Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
 அத்தியாயம்  –  21
 
துரையும் கனியும் வேறோர் உலகத்தில் இருக்க… அக்கா…..என ரம்யாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள்… தன்னை துரை தூக்கி சுற்றுவதை பார்த்து…
 
ஐயோ அம்மா…” என்று கத்தியபடி வேகமாக கீழே இறங்க…. இவள் இப்படி இறங்குவாள் என்பதை எதிர்பார்க்காதவன் தடுமாறி…. அவளோடு அப்படியே கீழே சரிந்திருந்தான்….. அவள் கீழேயும் அவன் மேலேயும் கிடக்க தடுமாறி விழுந்ததால்  கனிக்கு இடுப்பில் அடிபட….இடுப்பை பிடித்தபடி ஐயோ…. அம்மா என கத்தவும்…
 
அவள் வாயில் கைவைத்தவன்…. ஏய் நீ என்ன லூசாடி… ஏன் இப்படி உயிரு போன மாதிரி கத்துர…??”
 
அவன் கோபத்தை பார்த்து பயந்தவள்…. இல்ல…வந்து…ரம்யா….??”
யார் வந்தா என்ன… நான் உன்னோட புருசன் தானே என்னோடதான நிக்கிற…??”அவளை உரசியபடி மெதுவாக எழுந்தவன்…என்ன ரொம்ப அடிப்பட்டுருச்சா..??” அவள் மேல் ஒட்டியிருந்த சருகளை தன் கையால் தட்டிவிட்டவன்….. அவள் இடுப்பை நோக்கி தன்கையை கொண்டு செல்ல அவன் கையை பிடித்தவள்…
 
இல்ல…. இல்ல… அடிபடலைங்க….??” அவளுக்கு வலி ஒரு புறம் இருந்தாலும் கூச்சமாகவும் இருக்க….ரம்யாவின் குரல் பக்கத்தில் கேட்கவும் .. ப்ளிஸ்….” என்றபடி குரல்வந்த திசையை நோக்கி நடந்தவள் தங்கையை பார்க்கவும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள்…
 
தன் சட்டையை உதறியவன்… ப்பா…. ராட்சசி…. கொஞ்ச நேரத்துல நம்ம இடுப்பையும் உடைக்க பிளான் பண்ணிட்டா… ச்சே இப்பதான் இந்த ரம்யா வரனுமா… பரவாயில்லடா துரை உன் பொண்டாட்டிக்கிட்ட இருந்து செமயா ஒரு முத்தம் வாங்கிட்ட….அந்த நிமிடத்தை இப்போது நினைத்து பார்த்தவனுக்கு… ரம்யா மேல் காண்டாக வந்தது….
 
கனியும் இதைத்தான் யோசித்துக் கொண்டு வந்தாள்… ச்சே… நாம அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கவே இல்லையே…. இப்பதான் நல்லா பேச ஆரம்பிச்சாங்க அதுக்குள்ள நாம அவங்கள கீழ தள்ளிவிட்டு….. ஏண்டி பண்ணுறத எல்லாம் ஏடாகூடமா பண்ணித் தொலைக்கிற… அவங்க சொன்ன மாதிரி நாமவேற ஆளையா கட்டிக்கிட்டு இருந்தோம்… நம்ம புருசனத்தானே……..
 
வீட்டிற்கு வர அரவிந்த் கிளம்பி தயாராக இருந்தான்….. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தமிழிடம் கண்ணாலயே விடைபெற்றான்… அனைவரும் வீட்டிற்கு கிளம்பலாம் என பேசிக் கொண்டிருக்க…
 
காயத்ரி… துரையிடம் சென்று அண்ணா நான் இங்க வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போகுது…. அந்த லோன் என்னாச்சுண்ணா… இங்கயே ஏதாச்சும் கடை பிடிக்க முடியுமா இல்ல அந்த ஊர்லயே கடை போட்டுக்கவா… கொஞ்சம் லோன சீக்கிரமா ஏற்பாடு செஞ்சு குடுக்க முடியுமா….??”
 
கதிரோ…. அய்யோ…செல்லக்குட்டி நீ ஏண்டா லோனெல்லாம் கேக்குற….. மாமா ஊருக்கே வட்டிக்கு பணம் குடுத்துருக்கேண்டா… என்கிட்ட மட்டும் சொல்லு ஒரு பெரிய கடையே கட்டிக் குடுத்துருறேன்… காயத்ரியோடு மனதில் பேசிக் கொண்டிருக்க
 
துரை கனியை பார்த்தவன்… என்ன நீ ஒன்னும் சொல்லாம இருக்க…??”
என்ன சொல்ல…??”
அவளை முறைத்தவன்… என்ன சொல்லவா..வா… நீயும் முதல்ல கடையை பிடிச்சுதாங்கன்னு சொல்லுவ… நான் அட்வான்ஸ் எல்லாம் குடுத்து கடையை பிடிச்சா வேண்டான்னு சொல்லி வீம்பு பண்ணுவ…??”
 
இப்போதுதான் கனிக்கு நியாபகம் வந்தது தான் ஏற்கனவே துரையை கடையை பிடித்து தரச் சொன்னது பின் கோபத்தில் வேண்டாம் என சொன்னது…. ச்சே…ச்சே நாமளும் இவங்கள ரொம்ப இம்சை பண்ணியிருப்போம் போல பச்சை பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு…. ஸாரிங்க ??”
 
என்ன ஸாரிங்க ஸோரிங்கன்னு….. போடி இம்சை….??” காயத்ரி பக்கம் திரும்பியவன்… லோனெல்லாம் வேண்டாம்மா… நான் இன்னும் இவளுக்கு பிடிச்ச அந்த கடைக்கு வாடகை குடுத்துக்கிட்டுதான் இருக்கேன்… நீங்க அதுலயே ஆரம்பிச்சுருங்க….நல்ல பெரிய கடையாவே போட்டுருங்க… எத்தனை மிசின் வேணும்னாலும் வாங்கிக்கலாம் வேலைக்கு ஆள் வைச்சிக்கங்க…உனக்கு எந்த மாதிரி ஆரம்பிக்கனும்னு தோனுதோ சொல்லு அது மாதிரி செஞ்சிருவோம்…
 
அண்ணா… காசு….??”
 
கதிர் அதைப்பத்தி நீங்க கவலைப்படாதிங்க… அவனவன் தங்கச்சிகளுக்கு செய்யிற கடமை இருக்கு… எவ்வளவு வேணும்னு ஒரு வார்த்தை சொல்லுங்க நான் ரெடி பண்ணி குடுத்துருறேன்… நல்ல நாள மட்டும் பாருங்க… மத்ததெல்லாம் நான் கவனிச்சிக்குறேன்… காய்த்ரி உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட சொல்லு…..??”
 
ம்ம்ம் சரிங்க…..??” அனைவரும் உள்ளே செல்ல…
 
கனி துரையிடம் வந்தவள்… ஏங்க இன்னுமா அந்த கடைக்கு வாடகை குடுத்துக்கிட்டு இருக்கிங்க… இந்த ஒரு வருசமாவா…… அப்ப நான் வருவேன்னு தெரியுமா…??”
 
அவள் கையை பிடித்து இழுத்தவன்… ஏய் நீ போனா நான் விட்டுருவனா… எந்த மூலைக்கு போனாலும் கண்டுபிடிச்சிருவேண்டி…. என்ன எங்க அம்மா மட்டும் நல்லா இருந்திருந்தா உடனே கண்டுபிடிச்சிருப்பேன்… என்னை பத்தி என்னன்னு நினைச்ச..கட்டின பொண்டாட்டிய வைச்சு காப்பாத்த வக்கில்லாதவனா….சிங்கம்டி…நீ ஏன்டி வீட்டவிட்டு போன….எனக்கு நீ நல்லது பண்ணுறியா…ஒரு வார்த்தை என்கிட்ட பேசனும்னு தோனுச்சா…..பல்லை கடித்தவன்…. வீட்டைவிட்டு போன உன்னை பார்த்த அன்னைக்கு ஒன்னும் பண்ணலை அதான்… உன்னை இப்படியெல்லாம் கேள்வி கேக்க சொல்லுது…..பார்த்த அன்னைக்கே நாலு அறை விட்டிருக்கனும்??” பல்லை கடிக்க…. அவன் கையை பிடித்ததில் அவளுக்கு கை வலிக்க ஆரம்பிக்கவும் முகத்தை சுழித்தவளை பார்த்து அவள் கையை விட்டவன் சட்டென வீட்டிற்குள் நுழைய…..
 
கனிக்குத்தான் மனது பாரமாக இருந்தது… என்ன செஞ்சு இவங்க வேதனை போக்க போறோம்னு தெரியலையே…. எல்லாரும் கிளம்பி கதிரோடு வீட்டிற்கு சென்றிருக்க கனியை மட்டும் துரையோடு வண்டியில் வரும்படி விட்டு சென்றிருந்தார்கள்…. அவன் கோபத்தில் கதவை அடைத்திருக்க எப்படி கதவை தட்டுவது என யோசித்தவள்… அவங்களே வரட்டும் என நினைத்து வெளியில் கிடந்த கட்டிலில் அமர்ந்திருக்க….. உள்ளே தன் கட்டிலில் படுத்திருந்த துரைக்கும் மனதின் வேதனை…… படுத்த…சற்று நேரம் யோசனையில் இருந்தவன்…. ம்ம்ம் இவளை ரொம்ப திட்டிட்டமோ… இனி இவளை திட்டி என்னாக போகுது… நடந்தத மாத்த முடியுமா….
 
இவன் வெளியில் வந்தவன் வீட்டில் யாரையும் காணாமல் வாசலுக்கு வர துரையை பார்க்கவும் கனி எழுந்து வீட்டுக்கு போவமா… எல்லாரும் போயிட்டாங்க .??”
 
ம்ம்ம்….” கதவை பூட்டிவிட்டு நாயை அவிழ்த்து விட்டவன் தன் புல்லட்டை நோக்கி போக கனியும் அவனை தொடர்ந்தவள்… நல்ல மூடுல வந்தவங்கள நாம பேசியே டென்சனாக்கிட்டோம் போல… இப்படி இருந்தா எப்புடி கனி அவங்க உன்னை பொண்டாட்டியா ஏத்துக்குவாங்க… போடி நீ செஞ்சு வைச்ச வேலையெல்லாம் அவங்க மனச காயப்படுத்துற மாதிரியே இருந்திருக்கு… இனியாச்சும் இந்த மாதிரி கிறுக்கு வேலையெல்லாம் பண்ணாம பொண்டாட்டியா லெட்சனமா நடக்கிற வழிய பாரு… அவங்க மனசுல எப்படி இடம் பிடிக்கிறது…. யோசிக்க யோசிக்க தலைதான் வலித்தது… வீடு வரவும் அவன் ஒன்றும் சொல்லாமல் இறங்கி வீட்டிற்குள் செல்ல…..
 
அவன் கையை பிடித்தவள்… ஸாரிங்க… தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிருங்க….??”
 
அவள் கையை பார்த்தவன் அதை எடுத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் தங்கள் அறையை நோக்கி சென்றிருந்தான்…. ஸாரியாம் ஸாரி யாருக்கு வேணும் இவ ஸாரியெல்லாம்… நம்மள விரும்புறேன்னு சொல்லுவான்னு பார்த்தா… ஸாரி..பூரின்னு…. ஏய் ஒழுங்க இந்தவாட்டி என்னை விரும்புறேன்னு உன் வாயால சொல்லிரு…. இல்ல…இல்லைனா என்ன பண்ணுறது…… ஏதாச்சும் தடாலடியா பண்ண வேண்டியதுதான் இன்னைக்கு முத்தம் கொடுத்த மாதிரி…. பார்ப்போம் ஒரு மாசம் டயம் கொடுப்போமா… ஒரு மாசமா…. வேண்டாம் ஒரு பதினைஞ்சு நாளு… இல்ல இல்ல ஒரு வாரம் மட்டும்தான் டயம் அதுக்குள்ள அவ மனசுல நான் இருக்கனா இல்லையான்னு எனக்கு தெரியனும்… இருக்காமலா… நாம முத்தம் கொடுக்கும் போது பேசாம இருந்தா….. யோசிக்க….செல்லாது செல்லாது…. அவ வாயால ஒரு வார்த்தையும் சொல்லனும்….
 
எவ்வளவுதான் அவன் மனம் முழுக்க அவள் மேல் காதல் இருந்தாலும்… தன்னை வேண்டாம் என்று விட்டு சென்றதால் மீண்டும் அவளே தன்னிடம் வந்து தன்னை விரும்புவதாக சொல்ல வேண்டும் என அவன் மனதிற்குள் காயம் விழுந்திருக்க… கனி தன்னிடம் காதல் சொல்லும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்…..
 
இந்த வாரம் முழுவதும் கனி தன் மனதில் உள்ளதை துரையிடம் சொல்ல முடியாமல் தடுமாறியவள் தன் விருப்பத்தை அவள் செயலில் காட்ட ஆரம்பித்திருந்தாள்… அவனுக்கு பிடித்த சமையலை செய்து வைப்பது அவன் குளித்து வருவதற்குள் அவனுக்கு தேவையான உடையை அயர்ன் செய்து எடுத்து வைப்பது  இரவில் அவனோடு கட்டிலில் முன்போல ஓரத்தில் படுக்காமல் உள்ளே சற்று தள்ளி படுப்பது என… எல்லாம் துரைக்கு புரிந்தாலும் அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காகத்தான் காத்திருந்தான்…
 
அன்று அவன் வேலை விட்டு திரும்பி வரும்போது வாசலில் அமர்ந்து அரவிந்தோடு போன் பேசிக் கொண்டிருந்த தமிழ்… துரையை பார்க்கவும் போனை கட் செய்தவள்… அவனை தடுத்தபடி…. மச்சான்… மச்சான் இருங்க உங்ககிட்ட பேசனும்..??”
 
என்ன தமிழு…??”
இல்ல எனக்கு ஒரு டவுட்டு… அன்னைக்கு அத்தான் வரலைன்னா நீங்க என்னை கல்யாணம் செஞ்சிருப்பிங்களா…??”
 
திடுக்கிட்டவன்… ஏய் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு இப்ப என்ன தேவையில்லாத கேள்வியெல்லாம்……??”
எது தேவையில்லாத கேள்வி… அப்ப இத சொல்லுங்க கனி போட்டிருக்கிற கொலுசு… அன்னைக்கு நீங்க என்கிட்ட கொடுத்திட்டு திருப்பி வாங்கினது தானே… என்னன்னமோ சொன்னிங்க… என் பிரண்டோடது அவன் தங்கச்சிக்கு வாங்கினான்… என்கிட்ட கொடுத்து வைச்சிருந்தான்னு பிராடு பிராடு…??”
 
ஆஹா இந்த பிசாசுக்கு டவுட் வந்திருச்சா...ச்சே..ச்சே… இது இப்பதான் வாங்கினது….அத என் பிரண்ட்கிட்ட குடுத்திட்டேன்…
 
அப்படியா அப்ப கனி ஏன் பொய் சொன்னா… இருங்க அவள கூப்பிடுறேன் அவகிட்டயே கேட்போம்..??”. கனியை கூப்பிட போக…
 
ஏய் லூசு கத்தாத… இது அந்த கொலுசுதான் என் பிரண்ட் வேண்டாம்னு சொல்லிட்டான் இப்ப பாரினுக்கு போயிட்டான் அதான் சும்மா இருந்துச்சுன்னு கனிக்கிட்ட குடுத்தேன்….
 
ஆல் டீடெயில்ஸ் ஐ நோ….மச்சான் கனி எல்லாம் சொல்லிட்டா நீங்க பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்ததுன்னு… ச்சே நானும் சும்மா இருந்திருந்தாலே இந்த கல்யாணம் நின்னிருக்கும் போல தேவையில்லாம அப்பாக்கிட்ட அடியெல்லாம் வாங்கி…. அழுவது போல முகத்தை வைத்தவள் பத்தாதுக்கு  இப்ப ஒரு காதல் காவியம் ஓடுது போல அண்ணா காயத்ரிய லவ் பண்ணுறானோ…??”
 
ப்பா…. வந்த ஒரு வாரத்துக்குள்ள எல்லாத்தையும் கண்டுப்பிடிச்சிட்டா… நமக்கும் வாச்சிருக்கே தத்தி தத்தி….. தமிழு நீ நினைக்கிறமாதிரி எதுவும் இல்ல நீ பாட்டுக்கு ஏதோதோ யோசிக்காத…??”.முதல்ல இவகிட்ட இருந்து தப்பிச்சு போகனும்…இரு தமிழு டிரஸ் மாத்திட்டு வந்துருறேன்??”
 
எஸ்கேப்….. ம்ம்ம் பார்ப்போம் மச்சான்னும் மாப்பிள்ளையும் என்ன பண்ணுறிங்கன்னு….??”.
 
மறுநாள் துரைக்கு விடுமுறை… ஹரிணிக்கும் ரம்யாவுக்கும் இன்னும் இரண்டு நாளில் பள்ளி திறக்கப்படுகிறது… தமிழும் இந்த வாரத்தில் ஊருக்கு கிளம்புவதாக இருந்தாள்…. அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க கனிதான் கணவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என பிளான் செய்து கொண்டிருந்தாள்… அந்த பிளான்தான் என்ன என்று அவளுக்கு புரியவில்லை… அன்றும் ஹரிணி தோப்பு வீட்டிற்கு போகலாம் என அடம்பிடிக்க பெரியவர்களை தவிர மற்ற அனைவரும் தோப்புவீட்டிற்கு சென்றனர்…சமைத்து சாப்பாட்டையும் கொண்டு செல்ல… இவர்கள் அனைவரும் சலசலவென பேசிக் கொண்டே தோப்பை சுற்றி வந்து கொண்டிருக்க கதிர் அனைவருக்கும் இளநீர் சீவிகொடுத்துக் கொண்டிருந்தான்… கனியும் துரையை விடாமல் சைட் அடித்துக் கொண்டிருக்க அவனுக்கு தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தான்…. காயத்ரியோடு இவளும் தோப்பு பக்கம் செல்ல போனவள் அங்கிருந்த கிணற்றை பார்க்கவும் அன்று கிணற்றில் விழுந்தது துரை தூக்கியது என நியாபகத்தில் வர…. இவளுக்கு இப்போது சட்டென ஒரு பிளான் நியாபகத்திற்கு வர… அக்கா நாம இந்த கிணத்துக்குள்ள இறங்கி பார்ப்போமா…??”
 
வேண்டாம் கனி இப்பதானே குளிச்சிட்டு வர்றோம்… இன்னொரு நாளைக்கு இறங்குவோம்…??”
 
இந்த அக்காவேற...இல்லக்கா….சும்மா கால மட்டும் நனைச்சிட்டு வருவோம் வாங்கக்கா…??” காயத்ரியை வற்புறுத்தி அழைக்க அவளும் கனியோடு அந்த கிணற்றில் உள்ளே இறங்குவதற்காக இருந்த கல்லில் காலை வைத்து மெதுவாக இறங்க கனிதான் முதலில் இறங்கினாள்…. உள்ளுக்குள் அவ்வளவு பயம் இருந்தாலும்  தன் பிளானை இன்னைக்கு எப்படியாச்சும் செயல் படுத்தனும் என மனதிற்குள் உறுதியெடுத்தவள்… கடைசி இரண்டு படியில் நின்று கொண்டு ஆத்தா மாரியாத்தா… நான் இப்ப இதுல வேணும்னே குதிக்க போறேன்… அவங்கள பார்த்தேன் இங்கன பக்கத்துலதான் நிற்கிறாங்க அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் வந்து காப்பாத்திரணும் அப்படியாச்சும் அவங்க என்கிட்ட ரெண்டு வார்த்தை பேசனும் ஒரு வாரமா என்கிட்ட மூஞ்சி குடுத்தே நல்லா பேச மாட்டேங்கிறாங்க… இப்ப திட்டவாச்சும் வாயை திறக்கட்டும் ரிஸ்க் என்று தெரிந்தாலும் துரையை தன்னோடு பேச வைக்க வேறு வழி தெரியாமல் ஊரில் இருக்கும் தெய்வத்தை எல்லாம் வேண்டியவள்… தண்ணீரில் கால் தவறி விழுவது போல குதிக்க காய்த்ரியின் அலறல் மட்டும் கேட்டது நியாபகத்தில் இருந்தது அடுத்த அரைமணி நேரத்தில் கனி அந்த படியில் இருக்க மெதுவாக கண் விழித்து பார்த்தவள் தன்னை சுற்றிப்பார்க்க…. அனைவரும் இருந்தார்கள் துரைதான் அவளை முறைத்தபடி நின்று கொண்டிருக்க… அவன் உடையை பார்த்தவள் நனையாமல் இருக்கவும்…. ம்ம்ம் அப்ப இவங்க நம்மள காப்பாத்தலையா…
 
காய்திரியின் உடைதான் தொப்பலாக இருந்தது… பே…வென முழித்தவள்… அக்கா நீங்களா என்னை காப்பாத்துனிங்க??”
 
ஆமா கனி நீ தடுமாறி விழவும் கத்தி பார்த்தேன் ஒருத்தரும் வரலை அதான் நானே குதிச்சிட்டேன்..??”.
 
உங்களுக்கு நீச்சல் தெரியுமா…??”
 
நல்லா தெரியுமே எங்களுக்கும் முதல்ல தோப்பு வயல் எல்லாம் இருந்துச்சு எங்க அம்மா அப்பா இறக்கவும் பாட்டி செலவுக்கு  காசு இல்லாம எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா வித்துட்டாங்க……. அப்பா இருக்கும் போது எனக்கு நீச்சல் கத்துக்குடுத்தாங்க….??”
 
மெதுவாக அவளை கைபிடித்து தூக்கியவள்… இனிமே இந்த பக்கம் வரவே வராத… இல்லைனா நீச்சல் கத்துக்கிட்டு வா… நான் இல்லைனா இன்னைக்கு நிலைமை என்னாயிருக்கும்… நல்லா நீச்சல் தெரிஞ்ச எனக்கே பதட்டத்துல என்ன செய்யனும்னு ஒரு நிமிசம் மறந்திருச்சு….??”
 
ச்சே…. நல்லா பிளான் போட்டோம்…இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் வேஸ்டாப்போச்சே…. அக்காவுக்கு நீச்சல் தெரியும்னு தெரியாம போச்சு..ச்சே..ச்சே…. கடைசியில மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டோமே… இவங்க வேற கண்ணுலயே நம்மள சுட்டெறிச்சுருவாங்க போல போச்சா…. இந்த பிளானும் போச்சா… கனி இதுக்கு நீ சும்மாவே இருந்திருக்கலாம்… வீட்டிற்குள் வந்தவர்கள்… இங்கேயே விட்டுச் சென்றிருந்த உடைகள் இருக்க முதலில் காயத்ரிக்கு உடை எடுத்து கொடுத்து ரூமுக்குள் மாற்றி வரச் சொன்னவள் தனக்கும் உடையை எடுத்தபடி காயத்ரி வெளிவருவதற்காக காத்திருக்க புயல் போல உள்ளே வந்த துரை கனியை தரதரவென இழுத்து அவன் அறைக்குள் கொண்டு சென்றவன்…. கதவை அடைத்து….
 
ஏண்டி உனக்கெல்லாம் அறிவே இல்லையா…  ஏற்கனவே அன்னைக்கு மட்டும் நான் காப்பாத்தலைனா நீ அப்பவே பரலோகம் போயிருப்ப… அப்பவே சொன்னேன் தானே நீ இந்த பக்கம் வரவே கூடாதுன்னு அப்படி சொல்லியும் மீறி நீ கிணத்துக்குள்ள இறங்கியிருக்கின்னா உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்…??” துரை காட்டுக்கத்தலாய் கத்திக் கொண்டிருக்க…..
 
அவள் என்னமோ தன் மேல் பூமழை பெய்வதை போல முகத்தை வைத்திருக்க அவள் தாடையை பிடித்து தன் புறம் இழுத்தவன். ஏய் லூசு… கிறுக்கி… என்ன என்னை பார்த்தா  எப்படி இருக்கு திட்டுறேன்…  மூஞ்சிய ஈ…….ன்னு இளிச்சிக்கிட்டு இருக்க…??”
 
தன் தாடையில் இருந்த கையை தன் கையோடு சேர்த்தவள் ஏங்க இது…..??”. அங்கே மாட்டியிருந்த போட்டோவை காட்ட….
 
அது இருவரின் திருமணப்போட்டோ… அதை ஆளுயரத்திற்கு லேமினேசன் செய்து சுவற்றில் மாட்டி வைத்திருந்தான்.. இந்த ஒரு வருடமாக தன்னை தவிர இந்த அறையில் யாரையுமே விடவில்லை… இங்குதான் துரை இரவில் படுப்பான்..கனியை பார்த்துக்கொண்டு படுத்தால் அவள் தன்னோடு இருப்பது போல இருக்கவும் வேலை முடிந்தவுடன் இங்கு வந்துவிடுவான்… அதைதான் கனி ஆச்சர்யத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்
 
என்ன இதுல என்ன இருக்கு நாம ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டி நம்ம போட்டோவத்தானே மாட்டி வைச்சிருக்கேன்… பேச்ச மாத்தாம நான் கேட்டதுக்கு பதில சொல்லு…??” கடுகடுவென பேசவும்….
 
அவன் புறம் திரும்பியவள்.. எதுக்கு இப்ப கத்துறிங்க… நீங்க என்கூட ஒரு வாரம் பேசலைதானே அதான் எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம… கிணத்துக்குள்ள தவறி விழுந்தா நீங்க வந்து காப்பாத்துவிங்கன்னு விழுந்தா…. போங்க நீங்க காப்பாத்தவே இல்லை…??” அவள் முறுக்கி கொள்ள…..
 
ஏய் லூசு நீ வேணும்னே தான் விழுந்தியா….??”
 
ஆமா… ஆமா… போங்க நீங்கதான் என்கிட்ட வரவே இல்லை. நான்தான் உங்க மேல கோபமா இருக்கனும் நீங்க எதுக்கு இப்ப என்னை திட்டுறிங்க??”
 
அவள் மண்டையில் நறுக்கென கொட்டியவன் அவளை தன் புறம் இழுத்து அணைக்க…. போங்க வலிக்கிது..??”.தலையை தடவ….
 
நல்லா வலிக்கட்டும்… அவன் நெஞ்சுக்குள் குப்பென சந்தோச அலை அடிக்க இவ நாம அவகிட்ட பேசலைன்னு கிணத்துக்குள்ள குதிச்சாளா….எவ்வளவு பெரிய ஆபத்த தேடி போயிருக்கா… இவளுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுனா… நானும் அவகூடவே போயிருப்பேன்…. இன்னும் இறுக்கியவன்… அவள் முகமெங்கும் முத்தமிட….. அவன் முகத்தை பார்த்தவள்…
 
ஹப்பா…. கோபம் போயிருச்சா…??”
ம்ம்ம் அதெல்லாம் இப்ப போகாது…உன்னை நிறைய கவனிக்க வேண்டியது இருக்கு நீ…முதல்ல டிரஸ மாத்து… ஈரமா ரொம்ப நேரம் இருக்காம..ம்ம் மாத்து…??”
 
அப்ப நீங்க வெளிய போங்க….??” அவள் வெட்கத்துடன் தலைகுனிய
 
தன் கையை கட்டியவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தபடி…. ம்கூம்…போக முடியாது என் கண்முன்னாடியே மாத்து ??”
 
அவன் கையை பிடித்து இழுத்தவள் போங்க போங்க அதுக்கு வேற ஆளப்பாருங்க…??” கதவுக்கு வெளியில் தள்ள..
 
 இதுக்கெல்லாம் வேற ஆள பார்க்க முடியாதுடி…. நீதான் வேணும்…??” . வெளியில் செல்லும் முன் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டு விலக… கதவை மூடியவளுக்கு அந்த போட்டோவை பார்க்கவும் வெட்கமாக வந்தது… அவனே நேராக நின்று பார்ப்பது போல இருக்க…தன் சேலையை கழற்றி அந்த போட்டோவில் மறைத்தாற் போல போட்டவள் தன் உடையை மாற்றியிருந்தாள்….
 
                                         இனி…………..???????.

Advertisement