Advertisement

மீனாட்சி…தம்பி  நாம அடுத்த வாரம் நம்ம ஊருல இருக்கிற குலதெய்வத்துக்கு பொங்கல் வைச்சிட்டு நம்ம சொந்தத்துல ஒரு கல்யாணம் அதையும் முடிச்சிட்டு வந்துருவோம்பா..கனிக்கு நல்ல பட்டுச் சேலையா எடுத்துக்குடுத்திரு…. நல்லவேளை ஞாயிற்று கிழமையா கல்யாணம் வைச்சிருக்காங்க உனக்கு லீவு போடவேண்டாம்பாரு…. எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயங்காலமே போயிருவோம்பா…நம்ம வீட்ட கொஞ்சம் கழுவி சுத்தம் பண்ணி வைக்கச் சொல்லுறேன்….??”
 
ஏம்மா அங்கேயா….??”
 
ஏன் தம்பி இப்ப நாம கண்டிப்பா அங்க போய்தான் ஆகனும்…. உன்னையும் என்னையும் பேசினவங்க முன்னாடி நீ ஒன்னும் ஊதாரி இல்ல… பொம்பள பொறுக்கி இல்லை உன் பொண்டாட்டி உன்னோடத்தான் இருக்கான்னு காட்டவாச்சும் எல்லார் முன்னாடியும்  கம்பீரமா போகனும்பா…நானும் என்பிள்ளைய தப்பா வளர்க்கல… அவங்களைவிட நீ நல்லா மதிப்பு மரியாதையாத்தான் இருக்கன்னு காட்டனும்… என்னை தப்பா பேசினவங்க உன்னாடி நீ உங்க அப்பா மாதிரி கம்பீரமா நிக்கனும் உங்க அப்பா எப்படி பட்டவர்னு அங்க உள்ளவங்களுக்கு தெரியும்…. நீ போய் அவர் மகன்னு நெஞ்ச நிமிர்த்தி நில்லுப்பா..இப்ப. மறுத்து ஒன்னும் சொல்லாம கனிக்கு நல்லதா வாங்கிக்குடு …??”
 
மீனாட்சி பழையதை நியாபகப்படுத்தவும்  இவ்வளவு நேரம் தன் மனதில் இருந்த உற்சாகம் குறைய….அப்படியே தன்னுள் இறுகியவன் ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்திருந்தான்…. அந்த நாட்களை அவனால் மறக்கவே முடியவில்லை.. வேதனையுடன் கடந்த நாட்கள் அவை… அதிலும் அம்மாவை அந்த நிலையில் பார்த்துவிட்டு… எங்கே அவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவாரோ தான் அனாதையாகி விடுவோமோ என பயந்த நாட்கள் ஹாஸ்பிட்டலிலேயே பழியாய் கிடப்பான் முத்துராமனும் கதிரும் இல்லாவிட்டால் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது… இவ நம்மகிட்ட ஏன் ஒரு வார்த்தைகூட சொல்லாம போனா… கனியின் மீதும் அவ்வளவு கோபம் வெறுப்பு எல்லாம் இருந்தாலும் என்று அவளை பேங்க்கில் பார்த்தானோ அவளது தோற்றமே அவன் பாதி கோபத்தை குறைத்திருந்தது… அவளும் தன்னை விட்டு சென்று எந்த சந்தோசத்தையும் அடையவில்லை துன்பத்தைத்தான் பெற்றிருக்கிறாள் என்பதை அவளின் லோன் அமௌண்ட்டில் இருந்தே கண்டு கொண்டான்…. இவகிட்ட போய் எப்படி கோபத்தை காட்டுவது என்றுதான் அமைதியாக இருந்தாலும் இன்று தன் தாய் அவர்கள் பேசியதை நியாபகப்படுத்த…. என்னால பொண்டாட்டிய வைச்சு குடுத்தனம் நடத்த தெரியாதா…இவ மட்டும் என்னை கணவனா ஏத்துக்கிட்டா இவள தங்கத்தட்டுல வைச்சுத்தாங்குவேன் என நினைத்தவன். ஆனால் கண்டிப்பாக இந்த முறை கனி தன்னை விரும்புவதை தெரிந்து கொள்ளாமல் அவளுடன் வாழ்க்கையை துவங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்….
துரை கடைக்கு செல்ல கிளம்பிவர… கனியும் அவனும் அவனுடைய ஜீப்பிலேயே கிளம்பியிருந்தனர்… துரை ஒன்றும் பேசாமல் வர கனியும் அத்தை சொன்னதையே நினைத்துக் கொண்டு வந்தாள்… இந்த வாரம் ஊருக்கு போறதா… அப்ப அத்தைய பேசினவங்க கண்டிப்பா அங்க வருவாங்களோ…..நம்மையும் என்னமாச்சும் இவங்கள பத்தி கேப்பாங்களோ… இப்பவே அவளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது….
 
இருவரும் முதலில் நகைக்கடைக்கு வர அவளை தேர்ந்தெடுக்க சொன்னவன் அவன் தன் போக்கில் தன் செல்போனில் மூழ்க… கனிதான் இப்போது முழித்துக் கொண்டு இருந்தாள்… அவங்க மூனு பேரும் சொன்னாங்க… இவங்க அப்படி டிசைன் டிசைனா பார்த்து வாங்குவாங்கன்னு இவங்க என்னன்னா போனுக்குள்ள தலைய குடுத்திட்டு உட்கார்ந்திருக்காங்க… ஒரு நகை செட்டை தேர்ந்தெடுத்தவள்…
 
ஏங்க இது நல்லா இருக்கா ??”அவனிடம் வந்து கேட்க…..
 
 ம்ம்ம் நல்லாயிருக்கு உனக்கு புடிச்சிருந்தா வாங்கு …….??”
 
சொல்லியபடி மீண்டும் போனை பார்க்க பல்லை கடித்தவள்… தனக்கு பிடித்த ஒரு செட்நகையை வாங்கியவளுக்கு தெரியவில்லை துரை முதல் முதலாக கனிக்கு கொலுசு வாங்கத்தான் நகைக்கடைக்கு வந்தான் என்று… அவன் தாய் எப்போதும் ஒரு கறுப்பு பாசித்தோடு…இல்லையென்றால் வெள்ளைக்கல் தோடு…. கழுத்தில் ஒரு ரெட்டைவடம் முகப்பு வைத்த சங்கிலி மட்டுமே அணிந்திருப்பார்… கைகளில் கெட்டி நெளிக்காப்பு… பவள மோதிரம் எப்போதும் நகைகடைக்கெல்லாம் வந்ததில்லை… நகை ஆசாரியிடம்தான் செய்ய சொல்லி வாங்குவார்… அதனால் இவனுக்கும் நகையை பற்றி எதுவும் தெரியவில்லை…
 
இது தெரியாமல் கனி துரையை மனதிற்குள் தாளித்துக் கொண்டிருந்தாள்… இவங்க எதுக்கு வேண்டா வெறுப்பா வரணும்… கொலுசை பார்த்தவள் ஒரு கொலுசை தேர்ந்தெடுக்க அவன் கொலுசே…. வேண்டாம் என தடுத்துவிட்டான்… தங்கச்சிகளுக்கு மட்டும் நல்ல முத்து வைச்ச பெரிய கொலுசா வாங்கி குடுத்திருக்காரு…. இன்னும் கடுகடுத்தபடி துணிகடைக்கு வர அங்கும் அவன் எதையும் எடுக்காமல் தன் போக்கில் போனிலேயே இருக்க இவளுக்குத்தான் கண்கலங்கி கண்ணீர் வரபார்த்தது… நம்மகூட வந்தது இவங்களுக்கு பிடிக்கலை போல… நம்மளயும் இவங்களுக்கு பிடிக்கலையோ…அவங்க மூனு பேரும் என்னன்னமோ சொன்னாங்க… அப்புடி எடுப்பாங்க இப்புடி டசைன் பார்ப்பாங்கன்னு ஆளப்பாரு அப்புடியே புடிச்ச வைச்ச பிள்ளையார் மாதிரி போனையே பார்க்கிறத…. இவங்ககூட போய் வந்தேன்பாரு பேசாம அத்தையோடவே வந்திருக்கலாம்…திட்டும் சாக்கில் அடிக்கொருதரம் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கொஞ்ச கொஞ்சமாக அவள் மனதிற்குள் வந்து கொண்டிருந்தான்… வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றவனை… திட்டும் சாக்கில் சைட் அடித்துக் கொண்டிருந்தாள்…. அவன் தன்னை கவனிக்காமல் போனை கவனிக்கவும் கனிக்கும் உற்சாகம் குறைந்தது வந்ததற்கு குறைந்த விலையில் ஒரு ஐந்து சேலை மட்டும் எடுத்துக் கொண்டாள்… ஊருக்கு கட்டிச் செல்ல பட்டுசேலை மட்டும் எடுத்துக் கொண்டு போகலாம் என சொல்ல துரைக்குமே பெண்களின் துணிமணிகளை பற்றி தெரியாததால்…. கனி எதை எடுத்தாள் என்பதை பார்க்ககூட இல்லை… பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வர…..
 
வேற எதுவும் வேணுமா…??”.
 
வேண்டாம் ??”என தலையை ஆட்ட ஜீப்பை கிளப்பியிருந்தான்… மீனாட்சி கனியிடம் மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு வரும்படி சொல்லியிருக்க கனிக்கு இப்போதிருக்கும் மனநிலையில் முதலில்….. வீட்டுக்கு போனால் நன்றாக இருக்கும் என நினைக்க வந்ததிலிருந்து கனி எதுவுமே சாப்பிடாமல் அலைந்ததால் நல்ல வெயிலில் பசி மயக்கமே வரும் போல இருந்ததால் ஜீப்பை எடுத்த பத்து நிமிடங்களில் நல்ல உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்… தூக்கத்தில் சாமியாடியவள் கொஞ்சநேரத்தில அவள் தோளில் சாய…துரைக்கு காலையில் தன் தாய் பேசியதிலிருந்து….இது நேரம் வரை தன் மனதில் இருந்த அந்த உறுத்தல் மெதுவாக மறைய துவங்க ஒரு கையால் அவள் தலையை வருடியபடி மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டவன் உற்சாகத்தோடு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்….
 
வீட்டிற்கு வந்தவர்கள் வாங்கிவந்ததை வீட்டில் காட்ட ஹரிணியும் ரம்யாவும் வாங்கியதில் கால்வாசிகூட இவள் வாங்கவில்லை… அக்காவின் முகத்தை பார்த்தவர்கள் அவள் முகத்தில் மகிழ்ச்சியை காணாமல்…ச்சே… அக்கா ஏன் இப்படி இருக்கா… துரையும் இப்போதுதான் கவனித்தான் என்ன… இவ இதமட்டும்தான் வாங்கியிருக்கா…ச்சே நாமளும் இவவாங்குனத பார்க்காம விட்டுட்டமே…பணம் கட்டும் போதுகூட கவனிக்கலை கொஞ்சமா இருக்குன்னு… அப்ப இப்பவும் நம்மகிட்ட காசு வாங்க யோசிக்கிறாளா.. .கனியும் துரையும் இன்னும் நெருங்குவார்கள் என நினைத்து அவள் தங்கைகள் செய்தது அவர்கள் இன்னும் விலகத்தான் வழி செய்தது… கனியோ இவங்க நாம வீட்டவிட்டு போனத மறக்கலை… ஹரிணியையும் ரம்யாவையும் ஏத்துக்கிட்ட அளவுக்கு நம்மள மன்னிச்சு ஏத்துக்கலையோ……
 
அடுத்தடுத்து வந்த நாட்களில் வீட்டோடு ஒத்துப்போனவள் துரையிடம் மட்டும் விலகித்தான் இருந்தாள்…. துரையோ அப்ப இப்பவும் நம்ம மனைவியா வரலை மாமா மகளாத்தான் வந்திருக்காளோ….  தன் மனக்காயத்தை மூடிவைக்க நினைக்க அது புண்போல புறையோடிப்போகும் என நினைக்கவில்லை… என்னதான் அவன் நெஞ்சுமுழுவதும் அவள் மேல் காதல் இருந்தாலும் ஒரு ஆண்மகனால் அவள் தன்னைவிட்டு போனது  நெஞ்சில் பெரிய காயத்தையும் ஏற்படுத்தியிருந்தது….
 
நாட்கள் கடகடவென ஓடி வெள்ளிக்கிழமையும் வர அன்று மாலை சீக்கிரமாகவே வீட்டிற்கு வருவதாக சொல்லி அவர்களை கிளம்ப சொல்லியிருந்தான்… மீனாட்சி தன் தம்பி குடும்பத்தையும் வரச் சொல்ல முத்துராமனும் அவர் சொல்லாமலே கிளம்பியிருந்தார்…. அவர்கள் அன்று பேசியது போல இன்று எதுவும் பேசிவிடக்கூடாது… அதை தாங்கும் சக்தி தன் அக்காவுக்கு கண்டிப்பாக இல்லை என்பதை உணர்ந்தவர் … இந்த முறை அப்படி பேசினால் அவர்களை சும்மா விடுவதாகவும் இல்லை என்பதை உணர்ந்திருந்தார்…
 
துரை தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தவன் பெண்களை பார்க்க அனைவரும் கிளம்பி  புதுத்துணியில் புதுநகைகளோடு  தேவதை போல தெரிந்தனர்… கதிர் காயத்ரியின் அலங்காரத்தில் அப்படியே பிளாட் ஆகியிருந்தான்…
 
கனியும் கிளம்பி தன் அறைக்கு வந்தவள் துரைக்கு காப்பியை கொடுக்க….. அவளை நிமிர்ந்து பார்த்தவன்… அவள் அலங்காரத்தை ரசித்து பார்த்தபடி காப்பியை ரசித்து அருந்த அந்த ரோஜா வண்ண சேலையில் ஒரு புது ரோஜாவை போல இருக்கவும்…. அவளை மேலிருந்து அங்குலம் அங்குலமாக ரசித்தவனை ரம்யாவின் குரல்
 
மச்சான் வேகமா கிளம்புவிங்களாம்… அத்தை சொல்லச் சொன்னாங்க…??” சொல்லிவிட்டு ஓட அவள் கொலுசொலி அவன் சிந்தையை கலைத்தது தன் பீரோவை திறந்தவன் ஒரு பையை எடுத்து அவளிடம் கொடுக்க….
 
என்ன…??’ என்றபடி திறந்து பார்த்தவள்…. அப்படியே அதிர்ச்சியில் நின்றிருந்தாள்… இது….அது அவன் கனியின் பிறந்தநாளுக்காக வாங்கி கொடுத்த கொலுசு…. தமிழிடம் கொடுத்தது….
 
இத அக்காக்கிட்ட குடுத்தனே…??”
 
ஆமா ஒருத்தர் கிப்டா ஒரு பொருளை உனக்கு குடுத்தா நீ வேணா நாகரிகம் இல்லாம அடுத்தவங்ககிட்ட குடுக்கலாம்… அத கொடுத்தவங்க மனசு என்ன பாடு படும்னு தெரியவேண்டாம்….??”
 
அது…. அது அன்னைக்கு குடுக்கும் போது… அத எப்படி வெளியில சொல்லுறதுன்னு தெரியாம…??”கனிக்கு அந்த குற்ற உணர்ச்சி இப்போது வர….
 
அவளை பார்த்து முறைத்தவன்… அன்னைக்கு எல்லார் முன்னாடியும் போட முடியலைனா  நான் இத்தன வருசம் வைச்சிருந்த மாதிரி ஒரு பெட்டிக்குள்ளகூட போட்டு வைச்சிருக்கலாம்ல…ஆனா அத கொடுத்த என் கண்முன்னாடியே தமிழ் கையில கொடுத்து என்னை அவமானப்படுத்திட்டல்ல??”
 
ஐய்யய்யோ…. நாம இவங்கள அவமான படுத்திட்டமா  அப்ப இத கொடுக்காம வைச்சிருந்திருக்கலாமோ…..ச்சே… நாம நினைக்கிறது எல்லாமே இவங்க பக்கம் உல்டாவாவே மாறிருது…. இல்ல இத அக்காக்கிட்டதானே கொடுத்தேன்….??”
 
தமிழிடம் தான் இதை வாங்கப்பட்ட பாடு…. ஹப்பா இன்று நினைத்தாலும் சிரிப்பு வந்தது… அப்பா அடங்காதவ இந்த கொலுசு வாங்கின காசவிட ரெண்டு மடங்கு காசு குடுக்கவும்தான் கொடுத்தா…எவ்வளவு கேள்வி கேட்டா நாமளும் எவ்வளவு பொய் சொன்னோம்… ம்ம்ம் குட்டிப்பிசாசு தமிழை நினைத்து சிரித்தவன்…
 
இப்பவாச்சும் தைரியமா போடுவியா இல்லை வேற யார்கிட்டயாச்சும் குடுக்க போறியா…??”
இல்ல இல்ல…. போடுறேன்..??”. அவசர அவசரமாக சொல்லியபடி கொலுசின் திருகை கழட்டமுடியாமல் சிரமப்பட்டவளை பார்த்தவன் அவளிடமிருந்து வாங்கி திருகை கழட்டி அவள் காலில் அணியப்போக…..
 
குடுங்க நானே போட்டுக்குறேன்….??”
 
கட்டிலில் அமர்ந்தவன் பரவாயில்ல இங்க வா ??”அவளை தன் பக்கத்தில் அமர்த்தியவன் அவள் காலை எடுத்து கட்டிலில் வைத்து அந்த கொலுசை அணிய…. அந்த கொலுசு அவள் காலிற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது… அதை ரசித்தவன்…. கண் அவள் கால்விரலுக்கு செல்ல அந்த முத்துவைத்த மிஞ்சியில் முத்தமிட தோன்றியது…. இன்று காலையில்தான் கனி அடகு வைத்திருந்த சங்கிலியை மீட்டவன் அதில் வசந்தா தாலியை கோர்த்து கொடுத்திருக்க சாமி அறையில் சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி எடுத்து தர அதை கனியின் கழுத்தில் அணிவித்திருந்தான்… இந்த ஒரு வாரமாக இருவரிடமும் பேச்சு குறைந்திருந்தாலும் இருவருமே மனதால் பேச துவங்கியிருந்தனர்… கட்டிலில் ஒருவர் இல்லாமல் மற்றவரால் படுக்க முடியவில்லை…
 
கனிக்கு கொலுசை மாட்டியவன் அவள் நடந்து காட்டவும் அவள் முகத்தை பார்த்தவன்… நம்ம பொண்டாட்டிக்கு….. இந்த பத்து நாளுல கன்னத்துல கொஞ்சம் சதை போட்டுருச்சு போல… ஆஹா இப்ப ஒரு முத்தம் குடுத்தா நல்லா இருக்குமே என்ன பண்ணலாம்…யோசித்தவன்… கட்டிலில் இருந்தபடியே காலை மெதுவாக நீட்ட தன் கொலுசின் அழகை நடந்து பார்த்துக் கொண்டிருந்தவள் துரையின் காலை கவனிக்காமல் நடக்க அவன் கால் இடறி அவன் மேல் பொத்தென விழுந்திருந்தாள்…. அவள் தடுமாறி மோதியதில் அவள் முகம் துரையில் மார்பில் மோத அவள் உதடு அவன் நெஞ்சில் முத்தமென பதிந்திருந்தது…..அவன் கை அவள் வெற்றிடையை அழுத்தியிருந்தது….
                                                                                                                                            
 
                                     இனி……………??????

Advertisement