Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
 அத்தியாயம்  –  11
 
துரையும் தமிழும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்க்க இருவர் மனதிலும் என்ன ஓடுகிறது என்ன அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியவில்லை…
 
பேச்சியம்மாளோ,” ஏப்பு…. கதிரு அப்பத்தா என்ன இப்ப சாகவா போறேன்… உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணப் பார்த்து கட்டிவைக்காம அப்பத்தா கட்ட வேகுமாப்பு….. இவுக ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்தான்னு பொறந்தப்பவே முடிவு பண்ணிணது… முதல்ல இவுகளுக்கு முடிப்போம்… நீ கவலை படாம இரு உனக்கு அப்பத்தா சரோசாதேவி மாதிரி பொண்ணு பார்க்கிறேன்…??”
 
கதிரோ சத்தமாக… “போப்பத்தா எனக்கு அவுக மாதிரியெல்லாம் பொண்ணு வேண்டாம் நல்லா செகப்பா தமண்ணா மாதிரி பொண்ணு வேணும்…??”கதிர் தமண்ணாவோடு டூயட்டில் இறங்க…
 
 துரையோ கனிக்கு இந்த விசயம் தெரியுமா இப்பத்தானே வெளியில பார்த்தோம்.. அவ முகத்துல வருத்தம் மாதிரி எதுவுமே பார்க்கலையே…. இப்பவே கனியின் முடிவை தெரிந்து கொள்ள வேண்டும் போல இருக்க… தமிழும் கோபாலனுக்கு போன் செய்ய சொல்லியாவது அரவிந்தின் நம்பரை வாங்க வேண்டும் என நினைத்தவள் கனியை தேடி வெளியே வர….
 
வெளியே சேரில் அமர்ந்திருந்த கனி தமிழை பார்க்கவும் அவளை கட்டிப்பிடித்து….” ரொம்ப சந்தோசம் அக்கா இன்னும் மூனு நாளுல உங்களுக்கு கல்யாணமாமே..??”.என சந்தோசப்பட்டாள்…. ரம்யாவும் ஹரிணியும் வாழ்த்து தெரிவிக்க இப்போது எப்படி தமிழ் அரவிந்தின் அட்ரசை கேட்பது என வாயடைத்து நின்றாள்… துரையோ கனியின் வாழ்த்தை கேட்டவன் பல்லை கடித்தபடி….இவ வாழ்த்து சொல்லுறாளா…அப்ப நான் வேற பொண்ணக்கட்டினா இவளுக்கு ஒன்னும் இல்லையா….  இவள….. தன் தாயிடம் வேகமாக சென்றவன் ….
 
“அம்மா ….. அம்மாச்சி சொல்லுறது உண்மையா…இன்னும் மூனு நாளுல எனக்கு கல்யாணமா…??”
 
முத்துராமனோ… “ஏன் மாப்புள்ள என்னைக்கு இருந்தாலும் நீங்கதானே எம்பொண்ணக் கட்டிக்க போறவரு கல்யாணம் எப்ப நடந்தா என்ன…??”
 
தன் தாய் மாமாவிடம் என்ன சொல்வது என தயங்கியவன்….. பேசாமல் இருக்க… “அவன விடுறா தம்பி…… அவனுக்கு என்னத் தெரியும் நாம சொல்லுறத கேக்கப்போறான்… நீ போய் மத்த ஏற்பாடுகளை கவனி மூனு நாளா இருந்தாலும் எந்த குறையும் இருக்கக்கூடாது…??” முத்துராமனிடம் சில வேலைகளை சொல்லி அனுப்பியவர்….
 
தன் மகனிடம் திரும்பி….” என்ன தம்பி உங்க அப்பா இறந்து நாம இங்கன வந்ததில இருந்து இவன்தானே நமக்கு அடைக்கலமா இருந்து எல்லாம் செய்யிறான்… உன் மேலயும் மாப்புள்ள மாப்புள்ளைனு உசிர வைச்சிருக்கான் தானே… அப்பத்தில இருந்து தமிழு உனக்குத்தான்னு சொல்லித்தானப்பு வளர்த்தோம்… இப்ப என்ன தயக்கம்….. திடிருன்னு கல்யாணம் வைக்க போறோம்னா… நீ கவலையே படாத எல்லாம் குறைவில்லாம நடக்கும்பா??” அவனை பேசவே விடாமல் அவர்களே பேசி அடுத்த வேலையை பார்க்கச் செல்ல…..
 
துரை அப்படியே சேரில் அமர்ந்துவிட்டான்…. அவளும் என்னை விரும்புறாளா இல்லையான்னு தெரியல.. அவளும் நாம சொல்ல வாரத கேட்க மாட்டேங்கிறா… அம்மாவும் நாம சொல்ல வாறத கேட்க மாட்டேங்கிறாங்க… முதல்ல அவகிட்ட நாம தனியா பேசனும்…. அவ முடிவை தெரிஞ்சுக்கனும் என்று நினைக்க மீனாட்சியோ கனியையும் அவள் தங்கைகளையும் தோப்பு வீட்டிற்கு அனுப்பாமல் தமிழோடு இங்கேயே தங்கச் சொன்னார்……
 
“இல்லத்த நாங்க அங்கயே தங்கிக்கிறோமே..??”. கனி தயங்க…
 
வசந்தாவோ “இல்லை கனி இம்புட்டு நாளும் அத்த உங்களுக்கு துணையா வந்து படுத்திருந்தாங்க… இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க..நீங்க அங்கன ஒத்தயில இருக்க வேணாம்… இங்கன இருந்து நீ கூடமாட கொஞ்சம் ஒத்தாசை செய்த்தா…??”.மீனாட்சியும் வற்புறுத்த மூவரும் தமிழோடு தங்குவதாக முடிவு செய்யப்பட்டது…
 
அன்றிலிருந்து வீட்டின் சமையல் வேலையையும் மற்ற உள்வேலைகளையும் கனியும் அவள் தங்கைகளும் ஏற்றுக் கொள்ள தமிழை தவிர மற்றவர்கள் வெளி வேலை பார்க்க ஆரம்பித்தனர்… ஜவுளி எடுக்க…. பாத்திரம் வாங்க என வசந்தா தன் மகளுக்கு தேவையானதை சேகரிக்க இரு வீட்டிற்கும் இடையே பெரிய இடம் இருந்ததால் அங்கேயே கொட்டகை போட்டு கல்யாணம் நடத்த முடிவு செய்யப்பட்டது…
 
 தமிழ் முள் மேல் இருப்பது போல ஒவ்வொரு நொடியும் தவிக்க அரவிந்த் தன்னை விரும்பினானா இல்லையா என்பதாவது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள்… ஒரு மனமோ நீ எப்படி அவுகளையே உயிரா ஒவ்வொரு நிமிசமும் நினைக்கிறியோ அதே மாதிரி நினைப்பாங்க என சொல்ல மறுமணமோ…. இல்ல அவரு வெளிநாட்டுல நிறைய பொண்ணப் பார்த்தவரு கண்டிப்பா சும்மாதான் பழகியிருப்பாரு அதான் உன்கிட்ட சொல்லாம போயிட்டாரு என வாதாட…… இருதலை கொள்ளி எறும்பாக தவிக்க ஆரம்பித்தாள்….
 
துரையோ ஒவ்வொரு முறை கனியோடு பேச வரும் போதும் கனி அவனை தவிர்த்து மற்றவர்களோடு பேசுவது கண்கூடாக தெரிந்தது… இவ வேணும்னே நம்மள தவிர்க்கிறாளா..நம்ம மனசு இவளுக்கு புரியலையா…. அவனுக்கும் மீனாட்சி ஏகப்பட்ட வேலைகளை சொல்லியபடியே இருக்க கதிர் இந்த மூன்று நாட்களும் வீட்டிலேயே இல்லை  பத்திரிக்கை கொடுக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது… துரையே வீட்டு மாப்பிள்ளையாக வருவதில் கதிருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி உற்சாகமாக அவனும் பம்பரம் போல சுழன்று…. ஒரு நிமிடம்கூட ரெஸ்ட் எடுக்காமல் பத்திரிக்கை கொடுத்துக் கொண்டு திரிந்தான்….
 
அன்று முகூர்த்த சேலை எடுக்க பக்கத்தூருக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டு அனைவரும் துரையின் ஜீப்பிலும் கதிரின் காரிலும் கிளம்ப வசந்தா கனியையும் அவள் தங்கைகளையும் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார்…. துரைக்கு கனியை பார்க்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது…. இவளுக்கு என்னைப்புடிக்கலை போல அந்த வெளிநாட்டுக்காரன மனசுல நினைச்சுட்டா… அதான் என்னை பார்த்தாலே அவ மூஞ்சி இப்புடி மாறுது…பட்டுக் கடையில் துரை மெதுவாக கனியின் அருகில் சென்றாலே  அவள் வேரு புடவையை பார்ப்பது போல வேறு பக்கம் நகர்ந்துவிடுவாள்.. தமிழுக்கு வேறு புடவையை எடுத்து காட்டுவது போல நின்றுவிடுவாள்….கனி  துரை தன்னை பார்க்கும் போது எப்போதும் தனியாகவே இல்லாமல் யாராவது குடும்ப ஆட்கள் கூடவே இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்…  தமிழ் தனக்குத்தான் புடவை எடுக்க வந்திருக்கிறார்கள் என்பதையே மறந்தவள் போல எதையும் கருத்தில் கொள்ளாமல் சோகமாக இருக்க கதிரும் …ரம்யா…ஹரிணியும்தான் அரட்டை அடித்தபடி இருந்தனர்…
 
கதிர் தன் தங்கையை பார்த்து..”..இது தமிழுதானா… நானும் கல்யாணம்னு பேசுன நாள்ல இருந்து பார்க்கிறேன்.. இப்புடி அமைதியாகிட்ட… வேற மாப்பிள்ளைனா நீ இப்படி நடிக்கலாம் தமிழு உன்னைப்பத்தித்தான் அத்தைக்கும் மாப்பிள்ளைக்கும் அக்குவேறா ஆணிவேறா தெரியும்ல அப்புறம் ஏன் அமைதியான புள்ள மாதிரி பில்டப் கொடுக்கிற நீ எப்பவும் போல இரு ? ” தன் தங்கையை கேலி செய்ய…..
 
தமிழ் முகத்தை புன்னகைப்பது போல வைத்திருந்தாலும் அவள் மனது அவள் பேச்சை கேட்கவில்லை…. வசந்தாவும் மீனாட்சியும் தங்கள் வீட்டு சார்பில் கனிக்கும் அவள் தங்கைகளுக்கும் பட்டுச் சேலை துணிமணிகளை அவர்கள் மறுக்க மறுக்க எடுத்துக் கொடுத்தனர்… பின் அனைவரும் நகைகடைக்கு சென்று தாலியும் தாலிச் செயினும் வாங்கியவர்கள்… அடுத்து பெரிய ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை முடித்து வீடு திரும்ப…துரையும் தமிழும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் யாருக்கு வந்த விருந்தோ என இருக்க..கதிர்தான் உற்சாகமாக அரட்டை அடித்தபடி வந்தான்….
 
நாளை ஒரு நாள்தான் இடையில் நாளை மறுநாள் காலை கல்யாணம்…. தமிழுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…. துரையாலும் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை… இருவராலும் இந்த திருமணத்தை ஏற்கவும் முடியவில்லை… என்ன சொல்லி மறுப்பதென்றும் தெரியவில்லை…துரைக்கு கனியை பார்க்கும் போதெல்லாம் இவ நம்மகிட்ட இந்த கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாளா… என ஏங்க… அவளோ தமிழுக்கு முகூர்த்ததிற்கும்  நிச்சயதார்த்ததிற்கும் உள்ள பிளவுசை என்ன டிசைனில் தைக்கலாம் என மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள்…
 
மறுநாள் காலையிலேயே அப்பத்தாவை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர… அவர் பேரன் பேத்தி கல்யாணத்தில் முழுமையாக பங்கெடுத்து கொண்டார்… எந்த ஒரு சிறு விசயத்தையும் விடாமல் நியாபகப்படுத்த மீனாட்சியும் வசந்தாவும் கேட்டு கேட்டு செய்தனர்……
 
உறவினர்கள் எல்லாம் வர வீடு கல்யாண களைகட்ட ஆரம்பித்தது….. இருவீட்டிற்கும் நடந்து நடந்து உறவினர்களுக்கு கால்வலிக்க ஆரம்பித்தது…  கிடாய் வெட்டி அங்கு சமையல் நடந்து கொண்டிருக்க பந்தி முடியவே இல்லை… அந்த அளவுக்கு உறவினர்கள் முதல் நாளே வந்திருந்தனர்.. அவர்கள் குடும்பத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு நடக்கும் முதல் கல்யாணம் … முத்துராமன் தன் மகள் கல்யாணத்திற்கு காசை தண்ணிராக செலவு செய்தார்..  மாலையில் தாய் மாமனை அழைக்க அவர்கள் கொண்டு வந்த முறை தட்டுகளை வைக்கவே இடமில்லை… அந்த அளவுக்கு மீனாட்சி தமிழுக்கு பொருள் வாங்கியிருக்க …. முத்து ராமனும் தன் மருமகனுக்கு தாய்மாமனாக …சீர்வரிசைகளை இறக்கியிருந்தார்…
 
மாலையில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தனித்தனியாக நலுங்கு வைக்க… அது முடிந்து இருவரும் குளித்து வரவும் காப்பு கட்டப்பட்டது… அனைவரும் உற்சாகமாக சந்தோசமாக அந்த சடங்குகளில் கலந்து கொள்ள பெண் மாப்பிள்ளை இருவர் முகத்தில் மட்டும் எந்த உணர்வும் இல்லை… துரையின் பார்வை கனியையே சுற்ற அவளோ எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தாள்…. தமிழுக்கு மேக்கப் செய்து விடுவது… உறவினர்களுக்கு காப்பி …டீ…ஜூஸ் என பார்த்து பார்த்து கொடுக்க அவளின் சுறுசுறுப்பை பார்த்து மீனாட்சியின் உறவினர்களே கனியை பெண் கேட்கலாமா என நினைத்து துரையிடம் கேட்க….. துரை பல்லை கடித்து தன் கோபத்தை அடக்கினான்….
 
 அதிகாலை முகூர்த்தம் என்பதால் அன்று மாலையே நிச்சயதார்த்தம் நடத்தலாம் என முடிவு செய்திருக்க அவர்கள் நிச்சயத்திற்கு எடுத்திருந்த புடவையை தமிழ் கட்டி வந்து சபையில் விழுந்து வணங்க மீனாட்சி தமிழுக்கு  சங்கிலி ஒன்றை அணிவித்தார் …துரை கையில் கொடுத்து போடச் சொல்ல அவன் தன் தாயையே அதை அணிவிக்கச் சொன்னான்…தன் கணவர் இல்லாததால் சுப காரியத்தில் கலந்து கொள்ள யோசித்தவரை அவன் வற்புறுத்தி அணிவிக்க சொல்லி தான் பின்னால் நின்று கொண்டான்…. அனைவரும் சாப்பிட்டு படுக்க போக….. தமிழோடு கனியும் அவள் தங்கைகளும் ஒரே அறையில் படுத்திருந்தனர்…
 
 விடியற்காலை முகூர்த்தம் என்பதால் தமிழை 4 மணிக்கே எழுப்பி குளிக்க சொல்ல.. கனியும் அவள் தங்கைகளும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்… முதல்நாள் 12…. 1 மணி வரை கல்யாணத்திற்கு தேவையான பூவை கட்டியவர்கள்… தமிழுக்கு மெகந்தி போட்டு விட்டு விடியற்காலையில்தான் படுத்தனர்… வசந்தா ஒரு 5 மணிக்கு மேல் அவர்களை எழுப்பலாம் என நினைத்து தமிழை மட்டும் குளித்து தலையை காயவைக்கச் சொல்ல… தமிழ் குளித்து வரவும் ஒரு பத்து வயது பெண் குழந்தை வந்து அவளை வெளியில் யாரோ கூப்பிடுவதாக் சொல்லவும்… கனி லேசாக கதவை சாத்திவிட்டு வெளியில் வந்தாள்…..
 
கதவுக்கு வெளியில் வரவும் அவள் கையை யாரோ இழுத்துக் கொண்டு கொல்லை புறத்தில் இருக்கும் இருட்டு பகுதிக்கு கூட்டிச் செல்ல…. நடக்கும் போதே தெரிந்தது  அது அரவிந்த்தான் என்று அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்….. லேசான அந்த இருட்டு பகுதியில் அவளை விட்டவன்…..
 
கோபமாக “ஏண்டி எவ்வளவு திமிரு இருந்தா உங்க மச்சான கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருப்ப….??”
 
அவ்வளவுதான் தமிழ் இருந்த கோபத்தில் அரவிந்தை ஓங்கி ஒரு அறை வைக்க….
 
“ஏய் எதுக்குடி இப்ப என்னை அடிக்கிற…??”தன் ஒரு கன்னத்தை பிடிக்க மறுகன்னத்திலும் ஒரு அறை வைத்தாள்….
 
அவன் சட்டையை பிடித்தவள்…” நீயெல்லாம் மனுசனடா… பாவி … பாவி… நிம்மதியா இருந்த என் வாழ்க்கையில சூறாவளிய உண்டு பண்ணிட்டு நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போயிட்டா என்னடா அர்த்தம்…??”
 
அவள் தாடையை தூக்கி தன் பக்கம் பார்க்கச் செய்தவன்…” அப்ப நான் சொல்லாம போனா நீ வேற ஆள கல்யாணம் செஞ்சுக்கிருவியா….??” தாடையை பிடித்து அழுத்த…
 
அவன் கையை தட்டிவிட்டவள்….”.ஆமா நான் எங்க மச்சானத்தான் கட்டிக்க போறேன்… கட்டினா உனக்கென்ன… நீ என்னை விரும்புறேன்னு ஒரு வார்த்தை சொன்னியா அப்புறம் எப்படி நான் உனக்காக காத்திருப்பேன்னு நினைச்ச…??”
 
அவளை மீண்டும் தன் பக்கம் திருப்பியவன்…” நான் சொல்லாட்டா உனக்கு என் காதல் புரியலையா…சத்தியமா உன் மனசத் தொட்டு சொல்லு அன்னைக்கு நான் கொடுத்த முத்தத்தில உனக்கு என்னோட காதல் புரியல… இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா…??”
 
“அப்ப ஏண்டா சொல்லாம போன…. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா??” தமிழுக்கு கண்ணில் கண்ணீர் கரகரவென ஊற்றியது….
 
அவளை எட்டி தன் பக்கம் இழுத்தவன் அவளை இறுக அணைத்து முகமெங்கும் முத்தமிட… அவன் நெஞ்சில் தன் கைகளால் குத்தியவள்.”..போடா நீ ஒன்னும் எனக்கு வேண்டாம்…??” என சொல்லி அவன் மார்பிலேயே தன் முகத்தை புதைத்தாள்….
 
“ஏய் ஸாரிடி….. ஸாரி அன்னைக்கு நான் இருந்த சிச்சுவேசன் அப்படி கொஞ்சம் புரிஞ்சுக்க…நீயும் இங்க வரவே இல்லை போன் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆப்னு வந்துச்சு… நான் அங்க போயும் கொஞ்ச நேரம்கூட ரெஸ்ட் இல்லடி வேற வேற ஊருக்கு போய்கிட்டே இருந்தேன்… அப்பாவுக்குகூட ஒரு தரம் மட்டும்தான் போன் பண்ணினேன்…. அதோட போனை ஸ்விட்ச் ஆப் செஞ்சவன்தான் அதுக்கப்பறம் வேலையே என்னை இழுத்துக்கிருச்சு… நேத்து காலையிலதான் போன ஆன் பண்ணுறேன் அதுல…கனி நம்பர்ல இருந்து ஏகப்பட்ட் மிஸ்டுகால்… அதில இருந்த வாய்ஸ் மெசேஜ் பார்த்துட்டுத்தான் அடிச்சு பிடிச்சு கிளம்பி வர்றேன்…. எப்படி எப்படி வந்தேன் எனக்குத்தான் தெரியும்…??”
 
அவனை நிமிர்ந்து பார்க்க தலையெல்லாம் கலைந்து உடை கசங்கி.. பார்க்கவே களைப்பு கண்ணில் தெரிந்தது… அவனை இன்னும் நெருங்கியவள் இறுக்கி அணைக்க…. தமிழை அப்படியே இடுப்பில் கை கொடுத்து தூக்கியிருந்தான்…
 
“ஏய்…..??” கிசுகிசுப்பாக தமிழை அழைக்க…
 
“ம்ம்ம்…..”
“எனக்கு டென்சன் அதிகமா இருக்கு அத கொஞ்சம் ரிலிப் செஞ்சுக்கவா…..??”
“எப்படி….”
“இப்படி….” என்று அவள் இதழில் தன் இதழை புதைத்தவன் நேற்றிலிருந்து தான் பட்ட கஷ்டத்தை அவள் இதழில் இறக்கி வைக்க… தமிழுக்கும் அது தேவையாக இருந்தது… இந்த மூன்று நாட்கள் தான் பட்ட கஷ்டம் அவளுக்குத்தான் தெரியும்… அவன் முதுகில் கைகொடுத்து தன் பக்கம் இழுக்க அரவிந்த் இன்னும் அவளுள் ஆழப்புதைந்தான்….
 
கனி அப்போதுதான் தூங்கி எழுந்தவள்… பக்கத்தில் தமிழை பார்க்க காணாமல் பாத்ரூமை பார்க்க கனி குளித்தது போல இருக்க தானும் குளிக்க கிளம்பினாள்… தான் முதலில் குளித்து கிளம்பி தங்கைகளை கிளப்பிவிடலாம் என நினைத்து குளிக்கச் செல்ல….
 
அங்கு கதிரும் துரையை குளிக்க சொல்லி தொல்லை செய்து கொண்டிருந்தான்…துரை  இரவெல்லாம் தூங்காமல் கண்ணெல்லாம் சிவந்து போயிருக்க தாடியைகூட சேவ் செய்யவில்லை…கதிர் வற்புறுத்திக் கொண்டிருக்க…
 
“டேய் இன்னும்தான் நேரம் இருக்குள்ள கொஞ்ச நேரம் என்னை தனியா விடு… நான் ஒரு வாக் போயிட்டு வந்துருறேன்..??”. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கனியிடம் எப்படியாவது பேசி அவ முடிவு தெரிஞ்சுக்க வேண்டும் என முடிவு செய்து தமிழின் வீட்டை நோக்கிவந்தவன்… இப்ப எப்படி வீட்டுக்குள்ள போறது கொல்லை புறமா போவோம் என தனியாக இருந்த அடுப்படிக்குள் புகுந்து கொல்லை புறத்திற்கு வந்து கொண்டிருக்க…..
 
மீனாட்சியும் தன் மருமகளுக்கென  இருக்கும் தன் குடும்ப நகைகளை போட்டு கொண்டு மணமேடைக்கு அழைத்து வரவேண்டும் என முடிவு செய்து தன் தம்பி வீட்டிற்கு வந்தவர் ஹாலில் குடும்ப ஆட்கள் யாரையும் காணாமல் கொல்லை புறத்தை நோக்கிவர….
 
அப்பத்தாவிற்கோ மூன்று நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தது ஏதோ போல இருந்தது… அதோடு பேரன் பேத்தி திருமணத்தை நினைத்து தூக்கமே வரவில்லை… மெதுவாக எழுந்தவர் அனைவரும் தூங்கி கொண்டிருக்கவும்  சரி சுடுதண்ணீராவது காயவைப்போம் என கொல்லை புறத்திற்கு விறகெடுக்க வந்துகொண்டிருந்தார்…..
 
வசந்தாவோ இவள எழுப்பிவிட்டு எம்புட்டு நேரம்… இன்னமுமா குளிக்கிறா தமிழின் அறைக்கு வந்தவர் பாத்ரூமில் சத்தம் கேட்கவும்…  தமிழை சத்தமிட உள்ளே இருந்து கனி குரல் கொடுத்து தான்தான் குளிப்பதாக சொல்ல… அப்ப இவ எங்க போனா வீடெங்கும் தேடியவர்… இன்னைக்கு அண்ணி வீட்டுக்கும் போயிருக்க மாட்டாளே ஒரு வேலை கொல்லை புறத்துல இருக்காளோ என நினைத்தவர் அங்கு வர…….
 
தமிழை முத்தமிட்டு விலகியவன்…” என்னடி அன்னைக்கு முத்தம் கொடுத்தப்ப மட்டும் அந்த குதி குதிச்ச இப்ப இப்படி நிக்கிற… இப்ப மட்டும் நான் வராட்டா நீ அவனத்தானே கல்யாணம் பண்ணியிருப்ப…??”
 
அவன் நெற்றியில் முட்டியவள்…” உங்க போன் எங்க…??” அதை வாங்கி வாய்ஸ் மெசேஜை ஆன் செய்தவள்…. அதில் தமிழுக்கும் துரைக்கும் கல்யாணம் நீங்க கண்டிப்பா வரணும் என சொல்லிக் கொண்டிருக்க…
 
“இத ஏண்டி இப்ப போட்டுக்காட்டுற இத கேட்டுத்தானே நான் வந்தேன்…கனி அனுப்பி வைச்சதால தான் நான் வந்தேன் ….. நீ எதுவுமே பண்ணல…??” கோபமாக முகத்தை தூக்க…
 
அவனை நோக்கி கைகட்டி நின்றவள்…” இது கனியோட வாய்ஸா… ??”
“பின்ன…??”
அவன் தலையில் கொட்டியவள் “மண்ணாங்கட்டி…. இது என்னோட வாய்ஸ்… நான்தான் கனி மாதிரி உங்க அப்பாக்கிட்ட பேசி உங்க போன் நம்பரை வாங்கினேன்…. எத்தனை தரம் போன் பண்ணினேன் தெரியும் ஸ்விட்ச் ஆப்…. ஸ்விட்ச் ஆப்னு வரவும்தான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைச்சேன்… நீங்க இத கேக்கனும்னு எத்தனே கோவிலுக்கு நேர்த்திக்கடன் வச்சேன் தெரியுமா..??” அவள் சினுங்க மொத்தமாக அவள் சிரிப்பில் அரவிந்த் விழுந்தான்… காதலோடு அவளை தன்பக்கம் இழுக்க அவனை நெருங்கியவள் அவன் மார்பில் சாய அவளை இறுக்கி அணைத்து அவள் உச்சியில் முத்தமிட்டான்…
 
“நீங்க மட்டும் இன்னைக்கு வரலைனா என்னோட பொணத்தைத்தான் பார்த்திருப்பிங்க… எங்க மச்சானா இருந்தாலும் என்னால மனச உங்ககிட்ட குடுத்திட்டு அவங்களோட வாழ முடியாது??”
 
அவளை தள்ளி நிறுத்தியவன் கோபத்தில் அவள் கன்னத்தில் அடித்து… “லூசாடி நீ…. உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா சாகனும்னு முடிவு பண்ணியிருப்ப… இந்த உயிர் எனக்கு சொந்தம்டி….??” அவள் ஏதோ பேசவருவதற்குள் அவளை இறுக அணைத்தவன் அவள் இதழில் முத்தமிட……
 
“ஐயோ கடவுளே…. என்ன நடக்குது இங்க??” யாரோ சத்தமாக அலர…. இருவரும் திடுக்கிட்டு பிரிந்தனர்……
 
                            இனி………..????

Advertisement