Advertisement

 
கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்… கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்… இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்…” விலையை பார்க்காத… நல்ல தரமானதா எடு…??”
 
இல்லைங்க வேணாம்… உடையை தேடி எடுத்தவள் இதுவே போதும்…??”தன் கையிருப்பை பார்த்தவள் மீதி இருந்த காசில் ரம்யாவுக்கு ஒரு செட் உடையை எடுத்தாள்…
 
ஏன் எங்ககிட்ட உதவி வாங்கக்கூடாதுன்னு நினைக்கிறியா..??”.துரை கோபமாக கேட்க… அவன் கோப முகத்தை பார்த்து உள்ளுக்குள் பயம் வந்தாலும்…
 
இதுவரைக்கும் நீங்க எல்லாரும் செஞ்ச உதவிக்கே நான் காலம் முழுசும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்… எனக்கு உங்களோட காசெல்லாம் வேண்டாங்க… இன்னும் ஒரு மாசம் போனா கொஞ்சம் காசு வந்துரும்…அப்ப வந்து வேற என்ன தேவையோ அத வாங்கிக்கிறேன்ங்க??” அந்த அளவுக்கு துணி தைக்க அவளிடம் வந்து குவிந்திருந்தது… இந்த காசே தங்கைகளுக்கு யூனிபார்ம் வாங்குவதற்காக வைத்திருந்தது… ஆனால் இன்று இது முக்கியமாக பட்டதால் அதை செலவழித்திருந்தாள்…. இன்னும் ஸ்கூல் திறக்கறதுக்குள்ள ஒரு ரெண்டுநாள் கண் முழிச்சு தைச்சா…. யூனிபார்ம் வாங்கிரலாம் என முடியு செய்து இருந்தாள்…
 
இவள் பெண்களின் உள்ளாடை பிரிவிற்குள் நுழைய இவன் பட்டுச் சேலை பிரிவிற்குள் நுழைந்திருந்தான்… கனி வாங்கியதற்கு அவள் காசு கொடுக்க கோபம் கொப்பளித்தாலும் ஒன்றும் சொல்லாமல் தான் வாங்கியதுக்கு மட்டும் காசு கொடுத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினர்…
 
வரும் வழியில் ஒரு ஹோட்டலை பார்க்கவும் நிப்பாட்டியவன்” வா எனக்கு ரொம்ப பசிக்குது …சாப்பிட்டுருவோம்…??”துணிக்கு நம்ம காசு குடுத்ததுக்கே இவங்க கோபமா இருக்காங்க… இப்ப வரலைனு சொன்னா ரொம்ப கோவிச்சுக்குவாங்களோ என நினைத்தவள் ஒன்றும் சொல்லாமல் பின்னால் போக…மெனுக்கார்டை பார்த்து தனக்கு வேண்டியதை சொன்னவன்” உனக்கு என்ன வேணும்??”
 
மெனுகார்டை வாங்கிப்பார்த்தவள் இருப்பதிலேயே விலை குறைவானதாக உள்ளதை சொல்ல பல்லை கடித்தவன் தனக்கு சொன்னதையே இரண்டு செட்டாக கொண்டுவரச் சொன்னான்…
 
போச்சு இவங்கள ரொம்ப கோபப்படுத்துரமோ….. அமைதியாக சாப்பிட்டவள் .. “எனக்கு ஒரு உதவி செய்றிங்களா…??”
 
அவளை நிமிர்ந்து பார்த்தவன் நாம எவ்வளவு பேசுவோம்.. எப்ப இந்த பொண்ண பார்த்தனோ அப்பவே நானும் ஊமைச்சாமியார ஆயிட்டேன் போல ரேவதிக்கு மாதிரி…. எனக்கும் வெறும் காத்துதான் வரும் போல…தேவர்மகன் ரேவதியை நினைத்தவன்… கண்ணாலே புருவத்தை சுருக்க…
 
தங்கச்சிகளுக்கு அடுத்த வாரம் ஸ்கூல் திறக்குறாங்க…டிசி மட்டும் கொஞ்சம் வாங்கி இங்க ஸ்கூல்ல சேர்க்க ஹெல்ப் செய்றிங்களா… இல்லனா கதிர் அண்ணாக்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்….??”
 
ம்ம்ம்…கனி வந்ததிலிருந்து  அவனறியாமல் அவன் வாழ்வில் நிறைய மாற்றங்கள் முன்பெல்லாம் பாதி நேரத்தை தோப்புவீட்டில் கதிரோடு வெட்டியாக கழிப்பவன் இப்போது வேலையிருந்தால் மட்டும்தான் இங்கு வருவது…இந்த வீட்டில் தாங்கள் இருவரும் போட்ட ஆட்டங்களுக்கு ஒரு முடிவு போல தேவையில்லாத கெட்ட சகவாசங்கள் குறைந்து குடியையும் இரண்டு பேரும் நிறுத்தியிருந்தார்கள் …கதிர் தன் தந்தையோடு வசூலுக்கு செல்ல துரை அடுத்து வர இருக்கும் பேங்க் எக்ஸாமிற்கு படிக்க ஆரம்பித்திருந்தான்… அதோடு கனியின் பொறுப்பான செயல்களை பார்த்தவன் தன்னுடைய ஊதாரிதனங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தான்… ஒரு பொண்ணே இந்த அளவுக்கு போராடுறான்னா நாம ஏன் இந்த தடவை எழுதுற பரிட்சையில பாஸாகக்கூடாது என நினைத்து படிப்பு….வயல் …தோட்டம் என பொழுதை உருப்படியாக்க….
 
உன்னோட வயசு என்ன??”
 
18 முடிய போகுது ஏன் கேக்குறிங்க..??”
 
சும்மாதான்….??”  ஜீப்பின் வேகத்தை அதிகப்படுத்த கனி சாப்பிடவும் தன்னை அறியாமல் உறக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள்…தூக்கத்தில் தலையை அவன் தோளில் சாய்க்க…  அவள் உடலில் இருந்த வந்து சுகந்தம் அவன் நாசியில் புகுந்து அவன் மனதை சென்றடைய…தன்னை அறியாமல் வேகத்தை குறைத்திருந்தான்.. அவள் வயதிற்கு மீறிய பொறுப்பு பாவம் என நினைத்தவன் அவள் தூக்கத்திற்கு தொல்லை செய்யாமல் மேடு பள்ளங்களில் ரொம்ப மெதுவாக ஓட்டினான்….ஜீப் ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவள் தலையை மெதுவாக நகர்த்தி அவள் சீட்டில் வைத்திருந்தான்… முழித்தால் சங்கடப்படுவாள்… மேலும் ஊருக்குள் யாராவது பார்த்தால் ஏதாவது இட்டுக்கட்டி பேச வாய்ப்பாக அமைந்து விடும் இந்த பொண்ணு படுற கஷ்டமே போதும் நம்மளால புதுசா ஒன்னும் வரவேணாம் என நினைத்து தோப்பு வீட்டில் நிறுத்தியவன்… அவள் தூங்கிக்கொண்டிருக்கவும்
 
கனி…கனி “என்று அழைக்க… முழிக்காமல் இருக்கவும் ஹாரனை சத்தமாக எழுப்பினான்….. அந்த ஒலியில் திடுக்கிட்டு எழுந்திருந்தாள்…அவனை திரும்பி பார்க்க அவளை ஊடுருவி பார்த்தபடி அமர்ந்திருந்தான்.. அவனை பார்த்தவளுக்கு அவன் தன்னிடம் ஏதோ சொல்கிறானோ..தன் கண் வழியாக என தோன்ற ரம்யா ஜீப்பை நோக்கி ஓடிவந்திருந்தாள்…
 
தன் உணர்வுக்கு வந்தவள் தாங்கள் வாங்கி வந்திருந்த பொருட்களை ரம்யாவிடம் கொடுக்க உள்ளே எடுத்துச் சென்றவள் தன் அக்காவிடம் “அக்கா நான் ஏஜ்அட்டெண்ட் பண்ணும் போது யாருக்கிட்டயும் சொல்லவேண்டாம்னு நீயும் அம்மாவும் சொன்னிங்க தானே… இப்ப ஹரிணி வந்தப்ப மட்டும் அப்பத்தாவும் அத்தையும் எல்லாருக்கும் சொல்றாங்க… ஏன்க்கா..??”.தங்கை பேசியதை கேட்டபடி நிமிர்ந்தவள் குடும்பத்தினர் அனைவரும் அங்கேதான் இருப்பதை உணர்ந்தாள்..
 
ஏத்தா ரம்யா வயசுக்கு வந்ததை யாருக்கிட்டயும் சொல்லையா… காலையில இருந்து அது ஏன் எதுக்குன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கா…??”
 
இல்லத்த அப்பத்தான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சு… அம்மாதான் இப்ப பொம்பள பிள்ளைகளுக்கு வர பிரச்சனையை நினைச்சு வெளியில சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க..சொல்லாமல் இருந்ததால் தான்த்தே… அவளுக்கு  அந்த ரௌடிகளால இதுவரைக்கும் பிரச்சனை வராம இருந்துச்சு….??”
 
இந்த புள்ளைக எதுமாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்குக… எதையும் வெளியில சொல்ல முடியாம.. மனசுக்குள்ளயே அடக்கி வச்சிருக்குக… அனைவரும் ஆளாளுக்கு ஒவ்வொன்று நினைக்க… மாலை 4 மணிக்கு அந்த ஊர்கார பெண்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க… அவர்களுக்கு பூ…குங்குமம் என கொடுத்து வரவேற்று காப்பி…ஜூஸ் என கொடுக்க அனைவரும் வரவும் அத்தை முறைக்கு தாங்கள் கொண்டு வந்த சீரில் இருந்து சோப்பு,,, சீயக்காய்… நல்லெண்ணெய் என அனைத்தையும் எடுத்தவர்கள் மீனாட்சிதான் ஹரிணிக்கு தலைக்கு நல்லெண்ணெய் வைத்து முறையை ஆரம்பிக்க அனைவரும் எண்ணெய் வைத்து சீயக்காயை வைத்தவர்கள்… குளித்து வெளியே வரும் போது ஹரிணி புதுப்பெண் போல இருந்தாள்… மங்சள் பூசி மினுமினுப்பாக இருக்க கனிக்கும் ரம்யாவுக்கும் இதெல்லாம் புதிதாக இருந்தது… தங்களுடைய சீர் தட்டில் இருந்த பட்டுச் சேலையை எடுக்க துரை வந்து ஒரு பையை கொடுத்துவிட்டு தன் தாயிடம் ஏதோ சொல்லிவிட்டு செல்ல அதை கனியிடம் கொடுத்தவர் அந்த உடைகளை மாற்றிவரச் சொன்னார்… அதில் கனிக்கு ஒரு பட்டுச் சேலையும் ரம்யாவுக்கு பாவாடை தாவணியும் இருக்க விலை பட்டியலை பார்க்க அதைக் கிழித்திருந்தான்.. இது எவ்வளவா இருக்கும்…இப்ப இத எப்படி வேண்டாம்னு சொல்றது அத்த மனசு கஷ்டப்படுவங்களே என நினைத்து சேலையை மாற்ற ஆரம்பித்தாள்….
 
முத்தமிழ் ஹரிணிக்கு அலங்கரிக்க கனியும் ரம்யாவும் உடைமாற்றி வந்தனர்…. சேலை கட்டவும் பெரிய பெண் போல இருந்த தன் தங்கையை பார்த்தவள் இவர்கள் மூவருக்கும் ஏற்ற உடையைத்தான் வாங்கியிருந்தான்..தன் தங்கைக்கு தான் வாங்கியிருந்த ரெடிமேட் பிளவுசு அளவிலேயே ரம்யாவுக்கும் வாங்கி… அடுத்த அளவில் கனிக்கு வாங்கியிருந்தான்… உள்ளூரிலேயே மாலைக்கும் ஜடைக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததால் அது வந்திருக்க அலங்காரம் செய்யப்பட்டது….முத்தமிழ் தன் நகைகளை கண்டு வந்திருந்தாள்..ஹரிணிக்கு அணிவிக்க.சில நகைகளை கனிக்கும் ரம்யாவுக்கும் கொடுக்க எவ்வளவு மறுத்தாலும் கேட்கவில்லை… கடைசியில் அப்பத்தா வந்து திட்டி அதை போடச் சொல்ல எல்லாம் முடித்து ….ஹரிணி கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைக்க… தாய்மாமன் முறைக்கு துரையே அழைக்கப் பட்டான்… அவன் வந்து அவளுக்கு அந்த பெரிய ரோஜா மாலையை போட்டு அழைத்து வர… பெரியவர்கள் அனைவரும் கன்னத்திலும் நெற்றியிலும் சந்தன குங்குமத்தை இட்டனர்
 
பனை ஓலைகளை வெட்டி வந்து துரையையே குச்சு கட்டச் சொல்ல அவனே ஹரிணி அமர்வதற்கு மறைவு கட்டச் செல்ல முத்தமிழுக்கு ஏற்கனவே கட்டி பழக்கம் இருந்ததால்..துரை வேகமாக கட்டி முடித்தான்… வயதில் மூத்த அப்பத்தாவை கூப்பிட்டு மடி நிரப்பச் சொல்ல அதை தாய்மாமன் மனைவி ஸ்தானத்தில் ஹரிணியிடம் இருந்து மீனாட்சியே மூன்று முறை வாங்கி அவளை ஆசிர்வதித்து அந்த மறைவான இடத்தில் விட்டிருந்தனர்….
 
ரம்யா தன் அத்தையிடம் சென்றவள்… “ஏத்தே அவள மட்டும் இங்க வைக்கிறிங்க…??”
அது ஒன்னுமில்லத்தா… இந்த மாதிரி நேரத்துல மனசுலயும் உடம்புலயும் நெறைய மாற்றம் வரும்…திடிருன்னு அத ஏத்துக்க முடியாதுல்ல அதான் கொஞ்சம் ஓய்வு எடுக்கத்தான் இதுமாதிரி செஞ்சு வைக்கிறது.??”.
 
கனிக்கு இதெல்லாம் கனவா… நினைவா என தெரியவில்லை…கண்டிப்பா தன் தங்கை  நாம அங்க இருக்கும் போது பெரியபொண்ணாயிருந்தா இன்னும்  என்னன்னமோ நடந்திருக்கும் …. அம்மா… நீங்க எங்களுக்கு ஒரு நல்லவங்கள கைக்காட்டிட்டுத்தாம்மா போயிருக்கிங்க…. கண்ணீர் கலங்கி தன் தாயை நினைத்து வருந்த…ஒரு மூலையில் நின்றிருந்தவளை பார்த்த துரை தான் வாங்கி கொடுத்திருந்த சேலையை கட்டி இருப்பதை  பார்த்தவன் அந்த வயலட் நிற பட்டு அவளுக்கு எடுப்பாக இருந்தது…காதில் ஜிமிக்கி போட்டு கழுத்தில் மெலிதான ஒரு நெக்லஸ்… மிதமான ஒப்பனையில் பார்க்க தேவதை போல இருந்தாள் அவள் கண்கலங்கி போயிருக்கவும் தன்னை அறியாமல் அவளிடம் நகர்ந்து…
 
என்ன உனக்கும் ரம்யா மாதிரி நமக்கு இப்படியெல்லாம் நடக்கலையேன்னு வருத்தமா இருக்கா… அதான் அழுகுறியா..??”
 
இல்லை என தலையை ஆட்டியவள் கண்ணை மூட இரு கண்ணீர் துளிகள் தன்னை அறியாமல் வெளிவந்தது…தன் பையிலிருந்த கர்சிப்பை எடுத்தவன் அவள் உள்ளங்கையில் வைத்து அழுத்த தன் சுயநினைவுக்கு வரவும்….” ம்ம்ம் …கண்ணைத்துடை…??” என்றபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்திருந்தான்…
 
                                 இனி……………….?????

Advertisement