Advertisement

ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்… மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்….இப்ப எப்படி இருக்கு…. நீயும் வாங்கி குடுத்தியே…. ம்கூம்…??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல…
 
நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்…. இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா….துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்…. கனியோ துரை திட்டு வாங்குவதை ரசித்துக் கொண்டிருந்தாள்…நல்லா வாங்கட்டும்…. ஜீப்பில் வரும்போது…
ஏய் நானாடி உன்னை சேலை எடுக்க வேண்டாம்… நல்ல பெரிய நகையா வாங்க வேண்டாம்னு சொன்னேன்….??”
 
ம்ம்ம் சொல்லல…. ஆனா இப்படி டிசைனா வாங்குன்னும் சொல்லல தானே…. யாருக்கு வந்த விருந்தோன்னு என்னை கண்டுக்காம…. போனை தானே கட்டிப் பிடிச்சிக்கிட்டு இருந்திங்க…??” அவள் அன்று துரை தன்னை கண்டு கொள்ளாமல் இருந்ததை…. சொல்லிக்காட்ட…
 
மீனாட்சி என்ன துரை எதுக்கு இப்ப மருமகளை அதட்டிக்கிட்டு வர்ற….??”
 
ஒன்னுமில்லம்மா ….சும்மா…பேசிக்கிட்டு இருந்தோம்…. உன்னை… இருக்குடி உனக்கு ……??”
 
. அனைவரும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய….  அடுப்பு தோண்டி பால்களைய…… தண்ணீர் குடத்தை எடுத்து கனியிடம் கொடுத்து…. ஆத்தா இந்தா….. குடம்….. அந்தா இருக்கிற கோவில் குளத்துல ஒரு குடம் தண்ணி எடுத்துட்டு வாத்தா…. மருமகதான் தண்ணி எடுத்துட்டு வரணும்…??”.
கனி குடத்துடன் செல்ல துரையை பார்த்தவர்...தம்பி என்ன பார்த்துக்கிட்டு இருக்க  மருமகளோட கூடப்போ… என்னடா உனக்கு ஒன்னு ஒன்னா சொல்ல வேண்டியதா இருக்கு … ரெண்டு பேரும் சேர்ந்து போய்தான் தண்ணி எடுத்துட்டு வரணும்… போ….??”
 
துரையோ இந்த அம்மாவுக்கு என்னாச்சு என்னையவே ஏதாச்சும் சொல்லிக்கிட்டு இருக்காங்க… கனியை பார்க்க அவள் முகம் புன்னகையில் இருந்தது…..  எவ்வளவு கோபக்காரர் அவங்க அம்மா ஒரு வார்த்தையில அடக்கிருராங்களே….
நாமளும் இவர அடக்க அத்தைக்கிட்ட டியூசன் போகனும்… தான் அதட்டுவது போலவும்… அவன் மறுவார்த்தை பேசாமல் போவது போல கற்பனையில் கண்டவளுக்கு சிரிப்பு தாங்கவில்லை…களுக் என சிரிக்கவும்… வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகநடையில் கனியை ஒட்டி வந்து கொண்டிருந்தவன்… அவள் சிரிப்பு சத்தம் கேட்டு அவள் கையை எட்டி பிடித்து
ஏய் என்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு எங்கம்மா என்னை திட்டுறாங்க… உனக்கென்னடி…??” சிறுவனை போல சண்டை போட கனிக்கு இன்னும் சிரிப்பு பொங்கி வந்தது…..
 
ஏய் சிரிக்காதடி..??”.அவன் தன்னை நோக்கி அவளை இழுக்க அவன் கையை உதறியவள் வேகமாக ஓடினாள்…. குளக்கரைக்கு அருகில் செல்லவும் தயங்கி நிற்க….
 என்ன வேகமா வந்த பயமா இருக்கா குளத்துல இறங்க??” அவளிடம் குடத்தை வாங்கியவன் குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கி தண்ணீர் எடுத்து வர அவனிடம் இருந்து குடத்தை வாங்கியவள் தன் இடுப்பில் வைத்து தூக்கி வந்தாள்….
 
ஏய் குடு நான் தூக்கிட்டு வர்றேன்…. கனமா இருக்க போகுது…??”
இது ஒன்னும் கனமில்லைங்க…. பரவாயில்ல நானே தூக்கிட்டு வாறேன்…??” அவன் அவளோடு இணைந்து நடக்க இருவருக்குமே புரிந்தது….. இந்த நிமிடம் மிகவும் பிடித்திருப்பதை….
 
தங்கள் குடும்பம் இருக்கும் இடத்திற்கு வந்தவர்கள் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய…. பால் பொங்கி வழியவும் அப்பத்தா குலவை போட…. பக்கத்தில் ஒரு குடும்பம் பொங்கல் வைக்க வந்திருந்தது….
 
திரும்பி பார்த்தால் துரை அப்பாவின் சித்தப்பா பையனின் குடும்பம்… இவர்கள் இங்கு வருகிறார்கள் என்று அறிந்து வேண்டும் என்றே இன்று பொங்கல் வைக்க தன் குடும்பத்தை அழைத்து வந்திருந்தான்…
.என்ன யார்யாரோ நம்ம குலசாமி கோவிலுக்கு பொங்கல் வைக்கிறாங்க… இந்த கோவிலுக்குன்னு ஒரு புனிதம் இருக்குல அது கண்டவங்க கால்வைச்சா குறைஞ்சிராது…??” தன் மகன்களை பார்த்துக் கொண்டே சொல்ல….
அவருக்கும் இரண்டு பையன்கள் துரை வயதிருக்கும்…… மனைவிகள் பக்கத்தில் இருக்கும் போதே..அவனின் மகன்கள். கனியையும் மற்ற பெண்களையும் வெறித்து பார்க்க…
துரையும் கதிரும்தான் சண்டைக்கு கிளம்பியிருந்தார்கள்… மீனாட்சி அவர்களை தடுக்க அந்த நேரத்தில் அந்த ஊர் பஞ்சாயத்துகாரர்கள் சிலபேர் கோவிலுக்கு வரவும்… அவன் அப்படியே அமைதியாகிவிட்டான்…
 
அவர்கள் மீனாட்சியை பார்க்கவும் அருகில் வந்து அவரை அடையாளம் கண்டு நலம் விசாரிக்க…. அவர்களிடம் பேசியபடி தன் மகனை அழைத்தவர்…
 
அண்ணே… இவன் என்னோட பையன்ணே…பேர் துரைசிங்கம்…. பேங்க்ல மேனேஜரா இருக்கான்..??”.
துரை வணக்கம் சொல்ல… அவர்களுக்கு அவன்மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது… பரவாயில்ல இந்த பொண்ணு சின்ன வயசிலயே கணவனை இழந்திருந்தாலும் பையனை நல்லா வளர்த்திருக்கு… மீனாட்சியை பாராட்டியவர்கள்… அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கப்பா… பாவம் உங்கப்பா இருந்திருந்தா இப்ப ரொம்ப சந்தோசப்பட்டிருப்பான்… ரொம்ப நல்லவன்..??”
 
தன் மருமகளை அறிமுகப்படுத்த… அடடா கல்யாணம் பண்ணிட்டியா… எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல பரவாயில்ல பொண்ணு அப்படியே மகாலெட்சுமி மாதிரி இருக்கு… என்னம்மா சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு தம்பி பொண்ணையே கட்டி வைச்சிட்டியா….??”
 
ஆமாண்ணே…..
 
தன் பக்கத்தில் இருந்த குடும்பத்தை பார்த்தவர்கள்… என்னம்மா… கோர்ட்ல கேஸ் போட்டுருக்கிங்களாம்… நம்ம ஊர்லதான் பஞ்சாயத்து இருக்கே… அப்புறம் ஏன்மா கோர்ட் கேசுன்னு போனிங்க….??”
 
துரை தன் பக்க விளக்கத்தை சொன்னவன் தன் தாயை தவறாக பேசியதை சொல்லவும்… அவனை திரும்பி முறைத்தவர்கள்…. ஏய் என்னப்பா நீ சொல்லலைனா எங்களுக்கு விசயம் தெரியாதுன்னு நினைச்சியா நீங்களும் உங்க பங்காளி பயலுகளும் அங்க போய் சண்டை போட்டது எங்களுக்கு தெரியும் நீ இந்த ஊருகாரன்தானே…
இங்க பொம்பளைகளை தப்பா பேசக்கூடாதுன்னு தெரியாது…. பக்கத்தூருக்கு போனா தப்பா பேசலாமா…. பார்த்து நடந்துக்கங்க… சொல்லி வை உங்க பங்காளிகக்கிட்ட… இந்த ஊரு கட்டப்பாட்ட மீறினா அப்புறம் இங்க குடியிருக்க முடியாது..??” அவனை சாடியவர்கள் துரை குடும்பத்திடம் விடை பெற்று செல்ல….
துரை குடும்பத்தை குரோதத்துடன் பார்த்தபடி அந்த வீட்டு ஆண்கள் கோவிலை விட்டு வெளியில் செல்ல…. அந்த குடும்பத்து மருமகள்களை தண்ணீர் எடுக்க சொல்லி குளக்கரைக்கு அனுப்பிய அவர் மனைவி மீனாட்சியை பார்த்து சினேகமாக சிரித்தார்… மருமகள்களின் தலை மறையவும்…..
 
 அக்கா…. எங்கள மன்னிச்சிருங்கக்கா….இவரு. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரு பயலுகளும் அடுத்தவங்க சொத்தை எப்படி ஏமாத்தி வாங்கலாம்னு நினைக்கிறாங்களே தவிர உழைச்சு வாழனும்னு தோனலை.??”… மீனாட்சியின் கையை பிடித்தபடி சொல்ல..
 
விடுத்தா…. நீ என்ன பண்ணுவ உன்னை பத்தித்தான் எனக்கு தெரியுமே??”… துரையின் அப்பாவுக்கு கூடப்பிறந்தவர்கள்தான் இல்லையே தவிர பங்காளிகள் நிறையபேர்….  ரொம்பநாள் பிள்ளையில்லாமல் தவமாய் தவமிருந்துதான் துரையின் அப்பா பிறந்திருந்தார்….
அப்போதே அவர் தந்தைக்கு வயது 60 இருக்கும்… தங்கள் திருமணத்தின் போது அவர்கள் ரொம்பவும் தளர்ந்து தள்ளாத வயதில் இருக்க மீனாட்சியை திருமணம் முடித்து அடுத்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் இருவரும் இறைவனடி சேர்ந்திருந்தனர்…..
துரையின் அப்பாவும் நிறைய சொத்தோடு துரை பிறந்த அவனது இரண்டாவது வயதில் மஞ்சள்காமாலையால் திடிரென இறந்திருந்தார்…. மீனாட்சிக்கு உலகமே சூன்யமான நிலை…. தன்னை தங்கத்தட்டில் தாங்கியவர் இந்த உலகத்தில் இல்லையா …. அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை….
இதற்கிடையில் பங்காளிகள் சிலபேர் துரையின் அப்பாவுடைய சொத்துக்காக இவர்களே மீனாட்சியை மறுகல்யாணம் செய்து கொள்வது…. அல்லது வைத்துக் கொள்வது என முடிவு செய்து அவளுக்கு தொந்தரவு தர முத்துராமனுக்கும் அப்போது சிறிய வயதுதான்…. உலகம் தெரியாதவர்…
நாளுக்கு நாள் மீனாட்சிக்கு அவள் சொந்தகாரர்களாலே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு தொல்லைகள் அதிகமாக… அவர்கள் உறவில் இருந்த ஒன்றிரண்டு நல்லவர்கள்தான் பலமுறை  அவளை காப்பாற்றியிருந்தனர்…. இவரும் தன் கணவரிடம் இருந்து மீனாட்சியை பலமுறை காப்பாற்றி அதனால் அடி உதைகள் வாங்கியுள்ளார்…
அதிலும் துரையின் முக்காலவாசி சொத்தை இவனே குத்தகைக்கு வாங்கியதால் மீனாட்சியை ரெண்டாம்தாரமாக திருமணம் செய்து கொண்டால் சொத்து தன் கைக்கு வந்து விடும் ….. அவரின் அழகும் அவரின் கண்ணை உறுத்த மீனாட்சிக்கு பலவகையில் தொந்தரவு தரவும் ஒரு நிலைக்கு மேல் பொறுத்து கொள்ள முடியாமல்….. தனக்கு தன் பிள்ளையும் மானமுமே பெரியது என்று முடிவெடுத்தவர் தன் தாய்வீட்டிற்கே சென்றுவிட்டார்….
வருடங்கள் உருண்டோடினாலும் அவனுக்கு அந்த சொத்து தன் கைக்கு எப்படியாவது கொண்டுவர வேண்டும் என வெறியில்தான் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டார்….
 
தன் சுயநினைவுக்கு வந்த மீனாட்சி பொங்கல் வைத்து முடியவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கோவிலில் அர்ச்சனை செய்து கிளம்ப துரைக்குமே இப்போது இந்த ஊரின் மேல் ஒரு பிடித்தம் வந்தது….இந்த ஊரு என்ன பண்ணும் சிலபேரால நாமளும் நம்ம ஊருக்கு வரணும்னு நினைக்கவே இல்லையே….
அந்த பஞ்சாயத்துகாரர்கள் பேசிய நியாயமான பேச்சு அவன் மனதை கவர்ந்தது….. கோவிலுக்கு வந்த அனைவரும் மீனாட்சியோடு பேசி துரையோடும் இரண்டு வார்த்தை பேசிச் செல்ல அனைவரும் மனநிறைவுடன் கடவுளை வழிபட்டனர்…
 
இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வரவும் பெண்கள் அனைவரும் சமையலில் இறங்கிவிட்டனர்…. அசைவ சமையல் சமைக்கலாம் என முடிவு செய்து தேவையானதை மீனாட்சியும் வசந்தாவும் வாங்கச் செல்ல….. துரையும் கதிரும் அவர்களுக்கு தேவையானதை நறுக்கி கொடுக்க ஆரம்பித்தனர்….
காயத்ரிக்கும் இந்த குடும்பம் ரொம்பவே பிடித்தது… எவ்வளவு அன்பு… பாசம்… எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க…. இவளும் இப்போது துரையிடமும் கதிரிடமும் நன்றாக பேச ஆரம்பித்திருந்தாள்….
முத்துராமன் கூட வெங்காயம் நறுக்கி கொடுத்தார்… அனைத்தையும் நறுக்கி முடிக்கவும் கதிரும் துரையும் ஊரை சுற்றிப்பார்க்கச் செல்ல…. துரைக்கு இரண்டு மூன்று போன்கால்கள் வந்து கொண்டே இருந்தது….போனை பேசி முடித்தவன்  சற்று முன் நடந்ததை நினைத்து பார்க்க…
கோவிலில் இருந்து வரவும் அனைவரும் அடுப்படியில் இருக்க துரையின் போன் மணி சத்தம் கேட்கவும் மாடியில் இருந்த போனை எடுக்க துரை மாடியேறியிருந்தான்   சாத்தியிருந்த கதவை திறக்க… உள்ளே கனி சேலை மாற்றிக் கொண்டிருந்தாள்.
 
துரையை பார்க்கவும் பதறியவள் என்ன செய்வதென தெரியாமல் கட்டிலுக்கு மறுபக்கம் சென்று கீழே உட்கார்ந்து கொள்ள….ஸாரி… போன் வந்துச்சு அதான் நீ அடுப்படியில இருக்கன்னு நினைச்சேன்…??”வாய்க்கு வந்ததை உளறியவன் போனை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறியிருந்தான்…
 
அதை இப்போது நினைத்து பார்த்து சிரித்தவன்…. ராட்சசி நம்மள பார்க்கவும் பயந்திட்டா போல… நாமளும் கதவை இப்படி பட்டுன்னு திறந்திருக்க கூடாதோ… ஏன் என் பொண்டாட்டி நான் அப்படித்தான் பார்ப்பேன்.. அவன் மனசாட்சியோடு சண்டை போட அடுத்த போன் வந்து அதை தடை செய்தது… போன் பேசி முடித்தவன் கதிரை பார்த்து… டேய் மாப்பிள்ள ஒரு குட்நியூஸ்?”.
 
கதிரும் சந்தோசப்பட்டபடி என்ன மாப்பிள்ள  குட்நியூஸ்…??”.
 
எங்க ஆபிஸ்ல கிளார்க் ஒருத்தன் வேலை பார்க்கிறான்…. ரொம்ப நல்ல பையன் அவனுக்கு வீட்டுல பொண்ணு பார்க்கிறதா சொன்னான்… நான் காயத்ரியை சொல்லவும் அவனுக்கு ரொம்ப சந்தோசம்….  அவங்க வீட்ல பேசிட்டு அவளையே கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டான்….??”
 
துரை பேச பேச அதுவரை சந்தோசமாக இருந்த கதிர்…இப்போது பேய் முழி முழிக்க ஆரம்பித்தான்…..
 
                                      இனி………..?????.

Advertisement