Advertisement

அத்தியாயம்  –  25

 இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது…  ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்….இடுப்பிலும்  முதுகிலும் நல்ல அடிபட்டிருந்ததால் அவளால் அதிகநேரம் உட்கார முடியவில்லை… துரை பத்துநாட்கள் விடுமுறை எடுத்து கனியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டான்… ஹரிணியும் ரம்யாவும் இரண்டு நாட்கள் கூடவே இருக்க இந்த வருடம் 12 வது படிப்பதால் கனி அவர்களை அதட்டி பள்ளிக்கு செல்ல சொல்லியிருந்தாள்.. .வீட்டை காயத்ரி பொறுப்பெடுத்துக் கொள்ள தமிழும் காயத்ரியும் வீட்டிலிருந்து சமைத்து கொடுத்துவிடுவார்கள்… மீனாட்சியும் வசந்தாவும் பகலில் ஹாஸ்பிட்டலில் இருக்க துரையும் கதிரும் இரவில் தங்கினர்..கதிருக்கு அலைச்சலே அதிகமாக இருந்தது சாப்பாடு எடுக்கச் செல்ல..மற்றவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டிவர தங்கைகளை காலை மாலை பள்ளிக்கு அழைத்துச் செல்ல என ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தான்…. துரை தான் செய்வதாக சொன்னாலும் கதிர் விடவில்லை… கனியை மட்டும் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தான்….

 

அன்று தமிழும் காயத்ரியும் சமைத்து சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கதிரோடு வந்திருக்க மீனாட்சிக்கு காயத்ரியை பார்த்து பாசம் பொங்கியது.தனக்கு ஒரு பெண் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாளோ… அனைத்து உதவிகளையும் முகம் சுழிக்காமல் பொறுமையாக செய்துகொண்டிருக்க… அவர்கள் இருவரும் உள்ளே கனியோடு இருக்க மீனாட்சியும் வசந்தாவும் அந்த வராண்டாவில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள்….

 

வசந்தா…. அண்ணி நான் ஒன்னு கேட்கவா…??”

சொல்லு வசந்தா…

நம்ம காயத்ரியை கதிருக்கு கட்டிவைச்சா என்னண்ணி…??”

நிமிர்ந்து வசந்தாவை ஆச்சர்யமாக பார்த்தவர்… எனக்கும் இது தோனுச்சு வசந்தா நீயும் தம்பியும் என்ன நினைப்பிங்களோன்னுதான் நான் இத உங்ககிட்ட சொல்லல….

 

இல்லண்ணி உங்க தம்பிக்கும் இதுல விருப்பம்தான்… நம்ம கனி மாதிரியே இந்த பொண்ணும் ரொம்ப பொறுமை….பொறுப்பு… நம்ம கதிருக்கு ஏத்த பொண்ணா இருப்பா…கதிர்தான் என்ன சொல்லுவானோ தெரியல…??”

 

நீ கவலையை விடு நம்ம துரைக்கிட்ட சொல்லி பேசிப்பார்க்க சொல்லுவோம்.??” அப்போது அங்கே வந்த துரையிடம் மீனாட்சி விசயத்தை சொல்ல

 

அவன் என்னமா சொல்ல போறான்… நான் பார்த்துக்கிறேன்… அத்தை நீங்க காயத்ரிக்கு யாரும் இல்லைன்னு  நினைக்க வேண்டாம்… அவ என்கூட பிறந்த தங்கச்சி மாதிரி அண்ணனா இருந்து எல்லா முறையும் நானே செஞ்சிருவேன்… எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவனுக்கு முடிப்போம்தானே அதுமாதிரி நினைச்சுக்கோங்க…

 

ரொம்ப சந்தோசம் மாப்பிள்ள நம்ம தமிழுதான் சொன்னுச்சு காயத்ரிக்கு கதிரை கேட்கச் சொல்லி…. இல்லைனா இந்த அளவுக்கு விபரம் எனக்கு இல்லை மாப்பிள்ளை….

 

மனதிற்குள் தமிழை மெச்சியவன் உள்ளே தன் மனைவியை பார்க்க செல்ல…காயத்ரி கனிக்கு ஜூஸ் பிழிந்து கொண்டிருக்க தமிழ் அங்கிருந்த சேரில் அமர்ந்து கனியோடு பேசிக் கொண்டிருந்தாள்…. கனியிடம் வந்தவன்……. மாத்திரை சாப்பிட்டியாம்மா….??” அவள் நெற்றியை தடவிக் கொடுத்தபடி அவளை எழுந்து உட்கார வைத்தவன் மெதுவாக தன் மேல் சாய்த்துக் கொள்ள பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்…..

 

ம்ம்ம்…. போட்டுக்கிட்டேங்க…. அவன் நெஞ்சில் தன் முதுகை வாகாக சாய்த்துக் கொள்ள….காயத்ரியிடம் ஜூஸை வாங்கி அவளுக்கு கொடுத்தபடி

 காயத்ரி உன்கிட்ட நான் ஒன்னு கேக்கனுமா…??”.

கையை கழுவியவள் சொல்லுங்கண்ணா….

நீ என்னை அண்ணனா நினைக்கிறது உண்மைதானேம்மா….??”

 

என்னண்ணா இப்படி சொல்லுறிங்க… நீங்க என்னோட அண்ணன்தானே…??”

 

அப்ப இந்த அண்ணன் அவனோட மாப்பிள்ளைக்கு உன்னை கட்டி வைக்கலாம்னு நினைக்கிறேன்மா….??”

 

கனி திரும்பி தன் கணவனை பார்க்க… அவன் தன் தலையை ஆட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டவன்… உங்க அண்ணனுக்குதாண்டி.?”

 

கனி சந்தோசத்துடன் சிரிக்க காயத்ரிக்கு… என்ன சொல்வதென்று தெரியவில்லை….அவளுக்கு மொத்தத்தில் இவர்கள் குடும்பமே ரொம்ப பிடித்திருந்தது… தனியாக கதிர் மேல் நல்ல அபிப்ராயமே வைத்திருந்தாள்…. இவளிடம் அனாவசியமாக எந்த வழிசலோ…. பார்வையோ இருக்காது… அதிலும் கனிக்கு அடிப்பட்டதிலிருந்து அதிகமான நேரங்கள் கதிரோடு சாப்பாடு கொண்டு வர… திரும்பி போக என நிறைய நேரங்கள் இருந்திருக்கிறாள்… அவனது கண்ணியமும் தன் குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் பாசமும் மிகவும் பிடித்திருந்தது….தங்கைகளுக்கு அவன் பார்த்து பார்த்து செய்வது தனக்கும் இதுபோல பார்த்து செய்ய ஒருவர் இல்லையே என்ற ஏக்கமே வந்திருந்தது… இன்று அவனையே கணவனாக சொல்லவும் காயத்ரிக்கு சம்மதம் சொல்வதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை இருந்தாலும் கதிருக்கும் தன்னை பிடிக்குமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தவள் துரையிடம்…

 

. அவங்க என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டாங்களாண்ணா…??” தமிழ் அங்கு நடப்பதை சந்தோசத்துடன் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்….

 

கனிக்கு கொஞ்சம் பழங்கள் வாங்க சென்றிருந்த கதிர் உள்ளே வர… காயத்ரி வாயை மூடிக்கொண்டாள்… இதுவரை கதிரை வேறு கோணத்தில் யோசிக்காதவள் முதல் முறையாக கணவனாக வைத்து பார்க்க அவளுக்கு தன்னை அறியாமல் வெட்கம் வந்திருந்தது…தலையை குனிந்தபடி நிற்க…..

 

மாப்பிள்ள என் தங்கச்சிக்கு என்னமோ வேணுமாம் கொஞ்சம் வாங்கி குடுடா…??”

 

காயத்ரியை பார்த்தவன் சொல்லு நான் போய் வாங்கிட்டு வர்றேன்…?”.

 

டேய் கூட்டிட்டு போய் வாங்கிக்கொடு…??”.கதிரை பார்த்து கண்ணை சிமிட்டியவன்… காயத்ரி நீ என்னமோ கேட்கனும் சொன்னியே…. கேட்டுக்கமா..??”.காயத்ரி முன்னே போகவும் தன் அண்ணனின் கையை பிடித்த தமிழ் அவன் காதிற்குள் ஏதோ சொல்ல ஆச்சர்யத்துடன் பார்த்தவன்….

 

 ஏய் உண்மையாவா…?” தன் தங்கையின் கையை பிடித்து குலுக்கவும்….அவன் சந்தோசத்தை பார்த்தவள்….

 

அண்ணே…நான்தான் அம்மாக்கிட்ட சொன்னேன்… உன்னோட கல்யாணம் நடந்தா பத்து பவுனுக்கு எனக்கு நகை வாங்கி தர்ற…டீலா…..நோ டீலா..??”

 

ம்ம்ம் யோசித்தவன்… ஏண்டா மாப்பிள்ள இந்தம்மாகூடத்தான் அரவிந்த லவ் பண்ணுச்சு நாம கல்யாணம் பண்ணி வைச்சமே என்ன குடுத்திச்சு… இதுக்கு மட்டும் பத்துதுது……… பவுனுக்கு நகை வேண்டுமாம் என்ன அநியாயம்….??”

 

டேய் குரங்கே… அப்ப இரு நான் காயத்ரியை கூப்பிட்டு எங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நல்ல அழகான வெளிநாட்டு மாப்பிள்ளையா பார்க்கச் சொல்லுறேன்… இவன் வேண்டாம்னு சொல்ல சொல்லுறேன்….??”வெளியே செல்ல போக

 

அவள் கையை பிடித்து இழுத்தவன் தமிழை பார்த்து….. வேணாம்…. அழுதுருவேன்…..டேய் மாப்பிள்ள இந்த பிசாச என் சார்பில நல்லா ரெண்டு போடு போட்டு வெளிய வரவிடாம பார்த்துக்க நான் எஸ்கேப் ஆகுறேன்….??” அவன் வெளியில் ஓடிவர…..

 

காயத்ரியோடு காரில் ஏறியவன் என்ன வாங்கனும்….??”

போங்க சொல்லுறேன்...கார் கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மரத்தடியில் அதை நிறுத்தச் சொன்னவள்…எப்படி ஆரம்பிப்பது என வெட்கப்பட்டு தலையை குனிந்த படி அமர்ந்திருக்க கதிருக்கு அவள் வெட்கத்தை பார்க்கவும் மனம் ஜிவ்வென இருந்தது அவள் புறம் நகர்ந்து உட்கார அவள் கதவு பக்கம் நகர்ந்தாள்… இவன் நகரநகர அவளும் கதவோடு ஒட்டி போய் அமர்ந்திருக்க

 அவள் கையை பிடித்தவன் இதுக்கு மேல போன கதவுக்கு வெளியில விழுந்திருவ..சரி நானே முதல்ல சொல்லுறேன்…. எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா…கடைசிவரைக்கும் உன்னை நல்லா வைச்சிக்குவேன்…..??”

 

காயத்ரி ஒன்றும் சொல்லாமல் மெதுவாக நகர்ந்து அவன் மார்பில் சாய்ந்து கொள்ள…. அவள் சம்மதம் சொல்லாமலே தெரிந்தது…. அவளை மெதுவாக அணைத்துக் கொண்டவன்... நான் ஒன்னு கேக்கவா…..??”

ம்ம்ம்…”

இல்ல உனக்கு யாரும் இல்லையே… அதனால வேற வழியில்லாம எனக்கு சம்மதம் சொல்லலையே.. மனசாரதான சம்மதம் சொன்ன…??”

 

கதிரை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களில் ஒரு சிறு தவிப்பு தெரியவும்..” இல்லைங்க எனக்கு உங்கள பிடிச்சிருக்கு… நீங்க உங்க எல்லா  தங்கச்சிங்க மேல வைச்சிருக்கிற பாசம்…. அவங்களுக்கு பார்து பார்த்து செய்யுற அக்கறை எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் பத்து வயசில இருந்து அம்மா அப்பா இல்லாம பாட்டியோடத்தான் வளர்ந்தேன்…சொந்தகாரங்க எல்லாம் எங்க உறவு வைச்சிக்கிட்டா என்னையும் பார்த்துகனுமோன்னு எங்ககிட்ட ரொம்ப பேசமாட்டாங்க… ஆனா குடும்பம்னா என்ன…பாசம்னா என்னன்னு உங்க ரெண்டுபேர் குடும்பத்தையும் பார்த்தவுடனதான் தெரிஞ்சிக்கிட்டேன்… எனக்கு உங்க குடும்பத்தை ரொம்ப புடிச்சிருக்கு அதிலயும் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு….

 

தன் மார்பில் சாய்ந்திருந்தவளை இன்னும் இறுக்கி அணைக்க எப்போதும் அலைப்புறுதலாகவே இருக்கும் அவள் நெஞ்சம் தன் வீட்டை அடைந்தது போல அமைதியாகிற்று….. தனக்கும் ஒரு சொந்தம் காலத்திற்கும் தன்னை கண்ணுக்குள் கண்ணாக வைத்து காப்பான் என்ற நம்பிக்கையை கதிர் மற்றவர்களுக்கு செய்த செயலை வைத்தே இவளுக்குள் விதைத்திருந்தான்….

 

அப்புறம் இன்னொரு விசயம் இப்ப ஹரிணியும் ரம்யாவும் மாப்பிள்ள வீட்ல இருந்தாலும் அவங்க கல்யாணம்னு வரும்போது நமக்குதான் அதிக கடமை இருக்கு… அதுனால எப்பவும் நீ எனக்கு துணையா இருக்கனும்… அவங்க என்னோட சித்தப்பா பொண்ணுகளா இருந்தாலும் என்கூடப்பிறந்த தங்கச்சிகதான் இத மட்டும் எப்பவும் நினைவுல வைச்சிக்க… இந்த நாலு தங்கச்சி பிள்ளைகளுக்கும் நான்தான் தாய்மாமன் முறை செய்யனும்… அதுக்கு மாமா மனைவியா எப்பவும் எனக்கு நீ பக்க பலமா இருக்கனும்… கொஞ்சம்கூட அவங்ககிட்ட முகத்தை சுழிக்ககூடாது…. நீ செய்யமாட்ட இருந்தாலும் சொல்லுறது என்னோட கடமை…. புரியுதா…. என்னை தப்பா நினைச்சுக்கலையே என்னடா விரும்புறியான்னு கேட்டு அஞ்சு நிமிசம் ஆகலை அதுக்குள்ள இவ்வளவு சொல்லுறானேன்னு நினைச்சுக்காத ….

 

இல்லைங்க …. நான் என்ன உங்க அழக பார்த்தா மயங்கினேன்…நீங்க உங்க குடும்பத்து மேல வைச்சிருக்கிற அக்கறையாலத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்…நீங்க ரொம்ப பில்டபெல்லாம் பண்ணாதிங்க தன் உதட்டை சுழிக்க….

 

சிரித்தவன்...ஆஹா… இது தப்பாச்சே… நீ இப்படியெல்லாம் வாய் பேசுவியா… நான் வேற நீ ரொம்ப அமைதி… அடக்கமான பொண்ணுன்னு நினைச்சுட்டேன்??”

 

நானென்ன ஊமையா… பேசாம இருக்கிறதுக்கு யார்கிட்ட  எப்படி பேசனுமோ அப்படி பேசவோமாக்கும்….

 

அப்புடியா இப்ப பேசுபார்ப்போம் அவளை தன்புறம் திருப்பியவன் அவளை இறுக அணைத்து அவள் இதழில் தன் இதழால் கோலமிட….காயத்ரி அப்படியே அதிர்ச்சியாகிவிட்டாள்….

 

சற்று நேரம் கழித்து அவளை விட்டவன்… இப்ப பேசுறது…??”.

 

போங்க ….”என்றபடி அவன் மார்பில் தன்முகத்தை மறைத்துக் கொண்டவளை சந்தோசமாக இறுக்கியிருந்தான்….

 

இருவரும் சந்தோசமாக ஹாஸ்பிட்டலுக்கு வர தமிழ் அங்கு பெட்டில் படுத்திருந்தாள்… இருவரும் பதறிக்கொண்டு வர….வசந்தா கதிரை வாயை திறக்க சொன்னவர் அவன் வாயில் ஒரு சாக்லேட்டை திணித்த படி...டேய் கதிரு நீ தாய் மாமனாக போறடா… நம்ம தமிழு பிள்ளை உண்டாகியிருக்கு…??”

 

யேய்….. என கத்தியவன்  தமிழை தன்னோடு அணைத்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி… ஏய் நீயே ஒரு குட்டி பிசாசு…. உன் பிள்ளை எப்புடிடி இருக்கும்… மாப்பிள்ளை மாதிரி இருந்தா பரவாயில்ல… அவருக்கு சொல்லிட்டியா….??”

 

போடா…குரங்கே.. அவன் தலையில் கொட்டியவள் அவனை அணைத்து தன் பாசத்தை காட்டியபடி ம்ம்ம் சொல்லிட்டேன்டா. ரொம்ப சந்தோசப்பட்டாங்க கனிய பார்க்க நாளைக்கு வர்றதா தானே இருந்தாங்க…வருவாங்க??”

 

முழுதாக இருபது நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்துவிட்டு  கனியை அன்று டிஸ்சார்ஜ் செய்திருந்தார்கள்….காலையில் டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டி வந்தவனை மீனாட்சி வாசலிலே நிறுத்தி காயத்ரியை ஆரத்தி எடுக்கச் சொல்லி வீட்டிற்குள் அழைத்திருந்தார்.. அவளுக்கு இன்னும் சரியாக நடக்க முடியாததால் மாடியேற வேண்டாம் என நினைத்து கீழேயே அறையை தயார்செய்து வைத்திருந்தான்… கதிரிடம் சொல்லி கனி ஹாஸ்பிட்டலில் இருந்து வருவதற்குள் வீட்டிற்குள்ளேயே இரண்டு ரூம்களுக்கு அட்டாச்சுடு பாத்ரூம் வைத்து கட்டியிருக்க சொல்லியிருந்தான்… நடக்க முடியாமல் சிரமபட்டவளை இடுப்பில் கைகொடுத்து தூக்கியவன் அறையில் கொண்டு வந்து படுக்க வைத்திருந்தான்…. கனிக்கு தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது… இந்த இருபது நாட்கள் தன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான்… அந்த நர்ஸ்ம் அவளை அங்கு சேர்த்த அன்று துரை தனக்காக பதறியதை…. அவன் அவளுடன் பேசியதை சொல்ல…. இன்னும் இன்னும் தன் கணவன் மேல் காதல் பெருகியது….

 

 அரவிந்த ஊரிலிருந்து வந்து கனியை பார்த்துவிட்டு ஒரு வாரம் மட்டும் இருந்துவிட்டு தன் மனைவியோடு ஊருக்கு கிளம்பியிருந்தான்…தன் மனைவியை இனி அவனால் பிரிந்திருக்க முடியாமல்… அதுவும் தன் வாரிசை சுமந்திருக்கும் இந்த நேரத்தில் அவளை பூப்போல பார்த்துக் கொள்ள ஆசைப்பட்டு ஊருக்கு கிளம்ப சொல்ல வசந்தா அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் வேண்டாம் என சொன்னாலும் தமிழுக்கும் கணவனை விட்டு இருக்க முடியாமல் பொங்கலுக்கு வருவதாக சொல்லி கிளம்பியிருந்தாள்.

 

வீட்டிற்கு வந்ததிலிருந்து கனியை சுற்றி குடும்பத்தினர் யாராவது இருந்து அவளுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்ய ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஜூஸ்… சூப் என ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் …ஹரிணியும் ரம்யாவும் பள்ளிக்கு செல்லும் நேரம்போக மீதி நேரம் தன் அக்காவுடனே இருந்தார்கள் அவளுக்கு தலைசீவி விடுவது ..சாப்பாடு ஊட்டுவது..உடைமாற்றி விடுவது என அக்காவிற்கு வால்பிடித்து கொண்டே இருக்க மீனாட்சிக்கு இவர்களின் பாசத்தை பார்த்து மிகவும் பிடிக்கும்..தன் தம்பி இருந்திருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்குமோ என்று நினைப்பார்… துரைதான் வேலைக்கு சென்றதிலிருந்து  கனியோடு பகல்நேரங்களில் இருக்கமுடியாமல் போனது… மாலையில் சீக்கிரம் வருபவன் மீதி நேரங்கள் அனைத்தும் கனியுடனே கழிப்பான்.. அவளை தூக்கிவந்து வாசலில் அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

 

மீனாட்சி கதிர் காயத்ரி திருமணத்தை பற்றி பேச கனிக்கு உடல்நிலை முழுமையாக குணமடைந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கதிர் மறுத்துவிட்டான்… காயத்ரிதான் தான் திருமணமாகி அந்த வீட்டிற்கு வந்துவிட்டால் கனியை பார்த்துக் கொள்ள சிரமம் வரும் என்று சொன்னதால் தமிழ் பொங்கலுக்கு வரும்போது வைத்துக் கொள்ளலாம் என ஒரு ஆறுமாதங்களுக்கு தள்ளிப்போட்டார்கள்… இரவில் கனியோடு படுப்பவன் அவளை ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொள்வான் கைகால்களுக்கு மருந்து தேய்த்துவிடுவது.. அவள் முதுகில் மருந்து தேய்த்துவிடுவது போன்ற நேரங்களில் ஒரு தாய்க்குரிய சேவகம்தான் இருக்கும்…  ஒரு பக்கம் நல்ல அடிப்பட்டதால் ஒரு பக்கம் படுக்கமுடியாமல் சிரமப்படுபவளை தன் மார்பில் தாங்கிக் கொள்வான்…. நெற்றிகாயம் ஆறி வடுவாக மாறியிருந்தது….

 

கேஸ் இவர்கள் பக்கம் ஜெயித்து எல்லாம் இவன் கைவசமே வந்தது… அடிப்பட்ட மூவரும் ஹாஸ்பிட்டலிலே இருந்தார்கள். .காலம் கடகடவென ஓடி மூன்று மாதங்கள் ஆனதில் கனிக்கு பாதி குணமாகி இருந்தது… அன்று துரை வரும்போதே ஏதோபோல இருக்க அவன் முகத்தையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவள் எல்லாரும் இருக்கும் போது எப்படி கேட்கவென இரவிற்காக காத்திருக்க….இரவில் அவளுக்கு மாத்திரை கொடுத்தபடி அவளுக்கு தடவ மருந்து எடுத்தவன் கையை பிடித்து…..

 

என்னத்தான்… என்னாச்சு…. ரொம்ப அமைதியா இருக்கிங்க…??”

ம்பச்… ஒன்னுமில்லைடி…??”.

இல்ல…. ஏதோ இருக்கு சொல்லுங்க…

கட்டிலில் படுத்து தன்மேல் மென்மையாக அவளை சாய்த்துக் கொண்டவன்… ம்ம்ம் அடுத்த வாரத்தில் இருந்து மூனு மாசத்துக்கு எனக்கு டெல்லியில டிரைனிங் போட்டிருக்காங்கடி…??”

 

அதிர்ச்சியானவள்… என்னத்தான் சொல்லுறிங்க…??”

அதான்டி ஒரே யோசனையா இருக்கு..

ஏத்தான் கண்டிப்பா போகனுமா…??”

ஆமா… அதான் பேசாம வேலையை விட்டுறவா… என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது… அடிக்கடி இப்படி டிரைனிங் போட்டுக்கிட்டுத்தான் இருப்பாங்களாம்…??”

 

ச்சூ என்ன சொல்றிங்க வேலையை விடுறதா… எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலையை வாங்கியிருப்பிங்க… அத்தைக்காகத்தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்னு சொல்லுவிங்க… மூனு மாசம்தானேத்தான் வேகமா ஓடிரும்… நீங்க போயிட்டு வந்துருங்க…

 

அவள் கழுத்தில் முகத்தை பதித்தவன்… என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுடி..

அவன் முகத்தை பார்த்தவள்… என்னாலையும் இருக்க முடியாதுத்தான் ஆனா ஒரு மனைவி கணவனோட வெற்றிக்குத்தான் உதவியா இருக்கனும் தோல்விக்கு இல்ல… இங்க என்னை எல்லாரும் நல்லா பார்த்துக்குறாங்க… என்னோட செல்ல அத்தான்ல… நல்ல பிள்ளையா போய்ட்டு வந்துருவிங்களாம்… உங்க மனைவி அதுக்குள்ள நல்லாயிருவாங்களாம்…. நாம ரெண்டுபேரு மட்டும் மறுபடி நம்ம வீட்டுக்கு போய் ஒரு வாரம் தங்கிட்டு வருவோமாம்….??” அவள் பழையதை நியாபகப்படுத்த… அந்த பழைய நியாபகத்தில் அவள் இதழை சுவைத்தவன்… இதுவரை இருந்த காதல் போய் மோகத்துக்கு மாறிக் கொண்டிருந்தது… அவள் கழுத்தில் முகத்தை புதைத்தவன் கை தன்னை மீறி இடுப்புக்கு செல்ல…. கையை போட்டு இறுக்கவும் முதுகு வலியில் தன்னை அறியாமல் ஸ்ஸ்ஸ் என முனக சட்டென தன்னிலைக்கு வந்தவன்… அவளை கட்டிலில் படுக்க வைத்து மருந்தை கையில் எடுத்தான்….

 

அன்றுதான் துரை டெல்லிக்கு கிளம்பவேண்டிய நாள் வேண்டியதை எல்லாம் எடுத்து வைத்தவன் கனியிடம் ஆயிரம் பத்திரம் சொல்ல கனிக்கு ஒன்றும் சொல்ல முடியாமல் கண் கலங்கவும்… இப்படி நீ அழுதா அத்தானால அங்க எப்படிடி நிம்மதியா இருக்க முடியும் சிரிடா…. செல்லக்குட்டி??” அவளை கொஞ்ச… வெளியில் கதிரின் ஹாரன் ஒலி கேட்கவும் அவளிடம் விடைபெற்றவனை எட்டி அணைத்தவள் தன் மொத்த காதலையும் தன் இதழில் இருந்து அவன் இதழுக்கு செலுத்தியிருந்தாள்…. இரண்டு நிமிடம் கழித்து விட்டவளிடம்…

. ப்பா…செமடி… இதுமாதிரி அத்தான்கிட்டயும் முத்தம் வாங்க உன் உடம்பை நல்லா தேத்தி வைச்சுக்கோ… வரவா??” அவள் கன்னம்தட்டி விடைபெற்றான்…

 

இருவரும் பகல் பொழுதை நெட்டி தள்ளினாலும் இரவு பொழுதை போனிலேயே கழித்தார்கள்… அவள் உடல்நிலையை விசாரிப்பவன்… தன்தாயிடமும் மற்றவர்களுடமும் பேசிவிட்டு கனியிடம்தான் பேசுவான்…. பேசுவான் பேசிக்கொண்டே இருப்பான்… மீனாட்சி ஏதாவது சத்தம் போட்டால்தான் போனையே வைப்பார்கள்.. துரையும் கனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில நேரங்களில் போனை சீக்கிரமே வைத்துவிடுவான்…. எப்படா மூனுமாதம் முடியும் என்று இருவரும் ஏங்கி போயிருக்க தை கடைசியில் கதிர் காயத்ரி திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்ததால் துரை தான்வந்து எல்லா வேலைகளையும் செய்வதாக சொல்லியிருந்தான்… குடும்பமே துரையின் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது…

 

பொங்கலும் வர….. துரை குடும்பம் பொங்கலுக்கு தங்கள் ஊருக்கு சென்றிருந்ததால் துரை நேரடியாக அங்கு வருவதாக சொல்லியிருந்தான். வாசலில் கார் நிறுத்தும் சத்தம் கேட்டு அனைவரும் வாசலுக்கு விரைய ஆளுக்கு முதலாய் கனி ஓடி வந்திருந்தாள்… காரை விட்டு இறங்கியவன் கனியை தன் பழைய கனியாய் பார்த்து அப்படியே பிரமித்து போய் நிற்க கனிக்கு தன் கணவனை ஓடிப்போய் அணைத்து முத்தமிட ஆசையிருந்தாலும் அனைவரும் இருப்பதை பார்த்தவள்…. கைகட்டிக் கொண்டு அவனை கண்ணால் சுமந்து நிற்க…. அனைவரின் நலத்தையும் விசாரித்தவன் வாய்தான் பேசியதே தவிர கண் நிமிடத்திற்கு ஒருமுறை தன் மனைவியைத்தான் நாடியது….

 

வீட்டிற்குள் பொங்கல் வைப்பதற்கான ஆயத்த வேலையில் இருக்கவும் அனைவரும் புத்தாடையோடு இருப்பதை கண்டவன் தானும் குளித்துவிட்டு வருவதாக கூறி மாடிக்கு சென்றவன் கனியிடம் கண்ணைக்காட்டிச் செல்ல

அத்தை அத்தானுக்கு காப்பி குடுத்திட்டு வரவா….??”

 

போத்தா…. குடுத்திட்டு கொஞ்சம் வெரசா வாங்க ரெண்டு பேரும்..??”.சூசகமாக சொல்ல… வெட்கத்துடன் வேகமாக காப்பியை போட்டுக் கொண்டு மாடிக்கு விரைந்தவள் கதவை திறந்து உள்ளே செல்ல துரையை காணாமல் தேடியபடி காப்பியை டேபிளில் வைக்க… கதவு சாத்தும் சத்தம் கேட்கவும் திரும்ப துரை கதவை சாத்தி அதன்மேல் சாய்ந்து நின்று…

 

 நான் வந்து அஞ்சு நிமிசம் ஆச்சு இப்பத்தான் வருவியா..??”. தன் கையை விரிக்க ஓடிவந்து அவனை அணைத்தவளை தன் உயரத்திற்கு தூக்கியவன்….அவளை சுற்ற… இருவரும் தங்கள் துணையின் ஸ்பரிசத்தை…. அன்பை ….. காதலை… பாசத்தை…. மோகத்தை…. உணரத்துவங்கினர்….

                                       இனி……………….?????.

Advertisement