Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  18
 
கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் அவள் உதடு அவன் நெஞ்சில் பச்…என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது… அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக அழுத்த இப்போது அதே உணர்வு கனிக்கும் தோன்றியது….
ஏற்கனவே தடுமாறியதில் அவன் நெஞ்சில் முத்தம் பதித்துவிட்டோமே என்ற வெட்கத்தில் இருந்தவள்… இப்போது தான் விழாமல் இருப்பதற்காக துரை தன்னை பிடித்துவிட்டானோ என நினைத்து அவன் கையின் அழுத்தத்தில் கூச்சத்தில் நெளிய……. வெளியே மீனாட்சியின் குரல் இவர்களை சுயநினைவுக்கு கொண்டு வந்தது….
கனி அவனிடம் முகத்தை காட்டாமல் வெளியே ஓட…. தன் தலையை கோதியவன் உல்லாச மனநிலையோடு வெளியே வந்தான்… தன் மகன் மருமகளின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை கண்ட மீனாட்சி… தன் மகன் தன் மருமகளோடு சந்தோசத்துடன் வாழும் நாள் வெகுதூரத்தில் இல்லை  என்பதை உணர்ந்தவர் சந்தோசமாக தன் ஊருக்கு கிளம்பினார்….
 
வெளியில் கதிரின் காரில் ஹரிணி…ரம்யா…காயத்ரி அமர்ந்திருக்க மற்றவர்கள் துரையின் ஜீப்பில் ஏறியிருந்தனர்… துரைக்கு அருகில் கனி அமர துரை தன் ஜீப்பை கிளப்பியிருந்தான்… சிலுசிலுவென காற்று வீச அந்த காற்றைவிட துரையின் மனது ஜிவ்வென பறந்தது….
பக்கத்தில் இருந்த கனி துரையை பார்க்காமல் நேராகவே பார்த்திருக்க அவள் முகத்தில் இருந்த வெட்கம் அவள் மனது இன்னும் உள்ளே நடந்ததை மறக்கவில்லை என்பதை உணர்த்தவும்… இவனும் சீட்டியடித்தபடி தன் ஜீப்பில் இருந்த சிடியை போட….
 

           “ பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
                 காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
           ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
                  கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
            என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
                      என்றும் மறையாதே


             காட்டிக் கொடுக்கிறதே
                      கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
             காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
                      உன் விழியில் வழியும் பிரியங்களை
             பார்த்தே கடந்தேன் பகலிரவை
           உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
                     நானும் மழையானேன்
 
கமலின் காதல்பாட்டு ஓட….துரை கனியை திரும்பி பார்த்தவன்…. நானும்தான்டி உன்னை பார்த்த அன்னைக்கே பிளாட் ஆயிட்டேன்… நீ எப்ப என்பக்கம் உன் கருணை பார்வையை காட்டுவ….எப்ப..நான் உன்னோட காதல் மழையில் நனைய அந்த நினைவுகளோடு வண்டியை வேகப்படுத்த… அடுத்த ஒரு மணி நேரத்தில் துரையின் வீட்டில் இருந்தார்கள்……
 
 பெரியவீடு வெகுநாட்கள் பூட்டியே கிடந்ததால் மீனாட்சி… அவ்வப்போது வீட்டை சுத்தப்படுத்த ஆள்வைத்திருந்தார்… என்றாவது வரும்போது மீனாட்சி தக்க துணையோடு பாதுகாப்பாக தங்கிச் செல்வது உண்டு துரையும் இந்த வீட்டிற்கு தன் தாயோடு வந்துள்ளான்….
திருமணம் முடிந்து முதல் முதலாக வருவதால் ஆரத்தி எடுத்து துரையையும் கனியையும் வீட்டிற்குள் வரச் சொல்ல கனிக்கு இந்த வீடு ரொம்பவே பிடித்தது…. முன்னால் வராண்டா… நடுவில் பெரிய முற்றம் என பழமை மாறாமல் இருந்தது பெரிய அடுப்படி …கீழே மூன்று அறைகள் மேலே மச்சு அங்கு ஒரு அறை …
இரவுக்கு உணவை கொண்டு வந்திருந்ததால் அதை அடுப்படியில் வைத்தவர்கள் வீட்டை சுற்றிப்பார்க்க சற்று நேரத்தில் அந்த வீடு கலகலவென…. மாறியது அக்கா தங்கைகள் அனைவரும் காயத்ரியோடு சேர்ந்து அரட்டை அடிக்க கதிரும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்…
 
துரை அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் மாமா…. அத்தை அம்மாச்சியோடு தன்னுடைய பிறந்து வளர்ந்த கதையை கேட்டுக் கொண்டிருக்க ரொம்ப வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு ஒரு உயிர்ப்பு வந்தது போல இருந்தது மீனாட்சிக்கு……. தன் கணவர் இறந்த பிறகு இந்த வீட்டில் இருக்கமுடியாமல்தான் தன் தாய்வீட்டிற்கு சென்றிருந்தார்…
ஆனால் இன்று மகன் மருமளோடு… நினைக்கவே சந்தோசமாக தன் கணவரின் புகைப்படத்தை எடுத்து பார்க்க தன்னை அறியாமல் கண்ணீர் ஊற்றியது… தன் தாயின் கண்ணீரை கண்டவன் அவரின் கண்ணீரை துடைத்து அவரை அணைக்க..அப்போதுதான் அங்கு வந்த கனியும் தன்னை அறியாமல் அவர்களிடம் வந்திருந்தாள்… மீனாட்சி கனியையும் தன்னோடு அணைக்க துரையும் மறுபுறம் அணைத்திருந்தான்…
துரைக்கு தான் குடும்பத்தோடு இருப்பதாக தோன்றியது..தன் தந்தை தங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்ற…..கனியை இன்னும் நெருங்கியிருந்தான்….கனிக்குமே தன் நெஞ்சில் தன்னை அறியாமல் ஒரு ஆசுவாசம் பிறந்தது…
இத்தனை நாள் ஏனோ அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் நிம்மதியடைய இருவரின் அணைப்பையும் ரசித்திருந்தாள்….துரையின் அணைப்பில் பாசமும் அன்புமே தெரிந்தது தன் பொருளை தன் கைக்குள் பத்திரமாக பொத்தி வைத்துக் கொள்ளும் தன்மை தெரிய… தானும் அவனுடைய குடும்பமே என்ற எண்ணமே அவளுக்கு மனநிறைவையும் தனி மகிழ்ச்சியையும் தந்தது…
 
கனி இருவரின் அணைப்பில் இருந்து கொண்டு… தன் அத்தையை நிமிர்ந்து பார்த்தவள்… அத்தை இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாம அடிக்கடி இங்க வருவமா….??”
 
தன் தம்பி மகளின் கன்னத்தை வருடியவர்…. கண்டிப்பாத்தா… உங்க மாமாவுக்கும் இந்த வீடுன்னா உசிரு… ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கினதா சொல்லுவாங்க அதுனாலதான்தா நான் இந்த வீட்டை எதுவுமே மாத்தலை பெயிண்ட் மட்டும்தான் அடிச்சு அப்பப்ப பராமரிச்சு வைச்சுட்டேன்… இனி கண்டிப்பா நாம ஒவ்வொரு பொங்கலையும் இங்கயே வைச்சிருவோம்…
 துரை தன் தாயை பார்த்தவன் அம்மாவுக்கு இந்த வீட்டு இவ்வளவு பிடிக்கும்னா அப்ப இந்த வீட்ட விட்டு அங்க வர்ற அளவுக்கு இங்க உள்ளவங்க பிரச்சனை பண்ணியிருக்காங்க… அந்த அப்பாவின் சித்தப்பா மகனின் முகத்தை நினைத்து பல்லை கடித்தவன் அன்னைக்கு நம்ம அம்மாவ என்னன்ன சொன்னான்…. இந்த கேஸ் மட்டும் முடியட்டும் அவன நடுரோட்டுல நிறுத்தல என் பேரு துரையில்ல…..
 
கதிர் டேய் மாப்பிள்ள என்னடா உங்க வீட்டுக்கு வரவும் குடும்பமா ஒன்னு சேர்ந்துட்டிங்க…… நாங்களும் அங்க வரலாமா….??”
 
கதிரை எட்டி தன் பக்கத்தில் இழுத்த துரை நீங்க எல்லாரும் இல்லைனா என்னோட குடும்பம் முழுமையடையாதுடா….??”அவனை இறுக அணைக்க… மற்றவர்களும் ஒன்று சேர்ந்திருந்தார்கள்….
அப்பத்தா வந்து அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி சுற்றி செல்ல….. ஒரு அமைதியான தருணம்… அனைவரும் சந்தோசத்தை உள்வாங்க முத்துராமனுமே அக்கா இந்த வீட்டுக்கு வந்தவுடன ரொம்ப சந்தோசமா இருக்கா…. பாசமாக தன் அக்காவின் அருகில் போய் அமர்ந்து கொண்டார்….
 
நடுமுற்றத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டவர்கள்…..வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவராக படுக்கச் செல்ல பெண்பிள்ளைகள் நால்வர் மட்டும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்….
 
அப்பத்தா ஆத்தா கனி போங்கத்தா போய் படுங்க காலையில கொஞ்சம் வெள்ளன எந்திரிக்கனும்… அப்பத்தான் வெயில் வருறதுக்குள்ள கோவில்ல பொங்க வைச்சிரலாம் இல்லை வெயில் வந்தா ரொம்ப சிரமமா இருக்கும் போங்க நாளைக்கு ராத்திரிக்கு பேசிக்கிட்டு இருங்க…??”. அனைவரையும் படுக்க போகச் சொல்ல பெண்கள் மூவரும் ஒரு அறையில் படுத்தனர்… கனி துரையை ஒவ்வொரு அறையாக தேட….
 
மீனாட்சி கனி தம்பி மேல இருக்கிற மச்சு அறையில இருக்கான்…. பார்த்து போத்தா  படிக்கிட்ட கொஞ்சம் இருட்டா இருக்கும்…??”.
 
கனி அந்த மச்சு அறைக்கு போக துரை அந்த அறையில் தூங்கியிருந்தான்… கீழே இருந்த அறைகளை விட இந்த அறையில் கொஞ்சம் குளிருவதை போல இருக்கவும் கனி அங்கிருந்த மர அலமாரியை திறந்து பார்த்தவள் அங்கிருந்த போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு துரைக்கு அருகில் படுக்க கட்டில் அங்கிருந்ததைவிட இது சற்று சிறியது….
கனியும் உறங்கியிருக்க நடு இரவில் துரைக்கும் குளிர்வதை போல இருக்கவும் தூக்ககலக்கத்தில் போர்வை ஏதாவது இருக்கிறதா என கைகளால் துழாவ கனியின் போர்வை கைக்கு தட்டுப்படவும் அதை இழுத்து போர்த்திக் கொண்டான்….
விடியற்காலை நான்கு மணி இருக்கும் துரைக்கு விழிப்பு வர…. தன்னை யாரோ இறுக்கி அணைத்திருந்தாற்போல இருக்கவும் கண்விழித்து பார்த்தவன் விடிவிளக்கில் கனி அவன் கையில் தலைவைத்து  மார்பில் முகத்தை புதைத்து மற்றொரு கையால் குளிருக்கு இதமாக அவனுடைய இடுப்பில் கையை போட்டிருந்தாள்…
தூக்கக்கலக்கத்தில் இருவரும் அருகருகே வந்திருந்தனர்….  அந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்க தலை கலைந்து நேற்று இங்கு வரும்போது வைத்திருந்த மல்லிகைபூ காய்ந்து போயிருந்தது… தாலிச்செயின் வெளியில் வந்து கிடக்க… சேலையும் முன்பக்கம் ஒழுங்கில்லாமல் கிடந்தது… துரை அவளை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருக்க…
இப்போது ஒரு காலை எடுத்து அவன் கால் மேல் போட்டாள்….  இவன் இதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவளை இன்னும் இறுக்கி தன் முகத்தை அவள் அருகில் கொண்டு சென்று அவள் கன்னத்தில் முத்தமிட செல்ல….. .. அவள் செல்லில் இருந்து
 
     எவனோ ஒருவன் வாசிக்கிறான்
           இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
     தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
           அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

     கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
           கேட்பதை அவனோ அறியவில்லை
     காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
          அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
 
அலாரம் அடிக்க தூக்க கலக்கத்தில் தன் கையை தூக்கியவள் கைகளால் செல்போனை தேட… முத்தமிட கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் துரைக்கு பறிபோகவும்…. கோபத்தில் செல்போனை அவளிடம் எடுத்துக் கொடுத்திருந்தான்… அவள் அதை அணைத்துவிட்டு மறுபடியும் அவனை அணைத்து தன் விட்ட தூக்கத்தை தொடர……
பரவாயில்லயே பொண்டாட்டிய கிஸ் பண்ண இன்னொரு சான்ஸ் கிடைக்கும்போலவே…. மீண்டும் கிட்டே வர…. இந்த முறை மீனாட்சி வந்து கதவை தட்டியிருந்தார்…. அவள் அருகே கொண்டு சென்ற முகத்தை அப்படியே பொத்தென்று தலகாணியில் வைக்க….. இந்த முறை கனி தன் தூக்கத்தில் இருந்து விழித்திருந்தாள்…..
 
இதோ வரேன் அத்தை…. முழிச்சிட்டேன்…??”.
 
சரித்தா…. கீழ வா..??”. என்றபடி அவர் கீழே இறங்க…. இப்போதுதான் கவனித்தாள் தான் துரையின் மேல் கையையும் காலயும் போட்டிருப்பதை சட்டென எடுத்தவள் பதறிப்போய் எழுந்து அமர்ந்து துரையின் முகத்தை உற்று பார்க்க
அவன் தூங்குவது போல இருக்கவும் மூச்சை இழுத்து விட்டவள்….நல்லவேளை தூங்குறாங்க??” என்றபடி மெதுவாக அவனை விட்டு எழுந்து தன் தலையை கொண்டையாக போட்டபடி தன் சேலையை ஒழுங்கு செய்ய அந்த காதல் கள்வனோ தன் மனைவியை …. அவளின் செய்கைகளை ரசித்துக் கொண்டிருந்தான்……
ரூமின் பாதிவரை சென்றவள் இறங்காமல் மீண்டும் திரும்பி வந்து போர்வையை எடுத்து அவனுக்கு ஒழுங்காக போர்த்திவிட்டு செல்ல….. துரைக்கு அப்போதே தன் மனைவியின் கையைபிடித்து தன்பக்கம் இழுக்க வேண்டும் போல இருந்தது.,… இந்த வீடு நமக்கு நல்ல ராசிபோல… பேசாம அங்கயும் இந்த மாதிரி சின்ன கட்டில வாங்கி போட்டுருவோமா… தன் மனதில் பிளான் போட……..
 
காலை ஆறு மணிக்கெல்லாம் அனைவரும் கிளம்பியிருக்க கனியின் சேலையை பார்த்தவன்…. நல்ல பச்சையும் ஊதாவும் கலந்த காட்டன் சில்க் சேலை கட்டியிருந்தாள்….
இந்த சேலை அன்னைக்கு இவ வாங்கலையே….. கோபம் புஸ்புஸ்ஸென்று வர….. அவளிடம் சென்றவன்… இந்த சேலை யாரு வாங்கி குடுத்தா…??” நாம அன்னைக்கு உனக்கு வேண்டியதை எடுத்துக்கோன்னு சொன்னப்ப எடுத்துக்காம இப்ப யாரோ எடுத்து குடுத்தத கட்டியிருக்கா……
 
பக்கத்தில் இருந்த மீனாட்சி துரை கேட்டதை கேட்கவும் நான்தான்டா வாங்கி குடுத்தேன்… கடைக்கு கூட்டிட்டு போய் நல்ல சேலையை வாங்கி குடுடான்னா…. என்னமோ வீட்டுக்கு கட்டுற மாதிரி நாலு சேலையை வாங்கி குடுத்திருக்க…. நகையும் அது என்னடா பில்லு போல மெலிசா…. நல்ல தடிமனா வாங்கிகுடுப்பானா…. கஞ்சபய கஞ்சபய…
உங்க அப்பாவெல்லாம் வெளியில போனா எனக்கு சேலையோ நகையோ வாங்காம வரவே மாட்டாங்க…. புது புது டிசைனா வாங்கி வாங்கி குடுப்பாரு.,…. நீயும் இருக்கியே …..  நல்லவேளை நம்ம செட்டியார் கடையில இருந்து நல்ல நல்ல டிசைனா குடுத்துவிடச்சொல்லி வாங்கினேன்….??”
 
 

Advertisement