Advertisement

 
 வசந்தா கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்…
 
உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்…. தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை…. அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா…
ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த ஆட்சேபனையும் சொல்லலையே…. ஒரு மனது இது போல நினைத்தாலும் இன்னொரு மனமோ அப்ப இவங்க நமக்காக ஒரு வருசம் காத்திருந்தாங்களா… இல்ல தமிழக்காவ மறக்க முடியாம இருக்காங்களா…. ஐயோ நமக்கு பைத்தியம் புடிச்சிரும் போலயே….
 
வலது காலை எடுத்து வைச்சு உள்ள போம்மா இப்பவாச்சும் நீயும் மாப்புள்ளையும் சந்தோசமா இருக்கனும்??” அவர்களை உள்ளே செல்ல சொல்ல….
 
கனியும் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே போக மீனாட்சி சாமி அறையில் விளக்கேற்றச் சொல்லவும் விளக்கேற்றி சாமி கும்பிட்டவர்கள்…
 
 அம்மா இப்ப நான் போகவா…??” துரை கனியை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல தாயிடம் அனுமதி கேட்க…
 
பரவால்ல தம்பி சொன்ன நேரத்துக்கு கரெக்டா வந்துட்டியே… நீ போப்பா…??”.
 
வசந்தா அனைவருக்கும் காப்பியோடு வர ரொம்ப நாளைக்கு பிறகு அந்த வீட்டில் சிறிது கலகலப்பு திரும்ப ஆரம்பித்தது….
 
அங்கு தமிழ் அரவிந்திற்கு போன் செய்து ஓய்ந்து போயிருக்க… கடுப்பில் வாய்ஸ் மெசேஜில் அவனைடேய் லூசே போன எடுடா………??” வாய்க்கு வந்ததை மூச்சு விடாமல் திட்டி அனுப்பி வைத்தாள்… ஒரு அரைமணி நேரம் கழித்து மீட்டிங் முடிந்து தன் கேபினுக்கு வந்த அரவிந்த் போனை எடுத்து பார்க்க ஏகப்பட்ட போன் கால்கள்… போச்சுடா …
வாய்ஸ் மெசேஜை ஓப்பன் செய்ய அவன் திட்டிய திட்டெல்லாம் பூமழை பொழிவது போல இருக்கவும் விசில் அடித்தபடி அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பினான்…. வீட்டின் காலிங்பெல்லை அழுத்த லென்ல் வழியாக பார்த்தவள் கதவை திறக்காமல் அழுச்சாட்டியம் செய்தாள்….
இவனும் விடாமல் பெல்லை அழுத்த அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என நினைத்து கதவை லேசாக திறந்து அவனை உள்ளிழுத்தவள்… அவனை சரமாரியாக அடிக்க…. அவனோ அவள் தன்னை கொஞ்சுவதை போல முகத்தை வைத்திருந்தான்..
 
.. டேய் …??”என இன்னும் காண்டானவள் இன்னும் ஏதோ திட்டப்போக அவளை திட்டவிடாமல் இறுக்கி அணைத்து அவள் இதழை தன் இதழால் மூடியிருந்தான்…..
 
அவளை அப்படியே கையில் ஏந்தி சோபாவுக்கு வந்தவன் அவளை தன் மடியில் உட்காரவைக்க கோபத்தை மறந்து அவன் முத்தத்தில் மூழ்கியிருந்தவள் அவன் மேலிருந்து வரும் அவனுக்கே உரித்த வாசனையை முகர்ந்தபடி இன்னும் நெருங்க…..
 
ஏய் ஏஞ்சல் என்னடி கோபம் போயிருச்சா….??”
 
ம்ம்ம்…. இன்னும் அவன் மார்பில் முகத்தை புதைத்தவள்… அத்தான் ஒரு குட்நியூஸ்…..??”
 
குட்நியூஸ்னு நீ இன்னைக்கு என்னோட ஆபிஸ்க்கு போன் பண்ணுனதில இருந்தே தெரிஞ்சுக்கிட்டேன்டி… நீ போன் பண்ண மாட்டியான்னு இந்த ஒரு வருசமா தினமும் போனையே பார்ப்பேன்… எங்க கல்யாணத்துக்கு அப்புறமா என்னோட பழைய தமிழ பார்க்கமுடியாம போயிருச்சோன்னு ரொம்ப கவலைப்பட்டேன்…. என்ன நியூஸ் கனிய பத்தியா??”
 
அவன் தோளில் தன் கையை வைத்தவள் அவன் தோளை பிடித்தபடி குதிக்க… அவள் சந்தோசத்தை பார்த்தவன் என்னடி… சொன்னா நானும் சந்தோசப்படுவேன்ல…??”
 
இருங்க அத்தான்…. அதெல்லாம் நான் போன் பண்ணுன உடன எடுத்தவங்களுக்குத்தான் நியூஸ் உடனே சொல்லப்படும்… இப்ப நான் எப்ப சொல்லுறனோ அப்பத்தான் கேட்கனும்??” தமிழ் கனி வீட்டை விட்டு சென்றுவிட்டாள்…
அதுவும் அவர்கள் மூவரும் தன் தங்கைகள் என தெரிந்த நாளில் இருந்து அப்படியே தனக்குள் ஒடுங்கி போய் குற்ற உணர்ச்சியால் தவித்தவள் அரவிந்திடம் கூட தன் மனதை பகிர்ந்து கொள்ளமுடியாமல் தவிக்க அவளின் மனநிலையை புரிந்து அவனும் ஒதுங்கியிருந்தான்….
 
தமிழுக்கு கதிர் எப்படியோ அப்படித்தான் துரையும்…சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி ஒன்றாக திரிவார்கள் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் கதிர் எந்த அளவுக்கு வருத்தப்படுவானோ அதைவிட துரைதான் வருத்தப்படுவான்… அதனால்தான் தமிழ் அரவிந்தை விரும்புவதை துரையிடம் சொல்லி திருமணம் செய்துவைக்க கேட்டாள்..
ஆனால் திருமணம் முடிந்த அன்றே கனி வீட்டை விட்டு போவாள் என எதிர் பார்க்காதவள் அதன் பிறகு நடந்த சம்பவங்களால்…. தன்னால்தான் அவன் வாழ்க்கையும் வீணானதோ …கனியும் வீட்டவிட்டு போய்ட்டாளோ என கலங்கி போய் எதிலும் பிடிப்பில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் கனியின் வருகைக்காக காத்திருக்க….
இன்று கதிர் போன் செய்து விசயத்தை சொன்னவுடன்தான் பழைய தமிழ் திரும்பியிருந்தாள்…உடனேயே அரவிந்தை பார்க்கவேண்டும் போல இருக்க மதியத்தில் இருந்து அரவிந்திடம் விசயத்தை சொல்ல தவித்துக் கொண்டிருந்தாள்….அவனோ இப்போது வந்து விசயத்தை கேட்கவும் … கடுப்பானவள் அவனுக்கு காப்பி கொண்டு வர கிச்சனுக்குள் செல்லபோக அவளை செல்ல விடாமல் தன் கையில் ஏந்தி தங்களின் பெட்ரூமிற்குள் கொண்டு செல்ல..
இதுவரை அவனோடு மனதால் ஒன்றமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள் இன்று எந்த மனதடங்களும் இல்லாமல் அவனோடு ஒன்ற அவளை கட்டிலில் இட்டு அவள் மேல் படர்ந்தவன்…. அவளை இறுக்கி அணைக்க.. இப்போதுதான் குளித்திருப்பாள் போல அவள் மேலிலிருந்து சோப் வாசனையும் … அவள் தலையின் ஈரமும் அவனை தன் வசம் இழக்க வைக்க
 
அப்பநான் விசயத்தை சொல்ல வேண்டாமா…??”
 
எங்க நீதான் சொல்லமாட்டேங்கிறியே ??”அவளை மேலிருந்து தனி நுனிக்கையால் வருட…
 
அவள் சருமம் கூசவும்… அவன் கையை பிடித்தபடி… அத்தான் கனி வந்துட்டாளாம்…. வீட்டுக்கு மச்சான் கூட்டிட்டு வந்துட்டாங்களாம்… கதிரண்ணா போன் பண்ணிச் சொன்னாங்க…. உங்களுக்கும் டிரை பண்ணினாங்களாம் நீங்கதான் போனை எடுக்கவே இல்லையே அதான் என்னை சொல்லச் சொன்னாங்க..??”.
கதிர் சொன்ன அனைத்தையும் சொல்ல அவள் இதழோடு போட்டிப் போட்டு அவள் கண்காட்டிய ஜாலத்தில் மயங்கி போயிருந்தவன் பத்து டைமண்ட் நெக்லஸ் வாங்கி கொடுத்திருந்தாள்கூட இவ முகத்துல இந்த அளவுக்கு சந்தோசம் வந்திருக்காது என நினைத்தவன் அவளையே ரசித்தபடி அவள் சந்தோசத்தில் பங்கெடுக்க…
 
ஏய்….சூப்பர்டி… ரொம்ப நல்ல நியூஸ் சொல்லியிருக்க கண்டிப்பா நாம அதை கொண்டாடியே ஆகனும்??” கையும் அவன் இதழும் அவள் உடம்பில் தன் வேலையை துவங்க காதலுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளை அவன் நிமிர்ந்து என்ன….. ஏஞ்சல்…. அத்தான சைட் அடிக்கிறியா….??”
 
ம்ம்ம்ம்….. இன்னும் நெருங்கி அவன் காதிற்குள்…ஐ…லவ்யூ… அத்தான்…??”
 
ம்ம்ம் லவ்வ இப்படியா சொல்லுவாங்க… அதுவும் முதல் முதலா லவ்வ சொல்லுற…. இன்னும் நீ வளரனும்டி??” அவளை இன்னும் இறுக்கி அவள் வெற்றிடையில் தன் கையால் கோலமிட…கூச்சத்தில் நெளிந்தவள்… அவனிடமிருந்து விலகி… அவனுக்கு கிச்சுகிச்சு மூட்ட அவன் அவளை எட்டிப்பிடிப்பதற்குள் கட்டிலை சுற்றி சுற்றி ஓட ஆரம்பித்தாள்…
சற்று நேரம் அவளை ஓடவிட்டவன் நெடுநாளுக்கு பிறகு தமிழின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி அவள் மூச்சுவாங்கவும் சட்டென அவளை பிடித்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன் அவன் முகத்தை ஆசையாக பார்த்தபடி… இன்னும் இன்னும் அவளுள் ஒன்ற.. கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் தங்கள் வசம் இழந்து அடுத்தவருள் மூழ்கதுவங்கினர்…
 
துரையின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க கனியும் துரையும் மட்டும்தான் சாப்பிடவில்லை… அவன் ஏதோ அடுத்தடுத்து வந்த போன்காலில் மூழ்கியிருக்க கனி மற்றவர்களுக்கு பறிமாறியவள் துரைக்காக காத்திருந்தாள்… அங்கு ரம்யாவும் ஹரிணியும் அப்பத்தாவின் மடியில் தலைவைத்து படுத்து கதிரோடு பேசிக் கொண்டிருக்க காயத்ரியையும் கதிர் தங்கள் பேச்சிற்குள்  அவளை அறியாமல் மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டிருந்தான்… துரை வரவுமே காயத்ரியிடம் சரளமாக பேசி இத்தனை நாள் இவர்களுக்கு செய்த உதவிக்கு தனியாக நன்றி தெரிவித்திருக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிதனியாக நன்றியை தெரிவித்திருந்தனர்… காயத்ரிக்குத்தான் தயக்கமாக இருக்க… கதர் அவளோடு பழகும் தருணத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தான்…
 
துரை வந்ததிலிருந்து கனியிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை… ஆனால் ஹரிணியோடும் ரம்யாவோடும் பேசியவன் அவர்களின் படிப்பை பற்றி விசாரித்து பள்ளித்திறக்கவும் தினமும் காலையில் தானே பள்ளியில் கொண்டு விடுவதாக சொல்லி மாலையில் கதிரை அழைத்து வரச் சொல்லியிருந்தான்… கதிரும் சந்தோசமாக தலையாட்டி இருக்க.. தங்கைகள் இருவருக்கும்  இந்த உரிமையான சொந்தம் பிடித்திருக்க அவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களோடு ஒன்றி போய் பாசமழையில் நனைய ஆரம்பித்திருந்தனர்…
 
துரை டைனிங் டேபிளுக்கு வர மீனாட்சி கனியை அழைத்து துரைக்கு சாப்பாடு பறிமாறிவிட்டு அவளையும் சாப்பிட சொல்ல அவளும் தயக்கத்துடன் கூடவே வந்திருந்தாள்… சேரில் அமர்ந்தவன் தட்டை எடுக்க போக வேகமாக அதை எடுத்தவள் சாப்பாட்டை பரிமாற ஒன்றும் சொல்லாமல் சாப்பிட போனவன் அவள் நின்று கொண்டிருக்கவும்…  
இன்னொரு தட்டை எடுத்து அவளுக்கும் சாப்பாட்டை வைத்து ஒன்றும் சொல்லாமல் தன் பக்கத்தில் இருந்த சேருக்கு அருகில் தட்டை எடுத்து வைக்க… இவளும் சாப்பிட அமர்ந்தாள்… அவனை நிமிர்ந்து பார்க்க வீட்டில் இலகுவாக இருக்கும்படியான கைலி சாதாரண கையில்லாத பனியன் அணிந்திருக்க அவன் முறுக்கேறிய தோள் புஜங்கள் எல்லாம் தெரியும்படி இருக்க கனிக்குத்தான் அவனை பார்க்க கூச்சமாக இருந்தது..
 
ஹப்பா அப்பல்லாம் கோபமா பேசிக்கிட்டே இருப்பாங்க இப்ப என்னாச்சு….??’. அவன் முன்னால் சாப்பிட கூச்சமாக இருக்க அதற்கு மேல் சாப்பிடமுடியாமல் பாதி சாப்பாட்டோடு எழுந்தவள் கைகழுவச் செல்ல கீழே சிந்தியிருந்த தண்ணீரை பார்க்காமல் அதன் மேல் கால் வைக்கவும் அந்த டயல்ஸ் வழுக்கி விழப்போக  விழாமல் இருக்க தன் கைக்கு எட்டியதை பிடிக்க போனவள் அப்போது கைகழுவ வந்துக்கொண்டிருந்த துரையின் கையைத்தான் எட்டிப்பிடித்திருந்தாள்…. அவள் விழப்போகவுமே எட்டிப்பிடித்தவன் சாப்பிடாத கையால் அவள் இடையை அணைத்திருந்தான்…
 
        
                                       இனி……………??????..

Advertisement