Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்

   அத்தியாயம்  –  23

 

துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு  முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு போன் வரவும் எடுத்து பேசி கொண்டிருக்க கனி தன் சுற்றுப்புறத்தில் பார்வையை செலுத்தினாள் போனை பேசி முடித்தவன் கனியின் தோளில் கைப்போட்டு உள்ளே அழைத்துச் செல்ல…..

 

அவனை பார்த்தவள் முக்கியமான போனாங்க… ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்திங்க….??”

 

ம்ம்…. நம்ம வக்கில் பேசினார்… திங்கட்கிழமை நம்ம கேஸ் கோர்ட்டுக்கு வருதாம் … அனேகமா அன்னைக்கே நமக்கு சாதகமா தீர்ப்புவர வாய்ப்பு இருக்குன்னு சொல்றாரு…

 

தன் தோளில் இருந்த அவன் கைமேல் தன் கையை வைத்தவள் ரொம்ப சந்தோசமா இருக்குங்க….

 

இத்தனை வருடங்களில் இருவரும் தனியாக வருவது இதுதான் முதல்முறை… துரைக்கு மனதில் உற்சாகம் பிறந்தது….. தனக்கு அருகில் சேரை இழுத்து போட்டு அவளை அமரச் செய்து அவளுக்கு விருப்பமானதை கேட்டு ஆர்டர் செய்தவன்… முதல் வாயை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட இந்த துரை கனிக்கு புதிது… எப்போதும் கோபமான முகத்தையே பார்த்திருந்தவளுக்கு இந்த அன்பு…. காதல்…. புரிதல்…. என அத்தனையும் ஒன்று சேர்த்து ஒரு கணவனை காண காண நாம இவங்கள முதல்ல இருந்தே ஒழுங்கா புரிஞ்சுக்கலையோ…. இவங்க நல்ல குணத்தை பார்க்காம நாம இவங்க கோப முகத்தை வைச்சே தப்பா நினைச்சிருக்கோம்… தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கனியை பார்த்தவன்…

 என்னடி வேற என்ன வேணும்…??”

 

போதும்ங்க… இதுவே வயிறு புல்லா இருக்கு…  இத்தனை வருடங்களில் தகப்பன் அன்பை அறியாதவள் இன்று கணவன் மூலம் அந்த அன்பை பெற்றாள்… தன்னை அறியாமல் அவன் பக்கத்தில் நகர்ந்தவள் அவன் கையோடு தன் கையை சேர்க்க… அவன் மறுபடியும் சாப்பாட்டை ஊட்ட அவளுக்கு கண் கலங்கியது….

 

ஏய் என்னாச்சு… ரொம்ப காரமா இருக்கா…??”.

தன் கண்ணீரை அவன் கைசட்டையில் துடைத்தவள்… எங்க அப்பா இருந்திருந்தா இப்படித்தானே ஊட்டி விட்டுருப்பாங்க…. எனக்கு நாலு வயசு இருக்கும் போது அப்பா இறந்தாங்க… என்னை தூக்கியாச்சும் வைச்சு கொஞ்சியிருப்பாங்கள்ல… எனக்கு அது தெரியல … ஆனா தங்கச்சிக ரெண்டும் பிறக்கிறதுக்கு முன்னாடியே அவங்க இறந்திட்டாங்க….

 

அவள் தோளை தன் மேல் சாய்த்துக் கொண்டவன்…. ஏய் லூசு அழாத… எனக்கும்தான் எங்க அப்பாவோட நியாபகமே இல்லை.. அம்மாதான் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க…நான் இருக்கேன்டி உனக்கும் உன் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும்….. எல்லாமா நான் இருப்பேன்…. நீங்க யாருன்னு தெரியும் முன்னாடியே உங்கள பார்த்துக்கிட்டவன் இப்ப நீ என் மாமா மக…..உன்னை எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும்… அழாத….??” அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்… இருவரும் சாப்பிட்டது தனியான பேமிலி ரூம் என்பதால் யாரும் பார்ப்பார்கள் என்ற எண்ணம் இல்லாமல் இருவரும் நிம்மதியாக சாப்பிட்டவர்கள் மீண்டும் கிளம்பினார்கள்…

 

துரை நேரடியாக அந்த வேலப்பன் வீட்டுக்கு ஜீப்பை செலுத்தியவன் அவர்களிடம் சென்று பணத்தை கொடுக்க….  அவர்கள் கேட்ட பணத்தைவிட அதிகமாகவே மீனாட்சி கொடுக்க சொல்லியிருந்தார்….

 

வேலப்பன் துரையை பார்த்து கையெடுத்து கும்பிட்டவர்…..தம்பி ரொம்ப நன்றிப்பா…. நான் கேட்டதவிட கூடவே பணம் கொடுத்திருக்கிங்க… நான் இந்த உதவியை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன்… பணம் கிடைக்கலைன்னுதான் ஆப்ரேசன தள்ளி வைச்சிருந்தோம்… இனி நாளைக்கே ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போயிருவேன்பா… நீங்க ரெண்டு பேரும் புள்ளகுட்டிகளோட ரொம்ப சந்தோசமா இருக்கனும்…??”.

 

பரவாயில்லண்ணே…நீங்க முதல்ல ஹாஸ்பிட்டல்ல அக்காவ  சேர்க்கிற வழிய பாருங்க… பணம் பத்தலைனா கேளுங்க குடுத்து விடுறேன்….நாங்க கிளம்புறோம்ணா….

 

இருவரும் விடைபெற்று தங்கள் வீட்டிற்கு வர… மீனாட்சி போன் செய்திருந்தார்… பணம் கொடுத்த விபரத்தை கேட்டவர்… கனியிடம்..

 

இவ்வளவுதூரம் போயிட்டிங்கள்ளத்தா ஒரு எட்டு நம்ம குலதெய்வத்தை போய் கும்பிட்டுட்டு வந்திருங்க…. ஒரு மாலை வாங்கி போட்டு அர்ச்சனை மட்டும் பண்ணிருங்க…. உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தா நிறைய நேர்த்திக்கடன் வைச்சிருக்கேன்… அவர்பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க….                     

 

அவள் முகத்தையே பார்த்திருந்தவன் திடிரென அவள் முகத்தில் வெட்கத்தை காணவும் தன் புருவத்தை உயர்த்தி என்ன என கேட்கவும்…. ஒன்றும் இல்லை என தலையை ஆட்டியவள் கவனத்தை இப்போது  தன் அத்தையின் பேச்சில் வைத்தாள்…

 

போன் பேசி முடிக்கவும் துரையிடம் விபரத்தை சொல்ல மணியை பார்த்தவன் மணி 4 க்கு மேலாக போகுது நாம வீட்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு  கோவிலுக்கு வருவோம்….??”

 

கதவை திறந்தவன்….. வீட்டிற்குள் நுழைய அன்று போல் இன்றும் வீட்டை ரசித்தவள் துரையின் கையை பிடித்து இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க….??”

 

கதவை சாத்தியவன் அவள் இடுப்பில் கைகொடுத்து தூக்கி எனக்கு இந்த வீட்டோட சேர்த்து என் பொண்டாட்டியையும் பிடிச்சிருக்கு….

 

அவன் கழுத்தில் கைகளை கோர்த்தவள்…. எனக்கும்தான்….??”

 

அவள் காதிற்குள் உனக்கும் என்னடி??”

அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் எனக்கும்தான் அத்தான் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு….??”

 

அவள் அத்தான் என்று சொன்னதில் அத்தனை பிரியம் அவள் மேல் வந்திருந்தது… அவளை அப்படியே சோபாவில் அமர்த்தியவன் அவள் மடியில் தலைவைத்து படுத்து அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்திருந்தான்….  அவள் இதழோடு தன் இதழை பதிக்க இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை…. கணவன் மனைவியாக வேறோர் உலகத்தில் அடியெடுத்து வைக்க… இதுவரை வேறோர் பெண்ணை மனதால்கூட நினைக்காதவன் தன் மனைவியை காதலியை மட்டும் மனதில் சிறைவைத்திருந்தவன் இப்போது அவளையே தன் கைகளால் இதழால் சிறைசெய்ய ஆரம்பித்தான்… அவனை கோபக்காரன் முரட்டுத்தனம் மிகுந்தவன் என்றெண்ணியிருந்தவளுக்கு அவனின் மென்மையான அணுகுமுறை அவளையும் அவனோடு சேர்த்து ஒரு சுழலுக்குள் மாட்ட வைத்தது போல இருந்தது… ஆனால் இந்த சுழலுக்குள் அவள் விரும்பியே மாட்டிக் கொள்ள விரும்பினாள்… அவன் தன் கையை அவள் வெற்றிடையில் வைத்து அதன் மென்மையை சோதிக்க… அவளுக்கு வந்த கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்….

 

ஏய் என்னாச்சுடி…??”

 

ம்ம்ம் ரொம்ப கூச்சமாயிருக்குங்க...

கூச்சமாயிருக்கா நான் என்ன உன்னை கிச்சு கிச்சு மூட்டினேன்னா…??” அவள் வயிற்றில் தன் கையால் கிச்சுகிச்சு மூட்ட…. அவள் கலகலவென சிரித்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் கூச்சம் தாங்கமுடியாமல் அந்த முற்றத்தை சுற்றி ஓட ஆரம்பிக்க….

 

அவளை மெதுவாக விரட்ட ஆரம்பித்தான்… அந்த முற்றத்தை சுற்றி சுற்றி ஓட ஒரளவுக்கு மேல் ஓடமுடியாமல் மூச்சுவாங்க நின்றிருந்தாள்… ஓரெட்டில் அவளை பிடித்தவன்…. ஓய்… செல்லக்குட்டி இந்த அத்தானவிட்டு ஓடுறதுலயே குறியா இருக்ககூடாது…சரியா…??” அவள் மூச்சுவாங்குவதை ரசித்து பார்க்க துரையின் பார்வை போன இடத்தை பார்த்தவள் அவன் கண்ணை தன் கையால் மூடி முகத்தை அவன் மார்பில் புதைத்திருந்தாள்… அவள் முகத்தை பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் அவளின் இதழை சுவைக்க இந்த முறை சிறிது வன்மையாக இதழ் பதித்திருந்தான்….

 

அவள் மூச்சுக்காற்றுக்கு சிரமப்படுவதை கண்டவன் அவள் மேலிருந்து தன் முகத்தை எடுக்க அவள் முகமே வெட்கத்தால் அப்படி சிவந்து போயிருந்தது… அவள் கன்னத்தை வருட… அவன் கையாலேயே அவள் முகத்தை மறைத்துக் கொண்டாள்.. அவன் அவள் காதிற்குள் ரகசியமாக ஏதோ பேச…..

அச்சோ…. போங்க அத்தை கோவிலுக்கு போயிட்டு வரச் சொல்லியிருக்காங்க….??”

 

நாளைக்குகூட போயிக்கலாம்டி… இப்ப அத்தான் சொல்லுறத கேளு… அவளோடு மாடியில் தன் அறைக்கு செல்ல காலை வைக்க யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்கவும்..

 அச்சோ…. நினைச்சேன்டி என்னடா நாம பொண்டாட்டியோட கொஞ்சநேரம் சந்தோசமா இருக்கோம் யாரும் இன்னும் வரலையேன்னு… இதோ வந்திட்டாங்கள்ல… இரு போய் யாருன்னு பார்ப்போம்……??”

 

 யாரோ பெண்ணின் குரல் கேட்கவும் நீங்க ரூமுக்கு போங்க அத்தான் நான் போய் யாருன்னு பார்க்கிறேன்….??”

 

அஞ்சு நிமிசம்தான் டயம் அதுக்குள்ள அத்தான பார்க்க வந்துருற…??” அவளை எலும்பு நொறுங்கும்படி இறுக்கி அணைத்துவிட…

 

வெளியில் எப்போதும் இந்த வீட்டை சுத்தம் செய்யும் வேலைக்கார பெண் கையில் பாலோடு வந்திருக்க… இப்பதாம்மா உங்க மாமியார் போன் பண்ணினாங்க அதான் அடிச்சி பிடிச்சு ஓடி வர்றேன்… ஒரு நிமிசத்துல வீட்டைகூட்டி துடைச்சு விட்டுருறேன்…. நீங்க காப்பி போட்டு குடிங்க… ராத்திரிக்கு பலகாரம் கொண்டுவந்து குடுத்துருறேன்…. நாளைக்கு….??”

 

நைட்டுக்கு மட்டும் குடுங்கக்கா நாளைக்கு வேணும்னா உங்க போன் நம்பரை குடுத்திட்டு போங்க நான் போன்ல சொல்லிருறேன்….??”

 

ம்ம் சரித்தா சரித்தா… வேகமாக வீட்டை கூட்டித்துடைத்து விட கனி காப்பியை போட்டு வைத்துவிட்டு அவர் வேலை முடிக்கும் வரை சோபாவில் அமர்ந்திருந்தாள்… அவர் இருக்கும் போது எப்படி மாடிக்கு போவது என நினைத்தவள் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க அவர் வேலை முடிக்கவும்… அவருக்கு காப்பியை கொடுத்தாள்…….

 

அவர் ராத்திரி ஒரு 8 மணிக்கு சாப்பாட்டோட வர்றேன்தா…??” என்றபடி விடைபெற… கனி காப்பியோடு மாடியேறினாள்…. அங்கு இவளுக்காக காத்திருந்து காத்திருந்து துரை தூங்கியிருக்க நேரத்தை பார்த்தவள் மணி 6 ஆகவும் கோவிலுக்கு கிளம்பலாம் என நினைத்து குளிக்க சென்றிருந்தாள்… குளித்து வந்தவள் தன் தலையை காயவைத்தபடி துரையை எழுப்ப….

 இருடி இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் தூங்கிக்கிறேன்….?”

 

அத்தான் வாங்க கோவிலுக்கு போயிட்டு வந்துருவோம்….??” அவனை போட்டு உலுக்க…

 

அவள் தலையில் இருந்த ஈரத்தை உணர்ந்தவனுக்கு தூக்கம் கலைய… அவளை இழுத்து கட்டிலில் போட்டவன்….. எப்ப வரச் சொன்னா எப்ப வந்திருக்க…??” அவளை முத்தமிட போக…

 

அவன் வாயை தன் கையால் அடைத்தவள்...அதெல்லாம் செல்லாது செல்லாது…. நான் முதல்லயே வந்திட்டேன்….. நீங்கதான் தூங்கிட்டிங்க… அதுனால நாம இப்ப கோவிலுக்கு போறோம் நீங்க கிளம்புங்க…. அவனை அதட்ட…

 

பார்றா என் பொண்டாட்டி ஒரே நாள்ல என்னை அதட்டுற அளவுக்கு வந்திட்டா… ??”

 

அச்சோ இல்லங்க நான் அதட்டல…

அதட்டனும்டி நீ என்னோட பொண்டாட்டி தானே அப்ப எல்லா உரிமையும் உனக்கு மட்டும்தான் இருக்கு…. அவள் கொடுத்த காப்பியை குடித்தவன் அவள் கன்னத்தை தட்டிவிட்டு விசில் அடித்தபடி துண்டோடு குளிக்க போக… கனி கோவிலுக்கு கிளம்ப ஆரம்பித்தாள்….

 

துரை வேட்டி சட்டை அணிந்துவர… கனி காட்டன் சேலையில் வந்தாள் தலையை தளர பின்னியிருக்க மிதமான ஒப்பனையில் வந்தவளை பார்த்தவன்… இந்த சேலையா கட்டிட்டு வர்ற… நேத்து உனக்கு சுடிதார் வாங்கிட்டு வந்தேன் அதை போட்டுக்கிறியா ?” தன் பேக்கிலிருந்து அதை எடுத்து கொடுக்க… அந்த கலரில் மயங்கியவள்…

 

கோவிலுக்கு சேலையிலயே வர்றேன்… இத நாளைக்கு போட்டுக்கவா,,,,

ம்ம்ம் உன் ப்ரியம் அப்ப கிளம்புவோமா??”

இருவரும் கோவிலுக்கு  வர… கையில் பெரிய வீச்சருவாளோடு.. .தலையில் தலைப்பாகை கட்டி…காலில் சலங்கையோடு பெரிய ஊருவமாக நின்ற கருப்பரை பார்த்த துரை இனியாவது தன் வாழ்க்கை சந்தோசமாக இருக்க…குல தெய்வமான நீதான் என்றும் துணையாக இருக்க வேண்டும் என வேண்டுதல் வைக்க… அவர் அவனை பார்த்து சிரிப்பது போல இருந்தது…. கனியும் மனதார தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டாள்….

 

கோவிலை விட்டு வெளியே வர…. அந்த பங்காளியின் மகன் நின்றிருக்க…துரையை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்… அவனை பார்க்கவும் தன் கணவனின் கையை பிடித்தவள்…

 

ஏங்க எதுக்கு அவரு உங்களை இப்படி முறைக்கிறாரு??”

 

விடுடி… இன்னேரம் இவங்க வக்கிலும் சொல்லியிருப்பாரு அவங்க கேஸோட நிலையை பத்தி அதான் …..??”

 

ஏங்க எனக்கு என்னமோ பயமாயிருக்கு நாம இப்பவே ஊருக்கு கிளம்புவமா…. கோவிலின் மணி அடிக்க…. பாருங்க அத்தான் மணிகூட அடிக்கிது நாம ஊருக்கு கிளம்பிருவோம் இன்னொரு நாளைக்கு எல்லாருமா வரும்போது தங்கிக்கலாம்…??”

 

போடி லூசு… நான் இருக்கும் போது உனக்கு என்ன பயம் நான் ஆம்பளைடி தன் மீசையை முறுக்கிவிட… எவன் என்ன பண்ண முடியும் … இதுதான் நம்ம ஊரு அது அம்மா பிறந்த ஊரு மட்டும்தான் நாளைக்கே கேஸ் ஜெயிச்சா நாம இங்கயே வர்ற மாதிரி இருக்கும்… இவங்களுக்கு பயந்து ஊர காலி பண்ண முடியுமா….நீ பயத்தை விடு அத்தான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை….??”அவளை தோளோடு அணைத்தவன் தன் ஜீப்பிற்கு கூட்டிவந்திருந்தான்…

Advertisement