Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  12
 
அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து ஐயோ….. கடவுளே என்ன நடக்குது இங்க.??”…கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்….. சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க… அப்பத்தாவின் குரலை கேட்டு அப்போதுதான் உள்ளே வந்த துரை என்னவோ ஏதோவென்று ஓடிவர…. அரவிந்தை பார்க்கவும் அப்படியே திடுக்கிட்டு நின்றான்… இவனா….ஆத்திரம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது… ஏற்கனவே இவனாலதான் என்னை ஒருத்தி நிமிர்ந்துகூட பார்க்க மாட்டேங்கிறா… இப்ப தமிழ் கூட என்ன பண்ணுறான்… கோபமாக அரவிந்தை நோக்கிச் சென்றவன் எட்டி அவன் சட்டையை பிடிக்க……
 
.டேய் இங்க என்ன பண்ணுற..இந்த நேரத்துல உனக்கு இங்க என்ன வேலை… நீ வெளிநாட்டுலத்தானே இருக்கிறதா சொன்னாங்க??”. கோபத்தில் முகம் இறுக பல்லை கடிக்க… அவன் சத்தத்தில் மீனாட்சியும் வசந்தாவும்  ஓடிவந்தார்கள்… தமிழும் அப்படியே திக்பிரம்மை பிடித்தாற்போல நிற்க…  அவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை…
 
மீனாட்சி… என்னத்தா நடக்குது இங்க… தம்பி ஏன் இந்த அரவிந்த் தம்பியோட சண்டை போடுறான்…??”
 
அப்பத்தாவோ சத்தமாக… ஐயோ மீனாட்சி நாம் மோசம் போயிட்டோம்டி…. இந்த கூறுகெட்ட சிறுக்கி நம்ம மானத்தை சந்தி சிரிக்க வைச்சுட்டா… போச்சு போச்சு எல்லாம் போச்சு…??”. அவர் விசயத்தை சொல்லாமல் இன்னும் பெருங்குரலெடுத்து அழ…. பாலை வாங்கி சமையல்காரர்களிடம் கொடுத்துவிட்டு வந்த கதிரும் ஆடு உறிக்கும் இடத்தில் இருந்த முத்துராமனும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் வசந்தாவை தேடி வீட்டிற்குள் காணாமல் கொல்லை புறத்திற்கு வர……..
 
அங்கு தன் தாய் அழவும் மறுபடி கீழே விழுந்து விட்டாரோ என நினைத்து அந்த இடத்திற்கு ஓடி வந்தவர்கள்……
 
 என்னாச்சு ??”பதற…..
 
ஐயோ முத்து போச்சுடா நம்ம மானமே போச்சு… உன்மக நம்ம எல்லாரையும் சந்தி சிரிக்க வைச்சிட்டாடா..??”.தான் பார்த்ததை அனைவரிடத்திலும் சொல்லி….தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ…
 
அனைவரும் அப்படியே நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சியில் நின்று போயிருந்தார்கள்….
அரவிந்த் ..தன் சட்டையிலிருந்த துரையின் கையை பிடித்தவன்….ப்ளிஸ் துரை கொஞ்சம் நான் சொல்லுறத கேளுங்க…??”.
 
நீ சொல்லுறத நாங்க ஏன் கேட்கனும் நீ எங்கவீட்டு பொம்பள பிள்ளைகளை மயக்கிறதே வேலையா வைச்சிருக்க??” கனியையும் நினைத்து சொன்னவன் இருவருக்கும் கைகலப்பாக…சத்தம் அதிகமாகவும் உறவினர்கள் அனைவரும் அடித்துபிடித்து வர ஆரம்பித்தனர்… சற்று நேரத்தில் அந்த இடமே கூட்டமாக… ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர்… தமிழும் சண்டையை விலக்கி விலக்கி பார்க்க அவளால் முடியவில்லை….மீனாட்சி அம்மாள் வந்து தன் மகனை தன் பக்கம் இழுத்தவர்….
தம்பி கொஞ்சம் அமைதியா இருப்பா….??”.தன் மகனை அதட்ட
 
அங்கிருந்த உறவுக்காரர்கள் குசுகுசுவென தமிழையும் அங்கிருந்த அரவிந்தனையும் சேர்த்து வைத்து  தவறாக பேச ஆரம்பிக்க….. மீனாட்சி தன்னை சுற்றிப்பார்த்தவர்… எல்லாரும் கொஞ்சம் சும்மாயிருக்கிங்களா….?? ” கத்தி சத்தமிட…. அந்த இடமே அமைதியானது….தங்கள் உறவினர்களை சுற்றி பார்த்தவர்…
 
நீங்க எல்லாரும் கொஞ்சம் பொறுங்க இது எங்க வீட்டு பிரச்சனை நாங்களே பேசி தீர்த்துக்கிறோம்… நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க….. தன் குடும்பத்து ஆட்களை மட்டும் பார்த்தவர் எல்லாரும் வீட்டுக்குள்ள தமிழோட ரூமுக்கு வாங்க…??”.அந்தஅறையில் மட்டும்தான் உறவினர்கள் தங்காமல் இருந்தனர்….
 
அரவிந்தையும் வரச் சொல்ல இவர்கள் அனைவரும் தமிழின் அறைக்குள் செல்லும் போது அப்போதுதான் ரம்யாவும் ஹரிணியும் தூங்கி எழுந்து அமர்ந்திருந்தனர்… அவர்கள் இருவரையும் சற்று நேரம் வெளியில் இருக்கச் சொல்லி கதவை அடைத்தவர்… அரவிந்தையும் தமிழையும் பார்த்து…
 இங்க என்ன நடக்குது தமிழ்…..??”
 
அப்போதுதான் பாத்ரூமில் தன் பட்டுச் சேலையை கட்டி முடித்திருந்த கனி வெளியே வர… ரூமிற்குள் இவர்கள் அனைவரையும் எதிர்பார்க்கவில்லை… திடுக்கிட்டவள்….. அங்கிருந்த அரவிந்தை பார்க்கவும் சிரித்தபடி வாங்க அரவிந்த் எப்ப வந்திங்க… என்னாச்சு சட்டையெல்லாம் இப்படி கசங்கி போயிருக்கு ……??” அரவிந்தை நலம் விசாரிக்க… அவ்வளவுதான் துரைக்கு வந்த கோபத்திற்கு கனியை ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான்….
 
மீனாட்சியோ…. டேய்…??”. என பதறியவர்… என்னடா பழக்கம் இது பொம்பள புள்ளைய கைநீட்டி அடிக்கிறது… இந்த பொண்ணு என்ன பண்ணும்… இங்க நடந்ததுக்கும் இவளுக்கும் ஏதாச்சும் சம்பந்தமிருக்கா….??”
 
கனி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்… இவ்வளவு பேர் முன்னாடியும் நம்மள அடிச்சிட்டாங்களா…கண்ணீர் கரகரவென ஊற்ற அப்படியே மயக்கம் வருவது போல இருந்தாலும் எல்லார் முகத்திலும் ஏதோ பதற்றத்தை பார்த்தவள்… நம்மளால ஏதோ பிரச்சனையோ…..
 
கனியை கோபமாக முறைத்த துரை…. அம்மா இவதான் எல்லாத்துக்கும் காரணம் இவ எப்ப நம்ம வீட்டுக்கு வந்தாளோ அப்ப இருந்துதான் பிரச்சனை…. அவள தேடி இவன் வந்தான்… இப்ப தமிழோட வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிட்டான்….??” மீண்டும் துரை அரவிந்தை நோக்கி பாய்ந்து போய் சண்டை போடப்போக… இப்போது இருவருக்கும் இடையில் தமிழ் வந்திருந்தாள்….
 
கதிருக்கு நம்பவே முடியவில்லை… நம்ம தங்கச்சியா…. வேற ஆள கட்டிபிடிச்சுக்கிட்டு இருந்தாளா..எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்க மாட்டான்னு நினைச்சேன்… இவ்வளவு பெரிய விசயத்தை எப்படி சொல்லாம மறைச்சா….. மனதே ஆறவில்லை… இப்போது அரவிந்திற்கு இடையில் தமிழ் வரவும் அப்படியே மனது விட்டுப் போயிற்று… அங்கிருந்த சோபாவில் தொய்ந்து போய் அமர…. முத்துராமனுக்கும் அதே நிலைதான் நம்ம பொண்ணு நாம கிழிக்கிற கோட்டை தாண்டமாட்டான்னு எவ்வளவு பெருமை பட்டோம் போச்சு… எல்லாம் போச்சு..
 
வசந்தாவோ… ஏய் என்னடி பண்ணுற… போடி… ஒழுங்கு மரியாதையா விலகிப்போயிரு..??”
. அரவிந்தை கையெடுத்து கும்பிட்டவர்...தம்பி என்னோட பொண்ணுக்கு உலகம் தெரியாது… அவள விட்டுருங்க…??”
 
தமிழு …. இல்லம்மா அவங்க மேல எந்த தப்பும் இல்லை….. நான்தான் போன் பண்ணி அவங்கள இங்க வரச்சொன்னேன்….??” அவ்வளவுதான் இவ்வளவுநேரம் அந்த பையன் மேல்தான் தப்பிருக்கும் தன் பெண்ணிற்கும் இதற்கும் சம்பந்தமிருக்காது என லேசான நப்பாசையில் இருந்த முத்துராமன் தமிழ் பேசுவதை கேட்டவுடன்  வெறியாகி  தன் பெல்ட்டை கழட்டி தமிழை விளாச ஆரம்பித்தார்…. தமிழ் தன் மேல்தான் குற்றம் அப்படியே அசையாமல் நிற்க அரவிந்த்தான் அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்திருந்தான்… அவர் அடித்த அடிகள் ஒன்று இரண்டு அவன் மேலிலும் படும் போலிருக்க அவனை அணைத்து அந்த அடிகளையும் தமிழே வாங்கியிருந்தாள்…. மீனாட்சிதான் தன் தம்பியை பிடித்து இழுத்து….
 
டேய்…… இது என்னடா பழக்கம் ஒரு பொண்ண கைநீட்டி அடிக்கிறது… உன்னை மாதிரித்தான் உன்னோட மாப்புளையும் இருக்கான்.. .எதுகெடுத்தாலும் இது என்ன பழக்கம் கைநீட்டுறது…??” அவரை தன் பக்கம் இழுத்தவர்… அரவிந்தை பார்த்து
தம்பி சொல்லுங்க… உங்களுக்கு இன்னைக்கு என் பையனுக்கும் தமிழுக்கும் கல்யாணம்னு தெரிஞ்சுதான் நிப்பாட்ட வந்திங்களா….??”
 
அனைவரையும் நிமிர்ந்து பார்த்த அரவிந்த்….ஆமா ஆன்ட்டி…. என்னைக்கு முதல் முதலாக உங்க ஊருக்குள்ள வந்தனோ அப்பவே தமிழ விரும்ப ஆரம்பிச்சுட்டேன்… தமிழோட படிப்பு முடியவும் நானே வந்து அப்பா அம்மாவோட பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன்… அதுக்குள்ள நீங்க திடிருன்னு கல்யாணம் வைப்பிங்கன்னு தெரியாது…. அதான் உங்ககிட்ட முறைப்படி பேச முடியல… நானும் தமிழும் அப்பத்தா மட்டும் பார்க்காம இருந்திருந்தா…. உங்களத்தான் பார்க்கவரலாம்னு இருந்தோம்… எனக்கு தமிழ உயிருக்கு உயிரா பிடிச்சிருக்கு ஆன்ட்டி….
 
அக்கா… என்னக்கா பொறுமையா அவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்க… முதல்ல இவன வெளியில போகச் சொல்லிட்டு நம்ம மாப்பிள்ளைய தாலிக்கட்டச் சொல்லுக்கா…..??”
 
தமிழோ தன் தந்தையை தைரியமாக பார்த்தவள்…..இல்லப்பா…. அப்படி ஏதாச்சும் நடந்தா என் பொணத்துக்குத்தான் தாலி கட்டுறமாதிரி இருக்கும்…??”.அனைவரும் தமிழையே அதிர்ச்சியாக பார்க்க துரையை நோக்கி கையெடுத்து கும்பிட்டவள்… மச்சான் என்னை மன்னிச்சிருங்க… என்னோட மனசு முழுசுமே இவங்கதான் இருக்காங்க… இவங்க இல்லாட்டா நான் உயிரோட இருந்தும் அது பொணத்துக்குதான் சமம் …. துரையின் காலடியில் விழுந்தவள்.. அவங்களுக்கே என்னை கட்டி வைச்சிருங்க மச்சான்…??”.காலை பிடித்துக் கொண்டு கதற….
 
அரவிந்திற்கு தமிழ் இப்படி துரையின் காலில் விழுந்து கதறுவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் கல்யாணம் இந்த அளவுக்கு வந்திட்டு நின்னா ஒரு மாப்பிள்ளையோட மனசு என்ன கஷ்டப்படும் என யோசித்தவன் பேசாமல் அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் இருந்தான்…
 
துரை தமிழை பார்த்து வியந்து போயிருந்தான்… சிறுவயதில் இருந்தே அவளுக்கு அப்பாவென்றால் பயம் அதுவும் பெல்ட்டை எடுத்துவிட்டால் அப்படியே என்ன சொன்னாலும் கேட்பாள்… இன்று இவன காதலிச்சவுடன  அவங்க அப்பாக்கிட்ட இவ்வளவு அடியும் வாங்கிக்கிட்டு தைரியமா நிற்கிறாள்னா…. அவளோட காதல் அப்படி பேசுற தைரியத்தை இவளுக்கு குடுத்திருச்சா… தமிழேயே சற்று நேரம் பார்த்தவன்….கண்டிப்பா நம்மளால தமிழை கட்டிக்க முடியாது…. இப்போது தமிழை நினைத்து இவனுக்கு பெருமையாகத்தான் இருந்தது… காதலிச்சவனுக்காக எந்த அளவுக்கு போராடுறா….
 
தன் தாயிடம் திரும்பி… அம்மா… தமிழ அரவிந்துக்கே கல்யாணம் பண்ணி வச்சிருங்கம்மா..??”.
 
தம்பி….. மாப்புள்ளை… அப்பு…..??” என அனைவரின் அதிர்ச்சி குரலை கேட்டவன்…
ஆமா மாமா…..  தமிழ அரவிந்துக்கே கல்யாணம் பண்ணி வச்சிருங்க… அவங்களாவது சந்தோசமா இருக்கட்டும்… இந்த ஒரு கல்யாணம் மட்டும் நடக்கட்டும்….??”
 
கதிர்...டேய் அப்ப உனக்கு…??”
 
அதுவரை அங்கு நடந்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த கனியை பார்த்தவன்…. எனக்கு அப்புறமா பார்த்துக்கலாம்டா ……. இவங்களுக்கு முதல்ல பாருங்க….??” வெளியில் செல்ல திரும்பியவனை எட்டி பிடித்த கதிர்…
 
டேய் நில்லுடா…. இப்ப எனக்கு என் தங்கச்சியவிட நீதான் முக்கியம் இப்ப மட்டும் உன் கல்யாணம் நடக்கலைனா நம்ம சொந்த பந்தம் உனக்கு என்ன குறையோ அதான் அவன் மாமா பொண்ணே வேண்டாம்னு வேற ஆள கட்டிக்கிடுச்சுன்னு சொல்லுவாங்க…உனக்கு என்னடா குறை…. இவ என்ன பெரிய இவளா இவ வேணாமுன்னு சொன்னா வேற பொண்ணே உனக்கு கிடைக்காதா… நம்ம சொந்தத்துல பொண்ணா இல்லை…. ஒருஒரு பெயராக சொன்னவன்…கடைசியில் கனியை பார்க்கவும் இல்லை நம்ம கனியக்கூட கட்டிக்க…. அவள பார்க்க வந்துட்டுத்தானே இவன் தமிழ கட்டுறான்… இப்ப நீ அவனுக்கு பார்த்த பொண்ணக்கட்டு……??”.
 
சூழ்நிலை இப்படி மாறும் என எதிர்பார்க்காத….துரை அப்படியே நின்றவன்…திரும்பி கனியை பார்க்க… அவள் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது…… ம்கூம்…இது சரிவராது என நினைத்தவன் இல்லடா…. எனக்கு இப்ப வேண்டாம் அப்புறமா இதப்பத்தி பேசுவோம் முதல்ல இவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை முடிச்சு வைப்போம்…..??”
 
கதவை நோக்கிச் செல்ல….. நில்லு துரை…??” தன் தாயின் குரல் கேட்கவும் அப்படியே நின்றான்…
.நான் இதுவரைக்கும் உன்கிட்ட உங்க அப்பா சொந்தகாரங்களை பத்தி ரொம்ப பேசுனது இல்லை… கல்யாணம் செஞ்சு 2 வருசத்துல  உங்க அப்பா சாகவும் என் புகுந்தவீட்டு உறவே வேணாமுன்னுதான் உன்னைத் தூக்கிக்கிட்டு இங்க வந்தேன்…அப்ப நீ கைப்புள்ள…. அன்னைக்கு நாம கனிவீட்டுக்கு போகும்போது கனியும் அவதங்கச்சிகளும் எந்த நிலையில இருந்தாங்களோ நான் அதவிட மோசமான நிலையில இருந்தேன்… ஏகப்பட்ட சொத்த விட்டுட்டு சொந்தகாரங்களே பண்ணுன துரோகத்தை பொறுக்க முடியாம எல்லாத்தையும் விட உன் உயிரும் என் மானமும் பெருசுன்னு பொறந்த வீட்டுக்கு வந்தேன்…
 
 இத்தனை வருசம் ரொம்ப போக்குவரத்தே இல்லை… ரெண்டு வருசத்துக்கு ஒருதரம் குத்தகை பணம் அவங்களே கொண்டு வந்து கொடுத்திட்டு போவாங்க… இப்ப உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க போகும்போது கூட என்னன்ன பேசினாங்கன்னு என் மனசுக்குத்தான் தெரியும்…. இன்னைக்கு அவங்க எல்லாரும் உன் கல்யாணத்துக்கு வருவாங்க…. இன்னைக்கு மட்டும் உன் கல்யாணம் நடக்கலைனா அப்புறம் அவங்க பேசுனது எல்லாமே உண்மையா போயிரும் பொம்பளையா வளர்த்த பையன் அதான் ஒழுங்கா வளர்க்காம போயிட்டா… என்ன குறையோ அதான் கல்யாணம் நின்னுருச்சுன்னு சொல்லுவாங்கப்பு… அப்படி மட்டும் சொல்லிட்டா இத்தனை வருசம் உங்க ஆத்தா வைராக்கியமா வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிரும்… அப்புறம் நான் உயிரோட இருந்தா என்ன செத்தா என்ன..??”..தன் தாயை எட்டி அணைத்தவன்…
 
அம்மா அப்படியெல்லாம் சொல்லாதிங்கம்மா….??”. தன் கண்ணைத்துடைத்த மீனாட்சி அம்மாள்….
 
தமிழு மனசுக்கு புடிச்ச மாப்புள்ளையையே கட்டிக்கிடட்டும்…. ஆனா நீ அம்மாவுக்காக கனிய கட்டிக்கப்பா…அவ ரொம்ப தங்கமான குணம்….??” தன் மகனை கெஞ்சிக் கேட்க….. தாயை அணைத்திருந்தவனுக்கு சிறுவயதில் இருந்து அப்பா இல்லாமல் தன் தாய் கஷ்டப்பட்டு வளர்த்தது கண்ணுக்கு முன் வந்தது…..இந்த தாய்க்காக நாம எதுவும் செய்யலாம்… என்ன என் மனசில உள்ளத இவகிட்ட சொல்லாம தாலிக்கட்ட போறேன்… இனி வாழ்க்கை முழுசும் இவளோடத்தான் இருக்கப் போறோம் …. மெதுவா நம்ம மனச இவளுக்கு புரியவைப்போம்….
 
பெருமூச்சு விட்டு மனசுக்குள் ஒரு தீர்மானம் எடுத்தவன்….அம்மா எனக்கு ஒன்னும் இல்லை நீங்க யாரப்பார்த்து கட்டிவைச்சாலும் சரி அவங்ககிட்ட சம்மதம் கேட்டுருங்க….??”.வெளியில் செல்ல….
 
மீனாட்சி தன் தம்பியை பார்த்தவர்… தம்பி நான் அரவிந்த் அப்பாவை பார்த்திருக்கேன் ரொம்ப நல்லவரு…. நம்ம பொண்ணையும் நல்லா பார்த்துக்குவாரு… நான் கல்யாண பத்திரிக்கை அங்க அனுப்பி வைச்சிருந்தேனே போன்ல கேட்டுப்பாரு அவங்க வாராங்களான்னு… போய் ரெண்டு கல்யாணம் ஒரே மேடையில நடக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணு…??”
 
அக்கா…. மாப்பிள்ள…??”. துரைதான் என்றும் தனக்கு மாப்பிள்ளையாக வருவான் என நினைத்துக் கொண்டிருந்தவர்…..இன்று அரவிந்தை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை…..
 
டேய் அவன் உன் பொண்ண கல்யாணம் பண்ணினாலும் பண்ணாட்டாலும் உனக்கு மாப்பிள்ளைதான்டா…. நீ தூக்கி வளர்த்த பையன்… இப்ப நீ ஒரு நல்ல தகப்பனா இருக்கப்பாரு நம்ம அப்பா செஞ்ச அதே தப்ப நீயும் செஞ்சிராத… இன்னைக்கு நம்ம அம்மா படுற கஷ்டத்தை பார்த்துக்கிட்டுத் தானே இருக்க… இப்ப உன் பொண்ணோட சந்தோசம்தான் முக்கியம்…. அவ ஒன்னும் ஒன்னுமில்லாதவன மாப்பிள்ளையா பார்க்கலை… நம்ம துரையவிட படிச்ச நல்லா சம்பாதிக்கிற மாப்பிள்ளையாத்தான் பார்த்திருக்கா போ…. கவலைப்படாத அடுத்து நடக்க வேண்டியத பாரு… வசந்தா உனக்கு தனியா சொல்லனுமா… போ… தமிழை கூட்டிட்டு போய் அலங்காரம் செய்…….கூட்டிட்டு போ….??”.அனைவரும் வெளியில் செல்ல அந்த அறையில் கனியும் மீனாட்சி அம்மாவும் மட்டும்தான் இருந்தனர்……
 
கனியை நோக்கி திரும்பியவர்…. ஆத்தா கனி இம்புட்டு நாளும் அத்த செஞ்ச உதவிக்கு கைமாறா அவுகளே முடிவெடுத்துட்டாங்கன்னு நினைக்கிறியாத்தா…??”
 
அத்தே…. என்ன சொல்லுறிங்க.. நீங்க என்னோட அம்மா மாதிரி… இப்படியெல்லாம் பேசாதிங்க அத்தை…. ஆனா இந்த கல்யாணம் சரிவராதுத்த… நீங்க வேற பொண்ணு உங்க மகனுக்கு ஏத்த மாதிரி வசதியிலயும் படிப்புலயும் ஏத்தவங்களா பாருங்க….??”
 
இல்லத்தா உன்னைவிட நல்ல பொண்ணுக்கு நான் எங்க போவேன்…. நீதான்தா இந்த அத்தைக்கு உதவி பண்ணனும்… அவன் இன்னைக்கு அடிச்சிட்டானேன்னு நீ ஒன்னும் கவலைப்படாதத்தா… இனி எக்காலத்துலயும் இதுமாதிரி நடக்காது..??” கையெடுத்து கும்பிட அப்படியே பதறியவள்…. எப்படி எப்படியோ மறுத்தும் மீனாட்சி அம்மாவை சம்மதிக்க வைக்க முடியாமல் கடைசியில் இவள்தான் சம்மதிக்க வேண்டியதாக போயிற்று…. வாய் சம்மதம் சொன்னாலும் மனம் கண்டிப்பா இவங்க பையனுக்கு நம்மள ஆரம்பத்தில இருந்து பிடிக்காது… அவங்க பேசுனது …… நடந்துக்கிட்டது எதுவும் அத்தைக்கு தெரியாது இப்ப நம்மள கட்டுனா…. நம்ம எதிர்காலம் நம்ம தங்கச்சிங்க எதிர்காலம் என்னாகுறது அவளுக்கு மண்டையே வெடிக்கிறார் போல இருக்க ….. அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்…..
 
அடுத்த அரைமணி நேரத்தில் தமிழ் சந்தோசமாக மணமேடைக்கு வர… கனியோ பயந்து போய் கைகாலெல்லாம் நடுநடுங்க வந்தாள்…. அங்கிருந்த அனைவரும் குசுகுசுவென பெண் மாறியதை பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் கனியை பார்க்கவும் வாயடைத்து போயிருந்தனர்….. அவ்வளவு அழகாக இருந்தாள்… நல்ல ரோஜா வண்ணப்பட்டு புடவையில் மீனாட்சி அம்மாள் கொடுத்த குடும்ப நகைகள் ஜொலிஜொலிக்க மிதமான ஒப்பனையில் அவள் நடந்துவர ரம்யாவுக்கும்…ஹரிணிக்கும் ஒன்றும் புரியவில்லை என்றாலும் தங்களுடைய அக்காவுக்கு கல்யாணம் என்பதில் ரொம்பவே மகிழ்ந்தவர்கள்..ரம்யா தன் அக்காவின் கையையும் ஹரிணி தமிழின் கையையும பிடித்து மணமேடைக்கு அழைத்து வர…. இருவரும் மணமேடையில் மாப்பிள்ளைகளின் அருகில் அமர்த்தபட ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்…..
 
நல்ல நேரம் வரவும் முதலில் அரவிந்தின் கையில் தாலி கொடுக்கப்பட்டு தமிழுக்கு தாலி கட்டியபின்…. துரையும் கனிக்கு தாலி கட்டினான்… அனைத்து திருமணச் சடங்குகளும் முறையாக நடைபெற… மாப்பிள்ளைகள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க காலில் மிஞ்சி அணிவித்தனர்… அரவிந்த் தமிழுக்கு மிஞ்சி போட்டபின் கனி அந்த அம்மியில் காலை எடுத்து வைக்க துரை அவள் காலை பிடித்தவன் மிஞ்சியை அணிவிக்கும் போது அவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர்துளி அவன் கையில் விழுந்தது…. இவ விருப்பம் இல்லாமத்தான் நம்மள கட்டிக்கிட்டாளா… கோபத்தில் மிஞ்சியை மாட்டியவன் மெதுவாக அவளிடம் வந்து… 
 
அவன்தான் உன்னை வேணாமுன்னு தமிழ கட்டிக்கிட்டான்ல அப்புறமும்….. அவன மனசுல நினைச்சிக்கிட்டு இருக்கியா…??” கோபமாக வார்த்தைகளை விட…… அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்து துரையை நிமிர்ந்து பார்க்க கண்ணில் கண்ணீர் குளம்கட்டி இப்ப விழுவோமா என இருக்கும் அந்த கண்ணு குழிக்குள் இவனும் அவளையே பார்த்து ஆழப்புதைந்து கொண்டிருந்தான்…. அவன் கோபமெல்லாம் இருந்த இடம் தெரியாமல்போக….. அவன் மனமோ தன்னை அறியாமல்
 
                  என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
                            கட்டிபுட்டாளே என்ன இருக்கி
                 மனசகட்டி போட மறுத்தாளே
                          ஹய்யோ… ஹய்யையோ….
 
 
 
                 யேன்காதுல எசை போல
                          பேசுர உன்கொரலாலே
                 எசை போல நீயும் பேசவே
                        எப்போவுமே ரசிக்கிறேன் நானே
                ஏதோ ஏதோ பாடுறேன் நானே………..
                                            என்று பாட
 
                                       
 
                            இனி………………..??????

Advertisement