவழியே சென்றது…வலிமையான அந்த சிவந்த கரங்கள் தன் வாயை மூடியிருக்க… மற்றொரு கை அவளுடைய தாவணியை தாண்டி அழுத்தியிருந்தது… திரும்பி பார்த்தால் அவன் மீசை முடிகள் அவள் உதட்டருகில்… அவனிடமிருந்து திமிரியவளுக்கு… இதயம் படபடவென அடித்தது… அவன் உடல் தன் மேல் அழுத்தியதில் அவளுக்கு ஷாக் அடித்தாற் போல இருக்க…. அவனுக்கு எதுவும் தோன்றவில்லைபோல…
 
அவள் திமிர… அடக்கியவன்… வா… நீதானே என் கண்ணாடிய உடைச்சேன்னு இங்க எல்லார்கிட்டயும் சொல்றேன்??” அவளை இன்னும் அழுத்தி பிடித்து வீட்டுப்பக்கம் கொண்டு செல்ல முயல….
 
அப்போதுதான் பார்த்தாள் தன் தந்தையும் அத்தையோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை…போச்சு இன்னைக்கு பெல்ட் அடி கன்பார்ம் போல…. டேய் விடுறா… அவள் திமிர..திமிர… ஏதோ சொல்ல வந்ததை உணர்ந்தவன் மெதுவாக வாயிலிருந்த கையை மட்டும் எடுக்க...டேய்…விடுறா லூசு பயலே…??”அவளும் கத்தாமல் மெதுவான குரலிலேயே பேசினாள்….
 
யேய் என்ன கொழுப்பா…யாரப்பாத்து லூசுன்னு சொல்லுற..பாவம் காலையில நாம கவனிக்காம தண்ணிய மேல பட வச்சிட்டமேன்னு மன்னிப்பு கேட்க வந்தா… நீயென்னன்னா கண்ணாடிய ஒடைக்கிற… உன்னால எவ்வளவு செலவு தெரியுமா…அப்ப உடைச்சது பத்தாதுன்னு இப்ப வேற உடைக்க வந்திருக்கியா… உள்ள வா இப்பதான் அந்த அங்கிள் அந்த பொண்ணு யாராயிருக்குமுன்னு என்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தாரு… வா…வா…??”
 
முதல்ல என் மேலயிருந்து கையை எடுடா…. ??”
 
...யேய் முதல்ல மரியாதையா பேசு… இந்த வாடா போடாங்கிற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்கக்கூடாது… இப்ப எதுக்கு விடச் சொல்லுர காலையில மாதிரி ஓட்டத்துல கிளம்பவா…உன்னை அங்க கொண்டு போய் அவங்ககிட்ட ஒப்படைக்கிறேன்… அப்புறம்  என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ…??”
 
ஏய் தமிழு இப்ப இவன்கிட்ட உறண்டைய இழுக்காத அப்பாகிட்ட மாட்டாம எஸ்கேப் ஆகிறவழி எதுன்னு முதல்ல யோசி……. முகத்தை பாவமாக வைத்தபடி...ப்ளிஸ்…ப்ளிஸ்…காலையில ஏதோ கோபத்துல செஞ்சுட்டேன்… அப்பாகிட்ட மட்டும் சொல்லிடாதிங்க..??”.
 
அவள் மேலிருந்து கையை எடுத்தவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தபடி…. ஏய்… அப்ப நீ அந்த அங்கிளோட பொண்ணா…சூப்பர்… அப்ப கண்டிப்பா சொல்ல வேண்டியதுதான்..??”.
 
ப்ளிஸ்…ப்ளிஸ்…. இந்த ஒரு தரம் மட்டும் மன்னிச்சிருங்க ப்ளிஸ்….??” முத்துராமனுக்கு மகள் என்றால் உயிர் ஆனால் தவறு செய்தால் பெல்ட் எடுத்து விளாசிவிடுவார்.. இதனால் அண்ணன் தங்கை இருவரும் தங்கள் குறும்புகளை அவர் இருக்கும் போது செய்யவே மாட்டார்கள்…. அவள் கண்ணில் பயத்தை காணவும் இவனுக்கு சுவாரஸ்யம் எழுந்தது…. அவளை மேலிருந்து கீழாக ரசிக்க…காலையில் சுடிதாரில் பார்த்திருந்தவன் இப்போது பாவாடை தாவணி அணிந்திருந்தாள்… நல்ல சிவந்த நிறம் சுருள் முடி அடர்த்தியாக நடு முதுகு வரை கிடந்தது.. எந்த ஒப்பனையும் இல்லாமல் நெற்றியில் ஒரு சிறிய பொட்டு கையில் கண்ணாடி வளையல்… கழுத்தில் நீண்டசெயின் சிவப்பு கல் வைத்த தாமரை…டாலர் அதில் முத்து தொங்கியது  காதில் சிறிய வளையம் அதிலும் சிவப்பு முத்து தொங்கியது…. நீண்ட அழகான அலைபாயும் கண்கள் அந்த கண்ணில் பயத்தை பார்த்தவன்…
 
சரி சொல்ல மாட்டேன்… ஆனா நான் என்ன சொன்னாலும் கேட்கனும் புரியுதா??”
 
தன் அப்பாவிடம் இருந்து எப்படியும் தப்பினால் போதும் என்று நினைத்தவள்… .புரியுது…புரியுது??”என்றபடி உள்ளே ஓடினாள்…
 
மாட்டிக்கிட்டியா??” என உற்சாகமாக அவள் ஓடியதை ரசித்தவன் தன் காரின் டிக்கியிலிருந்த சில பைகளை எடுத்தபடி உள்ளே சென்றான்… அந்த இரண்டு ஆட்கள் தோப்பை நோட்டமிட்டதிலிருந்து இரவுக்கு எப்போதும் தன் தாயையும் இங்குதான் படுக்க சொல்லியிருந்தான்… கல்லூரி முடியவும் இங்கு வரும் தமிழை இரவு பத்து மணிக்கு மேல்தான் கதிரோ இல்லை துரையோ அழைத்து செல்வார்கள்… அதனால் எப்போதும் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது..   அன்று இரவுக்கு இடியாப்பம் பிழிந்த கனி அதற்கு… தேங்காய் பாலும்… பாதி இடியாப்பத்தை தாளித்து சட்னியும் கோஸ்மல்லியும் செய்திருந்தாள்… அனைவருக்கும் சேர்த்து செய்திருக்க..கதிரையும் துரையையும் தவிர அனைவரும் சாப்பிட்டிருந்தனர்…
 
தன் குடும்பமே இங்கிருக்க கதிரும் இங்கு வந்திருந்தான்… வாசலில் வரும்போதே நன்றாக மூச்சை இழுத்து விட்டவன் அந்த வாசத்தில் கனி…கனி..??”. என்று சத்தமாக அழைக்க வரும்போதே  ஆளுக்கு ஒரு பாத்திரத்தோடு கனியும் ..ஹரிணியும் ..ரம்யாவும் வர…
 
அண்ணா வந்துட்டிங்களா… ??”உற்சாகமாக அவனுக்கும் டிபனை வைத்து கொடுத்தனர்.. வெளித்திண்ணையில் அமர்ந்து அவன் உற்சாகமாக சாப்பிட அரவிந்த் வரவும் அவனை அறிமுகப்படுத்தினர்….
 
கதிர் அரவிந்தை பார்த்து உற்சாகமாக கையை ஆட்ட அரவிந்த் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவன்…. அங்கிருந்த  மற்றொரு திண்ணையில் அமர்ந்தான்…
 
ஹரிணி கதிரிடம் வந்து அண்ணா பக்கத்தூருல நாளைக்கு திருவிழாவாம்ண்ணா… எங்கள கொஞ்சம் கூட்டிட்டு போறிங்களா…ப்ளிஸ்ணா…. ப்ளிஸ்..ப்ளிஸ்..??”
 
இந்த பொண்ணுகளும் இங்கு வந்து ஆறுமாதமாக போகிறது இது வரைக்கும் எங்கும் சென்றதில்லை என்பதை அறிந்தவன்… கண்டிப்பா போவோம்மா… நாளைக்கு சாயங்காலம் கிளம்பி இருங்க போயிட்டு வருவோம்..??”.
 
அனைவரும் வெளியில் இருக்க தமிழ் மட்டும் உள்ளே இருப்பதை அறிந்த அரவிந்த்… சாதாரணமாக உள்ளே செல்வது போல சென்றவன் அவள் அடுப்படியில் நிற்பதை பார்த்துவிட்டு அங்கு செல்ல… அவள் அடுப்படியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்… தன் அருகில் யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க வாசல் படியில் சாய்ந்த படி அரவிந்த்…
 
எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்??”
 
தண்ணீரை செம்பில் கொடுக்க செம்போடு சேர்த்து அவள் கையையும் பிடித்தவன்… நாளைக்கு எல்லாரும் திருவிழாவுக்கு போறாங்களாம் நீயும் கண்டிப்பா வரணும்…புரியுதா.??”.
 
ச்சு…. இதென்ன பொம்பள புள்ளைய எப்ப பார்த்தாலும் அவங்கள கேட்காம தொடுறது முதல்ல கைய விடுங்க..??”. கையை அவனிடமிருந்து பறிக்க முயல அவளால் முடியவில்லை…
 
ஏய் …. ஏய்..சும்மா நிறுத்து சும்மாதானே உன்கையை பிடிச்சேன்… உன் கையை பிடிச்சு இழுத்தனா..என்றபடி அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் இல்ல கட்டிப்பிடிச்சனா என்றபடி இறுக்கி அணைத்தவன் இல்ல முத்தம் கொடுத்தனா??” என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட வர… அவனை எட்டி தள்ளியவள் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்…
 
தன் முன்னால் பத்ரகாளியை போல நிற்பவளை பார்த்தவன்… தான் நிறைய பெண்களை  தொட்டு பேசியிருக்கிறான்..கட்டி அணைத்திருக்கிறான்… அவர்களிடம் தோன்றாத உணர்வு  முதல்முறை தமிழை வெளியில் கட்டி அணைக்கையில் தோன்றியிருந்தது.. இப்போதும் சும்மாதான் கையை பிடித்திருந்தான்… ஆனால் தன்னை மீறி அவளை கட்டி அணைத்திருக்க முத்தமிட வந்ததை நினைத்தவன் தனக்கு என்னாச்சு என்று யோசித்தபடி பேசாமல் இருக்க…
 
அவனையே பார்த்த தமிழ் என்ன இருந்தாலும் நம்ம வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்கள நாம கைநீட்டி அடிச்சிருக்க கூடாதோ… வெளிநாட்டுல போய் வேலை பார்க்கிறதால இதெல்லாம் சகஜமா இருந்திருக்கும் நாம கொஞ்சம் எடுத்து சொல்லிபுரிய வைச்சிருக்கலாமோ… அவன் கன்னத்தையே பார்த்தவள்….
 ஸாரி… நான் தெரியாம பண்ணிட்டேன்??” தலையை குனிந்தபடி சொல்ல
 
அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியில் செல்ல பார்க்க … அதான் ஸாரின்னு சொல்லிட்டேன்ல…??”
 
மீண்டும் அவளை நோக்கி திரும்பியவன்… உன் ஸாரிய நீயே வச்சிக்க… எனக்கு அதெல்லாம் தேவையில்ல நாளைக்கு நீ திருவிழாவுக்கு வரணும்… அதான் வேணும் …??”
 
ம்ம்ம்...தரையை பார்த்தபடி முனங்க…
 
ஹே…..வர்றியா…சூப்பர் அப்ப வரும் போது இந்த மாதிரி டிரஸே போட்டுட்டு வா… இது உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு…??”வெளியில் வசந்தாவின் குரல் கேட்டிருக்க இவள் வாசலை நோக்கி மான் போல ஓடத்துவங்கியிருந்தாள்… இவன் அவள் ஓட்டத்தை ரசித்தபடி தன் இரவு உடைக்கு மாறப்போக…
 
தமிழுக்கு அரவிந்தை ரொம்ப பிடித்திருந்தது… இன்று காலையில் காரிலிருந்து இறங்கும் போதே தன் மனதை அவனிடம் கொடுத்திருந்தவள்…இப்போது அவன் தொடுகையால் முழுவதுவாக அவன்புறம் சாய்ந்திருந்தாள்… கதிர்..துரையை தவிர மூன்றாவதாக தன் வாழ்க்கையில் வந்தவனை அவர்களை போல நினைக்க முடியாமல் தன் மனதிற்கு நெருக்கமானவனாக உணர்ந்தாள்… இங்கு அரவிந்தோடு கதிரையும்  அவன் அப்பத்தா இங்கு இருக்கச் சொல்ல அரவிந்த் ஊருக்கு போகும் வரை கதிர் இரவு இங்கேயே தங்குவதாக முடிவு செய்யப்பட்டது….
 
முத்துராமன்… வசந்தா…முத்தமிழ் மட்டும் வீட்டிற்கு கிளம்ப அரவிந்தே தன் காரில் அவர்களை அழைத்து வந்து விட்டு சென்றிருந்தான்..கனி தமிழிடம் துரைக்கு சாப்பாடு கொடுத்து விட்டிருக்க… அனைவரும் இங்கு ஒன்றாக சாப்பிட்டதை அறிந்தவனுக்கு அரவிந்த் மேல் இன்னும் கோபம்தான் தோன்றியது… இதுவரை பெரும்பாலும் தானே தன் தாயை இரவில் அங்கு கொண்டு விட்டுவிட்டு தமிழை அழைத்து வருவான்…இன்று அவர்கள் அனைவரும் ஒன்றானது போல தான் மட்டும் தனிமையில் இருப்பது போல தோன்றவும் கனி  இங்கு வந்ததிலிருந்து தான் நிறுத்தியிருந்த குடிப்பழக்கத்தை இன்று தன் வீட்டிலேயே ஆரம்பித்திருந்தான்…
 
மறுநாள் காலை என்றும் உள்ள வழக்கம போல தன் தோப்பு வீட்டிற்கு வாக்கிங் போல நடந்து வர… இரவு வெகு நேரம் கழித்து படுத்ததால் இன்று கொஞ்சம் நேரம்கழித்து எழுந்த கனி அப்போதுதான் வெளிவாசலில் தன் கைவண்ணத்தை காட்டியபடி இருக்க… அதிகாலையில் குளித்து புத்தம் புது மலர்போல இருந்தவளை தன்னை அறியாமல் ரசித்தபடி வந்து கொண்டிருந்தவன் அவள் கட்டியிருந்த சேலையை பார்க்க நல்ல கனகாம்பர கலரில்  ஆரஞ்சு நிற பூப்போட்ட சேலைக்கட்டியிருந்தாள்….. அவள் வந்த நாளில் இருந்து இந்த சேலையை அவள் கட்டிப்பார்த்ததில்லை….
 
அதற்குள் அவள் அருகில் வந்திருந்தவன் அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கவும்… இந்த சேலை அவன் கொண்டு வந்ததா..??”.முறைப்பாக கேட்க
 
கனிக்கு ஒன்றும் புரியாமல் யாரு….??”
 
ஒன்னும் தெரியாதவள போல முகத்தை வச்சிருக்கிறத பாரு என நினைத்தவன் நீ கட்டியிருக்கிற சேலை நேத்து உங்க வீட்டுக்கு வந்தானே அவன் கொண்டு வந்ததா??”
 
ஆமா என தலையை ஆட்டவும் இவன் கோபமாக மாந்தோப்பிற்குள் புகுந்திருந்தான்….. ஆனால் இவன் அறியாதது அரவிந்த் கொண்டு வந்த எல்லாப் பொருட்களுமே அவன் தந்தை இவர்களுக்காக பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்தது…  அரவிந்த் கொண்டு வந்து கொடுக்கும் போது வாங்கவே மாட்டேன் என மறுத்தவளை அரவிந்த் போன் செய்து தன் தந்தையிடம் போனை கொடுத்திருக்க… அவர்தான் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து எல்லாப் பொருளையும் தான் வாங்கி கொடுத்து விட்டிருப்பாதாகவும் தன் மேல் மதிப்பிருந்தால் அதை கண்டிப்பாக பயன் படுத்த வேண்டும் என அன்போடு சொல்லியிருக்க அதை தட்ட முடியாமல்தான் அந்த பொருட்களை வாங்கியிருந்தாள்… ஆனால் இதை அறியாத துரைக்கு கனிமேல் இன்னும் கோபம் வந்திருந்தது…..
 
நாம அவனவிட எந்த வித்ததுல கொறைஞ்சிட்டோம்…அவன்கிட்ட வாங்கலாம் நம்மகிட்ட வாங்கக்கூடாதா… என்றையும் விட இன்னும் வேகமாக தோப்பை சுற்ற ஆரம்பிக்க…….. பால் கறக்கும் அண்ணன் வரவும் பாத்திரத்தை அவரிடம் கொடுத்தவளுக்கு அப்போதுதான் அடுப்பில் பாலை வைத்துவிட்டு வந்தது நியாபகத்திற்கு வர அடுப்படியை நோக்கி ஓடி வந்தவள் துரையை கவனிக்காமல் அவன் மேல் மலர்மாலையென தடுமாறி மோதியிருந்தாள்… அதுவரை வேறுபக்கம தன் கவனத்தை வைத்திருந்தவன் திடிரென இவள் மோதவும் அவள் கீழே விழாமல் இருக்க அவளை அணைத்து பிடித்திருக்க அவன் கண்கள் அவளிடம் ஏதோ பேசியது…..
 
                                                    இனி…………………??????

Advertisement