Advertisement

ஆறு வருடம் கழித்து……….

 

ஒரு ஞாயிற்றுகிழமை….. கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்…

மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க  வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து… 

அக்கா………. வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே பண்ணல… புராஜக்ட்டும் செய்யலை மிஸ் நல்லா திட்டப்போறாங்க நான் கூப்பிட்டா வரவும் மாட்டேன்னு சொல்லுதுக… நீ போ நான் சமைக்கிறேன்….??” கரண்டியை வாங்க

 

ஹரிணி ரம்யா இருவருக்கும் அடுத்த வாரம் திருமணம்… கனியை அன்று ஹாஸ்பிட்டலில் சேர்த்தவருடைய மகனுக்குதான் ஹரிணியை பேசிமுடித்திருந்தார்கள்… அவர் மகன் பி.ஈ முடித்துவிட்டு அரவிந்தோடு வெளிநாட்டில் வேலை பார்க்க அரவிந்தான் அந்த வேலையை வாங்கி கொடுத்திருந்தான்…

அவனுடைய நல்ல குணத்தை வைத்தே அவனுக்கு பேசிமுடித்திருந்தார்கள்… ரம்யாவை தங்கள் ஊரில் ஒரு பங்காளி வீட்டில் மாப்பிள்ளை பார்த்து முடித்திருக்க… திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் கனியின் மகன்கள் இருவரும்தான் அடம்பிடித்து இங்கு அழைத்துவந்திருந்தார்கள்…

 

கனி தன் குடும்பத்தை தேடிச் செல்ல… துரையும் அவன் மகன்கள் இருவரும் கிணற்றில் ஆட்டம்போட்டு குளிக்கும் சத்தம் கேட்டது…. கனி மேலிருந்து இவர்களை மேலேறிவரச் சொல்லி கத்த… தன் மகன்கள் ஏதோ கூறுவதை கேட்டவன்… கீழிருந்து கனியை கைகாட்டி அழைக்க…

ஒவ்வொரு படியாக கால்வைத்து உள்ளே இறங்கி வந்தவள் கடைசி படியில் அமர்ந்துகொண்டு அவர்களை மேலே வரச் சொல்லி அதட்ட…. துரை தண்ணீரில் மூழ்கியவன் கனியின் கால்புறம் வந்து அவளை இழுத்து தண்ணீரில் விட்டிருந்தான்….

தண்ணீரில் மூழ்கி எழுந்தவள் நீச்சலடித்து தன் பிள்ளைகளிடம் செல்ல துரை நான்கு வயதில் இருந்தே அவர்கள் இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தான்… அவர்களோடு இவளும் நீச்சல் பழகியிருந்தாள்…

தன் பிள்ளைகள் இருவரோடும் சற்றுநேரம் நீந்தி விளையாடியவள் சற்று நேரத்தில் அவர்களை மேலே அனுப்பி தன் தங்கைகளிடம் வேறு துணியை மாற்றச்கொள்ளச் சொல்லி  தானும் படியை பிடித்தபடி அதில் ஏறப்போக அவள் இடுப்பில் கைகொடுத்து தூக்கியவன் அவளோடு தண்ணீரில் நீந்த ஆரம்பித்தான்….

 

 என்னத்தான் எவ்வளவு வேலையை வைச்சிக்கிட்டு நீங்களும் இப்படி ஆட்டம் போடுறிங்க…??” அவன் முன்புறம் திரும்பி அவன் கழுத்தை பிடித்தபடி கேட்க… அவள் கேட்டதை காதில் வாங்காமல் அவளைத்தான் ரசித்தபடி இருந்தான்… முன்பை விட இப்போது சற்று மெருகேறி… சதை போட்டிருந்தவளை தன் கையில் ஏந்தியவன்…….

 

நாங்க எங்கடி ஆட்டம் போட்டோம்…, இப்பதான் வந்தோம் நீ பின்னாடியே வந்திட்டியே….. வா நாம ரெண்டுபேரும் கொஞ்சநேரம் குளிக்கலாம்… அவளை அணைத்தபடி தன் முகத்தை அவள் முகத்தோடு வைத்தவன் கல்யாணவேலை ஆரம்பிச்சதும்போது நீ ரொம்ப பண்ணுறடி… கிட்டவே வராம எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு இருந்தா மனுசன் என்ன பண்ணுவான்….??” அவளை அணைத்தபடியே அவளோடு சண்டை போட…..

 

 படியில் ஏறி அமர்ந்தவள் அவனை தன்புறம் இழுத்து… இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும் நாம எங்கயாவது வெளியில போய்ட்டு வருவோம்….அத்தான் நம்ம வீட்டுக்கு போய்ட்டு வருவோமா….??”அவளுக்குமே இவங்கள ரொம்ப படுத்துகிறோமோ என்று தோன்றியிருந்தது…

 

...ஓகே….. டன் அதுக்கு அச்சாரமா இப்ப அத்தானுக்கு ஒரு முத்தம் குடுத்துட்டு போ….??”

 

 கனிக்கு வெட்கம் இருந்தாலும் தன் கணவன் மேலிருந்த காதல் அவன் பேச்சை கேட்க வைத்திருந்தது…. மீண்டும் தண்ணீரில் இறங்கியவள் அவன் இதழை முற்றுகையிட …. ஏற்கனவே தன் மனைவி மேல் பித்தாகி இருந்தவன் இன்னும் இன்னும் காதலால் கசிந்துருகி நின்றான்…..

 

அரைமணி நேரம் கழித்து அங்கு காயத்ரி தன் நான்குவயது மகளை அடிப்பதற்கு விரட்டிக் கொண்டு செல்ல… கதிர் தன் மகளை அணைத்து அடிவாங்காமல் அவளை தூக்கியபடி ஓட ஆரம்பித்தான் ..தன் ஐந்துமாத கருவோடு விரட்டியவள்  முடியாமல் மூச்சுவாங்கி நிற்க….

 

துரை என்னமா ஆச்சு அப்பனும் மகளும் இன்னைக்கு என்ன பண்ணினாங்க….??”

 

கதிர் நானும் என் பொண்ணும் பாவம்டா… ஒன்னுமே தெரியாதவங்க… இவ சும்மா சும்மா எங்கள அடிக்கிறா இல்லையா பேபி…..??”

 

அவன் மகளோ… ஏப்பா நாம வேணா வேற அம்மாவ மாத்திக்குவோமா….??”.

 

வேண்டாம்டா….. நம்மள வேற யாரும் சேர்த்துக்க மாட்டாங்க…. உங்க அம்மாதாண்டா போனா போகுதுன்னு வைச்சிக்கிறா….??” அவள் தோளில் கைபோட்டு தன்புறம் அணைத்தவன் அவள் ஓடிவந்ததில் வேர்த்து வழிந்த வியர்வையை தன் வேட்டியால் துடைத்துவிட என்றும் போல இன்றும் தன் மனதிற்குள் இறங்கியிருந்தான்…

 

அவன் சொன்ன பாவத்தில் காயத்ரியும் சிரித்துவிட…. அங்கு கனி தன் மகன்களை விரட்டிக் கொண்டு வந்தாள்….

 

துரை… ஏண்டி இப்ப அவனுகள அடிக்க வர்ற…??”

 

காயத்ரி…. சும்மா இருங்கண்ணா இதுக மூனும் பண்ணுற சேட்டைக்கு ஒரு அளவே இல்லை….??”

 

அப்படி என்னமா பண்ணுச்சுக….??”

 

அதுக்கெல்லாம் காரணம் நீங்க ரெண்டுபேருதான் நினைக்கிறேன்… கதிரை முறைச்சபடி உங்க பொண்ணு தலையில செம்பை வைச்சிக்கிட்டு கரகாட்டம் ஆடுறா…. அதுவும் பத்தாதுன்னு அவங்க தாத்தாக்கிட்ட காசுவாங்கிவந்து இவங்ககிட்ட குடுத்து சட்டையில குத்திவிடச் சொல்லிட்டு மூனும் ஒரே ஆட்டம் ….

காயத்ரி முகத்தை அழுவது போல வைத்தவள் நானெல்லாம் ஒருநாள்கூட கரகாட்டம் பார்த்தது இல்லை… எனக்கென்னமோ பயமா இருக்குண்ணா இவ வரும்காலத்துல ஒரு கரகாட்டகாரியா வருவாளோன்னு….??”

 

கதிரும் துரையும் பே……வென முழிக்க ஆரம்பித்தார்கள்… என்னடா இது சோதனை….

 

 கதிரோ இவ இப்ப இருக்குற கோபத்துல நாம என்ன சொன்னாலும் சண்டை போடுவாளே… சண்டை மட்டும் போட்டா பரவாயில்ல ஒருவாரம்… பத்துநாள் நம்மள கிட்டவே சேர்க்கமாட்டாளே.. கடவுளே யாரையாச்சும் காப்பாத்த அனுப்புடா…..

 

கனி காயத்ரி கையை பிடித்தவள் விடுங்க அண்ணி அதுக்கெல்லாம் காரணம் அவங்க மிஸ்தான்…. ஆண்டுவிழாவுக்கு என்னன்னமோ டான்ஸ் இருக்கு இவங்க மூனு பேருக்கு மட்டும் கரகாட்டம் ஆட செலக்ட் பண்ணியிருக்காங்க… அதான் பிள்ளைக மூனும் ஆடிப்பாக்குதுக…. விடுங்க எல்லாம் சரியா போகும்….

 

கதிருக்கு போன் வர தமிழ் போன் செய்திருந்தாள்… தமிழின் மகளோடும் இரண்டு வயது மகனோடும் மூவரும் வீடியோகாலில் தினமும் பேசுவார்கள்… கதிர் போன் பேசியபடி தன் மகளை நோக்கி செல்ல…. காயத்ரி சொன்னபடி நடுவில் அவன் மகள் தலையில் செம்மை வைத்து ஒரு கையால் பிடித்தபடி ஆடிக் கொண்டிருக்க கனி மகன்கள் இருவரும் அவள் இருபுறம் நிண்று அவளை இடித்தபடி ஆட……. துரைக்கும் கதிருக்கும் முகம்கொள்ளா சிரிப்பு…..

 

 

ஹா…..ஹா….ஹா…. டேய் மாப்பிள்ள நம்ம புள்ளைக எல்லாம் எப்படிடா நம்மள மாதிரியே வருதுக… இன்னும் என்னன்ன பண்ண காத்திருக்குகளோ…..??” இவர்கள் ஆடுவதை அவர்கள் குடும்பமே உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்க ஹரிணியும் ரம்யாவும் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்…

 

கதிர் காயத்ரியிடம் சென்றவன்… யேய் விடுடி இதெல்லாம் சின்ன விசயம் நானே இப்ப மாறலையா …. நம்ம பொண்ணு  இளவரசிடி நீ வேணா பாரு பெரிசானா நல்லா படிச்சு பெரிய ஆபிசரா வருவா…. நீ இப்ப கொஞ்சம் அத்தான கவனி…. தலைவலிக்கிது ஒரு காப்பிபோட்டுத்தா??” அவளை தள்ளிக்கொண்டு சென்றான்….

 

பிள்ளைகள் மூவரையும் பார்க்கும் போது துரைக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது …சிறுவயதில் தானும் தமிழ், கதிர் மூவரையும் ஒன்றாக பார்த்தது போல இருந்தது… கதிர் மகளை யாரும் ஒருவார்த்தை சொல்ல இவன் மகன்கள் இருவரும் விடவே மாட்டார்கள் எங்கு சென்றாலும் அந்த குட்டிப் பெண்ணை நடுவில்விட்டு இருவரும் இருபுறமும் ஒரு அரணாகவே இருப்பார்கள்..

சிறுவயதில் இருந்தே அந்த பெண்ணை காப்பது தங்களை சேர்ந்தது என்பதை போல இருக்கும் அவர்களின் ஒவ்வொரு செயலும்…. அதே போல்தான் அந்த குட்டி தேவதையும் ஒரு சிறு சாக்லேட் கொடுத்தால்கூட அவர்களுக்கு அதில் ஒரு பங்கு கொடுக்காமல் அவள் சாப்பிட்டதாய் நியாபகமே இல்லை…. அவ்வளவு ஒரு ஒற்றுமை…..

 

அனைவரும் சாப்பிட்டு இங்கேயே படுக்கலாம் என முடிவு செய்ய… ஹரிணியும் ரம்யாவும் தத்தம் வருங்கால மாப்பிள்ளைகளோடு போனில் மூழ்கியிருந்தார்கள்..

கதிரின் மகள் வீட்டிற்கு வரவில்லை என சொல்லி துரை மகன்களோடு ஆட்டம் போட்டுக் கொண்டிந்தவளை இங்கேயே விட்டுவிட்டு கதிரும் காயத்ரியும்  தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்….

அப்பத்தாவோடும் மீனாட்சியோடும் கதை பேசியபடி இருந்த பேரன் பேத்திகளை அப்பத்தா கதை சொல்வதாக சொல்லி அவர்களிடம் கதை சொல்ல ஆரம்பிக்க அவர்கள் மூவரும் கதைகேட்டபடி உறங்கியிருந்தார்கள். …

மீனாட்சிக்கு தன் பேரப்பிள்ளைகளை அருகில் இருந்து பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் வாரவிடுமுறைக்கு இவர்கள் தங்கள் ஊருக்கு போவார்கள் இல்லையென்றால் அப்பத்தாவும் மீனாட்சியும் இங்கே வந்துவிடுவார்கள்…. 

துரை தன் தாய்க்கு ஹார்ட் ஆபரேசன் செய்ததால் அதிக வேலை கொடுக்க மனதில்லை…. ஆனால் மீனாட்சி வைராக்கியமாக தன் கணவர் இருந்த ஊரில் ஒரு ராணியை போல இருந்துகாட்ட வேண்டும்  என்ற எண்ணத்தை அறிந்தவன் தினமும் போன்செய்து விபரத்தை கேட்டு அங்கேயே தேவையான ஆட்களை வைத்திருந்தான்… 

மீனாட்சிக்கு சும்மா மேற்பார்வை இடுவது மட்டும்தான் வேலை…. சமையல்…. வெளிவேலை அனைத்திற்கும் ஆள்வைத்திருந்தான்… இடையில் ஒருமுறை வேலை முடிந்தவுடன் அங்கிருந்தபடியே ஊருக்குச்சென்று அம்மாவை பார்த்துவிட்டு வேலைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு கணக்கு பார்த்து வருவான்….

துரைக்கே ஆச்சர்யமாக இருக்கும் இவ்வளவு வருமானத்தையும் தன் தாயால் எப்படி விட்டுவிட்டு தான் மட்டும் போதும் என்று ஊருக்கு வர முடிந்தது… அந்த அளவுக்கு செல்வம் கொழித்தது… துரையுமே  விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு ஊரில் போய் இருக்கலாமா என யோசிக்க ஆரம்பித்தான்…

பருத்தி காடு அதிகமாக இருந்ததால் பஞ்சு மில் ஒன்றை ஆரம்பிக்கலாம் என  நினைக்க மீனாட்சிதான் தன் ஆசைக்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளாவது வேலைக்கு போகும்படி சொல்லியிருந்தார். … கனிக்கும் கணக்குவழக்குகளை சொல்லிக் கொடுத்து மேற்பார்வையிட வைத்திருந்தான்…

அவளுக்கு எப்போதுமே தோட்டக்கலையில் ஆர்வம் இருந்ததால் நிறைய இடங்களில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்தாள். … துரையிடம் இந்த வருடம் பிள்ளைகள் படிப்பு முடிந்தவுடன் ஊருக்கே செல்லலாம் என நச்சரித்து கொண்டிருக்க துரையுமே முடிந்தால் தங்கள் ஊருக்கே டிரான்ஸ்பரில் செல்லலாம் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தான்.. .

ஹரிணி திருமணம் முடிந்தவுடன் அவள் கணவன் அவளை தன்னோடு வெளிநாடு அழைத்துச் செல்வதாக சொல்லியிருக்க தமிழ் வீட்டிற்கு அருகிலேயே வீடு பார்த்திருந்தான்….. ரம்யாவின் கணவன் பெங்களுரில் வேலை பார்ப்பதால்  திருமணத்திற்கு பிறகு பெங்களூர் செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது….

அனைவருக்கும் சாப்பாடு போட்டு வேலை முடிந்து கதவை சாத்திவிட்டு கனி தன் அறைக்குள் நுழைய துரை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்… திருமணம் பேசிய நாளில் இருந்து துரை ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தான்…

துரையும் கதிரும் சேர்ந்து வேலை பார்த்தார்கள்.. இதற்கு நடுவில் பஞ்சு மில் இருவரும் சேர்ந்து ஆரம்பிப்பதாக முடிவு செய்திருந்ததால் அந்த வேலைகளை கதிரிடம் கொடுத்திருந்தான்….

கனி தங்கள் ஊருக்கே செல்வதாக முடிவு செய்யவும் கடையை காயத்ரியிடமே ஒப்படைத்துவிட்டு அங்கு தான் வேறு கடை வைத்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால் காயத்ரி இன்னும் இரண்டு மூன்று பெண்களை வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்திருந்தாள்…

சுற்றுபுறம் கிராமங்களில் உள்ள ஏகப்பட்டபெண்கள் இவர்கள் கடை கஸ்டமர்கள்தான்…. தன் கணவனை பார்த்தவள் அவனுக்கு போர்வையை நன்றாகத போர்த்தியபடி அவனோடு படுத்தவளுக்கு அவனை பார்க்க பார்க்க காதல் பொங்கியது…

கண்டிப்பா துரையை போல ஒரு நல்ல மனிதனை கடவுள் தனக்கு கணவனாக கொடுத்தற்கு தினமும் தன் தாயையும் தந்தையையும் வணங்குவாள்… அந்த அளவிற்கு தன் மீதும் தன் தங்கைகள் மீதும் பாசம் வைத்திருந்தான்…

ஹரிணியும் ரம்யாவும் கல்லூரி படிப்பை தமிழ் படித்த கல்லூரியிலேயே படித்து MBA முடித்திருந்தார்கள்… அவர்கள் இருவரும் கல்லூரிக்கு சென்றுவர தனியாக ஆட்டோவுக்கு சொன்னவன் எப்போதும் அவர்கள் முன்னேற்றத்தில் ஒரு கண் வைத்திருந்தான்…

மாப்பிள்ளை பார்க்கும்போதுகூட ஒரு முறைக்கு பலமுறை சம்மதம்கேட்க அவர்கள் இருவரும் நீங்கள் பார்த்தால் போதும் என கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள்….

 

தன்னை மீறி அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் அவன் மார்போடு ஒன்றியிருந்தாள்… நாட்கள் விரைவாக ஓடி அவர்கள் திருமண நாளும் வந்து நல்ல முறையில் திருமணம் முடிய…. இருவரும் துரை காலில் விழுந்து வணங்கியவர்கள்…. கண்கள் கலங்கி நிற்க….

 

துரையின் மகன்களும் கதிரின் மகளும் அவர்களோடு சேர்ந்து நின்று அவர்கள் கண்ணைத்துடைத்து விட்டு சித்திம்மா அழாதிங்க??”கன்னத்தில் முத்தமிட… அத்தை நானும் நானும்…” என்று கதிர் மகளும் அவர்களோடு போட்டி போட ஆரம்பித்தாள்….

 

துரையும் கனியும் அவர்களுக்கு திறுநீறு பூசிவிட…….

 

ஹரிணி…. அத்தான் நான் உங்களை ஒருதரம் அப்பான்னு கூப்பிட்டுக்கவா…??”.

 ரம்யாவும்  கனியின் தோளில் சாய்ந்து அழ…..

 

துரை ஏய் இதென்ன சின்னப்புள்ள மாதிரி அழுறிங்க….நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க ரெண்டு பேரும் என்னோட பொண்ணுகதான்… சும்மா சும்மா அழக்கூடாது… ரெண்டு பேரும் போற இடத்துல நல்ல பேரை எடுக்கனும் உங்க அக்கா மாதரி பொறுமையா இருக்கனும் புரியுதா??” அவர்கள் தலையில் தன் கைவைத்து ஆசீர்வாதம் செய்ய

இருவரும் …. அப்பா …”என்று கண்ணீர் விட்டபடி அவன் காலடியில் விழுந்திருந்தனர்…. பதறியவன்…

 

 ஏய் கனி தூக்குடி என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க….??” அவர்களை சமாதானப்படுத்த கனிக்குமே கண்ணில் நீர் வந்திருந்தது… தன் மிகப்பெரிய சுமை இறங்கினாற்போல…. அதற்கு காரணமான தன் கணவன் தனக்குமே தாயுமானவன் என்பதை புரிந்து கொண்டாள்….

 

 அடுத்து வந்த பத்து நாட்களில் ஹரிணியும் ரம்யாவும் தங்கள் புகுந்த வீட்டிற்கு சென்றிருக்க துரைக்குடும்பம் தங்கள் ஊருக்கு வந்திருந்தனர்… அந்தவார கணக்கு வழக்குகளை முடித்தவன் ஓய்வாக தன் அறையில் படுத்திருக்க….

கீழே தன் மகன்களின் பேச்சுக்குரலும் தாயின் சந்தோச சிரிப்பொலியும் கேட்டது…… காப்பியோடு கனி உள்ளே வரவும்… அவளை இழுத்து தன் அருகில் அமரச் செய்தவன்… அவளை பார்த்தபடியே காப்பியை குடித்தபடி… என்னமோ உன் முகத்துல ஒரு மினுமினுப்பா இருக்கேடி என்ன விசயம்….??”

 

ஒன்றும் சொல்லாமல் கதவை அடைத்தவள் அவன் அருகில் வந்து அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து…. உங் க பொண்ணு இன்னும் எட்டு மாசத்துல உங்கள பார்க்க ரெடியா இருக்கா…..??”

 

சந்தோசத்தில் அவளை இறுக அணைத்தவன் எனக்கும் டவுட்டு இருந்துச்சுடி…  ஆனா நீ ஒன்னும் சொல்லலையேன்னு நினைச்சேன்… டாக்டர்கிட்ட செக்கப் பண்ணிட்டியா….??”

 

ம்ம்ம்  நானும் அத்தையும் இங்க இருக்கிற ஒருலேடி டாக்டர்கிட்ட போய் கன்பார்ம் பண்ணிட்டோம்… ஏங்க இதுவும் டுவின்ஸா இருக்குமோ….??”

 

எதுவா இருந்தா என்னடி ரெண்டும் பொண்ணா பெத்துக்குடு…… அப்பா நான் இருக்கும்போது என்ன கவலை…. அண்ணனுக ரெண்டுபேரும் சிங்கம் மாதிரி இருப்பாங்கடி…தங்கச்சிகள பார்த்துக்குவாங்க… ஆனா எனக்கு என்னமோ குட்டிதேவதை ஒரு ஆளாத்தான் வருவான்னு நினைக்கிறேன்… போட்டிக்கு வேற ஆளோட வரமாட்டா…. எதையும் நினைச்சு சும்மா மனச போட்டு குழப்பக்கூடாது…. என்ன வந்தாலும் ஏத்துக்கனும் புரியுதா…??”

 

ம்ம்ம்….

 

என்ன சத்தம் உள்ள போகுது…. அத்தான பாரு... தன் கண்ணோடு அவள் கண்ணை கலக்கவிட்டவன் தைரியத்தை அவளுக்கு செலுத்தியிருந்தான்…

முதலில் டுவின்ஸாக இருந்ததால்  பிரசவம் கொஞ்சம் கடினமாக இருந்தது…… கனியைவிட துரைதான் மிகவும் கஷ்டப்பட்டான்… அதனால்தான் அடுத்த குழந்தை வேண்டாம் என முடிவு செய்திருந்தவர்கள்….

இப்போது சில மாதங்களாக கதிரின் மகளை பார்த்ததிலிருந்து….. அவளை பார்க்கும்போது துரையின் முகம் மிருதுவாக மாறிவிடும்….அவள் செய்யும் சேட்டைகளை ரசித்துப் பார்ப்பான்….

பெண்பிள்ளைகளின் மேல் துரை பிரியமாக இருப்பதை அறிந்தவள் தங்களுக்கும் ஒரு மகள் வேண்டும் என தன் பிடிவாதத்தை தன் கணவனிடம் ஆரம்பித்திருந்தாள்…துரை எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை…. இன்று தாய்மை அடைந்திருந்தாள்…..

 

வேகமாக கதவு தட்டும் சத்தம்கேட்டு கதவை திறக்க மகன்கள் இருவரும்… ஓடிவந்து தன்தாயை அணைத்திருந்தார்கள்…

 

அம்மா அப்பத்தா சொன்னாங்க நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வரப்போகுதா…??”

 

தன் இரு மகன்களை இரு தோளில் தூக்கியவன்…. ஆமா,….. குட்டி இளவரசி வரப்போகுதுடா….??”

 

ஹேய்…….. என கத்தியபடி தன் தந்தைக்கு முத்தமிட்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தியவர்கள் இறங்கி வந்து தன் தாய்க்கும் முத்தமிட…. கனியும் தன் மகன்களின் சந்தோசத்தில் பங்குபெற்றாள்…. தன் மகன்களோடு  கணவனையும் சேர்த்து அணைத்தவள்….அவர்களுக்கு முத்தமிட

அவர்கள் மீண்டும் மாடியில் இருந்து இறங்கி தங்கள் அப்பத்தாவிடம் ஓடவும்…. இப்போது காதலோடு தன் கணவனை முத்தமிட்டு இறுக்க அவனும்… இவளை இறுக அணைத்திருந்தான்…. இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மனதால்…. காதலால்….மோகத்தால்….. அன்பால் …. பாசத்தால் …. அக்கறையால்… சிறையெடுத்திருந்தனர்…..

 

                    வாழ்க வளமுடன்…………….. முற்றும்….

Advertisement