Advertisement

*26*

நான் உன்ன சேந்திடும் நேரத்துல, நம்

தூரமும் ஓடுமே தூரத்துல!

என்கிட்ட இருக்கும் உசுரையும் தான், 

இப்போதே உனக்கு தர வாரனே!!!

சென்னை மாநகரின் பிரபலமான அந்த உயர்தர ஹோட்டல் இரவு நேர விளக்குகளால் மின்னிக்கொண்டிருந்தது. கார் பார்க்கிங்கில் நிறுத்த இடமின்றி சாலையோரங்களிலும் பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. நேரம் செல்ல செல்ல, விருந்தினர் கூட்டம் அலைமோதியது. வருபவர்களிடம்  ‘பார்ட்டி ஹால் முதல் தளத்தில் உள்ளது என சொல்வதற்கே நம் இனியனின் ‘நால்வர் படை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 

பலவண்ண செயற்கை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தர்மக்கோல் பலகையில் “திருமண வரவேற்ப்பு என எழுதப்பட்டு, கீழே தமிழில், “இன்பநிலா இதழாளர்,  இனியன் இளஞ்செழியன் டி.எஸ்.பி என பொறிக்கப்பட்டிருந்தது. அதன் எதிரே, மற்றொரு பலகை சிவப்பு நிற பூக்களால் ஹார்ட்டின் வடிவத்தில் அமைக்கப்பட்டு “நிச்சயதார்த்த விழா என இருந்தது.  

அப்போது வந்த காரில் இருந்து இறங்கியவரை வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார் குருநாதன். 

“வாங்க கமிஷ்னர்! இருகரம் குவித்து உற்சாகமாய் வணக்கம் சொல்லிட, தேவசகாயம் அவரை உரிமையாய் முறைத்தார். 

“நான் கமிஷனரா வரலை எடிட்டரே அவரது மறுமொழியில் சத்தமாய் சிரித்தார் குருநாதன். 

“இனியன் வெட்டிங் ரிசெப்ஷனுக்கு வந்தா, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்குறீங்களே குருநாத்? நியாயமா? நிச்சயதார்த்த பலகையை பார்த்து விளையாட்டாய் மொழிந்தார் தேவசகாயம்.

“ஹாஹா! என்ன செய்யுறது? மாப்பிளைக்கு அடுத்த வாரமே ட்ரைனிங் ஜாயின் பண்ணனும்!! அதான், இப்போதைக்கு நிச்சயதார்த்தம் பண்ணிட்டு திரும்பி வந்ததும் கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு!

தேவசகாயம், “கரெக்ட்டு தான்! மாப்பிளை போலிஸ், மக வக்கீல், அதுவும் அந்த அமைச்சர் கேஸ்க்கு அப்புறம் உங்க பொண்ணுக்கு செம்ம மவுசு! பொறாமையாய் இன்றி பெருமையாகவே சொன்னார் தேவசகாயம்!

“எல்லாம் கடவுள் சித்தம்! அம்மா இல்லாத பொண்ணு, நல்ல இடத்துல கட்டிக்குடுத்து, அவ நல்லா வாழறதை பார்க்கனுமேன்னு எப்பவும் மனசுல ஒரு தகப்பனா கவலை இருந்துட்டே இருந்தது! இப்போ அந்த கவலையே இல்ல, என்னை விட அந்த குடும்பம் அவளை நல்லா பார்த்துபாங்க!! துளிர்த்த கண்ணீரை ஆனந்தமாய் சுண்டிவிட்டவரை ஆதரவாய் பிடித்துக்கொண்டார் தேவசகாயம். 

பேசிக்கொண்டே பார்ட்டி ஹாலை அடைந்திருந்தனர் இருவரும். விருந்தினர்களால் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்த இடத்தில் வட்ட வட்டமாய் அழகுற அடுக்கப்பட்டிருந்த கதிரைகளும் போதவில்லை! வந்திருந்தவர்களில் இனியன் மற்றும் அதியனின் ஆட்களே அதிகம். சொந்தங்கள் சொற்பமே! 

ஆனால், நடுநாயகமாய் இருந்த மேடையில் ராஜாராணியை நிற்க வேண்டிய இருவரையுமே காணவில்லை! பஃபே முறையில் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த உணவு பதார்த்தங்களை விரும்பி உண்படி சிறு கூட்டம் நின்றுக்கொண்டிருக்க, தேவசகாயம், “ஹீரோ ஹீரோயினை காணோமே? என்றார். குருநாதனும் அவர்களை தான் தேடிக்கொண்டிருந்தார் போலும். 

வேணி அப்போது கண்ணில் பட, அவரை அறிமுகப்படுத்திவைத்த குருநாதன், தம்பதிகள் எங்கே என விசாரிக்க, 

“கருணை இல்லத்துக்கு இன்னைய ராத்திரி சாப்பாடு நம்ம பொறுப்புன்னு சொல்லிருந்தோம்ல? அதுக்கு தான் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு இருக்காங்க! நீங்க இருங்க அழைச்சுட்டு வரேன் என்று மறைந்தார்.

வெண்ணிற சட்டை கருநீல நிற பேன்ட் என டக்கின் செய்து மரூன் நிற ப்லேசரில் இடுப்பில் கைவைத்துக்கொண்டு முதுகு காட்டி நின்றிருந்த மகனை, தோள் தட்டி திருப்பினார் கிருஷ்ணவேணி. 

சற்றே முகம் களைத்திருந்தாலும், அவனது அக்மார்க் பளீச் புன்னகையில் வசீகரித்தான் இனியன். 

“என்னம்மா?

“மாப்பிளையா லட்சணமா மேடைல நிக்குறதை விட்டுட்டு இங்க வந்து வேலை பார்த்துட்டு இருக்க! பாரு ஏசில கூட எப்படி வேர்க்குதுன்னு வியர்க்காத அவன் முகத்தை தன் புடவை தலைப்பால் ஒற்றிஎடுத்தார் வேணி. 

“சப்பாத்தி மட்டும் எண்ணி வைக்கனும்மா! பேக் பண்ணிட்டா நிம்மதியா இருக்கும் எனக்கு! என்ற தன் மகனை பெரிதுவக்க பார்த்தார் வேணி. இருப்பினும் மனம்கேளாமல், “இதெல்லாம் நீதான் செய்யணுமா? அந்த வெட்டிப்பய கோகுலு எங்க? என்றார்.

அதுவரை தரையில் அமர்ந்து சப்பாத்திகளை எண்ணி, அடுக்கிகொண்டிருந்த கோகுல், பின்னடிக்கும் ஸ்டேப்ளராய் படக்கென திரும்பினான்.

‘ஐயய்யோ இங்கதான் இருக்கான்! வேணி அவனை கண்டதும் மெலிதாய் ஜர்க்கானாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “அதான் நம்ம கோகுலு இருக்குதே!? அப்புறம் என்ன கவலை? வேலையெல்லாம் அவனே பார்த்துப்பான்! நீ வா, கமிஷனர் சாரு வந்துருக்காரு என்று நாசூக்காய் நகர்ந்துவிட, கோகுலின் பின்னே ‘டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்டடொய் டொன்ட்டடொய் என யாரோ வயலின் வாசித்தனர்.    

“ஏய் தம்பி, இதை சீக்கிரமா அடுக்கிட்டு போய் வண்டில ஏத்துப்பா, வேலை கடக்கு போறபோக்கில்  கேட்டரிங் ஆள் அவனுக்கு உத்தரவிட, உதறிக்கொண்டு எழுந்தான் கோகுல்.

“யோவ் நான் ஒன்னும் இங்க வேலைக்கு வந்தவன் இல்ல! இது எங்க வீட்டு கல்யாணம் தன்னை வேலைக்கு வந்தவன் என நினைத்து அவன் சொல்லுவதாய் எண்ணி, கோகுல் தன்னை யாரென்று அவனுக்கு சொல்ல, “உங்க வீட்டு கல்யாணம் தான், ஆனா உன் கல்யாணம் இல்லல? வந்து வேலைய பாரு! நூறு சப்பாத்தியை ஒரு மணி நேரமா எண்ணிட்டு இருக்கான்!! இறுதியை முனகிக்கொண்டே நகர்ந்து போனான் அவன். 

‘நம்மளை பத்தி எங்கயும் விசாரிச்சுருப்பானோ? சிந்தித்த கோகுல், “ஹும்! கண்டிப்பா விசாரிச்சுருப்பான்!! குடுக்குற மரியாதைலையே தெரியுது! வாய்விட்டு சொல்ல, “சப்பாத்தியை வண்டில ஏத்தியாச்சா? என எங்கிருந்தோ வந்த குரலில், “இதோ ஏத்திட்டேன் என குண்டானை தூக்கிக்கொண்டு ஓடினான் கோகுல்.

இனியன் ஹாலிற்குள் செல்ல செல்ல, வழியில் கண்ணில் பட்டோறிடமெல்லாம் 

“வாங்க வாங்க! 

“சாப்பிட்டாச்சா?

 “கிளம்பிட கூடாது, நிச்சயம் இருக்கு இன்னும்

 “அடடே நீங்களா?

 “இதான் வர நேரமா?

“நிலா பொண்ணை ரெடி பண்ணிட்டு இருக்கா!! பேச்சுக்கள் இருந்தாலும் அவன் தன் நடையை நிறுத்தாமல் இன்முகமாய் அவர்களை கடந்து வந்து கமிஷ்னர் கரம் பற்றி குலுக்கினான்.

“வெல்கம் சர்! எங்க வேலை இருக்குன்னு வராம போய்டுவீங்களோன்னு நினச்சேன்! இனியனின் கரம் மேல் தன் மறுகரத்தை வைத்து அன்பாய் அழுத்திய தேவசகாயம், “எத்தனை பேர்கிட்ட இருந்து அழைப்பு வந்தது தெரியுமா?! நீங்க, குருநாத், நிலா, கோகுல், அதியன் எல்லாரும் தனிதனியா அழைச்சுட்டாங்க!!! கம்பீரமான சிரிப்போடு அவர் நிறுத்த, மென்னகையோடு, “அங்கிள் உங்களை அதியன் கூப்பிட்டான் என அங்கிருந்து குருநாத்தை அப்புறப்படுத்தினான் இனியன்.

அவர் சென்றதும், “எப்போ வரீங்க இனியன்? என்றார் தேவசகாயம். இலகுவான முகம் இறுக்கமாய் மாறியிருந்தது.

“இன்னும் ஒருமணி நேரத்துல பங்க்ஷன் முடிஞ்சுடும்! உடனே கிளம்பிடுவேன் என்றான் இனியன். இருவர் முகமும் சிரிப்பை துறந்து தீவிரமானது.

“விழா முடியட்டும், நான் பார்கிங்க்ல வெயிட் பண்றேன் என்ற கமிஷ்னரை உணவுண்ண அனுப்பிவிட்டு மேற்கொண்ட வேலைகளை கவனிக்கலானான் இனியன்.

மேடையில் இருக்கும் தட்டு வரிசைகள் எல்லாம் சரியாய் இருக்கிறதா என சரிப்பார்த்துக்கொண்டிருந்தார் தேவி. நிலாவின் தரிசனம் அப்போது வரை இனியனுக்கு கிடைக்கவில்லை. நிவேதாவை அலங்காரம் செய்வதாய் சொல்லி அறைக்குள் போனவள் இன்னமும் வந்தபாடில்லை. 

‘சரி, அதியனை கவனிப்போம்!! என தம்பியின் அறைக்குள் செல்ல, அவன் பட்டு வேஷ்டி சகிதம் அமர்ந்து கையில் ஒற்றை செவ்விதழ் ரோஜாவை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான். இனியன் வந்த அரவம் தெரிந்ததும் அதை தன் முதுகின் பின் மறைத்தவனை கண்டு கள்ளசிரிப்பை உதிர்த்தாலும், அதியனை சீண்டாமல், “பங்க்ஷன் ஆரம்பிக்க போதுடா, சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன், ரெடி தானே? என கேட்டுக்கொண்டான்.

அதியனோ, “பதினைஞ்சு நாள் ரிமேன்ட் இன்னையோட முடியுது, நாளைக்கு காலைல ஜெயானந்தனை கோர்ட்டுல நிறுத்துவாங்க! எப்படியும் இந்த கேஸை ஒன்னும் இல்லாம செய்யுறதுக்கு இந்நேரம் வழி கண்டுபுடிச்சுருப்பான்! என்னடா செய்யுறது? கவலை அவனுக்கு மட்டுமே இருந்தது. இனியனோ அதை பற்றிய நினைவு கூட இல்லாதவனாய், “டேய், இன்னும் பத்து நிமிசத்துல நிச்சயத்தை வச்சுக்கிட்டு எதை பற்றி யோசிக்குற நீ? நிவேதா உன்னை கொல்லபோறா, ஹாஹா அதியனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றுவிட்டான். 

“நிச்சய பத்திரிக்கை வாசிக்கலாமா? பொதுவான அறிவிப்போடு அதியன்நெடுமாறனுக்கும், நிவேதாவுக்கும் பெரியோர்களால் மெத்த சந்தோசத்தோடு நிச்சய தாம்பூலம் மாற்றப்பட்டது. 

இனியனின் அருகே அடக்க ஒடுக்கமாய் வந்து நின்ற நிலாவை தன் கடைக்கண்ணால் முறைத்தான் இனியன். அவன் முறைப்பது தெரிந்தாலும் அவன் புறம் திரும்பாமல், ‘இங்க என்ன முறைப்பு? அங்க பாரு! என முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு மொழிந்தாள் நிலா. பொய் கோபமும் சலிப்பும் கலந்த பெருமூச்சை வெளியிட்டவனுக்கு, மனைவியாய் அவள் தன்னருகே நிற்பதே அத்தனை பெருமிதமாய் இருந்தது. ‘இவள் என்னவள்! என கத்தி சொல்ல வேண்டும் போல, அவளை தோள் கொண்டு அணைத்தபடி நிற்க வேண்டும் என்பதை போல இன்னும் என்னென்னவோ அவனுக்குள்!!! 

நிட்சயமோதிரத்தை நிவேதா அதியனுக்கு அணிவிக்க, தன் கையில் இருந்த மோதிரத்தை நிவேதாக்கு அணிவிக்கும் முன், அந்த செவ்விதழ் ரோஜாவை கையில் எடுத்தான் அதியன். 

குழுமியிருந்தோரின் கவனமெல்லாம் ஆர்வத்துடன் மேடையை நோக்கின.  வேலை முடிந்து வீடு திரும்பும் தந்தை தன் பையை திறக்கும்போது, தனக்காக எதுவும் வாங்கி வந்திருப்பாரா என ஆர்வமாய் எட்டிப்பார்க்கும் குழந்தையென நிவேதா ஒருவித எதிர்பார்ப்போடு அதியனை பார்த்திருந்தாள். 

ஒரு காலை மடக்கி முட்டியிட்டு அவள் முன்னே அமர்ந்தவன், “உன்னால தான் இந்த கேஸ்ல நாங்க ஜெயிச்சோம்! உன்னை குறைவா பேசுனதுக்கு என்னை மன்னிச்சுடு என்றான் இன்முகமாய். அதிர்ந்து விழித்த நிவேதாவிடம்  ‘ஓகே வா? என கண் சிமிட்டி கேட்ட அதியனை, ‘எதை சொல்ல வேண்டிய நேரத்துல எதை சொல்றான் பாரு!! லூசு மானசீகமாய் அவனை வருத்தவள் சங்கோஜமாய் நின்றிருந்தாள். 

இருவருக்குள்ளும் நடந்த ‘சவால் ஒருவரும் அறியாததானதால், பெரியவர்கள் அவன் கேட்ட மன்னிப்பில் ‘என்னவோ ஏதோ என பதட்டமாக,  நிவேதா நொடியில் அப்பேச்சிற்க்கு முடிவு கட்ட எண்ணினாள்.  

“இந்த கேஸ்ல நான் ஒரு பொம்மையா தான் இருந்தேன்! இனியன் மாமா சாவி குடுக்க அதற்கேத்த மாறி நடந்துகிட்டேன்! நிலா அக்கா மட்டும் அந்த ‘போனை எடுத்துட்டு வந்துருக்கலன்னா இது எதுமே சாத்தியாமாகிருக்காது! சத்தமாய் சொன்னவள், பின்னே குரல் தாழ்த்தி, “மானத்தை வாங்காம ஒழுங்கா எழுந்துரிங்க என்றாள் மிரட்டலாய்.

வேணி, “ஏய் என்னடா செய்யுற எல்லார் முன்னாடியும்? நல்லாய் இருக்கும் பிள்ளைகள் காதல், திருமணம் என வரும்போது மட்டும் புரியாத புதிராய் நடந்துகொள்வது விநோதமாய் போனது அவருக்கு.

அப்போதும் எழுந்துக்கொள்ளாத அதியன் கையில் இருந்த ரோஜாவை அவளிடம் நீட்டி, “உன்கிட்ட நான் இதுவரை காதலும் சொல்லல, கல்யாணத்துக்கு விருப்பமும் கேக்கல! பெரியவங்ககிட்ட என் விருப்பதை சொன்னேன், நிச்சயம் வரைக்கும் வந்துட்டோம்! இப்போ எல்லார் முன்னாடியும் உன் விருப்பத்தை தெரிஞ்சுக்கனும்ன்னு தோணுது! என்னை கல்யாணம் செய்துக்க சம்மதமா? இந்த இரு வாரத்தில் இரு வீட்டினரிடமும் பேசி சம்மதம் வாங்கி, அண்ணனின் துணையோடு நிச்சயம் வரையில் கொண்டு வந்திருந்த அதியன், ஒருமுறையேனும் நிவேதாவிடம் இதுகுறித்து பேசியிருக்கவில்லை! நிவேதா அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லையோ, அல்லது சிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என இருந்தாலோ? அதியனுக்கு மறுப்பு சொல்ல முடியாத இந்நிலையிலாவது அவள்  விருப்பத்தை கேட்க வேண்டும் என தோன்றியது. அவனது வெளிப்படையான கேள்வியில் சற்றே தினறிபோனாள் நிவேதா.

மஞ்சள் நிற பட்டில் மங்கையவள் நாணம் கொண்ட மாலையாய் செந்நிறம் கொண்டிட, அவள் உணர்வுகளை கிரகித்தவன், “வார்த்தைல சொல்லலன்னாலும் நான் கொடுக்குற இந்த ரோஜாவை வாங்கிகிட்டாலே அதை உன் சம்மதமா நான் எடுத்துப்பேன்!! என்றான். 

மறுகணம் தயங்காமல் தன் தாமரை மொட்டு கைகளால் ரோஜாவை வாங்கிக்கொண்டாள். 

காதல் நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் ஆரவாரமாய் ‘ஓஓஓவென ஆர்ப்பரித்தனர். நிச்சய மோதிரம் மாற்றப்பட்ட பின், புகைப்பட படலம் நடந்தது. 

நிறைந்த புன்னகையுடன் அருகே நிற்கும் தன் கணவனை கைமுஸ்டியால் குத்தினாள் இன்பநிலா. எதிர்பாராதா அடியில் ‘உப்ப் என வலியை உள்தள்ளிய இனியன், “என்னடி? என்றான்.

“உன் தம்பி பாரு, ரிங் போடும்போது எவ்ளோ ரொமான்டிக்கா பேசுனான்! நீயும் இருக்கியே!? தாலி கட்டும்போது ஏதாது சொன்னியா? பெண்களுக்கேயான இயல்பான குணம், ஆண்களை சீண்டிவிட்டு அவர்கள் வாயை பிடுங்குவது! அதில் தான் எத்தனை நிம்மதி!!?

இனியன் நிலாவை ஏற இறங்க பார்த்தான். 

“தாலிகட்டும்போது நீ என்ன ஒரு லுக் விட்ட தெரியுமா? அதை பார்த்தும் உனக்கு நான் தைரியமா தாலி கட்டுனதே வரலாறு!! இதுல ரொமான்ஸு வேற கேக்குது உனக்கு அவள் முகவாயிலேயே மடக்கிய கரத்தால் குத்தினான் இனியன். 

பின் அவனே அவள் காதோரம் குனிந்து ஹஸ்க்கி வாய்சில், “எல்லாத்துக்கும் சேர்ந்து இன்னைக்கு நைட் காட்றேன்! ரொமேன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! என்றிட, ‘ம்கும் என உதடு சுளித்து திரும்பிக்கொண்டாள் நிலா. ஆனாலும் வெட்க பூச்சு அவள் கன்னகதுப்பை சிவக்க செய்தது. 

விழா நல்லவிதமாய் முடிந்து வந்தவர்கள் எல்லாம் விடைபெற்றுக்கொண்டு ஒவ்வொருவராய் செல்ல, முடிவில் காரணதாரிகளும் கிளம்பினர். இனியன் அங்கிருந்து நழுவி வெளியே சென்றான். சொன்னபடி கார் பார்கிங்கில் காத்திருந்த தேவசகாயத்துடன் இணைந்துகொள்ள, அவர் கார் அவ்விடம் விட்டு மறைந்தது. கிருஷ்ணவேணி தன் மருமகளை அழைத்து, “இந்த சாவியை புடி, இன்னைக்கு இங்கயே தங்கிக்கோங்க! நாங்க எல்லாம் கிளம்புறோம் என்றார். 

இரண்டாம் முதலிரவுக்கான ஏற்பாடு என்பதை அறியாத அளவு குழந்தை அல்லவே அவள்! உடனே ‘சரி என தலையை உருட்டினாள். 

அதியன், “அம்மா, எனக்கும் ஒரு சாவி குடு! டையர்டா இருக்கு, நானும் நிவியும் இங்கயே தங்கிக்குறோம்! என்றதும், “உதை படுவடா, விவஸ்த்தகெட்டவனே! ஒழுங்கா போ வீட்டுக்கு! ஆளுதான் வளர்ந்துருக்கான்?! அவன் முதுகை பிடித்து முன்னாள் தள்ளிக்கொண்டு சென்றார் வேணி. 

தேவி, நிவேதா, குருநாத் என அனைவரும் அவளிடம் விடைபெற்று சென்றனர். 

வேலையெல்லாம் முடிந்ததும், கிளம்பும்முன், “என்னடா இது? எல்லாருக்கும் ஆள் கிடைக்குது, நமக்கு ஒன்னும் நடக்க மாட்டேங்குதே!!? என்று ஏக்கமாய் கண்களால் அலசிக்கொண்டிருந்தான் கோகுல்.  அப்போது, நால்வர்படையின் ஒரே பெண்ணான ஐஷூ அவன் கண்ணில் பட, “இந்த பொண்ணு சிங்கிளா தான் இருக்கும், நம்ம மன்மதகலையை யூஸ் பண்ணி மடக்கிடலாமா? என்று யோசிக்க, மறுநொடி தைரியமாய், கருணை இல்லத்துக்கு அனுப்ப வேண்டிய அனைத்தும் சரியாய் உள்ளதா என சரி பார்த்துக்கொண்டிருந்த ஐஷூவை அணுகினான் கோகுல்.

‘நம்ம பேசுற ஸ்டைல்ல ‘நீதான் எனக்கு வேணும்ன்னு இந்த பொண்ணு கதறனும்! என சொல்லிக்கொண்டான்.  

எச்சில் கூட்டி விழுங்கி, சதி செய்த தொண்டையை உறுமி,  “ஹய்! என்றான்.  இனியனின் உறவு என்பதால் இன்முகமாகவே ‘ஹெலோ என்றாள். 

“பேரென்ன? அவனது அடுத்த கேள்வியில், ‘பேர் கூடவா தெரியாது? என தோன்றினாலும், “ஐஷூ என்றாள் அவள்.

கோகுல், “ஷூ, செருப்புன்லாமா பேரு வைக்குறாய்ங்க? என்றதும், செய்துக்கொண்டிருந்த வேலையும், அவன் மீதிருந்த சிறு மரியாதையும் நின்று போயிருந்தது. 

இழுத்து பிடித்த நன்முகத்தோடு, “ஐஸ்வரியா என்றாள்.

அவனோ, “வரியா? என்றிட, கையில் இருந்த குறிப்பேடை தூக்கி போட்டுவிட்டு, “ஆர் யூ மேட்!! டோன்ட் யூ ஹேவ்…..** என காலியான நெகிலிப்பையை கசக்கிவிட்டதை போல கத்த தொடங்கியவளிடம், “டவுட்டு கேட்டா, ஒன்னு முடியும்ன்னு சொல்லு, இல்லனா முடியாதுன்னு சொல்லு, அதவிட்டுட்டு டஷ்ஷு புஷ்ஹுன்னு! என்று சொல்லிவிட்டு ஓடியே விட்டான் கோகுல்.

‘என்னடா கோகுலு, ரெண்டு கேள்வி கேட்டதுக்கே காரி துப்புற லெவல்ல போய்ட்டா? இன்னும் பயிற்சி வேண்டுமோ!? மனதோடு புலம்பியவன், ‘அந்த புள்ள நான் பேசுனதை பாஸ் கிட்ட சொல்லிட்டா என்னடா செய்யுறது? கவலையை புறந்தள்ளி, இனியனை எண்ணி ஐயம் சூழ்ந்தது. 

ஆனால் அடுத்த கணமே, “கேட்டா, என் தங்கச்சி கிட்ட நான் பேசுனேன்னு சொல்லிட்டா போச்சு!! காதலியாக்க நினைத்தவளை தங்கையாக்கும் முடிவுக்கு வந்த பின் தான் ‘ஷப்பாஆ என நிம்மதியானான்.

‘தங்கச்சியா? ச்சை! இவனுக்கு போய் அம்பு விட்டேன் பாரு! என் புத்திய….!!!? என்று மன்மதன் மனதுடைந்து அரை நாள் விடுப்பில் வீடு போய் சேர்ந்தான்.              

தங்களுக்கென புக் செய்திருந்த அறைக்கு சென்ற நிலா, குளித்துமுடித்து இலகுவான ஆடையாக அணிந்துகொண்டாள். எல்லோருக்கும் பணம் செட்டில் செய்துவிட்டு வருவதாக சொன்ன இனியன் இன்னமும் வரவில்லை. அறையில் குறுக்கும் நெடுக்கும் சில நொடிகள் நடந்தாள். நேரம் யானை போல அசைந்தது. 

‘எங்க போய் தொலஞ்சான்னு தெரியல!! இவ்ளோ நாளும் காக்க வச்சான், இன்னைக்காது நேரமா வரலாம்ல? 

“நைட் வந்து எல்லாம் காட்றேன்னு, வெட்டி பில்ட் அப் குடுத்துட்டு போய்ட்டான்!! லூசு புருஷன்  இனியனுக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓட, திருமணத்தன்று வராமல் நிலா காக்க வைத்ததுக்கான பழிவாங்கலாய் அமைந்தது இன்று இனியன் வராமல் அவளை ஏங்க வைப்பது!

பகலென ஒளிபரப்பிக்கொண்டிருந்த மின்விளக்கை அணைத்துவிட்டு விடிவிளக்கை ஒளிரவிட்டவள், அங்கிருந்த குஷன் சேரில் காலை மடக்கி சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள். ‘அவள் வருவாளா? அவள் வருவாளா? என்று அன்று இனியன் பாடியது, இப்போது, ‘அவன் வருவானா? அவன் வருவானா? என மாறிப்போனது.

இவர்கள் இணையும் முன்னே பொறுமையற்ற நேரமுட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து போனது. உறக்கம் கண்களை சுழற்ற அப்படியே நித்திரைக்கு சென்றிருந்தாள் நிலா. இணைந்திருந்த நேரமுட்கள் மனமின்றி பிரிந்து சென்றபோது, தன் இணையை காண, மெல்ல கதவை திறந்தான் இனியன். 

கலைந்த முடி முகத்தில் ஆட, மாசு மறுவற்ற தன் நிலவை சில நொடிகள் நின்று பார்த்தான். கசங்கி, அழுக்காகிருந்த தன்னை சுத்தப்படுத்த விரைந்து குளியலறைக்குள் சென்றவன், அரைமணியில் இரவு உடையோடு அவளருகே சென்றான். 

அவளை எப்படி அணுகலாம்? என விதவிதமாய் யோசித்துவிட்டு, இறுதியாய்  குஷன் சேரோடு அவளை தன் கைகளால் அணைத்துக்கொண்ட இனியன், அவள் முகத்தருகே நெருங்கி, அவளை தொல்லை செய்த சிகையை மெல்ல ஊதி தள்ளினான். முகத்தில் பட்ட சில்லென்ற காற்றில் கொஞ்சமாய் சிணுங்கிய நிலாவின் கெட்டிக்கன்னத்தில் “உம்ம்ம்ஆஆ அழுந்த முத்தமிட்டான்.

உறக்கம் கலைந்தவள் மிக நெருக்கத்தில் அவனை கண்டதும், உடனே நேரத்தை தான் பார்த்தாள். மணி ஒன்றை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. 

“எங்கடா போன இவ்ளோ நேரமா? பொண்டாட்டியை தனியா விட்டுட்டு போயிருக்கோமேன்னு அக்கறை இருக்கா? இன்னும் சொல்ல வந்த வார்த்தைகளை வெளியிட நாணம் தடுக்க, வாய்க்குள்ளே முனகிக்கொண்டு சிறுக்குழந்தையென முகம் சுழித்தவளை அப்படியே கைகளில் அள்ளிகொண்டான் இனியன்.

“விடு விடு விடு வீம்புக்காக பேசியவள் அவனிடம் இருந்து திமிரவும் இல்லை, அவள் சொல்வதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவும் இல்லை.  மெத்தையில் இறக்கிவிட்ட பின், “இப்ப சொல்லுங்க நிலாகுட்டி என்று அவளை அணைத்தபடி முகம் பார்த்தான் இனியன்.

“உனக்கு என்மேல ஆசையே இல்ல அத்தூ!! முகம் சுருங்கி, உதடு துடிக்க தொடங்க, “அச்சச்சோ! என் நிலாகுட்டி மேல எனக்கு ஆசை இல்லாம போகுமா? அவள் நெற்றிமுட்டி செல்லம் கொஞ்சினான் இனியன்.

“போ, உனக்கு ஆசையே இல்ல, ஆசை இருந்துருந்தா இவ்ளோ நாள் சும்மா இருந்துருப்பியா என்ன? இன்னைக்கு எதுக்கு நம்மளை இங்கயே இருக்க சொன்னாங்க? உனக்கு ஆசை இருந்துருந்தா எங்கயோ ஊர் சுத்திட்டு இவ்ளோ லேட்டா வந்துருப்பியா? சிறு விசும்பலோடு காரணங்களை அவள் அடுக்கிக்கொண்டே போக, அவள் இதழின் மீது விரல் வைத்து, ‘உஸ்ஸ் என்றான் இனியன். 

“ஆல்ரெடி லேட்! இதுக்குமேல நான் டைம் வேஸ்ட் பண்றமாறி இல்ல! காலைல பேசுவோம்! இப்போ வேற மாறி பேசுவோம்!!! பேச்சை நிறுத்தியவன், ஒருவித வேகத்தோடு அவள் கழுத்தடியில் முகம் புதைக்க, கிறங்கி போனாள் நிலா. கழுத்தில் இருந்து முத்த ஊர்வலத்தை தொடங்கியவன், மெல்ல மெல்ல மேலேறி அவன் முகம் முழுக்க செல்ல, இம்மி இடமின்றி முடித்தபின், அவனுக்கு பிடித்தமான அவள் இதழ்களில் தன் வேகத்தை கூட்டினான்.

அவன் பின்னதலையில் விரல்கோர்த்து அவனுக்கு இணையாய் அவளும் போட்டிபோட, கால நேர கணக்கின்றி காதலில் கரைந்திட்ட இதழ்யுத்தம், இழந்த நாட்களை ஈடுகட்டும் வேகத்தோடு பசியாறிக்கொண்டிருன்தது. மிருதுவான இதழ், வலுவிழந்து சுவைமாறியபோது, அதை மனமின்றி விடுவித்தான் இனியன். 

அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை நிமிர்த்தி நெற்றியோடு அழுந்த முத்தமிட்டு “இதழி… என்ற இனியனின் குரல் அவள் உயிரை  ஊடுருவியது. எப்போதும் தோன்றும் சிலிர்ப்பு, அவளை தன்னை மறக்க செய்ய,  ‘ம்ம்ம் என்றவளின் கண்களில் அழுந்தியது அவனது அடுத்த முத்திரை. 

மேல்சட்டையை ஒற்றை கையால் களைந்து வீசிவிட்டு அவளை அணைக்க, வெற்றுடலாய் அவனை கண்டதும் பெண்ணவள் வெட்கம் கொண்டு மறுபுறம் திரும்பிகொண்டாள். “ஏய்ய்ய்ய்ய் விடாது அவளை பின்னோடு அணைத்துக்கொண்ட இனியன், “எதுக்கு திரும்பிக்குற? என்னை பாரு என்றான். 

“போ, ஏதோ மாதிரி இருக்கு!! முகம் தலையணையில் புதைந்தது. 

“ஏதோ மாறின்னா? காதுமடலில் தன் உதடால் கோலமிட்டான். கைகள் எங்கோ பயணித்து அவளை இம்சிக்க, கால்களோ நான்காய் இணைந்திருந்தது. 

அவன் கொடுக்கும் அவஸ்தையில் அவள் அணுவணுவாய் தன்னையிழக்க, அவள் மீதான தன் ஆசையை மொத்தமாய் அவளிடத்தில் கொட்ட தொடங்கினான் இனியன்.    

மறுபொழுது விடிகையில் போர்வைக்குள் அயர்ந்து கிடந்தாள் நிலா. உறக்கம் மெல்ல விடுதலை கொடுக்க, சோம்பல் முறித்து கண்திறக்கும் போது, ஜன்னல் சீலைகள் கூட திறக்கப்படாமல் வெளிச்சம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 

எழுந்து அமர போனவள், தான் இருக்கும் நிலை புரிய, அவசரமாய் இனியனை தேடினாள். நல்ல வேலையாய் அவன் அறையில் இல்லை என்றதும், ‘ஹப்பா நெஞ்சில் கைவைத்து ஆசுவாசப்படுத்துக்கொண்டு  இரவு அவன் வீசி எறிந்த தன் உடையை தேடி எடுத்து அணிந்துகொண்டு குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள். 

இரவின் நிழல்கள் நீருக்கடியில் நிற்கையில் நினைவு வந்து அவளை இம்சித்தது. போதுமென வேகமாய் குளித்துவிட்டு, டவலை சுற்றிக்கொண்டு வெளியே வந்தபோது அறை முழுதும் பிரகாசமாய் இருக்க, ஜன்னலோரம் காபி கோப்பையோடு நின்றுக்கொண்டிருந்தான் இனியன். 

அவள் மீண்டும் குளியலறைக்குள்ளே ஓடிவிடலாமா என நினைத்த நிமிடம், அவள் அருகே வந்து அவளை அணைத்துவிட்டிருந்தான் இனியன்.

“அப்டியே ஓடிடலாம்ன்னு பார்த்தியா? கண் சிமிட்டி கேலி செய்தவனை நிமிர்ந்து பார்க்க முடியாதபடி இரவின் மிச்சங்கள் அவளை ஆட்டி வைத்தது. அதை சரியாய் கண்டுக்கொண்ட கள்வன், “நிலாகுட்டிக்கு வெட்கம் வருதா? என்றான் ஆச்சர்யப்படுவதை போல!

அதில் அவள் முகம் மேலும் செந்நிறம் பூசிட, சிவந்த கன்னகதுப்புகளில் தன் இதழ்களால் காலை நேர வணக்கத்தை சொன்னான் இனியன். 

அடுத்து அவன் முன்னேறும் முன், “ப்ச்! போ அத்தூ! வீட்டுக்கு போனும்!! என்றாள். 

“இன்னும் நேரம் இருக்கு குட்டி! அவளை இறுக்கி அணைத்து கழுத்து வளைவில் இதழ் ஒற்ற, அதை ரசித்தாலும் பொய்யாய் அலுத்துக்கொண்டாள் நிலா.

“சொன்னா கேளு அத்தூ! கிளம்பு!! என்று அவனை தள்ளிவிட முகத்தை சுருக்கிகொண்டான் இனியன். 

“ப்ச்! நிலா நைட்ல மட்டும்தான் வருது! பகல்ல வராது போல!!! இருபொருள்பட அவன் சொன்னதில் தலையணை பாய்ந்து வந்து விழுந்தது அவன் முகத்தில். மனம் விட்டு சத்தமாய் சிரித்தான் இனியன்.

“உண்மைய தானே சொன்னேன்? விடாது அவன் வம்பிழுக்க, “போடா!!! என்ற நிலா, அழகாய் ஒரு சில்க் காட்டன் புடவையில் தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்தாள். அதற்குள் காலை உணவை அறைக்கே வரவைத்திருந்த இனியன், வெளியே வந்த நிலாவை கண்டதும் உற்சாகமாய் விசில் அடித்தான்.

அருகில் வந்து அமர்ந்த நிலாவின் தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்தை விரலால் தட்டிவிட்டுகொண்டே “பாக்க, அப்டியே பொண்ணு மாறியே இருக்கடி என்று சொல்லி பூவில் வாசம் பிடிக்க, ‘உர்ர்ரெனே முறைத்தபடி அமர்ந்திருந்தாள் நிலா. 

அதை கண்டதும், “லூசு, நான் உண்மையா சொன்னேன்னு நினைச்சுட்டியா?? ஹாஹா உண்மையா தான் சொன்னேன்!!! வெந்த புண்ணில் விரலை பாய்ச்சினான் இனியன். அவனை மேலும் முறைத்த நிலா, “டிவி ஆன் பண்ணு என பேச்சை முடித்தாள்.

ஆனியன் ரோஸ்டும் ரவா தோசையும் ஆளுக்கு கொஞ்சமாய் பகிர்ந்துக்கொண்டு காலை உணவை தொடர்ந்தபோது செய்தியில் சேனலில் சொல்லப்பட்ட அந்த செய்தி கேட்டு நிலாவின் தொண்டையில் தோசை சிக்கியது. 

‘மறைந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு.சதாசிவத்தின் கொலை வழக்கில் விசாரணைக்காக பதினைந்து நாள் ரிமேண்டில் இருந்த அவரது சகோதரரும் எம்.எல்.ஏ.வுமான  திரு. ஜெயானந்தன், நேற்றிரவு விசாரனையறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது காவல்துறையை திடுக்கிட வைத்துள்ளது       நம்பமுடியாத அதிர்ச்சி அவளிடம்!! அவளிடம் மட்டுமே!!! 

இனியனோ, “அந்த தேங்காசட்னி எடு நிலாகுட்டி என்றிட, “ஏய்! நியூஸ் பாருடா என்றாள் நிலா. அவன் கவனிக்கவில்லையோ என எண்ணி!!

“பொழுது விடிஞ்சதுல இருந்தே இதான் ஓடுது! நீ சட்னி எடு என்றான் இனியன். 

“அவரது இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவரது கட்சி தொண்டர்கள், சாலைமறியல், கடையடைப்பு என ரகளையில் இறங்கியுள்ளனர். காவல்துறை அவர்களை அடக்க முயற்சி எடுத்து வருகின்றது. இருப்பினும் விசாரணையில் இருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டது காவல்துறையின் மீது தொண்டர்களின் கோவத்தை திருப்பியுள்ளது. 

அதை பற்றி கமிஷனர் தேவசகாயம் பேசுகையில், 

“விசாரணையில் திரு.ஜெயானந்தன் எங்களுக்கு போதிய ஆதரவு கொடுக்கலை! நேற்று மாலைதான் அவர் செய்த குற்றங்களை எங்ககிட்ட ஒப்புக்கொண்டு நாளை கோர்ட்டில் உண்மை அனைத்தையும் சொல்ல போவதாய் சொல்லியிருந்தார். ஆனால் நேற்றிரவே அவர் தற்கொலை செய்துகொண்டது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று! உண்மைக்கும் அதன் விளைவுக்கும் அவர் பயந்திருக்கலாம்!! என்று கூறியுள்ளார். 

உண்மையின் வீரியத்தை பொறுக்க முடியாததே ஜெயானந்தனின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்றும்,  துணிச்சலாய், உண்மையை வெளிக்கொனர அவர் மீது வழக்கு தொடர்ந்த திருமதி இன்பநிலா என்ற பத்திரிக்கையாளருக்கு ஆதரவாக பலரும் பேச,  எதிர்கட்சியினரும் அவர்களுடையை ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதுவரை வெளிவராத அவர்மீதான பல பெரிய புகார்கள் அவர் இறப்புக்கு பின்னே குவிந்தவண்ணம் இருக்கின்றன  

செய்தி மேலும் தொடர்ந்தது. 

அவள் கண்கள் தொலைகாட்சியில் காட்டப்படும் அவரது சடலத்தை இமைக்காம்ல் வெறித்தன.  ஆம்புலன்சில் பிரேதத்தை ஏற்ற, உடன் ஏறிக்கொள்ள ரத்த சொந்தம் ஒருவரும் இன்றி அனாதையாய் கிடந்தார். இறுதியாய் அவர் கண்கள் பார்த்து அவள் சொல்லிவிட்டு வந்தது, “உனக்கெல்லாம்  கொடூரமான சாவு தான் வரும்!! 

ரத்தம் கசிந்து உடல் நசுங்கி  இறந்தால் தான் கொடூரமான இறப்பா? தன் இறப்புக்கு கண்ணீர் சிந்த உண்மையான அன்பு கொண்ட சொந்தங்களும், இறுதிசடங்கு செய்ய கூட ஆளில்லாமல் அனாதையாய் கிடக்கும் நிலை அதை விட கொடூரமான சாவு! பதவிக்கும் பணத்துக்கும் பாசத்தை விற்கும் ஜெயானந்தன் போன்ற ஆட்களுக்கு இறப்பின் பின்னாவது நிதர்சனம் உறைக்குமா என்பது மேலிருப்பவன் மட்டுமே அறிந்தது.

“சாப்பிடாம ஏன் உட்காந்துருக்க? நம்ம வீட்டுக்கு கிளம்பனும் இனியன் உலுக்கிய பின்னரே கவனம் கலைந்தாள் நிலா. மீண்டும் ஒருமுறை அவன் உணவுண்ண வற்புறுத்த, சிறிது கொரித்தவள்  போதும் என எழுந்துகொண்டாள். 

ஹோட்டலை விட்டு கிளம்பி, தங்கள் காரில் பயணிக்கும்போதும் நிலா, சுயத்தில் இல்லை! ‘என்ன மாதிரியான வாழ்க்கை இது? என்ற கேள்வி அவளை ஆதியில் இருந்து அந்தம் வரை யோசிக்க செய்தது. 

காரில் ஓடிக்கொண்டிருந்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே சாலையில் கவனமாய் சென்றுக்கொண்டிருந்தான் இனியன். அப்போது ஒலித்த வரியை சற்று சத்தமாய், “ஒரு வெண்ணிலவை!!! மணந்த மன்மதன் நான்!! என் தேனிலவே ஒரு நிலவுடன் தான், அவள் யாருமில்லை! இதோ இதோ இவள் தான்!!!      

நிலாவின் தோளில் இடிக்க, உறக்கத்தில் இருந்து விழிப்பவள் போல, “என்ன? என்னாச்சு? என்றாள் நிலா. 

“ஹ்ம்? ஹனிமூனுக்கு ராமேஸ்வரம் போலாமா? இல்ல, கும்பகோணம் போலாமான்னு கேட்டேன் கேலியாய் அவன் சொன்னதை கூட பொருட்படுத்தாத நிலா, “உன் இஷ்டம்! என்று விட்டேத்தியாய் பதில் சொல்ல, “ஹே என்ன ஆச்சு நிலா? ஏன் இப்டி இருக்க? என்றான் கவலையாய்.

“அவன் இவ்ளோ சீக்கிரம் சாவான்னு நான் நினைக்கல அத்தூ! கடைசியா நாந்தான் அவனை ‘செத்து போன்னு சொல்லிட்டு வந்தேன்! என்னால தான் செத்துட்டானோன்னு தோணுது!!

அவள் பேச்சை தூசியென தட்டிய இனியன், “ரிடிகுலஸ் என்றான். 

“அவனுக்கு ஆயுசு முடிஞ்சுது, போய்ட்டான் அவ்ளோதான்!!!  என்று இலகுவாய் சொல்ல, “இருந்தாலும், எனக்கு என்னவோ உறுத்திட்டே இருக்கு என்றாள் நிலா தெளியாத முகத்துடன்!

“தன்னோட குடும்பத்தையே கொன்னவன் அவன் அண்ணன்! அந்த அண்ணனையே கொன்னவன் இந்த ஜெயானந்தன்! தூக்குல போட்டு எல்லாரையும் கொன்னவனுக்கு தூக்குலையே சாவு! சும்மாவா சொன்னாங்க, கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுன்னு!! இனியன் பேசிக்கொண்டே செல்ல அப்போதுதான் நிலாவுக்கு இந்த விடயமே உரைத்தது.

‘அவன் குடும்பம் இறந்ததை போலவே இவனும் தூக்கிட்டு இறந்து போனது! என்ன ஒரு வித்தியாசம் அவர்கள் கொல்லப்பட்டு தற்கொலையாய் உருவகப்படுத்தப்பட்டார்கள், இவன் தற்……!!!!!!!! ஓடிக்கொண்டிருந்த சிந்தனை இந்த இடத்தில் அப்படியே நின்றது. 

‘அவங்களை கொன்னு தற்கொலையா இவன் மாத்துனான்! அப்போ இவனை….??? இவனையும்…???? சில நாட்களாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பத்திரிக்கை மூளை இப்போது விழித்தெழுந்தது.

‘அப்போ இவனையும் யாரோ கொன்னு, தற்கொலையா மாற்றிருக்கலாம்!! யாரா இருக்கும்? யார் கொன்னுருப்பா? கமிஷ்னர் தற்கொலைன்னு சொன்னாரு! அவர் ஏன் அப்படி சொல்லணும்! அவரே செஞ்சுருப்பாரா? இல்லையே, அவர் நேத்து நம்ம விழால இருந்தாரு! விழா முடிஞ்சு போயிட்டாரு!! ஆமா போயிட்டாரு! ஆனா அப்போ இனியனும் கிளம்புனானே!!? 

கேஸ் முடிஞ்ச அன்னைக்கு உங்க உதவி தேவைன்னு கமிஷனர்கிட்ட கேட்டான்! என்ன உதவியா இருக்கும்? நேத்து நைட் எங்க போனான்? ஒருவேளை அவன்தானோ? அவள் சிந்தனை குதிரை தறிகெட்டு ஓடியது, சரியான பாதையில்!!!

வியர்த்து அரும்பிய அவள் முகத்தை கண்ட இனியன், அவள் எண்ணவோட்டத்தை ஒருவாறாய் கண்டுக்கொண்டான். 

இனியனின் புறம் திரும்பிய நிலா, அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து, “நீதானே? அது நீதானே? உண்மைய சொல்லுடா? என பதைபதைப்புடன் கேட்க, இவனோ அவளுக்கு மாறான தன்மையுடன், கூலாய், “எதை கேக்குற? என்றாள்.

“நடிக்காத! கொலைகாரா! நேத்து நைட் எங்கடா போன? என்றாள் தீவிரமாய்!!

“கருணை இல்லத்துக்கு!! எல்லாரும் சாப்பிட்டதும், பாதர் கிட்ட பேசிட்டு வர லேட் ஆகிடுச்சு! என்றான் தடுமாற்றமின்றி!

“பொய் சொல்லாதடா! நீதான் அவனை கொன்னு, கமிஷ்னர் உதவியோட அதை தற்கொலையா மாத்திருக்க! ஜெயானந்தன் அவன் குடும்பத்துக்கு என்ன செஞ்சானோ, அதேமாறி!!!!!!!

உள்ளுக்குள், “சபாஷ் சொல்லிக்கொண்டாலும், “அடியே, நீயே போலிஸ் கிட்ட புடிச்சு குடுத்துடுவ போல! நானே நைட் டியூட்டி பார்த்து டயர்டா இருக்கேன் ஓரகண்ணால் கண்ணடிக்க, அதை கண்ட பெண்ணவள் ரசிக்கவில்லை! 

மாறாக கலவரமான முகத்துடன், “பயமா இருக்குடா! உனக்கு ஏதாது ஆகிட போது! எதுக்கு உனக்கு இந்த வேலையெல்லாம்? கண்கள் பனிக்க அவன் தோள் சாய, மறுமொழியோ ஆறுதலோ இன்றி அமைதியாய் வீட்டை அடைந்தான் இனியன்.

அவனை பொறுத்தவரை தீயதை வேரறுக்க எப்போதும் கடவுளும் கர்மாவும் காலம் எடுக்கும்! ஜெயானந்தன் இத்தனை ஆண்டுகளாய் செய்ததன் கர்மாவை கடவுள் இவன் மூலமாக அவனுக்கு கொடுத்துள்ளார். 

‘அரசன் அன்று கொல்வான்!

தெய்வம் நின்று கொல்லும்! இந்த விதியில் அரசனும் அவனே! தெய்வமும் அவனே!!      

சில மாதங்களுக்கு பிறகு!!!!!

கோவையின் புறநகர் பகுதியில் பசுமை மாறாத அந்த கிராமத்தில் புதியதாய் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீட்டின் வாசலில் நின்று உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி! 

“கொத்தனாரே! இன்னும் ஒரே மாசத்துல என் சின்ன மவன் கல்யாணமும், இந்த வீட்டு கிரகபிரவேசமும் வைக்க நாள் குறிச்சாச்சு! ஆனா, நீங்க இன்னும் மச்சு படிகூட  வைக்காம இருக்கீங்க! ஒன்னும் சரியில்ல சொல்லிபுட்டேன், சீக்கிரமா முடிச்சு குடுங்க!! 

மேஸ்திரியும் சீக்கிரம் செய்து கொடுப்பதாய் எப்போதும் போல வாக்கு கொடுக்க, அங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் தங்கள் வீட்டுக்கு நடையை கட்டினார் வேணி!

வாசலில் காலையில் போட்டிருந்த பூக்கோலத்தை மிதியாமல் உள்ளே சென்றவர், “தேவி…!!! சமைச்சுட்டியா? என்று குரல் கொடுத்து கொண்டே மாடியேறினார்.

“ஆச்சு ஆச்சு!!! கையை புடவையால் துடைத்துக்கொண்டே வெளியே வந்த தேவி, வேணி மாடியேருவதை கண்டு, “நீ ஏன் முட்டி வலியோட மாடி ஏறுற? அந்த கழுதை எறங்கி வராதா? என்று சத்தம் போட, அதற்குள் வேணி சென்றேவிட்டார். 

அங்கே தங்கள் அறைக்குள், நிலாவுக்காக கட்டிய ஊஞ்சலில் அவளை அமரவைத்து, ஈரமான அவள் குழலுக்கு இடம் கொடுக்க சாம்பிராணி புகையை காட்டிகொண்டிருந்தான் இனியன் இளஞ்செழியன்.

“ப்ச்! போதும் அத்தூ!! நேரமாச்சு!!! ஆப்பிளை கொறித்துக்கொண்டே அவனிடம் இருந்து விடுபட முயன்றாள் இன்பநிலா.

“கம்முனு இருடி செல்லமான அதட்டலோடு அவளை அடக்கினான் அவன்.

வேணி உள்ளே வர, “இன்னுமாடா காய வைக்குற? அன்னாந்துகிட்டே இருந்தா புள்ளைக்கு கழுத்து வலிக்காதா? மருமகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டே வந்தார் வேணி.

“முடிச்சாச்சு முடிச்சாச்சு!! இனியன் நகர்ந்ததும், “சாப்பாடு நல்லா சூடா இருக்கு!! கொண்டு வரட்டா!? என்றார் மாமியார்.

“ப்ச்! வேணாம் எனக்கு!!

இனியன், “ஒய், நீ கேட்டன்னு தானே வெஜ் பிரியாணி செஞ்சாங்க காலைலேயே! இப்போ வேணாங்குற? என்று அதட்ட, “அப்போ தோணுச்சு, இப்போ தோனல! என்ற நிலாவை மேலும் இனியன் அதட்டும் முன், “போடா அங்குட்டு! சும்மா சும்மா திட்டுவ!! என்று வேணி சப்போர்ட்டுக்கு வர, “ஆமா, நான் திட்டுரதுல தான் அவ அப்படியே தேய போறா!!? என்றான் பொய்யான சலிப்போடு!!

“வேற என்ன வேணும்ன்னு சொல்லு, செஞ்சு தரேன்!! என்ற மாமியாரிடம், “முறுகல் தோசை, முளகா சட்னி என மெனு சொல்லி அனுப்பி வைத்தாள் நிலா.

அவர் சென்றதும், தன் முடியை அள்ளி கிளிப்பில் அடக்கிவிட்டு, நெற்றி வகிட்டில் நீட்டமாய் குங்குமத்தை வைத்தாள். கைப்பையில் இருப்பதை எல்லாம் சரி பார்த்துவிட்டு, அவள் திரும்பும்போது இனியனும் வெளியே செல்ல தயாராய் வந்தான். எப்போதும் போல ‘கிளம்பும் நேர முத்தமாய் நெற்றி முட்டி அழுந்த முத்தமிட்டு, உதட்டில் பட்டும் படாமல் முத்தமிட்டு செல்பவனின் லிஸ்டில் சிறு நாட்களாய் இன்னொன்றும் சேர்ந்திருந்தது. 

அது, நிலாவின் மணிவயிற்றில் இருக்கும் தன் வாரிசுக்கு கொடுக்கும் ஸ்பெஷல் முத்தம்! ஆறுமாத குழந்தையை சுமக்கும் தன் குழந்தையோடு கீழே சென்றான் இனியன்.

காலை உணவை அவளுக்கு வேணி ஊட்டி விட, “இந்த நேரத்துல அவ வேலைக்கு போயே ஆவணுமா தம்பி? அந்த மாதத்தில் நூறாவது முறையாக கேட்டுவிட்டார் தேவி. இவனும் சலிக்காமல், “அவளுக்கு பிடிச்சுருக்குன்னா போகட்டும் அத்தே! இன்னைக்கு சைன் போட்டு ஐடி கார்ட் வாங்கிட்டு வந்துட்டா, அவசியம் இல்லாத வரைக்கும் வீட்டுல இருந்தே வொர்க் பண்ணலாம்ன்னு சொல்லிட்டாங்க! இதுக்குமேல என்ன வேணும்!? சொல்லிவிட்டு காலி தட்டோடு கை கழுவ சென்றுவிட்டான்.

நிலா தன் அன்னைக்கு பழிப்பு காட்டி, முறைப்பை வாங்கிகொண்டாள். 

தன் காரில் நிலாவை அமரவைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டு தானும் அமர்ந்து வண்டியை செலுத்தினான்.

நகர வாழ்க்கை போதும் என தேவி, வேணிக்கு துணையாய் கிராமத்திற்கே வந்துவிட்டார். சில நாட்கள் தனியாய் இருந்த இனியனும் நிலாவும், ஒன்றாய் பேசி முடிவு செய்து கிராமத்திற்கே சென்று விட தீர்மானிக்க, கூடுதல் காரணமாய் கிடைத்தது, அவர்களின் வாரிசு செய்தி! 

இனியன் கோவைக்கே மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். நிலா சுடரொளி பத்திரிக்கையின் கோவை கிளைக்கு மாறுதல் கேட்க, இந்த மாதம் வந்து சேர சொல்லி ஆர்டர் கிடைத்தது. 

நிவேதாவுக்கும், அதியனுக்கும் அடுத்த மாதம் திருமணம் என முடிவாகிருக்க, இம்மாத இறுதியில் ட்ரைனிங் முடிந்து வீடு திரும்புகிறான் அதியன். கோவைக்கே போஸ்டிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தன் ஒரே மகளை கட்டிகொடுத்த பின், தனியாய் சென்னையில் இருக்க விரும்பாத குருநாதன், அவர்கள் கிராமத்திலேயே ஒரு வீடை தனக்காக விலை பேசிவிட்டார். 

கோகுல் என்ற ஜீவனுக்கு வேணியும் தேவியும் ஊரூராய் பெண் பார்க்க, ஒன்றும் நடந்த பாடில்லை! வரும் வருடத்தில் ஏதாவது நடந்தாலும் நடக்கலாம்! (நீங்களும் உங்க சொந்தத்துல ஏதாது பொண்ணு இருந்தா சொல்லுங்கப்பா) 

சொந்தமாய் இருந்த அனைவரும் இடம்பெயர்ந்துவிட, சென்னையில் இருக்க பிடிக்காத கோகுல், அடுத்த மாதத்தோடு தன் ஜாகையையும் மாற்றிக்கொண்டு இவர்களுடனே வருவதற்காக, ‘மாறுதல் கேட்டு அலுவகத்தில் விண்ணப்பித்திருக்கிறான். (அதுவாவது அவனுக்கு கிடைக்கட்டும்)

கோவை பிரான்சின் சுடரொளி அலுவலகத்தை அடைந்தது இனியனின் மகிழுந்து!!

“நிலாகுட்டி, போயிட்டு பொறுமையா வரணும்! ஜங்கு ஜங்குன்னு குதிக்க கூடாது சரியா? என்றான் இனியன். இது சில மாதங்களாய் எப்போதும் கேட்கும் அட்வைஸ் தான் என்பதால், தலையை மட்டும் உருட்டிக்கொண்டு இறங்கி சென்றாள் நிலா. 

ஸ்டியரிங்கில் தலை சாய்த்து நடந்து செல்லும் தன் மனைவியை ரசித்துக்கொண்டிருந்த இனியனை தொல்லை செய்தது அவன் அலைபேசி! அபிசியல் கால் என்றதும், அவன் கவனம் நொடியில் ஒருமுகமானது. 

“சொல்லுங்க குமார்!! அழைப்பை ஏற்றவன், அவன் பணி குறித்த தகவல்களை பேச தொடங்கினான்.  இப்போதும் ஒரு கேஸ் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பிரபலமான நடிகையின் மர்மமான திடீர் மரணம் குறித்த ஆய்வு! கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் இருக்கும் வழக்கு! ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்த தகவல்களை அவனுக்கு கீழ் பணியில் இருக்கும் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

பேசிமுடிக்கும்போது, கார் கண்ணாடி தட்டப்பட, வெளியே நின்றிருந்தாள் நிலா. கதவை திறந்துவிட்டு, “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? என்றான் இனியன்.

“போனேன்! சைன் போட்டுட்டு ஐடி கார்ட் வாங்குனேன்! அட்டையை அவனிடம் காட்டியபடி சொன்னாள் நிலா.

“அவ்ளோதானா? வேற எதுமே கேக்கலையா? அவன் கணித்ததை விட வெகு சீக்கிரமாய் அவள் திரும்பி விட்டதால் இனியன் ஆச்சர்யப்பட, “அவங்க கேக்கல! நான் சொன்னேன் என்றாள் நிலா.

“என்ன சொன்ன?

“இதழி இனிமே எழுதமாட்டான்னு என்ற நிலாவை புரியாமல் பார்த்தான் இனியன். அவள்தான் வேலையை விடமாட்டேன் என இவனிடம் பிடிவாதம் பிடித்தது, அவள் ஆசைக்காக வீட்டினரை இவன் சமாதானம் செய்து இதுவரை அழைத்துவந்திருந்தால், ‘எழுதமாட்டேன் என்று சொன்னதும் குழம்பினான்.

“ஏன்டா? 

“நீ மட்டும் தான் என்னை இதழின்னு சொல்லணும்!! வேற யாருக்கும் நான் இதழி இல்ல என்ற மனைவியை பார்க்கும் அவன் பார்வை காதலாய் மாறியது.

“ஹோ!! அப்போ இனிமே என்ன பண்ண போறீங்க? அவளை தன் பக்கம் இழுத்து அணைத்தவன் கிறக்கமாய் கேட்க, “இதழி, இந்த இனியனோட சேர்ந்து “இதழினியா மாறி எழுதுவா!! என்றதும், அவன் பார்வையில் கிறக்கமும் காதலும் போட்டிபோட்டு கூடியது.

“நான்னா, அது நீதான்! நான் இன்னைக்கு இவ்ளோ சந்தோசமா இருக்கேன்னா அதுக்கு நீதான் காரணம்! என்னோட எல்லாத்துலையும் நீ இருக்க! இருப்ப!! 

நான் தனியா நின்னபோது ஜெயிக்கலை! உன்னோட சேர்ந்த அப்பறம் எதுலையுமே தோற்கல!

பேரா இருந்தாலும் நான் என்னைக்கும் உன்னோட சேர்ந்தே தான் இருக்கணும்! அதுதான் என்னோட அடையாளம்!!! மனமார அவன் மீது கொண்ட கரை காணா காதலில் அவள் சொல்ல, 

அவள் இரு கன்னங்களையும் தன் கைகளால் தாங்கியவன், “என் வாழ்க்கை, சந்தோஷம், நிம்மதி எல்லாமே நீதான் நிலாகுட்டி! என் இதழி!! இதழினியா மாறினாலும், இதழிக்கு அடுத்து தான் இந்த இனியன்!  வாழ்வில் இழந்த உறவுகளால் சுயம் தொலைத்திருந்தவளை, தன் நேசத்தால் மீட்டு, தன்னோடு இணைத்துக்கொண்டான் இனியன்!

இருவரும் “இதழினியாய் கலந்தபின்,  இனி வாழ்வில் வசந்தம் மட்டுமே!!!!

*சுபம்*

Advertisement