Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  10
 
தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்… போயிட்டானா…. நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா… அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது…. முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா…சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா… அழுகை முட்டிக் கொண்டு வந்தது… அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க தோப்புப்பக்கம் நடந்து சென்றாள்…
 
கதிருக்கு முத்துராமன் போன் செய்து சில பத்திரங்களை எடுத்துக் கொண்டு தங்களின் வட்டிக்கடைக்கு வரச் சொல்ல….. கதிர் கிளம்பியிருந்தான்… .வீட்டிற்குள் கனி படுத்திருக்க தன்னை சுற்றிப்பார்த்த துரை யாருமே கண்ணுக்கு தென்படாமல் இருக்கவும் வீட்டிற்குள் நுழைந்தான்… கனி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க  வாடிய கொடிபோல இருந்தாள் தலையெல்லாம் கலைந்து வாயெல்லாம் உலர்ந்து போய் பார்க்கவே பரிதாபமாக இரண்டு நாளில் ஆள் மெலிந்து போயிருந்தாள்…
 
நாம அன்னைக்கு கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டமோ….அவனுக்கு இன்னும் தான் செய்த தவறு புரியவில்லை…இவ எப்படி நம்மள இன்னும் புரிஞ்சுக்காமே இருக்கிறாளே என நினைத்தானே தவிர அவளிடம் தன் மனதை புரியவைக்க முயலவில்லை….அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க சூடில்லை… நல்ல களைப்பு தெரிந்தது… தூக்க கலக்கத்தில் கனி துரையின் கையை பிடித்து தன் கழுத்துக்குள் வைத்துக் கொள்ள அவன் ஜில்லப்பான கை அவளுக்கு தேவையாக இருந்தது…
 
 அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்…. கையை எடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை தலையை மட்டும் லேசாக கோதிக் கொடுக்க கனிக்கு கனவில் தன் தாய் தன் தலையை கோதுவது போல இருந்தது…லேசாக புன்னகையில் மலர்ந்த முகத்தோடு மறுபக்கம் திரும்பி படுக்க அவள் மலர்ந்த முகத்தை பார்த்தபடி வெளியில் வந்தவன் தேங்காயை குவித்து வைத்திருக்கும் இடத்திற்கு வந்தான்….இரண்டு நாட்களாக கனியின் மேலிருந்த கோபம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது…. கனி தன் கையை பிடித்ததில் உற்சாகம் பிறக்க கனியின் மேல் துரை எல்லையில்லாத காதலை வளர்த்திருந்தான்.. .சொல்லாத காதல் என்றும் அவளுக்கு புரியாது என்று தெரியவில்லை….
 
வந்ததிலிருந்து தமிழ் ரம்யாவிடமும் ஹரிணியிடமும் அரவிந்தை பற்றி விசாரிக்க அவன் அவர்கள் வீட்டு உரிமையாளரின் மகன் என்பதை தவிர அவர்களுக்கு எதுவுமே விபரம் தெரியவில்லை…தொலைபேசி எண்…. அவன் வெளிநாட்டு முகவரி என எதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை…. ம்ம்ம்ம்…. இனி கனியிடம்தான் கேட்டு விபரத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என ஒரு மனது சொல்ல மறுமனமோ அவனே உன்னை கண்டுக்காம விட்டுட்டு போயிட்டான்… நீ ஏன் அலையிர….. அவன் பெரிய சீமையில் இல்லாத ராஜகுமாரனோ என குத்திக்காட்ட…… இன்னும் அரவிந்த் மேல் கோபம்தான் வந்தது….
 
அன்று முழுவதும் துரை அங்கேயே இருந்து தோப்பிலிருந்து தேங்காயை லாரியில் ஏற்றி அனுப்ப… கனி வெளியில் வரவே இல்லை… மறுநாளில் இருந்து துரை வழக்கம் போல தோப்பிற்கு வர இப்போதெல்லாம் கனிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து  ரம்யாவும் ஹரிணியுமே வாசலில் கோலம் போடுவது துரை தோப்பை சுற்றிவிட்டு வரும்போது காப்பி கொடுப்பது என இருக்க பெரும்பாலும் கனியை அவனால் நேராக பார்க்கமுடியவில்லை…  இவனை பார்த்தாலே கனி ஒதுங்கி சென்றுவிடுவாள்…. அன்று நடந்ததை அவளால் மறக்க முடியவில்லை…. அவன் முரட்டுத்தனமே அவள் கண்முன்னால் வந்தது……
 
தமிழ் கேட்டதற்கும் கனியால் ஒழுங்கான பதிலை கொடுக்க முடியவில்லை… அவன் இங்கிருக்கும் போது உபயோகித்த நம்பர் மட்டும்தான் தனக்கு தெரியும் என சொல்ல அதற்கு போன் செய்தால் ஒரு பெண் குரல் கேட்கவும் தமிழ் அதன் பிறகு அந்த நம்பருக்கு முயற்சி செய்யவே இல்லை…..
 
கனிக்கு உடம்பு தேறிய நிலையில் துரை…… மீனாட்சி மூலம் தான் அட்வான்ஸ் கொடுத்த கடையில் தையல்கடையை ஆரம்பிக்க சொல்ல….. கனி முடியவே முடியாது என மறுத்துவிட்டாள்… மீனாட்சியும் எவ்வளோ எடுத்து சொல்லியும் கனி இதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவே இல்லை….துரைக்கு மீண்டும் கோபம் தலைதூக்கினாலும் கனி தன்னை பார்த்தாலே பேயை பார்ப்பதை போல ஒதுங்கி ஓடுவதால் தான் இவளிடம் பேசப்போனால் மேலும் ஏதாவது பிரச்சனை வரும் என நினைத்து பேசாமல் இருந்து விட்டான்…
 
இப்போது அவள் தோட்டத்தில் போட்ட காயெல்லாம் நன்கு பெரிதாக காய்த்திருக்க… மீனாட்சி உள்ளூரில் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் பேசி மொத்தமாக காயை விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தார்… அந்த காசை கனியிடம் கொடுத்தாலும் வாங்க மாட்டாள்…. பால் காசோடு இந்த காய்கறி விற்ற காசையும் கணக்கு எழுதி மொத்தமாக கொடுத்து விடுவாள்…தனக்கும் தங்கைகளுக்கும் எந்த செலவானாலும் தையலில் வரும் காசையே பயன் படுத்துவாள்…. இந்த வருடத்தில் ரம்யாவும் ஹரிணியும் பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருக்க அவர்களும் தங்கள் கவனத்தை படிப்பில் செலுத்தினர் …..
 
துரை பேச்சவாக்கில் கேட்பது போல தன் தாயிடம் அரவிந்தை பற்றி விசாரிக்க  கோபாலன் எதுவும் சொல்லவில்லை என்றும் மீண்டும் அரவிந்த் தான் வந்து முடிவுவெடுத்து கொள்வதாக சொல்லியதாக சொன்னார்…கனி தன்னிடம் கொடுக்கும் காசை அப்படியே மீனாட்சி அம்மாள் தன் அக்கௌண்டில் போட்டிருந்தார்… இந்த பணம் கனிக்கும் அவள் தங்கைகளுக்கும் என தன் மகனிடம் சொல்ல வயல் வருமானத்தை தவிர அந்த தோப்பு வருமானத்தையும் அவரிடம் கொடுத்து அந்த அக்கவுண்டில் போடச் சொன்னான்….
 
இந்த வருடம் அவன் தோப்பில் மாங்காய்கள் நல்ல விளைச்சல் ஒரு கூல்டிரிங்க் நிறுவனம் அவனிடம் மொத்த மாங்காய்களையும் விலை பேசியிருக்க ஒரு பெரிய தொகையை தருவதாக ஒத்துக் கொண்டிருந்தது…  இன்னும் ஒரு மாதத்தில் அனைத்தும் பழுத்துவிடும் நிலையில் இருக்க கனியின் பாதிநேரம் இப்போது அந்த தோப்பில்தான் கழிந்தது… கையை லேசாக தூக்கினாலே கொத்து கொத்தாக காய்கள் பறிக்கும் இடத்தில் இருந்தது.. அதை பார்ப்பதே கனிக்கு மிகவும் பிடித்திருந்தது…காலையில் அந்த காய்கறிகளை பறிப்பதாலும் துரை தோப்பை சுற்றுவதாலும் கனியால் அந்த மாந்தோப்பிற்கு வரமுடியாது…. மாலையானால் அவள் பாதிநேரம் அந்த தோப்பில்தான் தமிழும் தங்கைகளும் படிப்பில் மூழ்கியிருக்க அவள் அந்த தோப்பின் அழகில் மூழ்கியிருப்பாள் …தாழ்வாக செல்லும் கிளையில் ஏறி அமர்ந்து தன்னை மறந்து ரசித்திருப்பாள்….
 
அங்கு வரும் அணில்கள் நிறைய மாம்பழங்களை தின்றுவிட்டு கொட்டைகள் மட்டும் மரத்திலிருந்துபோடும்… தன் தலையில் சில சமயங்களில் கொட்டைகள் விழும்போது இவள் அந்த அணிலோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பாள்… அன்று அவன் தோட்டத்து காய்கறிக்கான காசை அந்த மொத்த கடைக்காரர் அவனிடம் கொடுத்திருக்க அதை கனியிடம் கொடுப்பதற்காக தோப்பு வீட்டிற்கு வந்தான்.
 
.ரம்யாவும்… ஹரிணியும் ஏதோ அரட்டை  அடித்தபடி இருக்க..தமிழ் ஏதோ சிந்தனையில் இருந்தாள்… அப்பத்தா வெற்றிலையை பாக்குரலில் இடித்துக் கொண்டிருக்க..கனியை விசாரித்தவன் அவள் தோப்பில் இருப்பதாக சொல்லி ரம்யா தான் சென்று கூப்பிட்டு வர கிளம்ப வேண்டாம் என மறுத்தவன் தானே சென்று பார்ப்பதாக சொல்லி வந்திருந்தான்…. கனியும் அவள் தங்கைகளும் இங்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாக போகிறது…. துரையோடு கனி பேச்சை நிறுத்தியே ஆறுமாதமாக போகிறது…  இவனும் தன் மனதை புரிய வைக்க முயலவில்லை… அவள் பேசாமல் இருக்க… இவனுக்கு அவளுடன் பழக…பேச ஆசையிருந்தாலும் தன் ஈகோவை விட்டு கொடுக்காமல் அவளே தன் மனதை புரிந்து கொள்ள வேண்டும் என விலகியிருந்தான்…
 
 கனியோ தன் கவனத்தை தங்கைகளின் மீதும் தன் தையலின் மீதும்தான் வைத்திருந்தாள்… ஒவ்வொரு செலவையும் பார்த்து பார்த்து செய்தாள்… அவளுக்கு துரை மீதோ…. அரவிந்த் மீதோ எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை… திருமணத்தை எல்லாம் அவள் நினைத்து பார்த்ததே இல்லை…அதிலும் துரையிடம் இனி எந்த உதவியும் கேட்கவே கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருந்தாள்…. இன்னும் சில நாட்களில் பரிட்சை ஆரம்பிப்பதால் தங்கைகள் படிக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்க அடுத்து வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் அதற்கு என்ன செலவாகுமோ என்ற யோசனையிலேயே இருந்தாள்…. இப்போது அவளிடம் தைக்க நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்… தமிழ் மூலம் நிறைய கல்லூரி மாணவிகளுக்கும் தைத்து கொடுக்க வருமானமும் கொஞ்சம் கனிசமாக உயர்ந்திருந்தது…. அவளின் கொஞ்ச நேர பொழுது போக்கே இந்த தோப்பில்தான்…
 
துரை தோப்பிற்குள் வர அவன் நடந்து வரும் அந்த சருகுகள் மிதிபடும் சத்தம்கூட கேட்காமல் கனி வேறொரு உலகத்தில் இருந்தாள்… அவளை மெதுவாக தேடியபடி வந்தவன் ஒரு பெரிய மரத்தின் தாழ்வான கிளையில் ஏறி அமர்ந்திருந்தவள் அங்கு கூடுகட்டியிருந்த கிளிகளை ரசித்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தவன் அவளை பார்க்க அவள் பார்வை வேறிடத்தில் இருப்பதை கண்டவன் சத்தமாக ….
 
இந்த வார காய்கறி பணம் என்கிட்டயே கொடுத்திட்டாங்க… இந்தா??” என சொல்ல
 
அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவள்..திடிரென சத்தம் தன் அருகில் கேட்கவும் பயந்து மரத்தில் இருந்து தடுமாறி கீழே விழ அவள் விழாமல் தன் கையில் ஏந்தியிருந்தான்…வெகு நாட்களுக்கு பிறகு தூரவே பார்த்த முகத்தை வெகு அருகில் பார்க்கிறான்… அன்று பார்த்ததைவிட இன்னும் அழகாக தோன்ற இன்றாவது தன் மனதில் உள்ளதை இவளிடம் சொல்லலாமா…இல்ல  என்னை இவ புரிஞ்சிக்கிருவாளா அவளிடம் பேச  வாய்திறக்க….
 
 இந்த இடத்தில் அவள் துரையை எதிர்பார்க்காததால் மரத்தில் இருந்து கீழே விழுந்திருந்தால்கூட இவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது… அப்படியே அதிர்ந்து அவன் கையில் இருந்தவள் தன்னை கீழே விழாமல் தாங்கியவன் இன்னும் கீழேவிடாமல் ஏந்தி இருப்பதை கண்டவளுக்கு அன்று நடந்தது தன் கண்முன்னால் ஓட தன் வாயை மூடியபடி அவனிடமிருந்து திமிறி கீழே இறங்கியவள் தங்கள் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தாள்…. வாயை மூடியபடி ஓடியவளை கண்டவன்… இவ ஏன் இப்புடி ஓடுறா…யோசித்தவனுக்கு தான் அன்று முத்தம் கொடுத்தது நியாபத்திற்கு வர….
 
ஓஓஓஓ….. அதான் காரணமா.. என்னை பார்த்தா என்ன ரௌடி மாதிரியா தெரியுது… இல்ல பொம்பள பொறுக்கியா… ஒரு பொண்ணக்கூட நிமிர்ந்து பார்த்ததில்ல… கொஞ்சம் கொஞ்சமாக கோபம் வர…வேகமாக ஓடிய கனியோ ஒரு பெரிய மர வேர் தட்டி கீழே விழுந்திருந்தாள்…வேர் தட்டியதில் அவள் கால்விரலில் அடிப்பட்டு லேசாக ரத்தம் கசிய….  அவளிடம் விரைந்தவன் அவளை தூக்கி நிறுத்தியிருந்தான்….. அவள் முகமெல்லாம் மண் ஒட்டியிருக்க தன் கர்சிப்பால் துடைக்க… அவன் கையை தடுத்தவள் மெதுவாக எழுந்து லேசாக காலை கெந்தி கெந்தி நடக்க ஆரம்பித்தாள். எட்டி அவள் கையை பிடித்தவன் முகம் இறுக ….
 
ஏன் எப்ப பார்த்தாலும் என்னை அவமான படுத்துற மாதிரியே நடந்துக்கிற.. என்னை பார்த்தா பொம்பள பொறுக்கி மாதிரியா இருக்கு.??”.மணிக்கட்டோடு அவள் கையை பிடித்து தன் புறம் இழுக்க….
 
என்ன பேசுறதா இருந்தாலும் முதல்ல என் கைய விட்டுட்டு பேசுங்க… இப்பத்தான் நான் உங்க பேச்சுக்கே வர்றதில்லையே… அப்புறம் எப்ப உங்கள அவமான படுத்துனேன்…செய்யுறதெல்லாம் நீங்க…எப்படியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட நடக்கக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்துக்கிட்டு ரொம்ப நியாயவாதி மாதிரி பேசாதிங்க…. எனக்கு உங்க முகத்தை பார்க்கவே புடிக்கல விடுங்க….??”
 
அவ்வளவுதான் துரை ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான்… அவளை சுண்டி தன் பக்கம் இழுத்தவன்…. அவளை இறுக அணைத்து...ஆமாண்டி உனக்கு என்னையெல்லாம் புடிக்காது… நல்ல சிகப்பா வெளிநாட்டுக்காரன் வந்தாத்தான் புடிக்கும்… …??” இவளுக்காக நம்ம என்னவெல்லாம் பிளான் போட்டு வச்சிருக்கோம்… இவளுக்கு என் முகத்தை பார்க்கவே புடிக்கலையா… ஆனா எனக்கு இவள மட்டும்தான் புடிச்சிருக்கு.. மீண்டும் அவன் முன்கோபம் முதலில் நிற்க….முகம் இறுகியவன்… அவள் முகத்தை பார்த்து முறைக்க அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.. தேவையில்லாம தனியா வந்து மாட்டிக்கிட்டமே….மறுபடி அன்னைக்கு நடந்தது மாதிரி நடந்துக்குவானோ….. இவ்வளவு நாள் நம்மள கண்டுக்காமத்தானே இருந்தாங்க …. இப்ப என்னாச்சு…நாமதான் எந்த செலவுமே வைக்கலையே ….யோசிக்க… அதற்குள் அவனுக்கு போன்வரவும் கண்ணை மூடி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன் அணைப்பை சற்று தளர்த்தி தன் போனை எடுக்க கனியோ அவனை பார்த்தபடியே பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.. போன் பேசியபடியே கனியை பார்க்க சிறுபிள்ளை போல தன்னை பார்த்தபடி பின்னால் சென்று கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு …அவன் கோபம் மறந்து சிரிப்புத்தான் வந்தது…
 
இவ குழந்தையா…குமரியா ரசித்தபடி அவளை நோக்கி முன்னேற காலில் அடிப்பட்டதால் அவளால் வேகமாக நடக்க முடியவில்லை.. ஐயோ கோபமா இருந்தாக்கூட பரவாயில்ல இப்ப எதுக்கு சிரிக்கிறாங்கன்னு கண்டுபிடிக்க முடியலையே…..சும்மா சும்மா இந்த ரம்யாவும் ஹரிணியும் இங்க வந்தா தேடிக்கிட்டு வருவாங்க இன்னைக்கு ஒருத்தரையும் காணலையே… அதற்குள் போன் பேசி முடித்தவன் அப்போதுதான் பார்த்தான் அவள் பெருவிரலில் ரத்தம் கசிவதை … வேகமாக சென்று அவளை எட்டிப்பிடித்தவன்…
 
ம்ம்ம் …. அசையாம நில்லு??” என்று அதட்டியபடி கீழே அமர்ந்து அவள் காலை எடுத்து தன் மடியில் வைக்க…
 
விடுங்க விடுங்க…??” என கத்தியவள் பேலன்சிற்கு அவன் தோளை பிடிக்க இரும்பென இருந்த தோள் அவள் கைபடவும் அவளின் மென்மையை உணர துவங்கியவன்… தன் கர்சிப்பால் அவள் காலில் கட்டுப்போட்டுவிட்டு…நிமிர அவள் இன்னும் கத்திக் கொண்டு இருக்கவும் இவகிட்ட நல்லமாதிரி பேசுற சூழ்நிலையே அமையாதா… நாம பேசுனா இவ கேக்குற மூட்லயா இருக்கா…. வாய மூடாம இந்த கத்து கத்துறாளே.. எப்பத்தான் நம்ம மனச புரிஞ்சுக்குவா.. என நினைத்தவன்….
 
மூச் கத்தாத??” என அதட்டியபடி அவளை தன் கையில் ஏந்தி இப்ப கத்தாம வரல அப்புறம் அன்னைக்கு நடந்தது நடக்கும் பார்த்துக்க…. ??”அவ்வளவுதான் கனி வாயோடு கண்ணையும் இறுக மூடிக் கொண்டாள்…. அவளை தலையிலிருந்து கால்வரை ரசித்தபடி தூக்கிகொண்டு வர…. அவன் இடுப்பில் கைகொடுத்து தூக்கிவர அவள் அவன் தோளை தன் கைகளால் கெட்டியாக பிடித்திருந்தாள்….அவ்வளவு அருகில் அவள் முகம் அவனை முத்தமிட அழைத்தது… அவன் அவளை காதலோடு பார்த்தபடி தூக்கிவர அவன் காதலை உணராமல் பயந்து போய் இந்த இடத்தைவிட்டு போனால் போதும் என்று நினைத்தபடி அமைதியாக வந்தாள்… வீடு சற்று தூரத்தில் இருக்கும் போது அவளை இறக்கிவிட… அவள் வேகமாக செல்லவும் அவளை நோக்கி பெருமூச்சு விட்டவன் எப்ப நம்ம மனச புரிஞ்சுக்குவாளோ இவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சாத்தானே நாம அடுத்து ஸ்டெப் எடுக்க முடியும் அரவிந்த் ஊரிலிருக்கும் வருவதற்குள் தன் மனதை அவளுக்கு புரியவைக்க வேண்டும் என நினைத்திருக்க….. விதியோ வேறு வகையில் சிரித்துக் கொண்டிருந்தது….
 
அடுத்த வாரத்தில் இருந்து பத்தாம்வகுப்பு தேர்வு ஆரம்பித்திருக்க…. அனைவரின் வாழ்த்தோடு இருவரும் பரிட்சைக்கு கிளம்பியிருந்தனர்… தமிழ்தான் ஏதோ பரிகொடுத்தார் போல இருந்தாள்… நேற்று இரவு தன் தாயும் தகப்பனும் பேசியதை கேட்டதிலிருந்து அவளுக்கு தூக்கமில்லை… இன்னும் இரண்டு வாரத்தில் தனக்கு பரிட்சை முடிந்தவுடன் துரையோடு கல்யாண பேச்சை ஆரம்பிக்க போவதாக பேசியதை கேட்டதில் இருந்துதான்  இவளுக்கு கலக்கமே…
 
 அரவிந்தை பார்க்காமல் இருந்திருந்தால் இவள் துரையை கட்டிக் கொள்ள எந்த தடையும் சொல்லியிருக்க மாட்டாள்… துரைக்கும் தமிழுக்கும்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் என்ற பேச்சு இருந்தது… ஆனால் இருவருமே சேர்ந்தே இருந்ததால் இவளுக்கு கதிர் எப்படியோ அப்படியே துரையையும் பார்க்க ஆரம்பித்தாள்…  ஆனால் அரவிந்தை பார்த்தது அவனோடு திருவிழாவில் அரட்டை அடித்தது… அவன் அணைத்து முத்தமிட்டது என இதுவரை எந்த ஆணும் இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ளவில்லை….
 
அரவிந்த் தன் செயலால் எவ்வளவு பிடிக்கும் என சொன்னவன் ஒன்றும் சொல்லாமல் ஊருக்கு போனது அவளுக்கு பெரிய அடியாக இருந்தது… அரவிந்தை பற்றி ஒன்றும் தெரியாமல் அவன் மனதும் புரியாமல் இரண்டு மூன்று முறை கனியிடம் விசாரிக்க …
 என்னக்கா அவங்கள பத்தி கேட்டுக்கிட்டே இருக்கிக்கிங்களே ஏன்கா….??”
 
என்ன சொல்வது என முழித்தவள்… ஒன்னுமில்ல கனி வந்தவங்க சொல்லாம கொள்ளாம போயிட்டாங்களே அதான்… போனும் பண்ணல… உங்கள விசாரிக்கவும் இல்ல…??”
 
அவங்களுக்கு என்ன வேலையோக்கா…. மாமாதான் ரெண்டுநாளைக்கு ஒருதரம் போன் செய்வாங்க…. இன்னும் ரெண்டுமாசத்துல இங்க வருவாங்களாம் அப்ப இங்க வர்றதா சொல்லியிருக்காங்களாம்….??”தகவலை சொல்ல அன்றிலிருந்து தமிழ் அவன் வருகைக்காக காத்திருக்க அதற்குள் அவள் பெற்றோர் தன் திருமண பேச்சை ஆரம்பிக்கவும்தான் தமிழுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை….. நாள் கடகடவென ஓட ரம்யாவுக்கும் ஹரிணிக்கும் பரிட்சை முடிந்தது…
 
அன்று காலை 11 மணியிருக்கும் அம்மாச்சி பாத்ரூமில் விழுந்து தலையில் அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாக போன்வர கனியும் அவள் தங்கைகளும் அடித்துபிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு செல்ல… தலையில் கட்டோடு அவரை பார்க்கையில் அழுகை தாங்கவில்லை மூவரும் அழ…மீனாட்சி அம்மாவும் அழுது கொண்டுதான் இருந்தார்… டாக்டர் வந்து செக் செய்துவிட்டு கொஞ்சம் பெரிய அடிதான் என சொல்லிச் செல்ல….பேச்சியம்மாள்… முத்துராமனையும் மீனாட்சியையும் அழைத்தவர் தான் சாவதற்குள் பேரன் பேத்தி கல்யாணத்தை பார்த்துவிட வேண்டும் என அடம்பிடிக்க ……
 
மீனாட்சியும் எவ்வளவோ எடுத்து சொன்னார்..ஆத்தா….. உங்களுக்கு ஒன்னும் ஆகாது…ரெண்டு நாளுல வீட்டுக்கு போகலாம் அப்புறமா நல்லா பெரிசா கல்யாணத்தை வைச்சுக்கலாம் ??”என சொல்ல அவர் தாயோ ஒத்துக் கொள்ளவேயில்லை…. தான் வீட்டுக்கு வந்த அன்றே கல்யாணத்தை முடிக்க வேண்டும் என தன் மகனை கட்டிக் கொண்டு அழ… முத்துராமனுக்கோ ஏற்கனவே தன்தாய் தன் வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு சந்தோசமாக இருப்பது போலவே காட்டி கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்தவர்… இன்று தன் தாய் கேட்கவும் அவர் சொன்னபடி இரண்டு மூன்று நாளில் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என உறுதி அளிக்கவும்தான் அமைதியானார்…
 
துரை ஒரு வேலையாக டவுனுக்கு சென்றிருந்தான்… தமிழ் காலேஜ்க்கு சென்றிருக்க இருவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்து கொண்டிருந்தனர்… மீனாட்சி தன் தம்பியோடு கலந்து பேசியவர் தங்களின் பிள்ளைகளிடம் கலக்காமல் இன்னும் மூன்றுநாளில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்ய முத்துராமனும் வசந்தாவும் துரைதான் தங்கள் வீட்டு மருமகன்னு முடிவு பண்ணி எவ்வளவோ நாளாச்சு கல்யாணம் எப்ப நடந்தா என்ன என நினைத்து அக்காவுக்கு சம்மதத்தை தெரிவித்தனர்…..
 
துரைதானே தமிழை காலேஜ்ஜில் இருந்து அழைத்து வருவதாக சொல்லியிருக்க இருவரும் வரும்போது அனைவரின் முகத்திலும் ஒரு சந்தோசம் தெரியவும்… துரைக்கு இப்போதுதான் மூச்சே வந்தது… அம்மாச்சிக்கு ஒன்னுமில்ல போல  அதான் அம்மா வேற என்னமோ மாமாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க என நினைத்து இருவரும் உள்ளே செல்ல…
 
இருவருக்கும் பேச்சியம்மாளை பார்க்கவும் கண்கலங்கியது. தமிழ் அப்பத்தாவை கட்டிக் கொண்டு அழ துரைதான் அவளை சமாதானப்படுத்தினான்… அவர் கண்விழிக்கும் போது பார்த்தது தன் பேரன் பேத்திகள் இருவரும் சேர்ந்திருப்பதைத்தான்… அம்மாச்சி நல்லாயிருக்கிங்களா ??”துரை பேச்சியின் கையை பிடித்து கேட்க….
 
அப்பு துரை…. ஆத்தா தமிழு அம்மாச்சி மேல கோபமில்ல தானே….??”
 
கோபமா எதுக்கு அம்மாச்சி??” என சைகையால் கேட்க…
 
அதற்குள் உள்ளே வந்திருந்த கதிர்…. அப்பத்தா இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்…. நீ கீழ விழுந்தா… நான்தானே மூத்த பேரன் எனக்குத்தானே கல்யாணத்தை பண்ணச் சொல்லனும் அதவிட்டுட்டு இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை உடனே பண்ணச் சொல்லியிருக்க இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்??” என சைகையால் கத்தி கத்தி சொல்லிக் கொண்டிருக்க துரையும் தமிழும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க கதிர் தன் அப்பத்தாவோடு வம்பிழுத்துக் கொண்டிருந்தான்….
 
                                                இனி………………??????

Advertisement