Advertisement

மனதால்  உன்னை சிறையெடுப்பேன்
 
     அத்தியாயம்  –   17
 
எனக்கு நீங்கதான் வேணும் நீங்கதான் வேணும் ??”என சிறுபிள்ளை போல அடம் பிடித்துக்கொண்டு தன் மேல் தலகாணியால் அடித்தவளை தலகாணியோடு சேர்த்து பிடித்தவன்…
 
இப்ப  நீ என்ன சொன்ன…??”
 
என்ன சொன்னேன்…….??” யோசித்தவள் என்னை நீங்கதான் கடைக்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னேன்…. ஏன்…??” அவளுக்கு தன்னை மீறி சொன்னது நியாபகத்திற்கு வரவில்லை….
 
அதானே பார்த்தேன்….. இவள…பட்டென்று கையை எடுத்தவன் அவன் பக்கம் வந்து கட்டிலில் படுக்க அவன் பிடிக்கவும் அவன் மேல் பேலன்ஸ் செய்து நின்றிருந்தவள்…. அவன் கையை பட்டென்று எடுக்கவும் பொத்தென்று கீழே விழுந்திருந்தாள்…. அம்மாவென இடுப்பை பிடித்தபடி கிடக்க… துரை கனி கீழே கிடப்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் படுத்துவிட்டான்….ஒரு நிமிசம் நாம என்னன்னமோ நினைச்சுட்டோம்… இவ அங்கயே கிடக்கட்டும்….
 
இன்று கடைக்கு போகும்போது ஹரிணியும் ரம்யாவும் கெஞ்சி கூப்பிட்டும் கனி வரவில்லை என சொல்ல.. இவர்களும் காயத்ரியும் வருத்ததோடுதான் சென்றார்கள்….  கதிர் அவர்களை அழைத்துச் சென்றவன் துரையின் பேங்க்கிற்கு அருகில் வந்து போன் செய்யவும் வெளியில் வந்த துரை தன்னுடைய ஏடிஎம் கார்டை கதிரிடம் கொடுத்துவிட்டு….
 
 நீங்களே வாங்குங்க எனக்கு இன்னும் ஒரு அரைமணி நேரம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துருறேன் மாப்புள்ள… அவங்க என்ன கேக்குறாங்களோ பார்த்து வாங்கி குடு….??”
 
டேய்….. இத முதல்ல பிடி…..??”ஏடிஎம் கார்டை அவன் கையில் கொடுத்தவன் அப்பா காசு குடுத்துவிட்டுருக்காருடா… நானும் அப்பாவும்தான் தங்கச்சிகளுக்கு வாங்கி குடுக்கனும்… காலையிலேயே அப்பா சொல்லிட்டுத்தான் போனாங்க… இவங்க ரெண்டு பேருக்கும் இப்ப போடுற மாதிரி மட்டும் சிம்பிளா எடுத்துக்குடுக்கச் சொன்னாங்க… கல்யாணம்னு வந்தா அப்பத்தா தன்னோட நகைகளையும் வீட்ல இருக்குற பழைய மாடல் நகைகளையும்  மாத்திக்கலாம்னு சொல்லிட்டாங்க.. அம்மாவும் அவங்களோடது கொஞ்ச நகைகள் இருக்கு அதெல்லாம் கனிய கடைக்கு கூட்டிட்டு வந்து புதுமாடலா மாத்தி குடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க… நீ மெதுவா வேலைய முடிச்சிட்டு வா நாங்க நகைய போய் பார்த்து வாங்குறோம்….??”
 
இல்லடா என்கிட்ட பணம் இருக்கு …. இதுலயே வாங்கிக்குடு…??”
 
இருக்கட்டும் மாப்புள்ள என் தங்கச்சிகளுக்கு நாங்க செய்யுறோம்…. பின்னாடி நீ வாங்கிகுடு…சீக்கிரமா வந்துரு..??”.
 
டேய்…டேய்   அப்ப காயத்ரிகாச்சும் இந்த காசுல வாங்கிக்குடு…??”
 
வேண்டாம்டா…??”
 
இதோ பாரு நீ உன்தங்கச்சிகளுக்கு வாங்கி கொடு நான் என்னோட தங்கச்சிக்கு வாங்கித்தாறேன்…. மரியாதையா புடி….??” இக்கட்டான சூழ்நிலையில் காயத்ரி மட்டும் உதவி செய்யவில்லை என்றால் இன்று பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளை தினமும் பேப்பரில் …டிவியில் பார்த்தவர்கள் கனியையும் அவள் தங்கைகளையும் கடவுளால் கூட காப்பாற்றியிருக்க முடியாது என்பதை கண்கூடாக கண்டார்கள்…
 
நல்ல வேளை மாப்புள்ள காயத்ரியையும் நம்ம தங்கச்சின்னு சொல்லாம அவனோட தங்கச்சின்னு சொன்னானே..??”.காரில் அமர்ந்திருந்த காயத்ரியை பார்த்தபடி சொல்ல….
 
மூவரையும் கடைக்கு கூட்டிச் சென்றவன் சிம்பிளாக ஒரு செட் நகையும் கொஞ்சம் பெரிதாக ஒரு செட் நகையும் எடுத்திருக்க இவர்கள் மூவரும் அந்த நகைகடையை பார்த்து அதிசயித்து போயிருந்தனர்… எவ்வளவு நகைகள்… டிசைன்கள்…. விளம்பரங்களில் பார்த்தது போல பெரிய கடையாக இருக்க கதிர் டிசைனை பார்த்து பார்த்து தேர்வு செய்தான்..கொக்கி சரியாக இருக்கிறதா..திருகு சரியாக இருக்கிறதா என கவனத்துடன் வாங்க பெண்கள்தான் வாய்பிளந்து நின்றனர்….கதிரோடு தான் தமிழ் எப்போதும் நகைகடைக்கு வருவாள்… நிறைய டிசைன்களை அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பான்…. கதிரின் தாத்தா காலத்திலிருந்து கதிர் குடும்பம் விவசாயத்தோடு…..வட்டிகடையும் நடத்தி வருகிறார்கள்.. .நல்ல வசதி பெரும்பாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ரொம்பவும் சிம்பிளாகவே இருப்பார்கள்…  முத்துராமனும் தன் தம்பி மகள்களுக்கு வேண்டியை வாங்கி கொடுக்கும்படி சொல்லி பணம் கொடுத்திருந்தார்… தன் தம்பியின் இடத்திலிருந்து இனி எல்லாப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்ள வேண்டும் அவர்கள் இருவரையும் நம்வீட்டில் வைத்துக் கொள்ள அக்காவிடம் கேட்க வேண்டும் என முடிவு செய்திருந்தார்… கதிர் காயத்ரிக்கும் தேர்ந்தெடுக்க அவனை வேண்டாம் என தடுத்தவள் தன் பாட்டி கொஞ்சம் நகைகள் தனக்காக சேர்த்து வைத்திருப்பதாக சொல்லி  ஒரே ஒரு மோதிரத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள்…கதிர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை….
 
அடுத்து துணிக்கடைக்கு அழைத்து சென்றவன் அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து வரும்வரையில் கூட துரை வேலைமுடித்து வரவில்லை…. இவர்கள் வெளியில் வந்து துரைக்கு போன் செய்யும் போதுதான் அவன் வேலை முடிந்ததாக சொல்ல இவர்களை அங்கிருந்த ஐஸ்கிரிம் கடைக்கு அழைத்து சென்றவன் துரைக்காக காத்திருந்து அவன் வரவும் அரட்டை  அடித்தபடி ஐஸ்கிரிம் சாப்பிட்டு வீட்டிற்கு வர மணி 10….
 
 
ஹரிணியும் ரம்யாவும் பிறந்ததிலிருந்து தந்தையை  பார்த்ததில்லை…கதிர் மூலமாக சகோதரனின் அன்பை முழுதாக பெற்றவர்கள் துரையை பார்க்கும் போது ஒரு தகப்பனாகவே தோன்றினான்… என்று தங்கள் தாய் இறந்து கனி தங்களை தாய் போல பார்த்துக் கொண்டாளோ….. அவளின் கணவன் தங்களுக்கு மச்சானாக இருந்தாலும் தந்தையாகவே கருதினர் அவனும் அவர்களிடம் அப்படியே அன்பு செலுத்தினான்…  கடவுளே… நம்ம அக்கா மச்சானோட சந்தோசமா இருக்கனும் அதுக்கு நம்ம ஏதாச்சும் செய்யனும் என்று நினைத்தவர்கள் இருவரும் இன்னும் நேரடியாக பேசி இவர்கள் பார்க்கவில்லை…தங்களிடம் பேசும் அளவிற்குகூட மச்சான் அக்காவிடம் பேசவில்லை… வீட்டை விட்டு சொல்லாம வந்ததால கோபமா இருக்காங்களோ…
 
 என்ன செய்வது என்று யோசித்தவர்களுக்கு ஒரு யோசனை தோன்ற…. இன்று கடையில் இருந்து வந்தவர்கள்… வந்ததிலிருந்து கதிர் தங்களுக்காக செய்த அனைத்தையும் துரை செய்தது போல ஆஹா… ஓஹோ என புகழ காயத்ரிக்குத்தான் எதுவும் புரியவில்லை… இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்லுறாங்க.. அண்ணா நாம கிளம்பும் போதுதானே வந்தாங்க… இவங்கதானே எல்லாம் வாங்கிக்குடுத்தாங்க இவள் சொல்ல வர ஹரிணி காயத்ரியின் தொடையில் கைவைத்து கண்ணால் சைகை செய்தவள் அவளை தனியாக அழைத்து சென்று தங்களுக்கு உதவும்படி சொல்ல… அவளும் தன் பங்குக்கு துரையை புகழ முதல் முறையாக இவர்கள் அனைவரும் ஒன்றாகவும் தான் மட்டும் தனியாக இருப்பது போல தெரிந்தது… இவர்கள் மேல் பொறாமையும் வந்தது …..
 
ச்சே…ச்சே…. நம்மளயும்தானே வரச் சொன்னாங்க நாம முதல்லயே போயிருக்கலாம்…இதுவரை தானே பெரியமனுசி போல எல்லாவற்றையும் முடிவு செய்தவள் இன்று தன் தங்கைகள் சொல்லியதை கேட்டதிலிருந்து தனக்காகவும் இந்த மாதிரி யாராச்சும் பார்த்து பார்த்து வாங்கி தர மாட்டார்களா என்ற ஏக்கம் எழுந்தது…இன்று தன் தங்கைகளை பார்த்துக் கொள்ள ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடும்பம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டாள்…எப்போதும் தங்கைகள் வாழ்க்கை அவர்களின் எதிர்காலம் என்ற சிந்தனையிலே  இருந்தவள் முதல்முறையாக தன்னை பற்றியும் சிந்தித்து தானும் துரையோடு கடைக்கு சென்று வரலாம் என ஆசைப்பட….. இது எதையும் அறியாத துரை ஹரிணி தான் துணிக்கடையில் ஏதோ மாற்றம்வேண்டும் என சொல்ல துரை தனக்கு லீவுதான் தானே நாளை அழைத்து செல்வதாக சொல்லியிருந்தான்… இன்று அவர்களோடு கடைக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தவன் உடனே தானே அழைத்து போவதாக ஒத்து கொண்டிருக்க…
 
 கனியோ துரையோடு கடைக்கு சென்று அவர்கள் சொன்னது போல நல்ல நல்ல டிசைன்களை இவளுக்காக பார்த்து வாங்குவது போலவும்… துணிக்கடைக்கு சென்று எந்த கலர்… சேலை தனக்கு பொருத்தமாக இருக்கும் என துரை தனக்கும் வாங்கி கொடுப்பது போலவும் கனவு கண்டவள்… அதிலேயே மகிழ்ந்து… அதை எப்படி கேட்பது என்றுதான் அந்த அறையில் யோசித்துக் கொண்டிருந்தாள்…. தயங்கினாலும் அவனிடம் கேட்டுவிட அவனோ அத்தையுடன் கடைக்கு செல்ல சொல்ல ஏமாற்றமாக இருந்தாலும் கண்டிப்பாக அவனோடு போயே ஆகவேண்டும் என்ற வீம்பும் கூடவே வந்தது… அது திருமணமான ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் தனக்கு மட்டும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்ற உரிமை உணர்வு என்பது அவள் அறியாமலே அவளுக்குள் வந்திருந்தது….
 
 
கீழே விழுந்து கிடந்தவள் இடுப்பு வலியோடு எழுந்து துரைக்கு அருகில் வந்து பார்க்க அவன் எப்போதோ உறங்கியிருந்தான்… மறுநாள் அழகான பொழுதாக விடிய அவள் வாசலில் கோலம் போடும்போதே அவன் தன் காலை நேர வாக்கிங்கை துவங்கியிருந்தான்… வரும்போதே அவள் ரங்கோலி கோலத்தை ரசித்தவன் அவளை தோப்புவீட்டில் ரசித்தது நினைவுக்கு வந்தது… இவள் தன் காலை நேர வேலைகளை துவங்கியவள்  தன்வீட்டில் வேலையை முடித்துவிட்டு வசந்தாவுக்கும் அப்பத்தாவுக்கும் உதவிகள் செய்துவிட்டு வந்தாள்….. சீக்கிரமே சமைத்துவைத்துவிட்டு இருந்ததிலேயே நல்லசேலையை கட்டி தயாராகி இருக்க அதை கண்டும் காணாமல் இருந்த துரை …
 
ஆஹா மேடம் என்ன கிளம்பிட்டாங்களா..வேண்டும் என்றே…. தன் அம்மாவை அழைத்தவன் கனியை கடைக்கு அழைத்துச் செல்லும்படி சொல்ல…. அவனுக்கு தெரியும் தன் அம்மா வர மாட்டார்கள் என்று
 
 
பல்லை கடித்தவள் என்ன மறுபடியும் அத்தையோட போகச் சொல்லுறாங்க… இப்ப என்ன பண்ணுறது என்று யோசித்து தன் யோசனைக்கு ஒன்றும் தோன்றாமல் கடுப்போடு கிளம்பிக் கொண்டிருந்தவள்… தங்கைகள் ஏதாவது கேட்டால்கூட எறிந்து விழுந்து கொண்டிருந்தாள்…. அக்காவுக்கு என்னாச்சு… இருவரும் யோசிக்க…
 
ஏண்டி நேத்தே கடைக்கு போனிங்கள்ல அப்பவே எல்லாத்தையும் பார்த்து வாங்க வேண்டியதுதானே… எதுக்குடி இன்னைக்கும் அவங்கள வரச்சொல்லுற….??”
 
ஹரிணியும் ரம்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தவர்கள்…. எவங்களக்கா….??”
அதுவந்து…. வந்து தயங்கியவள் அங்கு வந்த துரையை காணவும் இவங்களதாண்டி பக்கிகளா….??”
 
ஹரிணி சாப்பிட்டியாம்மா… கிளம்பிட்டா கடைக்கு போய்ட்டு வந்துரலாம்.??” கனியோ யேய் ஹரிணி வரலைனு சொல்லுடி…சொல்லு மனதிற்குள் உருபோட….
 
தன் அக்காவின் முகத்தை பார்த்தவள்… இல்ல மச்சான் நீங்க அக்காவ கூட்டிட்டு போயிட்டு வாங்க… எங்களுக்கு எது பொருத்தம்னு அக்காவுக்குத்தான் நல்லாத்தெரியும்…??”
 
அங்கு வந்த மீனாட்சி….. எனக்கும் இந்த வெயில் ஒத்துக்க மாட்டேங்கிது…நீ கனிய கூட்டிட்டு போய்ட்டு வந்துரு.. கனி நீ இவனோடயே போய்ட்டு வந்துருத்தா…??”
 
ம்ம்ம்…சரித்தே….??” இப்ப என்ன செய்விங்க என்ற மிதப்போடு கிளம்ப
 

Advertisement