Advertisement

 
 
அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக… சைகையால் எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க…. நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்…. நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ… அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ… தன் தாய் அந்த முடிவை எப்போது எடுக்ககூடாது என சத்தியம் வாங்கியிருக்க… கண்ணைத்துடைத்து ஒரு முடிவை எடுத்தாள்….
 
மதிய சாப்பாடு முடியவும் அரவிந்த் தன் வீட்டிற்கு கிளம்ப முத்துராமனும் கதிரும் தாங்கள் கூட போக மறுத்து விட்டனர்… தமிழ் தன் தாயை கட்டிக் கொண்டு அழுதவள் கூட வருமாறு கெஞ்ச…….. ம்ம்கூம் அசையவே இல்லை…
 
மீனாட்சிதான் தன் மகனை அழைத்து நம்ம எல்லாரும் போய் முறைப்படி தமிழ விட்டுட்டு வரணும் கதிர்கிட்ட பேசு ??”என்றவர்
 
தன் தம்பியிடம் பேச சென்றவர் அவரையும் சமாதானப்படுத்த அடுத்த அரைமணி நேரத்தில்  அனைவரையும் சமாதானப்படுத்தி….. அப்பத்தாவோடு… கனியும் அவள் தங்கைகளும் மட்டும் வீட்டில் இருக்க மற்றவர்கள் அனைவரும் அரவிந்த் வீட்டிற்கு கிளம்பலாம் என முடிவு செய்யப்பட்டது…. சாமான்களை லாரி பிடித்து ஏற்றியவர்கள்… தமிழை அரவிந்தின் காரில் முன்னால் அனுப்பிவிட்டு இவர்கள் தங்கள் காரில் கிளம்பலாம் என முடிவு செய்யப்பட்டது ….
 
துரைக்கு கனியிடம் தனியாக பேச வேண்டும் போல இருக்க இப்ப ஆரம்பித்தால் முடியாது என யோசித்தவன் …..எப்படியும் தமிழ் வீட்டிற்கு போயிட்டு  திரும்பி வர மணி பத்து பதினோரு மணியாச்சும் ஆகிரும் அப்ப இவ தூங்கிருவாளே இப்ப என்ன பண்ணலாம் என யோசிக்க ஒன்றும் தோன்றாமல்மெதுவாக கனி என்ன செய்கிறாள் என பார்த்தான் அவள் ஏதோ தீவிர சிந்தனையில் தன் தங்கைகளோடு அமர்ந்திருந்தாள்… இந்த லூசு ஏன் இப்படி என்னமோ கப்பல் கவுந்த மாதிரி முகத்தை வைச்சிருக்கா….அந்த அறைக்குள் இவன் நுழைய அவள் தங்கைகள் இருவரும் துரையை பார்த்து சிரித்துவிட்டு வெளியில் வந்திருந்தனர்… இவன் உள்ளே வந்ததுகூட தெரியாமல் அவள் இருக்க அருகில் சென்றவன்
 
 க்கூம்…..??” என செரும அப்போதுதான் திடுக்கிட்டு தன் சுயநினைவுக்கு வந்தவள் தன் அருகில் துரையை பார்க்கவும் தன்னை சுற்றிப்பார்த்தவள் தன் தங்கைகளை காணாமல்……. வேகமாக அந்த அறையைவிட்டு செல்ல போக அவள் சேலையின் தலைப்பு அங்கிருந்த நாற்காலியில் மாட்டியிருந்தது…. அது தெரியாமல் இவள் வேகமாக செல்ல தன்னை பின்னால் சேலையை பிடித்து இழுப்பது போல இருக்க……. கைகாலெல்லாம் வெடவெடவென நடுங்கத்துவங்கியவள்
 
 ஐயோ….. அம்மா என்னை விட்டுருங்க  இனிமே நீங்க இருக்கிற பக்கம்கூட வரமாட்டேன் ??”என பயத்தில் உளர ஆரம்பிக்க…..
 
அவளையே வேடிக்கை பார்த்தவன் தன் கையை கட்டியபடி….” ஏய் முதல்ல சும்மா இப்படி உளர்றத நிறுத்து லூசு மாதிரி பண்ணாம  கண்ணைத்திறந்து பாரு….??”
 
 சத்தமாக அதட்ட அப்படியே பயந்து தன்கையால் வாயை மூடியவள் மெதுவாக திரும்பி பார்க்க இப்போதுதான் பார்த்தாள் தன் சேலை நாற்காலியில் மாட்டியிருப்பதை…..
 
ஐயோ இது வேறயா என நினைத்து திரும்ப அதற்குள் அந்த சேலையின் முந்தியை நாற்காலியில் இருந்து எடுத்தவன்… அப்படியே தன்னை நோக்கி வேகமாக இழுக்க… மெத்தென அவன் மார்பில் மோதியிருந்தாள்…. ஒரு பூங்கொத்து தன் மீது மோதியது போல இருக்க அவள் இடுப்பை பிடித்தவன்
 
நான் தானே சேலைய பிடிச்சேன்னு நினைச்ச….??”அவள் வெற்றிடையை வருடியபடி மறுகை அவள் தாடையை பிடித்து கேட்க கனிக்கு அப்படியே கண் கட்டி மயக்கம் வருவது போல இருந்தது….. அவன் முகத்தை பார்க்க முடியவில்லை…. இப்ப என்ன பேசுவாரோ…. அவள் முகத்தில் பயத்தை பார்த்தவன்…கீழே குனிந்திருந்தவளின் தாடை பிடித்து தன்னை பார்க்கச் செய்ய அவள் கண்ணை மூடியிருந்தாள்….. அவள் உதடு அழுகைக்கு தயாராகிக் கொண்டிருந்தது…. நெற்றியில் வியர்வை பூத்திருக்க   முகத்தில் பயம் அப்படியே அப்பட்டமாக தெரிந்தது….. இப்படி இருக்கவள்கிட்ட என்னத்த பேச பெருமூச்சு விட்டவன்  நாம இவளை விரும்புறோம்னு எப்படி  இவகிட்ட புரியவைக்கிறது…. பேசாம எங்கயாவது ஹனிமூனுக்கு கூட்டிட்டு போயிருவமா…. யாருமே இல்லைன்னா இவ நம்மகிட்ட மட்டும்தானே பேசிப்பழகனும் …… என்று யோசித்தவன் இதுவே சரியென பட…… அவளை சற்று விலக்கிவிட்டு
 
 
 நான் தமிழ் வீட்டுக்கு போயிட்டு வந்துருறேன் அம்மாச்சிய பார்த்துக்க ???’அவள் கன்னத்தை தட்டியபடி விலக…. அவள் கன்னச் செழுமை முத்தமிட அழைத்தது…. இப்ப இவ சம்மதம் இல்லாம முத்தம் கொடுத்திட்டு அப்புறமா அன்னைக்கு மாதிரி காய்ச்சல்ல விழுந்துருவாளோ ஐயோ….. மண்டை காயுதே…..இவளை இப்படி பக்கத்துல வைச்சுக்கிட்டு  பார்த்தா நம்ம கையும் வாயும் நாம சொல்லுறத கேக்கவே கேக்காது….. என்ன பண்ணலாம் என்று யோசித்தபடி தன் அம்மாவை தேடி கிளம்ப கனிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது….
 
அனைவரும் தமிழ் வீட்டிற்கு வர நல்ல பெரிய பங்களா போல பெரிய வீடு…. இன்றைய நவீன வசதிகள் எல்லாம் இருந்தது…தங்கள் ஊரில் இருக்கும் வீடு பெரியதென்றாலும் இந்த அளவுக்கு வசதிகள் இருக்காது இங்கு தரையிலிருந்து வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் பணம் தெரிந்தது… இந்த அளவுக்கு வசதியை யாருமே எதிர்பார்க்கவில்லை…… அரவிந்தின் தந்தை தன் மனைவியை எப்படியோ சமாதானப்படுத்தி வைத்திருக்க தமிழையும் அவள் கொண்டு வந்திருந்த சீரையும் பார்த்தவர் கொஞ்சம் திருப்தியாக….  அவர் முகத்திலிருந்த சந்தோசத்தை உணர்ந்தவர் தமிழை இந்த வீட்டு மருமகளாக தன் மனைவி ஏற்றுக் கொள்வதை உணர்ந்து கொண்டார்…. மணமக்களை ஆரத்தி காட்டி வரவேற்றவர்கள்… தமிழை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல அனைவருக்கும் காப்பி …ஜூஸ் என கொடுக்க முத்துராமனும் கதிரும் பேசாமல் இருக்கவும் மீனாட்சி அம்மாதான் சூழ்நிலையை சரியாக்க ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்…..
 
அரவிந்தின் தந்தை தன் மகன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு  திரும்பி வரும்போது அரவிந்த் தமிழுக்கு ஒரு ரிசப்சன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்ய நாளை மாலை அரவிந்த் கிளம்புவதால் வந்த பிறகு எப்போது வைக்கலாம் முடிவு செய்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இவர்கள் அனைவரும் கிளம்ப தமிழுக்குத்தான் மனது தாங்கவில்லை… புது இடம் புதுச்சூழல் தன்னால் எப்படி இருக்க முடியும் நாளை அரவிந்த் ஊருக்கு சென்றுவிட்டால் தான் மட்டும் இவர்களோடு எப்படி….. யோசிக்க யோசிக்க அவளுக்கு அழுகை முட்டியது….. தான் நாளை மாலை கிளம்புவதாக சொன்ன அரவிந்த்… தமிழை இரண்டு நாட்கள் கழித்து வந்து அங்கு அழைத்து செல்லும்படி சொல்ல இப்போதுதான் தமிழுக்கு மூச்சே வந்தது… அரவிந்தின் அம்மா டிபன் செய்திருக்க அனைவரும் சாப்பிட்டவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்ப…. கதிரை தனியாக பார்த்த அரவிந்த் தமிழை பற்றி கவலைப்படாமல் இருக்கச் சொன்னவன்…துரையை தனியாக அழைத்து …..
 
நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்… முதல் முதலா நான் உங்க ஊருக்கு வரும்போது கனியத்தான் பொண்ணு பார்க்க வந்தேன்… ஆனா கனி நான் அங்க வரவுமே என்னால வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லாம் கட்டிக்க முடியாது தன் தங்கச்சிகளோட எதிர் காலம்தான் முக்கியம்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு மறுத்துட்டா அதுக்கப்பறம்தான் நான் தமிழையே விரும்ப ஆரம்பிச்சேன்… நீங்க நான் அங்க தங்கியிருந்ததால கனியை சந்தேகப்படாதிங்க….. எப்ப  அந்த மாதிரி  அவங்க முடிவு பண்ணினாங்களோ அப்பவே அவங்கள நான் ஒரு பிரெண்டாத்தான் பார்க்க ஆரம்பிச்சேன்… நான் பண்ணுறேன்னு சொன்ன ஹெல்ப்பக்கூட அவங்க மறுத்திட்டாங்க… நான் கொண்டுவந்த பொருளை வாங்கே மாட்டேன்னு சொன்னவங்க எல்லாமே எங்க அப்பாதான் வாங்குனதுன்னு தெரிஞ்ச அப்புறமாத்தான் வாங்கவே சம்மதிச்சாங்க… நீங்க இனி இவங்களையும் அவங்க தங்க்ச்சிகளையும் நல்லா பார்த்துக்குவீங்கன்னு தெரியும்… என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க நான் செய்ய தயாரா இருக்கேன்….??”
 
துரை…… அப்படியே பேசாமல் நின்றான்… இவ முதல்லையே இவன வேண்டான்னு சொல்லிட்டாளா… அப்ப நாமதான் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சு வைச்சிருக்கோமா… அன்னைக்கு கட்டியிருந்த சேலையும் இவன் கொடுத்ததில்லையா… உடனேயே கனியை பார்க்க வேண்டும் போல இருக்க… அரவிந்தை கட்டி அணைத்தவன்
 
 
 நீங்க கவலையே படாதிங்க இனி கனியும் அவ தங்கச்சிகளும் என்னோட பொறுப்பு நீங்க தமிழ மட்டும் அங்க சீக்கிரமா கூட்டிட்டு போற வழிய பாருங்க….??” உற்சாகத்தில் மனம் துள்ளிக்குதிக்க அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரையும் காரில் ஏற்றி காரை கிளம்பியிருந்தான்….
 
இவர்கள் வீட்டுக்கு வரும் வழியிலேயே தங்கள் உறவினர் ஒருவர் போன் அடிக்க எடுத்தவன் அந்த பக்கம் தங்கள் அம்மாச்சி…..
 
ஆத்தா மீனாட்சி எப்பத்தா வருவீங்க சாயங்காலமே தோப்பு வீட்டுக்கு போன நம்ம கனியும் அவ தங்கச்சிகளும் இன்னும் வீட்டுக்கு வராம இருக்காங்கத்தா… வெரசா வாங்க..??”.தன் போக்கில் கத்திக் கொண்டிருக்க …. அதை கேட்டவர்கள் அப்படியே அதிர்ச்சியாக அடுத்த அரைமணி நேரத்தில் தங்கள் வீட்டில் இருந்தனர்….
 
கூட்டமாக தன் வீட்டின் முன்னால் ஆட்கள் இருப்பதை கண்டவர்கள் வேகமாக காரை விட்டு இறங்க அங்கு அப்பத்தா ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தவர் தன் மகளை பார்க்கவும் இன்னும் சத்தமாக அழ
 
தன் அம்மாச்சியை அதட்டியவன்….. என்ன அம்மாச்சி என்னாச்சு ??”சத்தமாக கேட்க…
 
தன் பேரனை கட்டிப்பிடித்தவர்… அப்பு துரை ஆறு மணிக்கா நம்ம தோப்பு வீட்டுக்கு போயிட்டு மாத்து உடை எடுத்துட்டு வாரேன்னு போனவங்கள இன்னும் காணலைப்பா…. நானும் நம்ப சொந்தகார பையன போய் பார்த்துட்டு வரச் சொன்னேன்…. அங்க வீடு பூட்டியிருக்காம் யாருமே இல்லையாம் எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா….??” இன்னும் சத்தமாக அழ..
 
அனைவரையும் காரில் ஏற்றியவன் வேகமாக தங்கள் தோப்பு வீட்டுக்கு போக… சத்தமில்லாமல் இருந்தது நாயை மட்டும் அவிழ்த்து விட்டிருக்க உள்ளே நுழைந்தவர்கள் எப்போதும் சாவி இருக்கும் இடத்தை பார்க்க சாவி இருக்கவும் கதவை திறந்தார்கள்…… கனியின் போனிற்கு போன் பண்ண ஸ்விட்ச் ஆப்….
 
உள்ளே சென்று பார்க்கும் போதுதான் துரை ஒன்றை உணர்ந்தான்…தையல் மிசினை காணவில்லை உள்ளே அறைக்குள் சென்று பார்க்க துணி மணிகளையும் காணவில்லை ஏதோ தவறாக பட வீட்டையே அலசியவர்கள் கண்ணில் பட்டது கனி எழுதிய கடிதமும் அவள் கையெழுத்திட்டிருந்த வெற்று காகிதமும்… அதன் மேல் கனி போட்டிருந்த குடும்ப நகைகள்…துரை அப்படியே தொய்ந்து போய் நாற்காலியில் அமர…. உள்ளிருந்து மீனாட்சியின் பதட்டமான குரல் தன் தாயை நோக்கி வந்த்து….
 
ஐயோ…. ஆத்தா…. நாம இனி என்ன பண்ணப போறோம்…. இத பாரு??” என ஒரு பையை காட்ட அதிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தவர் தன்  மகனையும் மகளையும் பார்க்க அவர்களும் தங்களின் தலையை ஆட்ட அப்படியே மயங்கி கீழே விழுந்திருந்தார்…..
 
 
                         இனி………….??????

Advertisement