Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
 
அத்தியாயம்  –  14
 
 
துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று….. கடிதத்தை எடுத்து படித்து பார்க்க…போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடி தங்கள் கையில் உள்ள பையில் இருப்பது உண்மையா பொய்யா என நம்ப முடியாமல் இருக்க தண்ணீர் கொண்டு வந்து தன் அம்மாச்சியின் முகத்தில் தெளித்தவன்….. மயக்கம் தெளிந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தவர் தன் மகளை கட்டிக் கொண்டு அழ ….. முத்துராமனும் தன் தாய்க்கு அருகில்  அவரை அணைத்தாற்போல அமர்ந்தார்….
 
என்னம்மா…. அம்மாச்சிக்கு என்னாச்சு??” தன் தாயை சமாதான படுத்தியபடி கேட்க…..
 
ஐயோ தம்பி…. நாம இப்ப என்ன பண்ணப்போறோம்பா….இம்புட்டு நாளும் நம்மளோட இருந்த கனியும் அவ தங்கச்சிகளும் உன் மாமாவோட பொண்ணுகன்னு நினைக்கிறோம்டா தம்பி….??”
 
துரை குழப்பத்துடன் என்னம்மா சொல்லுறிங்க… மாமாவா எனக்கு இருக்கிறது ஒரு மாமாதானேம்மா….??”
 
இல்ல தம்பி உங்க மாமாவோட கூட பொறந்த இன்னொரு மாமாவும் இருந்தாங்க… அவனும் இவனும் ரெட்டைப்பிறவிப்பா…??”
 
துரையும் கதிரும் ஆச்சர்யமாக….என்னம்மா சொல்லுறிங்க….??”
 
ஆமா தம்பி….உன்னோட அந்த மாமா பேரு ஜெயராமன்…அப்படியே பார்க்க இவன மாதிரியே இருப்பான்??”என அழுதவர்
 
. தன் கையில் இருந்த பையில் இருந்த உடைகளை எடுத்து இருவரிடமும் காட்டியவர் இந்த டிரெஸ் தான்பா உன் மாமா காணாமல் போன அன்னைக்கு போட்டிருந்தான்… எப்பவுமே ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் போடுவாங்க… இன்னுமும் இதே மாதிரி டிரெஸ உன் மாமாவும் வைச்சிருக்கான்பா…??”மற்றொரு டப்பாவை எடுத்தவர் அதிலிருந்த ஒரு டாலரை பிரிக்க அதில் ஒரு சிறுவனின் படம்இதுதான்பா உன் மாமா…. ??”அந்த படத்தை எடுக்க அந்த சிறுவனின் படத்துக்கு பின்னால் ஒரு குடும்ப படமும் இருந்தது… பத்து வயதில் இரண்டு ஆண் பிள்ளைகளும் பதிமூன்று வயதில் ஒரு பெண் பிள்ளையும் தன் தாய்தகப்பனோடு இருக்க……
 
இதுதான்பா உங்க தாத்தாவும் அம்மாச்சியும் மத்தவங்க நானும் உன் மாமாக்களும்தான்பா……??”
 
துரை அப்படியே ஆச்சர்யத்தில் இருக்க அம்மாச்சியோ தன் பேரன்கள் இருவரையும் கட்டிக் கொண்டுஏப்பு இம்புட்டு நாளும் எம்புள்ளைக என் பக்கத்திலயே இருந்தும் நமக்கு தெரியலையேப்பு… ஐயோ இப்ப எங்கிட்டு போச்சுகளோ என்ன கஷ்டப்படுதுகளோ …??” கதறி அழ
 
ஏம்மா மாமா உங்களயெல்லாம் விட்டுட்டு போனாங்க??”
 
அவனா போகலயா உங்க தாத்தா இருந்தாரே அவராலத்தான்… எங்க ஆத்தாவுக்கு அப்பல்லாம் காது நல்லா கேட்கும்பா….. உங்க தாத்தா அடிச்சதாலத்தான் காது கேக்காம போச்சு. கோபமும்…. முரட்டு தனமுமா தாப்பா இருப்பாரு… உங்க அம்மாச்சியையும் எங்களையும் அடிக்காத நாளில்ல… உங்க மாமன்களுக்கு பத்து வயசா இருக்கும் போது ஏதோ காச வீட்ல காணோம்னு அப்ப அந்த அறையில உங்க மாமா இருந்தான்னு அவன பெல்ட்டால  விளாசு விளாசுன்னு விளாச உங்க அம்மாச்சி தடுக்கப் போனப்ப உங்க தாத்தா தள்ளிவிட்டதுல அவங்க மண்டை உடைஞ்சு உசிரு பொழச்சதே பெருசுப்பா… அவனும் அடிதாங்க முடியாம நான் எங்கிட்டாச்சும் போய் சாகுறேன்னு சொல்லிட்டு வீட்ட விட்டு ஓடிட்டான்…. நாங்க அம்மாவ ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அவனும் விளையாட்டுக்கு சொல்லுறான் வந்துருவான்னு நினைச்சிக்கிட்டு இருந்திட்டோம்பா….
 
 
அப்ப போனவன்தான் வரவே இல்லை…நாங்களும் தேடாத இடம் பாக்கியில்ல அவன் என்னமோ கள்ளரயில் ஏறி பட்டணத்துக்கு போயிட்டான்னு கேள்விப்பட்டோம்…..அதுலயே உங்க அம்மாச்சி அரைஉசிரா போச்சுப்பா…. நாம பேசுரத கேட்க முடியாம தனக்குள்ளயே ஒடுங்கிப்போயிருச்சு…. எங்கெங்கையே தேடியும் உன் மாமன கண்டுப்பிடிக்க முடியல காணாம போன அன்னைக்கு அவனுக்கு பிறந்த நாளுன்னு இவனுக ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி டிரெஸ் எடுத்து உங்க அம்மாச்சி தச்சு குடுத்திருந்தாங்க.. கோவிலுக்கு போறதுக்காக இந்த டாலரோட சேர்த்து ஒரு செயின அவனோட கழுத்துல போட்டு விட்டுருந்தாங்கப்பா… அந்த செயின்ல இருந்த டாலர்தான்பா இது…..
 
 அவன் காணாம போனதுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சுச்சு… காச அவன் எடுக்கவே இல்லை… உங்க தாத்தாதான் எடுத்து அத வயவேலைக்கு எதுக்கோ குடுத்துட்டாங்கன்னு…  இருந்தாலும் உங்க தாத்தா தன் மகன் காணாம போனத பெருசாவே எடுத்துக்கல தன்னோட குணத்தையும் மாத்திக்கல… அப்புறம் ஒரு மூனு வருசத்துலயே உங்க தாத்தாவும் இறந்துட்டாங்க.. அதுக்கப்புறம்தான் நாங்க நல்லா மூச்சுவிடவே ஆரம்பிச்சோம்… ஊர்ல இருக்கிறவங்க சொல்லிட்டாங்க இன்னேரம் உன்மாமா இறந்திருப்பானுன்னு.. எங்களுக்கும் என்ன பண்ணுறதுன்னே தெரியலைப்பா … அப்ப நாங்களும் விபரம் இல்லாமத்தான் இருந்தோம்….இத்தனை வருசம் உங்க அம்மாச்சி மட்டும் எம்புள்ள எந்த மூலையிலோ நல்லா இருப்பான்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு நான் மட்டும் கனியோட அம்மா கல்யாணத்துக்கு போயிருந்தாக்கூட ஒரு வேளை கண்டுப்பிடிச்சிருப்பனோப்பா…  ஆனா இப்ப என் தம்பியும் உசிரோட இல்லை என் தம்பி பிள்ளைகளும் எங்க கண்ணுக்கு முன்னாடியே இந்த ஒன்னு ஒன்றரை வருசமா இருந்துச்சுக இப்பவும் நாங்க கண்டு பிடிக்கலையேப்பா இப்ப என்ன பண்ணுறது தம்பி போலிசுல கம்பிளைண்ட் கொடுப்பமாப்பு….??”
 
 
முத்துராமன் ஆமா மாப்புள்ள அக்கா சொல்லுறதுதான் சரி எனக்கு ஹரிணியையும் ரம்யாவையும் பார்க்கும் போதே நானும் அவனும் வளர்ந்ததுதாம்பா கண்ணுக்கு முன்னாடி வரும் … ஆனா பாரு எங்கள மாதிரியே இவங்க ரெண்டுபேரும் ரெட்டைப்பிறவியா பொறந்திருக்குக இந்த காலத்துல அதுக தனியா போய் என்ன பண்ண முடியும் எப்படிப்பா பொழைக்க போகுதுக… வாங்கப்பு போய் போலிசுல கம்பிளைண்ட் கொடுப்போம்??”
 
இல்ல மாமா அது சரிவராது இவங்க மூனு பேரும் தொலைஞ்சு போகலை… வேணும்னேதான் வீட்டவிட்டு போயிருக்காங்க அம்மா இந்த லெட்டர பாருங்க… அதில்… மீனாட்சிக்கு வாய்க்கு வாய் நன்றியை தெரிவித்திருந்தவள். .. அவர் செய்த உதவிக்கு ஈடுஇணையே இல்லை..அத்தை நீங்க எங்களுக்கு அம்மா மாதிரி… உங்க வசதிக்கும் தகுதிக்கும் நான் எந்த வகையிலும் பொருத்தம் இல்லை … தேவையில்லாம அவசரப்பட்டு உங்க மகன் வாழ்க்கையில நுழைஞ்சிட்டேன்.. ஆனா இப்ப யோசிச்சு பார்க்கும் போது அது பெரிய தப்புன்னு தெரியுது நாங்க இருந்த நிலையை எப்பவுமே மறக்கலை..
 
உங்ககிட்ட காசு பணம் எதுவும் எதிர்பார்க்கலைத்தை… பாதுகாப்ப மட்டும்தான் வேண்டி வந்தோம்… ஆனா நாங்க வந்ததால உங்களுக்குத்தான் பிரச்சனையே… எங்களத்தேடி அரவிந்த் வந்தாங்க அவங்களாலத்தான் தமிழக்கா இவங்கள கட்டிக்கிட மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அப்பத்தாவும் இவங்களும் இன்னைக்கு பேசும்போதுதான் அவங்க தமிழக்கா மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தாங்கன்னு தெரிஞ்சிச்சு… நீங்க இப்ப என்னை கட்டி வைச்சதால அவங்க ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் என்னாலத்தான் அவங்க வாழ்க்கை கெட்டுப்போச்சுன்னு நினைப்பு வரும் எனக்கும் அவங்கள பார்க்கும் போது குற்றவுணர்ச்சியா இருக்கும்…
 
அத்தை என்னோட இந்த முடிவால உங்க சொந்தகாரங்க முன்னாடி நானே உங்களுக்கு தலைகுனிவ ஏற்படுத்திக் கொடுத்திட்டேன்… ஆனா அப்ப நீங்க கேட்கும் போது எனக்கு வேற வழி தெரியல… ஆனா என்னால அவங்க நிம்மதியும் கெட வேண்டாம்னுதாத்தே இந்த முடிவு எடுத்திட்டேன்… நீங்க உங்க பையனுக்கு என்னைவிட அந்தஸ்திலும் படிப்பிலும் நல்ல பொண்ணாப்பார்த்து கட்டுங்க… அதுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைனுதான் கையெழுத்து போட்டுக்குடுத்திருக்கேன்… எங்களப்பத்தி இனிமே கவலைப்படாதிங்கத்தை… என்கிட்ட கைத்தொழில் இருக்கு அவங்க ரெண்டு பேரையும் நான் நல்லா பார்த்துக்குவேன்… இனி நீங்க என்னை மறந்துட்டு உங்க பையனோட எதிர்காலத்தை மட்டும் நினைங்க… அவங்ககிட்டயும் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க… தேவையில்லாம அவங்க நிம்மதிய கெடுத்திட்டேன்… கல்யாணம் பண்ணுன பொண்ணு அன்னைக்கே வீட்டவிட்டு போன எப்படியெல்லாம் பேசுவாங்கன்னு தெரியும் ஆனா நான் ஒருநாள் உங்க வீட்டுல இருந்துட்டு வெளிய வந்தாலும் இன்னும் தப்பாத்தான் பேசுவாங்க எந்த காலத்துலயும் இனி உங்களுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்… உங்களுக்கு தமிழக்காவோட நல்ல அழகான குணமான பொண்ணு கிடைக்கும்… நீங்க மட்டும் இல்ல அப்பத்தா…. அப்பா… அம்மா… கதிர் அண்ணா எல்லாருமே எங்கள அந்த குடும்பத்துல ஒருத்தராத்தான் பார்த்துக்கிட்டிங்க… ஆனா எங்களால உங்களுக்கு தொந்தரவு வர்றதை  தாங்க முடியல உங்களுக்கு இனி எப்போதும் என்னை பார்க்கிற நிலை வராது… இனியாவது உங்க தோப்புவீட்டுக்கு உங்க இஷ்டம்போல வந்து போங்க….  கடிதம் முடிந்திருக்க யாருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை….
 
கதிர் இப்ப என்ன மாப்பிள்ள பண்ணுறது…??”
 
அவங்க காணாம போயிருந்தா போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுக்கலாம் இவங்க வேணும்னே வீட்டவிட்டு போயிருக்காங்க… மாமா உங்களுக்கு தெரிஞ்சவங்க நம்மகிட்ட வட்டிக்குகூட காசு வாங்கியிருக்காங்கள்ள பக்கத்தூருகாரரு அவருக்கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லுவோம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க??” தன் அம்மாவையும் அம்மாச்சியையும் சமாதானப்படுத்த….
 
ஏப்பா தம்பி இந்த கடிதத்துல கனி எழுதியிருக்குற மாதிரி நீ தமிழு மேல உயிரையே வைச்சிருந்தியா…. நான்தான் தேவையில்லாம உன் வாழ்க்கையில விளையாடிட்டனா..??” தன் மகனின் முகத்தை பார்த்து கேட்க….
 
இல்லம்மா…. நீங்க வருத்த படுற மாதிரி எதுவும் இல்ல… நீங்க எது செஞ்சாலும் அது என்னோட நன்மைக்கு மட்டும்தான் இருக்கும்மா…. நீங்க கவலைப்படாதிங்க… உங்க தம்பி பொண்ணுக எப்படி நம்மளதேடி வர்ற மாதிரி கடவுள் செஞ்சாரோ ஏதோ மாதிரி அவங்க இருக்கிற இடத்தையும் காட்டிக்குடுப்பாரும்மா….??”
 
 ஒரு மாதம் கழிந்த நிலையில் அனைவரும் ஏர்போர்ட் வந்திருக்க இன்று தமிழும் அரவிந்தும் வெளிநாடு செல்கின்றனர் குடும்பத்தில் அனைவரும் வந்திருந்தனர் தமிழ் அனைவரையும் கட்டிக்கொண்டு அழ… அவளால் தாங்கவே முடியவில்லை…துரையிடம் சென்றவள்
 
மச்சான் கனிய எப்ப பார்த்தாலும் எனக்கு போன் பண்ணி சொல்லிருங்க நான் அடுத்த பிளைட் புடிச்சு வந்திருவேன்..என் தங்கச்சிகள பார்க்கனும் போல இருக்கு மச்சான்…??” இப்போது குடும்பத்தில் அனைவரும் அரவிந்தை மாப்பிள்ளையாக மனதார ஏற்றுக் கொண்டனர்… என்று கனியும் தன் குடும்பத்து பெண் என தெரிந்ததோ அன்றே முத்துராமனும்  அரவிந்தை மருமகனாக ஏற்க பழகியிருந்தார் … எப்படியும் துரை நமக்கு மருமகன்தான் அது எனக்கா இருந்தா என்ன என்னோட தம்பிக்கா இருந்தா என்ன ரெண்டுமே எம்புள்ளைகதான்… .இருவரும் அனைவரின் ஆசிர்வாதத்தோடு கிளம்பினர்…..
 
 
ஆனால் அனைவராலும் துரை மனதில் என்ன இருக்கிறதென்றே அறியமுடியவில்லை…. ஒன்றுமே சொல்லாமல் தனக்குள்ளேயே இறுகியிருந்தான்… கதிருக்கோ தன்னால்தான் துரையின் வாழ்க்கை கெட்டதோ இருவருமே இப்போது தனக்கு முக்கியம் மாப்பிள்ள சொன்னத போல கொஞ்சம் பொறுத்திருந்திருக்கனுமோ நம்மளாலதான் தங்கச்சியும் வீட்டவிட்டு போயிருச்சு தனக்குள் குற்ற உணர்ச்சியால் தவித்து கொண்டிருந்தான்….துரை..மாலையானால் தோப்புவீட்டிற்கு சென்றுவிடுவான்… காலையில்தான் வருவான் கதிரைகூட துணைக்கு வைத்துக் கொள்ள மாட்டான்… இவன் என்ன செய்கிறான் என்ன நினைக்கிறான் எதுவுமே தெரியவில்லை….
 
அவன் ஊரிலிருந்து துரையின் பிரெண்ட் போன் செய்திருந்தான்… டேய் துரை எங்க இருக்க…??”
 
என்னடா விசயம்…. இப்படி அவசரமா பேச என்ன இருக்கு…??”
 
டேய் நீ சொன்ன மாதிரி நம்ம கனி அவ தங்கச்சிகளுக்கு மார்க் லிஸ்ட்டும் டிசியும் வாங்கிட்டு ஆட்டோவுல வேகமா போகுதுடா பின்னாடியே போனேன் இன்னைக்குன்னு பாரு என்னோட வண்டி மக்கர் பண்ணிருச்சு சீக்கிரமா நீயும் கதிரும் நாலு ரோட்டுக்கு வந்திட்டா அவங்கள பார்த்துரலாம்… சீக்கிரமா வாங்க…??”
 
கதிரும் துரையும் என்ன செய்வதென தெரியாமல் எப்படியும் அங்க போக மூனுமணி நேரமாச்சும் ஆகுமே… தன் வெவ்வேறு நண்பர்களுக்கு போன் செய்து பார்க்க சொல்ல….. கனியும் அவள் தங்கைகளும் மாயமாய் மறைந்திருந்தனர்…..
 
அடுத்து ஒரு வருடம் கழித்து……
 
கனியும் அவள் தங்கைகளும் தைத்துக் கொண்டிருக்க… கனி என்னாச்சு அந்த கல்யாணப்பொண்ணு சட்டை தைச்சிட்டியா….??” காயத்ரி கேட்க…
 
இதோ முடிச்சிட்டோம்கா அவ்வளவுதான் இதுக்கு மட்டும் கொக்கி வைச்சிட்டா வேலை முடிஞ்சது… பாட்டி இப்ப எப்படிக்கா இருக்காங்க….??”
 
 
காயத்ரி வயது 23 மாநிறம் சுருள்சுருளான தலைமுடி..திருத்தமான முகம் சாந்தமான குணம்… ரொம்பவும் அன்பானவள் இந்த ஒரு வருடமாக கனிக்கு அவள் தங்கைகளுக்கும் துணையாக ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்கள்… தாய்தந்தை இல்லாமல் பாட்டியோடு வாழ்ந்து வருபவள்… கனியின் நல்ல நேரமோ என்னவோ அவள் துரையின் வீட்டை விட்டு கிளம்பி வந்தவர்கள் தங்கள் ஊர் மதுரைக்கே செல்லலாம் என மதுரை பேருந்தில் ஏறியவர்கள் இரண்டு மூன்று ஊர் தாண்டவுமே இறங்கியிருந்தார்கள்…
 
 
அதுவும்  ஒரு கிராமம்தான் அந்த ஊரில் இருந்த டெய்லர் காயத்ரியிடம் வேலை கேட்க அவள் வேலையோடு தன் வீட்டு பக்கத்து போர்சனையும் அவர்களுக்கு வாடகைக்கு கேட்டு வாங்கித் தந்திருந்தாள்… காயத்ரி தையல் வகுப்பும் நடத்துவதால் கனி அவளுக்கு மிகவும் ஒத்தாசையாக இருக்க இருவர் குடும்ப சூழ்நிலையை அறிந்தவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர்..
 
 அதிலும் இந்த இரண்டு நாட்களாக காயத்ரியின் பாட்டி தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டிருக்க காயத்ரி கடைக்கே வரவில்லை… தனக்கிருந்த அந்த ஒற்றை சொந்தமும் தன்னைவிட்டு பிரிய போவதில் அவள் கலங்கிப் போயிருந்தாள்… முன்னாலேயே ஒரு பெரிய பணக்காரவீட்டு மணப்பெண்ணுக்கு பத்து பதினைந்து சட்டைக்கு ஆர்டர் வாங்கியிருக்க அவர்கள் போனில் துளைத்துக் கொண்டிருந்தார்கள்… அதைக்கேட்கத்தான் இன்று கடைக்கு வந்திருந்தாள்… ஹரிணியும் ரம்யாவும் அக்காவுக்கு துணையாக தைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்… இருவருக்கும் விடுமுறை அடுத்து பனிரெண்டாம் வகுப்புக்குச் செல்ல போகிறார்கள்…
 
பாட்டிக்கு ரொம்ப முடியல கனி இன்னைக்கு நாளைக்குள்ள ஏதாச்சும் ஆயிரும்னு டாக்டர் சொல்றாங்க… எனக்குத்தான் என்ன பண்ணுறதுன்னே தெரியல.. எனக்கும் அவங்களவிட்டா வேற யாரு இருக்கா??” தன் துக்கத்தை அடக்கியவள் முடியாமல் அழ….. கனிக்கு கடவுள் மேல் கோபமாக வந்தது…  யாருமே கொஞ்சம் சந்தோசமா இருந்தா அவருக்கு பிடிக்காதா… நான் கொஞ்சநாள் அத்தை வீட்ல எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தேன் அவருக்கு அது பிடிக்காம என்னன்னமோ செஞ்சு இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாரு… பாவம் இந்த அக்கா நமக்கு கொஞ்சம் உதவி பண்ணினாங்க இப்ப அவங்களுக்கும் சோதனை… அவளை அணைத்து ஆறுதல் கூற…..
 
பாட்டி இறந்து ஒரு வாரம் ஆயிற்று என்ன சொல்லியும் காயத்ரியை சமாதானப்படுத்த முடியவில்லை… அழுதழுது சாப்பிடாமல் கிடக்க கனியும் இரண்டு மூன்று நாள் கடையை அடைத்துவிட்டு அவளுக்கு துணையாகத்தான் இருந்தாள்… இந்த ஒரு வாரமாக நால்வரும் காயத்ரியின் வீட்டில்தான் படுக்கிறார்கள்… பத்து நாளுக்கு முன்பாகவே அவர்கள் தையல்கடையை காலிபண்ணச் சொல்லி கடை ஓனர் சொல்லிவிட… மற்ற கடைகளுக்கு அட்வான்ஸ்ம் வாடகையும் அதிகமாயிருக்க காயத்ரி லோனுக்கு அப்ளை செய்திருந்தாள்… கனியும் தானும் சேர்ந்து கூட்டாக பெரிய தையல்கடையை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து பேங்க்கிற்கு அப்ளிகேஷனெல்லாம் கொடுத்திருக்க அங்கு போக முடியாமல் பாட்டியின் உடல்நிலை …. இறப்பு என ஒவ்வொன்றாக இழுத்தது… இன்றுதான் கனி சென்று விசாரிக்க இன்னும் இரண்டு நாளில் புது மேனேஜர் வந்தவுடன் வந்து கேட்கும் படி சொல்லியிருந்தனர்….
 
லோன் மட்டும் கிடைச்சிட்டா போதும் கொஞ்சம் உதவியா இருக்கும் எல்லாரும் சேர்ந்து இருக்கலாம் என முடிவு செய்திருக்க அன்று காலை காயத்ரி கனியை பேங்கிற்கு சென்றுவரச் சொல்ல காலை பத்துமணி அளவில் கனி பேங்க்கிற்கு வந்திருந்தாள்… ஒரே கூட்டமாக இருக்க அங்கிருந்தவர்களிடம் விபரத்தை சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள்…..
 
வந்ததிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கை அந்த லோன் அப்ளிகேசனில் இருந்த போட்டோவை பார்க்கவும் அப்படியே அந்தரத்தில் நிற்க….. அது உண்மைதானா என தடவிப்பார்த்துக் கொண்டிருந்தது பியூனை அழைத்து அந்த லோன் பற்றி விபரம் கேட்க அந்த அப்ளிகேசனில் இருந்த போன் நம்பரில் இருந்து கூப்பிட்டு அவர்களை நேரடியாக வரச் சொல்லியிருந்தான்… அந்த பியூன் காயத்ரிக்கு போன் செய்து விபரத்தை சொல்ல அவளால் வரமுடியாமல்தான் கனியை அனுப்பியிருந்தாள்….
 
கனி வந்தது அங்கு விசாரித்தது நாற்காலியில் அமர்ந்தது என அனைத்தையும் அங்கிருந்த கேமராவில் பார்த்தபடி இருந்தவன் கனியை தவிர மற்றவர்களை ஒவ்வொருவராக உள்ளே வரச் செய்து விபரத்தை கேட்டு அனுப்ப கடைசியாக கனி மட்டும்தான் இருந்தாள்…
 
 ச்சே என்ன இவ்வளவு நேரமாகுது… இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா ரெண்டு சட்டையை தைச்சிட்டு கூட வந்திருக்கலாம்…??” பேங்க் ஊழியர்கள் சாப்பாட்டு நேரமே வந்தது அனைவரும் சாப்பிட சென்றிருக்க கனியை உள்ளே வரும்படி பியூனிடம் சொல்லி அனுப்பியிருந்தான்….
 
ஸ்ஸ்ஸ்….ஹப்பா இப்பவாச்சும் கூப்பிட்டாங்களே??” என நினைத்தபடி உள்ளே காலை வைக்க அந்த பக்கம் திரும்பி ஏதோ பைலை பார்த்தபடி ஒருவன் உட்கார்ந்திருக்க அவன் முதுகு மட்டும்தான் தெரிந்தது… இவள் சேரில் அமராமல் தயங்கியபடி….ஸார்….??”. என அழைக்க…
 
ம்ம்ம் உட்காருங்க….??”
 
அந்த சேரில் பட்டும் படாமல் அமர்ந்தவள் அவன் எப்போது தன் பக்கம் திரும்புவான் என காத்திருக்க அவளை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் நாற்காலி அவள் பக்கம் சுழலவும் தன் பார்வையை அவன் பக்கம் திருப்பியவள் இவங்களா…..??”. அப்படியே அதிர்ச்சியில் எழுந்து நின்றிருந்தாள்….
 
ம்ம்ம் சொல்லுங்க என்ன வேணும்…??”
 
கனிக்கு ஒரு சந்தேகம் நமக்கு காது கேட்குதா… கண்ணு நல்லா தெரியுதா.. தன் கண்ணை கசக்கிக் கொண்டு அவனை பார்க்க…
 
அவன் அவளை பார்வையால் அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்து கொண்டிருந்தான்….
 
 
                                            இனி……….??????

Advertisement