Advertisement

 

துரை இங்கு வந்த விசயத்தை பங்காளிக்கு தெரிவித்த அவன் மகன்… அப்பா இப்பவே அவனையும் அவனோட பொண்டாட்டியையும் ஏதாச்சும் பண்ணிரவா…. தம்பியையும் வரச் சொல்லுங்க… அவன போட்டு தள்ளிருறேன்…??”

 

டேய்………… அவசரப்படாத…. நாளைக்கு கேஸ் அவன் பக்கம் ஜெயிக்கும்போது இப்ப நாம அவன போட்டு தள்ளினா நம்ம மேல சந்தேகம் வர நிறைய வாய்ப்பிருக்கு… ஆனா இந்த வாய்ப்பையும் விட்டுறக்கூடாது… நீ அவன் எங்க போறான் என்ன பண்ணுறான்னு பாரு நாம வேற வழி யோசிப்போம்… நம்ம மேல  எந்த சந்தேகமும் வரக்கூடாது… சும்மாவே இந்த ஊரு பயலுக அவன் பக்கம்தான் இருக்கானுக…. நாம ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்கனும்… ஆனா பாருடா நாம அவனே தேடிப்போய் போட்டுத்தள்ளனும்னு நினைச்சோம்… அவன் நம்மள தேடி இங்கேயே வந்திருக்கான் பாரு…??” அவன் சத்தமிட்டு சிரிக்க…. அதை கேட்டு அவன் மகனும் சிரித்திருந்தான்….

 

துரையும் கனியும் வீட்டிற்கு வர மணி 7க்கு மேல் இருக்கவும் அந்த வேலைக்கார பெண் போன் செய்து இன்னும் பத்து நிமிடத்தில் சாப்பாடு கொண்டு வருவதாக சொல்ல கனி உடை மாற்றிவந்தவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள்…துரை டிவியை போட்டு நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தவன்…அவளை பார்க்கவும் அவளை இழுத்து தன் மடியில் அமரச் செய்ய…

 

ஏங்க கதவு திறந்து கிடக்கு அந்த அக்காவேற இப்ப வந்திருவாங்க… விடுங்க??” என்று எழுந்தவள் அங்கு மாட்டியிருந்த துரை அப்பாவின் போட்டோவை பார்க்க…. அவள் பின்புறம் வந்து அவளை அணைத்தவன் அவள் பின் கழுத்தில் தன் முகத்தை பதிக்க… கதவை பார்த்தவள் வெளியில் இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது என்பதால் அவன் கையோடு தன் கையை வைத்தவள்…. மாமா மாதிரியே நீங்க இருக்கிங்கள்ள..??”.

 

இதுல என்னடி இருக்கு அப்பா மாதிரிதானே பிள்ளையும் இருப்பான் நாளைக்கு என்ன மாதிரிதானே என் புள்ளையும் இருப்பான்… ஆனா கலர் மட்டும் உன்னை மாதிரி இருக்கட்டும் …. நான் கொஞ்சம் கருப்பா இருக்கேன்ல…??”

 

இல்ல இல்ல நீங்க ஒன்னும் கருப்பு இல்ல….. அவள் வெட்கத்துடன் சொல்ல

 

அப்ப இந்த கலரே ஓகேவா…??” அவளை இன்னும் நெருங்கியவன்… வெளியில் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு போக கதவை அடைத்துவிட்டு ...சாப்பிடுவோமா….??”

ஏங்க மணி 8 கூட ஆகலை அதுக்குள்ளயா…??”

 

ம்கூம் ….. நான் ரொம்ப பசியில இருக்கேன்… நீ இப்ப வேண்டாம்னு சொல்லிட்டு இடையில வேலை நிறுத்தம் செஞ்சா அத்தான் ரொம்ப பாவம்டி…..??” அவன் எந்த பசி என்பதை பார்வையாலே அவளுக்கு உணர்த்த… வெட்கத்துடன் ஓடியவள் சாப்பாட்டை அவனுக்கு பரிமாற… அவன் சாப்பிடாமல் அமர்ந்திருக்கவும்….

 ரொம்ப பசிக்கிதுன்னு சொன்னிங்க… அப்ப ஏன் பேசாம இருக்கிங்க…

 

மதியம் நான் ஊட்டிவிட்டேன் தானே …. இப்ப நீ எனக்கு ஊட்டு…?” அவளிடம் வம்பு பண்ண…. அவள் முதலில் மறுத்தாலும் அவன் கண்ணை பார்த்தவளுக்கு பின் மறுக்க முடியாமல் சாப்பாட்டை ஊட்டி விட அவன் சாப்பாட்டைவிட அவளைத்தான் ரசித்துக் கொண்டிருந்தான்.. இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிட்டு முடிக்கவும்….. பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து தூக்கியவன்…. மாடிக்கு செல்ல… ஏங்க அந்த இடத்தை கூட்டக்கூட இல்ல….??”

 

அவள் சொன்னதையே காதில் வாங்காதவன்… அவளை கட்டிலில் விட்டு அவள் மேல் படர ஏதோ பேசப்போனவளின் வாயை அடைத்திருந்தான்….. சற்று நேரத்தில் தன் திமிறலை விட்டவள் அவன் முத்ததில் ஆழந்து அவன் தலைக்குள் தன் கையை கொடுத்து அவனை இன்னும் இறுக்க… அவளின் ஒத்துழைப்பு தெரியவும்… அவளுள் இன்னும் ஆழப்புதைந்திருந்தான்…. கொஞ்சம் கொஞ்சமா அவளோடு அடுத்த கட்டத்திற்கு சென்றவன் கை அவள் வெற்றிடையை தடவ….தான் அவனோடு மனம்விட்டு பேச வேண்டும்… மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதெல்லாம் பின்னுக்கு போய் அவன் தன் கணவன் என்பது முன்னுக்கு வர…அவனோடு இன்னும் இன்னும் ஒன்றினாள்…. அவனுக்கு இதை நம்ப முடியவில்லை தன் கையில் கனி அதுவும் மனமாற தன்னோடு ஒன்றிப்போய்…. அவன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக மோகமாக மாறிக் கொண்டிருக்க… கனி என்று மோகத்தில் ஏதேதோ பிதற்ற…. அவளால் தாள முடியவில்லை…. செயலைவிட அவன் பேச்சு அவளுக்கு அதிக கூச்சத்தை கொடுக்க எட்டி அவன் வாயை அடைத்திருந்தாள்….அதன் பிறகு இருவரிடமும் பேச்சில்லாமல் அவர்களுக்கு பிடித்த செயல் மட்டுமே இருந்தது….சில நேரம் மென்மையும் வன்மையுமாக அவளோடுகூட… அவள் மேல் பித்தாகி போயிருந்தான்….

 

இரவு பொழுது முடிந்து அழகான காலை பொழுது மலர…. அந்த அறைக்குள் வந்த லேசான வெளிச்சத்தில் மணியை பார்த்தவள் அது ஒன்பதை காட்டவும்… அச்சோ இவ்வளவு நேரமாவா தூங்கிட்டோம்….தன் கணவனை பார்க்க… ஹப்பா எங்க இவங்க தூங்கவிட்டாங்க…. இரவெல்லாம் அவனோடு இருந்ததை நினைத்து பார்த்தவள்… அவன் எழும்போது அவன் முகத்தில் முழிக்க கூச்சமாக இருக்கவும் அவனிடம் இருந்து மெதுவாக விலகப்பார்க்க… ம்ம்ம் ஒரு இஞ்ச் அளவுக்குகூட நகர முடியவில்லை…. இன்னும் இறுக்கி அணைக்க… இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்தவள்…. அவன் முகத்தில் மெதுவாக ஊத….

 

நீ என்ன ஊதினாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது... அவளை இன்னும் அணைக்க….

 

ச்சூ… நீங்க தூங்கலையா??” அவனிடமிருந்து விலகப்பார்க்க… அவளை பிடித்து தன் மேல் சேர்த்து அணைத்தவன்…

 எங்க ஓடப்பார்க்கிற…. இரவு விட்ட வேலையை தொடர போக….

 

அவன் கையை பிடித்தவள்…..

ஏங்க எனக்கு பசிக்கிது…ப்ளிஸ்… சாப்பாடும் இங்க ஒன்னும் இல்ல அந்த அக்காவுக்குதான் போன் பண்ணி சொல்லனும் ப்ளிஸ் விடுங்க…ப்ளிஸ்…ப்ளிஸ்…??கெஞ்ச

 

அடிப்பாவி நல்ல ரொமான்ஸ் மூட்ல இருக்கும்போது இப்படி பசிக்கிதுன்னு எண்ட்கார்ட் போடுறியே இது உனக்கே நியாயமா இருக்கா….??”

 

போங்க …போங்க… நைட் நான் தூங்கியிருந்தா இவ்வளவு சீக்கிரம் பசிக்காது…. நீங்தான் தூங்கவே விடலையே… அதான் எனக்கு பசிக்கிது…ப்ளிஸ்ங்க??” அவனிடமிருந்து விலகியவள் தன் கலைந்திருந்த்த ஆடையை சரிசெய்தபடி மாடியில் இருந்து கீழிறங்க…. துரை ஒரு சந்தோச பெருமூச்சுடன் இரவு தன் மனைவி கொடுத்த ஒத்துழைப்பை நினைத்து பார்த்தவன்…. கைகளை தலைக்கு கொடுத்து கனியின் நினைவோடு கண்மூடியிருந்தான்….

 

அதற்குள் கனி குளித்து துரை இரவு கொடுத்த சுடிதாரை அணிந்து வந்தவள் தன் தலையை காயவைத்துக் கொண்டிருக்க…. கண்விழித்து அவளை பார்த்தவன் விசில் அடித்தபடி…ஹாய் பொண்டாட்டி…??”

 

ஏங்க ஒரு பேங்க்ல மேனேஜரா இருந்துக்கிட்டு சின்ன பசங்க மாதிரி விசில் அடிக்கிறிங்க… பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க…??”

 

என்ன நினைப்பாங்க…??” யோசித்தபடி ம்ம்ம் பொண்டாட்டிய சைட் அடிக்கிறேன்னு சொல்லுவாங்க…. ஐ லவ்யுடி பொண்டாட்டி….

 

அவனை பார்த்தவள்….லவ்யுவா….??”

 

அவளை இழுத்து தன் மேல் சாய்த்தவன்… ஆமாடி மூனுவருசமா லவ் பண்ணுறேன்….??”

 

அதிர்ச்சியானவள்…. யாரை லவ் பண்ணுறிங்க…??”

அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்… ம்ம்ம் ஒரு பொண்ணு அவங்க அம்மா இறந்திட்டாங்கன்னு எங்க அம்மாவை கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதா பாரு…. அப்ப இருந்து நான் அவ மேல பைத்தியமா திரியுறேன்….??”

கனியால் நம்ப முடியவில்லை… நம்மள மூனு வருசமா லவ் பண்ணுறாங்களா…. பொய் சொல்லாதிங்க… அப்பல்லாம் நீங்க என்னை திட்ட மட்டும்தான் செய்விங்க…??”

 

திட்டினேனா எப்ப திட்டினேன்…??”

 

கொலுச தமிழக்காகிட்ட குடுத்தப்போ… பேச ஆரம்பித்தவள்… அதுல நம்ம மேலதான தப்பு அதான் திட்டினாங்களோ… இல்ல நீங்க அரவிந்த் இங்க வந்தப்போவும் திட்டத்தானே செஞ்சிங்க..??”.

 

அவளை பேசவிடாமல் செய்தவன்…. போடி… நான் லவ் பண்ணுற பொண்ணு வேற ஆளோட நல்லா பேசினா எனக்கும் கோபம் வரும்தானே….

 

ம்ம்ம்ம் ……. குரல் உள்ளேயே செல்ல…

 

ஆனா அப்பத்தா நீங்க தமிழக்காவ விரும்புறதா சொன்னாங்களே..??”. குரலில்… ஏக்கம் வழிய….

கடகடவென சிரித்தவன்….ஆமா… நீ அந்த லெட்டர்ல எழுதியிருந்த தானே…. அப்பத்தா பேசினத கேட்டேன்னு… எனக்கு இப்ப ஹரிணி…ரம்யா… எப்படியோ அப்படித்தாண்டி தமிழும்… ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்து ஒன்னா வளர்ந்ததாலே எந்த ஈர்ப்பும் வந்ததில்ல… எனக்கு உன்னை தவிர வேற எந்த பொண்ணு மேலயும் ஈர்ப்பு வந்ததில்ல…??” துரை தன்னுடைய லவ்வை… பற்றி சொல்ல… கனிக்கு துரையை பற்றி இப்போதுதான் புரிய ஆரம்பித்தது…

 

இருவரும் அன்று முழுவதும் காதல்கிளிகளை போல அங்கு கூடி களித்திருக்க…கனி தன் கணவன் தன்னை மட்டும் விரும்பினான் என்பதில் ஒரு மகாராணியை போல உணர்ந்தவள்… அவனுக்கு தன் காதலையும் திருப்பி கொடுக்க ஆரம்பித்தாள்… வீட்டை விட்டு கிளம்பவே மனதில்லை இருவருக்கும்… இனி வாராவாரம் இங்க வந்திருவோமா??”

 

ம்ம்ம்…நீங்க கூட்டிட்டு வாங்க… இருவரும் மாலை ஒரு ஆறு மணி போல வீட்டை விட்டு கிளம்ப….. அவர்களின் ஜீப்பை ஒரு காரும்  பின் தொடர  ஆரம்பித்தது…

 

துரை தன் காதலை சொன்னதில்  மனம் விட்டு பேசி அவளோடு கூடி களித்ததில் மனம் சந்தோசத்தில் திளைத்திருக்க… கனியும் தன் கணவனின் பேச்சை…. காதலைதான் நினைத்துக் கொண்டிருந்தாள்…. அவன் கைமேல் தன் கையை வைத்து அவன் தோளில் சாய்ந்த படி வர… ஒரு அரைமணி நேரம் செல்லவும் கனிக்கு தன்பின்னால் வரும் கார் ரொம்ப நேரமாக வருகிறதோ என தோன்றி துரை கவனிக்கிறானா என அவன் முகத்தை  பார்க்க… பச்சக் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அதை மறக்க செய்திருந்தான்……

 

இன்னும் சற்று நேரம் செல்ல மீண்டும் தன் பார்வையை ஏதேச்சையாக திருப்ப மீண்டும் கார் அவர்களை வேகமாக நெருங்கி வந்தது போல தெரிந்தது… முந்த போகிறதோ என நினைக்கும் போது தனக்கு பின்னால் வந்த காருக்கு இடம் கொடுத்து மீண்டும் தங்கள் காரையே தொடர….

 

துரை தன் கவனத்தை இங்கு வைத்திருக்கவில்லை…. கைதான் காரை ஓட்டியதே தவிர கவனம் நேற்று இரவிலே இருக்க தன் பின்னால் தொடர்ந்த காரை கவனிக்கவே இல்லை…

 

கனிக்கு ஏதோ நடக்க போகுதோ என தோன்ற ஒரு திருப்பத்தில் அந்த கார் வேகமாக இவர்களை இடிப்பது போல வரவும் அத்தான்……??” என கத்தியவள்… துரையை ஒரே தள்ளாக தன் இருகைகளை வைத்து வெளியில் தள்ளவும் அந்த கார் மோதவும் சரியாக இருந்தது…..

 

ஜீப்பாக இருந்ததால் கதவு இல்லாமல் துரை வெளியில் விழுந்திருக்க ஒட்டுனர் இல்லாமல் தடுமாறிய ஜீப்… பின்னால் வந்த கார் மோதவும் அப்படியே போய் அங்கிருந்த புளிய மரத்தில் மோதியிருந்தது…. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் சென்றிருக்க….. கீழே விழுந்திருந்த துரை லேசான காயங்களுடன் எழுந்தவன்…….தங்கள் ஜீப்பை நோக்கி ஓடி வர…. கனி ரத்தவெள்ளத்தில் அடிப்பட்டு முன்புறம் சாய்ந்தபடி கிடந்தாள்… கனி…………….?????” என துரை கத்திய கத்தலில் அந்த இடமே அதிர்ந்தது…..

 

                                    இனி……………….??????

Advertisement