Advertisement

 
 இவங்க மட்டும் நாமள பார்த்த அன்னைக்கே அத்தைக்கிட்ட சொல்லி  வரவேண்டாம்னு தடுத்திருந்தா யார் என்ன பண்ணியிருக்க முடியும் அதோட அவங்க வீட்டையே குடுத்து நமக்கு உதவிதானே பண்ணினாங்க…
நாம வீட்ட விட்டு போனா அந்த லூசு சொந்தகாரங்க இவங்கள எப்படி தப்பா பேசலாம்… குரங்கு பயலுக வெளங்காதவன்க… எம்புட்டு திமிரு….. பத்தாததுக்கு அத்தையையும் தப்பா பேசியிருக்காங்க… டேய் ஒரு நாளைக்கு உங்கள நேர்ல பார்த்தேன் அன்னைக்கு இருக்கு உங்களுக்கு…
பல்லை கடித்தவள் தன் முகத்தை கழுவி துரைக்கு பால் கொண்டு ரூமுக்குள் வர….துரை செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்… அவன் அருகில் வந்தவள் துரையை எப்படி கூப்பிடுவது என தயங்கி நிற்க மாலைதான் அப்பத்தா கனியையும் தங்கைகளையும் மச்சான் என அழைக்க சொல்லியிருக்க அவர்களும் அப்படியே உரிமையுடன் அழைத்தனர்….தன்னைத்தான் அவன் கண்டு கொள்ளவும் இல்லை… பேசவும் இல்லை…
 கனி அந்த அறைக்குள் வரும்போதே துரை பார்த்துவிட்டான்… இவ என்ன இங்க வாரா… இவ தங்கச்சிகளோட படுத்திருப்பான்னு நினைச்சேன்… கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க… அவன் அருகில் பேசாமல் சற்று நேரம் நின்றவள் அவன் தன்னை நிமிர்ந்து பார்க்காமல் போனிற்குள்ளேயே தலையை கொடுத்திருக்க…
 சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…. ம்ம் இந்தாங்க பால்..??”.
 அவளை பார்த்தவன்… பாலா… அத ஏன் நீ கொண்டு வந்திருக்க… ??”
 இல்ல….அத்தை படுத்திட்டாங்க …. அதான்…??”
 அது பரவாயில்ல…. பாலை ஹரிணிக்கிட்டயோ… இல்ல ரம்யாகிட்டயோ குடுத்துவிட்டிருக்கலாம்ல…??”
 அவன் தன்னிடம் பேசவும் சந்தோசப்பட்டவள்… இப்படி பேசவும்….கனிக்கு கோபம் லேசாக வர ஆரம்பித்தது அது என்ன அவங்க மட்டும் குடுக்கலாம் ….. நான் குடுக்க்கூடாதா…??”
 அவங்க என்னோட மாமா பொண்ணுங்க… இங்கேயே என்கூட இருக்க போறாங்க… நீ நாளைக்கே வேற யாரயாச்சும் கல்யாணம் பண்ணி வேறவீட்டுக்கு போக போறவ… எதுக்கு தேவையில்லாம உனக்கு வேலைவைக்க…??” அவளையே ஊடுருவியபடி அவளிடம் இருந்து போட்டு வாங்கிக் கொண்டிருக்க…
 
பாலை அவனிடம் கொடுத்தவள் தன் இடுப்பில் கைவைத்து நான் சொன்னனா வேற ஆள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு… பாவம் நீங்க வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொன்னேனே தவிர நான் எப்பவும் வேற ஆள கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கவே இல்லை…??” படபட பட்டாசாய் பொரிய…..
 
வாடி என் மாமன் மகளே….அப்ப நீ வேற யாரயும் கட்டிக்க போறதில்லையா…??”.
 
இல்லை…. இல்லை…. இல்லை…??”
 
அப்ப நீ என்கூடத்தான் கடைசிவரைக்கும் இருக்க போறியா…??”
 
ஆமா…ஆமா… ஆனா நீங்க வேற யாரவேணா கட்டிக்கலாம் நான் கடைசிவரைக்கும் அத்தையோடயே இருந்துக்குவேன்…??”
 
பல்லை கடித்தவன் அந்த ஈரவெங்காயம்தான் எனக்கு தெரியுமே உன்னை…. அப்ப நீ அந்த மூலையில ஒரு பாய விரிச்சு படு….??”இகழ்ச்சியாக சொல்ல
 
நான் என்ன உங்கவீட்டு வேலைக்காரியா..இது எங்க அத்தை வீடு…..அத்தை என்ன இங்கதான் படுக்க சொன்னாங்க…. நீங்க வேணா போய் மூலையில படுங்க … இந்த கட்டில்தான் இவ்வளவு பெரிசா…..ஆஆஆ இருக்கே நான் ஒரு மூலையில படுத்துக்கிறேன்… நீங்க அந்த மூலையில படுத்துக்கோங்க….??” தலகாணி ஒன்றை எடுத்தவள் கட்டிலில் ஓரத்தில் போட்டு படுக்க…. துரை விளக்கை அணைத்துவிட்டு விடிவிளக்கை போட்டவன் அவளை பார்த்தபடி மறுபக்கம் படுத்தான்…..
 
திருமணம் முடிந்த அன்று அரவிந்தோடு பேசிவிட்டு கனியை பார்க்கும் ஆவலில் சந்தோச மனநிலையில் வந்தவனுக்கு அப்பத்தா சொன்னதை நம்பவே முடியவில்லை… நம்மள விட்டு போயிட்டாளா….
முதலில் வருத்தத்தில் இருந்தவனுக்கு நேரம் ஆக ஆக இவ எப்படி போகலாம் கோபமே பிரதானமாக வந்தது… அவளை தேடி அலைய… கண்ணில் மட்டும் கண்டிருந்தால் கொல்லும் வெறியில் இருந்தான்… ஆனால் தன் மாமாவின் மகள் என தெரிந்ததும் அவன் மனதில் ஒரு நம்பமுடியாத சந்தோசம் வந்தது…
எப்படியும் கண்டிப்பாக அவளை கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்தவனுக்கு அடுத்தடுத்து தன் அப்பா வீட்டு உறவினர்களால் வந்த பிரச்சனையில் கனியை தேடுவதைவிட தன்தாய்தான் முக்கியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டவன்…
 
 வேலைக்கு சேர்ந்த இந்த இரண்டு நாளிலேயே கனி தான் தேடாமல் தன்னை தேடி வருவாள் என கனவிலும் நினைக்கவில்லை… அடிப்பாவி இப்படி பக்கத்து ஊருல இருந்துக்கிட்டுத்தான் என்னை இந்த பாடு படுத்துனியா…
பல்லை கடித்தவன் இன்னைக்கு உனக்கு இருக்கு கோபத்தில் அவள் வரவுக்கு காத்திருக்க…கனியை பார்த்தவன் அவள் தோற்றத்தில் அப்படி அதிர்ந்து போனான்…  இவளுக்கு இப்ப வயசு என்ன 20… இல்ல இல்ல 21 இருக்குமா… இவ என்ன இப்படி ஆளே பாதியாயிட்டா… முகமே பொலிவிழந்து… அவள் இயல்பே அவளைவிட்டு சென்றிருக்க…
அவளை தானாக அழைத்து பேசினால் கண்டிப்பாக பிரச்சனை வரும் என அமைதியாக இருக்க ஆனால் அதுவே கனியை தன் பக்கம் திருப்பும் என்பதை அவள் முகத்தை வைத்தே கண்டுபிடித்து விட்டான்… இதை வைத்தே இவளை தன் வழிக்கு கொண்டு வரலாம் என முடிவு செய்தவன்… 
“யேய்….பொண்டாட்டி ஒரு தரம் உன்னை தவற விட்டுட்டேன்… ஆனா இந்த தரம் நீயே வந்து என்னை விரும்புறேன்னு சொல்ல வைக்கல … நான் உன் மச்சான் இல்லடி யாருக்கிட்ட மீனாட்சி மகன்கிட்டயே உன்வேலைய காட்டுறியா… பார்ப்போம்டி இந்த தரம் நீயா…. இல்ல நானான்னு….??” அவள் புறம் திரும்பி படுத்தவன் ஒரு வருடத்திற்கு பிறகு நிம்மதியாக கண்ணயர்ந்தான்…
 
மறுநாள் அதிகாலையில் எழுந்தவள் துரை கட்டிலின் அடுத்த மூலையில் தூங்கி கொண்டிருக்கவும்  அறையை விட்டு வெளியே வந்து தன் போக்கில் வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பிக்க ஒருஒருவராக எழுந்து வரவும் காப்பிபோட்டு அனைவருக்கும் கொடுத்துவிட்டு… இருந்த காய்கறிகளை வைத்து துரைக்கு வேலைக்கு கொண்டு செல்ல சமைத்து முடித்திருந்தாள்…
அவளுக்கு தான் தோப்புவீட்டில் போட்ட காய்கறிகளின் நினைவு வந்த்து….. அப்புறமா அத்தைக்கிட்ட கேட்டு தோப்புவீட்டுக்கு போயிட்டு வரனும்… யோசித்தபடி எல்லா வேலையையும் முடித்தவளை காயத்ரி ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்… இவ எப்படி இவ்வளவு பாந்தமா இந்த வீட்ல பொருந்திட்டு அப்புறம் ஏன் வீட்ட விட்டு வந்தா… அண்ணாவுக்கு என்ன குறைச்சல்… நல்லத்தானே இருக்காங்க… ம்ம்ம் என்ன பிரச்சனையோ..
 
துரை வேலைக்கு கிளம்பி வர அவனுக்கு டிபன் எடுத்து வைத்தவள் மதிய சாப்பாட்டை கட்டி வைத்திருக்க மீனாட்சி இது அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தார்… சாப்பிட்டவன் வேண்டும் என்றே மதிய சாப்பாட்டை எடுக்காமல் வண்டியை எடுக்க வர…
கடைசியில்தான் பார்த்தாள் துரை சாப்பாடு கொண்டு செல்லாததை…. அதை எடுத்து கொண்டு வேகமாக ஓடிவந்தவள்… வண்டியின் குறுக்காக நின்றிருந்தாள்…  அவளை ஏறிட்டு பார்க்கவும்
 
சாப்பாட்ட மறந்துட்டு போறிங்க…??”
 
மூச்சு வாங்க நின்றிருந்தவளை பார்க்க அதிகாலையில் தலைக்கு குளித்திருப்பாள் போல தலையை விரித்து விட்டிருக்க எந்த அலங்காரமும் இல்லாமல்…நெற்றியில் பொட்டு மட்டும் வைத்து… ஒரு காட்டுபூ போல இருந்தவளை அள்ளி அணைத்திட ஆசை வந்திட… அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றை பார்க்கவும்…
 
சாயங்காலம் 5 மணிக்கு மேல நீங்க எல்லாரும் கிளம்பிவாங்க… நகைகடைக்கு போயிட்டு வந்திரலாம்….??”
 
ம்ம்  தயங்கியவள்… இல்ல இல்ல… நான் வரலை..??”. கனிக்கு எதுக்கு நம்மால இவங்களுக்கு செலவு என யோசிக்க…
 
என்ன மாப்புள்ள வேலைக்கு கிளம்பிட்டியா..??”
 
வாடா மாப்புள்ள கதிரை பார்த்து சிரிக்கவும்…
 
டேய்…. நீயாடா இது….??” அவன் தோளை தட்ட…
 
டேய் அது இருக்கட்டும் சாயங்காலம் எல்லாரையும் நகைகடைக்கு கூட்டிட்டு வந்திருடா…. காயத்ரியையும் கூட்டிட்டு வா…??”
 
சூப்பர் மாப்பிள்ள இப்பத்தான் அப்பாவும் இதப்பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க… அஞ்சரை மணிக்கு அங்க இருப்போம்… நீ என்னமா சொல்லுற…??”
 
இல்லடா… இவ வரலையாம்… நீ மத்தவங்கள கூட்டிட்டு வந்திரு..??”.தன்போக்கில் வண்டியை கிளப்பியிருக்க…
 
மாலை 5 மணிக்கே அனைவரையும்  கிளப்பிய கதிர் கனியை மறுபடியும் அழைக்க இல்லை வரவில்லை எனவும் காயத்ரியும் தயங்கினாள்… துரை போன் செய்து காயத்ரியையும் கிளம்ப சொல்ல கனியை ஒரு வார்த்தைகூட வரும்படி அழைக்கவில்லை… இவர்கள் அனைவரும் இரவு வீடு திரும்பவே மணி பத்துக்கு மேலாயிற்று….
 
துரை படுக்கவர மணி 11 இருக்கும் அதுவரை கனி அறையை குறுக்கும் நெடுக்கும் அளந்து கொண்டிருந்தவள்… அவன் அவளை கண்டு கொள்ளாமல் படுக்க செல்லவும்…
 
 நாளைக்கு உங்களுக்கு லீவு தானே…??”
 
தலையணையை சரி செய்தவன் … இல்லை ஹரிணிக்கும் …ரம்யாவுக்கும் துணிக்கடையில என்னமோ மாத்தனும்னு சொன்னாங்க அவங்கள கூட்டிட்டு போறேன்…??”
 
தஸ்….. புஸ்…. என்று மூச்சு வாங்கியவள்... நீங்க எனக்கும் மாமா மகன்தானே..??”.
 
ஒன்றும் சொல்லாமல் அவளை பார்க்க… நீங்க நாளைக்கு என்னை மட்டும் கடைக்குகூட்டிட்டு போறிங்க…. அவங்களுக்கு வாங்குன மாதிரி எனக்கும் வாங்கி குடுக்குறிங்க….??” அவனை முறைத்தபடி சொல்ல…
 
ஆஹா… மேடம்க்கு பொறாமை பொங்குதா… நீ வேணும்னா அம்மாவ துணைக்கு கூட்டிட்டு போ…. நான் இவங்களோட போறேன்….??”
 
அவங்களுக்கு மட்டும் இவங்க வாங்கிகுடுப்பாங்களாம்… எனக்கு மட்டும் அத்தையா……. என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தலகாணியை எடுத்தவள் தன்னை மீறி அவனை அடித்து….
 
எனக்கு நீங்கதான் வேணும்…. நீங்கதான் வேணும்…??” சின்ன பெண்போல அடம்பிடிக்க….தலகாணியோடு சேர்த்து அவளையும் பிடித்திருந்தான்….
 
 
                                                      இனி……………?????..

Advertisement