Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  5
 
 அடுத்தவர் கவனத்தை கவராமல் துரை வெளியில் சென்றிருக்க அவன் கொடுத்த கர்சிப்பால் தன் கண்ணீரைத் துடைத்தவள் மீனாட்சியிடம் சென்றிருந்தாள்… ஏதாவது உதவி செய்யவா என்று கேட்டு உதவி செய்து கொண்டிருக்க ஹோட்டலில் சொல்லி  டிபனை  கொண்டுவந்தவர்கள் வெளியில் டேபிள் சேர் போட்டு பந்தி பரிமாற…….. அந்தி மாலை நேரத்தில் அந்த தென்னை மரக்காற்று சில்லென்று வீச உறவினர்கள்.. .தெரிந்தவர்கள் வருகையால் இந்த இடமே அவ்வளவு பிரமாதமாக இருந்தது..கனியும் சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்து சாப்பாடு வைக்கப்போக அவளிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிய துரை..
 
உன் கைலதான் புண்ணாயிருக்குள்ல நீ போய் உட்காரு… நாங்க பார்த்துக்குறோம்...கதிரை அழைக்க..
 
நிறைய பேர் இருக்காங்க.. நானும் வைக்கிறனே…??”
 
இது உங்க ஊர்ல நிறைய பேரா… எண்ணி 100 பேர் இருக்க மாட்டாங்க… ஒரு நிமிசம் பரிமாறிருவோம் நீ போ… ஆளாளுக்கு ஒரு பாத்திரத்தை தூக்க… இட்லி..ஊத்தப்பம்…இடியாப்பம்…வெள்ளை பனியாரம்..மசாலா சீயம் இனிப்புக்கு கந்தரப்பம்..கவுனி அரிசி… உக்காரு…. ரவை பனியாரம்…பால் பனியாரம்  என ஒவ்வொன்றும் வைக்கவே இலை நிரம்பிவிட்டது..,கடைசியில் பாதாம்பால் அனைவரும் வயிறார உண்டு ஹரிணியை வாழ்த்தி செல்ல குடும்பத்தில் அனைவருக்கும் அவ்வளவு திருப்தியாக இருந்தது… கனிக்குத்தான் தலைசுற்றி மயக்கம் வருவது போல இருந்தது… சாப்பாட்டில் இத்தனை வகையா… இவ்வளவிற்கும் காசு நிறைய வந்திருக்குமே…  இவளிற்கு தெரிந்ததெல்லாம் டிபன் என்றால் இட்லி.. வடை… கேசரி மட்டும்தான் இது என்னது கலர்கலரா இருக்கு என்று யோசனையில் இருந்தவளை துரை சாப்பிட அழைத்தான்…
 
அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்பியிருக்க குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் இருந்தனர்.. முத்துராமன் ஒரு வேலையாக வெளியே சென்றிருக்க மீனாட்சியும் வசந்தாவும் உள்ளே ஹரிணியோடு இருந்தனர்… அப்பத்தா வெளித்திண்ணையில் படுத்திருந்தார்… கனியோடு துரையும் கதிரும் மட்டும்தான் சாப்பிடாமல் இருந்தார்கள்… இவர்கள் மூவருக்கும் இலை போட்டு முத்தமிழும் ரம்யாவும் பரிமாற துரை நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் கதிரும் கனியும் அமர்ந்தனர்…
 
பரிமாறிய சாப்பாட்டை பார்த்ததுமே இவளுக்கு பசி அடங்கி இருந்தது… இவ்வளவுக்கும் எவ்வளவு காசுன்னு யாருக்கிட்ட கேக்குறது… இவங்கக்கிட்ட கேட்டா கோபமா ஏதாச்சும் சொல்லிருவாங்க நாம மெதுவா கதிர் அண்ணாக்கிட்ட கேக்கனும்..
 
கதிர் இந்த குட்டிச் சாத்தான ஏண்டா சாப்பாடு வைக்கச் சொன்ன பாரு எனக்கு மட்டும் ஒன்னு ஒன்னுதான் வைச்சிருக்கு… ஏய் நீ போ ரம்யா வாடா குட்டி நீங்க அண்ணனுக்கு நிறைய வைங்க பார்ப்போம்..??”
 
மச்சான் இவன பேசாம இருக்கச் சொல்லுங்க… நானே இவன் மேல செம காண்டுல இருக்கேன்…போனா போகுதேன்னு ஒன்னு வைச்சேன்… இல்ல நான் இருக்குற கோபத்துக்கு தண்ணிய தலைமேல ஊத்திட்டு போயிட்டே இருப்பேன்…??”
 
ஊத்துவடி ஊத்துவ… பாவம்னு காலையில உன்னை உன் பிரண்டு கல்யாணத்துக்கு கூட்டிட்டு போனேன்ல அப்ப மட்டும் எப்புடி கெஞ்சுன… அண்ணா…. அண்ணா… ப்ளிஸ்ணா வெளியில கூட்டிட்டு போங்கண்ணான்னு என்ன நடிப்பு நடிச்ச…. இப்ப காரியம் முடியவும் ரொம்ப பேசுற… டேய் மாப்புள்ள இனிமே இந்த கொரங்க நான் எங்கயுமே கூட்டிட்டு போக மாட்டேன்… இது…………… அந்த நேரத்துக்கு அங்கு வந்த பேச்சியம்மாளை பார்க்கவும் கதிர் சட்டென எழுந்து அவர் தலையில் கைவைத்து எங்க அப்பத்தா மேல சத்தியம்….சத்தியம் …சத்தியம்… எங்க அப்பத்தா …… மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்….. என்று ராகமாக பாட
 
டேய்……செய்யிரதெல்லாம் நீ செஞ்சிட்டு ஓவரா சீன போடுறியா….குரங்கு…குரங்கு
 
துரை இது எப்போதும் வழக்கம் போல தன் பாட்டுக்கு சாப்பிட்டு கொண்டிருக்க … கனிக்கும் ரம்யாவுக்கும்தான் பயமாக இருந்தது அண்ணன்..தங்கச்சி இப்படி சண்டை போட்டுக்குறாங்களே…பெரிய பிரச்சனையா வந்துருமோ… அதுவும் சத்தியமெல்லாம் செஞ்சு… அப்பத்தா வேற பாவம்தானே…
 
என்ன இலையை பார்த்துக்கிட்டே இருந்தா வயிறு ரொம்பிருமா சாப்புடு…??”
 
இல்ல… பாவம் அவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை போடுறாங்க நீங்க பேசாம சாப்புடுறிங்க??”
 
அததான் நானும் சொல்லுறேன்… புயல் இன்னும் கரையை கடக்கல அதுக்குள்ள நீ வேகமா சாப்பிட்டுரு… அப்புறம் இங்க ஒன்னும் மிச்சம் இருக்காது நாம சாப்பிட..??”.சொல்லி முடிக்கவில்லை… முத்தமிழ் வைத்திருந்த பாத்திரத்தில் பால்பனியாரத்தை கதிர் எடுக்கபோக கோபத்தில் அவன் தலையிலேயே கவிழ்த்திருந்தாள்….
 
யேய்… இன்னைக்கு இருக்குடி உனக்கு??” என கத்தியபடி தன் தலையில் இருந்து வாயில் வழிந்த பாலின் இனிப்பை ருசித்து சாப்பிட்டவன்… அங்கிருந்த வாளிகளை நோட்டமிட கார சட்னி கண்ணில் படவும் அந்த வாளியை தூக்கிக் கொண்டு அவளை விரட்ட ஆரம்பித்தான்…. அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த துரை ரம்யாவை கூப்பிட்டு
 
இது எல்லாத்தையும் உள்ள கொண்டு போய் வைச்சிருமா… இதுவாச்சும் மிஞ்சும்…??” கனியும் ரம்யாவும் எல்லாவற்றையும் உள்ளே கொண்டு போக….சற்று நேரத்தில் தன் உடம்பு முழுக்க காரச் சட்னியோடு வந்தான் கதிர்…
 
 அம்மா…” என அவன் போட்ட சத்தத்தில் மீனாட்சியும் வசந்தாவும் உள்ளே இருந்து ஓடிவர….
 
வசந்தா...டேய் என்னடா இது கோலம் சகதிக்குள்ள தடுமாறி விழுந்துட்டியா…??”
 
நறநறவென பல்லை கடித்தவன்...ம்மா… இது சகதியா….சட்னி…. புள்ளைய பெக்கச் சொன்னா தொல்லைய பெத்து வைச்சிருக்க… இனிமே இவ என்தங்கச்சியே இல்ல… நான் நாளைக்கே ஒரு அநாதை ஆசிரமத்துக்கு போயி நான் சொல்லுரத கேக்குற ஒரு நல்ல தங்கச்சியா தத்தெடுத்துக்கிட்டு வரப்போறேன் சொல்லிட்டேன்…??”
 
அப்ப இவள என்னடா பண்ணுறது ??”வசந்தாவுக்கு அடுத்த கவலை வர…
யாராவது பிச்சை கேட்டு வந்தா இவள போட்டுரு….??”
 
அடுத்து அம்மா….???” என கத்தியபடி வந்தாள் முத்தமிழ்… அவள் உடம்பில் பாதி இடத்தில் திட்டுத்திட்டாக சட்னி…. மீதி இடமெல்லாம் சகதி முகமெல்லாம் சகதி சாயங்காலம் அவ்வளவு அழகாக இருந்த அவளுடைய முகம் இப்போது தலையெல்லாம் கலைந்து பூ பாதி பிய்ந்து தொங்க அந்த நூல் மட்டும் நீளமாக இருந்தது… முகத்தில் பொட்டை காணவில்லை…சகதியை அப்படியே முகமெல்லாம் பூசியிருந்தான்…
 
நீ ஏண்டி இப்புடி நிக்குற…??”
 
இந்த பண்டி பயதாம்மா என்னை சகதிக்குள்ள போட்டு அமுக்கிவச்சிட்டான்…??” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்க… கனிக்கும் ரம்யாவுக்கும் அண்ணன் தங்கச்சி இப்படியெல்லாமா சண்டை போடுவாங்கன்னு ஆ…..வென பார்த்துக் கொண்டிருக்க…
 
மீனாட்சி என்ன கதிரு இது பொம்பள புள்ளைய இப்படியா பண்ணுவாங்க… நாளபின்ன கைகால் உடைஞ்சா என்னாகுறது…??”
 
அது என்னத்த பண்ணுனது எல்லாம் அவ லேசா கண்ண கசக்குன உடன என்ன சொல்லுறிங்க…??”
 
முத்தமிழை பார்த்தவர் அப்படி என்னதாத்தா நடந்துச்சு… இம்புட்டு கோபம் ஆகாதுத்தா..??”
 
அத்தே… இன்னைக்கு என் பிரண்டு கல்யாணத்துக்குத்தானே கூட்டிட்டு போனேன்.. அங்க வந்திருந்த என்னோட பிரண்ட்ஸ்கள்ல இருந்து பல்லு போன கிழவி வரைக்கும் எல்லாரையும் சைட் அடிச்சு கேலி பண்ணி பெரிய பிரச்சனைய உருவாக்கிட்டான்… என்னோட பிரண்ட்ஸ் முன்னாடி எம்புட்டு தலை குனிவா போச்சு தெரியுமா..??”
 
ஆமாண்டி அம்புட்டும் கிழவிங்க மாதிரிதான் இருந்துச்சுக அதச் சொன்னேன்… ஆனா என்னமோ அம்புட்டுக்கும் ஐஸ்வர்யாராய்ன்னு  மனசுக்குள்ள நினைப்பு..ரொம்பத்தான் அலட்டுராளுக…நான் எவளடி சைட் அடிச்சேன்… சைட் அடிக்கிற மூஞ்சிகளா அதுக… இதுக்கே இவ்வளவு பில்டப்பா…??”
 
அந்த நேரத்தில் வசந்தாவுக்கு போன் வர…. பேசி முடித்தவர்… டேய் கதிரு அப்பா தெரு முக்கத்துக்கு வந்துட்டாங்க போல ஓடிருடா போய் குளிச்சு மாப்புள்ளயோட வேட்டி சட்டை இருந்தா எடுத்து போட்டுக்க அவரு வந்தா மக என்ன சொல்லுதோ அதத்தான் கேப்பாரு… மகனை அனுப்பி வைத்தவர்… முத்தமிழை நோக்கி நீ ஏண்டி அப்புடியே சந்திரமுகி மாதிரி நிக்குற போ போய் குளி குளிச்சு நான் வேற டிரெஸ் கொண்டு வந்திருக்கேன் போட்டுக்க போ..??” அவளும் உள்ளே செல்ல… அந்த இடமே அப்போதுதான் அமைதியாக இருந்தது…அனைவரும் அன்று இரவு அங்கேயே படுத்திருந்தனர்….
 
மறுநாள் காலையில் மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்ப…பேச்சியம்மாள் தங்கள் பழக்கமாக ஹரிணிக்கும் ரம்யாவுக்கும் நாட்டுக்கோழி முட்டை நல்லெண்ணெய் என கொடுக்க உமட்டி கொண்டு வந்தாலும் அப்பத்தா சத்தம் போட்டு குடிக்கச் சொல்லியிருந்தார்… தினமும் காலையில் உளுந்தங்களிதான் வெல்லக்கட்டி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தரப்படும் கனிக்கும் கொடுப்பார்கள் வேண்டாம் என்று சொன்னாலும் அப்பத்தா கேட்கவே மாட்டார்கள்.. தாங்கள் சொல்வதை கேட்காமல் அவர்பாட்டுக்கு பேசிக் கொண்டே இருப்பார்.. அவருக்கு புரிய வைப்பதற்கு குடிப்பதே மேல் நினைத்து என்ன கொடுத்தாலும் பேசாமல் சாப்பிட பழகியிருந்தனர்… 16 நாட்கள் கழித்து ஐயரை வைத்து புண்ணியதானம் செய்ய அன்றே துரை அவர்களை மதுரைக்கு அவர்கள் படித்த பழைய பள்ளியில் இருந்து டிசி வாங்க கிளம்பச் சொன்னான்…
 
அவர்களோடு தமிழும் கதிரும் கிளம்ப டூர் போலவே கிளம்பியிருந்தார்கள்… காலையிலேயே சென்று டிசி வாங்கியவர்கள் மீனாட்சி அம்மனை சென்று வணங்க..கூட்டம் அதிகமாக இருந்ததால் கதிரும் துரையும்தான் பாதுகாப்பாக கூட்டிச் சென்றனர்.. அதிலும் ஒரு இடத்தில் கல்லூரி மாணவர்கள் சிலபேர் வேண்டுமென்றே கனியை இடிக்கிற மாதிரி வர சட்டென துரை அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்திருந்தான்… வேகமாக இழுத்ததில் அவள் அவன் மார்பில் மோதியிருக்க கனிக்குத்தான் இதயம் படபடவென அடித்தது.. மெதுவாக நிமிர்ந்து துரையை பார்க்க… அவனுக்கு அவள் மோதியதே தெரியவில்லை… அந்த கல்லூரி மாணவர்களேயே முறைத்துக் கொண்டிருந்தான்…அப்போதுதான் சற்று ஆசுவாசமானவள்…. சற்று முன்னோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்… ஆனால் மோதும்போது ஒரு பூங்கொத்து தன் மீது மோதியதை போல உணர்ந்தவன் அவள் தன்னை பார்ப்பதற்குள் அவர்கள் பக்கம் பார்வையை திருப்பியிருந்தான்…
 
சாமி கும்பிட்டு வெளியே வந்தவர்கள் கனி அந்த புதுப்பள்ளிக்கு யூனிபார்ம் வாங்க வேண்டும் என சொல்ல துணிக்கடைக்குள் நுழைந்திருந்தனர்… தமிழும் அங்கிருந்த சுடிதார்களில் தனக்கு பிடித்ததை எடுக்க ரம்யாவும் ஹரிணியும் அதை ஏக்கமாக பார்த்தாலும் தங்களின் நிலையை அறிந்து தங்கள் பார்வையை அக்காவிடம் திருப்பினர்.. அவள் இந்த யூனிபார்ம் டிரஸ் வாங்க எத்தனை நாள் கண்முழித்து தைத்தாள் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்… பகலில் எல்லாம் இப்போது தோட்டவேலையில் இறங்கியிருந்தாள்..துரை எதற்கும் காசு வாங்க மாட்டேன் என சொன்னதும் அந்த காலி இடத்தில் காய்கறிகளை பயிரிட்டிருந்தாள்…
 
ஒரு பக்கம் கீரை.. மறுபக்கம் கத்தரி வெண்டை செடிகளையும் மறுபுறம் புடலை…. பாவற்காய் போன்ற கொடிவகைகளையும் பயிரிட்டிருந்தாள்… மற்ற நேரத்தில் தென்னைக்கு தண்ணீர் விடுவது மாமரத்தை பராமரிப்பது அதிலிருந்து விழும் சருகுகளை கூட்டி சுத்தம் செய்வது….. இன்னொரு பசுவும் கன்று போட்டிருந்ததால் தேவைக்கு போக மீதி பாலை மீனாட்சி அம்மாவிடம் கேட்டு டெப்போவில் ஊற்ற ஆரம்பித்திருந்தாள்…ஒரு  வாரத்திற்கு பிறகு தரும் காசை நோட்டில் கணக்கு வைத்து மொத்தமாக மீனாட்சியிடம் கொடுத்து விடுவாள்… காலை மாலை இருவேளையும் அந்த வேலையும் நடக்க எளிமையான சமையல் என வேலை அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது….
 
கொண்டுவந்த முக்கால்வாசி காசு அவர்களுக்கு எடுத்த நான்கு செட் யூனிபார்ம்க்கே சரியாய் இருக்க மீதியிருந்த காசில் நோட்டு பேனா என முக்கியமானதை வாங்கியிருந்தாள்… தமிழ் ஒரு ஏழெட்டு சுடிதாரை எடுக்க இவர்களை எடுக்க சொன்னதற்கு வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டனர்… துரை வந்ததில் இருந்து கனியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் தங்கைகளின் ஏக்க பார்வை… பின் தன் அக்காவிடம் வந்து நின்றது… இப்போதுதான்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
 
 என்ற ஔவையாரின் பொன் மொழி நியாபகத்திற்கு வந்தது…தான் சிறு வயதில் இருந்து இப்போதுவரை ஊதாரியாக செலவு செய்த தொகை அனைத்தும் தன்தாய் அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது… அத ஒரு நிமிசத்துல எவ்வளவு தொகைய செலவு செஞ்சிருப்போம்…இப்போதுதான் இவனுக்கு தன் தாயின் உழைப்பே புரிந்தது.. இப்ப நம்மகிட்ட காசு இருக்கு இத கொடுத்தா அந்த பொண்ணு வாங்காது… அப்படி வாங்குனா அதுக்கும் சேர்த்து வேலை பார்ப்பா…. இப்பவே இப்படி மெலிஞ்சு போயிருக்கா… ஆனா செம அழுத்தம்பா….கடுகு மாதிரிதான் இருக்கா ஆனா செம காரம் கனியையே ரசிக்க தமிழ் கடையையே ஒரு திருப்பு திருப்பி ஒரு 5 சுடிதாரை வாங்கியிருந்தாள்…
 
அனைவரும் துணிக்கடையில் இருந்து கிளம்பும் போதே மணி 2 மணி ஆனதால் தமிழ் பசி தாங்கவில்லை ஹோட்டலில் சாப்பிட்டுத்தான் செல்லவேண்டும் என அடம்பிடித்தாள்..பிரியாணி வேண்டும் என அடம்பிடிக்க தாங்கள் சிறுவயதில் இருந்து மதுரையில் இருந்தாலும் அநாவசியமாக கடைக்கெல்லாம் போனதில்லை..தீபாவளிக்கு முதல்நாள் இரவில் அவ்வளவு கூட்டத்தில் ரோட்டோரம் போட்டிருக்கும் கடைகளில் இருந்து அவர்கள் தாய் புதுத்துணி எடுத்துக் கொடுக்க அதுவே அவர்களுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் …  ஆனால் இன்று இவர்களோடு வந்ததால் தெருவோர கடைக்கு வராமல் மொத்த கடைக்கு அழைத்து வந்திருந்தாள்…
 
ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தவர்கள் நடுவில் தமிழ் அமர கதிரும் துரையும் அவளுக்கு இருபுறமும் அமர்ந்தனர்..கதிருக்கு பக்கத்தில் ஹரிணியும் துரைக்கு பக்கத்தில் கனியும் ரம்யாவும் அமர்ந்தனர்…கதிர் மெனுகார்டை தங்கையிடம் கொடுத்து அவளுக்கு பிடித்ததை ஆர்டர்செய்ய சொன்னான்.. பார்க்கும் போது அண்ணன் தங்கை சண்டை கோழிகள் போல தெரிந்தாலும் இன்று துணிக்கடையில் தங்கை சுடிதார் எடுக்கும் போது அவளிடம் இல்லாத கலர் என்று அவன் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்ததைத்தான் அவள் எடுத்திருந்தாள்…
 
இப்போதும் கனி வீட்டிற்கு சென்றுவிடலாம்…. என சொன்னாலும் தமிழ் பசிக்கிது என சொன்னவுடன் கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என பிடிவாதமாக நின்று சாப்பிட அழைத்து வந்திருந்தான்…. ஆனால் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு அவளிடம் அடியும் கொட்டும் அப்பப்ப வாங்கி கொண்டுதான் இருந்தான்..தமிழும் எவ்வளவு வம்பிழுத்தாலும் ஒரு பொருள் எடுத்தால் அவள் அண்ணன் முகத்தை பார்ப்பது அவன் இல்லையென்றால் துரையின் முகத்தை பார்த்து சம்மதம் பெற்றே  எடுத்தாள்… இப்போது கனிக்கு தானும் ஆண்பிள்ளையாகவே பிறந்திருக்கலாமோ என தோன்றியது….தன் தங்கைகளுக்கும் பார்த்து பார்த்து செய்யலாம் என தோன்றியது… அதுவரை தமிழ் கொடுத்து வைத்தவளாக தோன்றினாள்…
 
சாப்பாடு வரவர போச்சு எல்லாம் ரொம்ப விலையா இருக்குமோ என நினைத்தவள் யாருக்கும் தெரியாமல் டேபிளுக்கு கீழாக பர்சை திறந்து காசை எண்ணிப்பார்க்க 500 ரூபாய் மட்டும் இருந்தது… இது எப்படி பத்தும் என யோசிக்கும் போதே துரை மெதுவாக அவள் கையை பிடித்தவன்… மற்றவர்களை திரும்பி பார்க்க அனைவரும் கதிரோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க..
 
இன்னைக்காச்சும் காசப்பத்தி நினைக்காம சாப்பிடு… உன் தங்கச்சிகளோட முகத்தை பாரு அதுல எவ்வளவு சந்தோசம்…இது நம்ம ஹரிணி பெரிய பொண்ணா ஆனதுக்கு என்னோட டிரிட்..சாப்பிடு…??”. அவள் கண்ணைப்பார்த்து சொல்ல…அவன் கண்ணைப்பார்த்தவள் இவர் கண்ணப்பார்த்தா  இவர் என்ன சொன்னாலும் கேட்க வைச்சிருராரே…..
 
அவன் காசு கொடுக்கச் சொன்னாலும் இப்போது தன்னால் முடியாது.. ஆனா நாம வந்ததுக்கப்பறம் இவங்களுக்கு நம்மலால எவ்வளவு செலவு.. இன்னும் வருமானம் நிறைய வர என்ன செய்யனும் என யோசிக்க துவங்க இவள் யோசனை போகும் போக்கை அறிந்தவன்…
 எல்லாரும் சாப்பிடுங்க நேரமாச்சு??” சத்தமாக சொல்ல..
 
கனியையும் பார்த்து சாப்பிடு…??” அவன் சாப்பிட்டு கொண்டிருக்க அவன் புறம் மெதுவாக தன் முகத்தை கொண்டு சென்றவள்
என் கையை கொஞ்சம் விடுறிங்களா…??” அப்போதுதான் பார்த்தான் தன் கை அவள் கையை பிடித்திருப்பதை…மெதுவாக கையை விட்டான்.. அனைவரும் சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு வர மாலையாயிற்று..
 
மறுநாளே தன் மாமாவின் துணையோடு ஹரிணியையும் ரம்யாவையும் புதுப்பள்ளியில் சேர்த்தான்… பள்ளி தங்கள் வீட்டிற்கு சற்று அருகில்தான் ரெண்டு நேர் தெருவை தாண்டியிருந்தது… அன்று காலை மணி 11 இருக்கும் இன்று தோப்பில் எந்த வேலையும் இல்லாததால் தன் அறையிலிருந்து சில பொருட்களை எடுப்பதற்காக தோப்பு வீட்டிற்கு வந்தவன் கதவு பூட்டியிருக்கவும் கனியை காணாமல் தேடியவன் ஹரிணியும் ரம்யாவும் ஸ்கூலுக்கு போயிருக்குங்க.. இவ ஒரு வேலை கோவிலுக்கு போயிட்டாளோ என எண்ணியவன் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என முடிவு செய்து காத்திருக்க பத்து நிமிடங்களாகியும் வராததால்  பொழுது போகாமல் தோப்பை சுற்றிப்பார்க்க கிணற்றை பார்க்கவும் குளிக்கலாமா என யோசித்தான்..
 
 கனி குடும்பம் இங்கு வந்ததிலிருந்து இவனும் துரையும் எப்போதாவதுதான் கிணற்றில் குளிக்கிறார்கள்… இன்றுதான் யாருமில்லையே என முடிவு செய்தவன் சட்டென சட்டையை கழற்றிவிட்டு கிணற்றுக்குள் தன் எப்போதும் உள்ள பழக்கம் போல ஓடி வந்து குதித்திருந்தான்…டொம்மென்று சத்தத்தோடு அவன் தண்ணீரில் குதிக்க அப்போதுதான் தன் இங்கு வந்ததிலிருந்து இந்த கிணற்றில் குளிக்க வேண்டும் என நினைத்த கனி கிணற்றில் குளித்து பழக்கம் இல்லாததால் அந்த படிக்கட்டு வழியாக ஒவ்வொரு படியிலும் மெதுவாக கால் வைத்து அந்த பத்து படிக்கட்டில் கால் வைத்து இறங்கவே ஒரு மணி நேரமாயிற்று…. கடைசி படியில் அமர்ந்து தண்ணீரை கப்பில் எடுத்து ஊற்றி குளிக்கலாம் என நினைத்து வந்திருக்க துரை திடிரென குதிக்கவும் இவளும் பயந்து அம்மா என கத்தியபடி தவறி கிணற்றில் விழுந்திருந்தாள்…
 
                                        இனி………….??????

Advertisement