Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் – 2
 
இரண்டு நிமிடம் அப்படி நின்ற கனிமொழி… சட்டென முடிவெடுத்து தன் காதில் கடைசியாக இருந்த அந்த தங்கத்தோட்டை கழற்றி கொடுத்தவள்…
 அண்ணா இத எப்படியாச்சும் விக்க முடியுமான்னு பாருங்கண்ணா…??”
 
அவருக்கு இவளை பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது… இங்கு எல்லாருமே தினக்கூலிகள் அன்றாடம் வேலைக்கு போனால்தான் அன்றைய பொழுதை ஓட்ட முடியும்…. இவர்களுக்கு உதவி செய்ய மனம் இருந்தது… ஆனால் மார்க்கம்தான் இல்லை…  வேறு வழியில்லாமல் அந்த தோட்டை வாங்க போக….
 
கொஞ்சம் பொறுப்பா…??” என்றபடி வந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்…கோபாலன்… அத கனிக்கிட்ட குடு இந்த பணத்தை வச்சிக்க…??”
 
தன் பணத்தை எடுத்து கொடுக்க…
 
வேணாம் மாமா இத்தனை மாசமா நீங்க வாடகை வாங்காம இருக்குறதே பெருசு… எங்க அம்மாவோட கடைசி காரியம் அவங்க உழைச்ச உழைப்பிலேயே போகட்டும் … வேற ஏதாச்சும் உதவி வேணும்னா கண்டிப்பா வாங்கிக்கிறோம் … எங்களுக்கும் உங்களவிட்டா வேற யார் மாமா உதவி செய்வா..??”. கண்ணீர் கலங்கினாலும் திடமாகவே அந்த பணத்தை மறுத்தவள்…. உள்ளே செல்ல…
 
கனியை பார்த்த கோபாலனுக்கு பரிதாபமாக இருந்தது…  இந்த பொண்ணு அந்த ரெண்டு பொண்ணுகளையும் நல்லா பாத்துக்க முடியுமா… இவ்வளவு அழகை வச்சிக்கிட்டு இந்த பொண்ணு தன்னைக் காப்பாத்திக்கிறதே பெருசு… கனியின் தாய் உயிரோடு இருக்கும் போது தன் மகனுக்கு கனியை கேட்டிருந்தார்… வசதியில்லாவிட்டாலும் அவளின் அமைதியான குணமும் பொறுமையும் அழகும் அவரை பெண் கேட்க வைத்திருந்தது.. அவர் மனைவிக்கு இதில் துளிக்கூட விருப்பம் இல்லாவிட்டாலும் கனியின் அழகை நினைத்து லேசாக தலையாட்டியிருந்தார்… இப்ப இந்த பொண்ண நம்ம பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அப்புறம் இந்த ரெண்டு பொண்ணுகளோட எதிர்காலத்தையும் நம்ம பையன்தானே பார்க்கனும் அதுக்கு இவ கண்டிப்பா ஒத்துக்க மாட்டா… வாடகை வாங்காம வீட்டை விட்டதுக்கே அந்த தொல்லை பண்ணுறா….அவர் மனைவி குணத்தில் நல்லவர்தான் பணம் என வரும்போது கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வார்… அதிலும் தன் மகன் வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிப்பதால் நல்ல வசதியான இடத்தில் பெண் எடுக்க வேண்டும் என எண்ணத்தில் இருப்பவர்… இப்ப கனியோட அவ தங்கச்சிகளையும் பார்த்துக்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டா… அப்ப வேற பொண்ணுதான் பார்க்கனும் போல… எதுக்கும் நம்ம மகன் இன்னும் ரெண்டு மூனு மாசத்துல வந்துருவேன்னு சொல்லியிருக்கான்ல… பாப்போம் அவன் என்ன சொல்லுறான்னு….
 
மாமா…??”
என்னம்மா கனி…??”
 
இந்த அட்ரஸ்க்கு ஒரு தந்தி குடுத்திருங்க மாமா….??” அந்த டைரியை கொடுத்தாள்…
 
அத்தே..” என்று ஓடிவந்தாள் முத்தமிழ்…
என்ன தமிழு.??”
 
மச்சான் எங்கத்த..??”.
அவன் டவுனுக்கு போக கிளம்பிக்கிட்டு இருக்கான்தா…??”
 
கிளம்பி வெளியே வந்த துரை...ஏய் எதுக்கு இப்ப என்னை கேக்குற…நீ காரியம் இல்லாம என்கால பிடிக்க மாட்டியே… என்ன விசயம்..??”
 
ஆமா நீங்க பெரிய இவரு இவுக காலைபிடிக்கிறாக….. கிளம்பிட்டிங்கள்ல வாங்க என்னை காலேஜ்ல கொண்டு போய் விட்டுருங்க…??”
 
என்னத்தேவைக்கு நான் கூட்டிட்டு போறேன்.. போ உன்னோட வண்டி எங்க…??”
அது பஞ்சர் மச்சான்..??”
 
அப்ப உன் அண்ணன கூட்டிட்டு போ… நைட்டு என்னை மாட்டி விட்டதானே இதுக்கு மட்டும் நான் தேவையா.போ…போ…. எங்க கதிரு..??”
 
அவனுக்கும் எனக்கும் சண்டை.. என்னை அடிக்க வந்தான்..அதான் ரூமுக்குள்ள வச்சு பூட்டிட்டு வந்துட்டேன்…நீங்க வாங்க….??” என அவன் கையை பிடித்து இழுத்தபடி அவன் புல்லட்டை நோக்கி போக..
 
 
இவர்கள் இருவரையும் பார்த்த மீனாட்சிக்கு.. இவ படிப்பு முடியவும் நாம கல்யாணத்தை முடிச்சிரனும்.. இவனுக்கு வேலை கிடைச்சாலும் கிடைக்காட்டாலும் கல்யாணத்தை தள்ளிப்போட கூடாது என்று யோசித்தபடி நிற்க…
 
முத்தமிழை காலேஜில் விட்டவன் டவுனிற்கு சென்று தென்னைக்கு வைக்க வேப்பம்புண்ணாக்கு வாங்கி தோப்புவீட்டிற்கு சென்றவன் அதை தென்னைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய… அப்போதுதான் அங்கு வந்தான் கதிர்..
 
என்னடா மாப்புள்ள உன் தங்கச்சி உன்னை ரூமுக்குள்ள வச்சு வெளிய பூட்டிட்டேன் சொன்னுச்சு எப்புடி வெளிய வந்த..??”.
 
அந்த கொடுமையை ஏன் மாப்புள்ள கேக்குற… இந்த குட்டிச் சாத்தான்… வெளியில பூட்டிட்டு போயிருச்சு… எங்க அம்மாவும் உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.. அப்பா வசூலுக்கு போயிட்டாரு… இந்த அப்பத்தா மட்டும்தான் வீட்ல இருந்துச்சு உனக்குத்தான் தெரியுமே அது காத பத்தி…சும்மாவே நாம காது காதுன்னு சொன்னா அதுக்கு லேது லேதுன்னுதான் கேக்கும்… நான் கத்தி கத்தி பார்த்துட்டு கதவை உடைக்கலாமான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்… அந்த நேரம் அப்பத்தாவும் கதவை திறந்துச்சா… உள்ளே என்னைய எதிர்பார்க்கலைதானே… எவனோ களவாணி பயன்னு நினைச்சு ஒரே கத்து கத்திட்டு மயங்கி விழுந்திருச்சு… அந்த நேரத்துக்கு எங்கப்பாரு வந்தாரா என்னமோ அவுக ஆத்தாள நான்தான் மயக்கப்பட வைச்சுட்டேன்னு என்னைய போட்டு வெளுத்துட்டாருடா.. அங்க இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள மேம்மூச்சு கீழ்மூச்சு வாங்கிருச்சு….இதுக்கெல்லாம் காரணம் அந்த குட்டிச் சாத்தான்… இன்னைக்கு இருக்கு அதுக்கு…??” பல்லை கடித்தான்…
 
 மதிய பொழுதை இருவரும் அங்கு  தோப்பை சுற்றிப் பார்த்து கழிக்க.. அங்கு அப்போதுதான் மாமரம் பூத்திருந்தது. .வாழைக்கு தண்ணீர் திறந்து விட்டு இருவரும் அந்த பெரிய கிணற்றில் குதித்து வெகுநேரம் நீச்சல் அடித்து குளித்துவிட்டு.. மதிய சாப்பாட்டிற்கு வந்தவர்கள் கதிர் தன் வீட்டிற்கு சாப்பிட செல்ல துரை தனக்காக சாப்பிடாமல் காத்திருக்கும் தாயோடு சேர்ந்து சாப்பிட்டவன்….. தன் தாயோடு  வெளித்திண்ணைக்கு வர  வசந்தாவும் உள்ளே வந்தார்…
 
கதிர் எங்கத்தே….. சாப்பிட்டானா..??”
 
சாப்பிட்டான் மாப்புள்ள உங்கள பாக்கத்தான் கிளம்பி வந்தான்… அதுக்குள்ள அவுக அப்பா அவன கூட்டிக்கிட்டு  மேட்டுத்தெரு வரைக்கும் போயிருக்காருப்பா… யாருகிட்டயோ பணம் வாங்கனும் போல அதான் தொகை பெரிசா இருக்குன்னு இவன துணைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.??”.முத்துராமன் விவசாயத்தோடு வட்டி தொழிலும் செய்து வருகிறார்… பெரும்தொகை வரவு செலவின் போது கதிரையோ துரைசிங்கத்தையோ துணைக்கு கூட்டிச் செல்வார்.. பணம் தராமல் ஏமாற்ற நினைப்பவர்களை இவர்கள் இருவரும் சென்று மிரட்டி வருவார்கள்… வட்டி நியாயமாகத்தான் வாங்குவதால் இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் வந்ததில்லை….
 
ஸார் தந்தி..??”.
 
மீனாட்சி… ஐயோ தந்தியா..??”. அவர் பதற ஆரம்பிக்க…
அம்மா இருங்க நான் என்னன்னு பார்க்குறேன்??”
 
அதை படித்து பார்த்தவன்… அம்மா உங்களுக்கு துர்கான்னு யாராச்சும் தெரியுமா??”
 
துர்காவா… என யோசித்தவர்… நம்ம நிலத்தை குத்தகை எடுத்திருந்தாருல அந்த கந்தன் மாமாவோட பொண்ணு பேரு துர்காடா… ஏன் நான் பார்த்து ரொம்ப நாளாச்சுடா…??”
 
அவங்க இறந்துட்டாங்களாம்மா….??”
 
பதறியவர்….என்னடா சொல்லுற வயசு 43….. இல்ல 44 தான இருக்கும்… ஐயோ அந்த மாமா… இறந்து ரெண்டு வருசம் ஆச்சே.. அந்த அயித்த வேற இல்ல பாவம்டா??”
 
அம்மா…… நேத்து இறந்திருக்காங்க…தந்தி லேட்டா வந்திருக்குமா… உங்க போன் நம்பர் இல்லையா..??”
 
அந்த மாமா இறந்தப்புறம் வேற ஆளுக்கிட்ட குத்தகைக்கு விட்டுட்டேன்.. இந்த பொண்ண நானும் சின்ன வயசில பார்த்ததுப்பா.. கல்யாணம் சொன்னாங்க.. அப்பத்தான் உங்கப்பா இறந்த சமயம்னு நான் வெளியில போகாம இருந்தேன்.. துரை ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோம்…  எதுக்கும் நம்ம ஜீப்பை எடுத்துட்டு போய்ட்டு வந்துருவோம்பா..??”.துர்காவை பற்றி தன் தம்பி மனைவியிடம் எடுத்து சொல்லிக் கொண்டிருக்க…
 
துரை அப்பு…….. துரை??”
 
வாங்க அம்மாச்சி…??”.
ஏப்பு அம்மாச்சி மேல என்னப்பு கோபம்..கூப்புடுறதுக்கு பதிலே சொல்லாம இருக்க.??”.
 
கிழிஞ்சுச்சு…??” அவர் பக்கம் நன்றாக திரும்பி உதட்டை மட்டும் அசைக்க…
 ஓ கூப்புட்டியா… அதானே நீயும் அந்த கதிரு பய மாதிரி மாறிட்டியான்னு நினைச்சேன்…??”
 
வாத்தா… என்ன இந்த பக்கம் ரெண்டு நாளா ஆளேக்காணோம்… மேலுக்கு முடியலைன்னு வசந்தா சொன்னுச்சு இப்ப எப்புடி இருக்கு ??”…கையை ஆட்டி ஆட்டி சைகையால் கேட்க….
 
ஆமாத்தா என்னமோ சுவராம்ல அது எனக்கும் வந்திருக்காம்..??”.சுகரை சுவராக்கி சொல்ல..
 
மாத்திரையை ஒழுங்காப்போடுத்தா…. தன் தாயிடம் பேசியபடி கிளம்பியவர் துரையோடு அவர்கள் ஜீப்பில் மதுரைக்கு கிளம்ப…
 
 இங்கு கிளம்பும் போதே மணி 5 இருக்கும் மதுரைக்குள் நுழையும் போது மணி 8… தந்தியில் கொடுத்திருந்த அட்ரசை கண்டுபிடித்துச் செல்ல… ஜீப் அந்த சந்திற்குள் நுழைய முடியாமல் இருக்கவும் இருவரும் அந்த சந்து ஆரம்பிக்கும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்து வந்தனர்… ஒரு வீட்டின் முன் ஒரேக்கூட்டம்… சத்தம் வேறு கேட்டுக் கொண்டிருந்தது.. அந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டிருக்க பக்கத்து வீட்டு பெண்கள்தான் கத்திக் கொண்டிருந்தனர்…
 
அடே பாவிகளா அவுக அம்மா செத்து முழுசா ஒரு நாள் ஆகலைடா அதுக்குள்ள இப்படி அவுக வீட்டுக்கு முன்னாடி நின்னு குடிச்சிட்டு கலாட்டா பண்ணுறிங்களே… இந்த நேரம் பாத்து ஓனர் அண்ணாச்சி வெளியூருக்கு அவசரமா கிளம்பிட்டாங்களே… இப்ப வந்துருவாங்கடா… வரட்டும் இருக்குடா இன்னைக்கு..??”. அவர்கள் கத்த கத்த…
 
நான்கைந்து இளைஞர்கள் குடித்துவிட்டு கதவை தட்டிக் கொண்டிருந்தனர்… ஏய் கதவை தொறங்கடி…??” கதவை எட்டி உதைக்க…
 
 டேய் அந்த பெரிய குட்டி எனக்குத்தான்.. எத்தனை தரம் அவள வச்சிக்கிறேன்னு சொன்னேன்..பெரிய பத்தினி மாதிரி திரிஞ்சா… இப்ப பாரு ஆத்தாளும் செத்து நாளைக்கே இவளுக மூனு பேருமே என் காலுக்கு கீழ வந்துருவாளுக??” கதவை போட்டு உதைக்க அந்த கதவு உடையும் நிலையில்தான் இருந்தது…
 
ஏய்யா இப்படி இவனுக அநியாயம் பண்ணுறானுங்க யாருமே கேட்க மாட்டிங்களா..??”
 
டேய் எவன்டா கேக்குறது அப்படியே அவனவன் பொண்டாட்டி புள்ளைய என்கிட்ட ஒப்படைச்சிட்டு கேளுங்கடா…??” பார்க்கவே ரவுடி போல இருந்தவன் அவர்களை பார்த்து கேட்க.. அனைவரும் தத்தம் கதவுகளை வேகமாக அடைத்தனர்.. அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த மீனாட்சியும் துரையும் இங்கு நடந்ததை பார்க்க… மீனாட்சிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது…
 
டேய் துரை என்னடா இது அநியாயம்….. இவனுகள யாருமே கேக்காம கதவை அடைச்சிட்டானுக… போடா போய் இவனுகள ரெண்டு போடுடா…??”
 
ம்மா…. அவனுகள பாருங்க பார்த்தாலே தெரியுது ரவுடிக மாதிரின்னு… ஒவ்வொருத்தனோட உடம்பையும் பாருங்க.. படங்கள்ல காட்டுற ஜிம்பாய்ஸ் மாதிரி இருக்கானுக… நம்மால இவனுகளோடயெல்லாம் சண்டை போட முடியாதும்மா..??”
 
டேய் நான் பெத்த மகனே என்னடா இப்படி சொல்லுற… நீயென்ன அப்படி ஒரு கோழையா… அப்ப இரு நான் போய் கேக்குறேன்..??”
 
அம்மா உடனே பொங்காத… இரு நானே போய் கேக்குறேன்… நீ அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இங்கன நடக்குறத வேடிக்கை பாரு…??” அவரை ஒரு ஓரமாக நிறுத்தியவன்…
 
அங்கு ஓரமாக குவித்து வைத்திருந்த விறகு கட்டைகளில் ஒரு கட்டையை எடுத்தவன் தன் பையிலிருந்த போனை எடுத்து காதில் வைத்து… ஹலோ.. ஆமா ஸார்… நான்தான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்….??” சத்தமாக அவர்கள் காதில் விழும்படி சொல்ல…
 
அதுவரை கதவை தட்டிக் கொண்டிருந்தவர்கள் இவன் குரலில் திரும்பி பார்க்க…
 
ஆமா ஸார் நான் மப்டியிலதான் இருக்கேன்…இப்பதான் ஸார் போன் வந்துச்சு  இந்த தெருவுல குடிச்சுப்புட்டு தேவையில்லாம வம்பு பண்ணுறதா…கலாட்டா பண்ணுறதா.. இவனுகள கொண்டு போக ஜீப் வேண்டாம் ஸார்..நானே ஜீப்பில்தான் வந்தேன்.. அவன் தான் வந்த ஜீப்பை சொல்ல.. அந்த ரவுடிகளில் ஒருவன் சந்தை எட்டிப்பார்க்க அங்கு ஜீப் நிற்கவும் அதை போலிஸ்ஜீப் என எண்ணினான்.. பெரிய ஆம்புலன்ஸா கொண்டு வாங்க… எதுக்கா… இவனுகள எதுக்கு ஸார் போலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போய் அடிக்கனும் இங்கயே அடிச்சுதூக்கி ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருரேன்… இல்ல ஒரு வார்த்தை சொல்லுங்க… எதுக்கு தேவையில்லாம அடிச்சிக்கிட்டு  எண்கவுண்டர்ல போட்டுருவோம்??”பேசியபடி பேண்ட் பையில் கையை விட…. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் தன் பேண்ட்டிலிருந்து துப்பாக்கியைத்தான் எடுக்க போகிறானோ என கைகாலெல்லாம் வெடவெடவென நடுங்க துவங்கியது… அவன் உயரத்தையும் உடல்கட்டையும் பார்த்தவர்கள் அப்படியே மிரண்டு போய் நின்றனர்… இவன் அவர்களை நோக்கி முன்னால் போக..போக அவர்கள்… நாலாபக்கமும் சிதறி ஓடத்துவங்கினர்… டேய் என அவர்களை நோக்கி ஒரு குரல் கொடுக்க இரண்டு நிமிடத்தில் அந்த இடம் காலியாக இருந்தது…
 
மீனாட்சி டேய் தம்பி நீதானாடா இது எம்புட்டு அறிவு… எம்புட்டு அறிவு ??”கன்னத்தை உருவி திருஷ்டி சுத்த… பேசாம நீ போலிஸ் ஆயிருடா…??”
 
ம்மா… என்னம்மா மாசாமாசம் ஒவ்வொன்னா மாத்துர.. நம்ம ஊரு வாத்தியார பார்த்து முதல்ல வாத்தியாரா மாறுன்னு சொன்ன அப்புறம் ஏழைகளுக்கு லோன் குடுக்குறாங்கன்னு பேங்க் ஆபிஸரா மாறுன்னு சொன்ன இப்ப போலிஸா மாறுன்னு சொல்லுற…  ஏம்மா இந்த வேலை..??”
 
ஹி….ஹி…ஹி… என்று சிரிக்க
போதும்மா வா….??” கதவை தட்ட போக பக்கத்து வீட்டு பெண்களும் அங்கே நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. துரையை பார்க்கவும் பயந்து போய் உண்மையான போலிஸ் என நினைத்து பவ்யமாக வர அவர்களை பார்த்து மீனாட்சி ஏத்தா இந்த துர்கா வீடு…??”
 
இதுதாங்க…கனி… ஏய் கனி கதவை திற யாரோ சொந்தகாரங்க போல  வந்திருக்காங்க??” இவர்கள் போய் கதவை தட்ட… சிறு நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டது… உள்ளே நுழைந்த மீனாட்சி.. அங்கு பயந்து போய் கண்ணில் கண்ணீர் வழிய மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்திருக்க.. அழுதழுது முகமே வீங்கி ரத்தபசையில்லாமல் வெளுத்துப் போய் இருந்தது பார்க்கவே பரிதாபமாக இருக்க… அவர்களை பார்த்தவர்.. நீங்க துர்கா பொண்ணுகளாடா..??”
 
கனி தலையை ஆட்ட நானும் உங்க அம்மா ஊருதாண்டா ??”தன் கையை சிறகு போல விரிக்க மூவரும் அவரை எட்டி அணைத்திருந்தனர்… அதில் ஒரு பருந்திடமிருந்து காப்பாற்ற சொல்லும் கோழிகுஞ்சின் நிலையில் அவரிடம் அவரே எல்லாம் என்பது போல சரணடைந்தனர்….
 
                                             இனி………..??????.

Advertisement