Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
                      
 அத்தியாயம்  –  16
 
 
துரை கனியை கீழே விழாமல் தாங்க கனி அவன் கையோடு அவனுடைய பனியனையும் இறுக்கி பிடித்திருந்தாள்…  கீழே விழப்போகிறோமே என பயந்து கண்ணை மூடியிருந்தவள் விழாமல் இருக்கவும் கண்திறந்து பார்க்க தான் இருந்த நிலையை பார்த்தவள் நெஞ்சு படபடவென அடிக்க…..
துரையின் முகத்தை பயத்துடன் பார்க்கவும் அவன் ஒன்றும் சொல்லாமல் அவளை அசால்டாக அந்த கையாலே தூக்கி நேராக நிறுத்திவிட்டு கைகழுவச் சென்றிருந்தான்…
 
இவள் ஆ…. வென நின்றிருந்தாள்… என்ன நம்மள கீழவிழப்போற பொம்மைய தூக்கி நேரா வச்சிட்டு போறமாதிரி அசால்டா தூக்கி வைச்சிட்டு போறாங்க …. நாம அவ்வளவு வீக்கா இல்ல அவங்க அவ்வளவு ஸ்ட்ராங்கா… அதி முக்கியமான சந்தேகம் வர… கையைகூட கழுவாமல் யோசிக்க ஆரம்பித்தாள்…..
 
துரை சாப்பிடவும் சட்டையை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறப்போக அவனை அழைத்த மீனாட்சி…
 
என்ன துரை இன்னேரத்துக்கு எங்க போற…??”
 
எப்பவும் போல தோப்பு வீட்டுக்குதாம்மா…??”
 
என்ன தம்பி என்ன சொல்லுற தோப்புவீட்டுக்கா… இத்தன நாளு கனி இங்க இல்ல நீ அந்தவீடே கதின்னு கிடந்த… இப்பத்தான் கனி வந்துட்டாள்ள… நீ இங்கதான் இருக்கனும்… இல்ல கனியையும் தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு போ…??”
 
அம்மா….???” பல்லை கடித்தவன்… நடந்தத நீங்க மறந்துட்டிங்களா…??”
 
தன் மகனிடம் வந்தவர்… நடந்தத கொஞ்சம் கொஞ்சமா மறக்கபாரு தம்பி…. அதை நீதான் சரிபண்ணனும்…??” தன் மகனின் தலையை தடவிக் கொடுக்க… கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தியவன் சட்டென தன் அறைக்குள் நுழைந்திருந்தான்…
 
அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த கனி துரையின் முகத்தில் இருந்த இறுக்கத்தில்… கோபத்தில் பயந்தவள் மெதுவாக கதவுக்கு பின்னால் ஒளிந்து நடப்பதை பார்க்க ஒன்றும் புரியவில்லை… துரை தன் அறைக்குள் செல்லவும் இவள் தன் தங்கைகளை தேட அவர்களும் காயத்ரியும் ஒரு அறையில் படுத்திருந்தார்கள்…
மீனாட்சி அத்தை கொல்லைபுறத்திற்கு செல்ல கனிக்குத்தான் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை… பேசாம தங்கச்சிகளோட போய் படுத்துருவமா… யோசனையில் இருந்தவளை கலைத்தது கதிரின் குரல்…
 
வெளியே வந்தவள்.. வாங்கண்ணா….??”
 
மாப்புள்ள எங்கம்மா…??”
 
உள்ள இருக்காங்கண்ணா…
 
அப்படியா… சரி அப்ப நான் வீட்டுக்கு போறேன்..??”
 
ஏன்ணா அவங்க இருந்தா நீங்க ஏன் வீட்டுக்கு போகனும்… அவங்கள அத்தைக்கிட்ட சொல்லி வரச் சொல்லவா…??”.
 
தன்னைச்சுற்றி பார்த்தவன் யாரும் இல்லாமல் இருக்கவும் இங்கவாம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்… இப்படி உட்காரு…??” திண்ணையில் கதிருக்கு அருகில் அமர….
 
நீ வீட்ட விட்டு போன இந்த ஒரு வருசத்துல நடந்தத அத்தையோ… இல்லை வேற யாராச்சும் சொன்னாங்களாம்மா….??”
 
கனியின் மனதிற்குள் ஏதோ சரியில்லை என்று காலையில் துரையை பார்த்ததிலிருந்தே தோன்றிக் கொண்டே இருந்தது…முன்பு பார்த்த துரை இவங்க இல்லை.. கண்டிப்பா மாறியிருக்காங்க… ஆனா நம்மளால ஏதோ பிரச்சனை வந்திருக்குமோ கனிக்கு இதயம் படபடவென அடிக்க பயப்பந்து தொண்டையை அடைத்தது…
 
 என்னாச்சுண்ணா…. யாருமே சொல்லலையே…??”
 
நீங்க காணாம போன அன்னைக்கு நைட்டெல்லாம் உங்கள தேடாத இடம் பாக்கியில்லம்மா…… நீங்க இங்கயிருந்து ஆட்டோ பிடிச்சு போய் பஸ்டாண்டில மதுரைபஸ்ல ஏறி மதுரைக்கு போக டிக்கெட் எடுத்திருக்கிங்க…
நீங்க ரெண்டு ஊர் தாண்டவுமே கீழ இறங்கியிருக்கிங்க ஆனா…. நாங்க போய் விசாரிச்சதுல நீங்க மதுரைக்குத்தான் போயிட்டதா அந்த டிரைவர் விளங்காதவனும் சொல்லிட்டான்… நாங்க ஒரு மாசமா மதுரையை சல்லடை போட்டு சலிச்சும் உங்கள கண்டுபிடிக்க முடியல…
நீங்க அங்கேயே இருந்ததால அந்த ஊரு நல்லபழக்கம் அதுனால அங்கேயே தங்கியிருக்கலாம்னு நினைச்சிட்டோம்மா…. தங்கச்சிக ரெண்டு பேருக்கும் டிசி வாங்கிட்டு போகும்போதுகூட உங்கள பார்த்துட்டு கடைசி நேரத்துல நம்ம பிரண்ட்ஸ் தவறவிட்டுட்டாங்க…
 
ஆனா அதுக்கப்பறம்  நம்ம அத்தை எதுக்காக இந்த கல்யாணம் நடக்கனும் அவங்க சொந்தகாரங்க முன்னாடி அப்பத்தான் தலைகுனியாம இருக்கலாம்னு நினைச்சாங்களோ அது நீ வீட்ட விட்டு போகவும் அப்புடியே மாறிப்போச்சுமா…
மாமாவோட சொந்தகாரங்க ஒரு பத்துபதினைஞ்சு பேர் வந்து அத்தையை கேக்காத கேள்வியில்லை… புள்ளைய ஊதாரியா… பொம்பளபொறுக்கியா… குடிகாரனா வளர்த்திருக்க அதான் மாமன் பொண்ணும் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டா…
நீ அவசரஅவசரமா பார்த்த பொண்ணும் வீட்ட விட்டு ஓடிப்போயிட்டான்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க…???  துரைக்கு கோபம் வந்து அவன் ஒன்னு பேச அவங்க ஒன்னு பேசன்னு பிரச்சனை பெருசாகி கைகலப்பே ஆயிருச்சும்மா…
 அப்புறம் எல்லாரும் சேர்ந்து சமாதானப்படுத்தினாலும் நம்ம மாமாவோட சித்தப்பா பையன் ஒருத்தர் இருந்துக்கிட்டு இவன் எங்க அண்ணனுக்கே பிறந்திருக்க மாட்டான்… வேற எவனுக்கோ பொறந்தவன் அதான் இப்புடி ஊதாரியா திரியுறான் நம்ம அத்தை நடத்தைகெட்டவ….
இவன்கிட்ட எங்க அண்ணன் சொத்து எதையும் குடுக்காதிங்கன்னு சொல்லி அந்த குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் கேட்க…துரை கோபத்துல அவர அடி வெளுத்துட்டான்…
 அத்தை அவங்க நடத்தையை தவறா பேசவும் நெஞ்ச புடிச்சிக்கிட்டு மயங்கி விழுந்துட்டாங்க….  நாங்க அவசரஅவசரமா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனா அத்தைக்கு ஹார்ட் அட்டாக்… பொழைச்சதே பெருசும்மா ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணி அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வரவே முழுசா ரெண்டு மாசம் ஆயிருச்சு…
அத்தையும் அப்புடியே ஒடுங்கி போய்ட்டாங்க.. .மாப்புள்ளையும் ரொம்ப இடிஞ்சு போய்ட்டான்மா…அப்பல்லாம் அத்தைய அவன்தான் கவனிச்சு பார்த்துக்கிட்டான்…அத்தை நல்லா தேறிவரவே நாலுமாசத்துக்கு மேல ஆச்சு…   
ஆனா அத்தையை பேசுனவங்கள விடுவானா.. மாப்புள்ள யாரு… கொஞ்சநாள்தான் அப்படியே யோசனையில இருந்தவன்…அத்தைய பேசினவருதான் நம்ம மாமாவோட முக்கால்வாசி சொத்த அனுபவிச்சிக்கிட்டு இருந்திருப்பாரு போல அவருக்கு அத்தை இங்கேயே வந்தது ரொம்ப வசதியா போச்சு….
ஆனா அவரோட கெட்ட நேரம் அத்தையே தவறா பேசுனா நம்ம மாப்புள்ள விடுவானா அவங்க மேல கோர்ட்ல கேஸப்போட்டு  அந்த ஆளு இத்தனை வருசமா அனுபவிச்சிக்கிட்டு இருந்த மாமாவோட சொத்து எல்லாத்துக்கும் இவன்தான் வாரிசு…
அத சட்டப்படி வாங்கி குடுக்கனும் சொல்லிட்டான்…   கோர்ட்ல கேஸ்னு நடக்குது… கேஸப்பத்திதான் உனக்கு தெரியுமே அது முடிய கொஞ்சநாளாகும்.. கேஸ் நம்மபக்கம்தான் .ஜெயிக்கிறமாதிரி இருக்கு பெரிய வக்கீல புடிச்சு எல்லா டாக்குமென்டையும் பக்காவா குடுத்திருக்கான்… இப்ப தீர்ப்புக்காகத்தான் வெயிட்டிங்க்….
அப்புறம் நம்ம மாப்பிள்ள நடத்தைய பேசினவங்க முகத்துல கரிய பூசுற மாதிரி கவர்மெண்ட் எக்ஸாம்க்கு படிச்சு இப்ப பேங்க்லயும் வேலைக்கு போயிட்டான்…இந்த ஒரு வருசத்துக்குள்ள என்னன்னமோ நடந்துருச்சும்மா….
 இந்த பிரச்சனைக்கெல்லாம் நானும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்….,. அன்னைக்கு தமிழு அரவிந்த கட்டிக்கிறேன்னு சொன்னப்ப இவன் அந்த ஒரு கல்யாணம் மட்டும் நடந்தா போதும்னு சொன்னான்… நான்தான் உன்னைக்கட்டிக்க சொன்னேன்… அதுனாலதான் இவ்வளவு பிரச்சனையும் …
இப்பவும் மாப்புள்ள எப்ப நீ அவன வேண்டாம்னு சொல்லிட்டியோ… வெத்துபேப்பர்ல கையெழுத்து போட்டுக்குடுத்திட்டியோ… அதுக்கப்பறம் சேர்ந்து வாழ முடியாது… உங்கள கண்டுபிடிச்சிட்டா மாமா பொண்ணா நிச்சயமா உனக்கு நல்லவாழ்க்கை ஏற்படுத்தி தருவேன்னு சொல்லித்தான் இங்ககூட்டிட்டு வருவேன்னு சொன்னான்…
நீ கல்யாணம் பண்ணி போனாலும் தங்கச்சிங்க ரெண்டு பேரையும் நானும் மாப்புள்ளையும் பார்த்துக்குவோம்… நீ கவலைப்படாத… உனக்கு யாரப்புடிச்சிருக்கோ சொல்லு அவங்களையே கட்டிவைச்சிருறோம்…
 எனக்கு ஒரு சின்ன சந்தேகம்மா… மாப்பிள்ளையவிடவா வேற ஒரு நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க போகுது… அவன் தங்கம்மா என்ன கோபம்தான் அப்பப்ப வரும் எல்லார்கிட்டயுமா கோபப்பட முடியும் … உரிமை உள்ளவங்ககிட்டத்தான் அவன் கோப்படுவான்…
ஆனா இப்ப எவ்வளவு மாறிட்டான் அப்பல்லாம் ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருப்போம் ஒளிவு மறைவே இருக்காது… ஆனா என்னால இந்த மாப்புள்ளைய பார்க்க சகிக்கலைம்மா..??”.கதிருக்கு கண் கலங்க… இன்னும் துரையை பற்றிப்பேசிக் கொண்டே இருக்க….
 மீனாட்சி வெளியே வரவும்..எழுந்தவன். என்னத்த மாத்திரை எல்லாம் போட்டிங்களா…??”
 ம்ம்ம் போட்டேன்டா….. நீ படுக்கல… வீட்டுக்கு போ…??”
 அதானே கேட்டேன் ஏன் சொல்லமாட்டிங்க நேத்துவரைக்கும் உன் தம்பிமகன் நான்தான் துணைக்கு படுத்தேன்… உன்மகன் தோப்புவீட்லதான் படுத்தான்…. என்னமோ இன்னைக்கு உன்மகன் இங்க வரவும் என்னை விரட்ட பார்க்குற…??”
 கதிரின் தலையை தடவிக்கொடுத்தவர்…. டேய் என்புள்ள கொஞ்சநாளைக்கு அவன் மனவேதனை தீருரவரைக்கும் அவன் போக்குல போகட்டும்னுதான் நான் எதையும் கண்டுக்காம இருந்தேன்… அப்பவே இன்னைக்கு மாதிரி ஒரு அதட்டு போட்டு உள்ள போடான்னா அவன் என்னைவிட்டு எங்கேயும் போயிருக்க மாட்டான்டா…
அதோட என்புள்ள மாதிரி நீயும் இங்க வந்து படுக்குறேன்னு சொன்னதுனால அவன் உன்னை நம்பி விட்டான்… எங்க நீ மட்டுமா படுத்த இந்த ஆத்தாவும்ல வந்து என் பக்கத்துல படுத்திருக்கு நான் லேசா அசைஞ்சாக்கூட என்னாத்தான்னு கேக்குது…
பாவம் அதுவும் சுகர் பேசண்ட் உங்க வீட்டுலைன்னா பாத்ரூம் வசதியெல்லாம் உள்ளயே உங்க அப்பன் செஞ்சுகுடுத்திருக்கான்… என்ன இங்க ஒவ்வொரு தரமும் கொல்லைபக்கம் போய்ட்டு வரவேண்டியதா இருக்கு….
ம்ம்ம் நமக்கும் உள்ளயே பாத்ரூம கட்டச்சொல்லனும்டா..மூனு வயசுக்கு வந்த புள்ளைக இருக்குக…தன் போக்கில் பேசியவர்….ஆத்தா கனி என்னத்தா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க போத்தா … பால் கொண்டு போய் துரைக்கிட்ட குடுத்துட்டு நீயும் படுத்தா….??”
 கனி அப்படியே கீ கொடுத்த பொம்மைபோல் திரும்பியிருந்தாள்… அவளுக்கு கதிர் சொன்னதை ஜீரனிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது…. நாம இவங்க வாழ்க்கை நல்லா இருக்கனும்னு இவங்களவிட்டு பிரிஞ்சு போனா நம்மளால இவ்வளவு பிரச்சனையா…
அதுவும் அத்தைக்கு ஹார்ட் ஆபரேசனா… கனிக்கு தன் தாய் இறந்த மறுநாள் எந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் தங்களை மீட்டு இங்கு கூட்டி வந்தார்… எதை பற்றியும் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் மூன்று வயதுவந்த பெண்களை கூட்டிவருவது என்பது எவ்வளவு பெரியவிசயம்…
வந்த நாளில் இருந்து அப்பத்தாவும் அத்தையும் தங்களுக்கு உறுதுணையாக இருந்தது…தன் தங்கை வயதுக்கு வந்தபிறகு சீர் செய்தது என அனைத்தும் படமாக கண்முன்னால் வர… கல்யாணத்தன்று தான் உறுதியாக மறுத்திருந்தால் கண்டிப்பாக திருமணம் நடந்திருக்காது…
அவங்களுக்கும் அத்தைக்கும் நடந்த எல்லாப்பிரச்சனைக்கும் காரணம் நாம மட்டும்தான்… நம்மளால மட்டும்தான் இவங்களுக்கு இவ்வளவு வேதனையும் அவமானமும் அப்படியே அடுப்படியில் அமர்ந்தவள் தன் முழங்காலில் முகத்தை பதிக்க கண்ணீர் நிற்கவே இல்லை….

Advertisement