Advertisement

*6*

அவள் வருவாளா? அவள் வருவாளா?

திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா?

அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்! வருவாளே! அவள் வருவாளே!

அலாரம் ஒலி மட்டுமே அவளை இத்தனை நாள் துயிலெழுப்பியிருக்க, முதன் முறையாய் இரைச்சல் ஒலியில் கண் திறந்தாள் நிலா. ‘ப்ச்!’ சலிப்பாய் எழுந்தவள் தன் மொபைலை எடுத்து பார்க்க மணி ஆரை கடந்து சென்றுக்கொண்டிருந்தது.

‘எதுக்கு இவ்ளோ சத்தம் காலைலயே?’ மீண்டும் சிறிது நேரம் அவள் தூங்க முயல, கண்ணை மூடினாலே பேச்சுசத்தம் கேட்டு அவளை தூங்க விடாமல் செய்தது. இனிமேல் தூங்க முடியாது என உணர்ந்து குளிக்க சென்றாள் நிலா.

குளித்து முடித்து எப்போதும் போல குர்தி, ஜீன்சுடன் தன் அறையில் இருந்து வெளியே வந்தாள். ஹாலில் மெல்லிய கரையிட்ட ஒரேமாதிரியான பட்டு புடவையில் வேணியும் தேவியும் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருன்தனர். இவள் வந்ததை கூட கவனிக்காமல், “தேங்காய் எடுத்துகிட்டியா தேவி? நல்லதா பார்த்து எடு!!” என வேணி குரல் கொடுக்க, “நைட்டே பார்த்து எடுத்துட்டேன்! நீ வேற ஏதும் வேணுமான்னு யோசிச்சு சொல்லு!” என்றார் தேவி அடுக்களையில் நின்றுகொண்டே!

நிலா, ‘இங்க என்ன நடக்குது?’ விநோதமாய் பார்த்துக்கொண்டிருக்க, எதிரில் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தான் இனியன் இளஞ்செழியன். தங்கநிற கரையிட்ட பட்டு வேஷ்டி சட்டையில் அவன் நடந்து வர, நிலாவால் கண் சிமிட்டமுடியவில்லை. வேஷ்டியின் நுனியை இரு விரலால் பிடித்துக்கொண்டு முறுக்கி இருக்கும் மீசையை இன்னும் கொஞ்சம் முறுக்கியபடி அவன் நடந்து வர, அவனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது அவளுக்கு.

‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க!! அருகே கேட்ட அபாய குரலில் கவனம் கலைந்த நிலா, கோகுல் நிற்ப்பதை கண்டு, “நீ என்னடா புது மாப்பிளை மாறி நிக்குற?” என்றாள்.

தன் வேஷ்டியை பிடித்து இருபக்கமும் அழகாய் ஆட்டிக்காட்டியவன், “நல்லா இருக்கா? வேணி ஆன்ட்டி வாங்கி குடுத்தாங்க!!” என்றான். அவனை கண்டு சிரித்த நிலா, “இன்னைக்கு ஆபிஸ்சே உன்னைதான் பார்க்க போது பாரு!!” என்றாள்.

கோகுல், “அதெப்படி பார்க்கும்! நாந்தான் லீவு போட்டுடேன்ல?” என்றதும், “லீவா எதுக்கு?” என்றாள் தெரியாமல். “ஓய் லூசு! உனக்கு கல்யாணம்ல இன்னைக்கு! அதான் லீவ் போட்டாச்சு!” என்றதும், “என் கல்யாணத்துக்கு நானே லீவ் போடல! உனகென்னடா!!” என்றாள் சிரிப்பாய்.

“லீவு உனக்கும் சேர்த்து தான் சொல்லிருக்கேன்!!” என்றவனை அவள் முறைக்க தொடங்க, சிரித்துக்கொண்டிருந்தவன், ‘சாமி வந்துருச்சு போலயே’ என சுதாரித்து நைசாக அங்கிருந்து நழுவினான்.

“யார கேட்டு எனக்கும் லீவு சொன்ன?” அவள் கத்த காதில் விழாததை போல அவசரமாய் வெளியே ஓடினான் கோகுல். அவன் ஓடியதும் கோவமாய் திரும்பியவள் பார்வையில் விழுந்தான் இனியன்.

அவனிடம் பேச நகர்ந்தவள் முன்னே வந்து நின்றார் வேணி. “ஒரு நாள் லீவு தானே கண்ணு!” என கெஞ்சலாய் சொல்ல, அவள் கோவத்தை முகத்தில் காட்டாமல் தவிர்த்தாள். அவள் அமைதியாய் இருப்பதை கண்டவர், “சரிம்மா! நீ கிளம்பி வா!! கோவில்ல பூஜைக்கு சொல்லிருக்கேன்!!” என்றதும், “நான் கிளம்பி தானே நிக்குறேன்” என்றாள் நிலா.

“அட நான் கொடுத்த பட்டு புடவையை கட்டிட்டு வா கண்ணு! எல்லாத்துலையும் விளையாட்டு!!” வேணி சிரித்துக்கொண்டே அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட, “என்னது? புடவை கட்டனுமா?” என பல்லை கடித்தாள் நிலா.

“இங்க எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு நடக்குது! என் விருப்பத்தை யாருமே கேக்குறது இல்ல!!” தன்போக்கில் அவள் கத்த, ‘இந்த கல்யாணமே உன் இஷ்டத்துல தான் நடக்குது’ என அவளுக்கு சொல்ல யாரும் இல்லை.

அவள் கத்தல் வேணி காதில் விழ வேண்டாம் என நினைத்த இனியன், அவளை இழுத்துக்கொண்டு வேகமாய் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.  தன் மீதிருந்த இனியனின் கையை தட்டிவிட்ட நிலா, “கல்யாணமே ஆகல, அதுக்குள்ள என்னை தொட ட்ரை பண்ற பாத்தியா? இதான்டா உன்னோட சீப்பான புத்தி! நீ மாறவே மாட்ட!!” என கத்தினாள்.

கோவப்படாமல் அவளை சிரிப்புடன் பார்த்த இனியன், “நான் உன்னை தொட்டது பிரச்சனை இல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி தொட்டது தான் பிரச்சனை! கரெக்டா?” என கேட்க, மறுமொழி சொல்ல தெரியாமல் அவனை மேலும் முறைத்தாள் நிலா.

“சரி விடு, கல்யாணம் மட்டும் முடியட்டும்!! இன்னைக்கு நைட்டு, ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்” வேண்டுமென்றே அவன் சொல்ல, “அடச்சீ வாய மூடு!!” என்றாள் நிலா.

அவளிடம் மேலும் வாயாடாமல், “புடவை உனக்காக ஆசையா நானே எடுத்தது.. எனக்காக கட்டிக்கோ இதழி” என்றான் இனியன் மென்மையாய். அவன் இறங்க இவள் ஏறினாள்.

நிலா, “நீ எடுத்து கொடுத்தா நான் கட்டிக்கனுமா?” என்றதும், “நானே கட்டிவிடனும்ன்னு எதிர்பார்க்குரியா? நான் ரெடி தான்!!!” என அவள் அருகே சென்றான் இனியன். வேகமாய் பின்னால் நகர்ந்தவள், “இந்த மாறி பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காத!! எனக்கு சுத்தமா பிடிக்கல!!” என்றாள்.

“ஹும்ம்!! ஓகே!! சாரீ இன்னைக்கு மட்டும் கட்டிக்கோ!” பொறுமையாய் அவன் சொல்ல, “முடியாது!!” என்றாள் நிலா.

“ப்ளீஸ் நிலா! கெஞ்சி கேக்குறேன், எனக்காக கட்டிகோயேன்!!”

“மாட்டேன்!!”

“ப்ளீஸ்”

“முடியாது!!!”

அதீத பொறுமை இனியனின் ஸ்பெஷாலிட்டியானதால் அவள் கடைசி நேரத்தில் அடம் பிடிக்கையில் கூட கோவம் கொள்ளாமல் இருந்தான்.

“கடைசியா கேக்குறேன்!! இன்னைக்கு மட்டும் சாரீ கட்டு!!” அவன் கெஞ்சுவதாலேயே பிடிவாதமாய் மறுத்துக்கொண்டிருந்தாள் நிலா. வெளியே இருந்து வேணி, “அம்மாடி நிலா சீக்கிரமா வாம்மா! நேரமாகிட்டே இருக்கு!!” என்றார்.

அவர் குரலில், “லேட் பண்ணாத நிலா! ப்ளீஸ்! ப்ளீஸ்!!” கெஞ்சல் வார்த்தையில் மட்டுமே இருக்க உடல்மொழியிலும், குரலிலும் அசராமல் நின்றான் இனியன்.

“முடியாது!!” அவள் திடமாய் மறுக்கவே, “எனக்கு வேற வழி தெரில!!” என்ற இனியன், அவள் அருகே சென்று குர்தியில் கை வைத்தான். பதறி விலகிய நிலா, “என்னடா பண்ற?” என்றிட, “சொன்னா கேக்க மாட்ற, அதான் நானே கட்டிவிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!!” என்றான் சீரியசாய்.

சொன்னதோடன்றி அவன் செயலிலும் இறங்க, அவன் கைகளில் படபடவென அடித்தால் நிலா. “குடுத்துட்டு வெளில போய் தொல! நானே கட்டிக்குறேன்!!!” என சொன்னதும் தான், “தட்ஸ் மை இதழி” கன்னத்தில் தட்டிவிட்டு அறையைவிட்டு சென்றான் இனியன்.

“உப்ப்” கட்டிலில் அயர்வாய் அமர்ந்தாள் நிலா. இனியனிடம் நெருக்கமாய் மாற, அவள் மனம் துடித்துக்கொண்டிருந்தது. எந்த நேரமும் அது தன்னை ஏமாற்றகூடும் என உணர்ந்த நிலா, ‘இனி தள்ளியே இருக்கணும்’ என முடிவு செய்தாள்.

(இனி தள்ளியே இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்னும் சற்று நேரத்தில் இனியனுடன் திருமணம்.. ஹாஹா)  

“நாங்க கீழ வெயிட் பண்றோம்!! வந்துடு நிலா” என்ற தன் அன்னை குரலுக்கு, “நீங்க கிளம்புங்க! நான் ஸ்கூட்டில வந்துடுறேன்!!” என்றாள். யூடியூப் பார்த்து புடவை கட்டி, அது கலண்டுக்கொல்லாத வண்ணம் இரண்டு அட்டை பின்நூசிகளை குத்தி ஒருவழியாய் கிளம்பிவிட்டாள் நிலா. டேபிள் மேல் தேவி வைத்துவிட்டு சென்றிருந்த மல்லிப்பூவை எடுத்து பார்த்தபோது, ‘இத வேற தலைல சுத்தனுமா?’ என தோன்றியது. எல்லாம் முடித்து கண்ணாடியில் தன்னை பார்க்க, ‘எப்டி இருக்கன்னு கேட்க மாட்டேன்!! நல்லாவே இருக்க!!’ இனியனின் குரல் மனதுக்குள் கேட்டது.

அடுத்த நொடி நிற்காமல் வீட்டின் கதவை பூட்டிவிட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்தாள். காய்கறி வாங்கிக்கொண்டு குறுக்கே வந்த அபார்ட்மென்ட் இல்லத்தரசிகள் “அட இங்க பாரு அதிசயத்தை! நிலாவா அது? புடவைல வரா?” அதிசயமாய் அவளை பார்த்தனர்.

நிலா அருகே வந்ததும் அவளை வம்புக்கு இழுக்க வேண்டி, “என்னடியம்மா புடவை எல்லாம் கட்டிக்கிட்டு கிளம்பிட்ட? நோக்கு கல்யாணமா என்ன?” என்றுவிட்டு சிரித்தனர். ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள், “ஆமா!! ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம், ஏ2பில சாப்பாடு!! வந்துடுங்க!” சொல்லிவிட்டு சர்ரென பறந்தாள்.

‘இவளுக்கு நக்கலை பாரேன்!! திமுரு பிடிச்சவ! ஹும்ம்!!” நொடித்துக்கொண்டு வேறு புரளி பேச விஷயம் தேடி சென்றனர்.

கோவிலில் அர்ச்சகர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார். உடன் நின்று அவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு கொண்டிருந்தனர் அதியனும், கோகுலும். தேவியின் கண்கள் கோவில் வாசலையே நொடிக்கு நொடி சந்தித்தது.

அவர் தவிப்பை பொய்யாக்காமல் வேக எட்டுகளுடன் உள்ளே நுழைந்தாள் நிலா. அவள் வந்ததும் பூஜை தொடங்கிவிட, மூடிய கண்களை திறக்காமல் ஒருவித தியான நிலையில் நின்றிருந்தாள் நிலா. மெதுவாய் அவள் காதருகே குனிந்த இனியன், “கோவிலுக்கு வரது சாமியை பார்க்குறதுக்கு தான்!! கண்ணை மூடிகிட்டு நிக்குறது இல்லன்னு நினைக்குறேன்!” என்றதும், கண்களை திறந்த நிலா, “பாக்குறதுக்கு கண்ணு தேவை இல்ல! மனசு போதும்!!” சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

இதழில் அரும்பிய புன்னகை குறையாது அவளையே ஆசையாய் பார்த்துக்கொண்டு நின்றான் இனியன்.  ‘என் பாப்பா வளர்ந்துச்சு!’ அவன் மனசு சொல்லியது.

பூஜை முடிந்ததும், ரெஜிஸ்டர் ஆபிஸ் போக வேண்டி மீண்டும் அவர்கள் கால் டேக்சியில் ஏற, தன் ஸ்கூட்டியை கிளப்பினாள் நிலா. தேவி, “நேரா வந்துடுறியா நிலா?” என்றதும் கோவம் வந்தது அவளுக்கு.

“வராம எங்கயாது ஓடிடுவேனா?” அவள் முறைக்க, “அட ஏன் தேவி புள்ளையை டென்ஷன் பண்ற? விடு அது பொட்டாட்டம் வந்தும்!!” என்றார் வேணி. கார் ட்ராபிக்கில் புகுந்து நெளிந்து ஓடியது. நிலாவும் அவர்களை பின்தொடர்ந்தே வந்தாள். இனியனுக்கு, ‘வெயிலுல வெந்து போய் வந்துட்டு இருக்காளே!! அவளை கார்ல வர சொல்லிட்டு நம்ம ஸ்கூட்டில வரலாமா?’ என தோன்றியது.

“அவளுக்கு யாராது வழிய போய் உதவி செஞ்சா புடிக்காது!! வீணா மனசை புன்னாக்கிகாதீங்க பாஸ்!!” என்றான் கோகுல்.

“நான் மனசுல தானே நினச்சேன்!!” இனியன் ஆச்சர்யமாய் கேட்க, “மைன்ட் வாய்ஸா அது? இவ்ளோ சத்தமா இருக்கு!!” கோகுல் கிண்டலடிக்க, “திரும்பி திரும்பி பார்க்காம உக்காரு செழியா! அண்ணி பத்தரமா வந்துடுவாங்க!” அதியனும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி நிலாவை பார்ப்பதை நிறுத்தினான் இனியன்.

சிக்னலில் இருந்து வண்டி புறப்படும் சமயம் நிலாவுக்கு விடாமல் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது. சற்று தூரம் தள்ளி ஓரமாய் வண்டியை நிறுத்திவிட்டு மொபைலை எடுத்தாள்.

“ஹல்லோ? இன்பநிலா மேடமா?” ஒரு ஆண்குரல் கேட்க, “ஆமா சொல்லுங்க!” என்றாள் நிலா.

சைதாப்பேட்டை ரெஜிஸ்டர் ஆபிஸ் வாசலில் கார் நின்றது. கூட்டம் அலைமோதிய அந்த பழைய பில்டிங்கை பார்த்த வேணி, “உங்க ஊரு ரோடு தான் கும்பலா இருக்குன்னு பார்த்தா ரெஜிஸ்டர் ஆபிஸ் கூட இப்படி ஈ மொச்ச மாறி இருக்கே!?” என்றார். அதற்க்கு கோகுலும் தேவியும் பதில் சொல்லிக்கொண்டிருக்க, இனியனின் கண்கள் எக்கி எக்கி அந்த ரோட்டை அலசிக்கொண்டிருந்தது.

‘பின்னாடியே தானே வந்துட்டு இருந்தா? இன்னும் காணோமே?’ இனியன் யோசனையாய் இருந்தான். அவன் தோளில் தட்டிய அதியன், “எல்லாரும் உள்ளே போயாச்சு! எதுக்கு நீ மட்டும் வெளில நிக்குற?” என்றான்.

“நிலா வரலையே அதியா?” பார்வை சாலையிலே இருந்தது.

“நிலா நைட்டு தான் வரும், நம்ம இப்போ உள்ளே போவோம் வா!!” அதியன் சொன்னதும், ஸ்லோமோஷனில் பொய் கோவத்துடன் திரும்பினான் இனியன்.

“ஹிஹி!! மொக்க ஜோக் சொல்ல மாட்டேன்! நீயும் இதை அம்மாகிட்ட சொல்லாத!” டீல் பேசிவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

ஐம்பதுகளை கடந்த வயதில் மதிப்புள்ள தொன்றத்தில் இருக்கும் ஒருவரிடம் தன் அன்னையும் மற்றவரையும் பேசிக்கொண்டிருப்பதை கண்ட இனியன், அவர்கள் அருகே சென்றான்.

இனியன் வந்ததை கண்ட தேவி, “அண்ணே! இவர்தான் மாப்பிளை இனியன் இளஞ்செழியன். அது அவரோட தம்பி அதியன் நெடுமாறன்” என அறிமுகம் செய்தார்.

“அடடா!! பேரை கேக்கும்போது காதுல தேன் வந்து பாயுதே!!” என்று சிரித்தார் அவர்.

இருவரும் மரியாதைக்கு சிரிக்க, “இவர் பேரு குருநாதன்! நிலா அப்பாவோட வேலை பார்த்தவரு! இந்த ஊருல எங்களுக்கு எல்லாமே இவர்தான்! நிலாக்கு கார்டியனா இவர் பேரு தான் இருக்கும்!! எனக்கு அண்ணன் மாதிரி!” தேவி சொன்னதும், அதியன் துடுக்காய் “ஏன் சர், உங்களுக்கு பையன் யாரும் இல்லையா?” என்றான்.

“இல்லப்பா! பொண்ணு மட்டும் தான்!! ஏன் கேக்குற?” குருநாதன் கேட்க, ‘இருந்துருந்தா என் அண்ணன் தப்பிசுருப்பானே!!’ அதியன் மிக மெதுவாய் முனகிக்கொண்டது இனியனுக்கு கேட்டது.

யாருமறியாமல் அவன் இடுப்பில் குத்திய இனியன், “ப்ளீஸ் டு மீட் யூ சர்!!” என பேச்சை திருப்பினான்.

கோகுல், “நிலாக்கு கார்டியன் மட்டும் இல்ல! சுடரொளி வார இதழோட சீப் எடிட்டர் இவர்தான்!! எங்களுக்கெல்லாம் வேலை போட்டுக்கொடுத்த தெய்வம்!!!” பில்ட் அப் செய்யவே, அவன் காதை திருகினார் எடிட்டர் குருநாதன்ஜி.

“எங்க நிலா காணோம்!?” குருநாதன் கேட்க, தேவிக்கு அப்போதுதான் தன் மகள் இன்னும் வரவில்லை என்றே கருத்தில் பதிந்தது.

“ஆபிஸ் கால் ஏதாது வந்துருக்கும்! பேசிட்டு வருவா!” கோகுல் சொல்ல, “இன்னும் வன் வீக்கு யாரும் அவளுக்கு கால் பண்ண கூடாதுன்னு சொல்லிருந்தேனே!!” என்றார் எடிட்டர் குருநாதன்.

“எதுக்கு பதறுறீங்க? அதெல்லாம் சொன்னது சொன்ன போல வந்துடுவா! நம்ம ஆக வேண்டியதை கவனிப்போம்” அசட்டையாய் சொன்ன வேணி, ரெஜிஸ்டாரிடம் கொடுக்க வேண்டிய ஆவணங்களை எல்லாம் சரி பார்த்தார்.

அடுத்த அரைமணி நேரம் ஆவணங்கள் சரிபார்த்தலில் ஓடிவிட, சரியாய் பதினொரு மணிக்கு திருமணம் என டோக்கன் கொடுக்கப்பட்டது. வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் வந்து அமர்ந்த அனைவரும் நில்லவை எதிர்ப்பர்த்தே காத்திருந்தனர்.

கோகுல் நிலாவின் செல்போனுக்கு அழைப்பு விடுக்க, ரிங் மட்டுமே போய்க்கொண்டிருந்தது. அவள் எடுத்தபாடில்லை. இனியன் அமைதியாய் கண்மூடி அமர்ந்துக்கொண்டான். அதியனும் கோகுலும் வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடைபயின்றுக்கொண்டிருன்தனர்.

இதற்கிடையில் கிளார்க் வந்து நேரமாகிவிட்டதாக அழைக்க, இன்னும் சில நிமிடங்கள் அவகாசம் கேட்டு காத்திருந்தனர். அந்த நேரமும் கடந்து ஓட, தேவியின் உடல் வெடவெடவென ஆனது. ‘கடைசி நேரத்துல கழுத்தறுக்குறாலே பாவி!’ உள்ளுக்குள் நொந்துக்கொண்டார். கிருஷ்ணவேணி தான் அவரை சாந்தப்படுத்த வேண்டியதாய் போனது.

மறுபடியும் கிளார்க் வந்து அழைக்க, இவர்கள் அதே பதிலை சொல்ல, “ஏம்மா நிக்குற கும்பல்ல பாத்தீங்கல்ல? உங்க ஒரு கல்யாணத்துக்கு ஏழு நேரம் குறிக்க முடியுமா? பொண்ணு வந்தமாறி இருந்தா சொல்லுங்க! இல்லனா இடத்தை காலி பண்ணுங்க!!” கடுமையாய் பேசிவிட்டு சென்றார் அவர்.    

தேவிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. குருநாதன் தன் ஆபிஸ்க்கு போன் செய்து விசாரிக்க, நிலாவை அவர்கள் யாரும் தொடர்புக்கொள்ள வில்லை என தெரிந்தது.

“இதுக்குமேல அவ வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை வேணி! நம்ப வச்சு ஏமாத்திட்டா பாவி!! உங்களையும் இப்படி கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திடாளே!!” தேவி புலம்ப, வேணி பதில் பேசாமல் அமைதியாய் இருந்தார். அவருக்குமே நம்பிக்கை தளர்ந்து விட்டது.

கோகுல் கோவமாய், “அவளுக்கு இஷ்டம் இல்லாதத செய்ய வேண்டாம்ன்னு எத்தனை முறை சொல்லிருக்கேன்ம்மா? இப்படி நம்மலால இவங்களும் கஷ்டபடுரமாறி ஆச்சு!!” வருத்தமாய் சொல்லி முடித்தான்.

அதியன் ஆதரவாய் கோகுலின் தோள் பற்ற, “இவ ஏன் இவ்ளோ ரூடா இருக்கான்னு தெரியல அதியா!” என்றான் கோகுல் வேதனையுடன். இத்தனை பேச்சுகளுக்கு பதில் சொல்லாமல், அசைவு கூட இல்லாமல் கண்மூடி மௌனமாய் அமர்ந்திருந்தான் இனியன்.

“இதுக்குமேல ஏன் இங்க இருக்கணும்! போலாம் வாங்க!!” கோகுல் சொல்ல, அனைவரும் கிளம்பினர் இனியனை தவிர. அவன் சேரை விட்டு எழுந்திரிக்க கூட இல்லை.

“வா இனியா போலாம்!” அதியன் அழைக்க, அவனிடம் பதில் இல்லை. அவனை நெருங்கிய வேணி, அவன் சிகை வருடி, “வாடா கண்ணு! கிளம்பலாம்!” என்றார்.

ஆழ மூச்செடுத்து கண் திறந்த இனியன், “யாரும் போக வேணாம்.. அவ வருவா!” என்றான்.

“இவ்ளோ நேரம் வராதவ! இப்போ எப்டி வருவா?” தேவி அழுகையூடே கேட்க, “இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்!!” என்றான் இனியன்.

கோகுல் அவனை நெருங்கி, “அவளை பத்தி உங்களுக்கு தெரியாது இனியன். வரமாட்ட!!” வருத்தமாய் சொல்ல, சிரித்தான் இனியன்.

“எனக்கு அவளை பத்தி தெரியாதா?” கேட்டுவிட்டு அவன் மீண்டும் சத்தமின்றி சிரிக்க, ‘அவ வராத அதிர்ச்சில பைத்தியம் பிடிச்சுடுசோ?’ என நினைத்தான் கோகுல்.

“நான் சொல்றேன்ல? அவ வருவா!! எல்லாரும் பதறாம இப்டி வந்து உட்காருங்க!!” என்றதும், அவன் சொல்லிருக்காக மனமின்றி எல்லோரும் அமர்ந்தனர்.

எடிட்டர் குருநாதனிடம், “ரெஜிஸ்டரர் உங்களுக்கு தெரிஞ்சவர் தானே!? அவர்கிட்ட பேசி இன்னும் கொஞ்ச நேரம் அனுமதி கேட்க முடியுமா?” இனியன் கேட்க, “இவ்ளோ நேரம் இது எனக்கு தோனல பாரு தம்பி!!” தன் முன் நெற்றியில் தட்டிக்கொண்டு வேகமாய் உள்ளே சென்றார்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் நிமிடங்கள் அங்கே கரைந்தது. அந்நேரம் அங்கே பக்கத்தில் இருந்த டீக்கடையில், நேயர் விருப்பமாய், “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி!! பாடல் ஒலிக்க, ஒரேநேரத்தில் அனைவர் கண்களும் இனியனை நோக்கியது. அவனும் அப்போது நிமிர்ந்து பார்க்க, என்ன தடுத்தும் முடியாமல் காரணமின்றி சத்தமாய் சிரித்தனர்.

இவர்களை இப்படி காக்க வைத்து வேடிக்கை பார்க்கும் இன்பநிலா, எங்கே போயிருப்பாள்!?

சில மணி நேரங்களுக்கு முன்பு….

சிக்னலில் நின்றபோது வந்த அழைப்பை எடுத்து அவள் பேச, ஒரு ஆண்குரல் கேட்டது.

“நான் கந்தன் பேசுறேன்மா! மினிஸ்டர் வீட்டு தெருவுல இஸ்தரி போடுறவன்!” அவர் சொன்னதும் நிலாவுக்கு அடையாளம் தெரிந்தது. உடனே ஆர்வமாய் “ஏதாது தகவல் கிடைச்சுதா?” என்று கேட்க, “இத்தனை நாளா காணா போயிருந்த பால்க்காரன் இன்னைக்கு தான் இந்த தெருவாண்டம் வந்தாம்மா! அதான் சொல்லலாம்ன்னு உங்களுக்கு கூப்புட்டேன்!” அவர் சொன்னதில் நிலா முகம் பிரகாசமானது.

“இப்போ எங்க இருக்கான்? வந்தா பாக்கலாமா?”

“இங்கன தான் இருக்காம்மா! உடனே வந்தா புடிச்சுடலாம்!” என்றதும் “ரொம்ப தேங்க்ஸ்! நான் உடனே வரேன்” என்றாள்.

“தேங்க்ஷு எல்லாம் இன்னாத்துக்கு? நீங்க காசு குடுத்தீங்கோ, நான் துப்பு குடுக்குறேன்! நமக்குள்ள என்ன?” கந்தன் பேசியதை கேட்குமளவு பொறுமையற்ற நிலா, ஒரு நிமிடத்திற்கு முன்னமே அழைப்பை துண்டித்திருந்தாள்.

நேரே ரெஜிஸ்டர் ஆபிஸ் போக வேண்டிய ஸ்கூட்டி இப்போது யூடர்ன் போட்டு அமைச்சர் சதாசிவத்தின் வீடு தேடி பாய்ந்தது.

-தொடரும்…

Advertisement