Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்

         அத்தியாயம்   –   24

 

கனியிடம் ஓடிய துரை அவளை பார்க்க… ஜீப்பின் முன்பகுதி மரத்தில் மோதியிருக்க முன் பக்கமே ரொம்ப சேதமாக இருந்தது… கனி உடம்பெல்லாம் ரத்தம்……. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை ….தலையா… முகமா…கையா… உடலா தலையிலிருந்து கால்வரை ரத்தம்…. அவன் ஆசையாசையாக வாங்கி கொடுத்த சுடிதார் கனியின் ரத்தத்தில் தோய்ந்திருக்க…. அவளுக்கு என்னாச்சு என்றே துரையின் மூளைக்கு எட்டவில்லை… அவளை மெதுவாக கஷ்டப்பட்டு அந்த ஜீப்பில் இருந்து தன் கையில் தூக்கியவன் கனி…கனி… என கத்தி கொண்டிருக்க… அவள் தலை தொய்ந்து விழுந்திருந்தது… அது நான்குவழி சாலை அந்த ரோட்டிலிருந்து பைபாஸ் ரோட்டிற்கு ஏற வேண்டியிருந்ததால் துரை மெதுவாகத்தான் வண்டியை ஓட்டியிருந்தான்… அங்கு டீ கடையில் அமர்ந்திருந்தவர்கள் ஆக்ஸிடென்டை பார்த்து ஓடி வந்து துரைக்கு உதவ ஆரம்பித்தார்கள்…

 

ஒருவர் கனிக்கு உயிர் இருக்கிறதா என பார்க்க…. அவள் மூச்சு லேசாக ஏறி இறங்குவதை பார்த்தவர்…. ஸார்…. இந்த பொண்ணு மூச்சுவிடுது யாராச்சும் 108 க்கு போன் பண்ணுங்க…??”. அவர் கத்த…

 

துரைக்கு எதுவுமே எட்டவில்லை…. ரத்தவெள்ளத்தில் தன் மனைவியை பார்த்தவனுக்கு…. அப்படியே மூளை செயலிழந்தது போல இருக்க….அவளை தன் நெஞ்சோடு அணைத்தவன்... கனி …… என்னை விட்டு போயிராதடி….. அத்தான விட்டு போயிராதடி..” என புலம்பி கொண்டிருந்தான்….தன் கையில் அவள் ரத்தம் வடிந்தபடி இருக்க துரையால் அதை கண் கொண்டு பார்க்கமுடியவில்லை… அருகிலேயே ஒரு பெரிய அரசு மருத்துவமனை இருந்ததால் ஆம்புலன்ஸ் வந்திருக்க… கனியை ஏற்றியவர்கள்… அவசரமாக ஆம்புலன்ஸை எடுத்திருந்தனர்

 

அவளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வெளியில் இருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தவனுக்கு …. தன் உயிரும் அவளுடன் கூடவே போவது போல இருந்தது…. கலங்கி போய் நின்றிருந்தவனை… அவனோடு ஆம்புலன்ஸில் கூடவே வந்திருந்த அந்த நல்ல மனிதர்...தம்பி கவலை படாதிங்க… உங்க மனைவிக்கு ஒன்னும் ஆகாது… வீட்டுக்கு தகவல் சொல்லிருங்க தம்பி யாராச்சும் உதவிக்கு வந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும்…

 

துரையை தோளை தட்டி ஆறுதல் படுத்த …. அப்படியே நின்றிருந்தவனை அங்கிருந்த சேரில் அமரவைத்து அவருடைய போனிலிருந்து துரையிடம் நம்பரை கேட்டு கதிருக்கு தகவல் சொல்ல…. அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் அலறி அடித்து வந்திருந்தனர்…. அதுவரை கனியை பற்றி எதுவும் துரைக்கு சொல்லபடாமல் இருந்ததால் துரையின் மனது படபடவென அடித்துக் கொண்டே இருக்க… ஒவ்வொரு நிமிடமும் துரைக்கு நரகமாக இருந்தது….. அந்த மனிதரும் துரைக்கு ஆறுதலாக அங்கேயே அமர்ந்திருக்க….  பெண்கள் அனைவரும் அழுது புலம்ப அந்த இடமே சற்று நேரத்தில் ஒரே சத்தமாக இருக்கவும் அங்கு வேலை செய்யும் நர்ஸ்கள் வந்து அதட்டிவிட்டு சத்தம் போடாமல் இருக்க சொன்னவர்கள்… இல்லையென்றால் வெளியே போகும்படி சொல்ல…. டாக்டர் வெளிவந்திருந்தார்…. துரை அவரிடம் ஓடி செல்ல…. குடும்பமே பின் தொடர்ந்திருந்தது….

 

தன் மகனை பார்த்த மீனாட்சி….. அவன் போட்டிருந்த வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் ரத்தநிறமாக மாறியிருக்க தலையெல்லாம் கலைந்து அவனுக்கும் கைகாலில் அடிப்பட்டு ஆங்காங்கே ரத்தம் உறைந்து போயிருந்தது… அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லாமல்  அந்த டாக்டர் பின்னால் சென்றிருந்தான்…

 

டாக்டர் என் மனைவிக்கு ஒன்னும் இல்லைதானே…??” இப்போது அவர்தான் அவனுக்கு கடவுளாக தெரிந்தார்… அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக காத்திருக்க…. துரையின் தோளை தட்டிக் கொடுத்தவர்….

கொஞ்சம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல தான் இருக்காங்க… தலையில ரொம்ப அடி பட்டிருக்கிறதால இன்னும் சுயநினைவு திரும்பல பல இடத்துல எலும்பு முறிஞ்சிருக்கு… அதெல்லாம்கூட இப்ப பிரச்சனை இல்லை… அவங்களுக்கு இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள சுய நினைவு திரும்பனும் இல்லைனா கோமா ஸ்டேஜ்க்கு போக அதிக வாய்ப்பிருக்கு….??” அவர் சொல்ல சொல்ல துரையின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக உடைவது போலிருந்தது…தனக்குள்ளேயே இறுகியவன் உடைந்து போய் அப்படியே அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டான்….

 

குடும்பமே அப்படியே இடிந்து போய் அமர்ந்திருக்க ஹரிணிக்கும் ரம்யாவுக்கும் அழுதழுது முகமே வீங்கியிருந்தது….கேட்டதிலிருந்து அழுதவர்களை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை …. அப்பத்தா வேறு மூலையில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க.. .கதிர் ஒரு அதட்டுபோட்டு அவர் வாயை அடைத்தவன்…. துரை …. மீனாட்சி இருவரையும் மட்டும் உள்ளே இருக்க சொல்லிவிட்டு மற்றவர்களை வெளியில் ரிசப்ஷனுக்கு அழைத்து வந்து அமரச் சொல்லியிருந்தான்….

 

மீனாட்சி தன் மகனின் கையை பிடிக்க…. அவரை பார்த்தவன்…. அம்மா…கனிக்கு ஒன்னும் ஆகாதுதானேம்மா..??”..அவன் கலங்கிய தோற்றத்தை பார்த்தவருக்கு மனது தாளவில்லை…  தன் மகனை கட்டி அணைத்தவர்….

 

மருமகளுக்கு ஒன்னும் ஆகாதுப்பா… நம்ம கருப்பர் வந்து  தலமாடு காப்பாருப்பா… நீ வேணா பாரு காலையில நம்ம கனி கண்ணு முழிச்சிருவா…

 

கண்ணு முழிக்கனும்மா….அவ இல்லாம என்னால இருக்க முடியாது… அவ இல்லைனா நானும் அவகூடவே போயிருவேன்..

 

தன் மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர்… என்னடா பேசுற… அவளுக்கு ஒன்னும் ஆகாது.. அத முதல்ல நீ நம்பனும்… நம்பிக்கையை மட்டும் விடாதடா… தன் மகனை கட்டிக் கொண்டு அவர் அழ… எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும்டா… தன் மகனின் கன்னத்தை தடவிவிட்டவர்… நீங்க ரெண்டுபேரும் இல்லைனா நானும் உஙகளோடவே வந்துருவேன்….

 

தன் கண்ணை துடைத்தவன்… இல்லம்மா என்னாலதான் இன்னைக்கு ஆக்ஸிடென்டே ஆச்சு… நான்தான் ஜீப்பை ஒழுங்கா ஓட்டல… ஏதோ நியாபகத்துல ஓட்டி இந்த ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு நான்தான் காரணம் என்னை அடிங்கம்மா… அவர் கையை பிடித்து  தன் கன்னத்தில் அறை வைத்தவன்… உங்க மருமகதான் தன்னோட உயிரக்கூட பொருட்படுத்தாம என் உயிர காப்பாத்தியிருக்காம்மா… எல்லாம் என்னாலதான்… நான் பண்ணின தாப்பாலத்தான் அவ இப்படி கிடக்கா….??“அம்மா… கனின்னா எனக்கு உயிரும்மா…. நீங்க அவ அடிபட்டப்ப பார்க்கலையே… என் கையெல்லாம் ரத்தம்…??” தன் கைகளை பார்த்தவன் தன் முகத்தை அதில் புதைத்துக்  கொள்ள… மகனை என்ன சொல்லி தேற்றுவது என்றே  தெரியவில்லை… அவன் முதுகை தடவிக் கொடுத்தவர்… மெதுவாக எழுந்து வெளியில் இருந்த அந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்று…. அப்பா பிள்ளையாரப்பா… என் வாழ்க்கையைத்தான் வாழவிடாம பறிச்ச அதே மாதிரி என் பையன் உயிரையே வைச்சிருக்க அவளையும் பிரிச்சிறாத… நானாவது என் மகனுக்காக வாழ்ந்திட்டேன்… ஆனா என் மகன் தாங்கமாட்டான் போல…அவன் எந்த ஈ எறும்புக்கும் துரோகம் செய்யாதவன்…. எங்கள கைவிட்டுறாதப்பா… என கதறியவர் பிள்ளையாரையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருக்க கண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தது…கதிர் துரைக்கு வேறு உடைகள் வாங்கி வந்து வற்புறுத்தி மாற்றச் சொல்லியிருந்தான்….

 

உடை மாற்றியவன் மீன்டும் ஐசியு வாசலில் நின்றிருந்தான் ….திடிரென கனியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக… அங்கிருந்த நர்ஸ்கள் ஓடிவந்து டாக்டரை அவசரமாக அழைத்துக் கொண்டு சென்றார்கள்… அங்கு உட்கார்ந்திருந்த துரை…வேகமாக சென்று கண்ணாடி வழியே பார்க்க… கனிக்கு பிட்ஸ் வந்து தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருந்தது… இன்னும் இரண்டு மூன்று டாக்டர்களும் வந்திருக்க…… ஏதேதோ சிகிச்சை நடந்தபடியே இருக்க ….துரை கண்ணாடி வழியே பார்த்தது பார்த்தபடியே இருந்தான்…. உடம்பெல்லாம் கட்டுபோட்டு தலையிலும் கட்டு போட்டு பார்க்க பார்க்க துரைக்கு முகமெல்லாம் இறுகி…கண் சிவந்து போய் தன் துக்கத்தை தனக்குள்ளே கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்… ஒரு அரைமணி நேரம் கழித்து வெளிவந்த டாக்டர்கள்….. இப்ப கொஞ்சம் பரவாயில்ல… பிட்ஸ் வர்றது நின்னுருச்சு…. ஆனா கான்சியஸ் இன்னும் வரல..காலையில வரைக்கு வெயிட் பண்ணுவோம்??” என சொல்லி சென்றிருந்தார்கள்…..

 

மற்றவர்கள் வெளியில் இருந்த மரத்தடியில் தங்கள் இரவு பொழுதை கழிக்க ஹரிணியும் ரம்யாவும் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை…தாய் தகப்பன் இல்லாத இவர்கள் கனியைதான் எல்லாமுமாக கருதினார்கள்…. ஒரு கட்டத்தில் அழுதுழுது ஹரிணி மயங்கி விழுந்திருக்க ரம்யாவும் அரை மயக்கத்தில்தான் இருந்தாள்… கதிர்தான் அவர்களை கவனித்துக் கொண்டான் இருவரையும் காயத்ரியிடம் ஒப்படைத்தவன் அங்கிருந்த கடைகளில் ஜூஸ் வாங்கி வந்து அவர்களை வற்புறுத்தி அருந்த சொல்லியிருந்தான்…. இடையிடையே தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்தை சொன்னவன் அங்கு சென்று விசாரிக்க சொல்லியிருந்தான்….

 

அதற்கு காரணம் துரையோடு ஹாஸ்பிட்டலில் இருந்தவர் துரை குடும்பம் வரவும் அங்கிருந்தவர்களில் கதிர் மட்டும் கொஞ்சம் திடமாக இருப்பது போல தோன்றவும் அவரிடம் சென்று தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.??”.தனியாக அழைக்க…..

 

சொல்லுங்கண்ணே…??”

 

தம்பி நான் நினைக்கிறது உண்மையா பொய்யான்னு தெரியல… ஆனா என் மனசுக்கு படுறத சொல்லுறேன்… இன்னைக்கு இவங்களுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் மாதிரி தெரியலை தம்பி…..??”

 

இதுவரை ஆக்ஸிடெண்ட் என்று மட்டும் நினைத்திருந்தவன்…. அவரை அதிர்ச்சியுடன் பார்க்க…. ஆமா தம்பி நான் ரோட்டுக்கு அந்த புறம் அவங்க ரோட்டுக்கு நேரா உட்கார்ந்துதான் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன் …. உங்க ஜீப் முன்னாடி வந்துச்சு அந்த கார் வேகமா வந்துச்சு… ஆனா முந்தி போகமா தன் பின்னாடி ஒரு கார் வரவும் அவங்களுக்கு வழிவிட்டதை நான் பார்த்தேன் தம்பி… நான் நினைச்சேன் ரெண்டு கார்லயும் இருக்கவங்க ஒரு குடும்பத்து ஆளுங்க அதான் முன்ன பின்ன வர்றாங்கன்னு நினைச்சேன்… ஆனா இந்த பைபாஸ்ல ஏறும்போது ஜீப் ஸ்லோவாத்தான் வந்துச்சு ஆனா பின்னாடி வந்த கார் திருப்பம்னு கூட பார்க்காம வேகமா வந்து உங்க ஜீப்பை குறிவைச்சு மோதின மாதிரி எனக்கு தோனுச்சுப்பா… மோதுன உடன கொஞ்சம்கூட ஸ்லோ பண்ணாம வண்டிய வேகமா ஓட்டிட்டு போனதை நான் கவனிச்சேன் தம்பி…. இது எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியலை…. நீங்க கொஞ்சம் விசாரிச்சுக்கங்க தம்பி இத சொல்லத்தான் நான் இவ்வளவு நேரமா காத்திருந்தேன்…. அந்த தம்பிக்கிட்ட எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியல…. அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகாம கடவுள் காப்பாத்துவாரு…கடவுள் காப்பாத்துறாரோ இல்லையோ இந்த பையனோட அன்புக்கு ஒரு சக்தி இருக்கு அது இந்த பொண்ண கண்டிப்பா காப்பாத்தும் தம்பி… நான் வந்து ரொம்ப நேரமாச்சு கிளம்பவா……??”

 

கதிருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…  அவர் கையை பிடித்தவன்… ரொம்ப நன்றிண்ணே… எனக்கு இத தவிர சொல்ல வார்த்தையே இல்லை??” அவரை கையெடுத்து கும்பிட…

 

ஐயோ விடுங்க தம்பி இதெல்லாம் மனுசருக்கு மனுசர் செய்யிற ஒரு உதவி இதப்போய் பெரிசா சொல்லிக்கிட்டு…. நான் நாளைக்கு வர்றேன்பா… ??”அந்த கிராமத்து வெள்ளந்தி மனிதர் கதிரிடம் விடை பெற்று செல்ல…. கதிர் தன் போனை எடுத்து நண்பர்களுக்கு பேச ஆரம்பித்தான்….

 

காலை ஆறு மணிக்கு ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்… அவளை பரிசோதனை செய்துவிட்டு…” இவங்களுக்கு இன்னும் நினைவு திரும்பல….. சீக்கிரமே நினைவு திரும்பனும் இல்லைனா பிரச்சனையா போயிரும்…… சீக்கிரமா கோமா ஸ்டேஜ்க்கு போக நிறைய சான்ஸ் இருக்கு….

 

இல்ல டாக்டர் அப்படி சொல்லாதிங்க… ப்ளிஸ் ஒரு தரம் நான் வந்து அவளை பார்க்கிறேன்… நான் அவகூட பேசினா கண்டிப்பா கண் முழிச்சு பார்ப்பா…. ப்ளிஸ் டாக்டர்…??”

 

ம்ம்ம் போய் பாருங்க… அவங்ககிட்ட பேசி அவங்க நினைவை திருப்பி கொண்டுவரமுடியுமான்னு பாருங்க….

முதலில் ஹரிணியும் ரம்யாவும் நுழைந்திருந்தார்கள் அவள் கையை பிடித்துக் கொண்டு கதற… மூடிய கண்ணில் எந்த அசைவுமே இல்லை… ஒவ்வொருவராக சென்று கனியிடம் பேசிப்பார்க்க எந்த முன்னேற்றமும் இல்லை… துரை அங்கேயே அமர்ந்து கனியைத்தான் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்….

 

நர்ஸ் இதென்ன சந்தை கடை மாதிரி ஒரே கூட்டமா இருக்கிங்க… எல்லாரும் வெளிய போங்க ஒருத்தர் ஒருத்தரா வந்து பாருங்க… அதட்டி வெளியே போகச் சொல்ல துரை அந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை…. அனைவரும் துரையை மட்டும் உள்ளே விட்டு வெளியில் சென்றிருக்க…… அவள் அருகில்  கட்டிலில் அமர்ந்தவன்… அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்து… மெதுவாக அவள் காதிற்கு அருகில் சென்று….

 

 கனிம்மா…. அத்தான் வந்திருக்கேன்டி…. கண்ண முழிச்சு பாரு….. என்னைவிட்டு போயிராத…  நான் நீ இல்லாம இருக்கமாட்டேன்டி… நான் சொன்னேன் தானே உன்னை பார்த்த நாள்ல லவ் பண்ணுறேன்னு நீதான் என்னோட உயிருன்னு…அப்புறம் எப்படி நீ என்னை பார்க்காம படுத்திருப்ப… ஒழுங்கா கண்ணு முழிச்சு என்னோட பேசு இல்லை எனக்கு கோபம் வந்துரும்டி… அத்தானோட கோபத்தை பத்தி உனக்கு தெரியும்ல… அடிச்சிருவேன்டி ??”அடிப்பது போல கையை கொண்டு சென்று…. கன்னத்தில் கைவைத்தவன் அவள் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்து அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்தபடி படுத்திருந்தான்…..

 

Advertisement