Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
  அத்தியாயம்  –  20
 
கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்…… என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்… இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க… அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா…. கண்ணாலயே…காதல சொல்லிக்கிட்டு இருக்காரு…. நமக்கு செட்டாக மாட்டாரோ….??”
எனக்கும் அப்படித்தாண்டி தோனுது…இது வேலைக்கு ஆகாது போல…. வா நாம கிளம்புவோம்..??”. என்று மறுபக்கம் போகவும்தான் கனிக்கு மூச்சே வந்தது…
ஆஹா…கனி நாம கூட வந்திருக்கும் போதே இப்படி பேசுராளுகளே. …இவங்கள நாம பிரிஞ்சது அங்க ஊர்லயும் எல்லாருக்கும் தெரியும் அப்ப… அங்க இருக்குற பொண்ணுகளும் இப்படித்தான் இருப்பாங்களோ… கனி… எப்படியாவது முயற்சி பண்ணி அவரோட மனசுல இடம்பிடிச்சிருடி…. இப்ப மாமன் மகளா உன்மேல பாசமாத்தான் இருக்காரு… நம்ம அந்த பாசத்தை எப்படியாவது காதலா மாத்திரணும்டி….. இத்தன நாளு இருந்த மாதிரி சொங்கி மங்கியா  இருக்காம… இனி உன் புருசன்… உன் மாமியார்னு உன்னோட குடும்பத்தை பாருடி…. கனியின் முகத்தில் தீவிர யோசனை ஓடுவதை கண்டவன்….
 
இந்த ராட்சசி… பார்வையை நம்ம மேல வைச்சிட்டு யோசனைய வேற எங்கேயோ வைச்சிருக்காளே… மெதுவாக எழ… கனியும் கூடவே எழுந்திருந்தாள்….
 
என்ன…. இப்ப எதுக்கு நீயும் எழுந்திருக்கிற.??”.
இல்ல நீங்க கிளம்பிட்டிங்களே…??”
இவளுக்கு என்னவோ ஆயிருச்சு… இந்த மண்டபத்துல பேய்கீய்….. ஏதாச்சும் இருக்கா….. மனுசன பாத்ரூம் பக்கம் கூட போக விடமாட்டா போல… யோசித்தவன்…
 நீ போய்  அம்மாவ சாப்பிட கூட்டிட்டு வா…..  நாம சாப்புட்டு கிளம்புவோம்… ??”
 
மூவரும் சாப்பிட்டு கிளம்ப மணி 1…க்கு மேல் ஆகவும்… வீட்டிற்கு சென்றவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க….. ஊருக்கு கிளம்பியிருந்தனர்… கதிர் தன் காரில் வரும்படி கனியை அழைக்க… துரையின் பார்வையில் அனல் பறந்தது… படுபாவி காயத்ரிக்கு சும்மா ஒரு மாப்பிள்ளைன்னு பேச்சுக்குத்தான் சொன்னேன்…. இவன் அத மனசுல வைச்சிக்கிட்டு நம்ம பொண்டாட்டிய  நம்மளோட தனியா இருக்கவிட மாட்டான் போல …..
 
கனி… இல்லண்ணா… நான் இவங்களோடயே வர்றேன்…??” தன் கணவனின் கைக்குள் கையை கொடுக்க… துரை கெத்தாக கதிரை ஒரு பார்வை பார்த்தான்….
 
கதிர்…இருடி மகனே… லுக்கா விடுற… இல்லம்மா… ரொம்ப வெயிலா இருக்கு பாரு… அது ஜீப்தானே நல்லா வெயில் அடிக்கும் நம்ம காருக்கு வந்துரு வெயில் தெரியாது ஏசி போட்டு விடுறேன்….??” எப்புடி…..
 
ஆமாண்ணா வெயில் ரொம்ப அடிக்குது… ஏய் ஹரிணி ரம்யா நீங்கல்லாம் இங்க வந்துருங்க…அப்பத்தா… அத்தை… அப்பா அம்மாவெல்லாம் அங்க வரட்டும்…. ஹரிணி…ரம்யாவோடு காயத்ரியும் இறங்கி துரையின் ஜீப்பிற்கு வர… துரை தன் வாயை மூடி தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்……. கதிர் அனல் அடிக்கும் பார்வையை இங்கே செலுத்தியவன்…
 
…ச்சே நாம வாய வைச்சிக்கிட்டு கொஞ்சம் சும்மா இருந்திருக்கலாம்… ஒரு ஒன்றரை ரெண்டு மணி நேரம் காய்திரியோட பொழுதை போக்கியிருக்கலாம்… இப்பதான் நம்மகிட்ட நல்லா பேச ஆரம்பிச்சா.. வட போச்சே…. கதிர் காற்று போன பலூன் போல தன் காரை கிளப்ப..துரையும் ஜீப்பை கிளப்பியிருந்தான்…. ஜீப் கிளம்பியதிலிருந்து கனி தன் தங்கைகளோடும் காயத்ரியோடும் அரட்டை அடித்தபடி வர… காரில் அனைவரின் சந்தோச சிரிப்பொலி… மட்டும் கேட்க துரை அதில் கலந்து கொள்ளாவிட்டாலும் அதை ரசித்தபடி ஜீப்பின் வேகத்தை கூட்டியிருந்தான்…. அடுத்த அரைமணி நேரத்தில் பின்னால் இருந்தவர்கள் தூக்கத்திற்கு சென்றிருக்க…. அவர்களை பார்க்கவும் கனிக்கும் தூக்கம் கண்ணை சுழற்றியது…தூக்கத்தில்  தன் தலையை துரையின் தோளில் வைக்க….. ஒரு கையால் அவள் தலையை தன் தோளில் சரியாக வைத்து…. தன் கையால் அவள் கன்னத்தை வருடியவன்..மனதிற்குள் சந்தோச ஊற்றெடுக்க…..விசில் அடித்தபடி வண்டியை கிளப்பினான்…
 
வீட்டிற்கு வரவும் கனியும் காயத்ரியும் காப்பி….. இரவு உணவை தயாரிக்க என வேலைகளை பார்க்கவும்….மறுநாள் துரைக்கு பேங்க் இருப்பதால்.. இரண்டு நாட்கள் நல்ல தூக்கம் இல்லாமல் அலைச்சலாக இருக்கவும் துரை சாப்பிடவும் படுக்க போயிருந்தான்.. கனிக்குத்தான் துரையிடம் மனது விட்டு பேச வேண்டும் போல….. …தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது… வேகமாக பாலை காய்ச்சிக் கொண்டு தங்கள் அறைக்குச் செல்ல… துரை அரைத்தூக்கத்தில் இருந்தான்…அவனை எழுப்பி பாலை கொடுத்தவள்… அவன் குடித்து  முடிக்கவும்… ஏங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…??”
ம்ம்ம் சொல்லு…
 
ஜன்னல் புறம் சென்றவள்….எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கி சற்று யோசிக்க…. ஏங்க நான் உங்க பொண்டாட்டிதானே….??”
எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவும் திரும்பி துரையை பார்க்க அவன் அதற்குள் தூக்கத்திற்கு சென்றிருந்தான்… அவன் அருகில் சென்று அவன் முகத்தை பார்க்க…. அந்த பொண்ணுக சொன்னது மாதிரி இவங்க ஹீரோதான்..தன்னை அறியாமல் அவன் தலையை கோத துரையின் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது..மீசையை இழுத்து பார்க்க கை துறுதுறுக்க…. அப்படியே குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்…. இப்போது அவளுக்கே வெட்கம் வரவும் ச்சே…கனி என்னடி இப்படி மாறிட்ட…. லைட்டை அணைத்தவள் பால் டம்ளரோடு வெளியில் சென்றாள்….
 
மறுநாள் காலை அழகான பொழுதாக விடிய… துரை எழுந்து வரும்போது கனி கிச்சனில் வேலையாக இருந்தாள்…… கனியை தேடியவன் அவளை தேடி கிச்சனுக்கு வர…. கனி உற்சாகத்தோடு ஏதோ ஒரு பாடலை பாடியபடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்……. கதவின் நிலை மேல் சாய்ந்து நின்றவன்…
என்ன மேடம் பாடுற பாட்டை சத்தமா பாடுனா…. நாங்களும் கேட்போம்ல…??”
சத்தம் வந்த பக்கம் திரும்பி பார்க்க தன் கணவனை பார்க்கவும் குப்பென அவள் முகம் சிவந்தது…சாதாரணமாக அவன் நின்ற தோரணையே அவள் மனதில் ஆழ இறங்கி கொண்டிருந்தது… வேட்டியை மடித்து கட்டி ஒரு டிசர்ட் அணிந்திருந்தான்..தலை கலைந்து அதுவே அவனுக்கு ஒரு அழகை கொடுக்க இரவு அவன் தூங்கும் போது கொடுத்த முத்தத்தை இப்போதும் கொடுக்க தோனவும்…. தன்னை அறியாமல் அவன் கன்னத்திற்கு பார்வையை செலுத்தியவள்… ஏய் லூசு பொருடி…. முதல்ல அவங்ககிட்ட மனசுவிட்டு பேசு……முத்தமெல்லாம் அப்புறமா குடுக்கலாம் கனி மனதிற்குள் தன் கணவனின் மேல் காதல் பிறக்க…. துரை அவள் முகத்தில் ஒடும் பாவனைகளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் வெட்கம் அவனை ……..தன்னை அறியாமல்அவளிடம் கொண்டு செல்ல அவன் உள்ளே வரவும் வேலை இருப்பது போல அவள் மறுபக்கம்  திரும்பி நின்றுகொண்டு தன் மனதை தன் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்…… அவள் அருகில் வந்தவன்.
.டீ கிடைக்குமா….??”.இன்னும் நெருங்க…
 
போட்டுடேங்க இருங்க ரொம்ப சூடா இருக்கு??” டம்ளரை கையில் எடுத்தவள் அந்த டீயை ஆற்ற போக…. அவளை அணைத்தாற் போல நின்றவன் அவள் இடுப்பில் இடையில் இருகைகளையும் கொடுத்து அந்த டம்ளரை வாங்கி டீயை ஆற்ற…அச்சோ என்ன பண்ணுறிங்க….??”
 
என்ன பண்ணுறேன்… டீதானே ஆற்றுறேன்…ரொம்ப சூடாத்தான் இருக்கு….??” ஒவ்வொரு முறை  அவன் கை தன் இடுப்பில் உரசும் போதும் தன்னை அறியாமல் அவள் மனம் அவன் நெஞ்சில் சாயச் சொல்ல…இருவரும் வேறு உலகத்தில் இருந்தனர்…துரையின் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் சூடாக பதிய அந்த டீயை ஆற்றியதில் அது பச்சை தண்ணீரை போல ஆறியிருந்தது…. வெளியில் மீனாட்சியின் உற்சாகக்குரல் கேட்கவும் தன் சுயநினைவுக்கு வந்த கனி…
 
 அவன் கையை பிடித்தவள்...வெளியில அத்தை யார்கிட்யோ பேசுறாங்க…யார்ன்னு பாருங்க…??”
அதெல்லாம் அம்மாவே பேசி அனுப்பிருவாங்க… மறுபடி அந்த டீயை ஆற்ற போக….
 அவன் கையை பிடித்தவள்…..ஐய்யய்யோ… இதுக்கு மேல ஆற்றுனா…. இத குடிக்கவே முடியாதுங்க..??”.
டம்ளரை தொட்டுபார்க்க ஜில்லென்று இருந்தது….தன் தங்கைகளின் உற்சாகக்குரல் கேட்கவும் அவனை விட்டு சற்று தள்ளி நின்றவள் அவனுக்கு வேறு டீயை ஊற்றி கொடுத்துவிட்டு வெளியே வர…….. அப்படியே ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நின்றாள்….
 
அக்கா… ??”ஓடிச் சென்று தமிழை அணைக்கவும் தமிழும் அவளை இறுக்கி அணைத்திருந்தாள்… அந்த இடமே பாச மழையில் நனைந்தது… அரவிந்த் அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்க்க..துரைதான் அவனை அழைத்து சோபாவில் உட்காரச் சொல்லியிருந்தான்….
 
மச்சான்… நல்லாயிருக்கிங்களா…??”.
ரொம்ப நல்லாயிருக்கேன்… தமிழ்… அரவிந்த் சொல்லுங்க நீங்க எப்படி இருக்கிங்க…??”
நான் நல்லாயிருக்கேன் ப்ரோ….
எப்ப வந்திங்க ஊர்ல இருந்து… சொல்லவே இல்ல…??”
எங்க சொல்றது கனி இங்க வந்திட்டான்னு தெரிஞ்சதுல இருந்து இந்த மேடம் ஒரே அடம் இங்க வந்தே ஆகனும்னு… எனக்குத்தான் லீவே கிடைக்கல தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு இப்பதான் ரெண்டு நாள் லீவ் கிடைச்சது அதான் உடனே கிளம்பி வந்தோம்…”. கதிரும் வர அந்த காலை நேரம் மிகவும் இனிமையாக சென்றது… தமிழ்தான் கனி எப்படி வீட்டை விட்டு போகலாம் என வறுத்தெடுத்து விட்டாள்…. ஹரிணியையும் ரம்யாவையும் திட்ட ஆரம்பிக்க அவர்கள் இருவரும் கெஞ்சி கொஞ்சி அவளை வழிக்கு வரவழைத்தனர்… காய்த்ரிக்கு நன்றியை சொன்னவள் அவளையும் தங்களுள் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டாள்… துரை பேங்க்கிற்கு கிளம்பி வந்தவன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப கனியும் வாசல்வரை வந்து அவனிடம் லஞ்ச்பாக்சை கொடுத்தபடி சாயங்காலம் சீக்கிரம் வரும்படி சொல்லி….. வழியனுப்பினாள்……
 
மாலை சீக்கிரமாகவே வீட்டிற்கு வர வீட்டில் ஒருவரையும் காணவில்லை…  மாமா வீட்டில் சென்று பார்க்க அங்கு மீனாட்சி வசந்தாவோடு பேசிக் கொண்டிருந்திருந்தார்… மற்றவர்கள்  அனைவரும் தோப்பு வீட்டிற்கு சென்றிருப்பதாக அப்பத்தா…. சொல்ல துரையும் தன் புல்லட்டில் கிளம்பியிருந்தான்….
 
இங்கு பெண்கள் அனைவரும் மல்லிகை பந்தலில் இருந்த பூவை பறித்துக் கொண்டிருக்க  அரவிந்தும் கதிரும் வெளியில் சென்றிருந்தனர்…. கனியை காணாமல் தன் கண்களால் தேட… என்ன மச்சான் உங்க பொண்டாட்டிய தேடுறிங்களா… அவ தோப்பு பக்கம் போயிட்டா….??”
 
இல்ல  இல்ல நான் அரவிந்த தேடினேன்….??”
 
அப்புடியா….. பார்த்தா நம்ப முடியலையே….??” அவனோடு வம்பிழுக்க ஆரம்பிக்க அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவன் அவர்கள் வேலையில் கவனமாக இருக்க அவர்கள் அறியாமல் மெல்ல தோப்புபக்கம் காலடி வைத்திருந்தான்….
மெல்ல வாழைத்தோப்பிற்குள் புகுந்தவன்  அவளை தேடி காணாமல் மாந்தோப்பிற்குள் நுழைய… ஒவ்வொரு இடமாக தேடி பார்த்தவன் அன்று அவள் அமர்ந்திருந்த மரத்தின் அருகே சென்று பார்க்க… அன்று போல் இன்றும் அந்த மரத்தின் தாழ்வான கிளையில்தான் அமர்ந்திருந்தாள்… மேலே மரத்தையே அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்க அதில் கூடு கட்டியிருந்த கிளிகள் பறந்து  வேறு இடத்திற்கு போயிருந்தன….. ஒரு மாம்பழத்தைகூட காணவில்லை… இப்போதுதான் லேசாக பூப்பூத்திருக்க அதையே பார்த்தபடி தான் துரையை விட்டுச் சென்ற இந்த ஒரு வருடத்தை நினைத்து வருந்திக் கொண்டிருக்க அவள் அருகில் சென்றவன்…
 
என்னாச்சு ராட்சசிக்கு இவ மட்டும் தனியா இருக்கா…. இப்ப என்ன யோசனை முகத்துல ஒரு தெளிவு இல்லை… இவன் அருகில் செல்லும் வரை வேரு உலகத்தில் இருந்தவளை…. என்ன மேடம் ஒரே யோசனையா இருக்கிங்க….??”
 
திடிரென அவன் குரல் அவளை கலைக்கவும் அன்று போல் இன்றும் பயந்தவள் தடுமாறி அந்த கிளையில் இருந்து விழ இன்றும் அவளை கையில் ஏந்தியிருந்தான்… தன் சுயநினைவுக்கு வந்தவள்…தன் கணவனையே பார்க்க அன்னைக்கு மாதிரி இப்ப தவ்வி குதிச்சு ஓடப்போறாளோ…. அவளையே குறுகுறுவென பார்க்க அவளும் அன்று நடந்ததைதான் நினைத்திருந்தாள்… அன்று ஓடி தடுக்கிவிழுந்து அவன் தூக்கி சென்றது காயம்பட்டது நியாபகத்திற்கு வர அன்னைக்கும் நாம ஓவரா நடந்துகிட்டமோ… என்னவோ நம்மகிட்ட பேசத்தானே வந்தாங்க நாம என்னமோ பெரிய பில்டப்பெல்லாம் பண்ணி இவங்களுக்கு கோபத்தை உண்டாக்கிட்டோம்… தான் அன்று செய்த தவறை நினைத்து இன்று வருந்தியவள் பாவம் இவங்க மனச நாம கொஞ்சம்கூட புரிஞ்சுக்கவே இல்லை… என்னாச்சு… அப்படியே ப்ரீஸாகி இருக்கா…. அவளையே பார்த்தவன்…
 
என்ன சாயங்காலம் சீக்கிரமா வாங்கன்னு சொல்லிட்டு நீ இங்க வந்துட்ட…??”
 
அவன் பேச்சில் கவனத்தை செலுத்தியவள் முகத்தில் இருந்த களைப்பை பார்த்தபடி… அவன் கையிலிருந்து இறங்கி…..இப்பதான் வந்திங்களா…அக்காதான் அதுக்குள்ள போயிரலாம்னு கூட்டிட்டு வந்தாங்க… நீங்க டீ குடிக்கலையா… வாங்க டீ போட்டு தர்றேன்….??” அவனோடு பேசியபடி முன்னால் நடக்க… அவனுக்கு காலையில் டீ ஆற்றியது நியாபகத்திற்கு வரவும் அவளின் வாசனையும் மென்மையும் இப்போதும் வேண்டும் போல இருக்கவும்… அதே தருணத்திற்காக அவள் பின்னால் நடக்கதுவங்கியிருந்தான்…
 
அங்கு கதிரோடு வெளியே சென்றிருந்த அரவிந்த் தோப்புவீட்டிற்கு வந்தவன் அன்று தமிழை இங்கு விட்டுவிட்டு  தன் பெற்றோரை சென்று பார்த்துவிட்டு அப்படியே ஊருக்கு கிளம்புவதாக முடிவெடுத்தவன் அடுத்து பத்து பதினைந்து நாட்களில் வந்து தமிழைக்கூட்டிச் செல்வதாக சொல்லியிருந்தான்… தங்கைகளோடு பூ கட்டிக்  கொண்டிருந்தவளை கண்ணை காட்டி தோப்பு பக்கம் வரச் சொல்ல…. மெதுவாக தோப்புபக்கம் சென்றவளை எட்டி அணைத்தவன்…
 
அவளின் முகத்தில் வருடியபடி ஏய் அத்தான் ஊருக்கு கிளம்புறேண்டி…. உடம்பை பார்த்துக்க டெய்லியும் வீடியோ கால்ல பேசு… அத்தானுக்கு  உன்முகத்தை பார்க்கனும்…??”
 
நீங்களும் உடம்பை பார்த்துக்குங்க அத்தான்… எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு இருக்காம நேரத்துக்கு சாப்பிடுங்க??”அவன் கன்னத்தை முத்தமிட்டபடி….அவன் நெஞ்சில் சாய அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது… அத்தானை விட்டு பிரிஞ்சு இருக்க முடியுமா…. கண்கலங்கியவளை பார்த்தவன்…..
 
 ஏய் லூசு அங்க இருந்த வரைக்கும் இங்க வரணும் வரணும்னு அடம் பிடிச்ச இப்ப எதுக்கு அழுகை வருது…. பத்து நாள்ல அத்தான் வந்து கூட்டிட்டு போயிருவேன்… இப்படி முகத்தை வைச்சிக்கிட்டு இருந்தா அத்தான் எப்படி ஊருக்கு கிளம்புறது..சிரி சிரி.?”.அவளோடு பேசியபடி அவள் முகத்தை நோக்கி குனிய… அப்போதுதான் அங்கு வந்த கனி இவர்களை பார்க்கவும் … வெட்கப்பட்டு வந்த வழியே ஓடியிருந்தாள்…
 
எதிரில் வந்த துரை மீது மோத… ஏய் என்னாச்சு எதுக்கு இப்ப திரும்பி வந்த…??”
இல்ல… அங்க..??”.அந்த பக்கம் கையை காட்ட..
 
இவன் வேகமாக அங்கு செல்ல போக… எட்டி அவன் கையை பிடித்தவள்…. ஐயோ இப்ப போகாதிங்க…??”
ஏய் எதுக்கு அங்க என்ன இருக்கு…??” மெதுவாக பார்வையை அங்கு செலுத்த… அப்போதுதான் பார்த்தான் அரவிந்த் தமிழின் நெருக்கத்தை…..
கனி இழுத்த இழுப்பிற்கு அவளோடு சென்றவன் மீண்டும் தோப்பிற்கே செல்ல… அவளை நிறுத்தியவன்… ஏய் விடுடி…. புருசன் பொண்டாட்டின்னா அப்படித்தான் இருப்பாங்க…??”
 
இவள் வெட்கத்துடன் தலையை குனிந்திருக்க…. அவளை கையை பிடித்திருந்தவன் தன்னை நோக்கி சுண்டி இழுக்கவும்… அவன் மார்பில் வந்து மோதியிருந்தாள்…. அவள் தாடை பிடித்து தன்னை நோக்கி பார்க்க செய்ய கண்ணை நறுக்கென மூடியிருக்கவும்…. அவளின் வெட்கத்தை ரசித்தபடி...கனி….??” அவனின் குரல் தாபத்துடன் ஒலிக்க…. அவள் எதுவும் சொல்லாமல் தன் இதழை நறுக்கென மூடியிருந்தாள்… அதற்கு மேல் முடியாமல் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் மூடியிருந்த கண்ணில் தன் முத்தத்தை பதிக்க தன்னை அறியாமல் கனியின் கை அவன் சட்டையை பிடித்திருந்தது… தன்னை உதறிவிட்டு ஓடிவிடுவாள் என நினைத்தவன் அவள் தன்னையே பிடிக்கவும் அவள் கன்னத்தில் முத்தமிட இப்போதும் தன் கண்ணைத் திறக்கவில்லை…. அவள் முகத்தையே பார்த்தவன் அந்த மாலை பொழுதில் அந்தி சாயும் நேரத்தில் அவள் முகத்தில் வெயில் பட்டு தகதகவென பொன்னிறமாக மின்னியது…. அவன் முத்தமிட முத்தமிட அவள் இதயம் பந்தய குதிரை போல துடிக்க ஆரம்பித்திருந்ததுஆனால் அவளுக்கு அவனை விட்டு விலகவும் தோன்றவில்லை….  அவள் இடுப்பில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன்… அவள் இதழை நோக்கி குனிய இவள் அவன் உயரத்திற்கு தன் கால் விரல்களை தரையில் பதித்து….தன் குதிகாலை உயர்த்தியிருந்தாள். … அவளிடம் இணக்கத்தை காணவும் துரையும் தன் மூன்று வருட காதலை அவள் இதழில் காட்டத்துவங்கியிருந்தான்… முதல் முறை இதழ் முத்தமிட்டிருந்தாலும் அதை இருவருமே உணராமல் கோபத்தை மட்டுமே உணர்ந்திருந்தனர் … ஆனால் இந்த முறை இருவருமே இந்த நிமிடத்தை ரசிக்க… மரத்தில் ஓடிய அணிலின் கிரீச் சத்தத்தில் முதலில் சுயநினைவுக்கு வந்த துரை கனியை பார்க்க இப்போதுதான் பார்த்தான் அவள் தன் நுனிக்காலில் நின்றிருப்பதை… அவனால் நம்பவே முடியவில்லை…கனியின் ஒத்துழைப்பை….தன் மனம் சிறகில்லாமல் வானத்தில் பறக்க….. இப்போது அவளை இறுக்கி அணைத்து அவள் இடுப்பில் கைகொடுத்து தன் உயரத்திற்கு தூக்கியவன்….. அவளை அப்படியே ஒரு சுற்று சுற்ற கனி பயத்தில் அவன் தோளைப்பிடித்திருந்தாள்….
      
                           இனி……………..?????

Advertisement