Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
  அத்தியாயம்  –  22
 
கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்… கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம் என முடிவு செய்து பாய்விரித்து படுக்க… துரை கனியையே பார்த்தபடி தன் அறைக்குள் நுழைந்திருந்தான்… அந்த பார்வையில் தனக்கு அழைப்பு இருக்க… அங்கு செல்ல ஆசையிருந்தாலும் மற்றவர்கள் வெளியே இருக்கும் போது… இவள் மட்டும் உள்ளே செல்ல ஒரு மாதிரியாக இருந்தது…..தன் தங்கைகளோடு அங்கேயே அமர்ந்திருந்தாள்….  மாலை 4 மணி போல வீட்டுக்கு கிளம்பியவர்கள் தங்கள் வீட்டிற்கு வர…….
 
ஹரிணியும் ரம்யாவும் மறுநாள் பள்ளிக்கூடம் திறப்பதால் சில பொருட்கள் வாங்க துரையை கடைக்கு அழைத்து செல்ல சொல்லிக் கொண்டிருந்தார்கள்… தமிழும் இன்னும் பத்து நாளில் ஊருக்கு கிளம்புவதால் இங்கு சில பொருட்களை வாங்க தானும் வருவதாக கிளம்ப துணைக்கு கதிரும்  கிளம்பியிருந்தான்… கனியை அழைக்க காலையில் விட்டு சென்ற வேலைகள் பாதி இருக்க அவள் வீட்டில் இருப்பதாக சொல்லவும் காயத்ரியும் வீட்டில் கனியோடு வேலை பார்ப்பதாக சொல்லி வர மறுக்க…. கதிருக்குதான் சற்று ஏமாற்றமாக இருந்தது… துரையிடம் சொல்லி காயத்ரியையும் அழைத்து வரச் சொல்லி கெஞ்ச…. காண்டாக பார்த்தாலும் காயத்ரியையும் அழைத்து வந்திருந்தான்…
 
மாலை 5 மணிக்கு கிளம்பி சென்றவர்கள்  இரவு 8 மணிக்கு திரும்பி வர அதற்குள் கனியும் எல்லா வீட்டு வேலையும் முடித்தவள் இரவு டிபனையும் செய்து வைத்திருந்தாள்… இவர்கள் வரும் வரை வாசலில் அப்பத்தாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள்… இவர்களை பார்க்கவும் சிரித்தபடி எழுந்து வர துரை தன் மனைவியை சைட் அடித்தபடியே இறங்கி வந்தான்…. பூ வாங்கி வந்தவன் கனியிடம் கொடுக்க சாமிக்கு வைத்துவிட்டு மீதியை தன் தலையில் வைத்துக் கொண்டாள்… மறுநாள் பள்ளி இருப்பதால் தங்கைகள் இருவரும் சாப்பிடவும் படுக்க செல்ல அத்தைக்கு மாத்திரைகளை பார்த்து எடுத்து கொடுத்தவள் அவர்களோடு அமர்ந்து சற்று நேரம் டிவி பார்த்துவிட்டு படுக்க செல்ல துரை கட்டிலில் அமர்ந்து போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவன் கனி வருகிறாளா என நிமிடத்திற்கு ஒரு முறை வாசலை பார்த்தபடி இருந்தான்…
 
இன்று தோப்புவீட்டில்  தான் அவளோடு பேசாமல் இருந்ததால் கிணற்றில் குதித்தாக சொல்லவும் அந்த நிமிடத்தில் இருந்து தன் மனைவியோடு தனிமையான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தவன் அவள் மதியம் சாப்பிடவும் தன்  அறைக்குள் வருவாள் என நினைத்து காத்திருக்க அவள் வராமல் இருக்கவும் என்ன செய்வது என யோசித்து மாலை அவளை எங்காவது வெளியில் அழைத்து செல்லலாம்… ஏதாவது படத்திற்கு சென்றுவிட்டு ஹோட்டலுக்கு போகலாம் என முடிவு செய்திருந்தான்… உற்சாக மனநிலையில் இன்று கனியோடு மனம்விட்டு பேச வேண்டும் தன் மூன்று வருட காதலை அவளுக்கு  எப்படி தெரிவிக்க என விதவிதமாக யோசித்து கொண்டிருக்க  அதற்கு ஹரிணியும் ரம்யாவும் ஆப்பு வைத்தார்கள்….வேண்டா வெறுப்பாக அவர்களோடு சென்று வந்தவன் வந்ததிலிருந்து கனியோடான தனிமை நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்….
 
தங்கள் அறைக்குள் வந்தவளை பார்வையிட தலை நிறைய பூ வைத்து அந்த அரக்கு சேலை அவள் சந்தன நிறத்திற்கு எடுப்பாக இருந்தது… அவனிடம் பாலை கொடுத்தவள்…. ஏங்க நான் உங்ககிட்ட ஒன்னு பேசனும்…??”
 
அவளை பார்த்தபடி தலகாணியை கட்டிலில் சாய்த்து வைத்து கால்நீட்டி அமர்ந்தவன் கனி தன்னை விரும்புவதை சொல்லும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க….
 
கையை கொஞ்சம் நீட்டுங்க….??”
அவன் கையை நீட்டவும் தன் கையிலிருந்த  ஒரு கயிறை எடுத்து கட்டியவள்…. இது மந்திரிச்ச கயிறுங்க… ரொம்ப சக்தி வாய்ந்ததாம்??”
என்னடா இவ லவ்வ சொல்லுவான்னு பார்த்தா இவ என்ன பண்ணுறா… கயிற்றை கட்டி முடித்தவள் …. கட்டிலிலுக்கு மறுபுறம் பாயை விரித்து படுக்க போக….
ஏய்ய்ய்ய்ய்…………….?? அவன் கத்திய கத்தலில் அவள் அப்படியே நின்றிருந்தாள்…பயத்தில் அப்படியே வெலவெலத்து போயிருக்க…
 
இங்க திரும்புடி…??” அவள் அவன்புறம் திரும்ப அவள் கையிலும் அந்த கயிறு... எதுக்கு இப்ப கீழ படுக்கிற… வந்து மேல படு…??”.
 
இல்லங்க நான் ஒருவாரம் கோவிலுக்கு விரதம்….??”
அறைஞ்சு பல்லை கழட்டப்போறேன் பாரு… போகும்போது இல்லாத விரதம் இப்ப என்னடி…??” பல்லை நறநறவென கடிக்க…
கனிக்கு மாலையில் நடந்தது நியாபகத்திற்கு வந்தது…இவர்கள் கடைக்கு செல்லவும் மீனாட்சியும் ஆப்ரேசன் செய்ததில் இருந்து மாலையில் சற்று நேரம் வாக்கிங் சென்று வருவார் வசந்தாவும் அவரும் வாக்கிங் சென்றிருக்க… இவள் துணி காயப்போடும்போது யாரோ கூப்பிடும் குரல்கேட்கவும்… வெளியில் வந்தவள் ஒரு மஞ்சள சேலை அணிந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்று கொண்டிருக்க யாரோ பிச்சை கேட்கிறார்களோ என நினைத்து உள்ளே சென்று வந்தவள் ஒரு பத்துரூபாயை கொண்டு வந்து கொடுக்க அதை வாங்காமல் கனியையே பார்த்தவர்….
 ஏம்மா உன் மனசுக்குள்ள ஏதோ கவலை போட்டு அறிச்சிக்கிட்டு இருக்கே…??”
 
ஆமா இவங்கதானே நம்மகிட்ட பேசாம இருந்தாங்க அதுவும் மதியம் பேசிட்டாங்களே… இப்ப எந்த கவலையும் இல்ல என நினைத்தவள்
 
இல்ல…. இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல … நீங்க போங்க…??”
இல்லம்மா… உன் புருசனோட நீ சந்தோசமா இல்லையே…. படாத கஷ்டமெல்லாம் பட்டிருக்க… பொறந்த வீடுன்னு ஒன்னு இல்ல… உன்னோட கல்யாணமும் திடிருன்னு நடந்திருச்சு…??”
 
கனிக்கு ஆச்சர்யமாக இருந்தது எப்படி இவங்க பார்த்த மாதிரி எல்லாம் சொல்லுறாங்க… அங்கிருந்த திண்ணையில் அமர… அந்த பெண்மணியும் கனியின் முகத்தை வைத்து இது ஒரு ஏமாளி என தெரிந்து கொண்டவர்… அக்கம் பக்கத்தில் அந்த குடும்பத்தைபற்றி விசாரித்தை வைத்து ஏதேதோ எடுத்து விட்டு… அவள் வாயிலிருந்தே போட்டு வாங்கி கொண்டிருக்க… கனியின் அந்த பெண்ணின் வலையில் எளிதாக விழுந்தாள்…
 
கனியின் நகைகளையும் அவளின் நடவடிக்கையையும் பார்த்தவள்… கடைசியாக… நான் மந்திரிச்ச கயிறு தர்றேன்மா… அத மட்டும் உன்னோட புருசனோட கையில கட்டிவிட்டு நீயும் கையில கட்டிக்க அப்புறம் பாரு உன் புருசன் உன்னையே சுத்தி சுத்தி வருவான் …??” அவளுக்கு ஆசை காட்ட …. கனியின் மனம் அப்படியே பூரித்து போயிருந்தது…
 
இவங்க நம்மள சுத்தி வருவாங்களா…. அவள் கண்ணில் ஆசையை காணவும்… இங்கு பாரும்மா… ஒரு வாரம் விரதம் இருந்து இந்த கயிறு நீயும் உம்புருசனும் கட்டிக்கிட்டா அப்புறம் ஒரு வாரம் கழிச்சு பாரு… உன் புருசன் உன்காலடியில கிடப்பாரு… இந்தா…??” கயிறை கொடுத்தவர்… அதை கனி தன் கையில் வாங்கி தன் கண்ணில் ஒற்றிக்கொள்ள….
 
 இத சும்மா கொடுத்தா உன்னோட வேண்டுதல் பலிக்காதும்மா… அதுனால ஒரு 5000 மட்டும் குடும்மா….??”
 
அஞ்சாயிரமா……??” கனி முழிக்க….
 
ஆத்தா இது சாதாரண கயிறு இல்ல நாப்பது நாளு பூஜையில வைச்ச கயிறு…  நாங்க அவ்வளவு பயபக்தியா இருப்போம் காசப்பார்க்காதத்தா…சுடுகாட்டு மண்டை ஓட்டை வைச்சு பூசை பண்ணியிருக்கோம்… இதெல்லாம் நான் சாதாரணமா யாருக்கும் குடுக்க மாட்டேன்… உன்னை பார்த்தா என்னோட பொண்ணு மாதிரி இருக்கு… இத மட்டும் உன் புருசன் கையில கட்டிப்பாரு அதுக்கப்பறம் உன் புருசன் உன்னை சுத்தி சுத்தி வருவான்  அத நினைச்சு பாரு…??” அவன் மனதை கரைக்க தையல் தைத்து தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தை கொண்டு வந்து கொடுத்தாள்…பத்து ரூபாய் கயிற்றுக்கு 5000 ரூபாய் கொடுத்து ஏமாந்திருந்தாள்….
 
ஆத்தா பார்த்தா மகாலெட்சுமி மாதிரி எனக்கு கட்டிக்க ஏதாச்சும் நல்ல சேலையா இருந்தா குடுத்தா…..??”
 
கனி உள்ளிருந்து ஒரு சேலையை கொண்டு வந்து கொடுக்க… கிடைத்தவரை லாபம் என நினைத்தவர் அதை வாங்கி கொண்டு செல்ல அப்போதே தலைக்கு குளித்து சாமி கும்பிட்டவள்… தன் கையில் அந்த கயிறை கட்டி தன் கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…
 
இவள் சொன்ன அனைத்தையும் கேட்டவன்… அப்ப நீ அந்த பொம்பளை கேட்ட காசு குடுத்துட்டு புடவையையும் குடுத்தியா…??”
 
கனி சந்தோசத்துடன்… ஆமாங்க…
எதுக்கு நான் உன்னை சுத்தி சுத்தி வருவேன்னா….??”
கனி வெட்கத்துடன் ம்ம்ம் தலையாட்ட
உன்னை…………… என்ன பண்ணுறது… நான்கூட உன்னை நல்ல விபரமான பொண்ணு… புத்திசாலின்னு நினைச்சேன்.. ஆனா நீயும் முட்டாளுன்னு நிருபிச்சிட்டியே…. எவளோ என்னமோ சொன்னான்னு இப்படி ஏமாந்து போய் நிக்கிற….அவன் தன் திட்டை ஆரம்பிக்க… முடியலடி என்னால…??”. அவன் திட்டி முடிக்கும் வரை காத்திருந்தவள்….
 
இல்லங்க…. அவங்க என்னோட கஷ்டத்தை எல்லாம் கரெக்டா சொன்னாங்க… அவங்கள போய் அவ இவன்னு சொல்லாதிங்க… பெரிய சாமியாரு மாதிரி இருந்தாங்க….??”
 
ஏய் லூசு…. நிஜம்மா இப்ப என்கிட்ட அடிவாங்கப்போற பாரு அதெல்லாம் அவங்க ஒகு டெக்னிக் வைட்டிருப்பாங்கடி.. அதை வைச்சு அடிச்சுவிடுறதுதான்…??” தன் கையில் இருந்த கயிறை அவிழ்த்து எறிய போக…
 
ஏங்க ப்ளிஸ்ங்க அஞ்சாயிரம் குடுத்து வாங்கியிருக்கேன்… ஒருவாரம் மட்டும் கட்டியிருங்க….. ப்ளிஸ்…??”
 
முடியாது நான் ஒன்னும் உன்னை மாதிரி ஒரு முட்டாள் இல்லை…??” கயிறை தூக்கி எறிந்தவன் அவள் கையை பிடிக்க.. அவனிடம் இருந்து துள்ளி விலகியவள்…
 
ஏங்க நான் ஒருவாரம் விரதம்… நான் கீழயே படுத்துக்கிறேன். …நீங்க நம்பாட்டா போங்க… நீங்களும் அத்தையும் நல்லாயிருக்கனும்னு விரதத்தை ஆரம்பிச்சிருக்கேன்… ஒரு வாரம் மட்டும்தான் ப்ளிஸ் ……??”கண்கள் கலங்கி நிற்க… அவளை முறைத்து பார்த்தவன் எதுவுமே சொல்லாமல் கட்டிலில் குப்புற படுத்திருந்தான்…
 
கனியோ இவங்க கயிறை கட்டலையே… அப்ப நம்மள விரும்ப மாட்டாங்களோ…..லூசு கனி நாம எதாவது பொய் சொல்லி கட்டச் சொல்லியிருக்கலாம்… பெரிய உண்மை விளம்பி இப்ப பாரு… அந்த சாமியாரம்மாவையே பொய்காரின்னு சொல்லிட்டாங்க…. நம்ம இவங்களுக்கும் சேர்த்து நல்லா விரதம்  இருக்கனும்… மனதார கடவுளை வேண்டியள்…… தன் இடத்தில் படுக்க… மறுநாளில் இருந்து துரை கனியிடம் முகம் கொடுத்துகூட பேசவில்லை… 
துரை தன் தாயிடம் விபரத்தை சொல்ல…. ஏப்பா தம்பி நம்ம கனி சொன்ன மாதிரி பெரிய சாமியாரம்மாவா இருப்பாங்களோ??”
 
ஆமாம்மா…. மருமகளுக்கு ஏத்தா மாமியார்…. உங்களை எல்லாம் வைச்சிக்கிட்டு… எவளோ பிராடு நல்லா ஏமாத்தியிருக்கா… நல்லவேளை போட்டுருக்கிற நகைகளை கேக்கலை… இல்ல இந்தம்மா அதையும் கழட்டி குடுத்திருக்கும்… ரொம்ப கவனமா இருக்கனும்மா… யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு இருந்தா… இதெல்லாம் ஒரு வகையான ஏமாத்துதாம்மா…??” தன் அம்மாவையும் கண்டித்தவன் கனியிடம் மட்டும் முகத்தை சுழித்திருந்தான்…
 
மறுநாளில் இருந்து காலையில் ஹரிணியையும் ரம்யாவையும் தான் வேலைக்கு செல்லும்போதே பள்ளியில் விடுபவன் மாலையில் கதிர் சென்று அழைத்து வருவான்… மற்ற நேரம் கனியும் காயத்ரியும் அந்த வாடகை கடைக்கு சென்று கடையை செட் செய்ய  கதிர் துணைக்கு சென்று அவர்கள் கேட்கும் உதவிகளை செய்து கொண்டிருந்தான்…. தமிழ் அன்று காலையில் தன் தாயிடம்….
 
ஏம்மா… இந்த காயத்ரியை பத்தி என்ன நினைக்கிறிங்க….??”
 
தன் மகளுக்கு தலையை சீவிக் கொண்டிருந்தவர்…. ஏம்மா நல்ல பொண்ணு… இது மட்டும் உதவி பண்ணாட்டா நம்ம கனியோட நிலைமை ரொம்ப மோசமா இருந்திருக்கும்..??”.
 
நான் அத கேட்கலைம்மா… அந்த பொண்ணோட பழக்கவழக்கம்… குணத்தை பத்தி…??”
 
ஏத்தா ரொம்ப தங்கமான பொண்ணா இருக்கு…மரியாதை தெரிஞ்ச பொண்ணு… நம்ம கனியோட இந்த வீட்டுக்கு வந்தா… அதுவா எல்லாவேலையும் இழுத்து போட்டு செய்யுது… பாவம் பெத்தவங்க சொந்தகாரங்கன்னு யாரும் இல்லை…..
 
அம்மா நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்ககூடாது….??”
 
இல்லத்தா சொல்லு ??”தன் மகள் தலையில் பூவை வைத்தபடி சொல்ல..
. இந்த பொண்ணு  கதிர் அண்ணாவுக்கு  கட்டினா என்னம்மா…??”.
கதிருக்கா…..??”. அப்படியே நிற்க…
ஏம்மா ஜாதி ….. அந்தஸ்துன்னு பார்க்கிறிங்களா….??”
ச்சே…ச்சே… அப்படியெல்லாம் பார்த்தா நம்ம மாப்பிள்ளைக்கு உன்னை கட்டி வைச்சிருப்பமா…. காயத்ரி நல்ல பொண்ணுத்தா நான் உங்க அப்பாக்கிட்ட சொல்லுறேன்… நீ வாம்மா சாப்பிட….??”
 
இந்த ஐந்து நாட்களும் துரை கனியின் முகத்தை பார்த்துக்கூட பேசவில்லை… கனியோ கடவுளின் பக்தியில் ஆழ்ந்து இருவேளை குளிப்பது கோவிலுக்கு போவது… மற்ற நேரங்களில் கடை திறப்பதற்கான வேலையை பார்ப்பது என இருந்தாலும் கணவன் தன்னிடம் பேசாதது மனதை குடைந்த படியே இருந்தது… அந்த ஒருவாரமும் செல்ல அன்று சனிக்கிழமை துரைக்கு பேங்க் விடுமுறை… தங்கைகளுக்கும் பள்ளி விடுமுறை… காலையில் எழுந்து குளித்தவள் துரைக்கு காப்பியுடன் அறைக்கு செல்ல அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்…
 
காப்பியை டேபிளில் வைத்தவள்… கட்டிலில் அவன் அருகில் படுத்து தன் கைகளால் அவன் தலையை கோதிஅவன் புருவத்தை நீவி அவன் மீசைக்கு கையை கொண்டு போக… அவள் ஸ்பரிசத்தில் கண் விழித்தவன் அவள் தொடுகையை ஆழ்ந்து அனுபவித்தபடி அவளை  பார்த்து… என்னடி உன்னோட விரதம் எல்லாம் முடிஞ்சிருச்சா…??”.
தன் கையை படக்கென்று எடுத்தவள்… ம்ம்ம் முடிஞ்சிருச்சுங்க காப்பி கொண்டு வந்திருக்கேன்…??”
 
அவள் கையை எடுத்து தன் தலையை கோத சொன்னவன்… எங்கயாச்சும் வெளிய போவமா….??”
எங்க போவோம்ங்க…??”
 
கடுப்புடன் எங்கன்னு சொன்னாத்தா வருவியா…??”
இல்ல… இல்ல…
அப்புறம் என்ன காலை டிபன் சாப்பிடவும் கிளம்புறோம்.சரியா?” துரைக்கு கனியை முத்தமிட ஆசையிருந்தாலும் முத்தமிட்டால் தன்னால் அவளைவிட்டு விலகவே முடியாது… என்று நினைத்தவன் அவள் தொடுகையை மட்டும் அனுபவித்தபடி படுத்திருந்தான்…
 
அனைவரும் டிபன் சாப்பிட்டு கொண்டிருக்க துரை தன் கண்ணால் கனியை சாப்பிட்டு கொண்டிருந்தான்…
மீனாட்சி… தம்பி நம்ம ஊருல இருந்து போன் பண்ணினாங்கப்பா…??”
தன் சுயஉணர்வுக்கு வந்தவன் என்னம்மா எதுக்கு…??”
 
நம்ம தென்னந்தோப்பு குத்தகை எடுத்திருக்காருல அந்த வேலப்பன் அண்ணன் பொண்டாட்டிக்கு என்னமோ ஆபரேசனாம் அதான் கொஞ்சம் காசு அவசரமா தேவைப்பட்டுச்சுன்னு கேட்டாங்க நான்தான் இன்னைக்கு உனக்கு லீவுதானே காச கொண்டு வந்து குடுப்பான்னு சொன்னேன் நீ சாப்பிடவும் கிளம்புற வழிய பாரு துணைக்கு வேணும்னா நம்ம கதிரை கூட்டிட்டு போ…??”
 
அவ்வளவுதான் துரைக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை கனியை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்… ம்மா கதிர்கிட்ட காச குடுத்து விடுவோம்…??”
 
இல்லப்பா அது முறையா இருக்காது இத்தனை வருசமா நம்மகிட்ட வேலைப்பார்த்தவங்க முறைப்படி நானும் வரணும் எனக்கு என்னமோ உடம்பு கொஞ்சம் அசதியா வருது …..நீயே போய்ட்டு வந்திரு…??”
 
ம்ம்ம் சரிம்மா…
 
கனிக்கு ஏமாற்றமாக இருந்தது… சாப்பாடே இறங்கவில்லை… அனைத்தையும் எடுத்து அடுப்படியில் வைத்தவள் … மதிய சமையலுக்கு என்ன சமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்க…
 
காயத்ரி… கனி அண்ணா உன்னை வரச் சொன்னாங்க…??” அவள் காய்கறிகளை எடுத்து நறுக்க ஆரம்பிக்க…காய்த்ரியும் இயல்பாகவே இந்த வீட்டில் பொருந்திவிட்டாள்…எல்லாவேலையும் உரிமையாக செய்வது பேசுவது என கொஞ்சம் கொஞ்சமாக தன்கூட்டிலிருந்து வெளியில் வந்திருந்தாள்…
 
மாடியேறியவள் என்னங்க எதுக்கு வரச்சொன்னிங்க??”
 
என்னடி நாம வெளியில போக முடியலைன்னு வருத்தமா இருக்கா..??”. ஏதோ அலமாரியில் எடுத்தபடி கேட்க…
 
ம்ம்ம் பரவாயில்லங்க நாம அடுத்தவாரம் வெளியில போவோம்… இப்ப அத்த யாருக்கோ ஆப்ரேஷன்னு சொன்னாங்கள்ல நீங்க முதல்ல அவங்களுக்கு காச குடுத்திட்டு வாங்க….
 
அவள் புறம் வந்தவன் அவள் கையை பிடித்து தன்புறம் சுண்டி இழுக்க மொத்தமாக அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்… அவளை இறுக அணைத்தவன்… அவள் காதிற்குள் நீயும்தான் என்னோட வர்ற….??”
 
அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி அப்ப… அண்ணா….??”
 
அண்ணனா… அவன் எதுக்கு நான் அம்மாக்கிட்ட  உன்னையே கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டேன்…போ வேகமா கிளம்பு இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பியிருக்கனும்… நாம நாளைக்கும் அங்கதான் இன்னைக்கு தங்கிட்டு நாளைக்கு சாயங்காலமா வருவோம்… போ வேகமா கிளம்பு பார்ப்போம்….
 
கனியும் சந்தோசத்தில் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் வேகமாக சேலையை மாற்றச் சென்றாள்… கனி செம சான்ஸ்…. இன்னைக்கு நம்ம மனதுல உள்ளத அவங்கிட்ட சொல்லிரணும் இத்தனை நாளு பண்ணுன தப்புக்கு மன்னிப்பு கேட்டுரணும்…
 
துரையும் தன் தாயிடம் எவ்வளவு பணம் கொடுக்க என கேட்டு ……அந்த வீட்டு சாவியையும் அம்மாவிடம் வாங்கி கொண்டான்…
 
அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் வீட்டைவிட்டு கிளம்பியிருந்தனர்… துரை ஜீப்பை வேகப்படுத்த கனி தன் கணவனை நெருங்கி அமர்ந்திருந்தாள்… ஊரை தாண்டும் வேளையில் ஓரிடத்தில் கூட்டமாக இருக்க இரண்டு மூன்று பெண் போலிஸ்…….துரையும் கனியும் ஜீப்பைவிட்டு இறங்கி சென்று பார்த்தவர்கள் அங்கு ஒரு பெண்ணை போலிஸ் ஜீப்பில் ஏற்றியிருந்தனர்…. விசாரித்ததில் அந்த பெண் ஒரு திருடி என்று ஒரு நாளைக்கு ஒரு வேசத்தில் வந்து ஏமாற்றுவதாக சொல்லி ஜீப்பை கிளப்பியிருக்க இருவரும் தங்கள் ஜீப்பிற்கு வந்திருந்தனர்….
 
கனி அமைதியாக வர… என்னடி போலிஸ பார்க்கவும் பயந்திட்டியா… அவ திருடி வீட்டுல தனியா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கனும் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாம தீர விசாரிக்கனும்…??” அதற்கும் அவள் அமைதியாக வர.. ஜீப்பை ஒரு மரநிழலில் நிறுத்தியவன் கனியை தன்புறம் திருப்பி பார்க்க செய்தவன்… என்னடி என்னாச்சு….??”
 
நான் ஒன்னு சொல்லுவேன் கோவிச்சுக்ககூடாது….??”
வீட்டுக்கு மட்டும் திருப்பி கூட்டிப்போக சொல்லாத…… நானே அம்மாக்கிட்ட கெஞ்சி உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்.??”.
 
அது இல்ல இப்ப போலிஸ் ஜீப்பில கூட்டிட்டு போறாங்கள்ல அவங்கதான் அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து எனக்கு கயிறு குடுத்து விரதம் இருக்கச் சொன்னது ??”முகத்தை பாவமாக வைத்தபடி சொல்ல….
 
அவள் முகத்தை பார்க்கவும் துரை குபீர் என சிரிக்க… கனியும் ஒரு அசட்டு சிரிப்புடன் நின்றிருந்தாள்…
 
வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க கனி அவன் மார்பில் தன் முகத்தை புதைத்திருந்தாள்…அவளுக்கு அவன் முகத்தை பார்க்க வெட்கமாக இருந்தது…
 
அவளை இறுக்கி அணைத்தவன்… ஏய் ஒரு அஞ்சுரூபாய் கயிறுக்கு 5000 ரூபாய்… சேலை வேற… பத்தாதுக்கு ஒரு வாரமா என் பக்கத்திலயே வராம கோவில் குளம்னு சுத்திக்கிட்டு இருந்தே… உன்னை…??” அவன் கன்னத்தை கடிக்க….
 
கனி துரை இவ்வளவு சிரித்து இன்றுதான் பார்க்கிறாள்…. அவன் சிரிப்பு அவ்வளவு அழகாக…தன் மனதை நிறைக்க… அவன் கன்னத்து  கடியில் தன் முகத்தை சுழித்தவள் தன் முகத்தை அவனிடமிருந்து விலக்கி…. நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கிங்க….??”
 
அதுக்கென்ன சிரிச்சிக்கிட்டே இருக்கேன் அதுக்கு நீ என்கூடவே இருக்கனும் என்னை விட்டு போகனும்னு நினைக்காத புரியுதா??” அவளோடு ஜீப்பில் ஏறியவன்… அடிப்பாவி… இந்த திருடியால ஏகப்பட்ட முத்தம்…….. மொத்தம் எல்லாம் நிறைய பாக்கி இருக்கு… ஒருவாரம் என்னை காயவிட்டதுக்கு இன்னைக்கு நான் உன்னை விடுறதா இல்ல….??” அவள் இதழில் தன் இதழை பதித்து ஆழ்ந்த முத்தமிட்டவன்… இன்னைக்கு நீ வாயே திறக்காத நான் சொல்லுறத மட்டும் கேக்கனும்… புரியுதா…??”
 
ம்ம்ம்…..??”  கனியும் வெட்கத்துடன் அவன் கையோடு தன் கையை கோர்த்திருக்க……அவன் கையில் தன் முத்தத்தை பதித்தவன் அந்த கைகளை தன் நெஞ்சில் வைத்தபடி ஜீப்பை கிளப்பியிருந்தான்….
 
அங்கு துரை அப்பாவின் சித்தப்பா மகன் கோபத்துடன் வெறி கொண்டு திரிந்தான்…. அவரின் வக்கில் போன் செய்திருந்தார்… இன்னும் இரண்டு நாளில் தீர்ப்பு… துரை பக்கம்தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக சொல்ல அதிலிருந்துதான் இந்த கோபம் வெறி எல்லாம் துரையை எதாவது செய்ய வேண்டும் என ஒரு வன்மம் எழுந்தது… இந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் அவனுக்கு விடக்கூடாது….என்ன செய்யலாம்……..????
 
                            இனி………….??????

Advertisement