Advertisement

 
துரையின் பேச்சு… அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல்  பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது…. என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே… ஏன் கண்ணுக்கு முன்னாடி வந்த…. இப்படி அடிப்பட்டு கிடக்கவா… என்னை உனக்கு பிடிக்கும்னா இப்ப கண்ணு முழிச்சு பாரு….. இப்ப இப்படி படுத்துகிடக்கத்தான் ராத்திரிபூராவும் அத்தான் அத்தான்னு ஆயிரம் தரம் சொன்னியா… இப்ப உன்மேல உயிரே வைச்சிருக்க அத்தான் கேக்கிறேன்…. ஒரே ஒருதரம் அத்தான்னு சொல்லுடி…. ப்ளிஸ்டி …”அவள் கையை எடுத்து தன் முகத்தில் வைக்க….. அவன் கண்ணீர் அவள் கையை நனைக்க… அவன் கண்ணீர் துளிபட்டவுடன் அவள் கை லேசாக அசைந்தது போலிருக்க….
 
கனி…கனி… என கத்தியவன்….. நர்ஸை பார்த்து…..தங்கச்சி… இவ இப்ப லேசா அசைஞ்சாம்மா…..??” இவன் கத்த நர்ஸ் துரையை பாவமாக பார்த்தாள்…..
 
கனியை சோதித்து பார்க்க அப்படியே இருந்தாள்…. ஒன்னும் தெரியலையே… ??”
 
நீங்க கொஞ்சம் விலகுகங்க என்றபடி மீண்டும் தன் கன்னத்தில் கையை வைக்க…. விரல் அவன் கன்னத்தை தீண்டியது போல இருக்க….
 
ஆமா ஸார்…… இருங்க நான் போய் டாக்டர வரச்சொல்லுறேன்??” வேகமாக ஓடி டாக்டரை வரச் சொல்ல துரையை வெளியில் இருக்கச் சொன்னார்கள்…. அதன் பிறகு சற்று நேரம் கழித்து வெளியில் வந்த டாக்டர்…துரையின் கையை குலுக்கியவர்…. அவங்களுக்கு நினைவு திரும்பிருச்சு ஸார்… இனி எந்த ஆபத்தும் இல்ல….. உங்க நம்பிக்கை வீண் போகலை…..??” அவன் தோளை தட்டியபடி அடுத்து செய்ய வேண்டிய சிகிச்சை பற்றி பேச அவருடைய ரூமுக்கு அழைத்து செல்ல….
 
அங்கு நின்றிருந்த  குடும்பத்தினர் கனியை பார்க்க உள்ளே நுழைந்திருந்தனர்… துரை டாக்டரிடம் பேசிவிட்டு வரவும் கதிர் வெளியில் இருந்து உள்ளே வந்தான்….
மாப்பிள்ள உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டா….??”
 
எதுவாயிருந்தாலும் கனிய பார்த்துட்டுதாண்டா அவசரமாக கதிரோடு உள்ளே நுழைய… கனி கண்ணை மூடியிருந்தாள் உள்ளே கருவிழி அசைவு தெரிந்தது… உடலெல்லாம் கட்டு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது…. மெதுவாக கண்ணை திறந்தவள்… தன்னை சுற்றி உள்ளவர்களை  ஒவ்வொருவரின் முகத்தையும் பார்க்க துரை அவர்களுக்கு பின்னால் நின்றிருந்தான்…. அவனை பார்க்கவும் அவன் முகத்திலேயே பார்வை நிலைத்திருந்தது….மற்றவர்கள் அனைவரும் அவளுடைய நலனை பற்றி கேட்டுக் கொண்டிருக்க மனையாளோ கணவனின் உடலை மேலிருந்து கீழாக பார்த்தாள்…. மெதுவாக வாயசைத்து உங்களுக்கு அடிபடலையே….??”
 
 மீனாட்சி மகன் மருமகள் இருவரையும் பார்த்து கண்கலங்கியவர் …தன் மகனுக்கு நல்ல பெண்ணைத்தான் மனம்முடித்திருக்கிறோம் என்ற நிம்மதி தன்னை அறியாமல் ஏற்பட்டிருந்தது….கனி தன் கண்ணால் கணவனை தன் அருகில் அழைக்க…. அவன் தன் முகத்தை அவள் முகத்துக்கு அருகில் கொண்டு செல்லவும்…. குளுக்கோஸ் ஏறாத கையை மேலே தூக்கி அவன் கன்னத்தை வருடியவள்…. உங்களுக்கு ஒன்னுமில்ல தானே….
 
அந்த கையை தன் நெஞ்சில் வைத்தவன்…. ஒன்றும் சொல்லாமல் அவளையே தன் கண்ணில் நிரப்பிக் கொண்டு இருந்தான்……  அவனுக்கு பேச தோன்றவில்லை…. தன் மனைவி தன்னோடு பேசுகிறாளா….
 
கனி பேசவும் சந்தோசத்துடன் துரையோடு பேசட்டும் என குடும்பமே வெளியில் வந்திருக்க…திரும்பி பார்த்தவன் கதவு சாத்தியிருக்கவும் கனியின் அருகில் நெருங்கியிருந்தான்…. அவள் அருகில் அமர்ந்தவன் அவளோடு கன்னத்தில் கன்னம் வைத்து படுத்துவிட்டான்.. ..அவனுக்கு அவள் ஸ்பரிசம் தேவையாய் இருந்தது…அவள் ஸ்பரிசத்தை…கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி கொண்டிருக்க கனியும் தன் கையை அவன் கன்னத்தில் வைத்திருந்தாள்…. இருவரும் பேசாமல் ஒருவர் காதலை ஒருவர் அறிந்து கொண்டிருந்தனர்…. கனிக்கு கைகாலெல்லாம் ஒரே வலி அனைத்து இடத்திலும் கட்டுப்போடப்பட்டிருந்தது… இடுப்பிலும் நல்ல அடி தலையை ஸ்கேன் செய்திருந்தனர்… முகத்தில் நெற்றியில் நல்ல அடி கட்டுப் போட்டிருந்தார்கள்…. உயிர் போகும் அளவுக்கு வலி இருந்தாலும் கணவனின் அருகாமை அவளுக்கு தேவையாய் இருந்தது….
 
அதற்குள் கதிர் துரையை போனில்அழைத்தவன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டா…??”
 
துரை ம்ம்ம் வர்றேன்டா……” மனதே இல்லாமல் எழுந்தவன்…. அவள் நெற்றியில் முத்தமிட்டு உங்க அண்ணன் வரச் சொல்லுறான் நான் போய் பார்த்துட்டு வர்றேன்… நீ உன் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கிட்டயும் பேசு ரெண்டு பேரும் உனக்கு இப்படி ஆனதுல இருந்து அழுதழுது மயங்கி விழுந்துட்டாங்க…. காலையில் குளுக்கோஸ் போடுற அளவுக்கு ஆயிருச்சு… நான் அவங்கள வரச் சொல்லுறேன்…??”.அவள் கன்னத்தை மென்மையாக தட்டிவிட்டு அவள் முகத்தில் வலியால் சுணக்கத்தை காணவும் உன்னால பேச முடியுமா இல்லை கொஞ்ச நேரம் கழிச்சு வரச் சொல்லவா…..??”
 
கண்ணை மூடித்திறந்தவள் சைகையால் வரச் சொல்ல… ரொம்ப ஸ்டெயின் பண்ணிக்காத…..??”அவள் கையை பிடித்து அதில் முத்தமிட்டவன்  வெளியில் வந்து அவள் தங்கைகளை உள்ளே போகச் சொல்லி இவன்…கதிரை நோக்கி சென்றான்….
 
துரையை தனியாக அழைத்துச் சென்ற துரை…  நேத்து போலிஸ் வந்து விசாரிச்சாங்களாடா… மோதின வண்டிய பத்தி ஏதாச்சும் கேட்டாங்களா….??”
 
விசாரிச்சாங்க நான் அந்த காரை கவனிக்கலடா… கனி என்னை திடிருன்னு வெளிய தள்ளி விடவும் நம்ம கனிக்கிட்டதான் போனேனே தவிர அந்த காரை பார்க்கனும் தோனுல…. அப்படி ஒன்னும் நான் வேகமா வந்த மாதிரி எனக்கு நியாபகம் இல்ல… அந்த கார் என்ன முந்துறேன்னு வேகமா வந்துச்சோ…. ??”
 
இல்ல துரை… இது தெரியாம நடக்கலை வேணும்னே பிளான் பண்ணிதான் நடத்தியிருக்காங்க….  உங்க பங்காளிங்க ??”
 
துரை பல்லை கடித்தவன் என்னடா சொல்லுற…??”
 
ஆமாண்டா…. நேற்று அந்த பெரியவர் சொன்னதை சொன்னவன்…… அவர் சொன்னதை வைச்சு நம்ம பிரண்ட்ஸ விசாரிக்க சொல்லியிருந்தேன்…. நம்ம நல்ல நேரமா என்னமோ தெரியல அந்த டீ கடையிலேயே சிசிடி கேமரா இருந்துச்சு… அத செக் பண்ணி பார்த்ததுல அவங்கதான் கன்பார்ம் பண்ணியாச்சு….. நான் அதை பென்டிரைவ்ல ஏத்திக்கிட்டேன்….என்னோட போன்லயும் ஏத்திவச்சிருக்கேன்…. அவங்க ரொம்ப நேரமா உங்கள பாலோ பண்ணி வந்திருக்காங்க…. நீ எப்படி கவனிக்காம விட்ட…..??”
 
நேற்று தன் மனநிலையை நினைத்து பார்த்தவன்….. பெருமூச்சு விட்டு எல்லாம் என்னோட கவனக்குறைவுதான்….அதுனாலதான் இன்னைக்கு கனி இந்த அளவுக்கு அடிப்பட்டு கிடக்கா…. அவங்க என்னை கோவில்ல வச்சு பார்த்தப்பவே நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும்…இவங்கள சும்மா விடக்கூடாதுடா… இரு இன்னைக்கு ஒரு வழியாக்குறேன்….??”
 
அதற்குள் நர்ஸ் வந்து ஸார் இந்த மருந்தெல்லாம் கொஞ்சம் தேவைப்படுது … வாங்கி குடுத்திருங்க..??” மருந்து சீட்டை கொடுத்துவிட்டு செல்ல…
 
டேய் மாப்பிள்ளை நீ வெளியில நில்லு நான் எல்லாத்தையும் வாங்கி குடுத்துட்டு வந்துருறேன்….
 
தன் வேட்டியை மடித்து கட்டியவன்…ஒரு முடிவோடு…..மருந்துகளை வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் கனியை பார்க்க செல்ல அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்… அவளை பார்க்க பார்க்க அவர்கள் மேல் கொலைவெறி வந்திருந்தது… அவள் நெற்றியை வருடிக் கொடுக்க… மெதுவாக கண்முழித்து துரையை பார்த்தவள்….
 
கனியின் பார்வை அவனுக்கு அடிப்பட்டிருந்த கைகளில் இருக்க அதை பார்த்தவன்… அது ஒன்னுமில்லடி லேசான காயம்தான்… எனக்கு கொஞ்சம் வெளியில வேலையிருக்கு …. நான் போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்துருறேன்… எல்லாரும் இருக்காங்க…  நான் வந்துருறேன்..??”. அவன் எழப்போக….
 
அவன் கையை பிடித்தவள்…சீக்கிரமா வந்துருங்க…??” அவள் கண்களில் கலக்கத்தை காணவும்…. அவள் புறம் சாய்ந்தவன் அவள் இதழில் தன் இதழை புதைக்க……. வறண்டு போயிருந்த அந்த உதட்டிற்கு அவன் ஈர உதடு வேண்டும் போல இருக்க அவளும் அந்த முத்தத்தில் ஆழ்ந்தாள்…..  அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு மென்மையாக புதைத்தவன்…. அவன் கன்னத்தை தட்டி…. பார்த்துக்க….அத்தான் வந்துருறேன்…
 
இருவரும் துரையின் புல்லட்டில் கிளம்பியிருந்தனர்… ஒரு நண்பன் மூலமாக துரையின் வண்டியையும் கொண்டு வரச் சொல்லியிருந்தான்… காற்றாய் பறந்தவன் அவர்கள் வீட்டிற்கு செல்ல… அவர்கள் காரை வாசலில் காணவில்லை வீட்டிலும் ஆண்கள் இருப்பது போல தெரியாமல்… சற்று நேரம் கண்காணித்தவர்கள்… நேராக தாங்கள் அவர்களுக்கு குத்தகைக்கு விட்டிருந்த தோப்புகளுக்கு வண்டியை விட….. மாந்தோப்பில் அவர்கள் கார் நிற்பதை பார்த்துவிட்டான்…
 
மாப்பிள்ள நீ இங்கேயே நில்லு யாராச்சும் வந்தா எனக்கு ஒரு குரல் கொடு …. நான் அவங்கள இன்னைக்கு விடுறதா இல்லை…??” கதிரை தன் வண்டிக்கு அருகில் விட்டுவிட்டு வேகமாக தன் தோப்பிற்குள் நுழைய…. சற்று தள்ளி அந்த மோட்டார் ரூமின் அருகில் பேச்சுக்குரல் கேட்டது… வேகமாக சென்றவன் போகும்போது அங்கிருந்த மாமரத்தில் இருந்து ஒரு கிளையை உடைத்து பெரிய கம்பாக கொண்டு சென்றவன் போன வேகத்தில் மூவரையும் சாத்த ஆரம்பித்தான்…. அவர்களுக்கு எழும்பக்கூட அவகாசம் கொடுக்காமல் பச்சை கம்பால் விளாசுவிளாசென்று விளாசி விட்டான்…..
 
ஐயோ…. அம்மா என கதறினாலும் விடவில்லை… அந்த பங்காளி அடிதாங்க முடியாமல் மயங்கி விழ அவர் மகன்களின் ஒருவன் கையை பிடித்து மடக்கியதில் அவன் கையை ஒடிந்தது….மற்றவன் நெஞ்சில் ஓங்கி ஒரு உதைவிட்டவன் அவன்காலை ஒடிக்க…. யார் மேல யார் கைவைக்கிறது…பொறுக்கி நாய்களா… நாளைக்கு விடியட்டும்டா…. தீர்ப்பு என் பக்கம்தான்… நேத்து நீ வந்து மோதுனியே அது எல்லாமே இப்ப போலிஸ் கையில குடுத்திட்டுதான் வந்திருக்கோம்… உங்கமேல கேஸ போட்டு வெளிவர முடியாம பண்ணல நான் மீனாச்சி மகன் இல்லைடா…. அங்கு மயங்கி கிடந்த அந்த பங்காளியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டவன் அன்னைக்கே உன்னை கொன்னுருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காதுடா…… பாப்போம்டா இனி இந்த ஊர்ல யார் இருக்கான்னு நீயா இல்லை நானான்னு…..??”
 
மூவரையும் ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து வேகமாக வந்து வண்டியை எடுக்க….
 
கதிரிடம் போவமாடா….??”
இல்ல மாப்புள்ள இப்ப நீ என்ன பண்ணுற ஊருக்குள்ள நிறைய பேர் வர்ற டீக்கடையா பார்த்து நிப்பாட்டு… நாம டீ குடிச்சிட்டு போவோம்….??”
 
டேய் …. போற வழியில வாங்கித்தர்றேன்டா…??”
 
ம்பச்… நான் சொல்லுறத கொஞ்சம் கேளுடா….தன்னுடைய பிளானை சொல்லவும் துரைக்கும் அதுவே சரியென தோன்றியது… வண்டியை ஊருக்குள் இருந்த டீக்கடையில் விட்டவர்கள் அங்கு டீ குடிக்க அங்கு அந்த ஊர் பஞ்சாயத்துகாரர்கள் சில பேர் அமர்ந்திருக்கவும் ரொம்ப நல்லதாயிற்று என நினைத்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கும் தங்கள் செலவில் டீ …காப்பி …. வடை என வாங்கி கொடுத்தவர்கள்  தங்களிடம் இருந்த போனில் சேவ் செய்து வைத்திருந்த அந்த ஆக்ஸிடென்டை காட்டி அந்த பங்காளிமேல் புகார் சொல்லியவர்கள்…
 
நாங்க முதல்ல இவங்க மேல கேஸ போட்டதுக்கு நீங்க ஏற்கனவே இங்க வந்திருந்தா பஞ்சாயத்து பண்ணி உடனே தீர்ப்பு சொல்லியிருப்பேன்னு சொன்னிங்க… இப்ப எங்க பக்கம கேஸ் ஜெயிக்கிற மாதிரி இருக்கவும் இவங்க பண்ணுன வேலையை பாருங்க… இந்த முறை போலிஸ்ல இத குடுக்கிறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சொல்லனும் தோனுச்சு அதான் உங்ககிட்ட வந்தோம்….??”
 
அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு …. அந்த பங்காளிகள் மேல் கடும்கோபம் வந்தது… என்ன திமிரு பண்ணினது எல்லாம் அராஜகம்… இவங்கள இப்படியே விடக்கூடாது நீங்க கவலை படாதிங்க தம்பி … இந்த தடவ நாங்க அவங்கள விடுறதா இல்லை…….??” பஞ்சாயத்தை கூட்டப்போவதாக சொல்லி மற்ற பஞ்சாயத்துக்காரர்களையும் வரச் சொல்லி பேசிக்கொண்டிருக்கும் போது  ஒரு முக்கால்மணி நேரம் கழிந்திருக்கும்….யாரோ சிலபேர் பதட்டத்துடன் ஓடிவரவும் அவர்களை நிறுத்தி விபரம் கேட்க
 
அதுப்பு… உங்க பங்காளி இருக்காங்கள்ல… அதான்பு நீங்ககூட கேஸ் போட்டிருக்கிங்களே… அவுக போன காரு ஒரு மரத்துல மோதி கிடக்காம்… ரொம்ப அடியாம்… உசிரு பொழைக்கிறதே பெரிசாம்… காலையிலேயே குடிச்சிப்புட்டு வண்டிய ஓட்டியிருப்பானுகளோ…. என்னவோ தெரியலப்பு…??” ….
 
பார்த்திங்களா தம்பி கடவுள் இருக்காரு உங்களுக்கு துரோகம் பண்ண நினைச்சாங்க அதான் கடவுள் உடனே தண்டனை குடுத்திட்டான்… நீங்க கவலை படாம போங்க தம்பி…அவங்க பொழைச்சு வந்தாலும் இனி இந்த ஊருக்குள்ளாற இருக்க முடியாது…. நாங்களா அவங்காளான்னு ஒரு கை பார்த்துருவோம்..??”
 
அப்ப நாங்க கிளம்புறோம்ங்க… அவர்களிடம் விடைபெற்று வண்டியை கிளப்பியவர்கள் அந்த விபத்து நடந்த இடத்தை நோக்கிச் செல்ல…. அவர்களின் கார் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது… அவர்கள் மூவரும் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்க…. இனி இவர்கள் பிழைத்துவரவே நாளாகும்….
 
துரை வண்டியை ஓட்டிக்கொண்டே…. என்ன மாப்பிள்ள பண்ணுன அவங்க காரை……??”
 
அவன் தோளில் கைப்போட்டவன்...கண்டுப்பிடிச்சிட்டியாடா நான்தான் மாப்பிள்ள அவங்க காரோட பிரேக்க கழட்டி விட்டேன்….சாகட்டும்னு….அவனுக என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் கொல்ல பார்ப்பானுக நாம அவங்கள அடிச்சதோட விடனுமா… அவனுகள பார்த்தில… இனி பொழைச்சு வரவே நாளாகும் அப்படியே வந்தாலும் இந்த பஞ்சாயத்துகாரங்க விடமாட்டாங்க….. எப்படி நம்ம பிளான்…..??”
 
கதிரின் புத்திசாலித்தனத்தை மெச்சியவன்… பரவாயில்ல நல்ல பிளான்தான் போட்டிருக்க…..  சபாஷ்டா….??” தன் மாப்பிள்ளையின் கையை தட்டிக் கொடுத்தவன் சந்தோசமாக ஹாஸ்பிட்டலை நோக்கி வண்டியை விட்டுருந்தான்……
 
                                    இனி…………….?????

Advertisement